Everything posted by யாயினி
-
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
இவர்கள் தினம் ஒரு புத்தகம் அறிமுகம் செய்து வைக்கிறார்கள் ஏன்று நினைக்கிறேன்...புத்தக இணைப்பிற்கு மிக்க நன்றி கிருபண்ணா.✍
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
அரசியல்வாதிகள் இவற்றில் தலையிட மாட்டார்கள், ஏன் எனில் கடந்த காலங்களில் பெண்களுக்கு சுய தொழில் வாய்ப்புக்கு தவறணைகளுக்கு அனுமதி வழங்கிய வரலாறுகளும் அனைவரும் அறிந்ததே.இது அரசியல் வாதிகளைத் தானே சாரும்.
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
கடந்த காலங்களில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் முகப் புத்தக பக்கத்தில் பகிரப்படும் படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது..நோயாளிகளுக்கிடையேயான மறைப்பு (கேர்ட்டின்)முக்கியமல்லவா..நோயாளிகள் ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை படம் பிடித்து முகப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் போது இவர்களுக்கு பிறைவேசி முக்கியமில்லையா என்று கேட்டேன்... இன்ன மாதிரி செய்தால், போட்டால் நன்றாக இருக்கும் என்று எழுதிய பின் தான் ஒரு சிறிய பகுதிக்கு கேர்டின் போட்டு இருக்கிறார்கள்..பிறகும் எதற்கும் முரண்பட்டு எழுதுவேனோ என்ற எண்ணம் போலும் பணிப்பாளர் பேசவும் மாட்டார், பதில் எழுதவும் மாட்டார்..அப்படி ஒரு தலைக்கணம்.வெளிநாடுகளிலிருந்து போய் கதைப்பவர்களுக்கு நன்றாக தேன் ஒழுக கதைத்து அனுப்புகிறார்.
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
நீங்கள் சொல்வது போல் யாராவது எதற்காவது உதவுவோம் என்று பேச முற்பட்டாலும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் (சத்தியமுர்த்தியர்)மற்றவர்களின் முகத்தை முறிப்பது போல் தான் நடந்து கொள்கிறார்.தனக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது அங்கிள் அது, இது என்று சொன்னால் அவர்களுக்கு பதில் கொடுக்கிறார்.அதே நேரம் உண்மையாக ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று எழுதினால் அதற்கு பதில் தரப்படுவது இல்லை.முக்கியமாக ஏதும் கேட்டால் , சொன்னால் அந்த வைத்தியருக்கு பிடிப்பதில்லை.ஆனால் ஒரு விடையம் செய்திருக்கிறார்கள்.வார்ட்டுகளுக்கு கேர்ட்டின் போட்டால் நன்று என்பதை சுட்டிக் காட்டியதும் அதை செய்திருக்கிறார்கள்.
-
மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!
இப்போ இப்படி எல்லாம் எழுத, சொல்லப் போனால் யாரு தாத்தா ஏற்றுக் கொள்வார்கள்..சொல்லியும், எழுதியும்.இனி வேணாம் என்றே போய் விடுகிறது..
