Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 அமைதி சங்கர் ·nrStoeodsph4ih17a6agaicm2486tacl14687t564g000img9f01630 t11a · எந்த தந்தைக்கும் இந்த நிலைமை வரக்கூடாது!! 😭" 2017 ஆம் ஆண்டில், கிராமப்புற சீனாவைச் சேர்ந்த ஜாங் லியோங் என்ற தந்தை தனது 2 வயது மகளுக்கு கடுமையான தலசீமியா இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது வாழ்க்கையின் மிகவும் வேதனையான தருணத்தை எதிர்கொண்டார். இந்த சிகிச்சைக்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் யுவான் செலவானது, அவரது குடும்பத்தினரால் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாகும். தங்கள் சேமிப்புகள் அனைத்தையும் செலவழித்து நம்பிக்கையை இழந்த பிறகு, தனது மகளை அடக்கம் செய்வதற்காக அல்ல, மாறாக நேரம் வந்தால் "மரணத்திற்குப் பழக" உதவுவதற்காக தனது சொந்தக் கைகளால் அவளுக்கு ஒரு சிறிய கல்லறையைத் தோண்டினார். தந்தையும் மகளும் கல்லறைக்கு அருகில் விளையாடும் இதயத்தை உடைக்கும் காட்சி மில்லியன் கணக்கானவர்களை ஆன்லைனில் ஈர்த்தது. 💔" வீடியோ வைரலான சிறிது நேரத்திலேயே, சீனா முழுவதும் மக்கள் உதவ ஒன்று கூடினர். ஒரு மாதத்திற்குள் அவரது சிகிச்சைக்குத் தேவையான முழுத் தொகையையும் கூட்டு நிதி திரட்டியது. பின்னர், தம்பதியருக்கு மற்றொரு மகள் பிறந்தார், அவளுடைய தொப்புள் கொடி இரத்தம் அவரது சகோதரியின் உயிரை அற்புதமாகக் காப்பாற்றியது, ஒரு அன்பான தொழிலதிபர் மீட்பு செலவுகளை ஈடுகட்டினார். அவரது மகள் இறுதியாக குணமடைந்தபோது, ஜாங் கல்லறையை நிரப்பி அதன் மீது சூரியகாந்தி பூக்களை நட்டார் - விரக்தியிலும் கூட, காதல் புதிய வாழ்க்கையைத் தரும் என்ற நம்பிக்கையின் சின்னம். 🌻" Voir la traduction
  2. வணக்கம் வாத்தியார் . ............! தமிழ் பாடகா் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா் ஆண் : { ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் } (2) ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும் ஆண் : காற்றினில் சாரல் போல பாடுவேன் காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன் நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன் ஆண் : மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும் ஆண் : உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாகச் சோ்ந்திட வேண்டும் பூவே உன் புன்னகை என்றும் சந்தோஷம் தந்திட வேண்டும் ஆண் : { ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால் வாழ்வே சொா்க்கம் ஆகுமே } (2) ஆண் : இன்னும் நூறு ஜென்மங்கள் சேர வேண்டும் சொந்தங்கள் காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள் ஆண் : தென் பொதிகை சந்தனக் காற்று உன் வாசல் வந்திட வேண்டும் ஆகாய கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும் ஆண் : { கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே } (2) ஆண் : காற்றினில் சாரல் போல பாடுவேன் காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன் நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன் .......! --- ஆனந்தம் ஆனந்தம் ---
  3. நாட்டுக்கு பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம் .......! 😍
  4. அரசியலாவது வெங்காயமாவது ........ தலைவர் எப்போதும் காரியத்திலேயே கண்ணாய் இருக்கின்றார் . .......! 😂
