Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5737
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by nochchi

  1. முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும் ------------------------- முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும் பாடுகள் ஒன்றானபோதும் கோடுகள் வெவ்வேறானது! முள்ளிவாய்க்காலிலே கொள்ளியிட அனைத்துலகும் ஒன்றாய் நின்றது நன்றாய் அள்ளியும் கொடுத்தது! உக்கிரேனென்றதும் உலகம் மூன்றாய் நான்காய் முகம் காட்டி நடக்கிறது! எல்லா உயிர்களும் ஒன்றெனச் சொல்கிறோம் பதின்மூன்று ஆண்டுகள் முன் இவர்கள் எங்கே போயினர் பனியாய் உறைந்து போயா கிடந்தனர்! மேற்கின் தெருவெங்கும் கெஞ்சியும் அழுதும் யுத்தத்தை நிறுத்தக் கேட்டோம் நாங்கள் அப்பாவி மக்களின் அழிவைத் தடுக்க அனைத்துலகின் படிகளில் நின்றோம் ஆனாலும் நடந்தது என்ன வார்த்தைகளாலே கூறிட முடியுமா(?) கொலைக்கருவிகள் கொடுத்தனர் பலர் கொலைக்கான அறிவும் கொடுத்தனர் கொலைக்கான வேவும் சொன்னார்கள் கிட்டநின்று திட்டங்கள் தீட்டீயே கொத்துக் கொத்தாக் கொன்றிடவென்றே மேற்கின் கூலிகள் வழி காட்டின எல்லாம் எம்மினக் கொலைக்காகவே! பாதுகாப்புச் சபையும் ஐநா மன்றும் ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ கூட்டணியும் ஜீ ஏழு நாடுகள் குழுவும் உக்கிரேனென்றதும் உடனே கூடுது ருஸ்யாவைப் பார்த்துக் கடுமையாய் சாடியே கண்டனம் செய்தே தடைகளை போட்டன! மனித உயிர்கள் ஒன்றெனும் அதனை மதித்து நடத்தல் அரசுகளின் கடனென்றும் அடிக்கடி கூறிடும் ஐநாவே பதின்மூன்றாண்டின் முன் எங்கேபோனது உன் சமன்பாடு! முள்ளிவாய்க்காலில் உன் முகம் இழந்து போனாயே! உக்கிரேன் மக்களின் இழப்புச் சரியன்று எல்லாவுயிர்களும் எமக்குப் பெரிதே என்ற உணர்விலே வாழும் தமிழனோ பல்லுயிரோம்பிடும் பண்பினைக் கொண்டவன் பல்லாண்டுகாலமாய் அழிவினைக் கண்டவன் இன்றேனும் எங்களின் நிலைதனைப் பாரீர் காலம் கடந்து கண்ணீரும் காய்ந்தே போனது இனியேனும் உங்கள் சமன்பாடு சரியானால் எங்கள் இனத்தின் அழிவும் ஓயலாம் எங்கே ஒருமுறை சிந்திப்பீரா எம்மின அவலத்தை ஏற்றிடுவீரா? அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  2. சுவியவர்களின் கதை சிறப்பாக நகர்ந்து நடந்து செல்கிறது. காத்திருக்வைக்காது தொடர்ந்து எழுதியமை மேலும் சிறப்பு. பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.
  3. தமிழ்சிறி அவர்களே! நலமேகி நகை சூழ இன்னும் பல்லாண்டு இனிதாக வாழிய வாழிய வாழியவே!
  4. வெற்றுவரச்சென்றவரே சென்றதிசை மீளவில்லை சென்றுவிட்டீர்! நினைவுகளாய் வாழ்ந்து எம் நிலம் மீட்க உறுதிதரும் வீரர்களே வீரவணக்கம்!
  5. அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய சர்னா, சாத்திரியார், சிறீராம், மைத்திரேயி, யாசினி, சின்னப்பு ஆகியோரோடு வாலி மற்றும் கரும்பு ஆகியோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  6. ஏராளன், குறும்பன், மதுகா ஆகியோருடன் அக்னியஷ்த்ரா அவர்களுக்கும் நலமும் வளமும் சூடிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  7.  