-
பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு
விமானத்தை விட வேகமாக பறக்கும் மக்கள் புதுப் பணியாளர்கள் இப்போ இருக்கிறார்கள் .மேற் கொண்டு எழுதினால் கருத்துக் காணாமல் போயிடும் வேணாம்...🤭
-
வவுனியாவில் விபத்து; கணவன் பலி; மனைவி, மகன், மாமனார் படுகாயம்
பிரபா ஐயாவின் மகனின் மரண அறிவித்தல் ........................ கரவெட்டி, தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் 60 ஆண்டுகள் ஆலய குருக்களாக விளங்கி சிவகதி எய்திய சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள், பாகீரதி அம்மாள் தம்பதியினரதும், மாவையாதீனம் சு. துரைசாமி குருக்கள், பச்சைநாயகி அம்மாள் தம்பதியினரினதும் பேரனும், அண்மையில் சிவபதம் எய்திய ச. பிரபாகரன் (கலாசார சிரேஷ்ட அதிகாரி, இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம்), கலாநிதி. சீதாலக்ஷ்மி (சேர். பொன். இராமநாதன் காண்பிய மற்றும் கட்புல கலைகள் பீடத்தின் நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்) இன் சீமந்த புத்திரனும், அபிஷேக் (IIT,Business Management) இன் பாசமிகு அண்ணனுமான பிரபாகரன் அக்ஷை (2017 A/L - St. John's College, Sir John Kothalawala Defence University - Aircraft Maintenance Engineering - Final Year) 1/6/2025 முன்னிரவு 7.30 மணிக்கு சிவபதம் எய்தினார். அன்னார் சச்சிதானந்தக்குருக்கள் திவாகரன் - கஜலக்ஷ்மி தம்பதிகளினதும், விநோத்குமார் - இந்துமதி தம்பதிகளினதும் அருமைப் பெறாமகனும், சுவாமிநாத ஐயர், ஜெகதீஷ்வர ஐயர், இரத்தினகைலாசநாத சர்மா, இராதாகிருஷ்ண ஐயர் ஆகியோரின் மருமகனும், பரத், ஸ்நேஹா, நிதேஷின் அன்பு சகோதரனும், ஸ்ரீவித்தியாவின் பாசமிகு மைத்துனருமாவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை காலை 8 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று மதியம் செம்மணி இந்து மயானத்துக்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும் இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம். தகவல் குடும்பத்தினர் 7/9A, பண்டாரக்குளம் மேற்கு வீதி, நல்லூர். 0785688366 0766077633 Laleesan Laleesan
-
கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்
தேசியம் இணையத்தில் நினைவுத்தூபி சேதமாக்கபட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி பகிரப்பட்டிருந்தது..பலதும் பத்திலும் பகிர்ந்திருந்தேன்..பின் வேறு, வேறு இணையங்களில் தேடிப் பார்த்தேன்,,அப்படி ஒரு செய்தியே வரவில்லை..எதையாவது போட்டு நிரப்பும் பத்திரிகைகாரர்களை என்ன செய்வது....🤔
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
- தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆழ்ந்த இரங்கல்கள்.ஒரு றியல் எஸ்டேற் ஏஜன்டுமாவார்.🙏- தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது?
இலங்கையில் தமிழர் பற்றிய பிராமிக் கல்வெட்டுக்கள் – ஓர் அறிமுகம் September 28, 2022 | Ezhuna இலங்கைத் தமிழர்களுக்கு 2500 ஆண்டுகளுக்குக் குறையாத வரலாறு மற்றும் வழிபாட்டு பாரம்பரியம் உள்ளது. பண்டைய இலங்கைத் தமிழர் பற்றி இதுவரை பலரும் அறிந்திராத, இதுவரை வெளிச்சத்துக்கு வராத, அரிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இலங்கையில் ‘பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர்’ எனும் இவ்வாய்வு அமைகிறது. இலங்கையில் வாழ்ந்த தமிழர் பற்றிய முக்கிய சான்றாக விளங்குவது 2300 ஆண்டுகளுக்கு முன்பு கற்குகைகளில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களாகும். இவ்வாறான ஐந்து பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அந்த கல்வெட்டுக்களில் தமிழர்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்களை இக்கட்டுரைத்தொடர் வெளிப்படுத்துகின்றது. அத்தோடு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வேலைத் திட்டத்தில், இலங்கையில் காணப்படும், 1500 பிராமிக் கல்வெட்டுகளை மீள்வாசிப்பு செய்ததன் பயனாக வெளிக்கொணரப்பட்ட பல்வேறு அம்சங்களை ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்துவதாகவும் இத்தொடர் அமைகிறது. இவ் ஆய்வில் தமிழர் பற்றி கூறும் மேலும் பல பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அத்துடன் சோழர் காலத்திற்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 600 சிங்களக் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து அவற்றிலும் தமிழர் பற்றிக் கூறப்பட்டுள்ள பல விபரங்கள் பற்றியும் இத்தொடர் கட்டுரை கூறுகிறது. இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழும் தமிழரும் இலங்கையில் கல்மேல் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவற்றில் முதலாவதாக எழுதப்பட்டவை பிராமிக் கல்வெட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை கல்வெட்டு ஆய்வாளர்கள் முற்காலப் பிராமி, பிற்கால பிராமி என இரு வகையாக பிரித்துள்ளனர். இலங்கை முழுவதிலும் சுமார் 2500 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கல்வெட்டுக்கள் தெற்காசியாவில் இலங்கையைத் தவிர வேறெந்த பிரதேசங்களிலும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை இங்குள்ள இயற்கையான கற்குகைகளிலும், கற்பாறைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1500 கல்வெட்டுக்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 1000 கல்வெட்டுக்கள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இவற்றில் தமிழர் மற்றும் இந்து சமயம் தொடர்பான கல்வெட்டுகள் பல உள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 1500 கல்வெட்டுக்களில் தமிழர் பற்றிய 5 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. மேலும் இந்து தெய்வங்கள் சம்பந்தமான 300 கல்வெட்டுக்களும் உள்ளன. இவற்றைத்தவிர முனிவர்கள் அல்லது சித்தர்களின் பெயர்கள் பொறிக் கப்பட்ட சுமார் 250 பிராமிக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. தமிழர் என்ற பெயரைத் தவிர இலங்கையில் வாழும் ஏனைய இனங் களின் பெயர் பொறிக்கப்பட்ட எந்த ஒரு பிராமிக் கல்வெட்டேனும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. “தமெத” (தமிழ்) எனப் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் கிடைக்கப் பெற்ற பிராமிக் கல்வெட்டுக்களில் 5 கல்வெட்டுக்களில் “தமெத” எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் என்பதன் பிராகிருத வடிவமாகும். இவற்றில் வட மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்தில் 2 கல்வெட்டுக்களும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் 1 கல்வெட்டும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு சான்றுகள் மூலம் 2000 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கும், தமிழ் மொழி பேசப்பட்டுள்ளது என்பதற்கும் இக்கல்வெட்டுக்கள் முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன. இது பற்றி இலங்கையின் மூத்த வரலாற்று பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்கள் சில முக்கிய குறிப்புக்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரின் குறிப்பு பின்வருமாறு. “கி. மு. மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையிலே தமிழ் ஒரு பேச்சு மொழியாக வழங்கியமைக்கு ஆதாரமாய் அமைகின்ற பிராமிச் சாசனங்கள் தமிழர் பற்றியும் தமிழர் சமுதாயப் பிரிவுகளைப் பற்றியும் குறிப் பிடுகின்றன. அவற்றிலே பல இனங்களைச் சேர்ந்த சமூகங்களின் பெயர்களும், சமுதாயப் பிரிவுகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. தமிழர், நாகர், முருண்டி, காபோஜி என்னும் இனப் பெயர்கள் அவற் றில் உண்டு. பரதர், பதர், பிராமணர் என்போர் பற்றியும் அவற்றிலே குறிப்புகள் உண்டு. இரண்டாயிரத்துக்கும் மேலான பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்ற பொழுதிலும் அவற்றிலே சிங்களர் பற்றிய குறிப் பெதுவும் காணப்படவில்லை. “சிங்களர்” எனும் இனம் பிராமிச் சாசனங்கள் எழுதப்பட்ட காலத்தில் உருவாகியிருக்கவில்லை என்று கருத வேண்டியுள்ளது. சிங்க உருவம் பொறித்த மிகப் புராதனமான