  5. வணக்கம் வாத்தியார் .......! தமிழ் பாடகர்கள் : தேவி ஸ்ரீ பிரசாத், எம்.எல்.ஆர். கார்த்திகேயன் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்தப் புள்ள வீணாக இவன் மனச கிள்ளாத மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள நீயாக இவன் மனச கொல்லாத நீ கொல்லாத ஓ ஓ ஹோ ஓ கொல்லாத ஆண் : என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற ஆண் : காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம் தான் கண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான் என்னமோ நடக்குது இதயம் வலிக்குது மனசு தவிக்குது உன்னோடைய வார்த்தைக்காக ஆண் : ஹ்ம்ம் சின்னபுள்ள நேசம் இது பச்சபுள்ள பாசம் இது என் மனசு தாக்கியது உன்னால உன்னால ஆண் : ஹ்ம்ம் ஜாதி மதம் பாா்க்கலையே சம்மதத்த கேட்கலையே காதலுன்னு ஆயிருச்சு தன்னால தன்னால ஆண் : நெசமா நெசமா நெஞ்சுக்குள்ள நான் அழுதேன் உன்னுடைய வார்த்தைக்காக ஆண் : ஹோ வெட்டருவா தூக்கிகிட்டு வெட்டிப்பய போலிருந்தேன் வெட்கப்பட்டு நான் நடந்தேன் உன்னால உன்னால கட்டகம்பி தூக்கிகிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன் கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேன் உன்னோடைய பார்வையால ......! --- உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள ---
  6. தொட்ட இடம் துலங்க வரும் தாய்குலமே வருக ...........! 😍
  7. கராத்தே பழகுங்கள் ........ தற் பாதுகாப்புக்கு .........! 👍 "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " தெரியாதா ......... அளவுடன் பார்த்து அளவின்றி ரசிக்கவும் . .....! 😂
  8. சோம்பலுக்கு சோம்பல் குடுத்து விட்டு சாம்பிளாக சிலவற்றை எழுதுங்கள் ...........! 🙂 "நிரூபனவாதி " நன்றாக இருக்கின்றது .......! 👍
  9. இங்கு அனுபவங்களினூடாக சில விமர்சனங்கள் இருந்தாலும் கூட ...... பகிர்வுக்கு நன்றி ரசோ ........!
  10. பீச் பால் விளையாட்டு .........! 🙂
  11. கண்ணன் பிறந்தான் எங்கள் .......! 😍
  12. வணக்கம் வாத்தியார் . .........! தமிழ் பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று ஓடினேன் அதை கேட்டு தேடினேன் வலை போட்டு பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : நல்ல தமிழ் இசை அமுதென வருகையில் நெஞ்சம் அங்கே சென்றது ஆண் : மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை தென்றல் சொந்தம் கொண்டது ஆண் : வெள்ளி ரதமென உருகிய பனியினில் பெண்மை தெய்வம் நின்றது ஆண் : உள்ளம் முழுவதும் புதுவித கவிதைகள் அள்ளி அள்ளி தந்தது இருவர் : பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : ஆளில்லாத நீரோ ஆண் : நீரில்லாத ஆறோ ஆண் : ஆறில்லாத ஊரோ ஆண் : அவளில்லாத நானோ ஆண் : மனக்கோயில் வாழ வந்த தெய்வீக பெண் என்பதோ ஆண் : எனக்காக ஏங்குகின்ற செவ்வல்லி கண் என்பதோ ஆண் : பருவம் கொண்ட பாவை ஆண் : பனி படர்ந்த பார்வை ஆண் : வரவு சொல்ல தோன்றும் ஆண் : உறவு கொள்ள வேண்டும் ஆண் : மலர் மாலை யாருக்கென்று பெண் பாவை கண் தேடுமோ ஆண் : எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம் என்னோடு ஒன்றாகுமோ ......! --- பாடினாள் ஒரு பாட்டு ---
  13. 100% பொழுது போக்கு 'சலங்கை ஒலி' படத்துல இதை நீங்க கவனிச்சீங்களா...? முன்னாள் காதலர்களான கமலும், ஜெயப்பிரதாவும் பிரிஞ்சிடுவாங்க. பல வருஷங்களுக்கு பின்னாடி கல்யாணம் செய்துக்கொண்ட ஜெயப்பிரதாவின் கணவர் இறந்துடுவார். ஆனால், ஜெயப்பிரதாவின் கணவரை கமல் ஏற்கனவே நேரில் சந்திச்சி பேசிருப்பார். இப்ப ஜெயப்பிரதா தன்னோட மகளுக்கு பரத நாட்டியம் கத்துக்கொடுக்க கமலை தன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்க வைப்பார். ஆனால், கணவர் இறந்ததை மறைச்சிட்டு பொட்டு வெச்சிக்கிட்டு கமல் முன்னாடி சுமங்கலியா நடிச்சிட்டு