    1. poet

      poet

      • nochchi
      •   வாழ்த்துக்கள். என் இறுதிமூச்சுவரை இந்திய கொள்கை வகுப்பில் இலங்கைத் தமிழர்களின் அபிலாசைகளை புரிதுகொண்டு உள்வாங்க ஓயாமல்  அழுத்தம் கொடுப்பேன்.
    2. nochchi

      nochchi

      நன்றி கவிஞரே, எமதினத்தின் விடியலைத் தவிர வேறுவிமோசனம் இல்லை. பாலா அண்ணாவும் தனது தனிப்பட் அறிமுகங்களை இனவிடுதலைக்கான செயற்பாட்டில் பயன்படுத்தியவர். உண்மையில் நட்புவட்டாரங்களையும் அறிமுகங்களையும் பயன்படுத்தவதே அறிவுடமை.

      மீண்டும் நன்றி. 

  8. நிழலி அவர்களுக்கு இனிய இந்நன்நாளில் வளம் சூழ நலம் சூடி வாழிய வாழிய வாழியவே!
  9. நிழலியவர்களே இணைப்புக்கு நன்றி. படைப்பாளருக்குப் பாராட்டுகள்!
  10. சசி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அதேவேளைஅண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  11. தமிழர்களை இறைச்சியாக்கி உண்ணத்தயங்காத காடையர்கள். இன்றுவரை இந்தப்படுகொலைகளுக்கு ஒரு வருத்தம் தெரிவித்துள்ளார்களா? அல்லது வெட்கித்துள்ளார்களா? இவை மனித மனம் கொண்டோருக்கே தோன்றக்கூடிய நல்லெண்ணமாகும்.
  12. இந்தக் (அனுபவக்) கதையை ஒரே மூச்சில் வாசித்தபோது பல இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன். ஒரு அங்கதம் கலந்த கதைநகர்வு. அனுபவத்தை இப்படிச் சொல்லும் உங்களுக்குள் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். இதைப் படித்தகாலத்தில் இப்படியொரு அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. நேரமொதுக்கி உறவுகளோடு எழுதிப்பகிர்ந்தமைக்கு நன்றி.
  13. நன்றி. குமாரசாமி ஐயா. நீங்கள் மட்டும்தான் காணாமற்போனோர் தொடர்பான திரியைத் தேவை கருதியதாக எண்ணியிருக்கின்றீர்கள். 

    நீங்கள் நினைக்கலாம் ஏன் தனிமடலில் என்று. அண்மைக்காலமாக யாழில் தமிழ்த் தேசிய விரோத சக்திகளின் கை பலமாகி வருவதாகவே தெரிகிறது. தமிழ்த் தேசியத்தை எள்ளிநகையாடுவது முதல் அனைத்தும் நடக்கிறது. இதுபோன்ற (காணாமற்போனோர்..) பல  திரிகள் கவனிப்பாறற்றே போகிறதைப் பார்க்கும்போது தேசியத்தின் பலவீனமா என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு சிலர் தேவையற்ற விவாதங்கனைத் தொடக்கித் தமிழ்த் தேசியத்தை கரைத்துவிட முனைகின்றமையையும் காணமுடிகிறது. அதனோடு போராட வைத்துச் சலிப்படைய வைப்பதோடு, நேரவியத்தை ஏற்படுத்தித் தாக்கம் தரவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டிய விடயங்கள் மழுங்கடிக்கப்படுகிறது. 

    யாருடனவாது பகிரவேண்டும் போலிருந்தது. எதுவுமே எம்கையில் இல்லையென்றபோதும்  அதற்காக முயற்சிசெய்யாதிருக்க முடியாதல்லவா?

    நன்றி.

    1. alvayan

      alvayan

      தமிழ்த் தேசியத்தை எள்ளிநகையாடுவது முதல் அனைத்தும் நடக்கிறது. இதுபோன்ற (காணாமற்போனோர்..) பல  திரிகள் கவனிப்பாறற்றே போகிறதைப் பார்க்கும்போது தேசியத்தின் பலவீனமா என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு சிலர் தேவையற்ற விவாதங்கனைத் தொடக்கித் தமிழ்த் தேசியத்தை கரைத்துவிட முனைகின்றமையையும் காணமுடிகிறது. அதனோடு போராட வைத்துச் சலிப்படைய வைப்பதோடு, நேரவியத்தை ஏற்படுத்தித் தாக்கம் தரவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டிய விடயங்கள் மழுங்கடிக்கப்படுகிறது. 

      உண்மை....