நாணயமும் நாகராசன் ஒருவனின் பெயரையே குறிப்பிடுகிறது.” என பேராசிரியர் எஸ். பத்மநாதன் தனது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் “வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழரின் குடியிருப்புகளும், சமுதாயமும் பிராமிச் சாசனங்களின் காலம் முதலாக உற்பத்தியானவை என்று கொள்ள முடிகிறது” எனக் கூறியுள்ளார். தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள இக்கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் இந்திரபாலா பின்வருமாறு கூறியுள்ளார். “இலங்கையில் வாழ்ந்த தமிழ் இனக்குழு பிராமிக் கல்வெட்டுக்களில் தமெட என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் கல்வெட்டுக்கள் அநுராதபுரத்தில் மட்டுமன்றி, அப்பால் இன்று தமிழர் வாழும் இடங்களாகிய வவுனியா மாவட்டம் (பெரிய புளியங்குளம்), மட்டக்களப்பு மாவட்டம் (ஸேருவில)மற்றும் அம்பாறை மாவட்டம் (குடிவில்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.” “இலங்கையில் தமிழ் மக்கள் பற்றிக் கிடைக்கும் மிகப்பழைய எழுத்து மூலாதாரங்கள் பொ. ஆ. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுக்களாம். எனினும் அதற்கு முன் அவர்கள் இலங்கையில் இருந்திருக்கக்கூடும் என்று கொள்ளத் தொல்லியல் சான்றுகள் உள்ளன. அத்துடன் பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே, தமிழ் பேசுவோர் பரவலாகத் தமிழ் நாட்டிலும் மற்றும் அயல் இடங்களிலும் இருந்தனர் என்று கொள்ள இடமுண்டு எனக் கொண்டால் இலங்கைக்கும் அதே காலமளவில் அவர்கள் வந்திருக்கலாம் என்று கூறலாம். தமிழ் பேசுவோர் மட்டுமன்றி வேறு திராவிட மொழிகளைப் பேசுவோரும் அங்கு இருந்திருக்கலாம்”. இவ்வாறு பேராசிரியர் இந்திர பாலா தனது “இலங்கைத் தமிழர்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் சில முக்கிய விடயங்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரின் குறிப்பு பின்வருமாறு, “தென்னாசியாவில் பெளத்த மதம் பரவிய நாடுகளில் எல்லாம் அம்மத மொழியான பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்தபோது இலங்கையில் தான் பிராகிருத மொழியில் தமிழ் மொழியின் செல்வாக்கு கூடுதலாகக் காணப்படுகிறது. இதில் அவதானிக்கக் கூடிய சிறப்பம்சம் ஆரம்பகாலக் கல்வெட்டுக்களில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராகிதம் மற்றும் தமிழ் மொழிக்குரிய பெயர்கள், சொற்கள் காலப்போக்கில் தமிழ் மயப்படுத்தப்பட்ட நிலையில் எழுதப்பட்டிருப்பதாகும்.” “இந்த மாற்றத்திற்கு இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த மக்கள் புதிதாக பெளத்த மதத்துடன் அறிமுகமான பிராகிருத மொழியை அம்மொழிக்குரிய வடபிராமி எழுத்தில் எழுதிய போதும், காலப்போக்கில் தமக்குப் பரிச்சயமான தமிழ் பிராமியிலும் பிராகிருத மொழியை எழுத முற்பட்டமை காரணம் எனலாம்”. இவ்வாறு பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் பரமு புஷ்பரட்னம் தனது இன்னுமோர் நூலில் கூறியுள்ள சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு: “இக்கல்வெட்டுக்கள் பெளத்த சங்கத்திற்கு அக்கால சமூகத்தின் பல தரப்பட்ட மக்கள் அளித்த நிலம், குளம், கால்வாய், குகை, கற்படுக்கை, பணம், உணவு போன்ற தானங்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றில் பலவற்றில் தானமளித்தவர் பெயரோடு அவரின் வம்சம், பட்டம், பதவி, தொழில், மதம், இனம் போன்ற தரவுகளும், அவர்கள் வாழ்ந்த இடம், ஊர், நாடு போன்ற செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இதனால் இக்கல்வெட்டுகள் இலங்கையின் குறிப்பிட்ட காலப்பகுதிக்குரிய மொழி, எழுத்து, மதம், பண்பாடு, சமூகம், இடப்பெயர் என்பவற்றை அறிந்துக்கொள்ளவும், சமகாலப் பாளி இலக்கியங்கள் கூறும் வரலாற்றின் நம்பகத் தன்மையை மதிப்பிடவும் உதவுகின்றன.” பக்கத்தில் ஏன் கத்தரிக்கோல் வைக்கிறன் என்றால் தவறாக இருந்தால்..வெட்டி விடவும்.✂️🖐 https://www.ezhunaonline.com/brahmic-inscriptions-on-tamils-in-ceylon-an-introduction/- ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்!