இருப்பார். இதில் காமெடி என்னான்னா, ஜெயப்பிரதா மகளுக்கு ஹாலில் தான் கமல் நடனம் சொல்லிக்கொடுப்பார். இந்த ஹாலில் தான் செத்துப்போன ஜெயப்பிரதாவின் கணவர் போட்டோ மாலையுடன் தொங்கிட்டு இருக்கும். பல நாட்கள் அந்த வீட்டுல இருக்கும் கமல் அந்த போட்டோவை பார்க்காமல் தன் முன்னாள் காதலி சுமங்கலியா தான் இருக்காங்கன்னு நினைச்சிக்கிட்டு சந்தோஷமா இருப்பார். இத்தனை வருஷம் கழிச்சு ஒருத்தன் வந்து அந்த படத்தை யூடியூப்ல பார்த்து pause பண்ணி, அந்த போட்டோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இப்படிலாம் கேள்வி கேட்பான்னு இயக்குனர் யோசிச்சிருக்க மாட்டார்ல 🤣" படித்ததில் பிடித்தது Voir la traduction
  14. தினமும் ஒரு வரி தத்துவம் · கேரளாவில் ஒரு பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டு, அந்த ஆலை கட்டும் போது பெரும் பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனை என்னவென்றால் ஆலையில் கட்டப்பட்ட ஆழமான குழியின் அடிப்பகுதியில் மிகவும் கனமான இயந்திரம் வைக்கப்பட வேண்டும், ஆனால் இயந்திரத்தின் எடை ஒரு சவாலாக இருந்தது. இயந்திரம் தளத்திற்கு வந்து விட்டது, ஆனால் 30 அடி ஆழமான குழியில் அதை எவ்வாறு இறக்குவது என்பது பெரும் சிக்கலாக மாறிவிட்டது. சரியாக நிறுவப்படவில்லை என்றால், அடித்தளம் மற்றும் இயந்திரம் இரண்டும் மிகவும் பாதிக்கப்படும். இப்போது, மிக அதிக எடையைத் தூக்கக்கூடிய கிரேன்கள் எல்லா இடங்களிலும் கிடைக்காத காலம் இது. கிடைக்கக்கூடியவர்கள் இயந்திரத்தை தூக்கலாம், ஆனால் அதை ஆழமான குழியில் தரையிறக்குவது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது. இறுதியாக, ஆலை கட்டும் நிறுவனம் கைவிட்டு, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண டெண்டர் விடப்பட்டது. இதனால், ஏராளமானோர், இந்த இயந்திரத்தை குழிக்குள் பொருத்தி, தங்கள் டெண்டர்களை அனுப்பினர். கிரேன் வரவழைத்து இயந்திரத்தை பொருத்தி விடலாம் என நினைத்தனர். அதன்படி, பணியை முடிக்க, 10 முதல், 15 லட்சம் ரூபாய் வரை கேட்டனர். ஆனால் அந்த மக்களிடையே ஒரு ஜென்டில்மேன் இருந்தார்,. மெஷின் தண்ணீரில் நனைந்தால், ஏதாவது பிரச்சனை வருமா?" என்று நிறுவனத்திடம் கேட்டார். "இது இயந்திரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று நிறுவனம் பதிலளித்தது. அதன்பின், டெண்டரையும் நிரப்பினார். அனைத்து டெண்டர்களையும் பார்த்தபோது, அந்த நபர் வேலையை முடிக்க 5 லட்சம் ரூபாய் மட்டுமே கேட்டுள்ளார். எனவே வெளிப்படையாக, இயந்திரம் அமைக்கும் வேலை அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த நபர் இந்த வேலையை எப்படி செய்வார் என்பதை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார். மேலும் அதைச் செய்வதற்கான திறமையும் சரியான குழுவும் தன்னிடம் இருப்பதாக மட்டுமே கூறினார். இந்த வேலையைச் செய்ய வேண்டிய தேதி மற்றும் நேரத்தைச் சொல்லுமாறு அவர் நிறுவனத்திடம் கேட்டார். அந்த நாள் இறுதியாக வந்தது. ஒவ்வொரு ஊழியரும், மேலாளரும், நிறுவனத்தின் முதலாளியும், சுற்றியிருந்தவர்களும் கூட, அந்த மனிதன் இந்த வேலையை எப்படிச் செய்வான் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்! அவர் தளத்தில் எந்த தயாரிப்பும் செய்யவில்லை. முடிவு செய்த நேரத்தில், நிறைய லாரிகள் அந்த தளத்தை அடைய ஆரம்பித்தன. அந்த லாரிகள் அனைத்தும் பனிக்கட்டிகளால் ஏற்றப்பட்டிருந்தன, அவை அனைத்தும் குழிக்குள் நிரப்பப்பட்டன. குழி முழுவதுமாக பனியால் நிரம்பியதும், இயந்திரத்தை நகர்த்தி பனி அடுக்குகளின் மேல் வைத்தனர். இதற்குப் பிறகு, ஒரு சிறிய தண்ணீர் பம்ப் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு, குழியில் ஒரு குழாய் செருகப்பட்டது. இதனால் தண்ணீர் வெளியே எடுக்கப்பட்டது. பனி உருகியது, தண்ணீர் தொடர்ந்து கொட்டியது, இயந்திரம் கீழே செல்லத் தொடங்கியது. 