  14. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இராணுவம், பொலிஸாரால் அதிரடியாகச் சுற்றிவளைப்பு இந்தத் திரியிலே ஒரே காணொளி இருதடவைகள் தரவேற்றம் பெற்றுவிட்டது. தயவுசெய்து ஒன்றை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
  15. ஞாலவெளியிலும் காலவெளியிலும் கரைந்தவிடாத மானுட ஞானிகளே ஈழவெளியெங்கும் உறங்காது இனவிடுதலையை தேடிய வீரர்களே சிரம்தாழ்த்தி அகமேந்தி நிற்கின்றோம்!
  16. பொதுவாக அனைத்துலக மட்டத்தில் பாவனையில் இருக்கும் ஆங்கிலவழி மாதங்களே பொருத்தமானது. யனவரி 1என்றால் மார்கழி16 அல்லது 17ஆக இருக்கும். எனவே இது ஒரு குழப்பமானதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதேவேளை இளையவர்கள் எப்படி இதை எடுப்பார்கள் என்றும் பார்க்க வேண்டும்.
  17. தமிழினத்தின் மனமெங்கும் துளிராய் நிமிர்ந்து தளிராய் எழுந்து கிளையாய் பரந்து உறைந்துவிட்ட உயிர்சுடர்களே வீரவணக்கம்.
  18. ஒரு மருத்துவத்துறையில் முனைவராக இருந்தவாறு களஉறவுகளின் வினாக்களுக்கு விடை ஆலோசனை என்று அற்புதமாகச் செயலாற்றும் உங்களுக்கு எனது வணக்கத்தையும் வாழ்த்தையும் பதிவுசெய்கின்றேன். நில்மினி அவர்களே! களத்தில் உங்கள் பணி தொடரட்டும்.
  19. நீங்கள் உட்பட அனைவருக்கும் என்னால் பதிலைப் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. எழுதியதைக் கொப்பி செய்து பதிவேற்றப் பலமுறை முயன்றேன் முடியவில்லை. இங்கு தனித்துவமான கருத்துப்பரிமாற்றம் செயற்படுகிறது. மீண்டும் நன்றி.

  20. வணக்கம் நுணாவிலான் அவர்களே.நான் நலம். நன்றி.

    என்னால் பின்னூட்டுங்களையோ கருத்துகளையோ பதிவேற்ற முடியவில்லை. உதவமுடியுமா? 

    1. nunavilan

      nunavilan

      வரவேற்பிலும் உங்களால் பதிலிட முடியவில்லையா??

      சில கருத்துக்களை வரவேற்பில் இடுங்கள். அது ஏனைய பகுதிகளிற்கும் கருத்திட இட்டுச்செல்லும்.

    2. nochchi

      nochchi

      நீங்கள் உட்பட அனைவருக்கும் என்னால் பதிலைப் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. எழுதியதைக் கொப்பி செய்து பதிவேற்றப் பலமுறை முயன்றேன் முடியவில்லை. இங்கு தனித்துவமான கருத்துப்பரிமாற்றம் செயற்படுகிறது. மீண்டும் நன்றி.

  21. வணக்கம் ஈழப்பிரியன்.பெருவிரலில் ஒரு விபத்து. அதன்பின்   களஉறவுகளின் ஆக்கங்கள் கருத்துகள் என்று   வாசிப்பதோடு இணைந்திருந்தேன். எழுதவில்லை. நலன் வினவியமைக்கு நன்றி.

    1. nochchi

      nochchi

      வணக்கம் ஈழப்பிரியன். என்னால் கருத்தை பதிலெழுதும் பகுதியிற் பதிவேற்றம்  செய்ய முடியவில்லை.

  22. தொடர்ச்சியாக எம் தலைவனைத் தேடியிணைக்கும் தமிழ்சிறி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
  23. ஈரநினைவுகளாய் வீரர் நினைவுகள் ஈகத்தில் உயர்ந்த எம் தேசப்புதல்வரை வணங்கியபடியே எம்வாழ்வு நகர மீண்டுமொரு ஆண்டு கடந்து போகையில் புதிய ஆண்டிலே ஈகத்தின் பயனாய் எம் தேசம் நிமிரட்டும் எம்மாவீரர்களே! உறுதியோடு உங்கள் ஈகத்தின் பெயரால் நிமிரும் எம் தேசம்!வீரவணக்கம்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.