4-5 மணி நேரத்திற்குள் வேலை முடிந்து மொத்த செலவு ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகவே வந்தது. இயந்திரம் கச்சிதமாக பொருத்தப்பட்டு, அந்த நபருக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைத்தது. வணிகம் உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம். பிரச்சினைக்கு எளிய தீர்வைக் கண்டறிவது ஒரு கலையாகும், இது மனிதனின் விவேகம், புத்திசாலித்தனம் மற்றும் நடைமுறை புரிதலைப் பொறுத்தது. கஷ்டமான பிரச்சனைகளுக்கு கூட விவேகத்தின் மூலம் எளிய தீர்வுகள் கிடைக்கும்.. # Voir la traduction
  15. இவர்கள் அப்பவே சிறியருக்கு முன்னோடியாய் இருந்திருக்கிறார்கள் . ......! 😂
  16. Vikadam.com · டாக்டர் - என்ன பிரச்சினை உங்களுக்கு...? எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்... அப்படியா...!? ஆமா டாக்டர்... இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும்... சின்ன வயசுல அப்பா, அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல... இப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே...? ஆமா டாக்டர்... ஆமா...? சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க... உங்க பேரென்ன... ராமநாதன்... என்ன தொழில் பண்றீங்க... பைனான்ஸ்... நைட்டு நல்லா தூங்குவீங்களா...? கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்... சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா... நெறய டாக்டர்.... அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...? ஆமா டாக்டர்.. எந்த மாதிரி நடிகைங்க... ரேவதி, அமலா மாதிரியான நடிகைங்க.... சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...!!?? சிலசமயம் அம்பிகா, ராதா மாதிரியான வங்களும் வருவாங்க... சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...? ஷகிலா... ஊஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்... அதவெச் செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...? வேற... சில சமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியாக்கூட வருவாங்க... ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்... அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன், நயன்ஸ் வருவாங்க... சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்... ம்ம்... அவ்ளோதான் டாக்டர்... அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க... 45, 48, 54, 41... நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47... மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு... அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...!! என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா...? தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன்... அங்கே ஒரே கூட்டம் ஒருமணி நேரமாகும்னுட்டாங்க... திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல... பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்...! அடேய்... இந்தாடா... அடப்பாவி... போய்ட்டானே!! Voir la traduction
  17. நியாயமான மக்களின் தேவைகளை புரிந்து செயல்படுதல் நல்ல நிர்வாகத்துக்கு அழகு . ........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.