அந்த பகுதியில் காணப்பட்ட 39 வயது ஜேர்மன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் Virakesari.lkஜேர்மனியில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்...ஜேர்மனியில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் - 12 பேர் காயம் News | Virakesari.lk- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
மன்னித்துக் கொள்ளவும் சசியண்ணா..தவறை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அய்யா.- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சசியண்ணா நீங்கள் இப்படி சொல்லக் கூடாது.காரணம் கருத்துக்களத்தில் அவர், அவர் தங்கள் மனங்களில் தோன்றுவதை தயக்க மின்றி எழுதுவதுதற்கு சில இடங்களில் எழுதப்படும் வார்த்தைகள் தடையாக இருக்கும்.யார் மனதையும் சங்கடப்படுத்தாமல் எழுதப் பழகினால் நன்று..இது உங்களை குற்றம் சொல்வதற்காக எழுதவில்லை எனக்கு அது தேவையும் இல்லை.அனைவருக்கும் சேர்த்தே எழுதிறன்.நன்றி.- வெளிநாட்டு உறவுகளே உங்களுக்குத்தான் #comedy #kilinochchi #funny #tamil #srilanka #tamil #tamilcomey
- அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
தற்போது ஒரு மாணவரது (பல்கலைகழக) உயர் கல்வி செலவு மாதம் 25 ஆயிரத்தை தாண்டி விட்டது.அப்படி இருக்கையில் எப்படி ஒரு குடும்பத்திற்கு நீங்கள் சொல்லும் தொகை போதுமானதாக இருக்கும் என்று சொல்வ வாறீயள்..எல்லா நாடுகலும் உள்ளள ஊர் ஒன்றியங்கள் மன்றும் மன்றங்கள் ஒழுங்காக செயல்படுகின்றனவா...சுருக்கமாக சொல்லப் போனால் தாரள மனம் கொண்டவர்களால் கூட அவர்களுக்கு என்று ஒரு குடும்பம் மற்றும் இதர வாழ்க்கை செலவுகளோடு இவ்வாறன பொறுப்புக்களையும் எடுத்து செய்வது மிக மிக கடினம்.சொல்வது மிக இலகு கோசான்..சாத்தியப்படுத்துவது கடினம்.இது எழுத வேணும் என்பதற்காக எழுதப்படுபவையும் அல்ல.அல்வுது ஊர் நிலமைகளை சும்மா றான்டாமாக எழுதப்படுபவையும் அல்ல..- அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
பி.கு..நீங்கள் குறிப்பிடுவது போல் இனி வரும் காலத்தில் மாதாந்த கொடுப்பனவாக 5000 கொடுப்பது ஒரு கிழமை சீவியத்திற்கே போதுமோ தெரியாது.கண்டிப்பாக போதாது.- அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்! - உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்த இலங்கைத் தமிழர் https://thaaii.com/.../sc-said-india-is-not-a-camp-to.../ இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இலங்கைத் தமிழர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, 2018-ல் விசாரணை நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 2022-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது. 7 ஆண்டுகள் தண்டனை முடிவடைந்ததும் அவர் இந்தியாவில் இருக்கக்கூடாது, இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், “இலங்கையில் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும் எனது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டனர் எனவும் என்னை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால் நான் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்” என்றும் கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? இங்கு குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? என கேள்வி எழுப்பியதோடு, அனைத்து இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்கக்கூடிய சத்திரம் அல்ல என்றும் இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டிற்குச் செல்லுங்கள்” என்றும் கூறி, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழர்கள் பலரும் கண்டித்துள்ளனர். #refugees #sc #supremecourt #உச்சநீதிமன்றம் #அகதிகள் #madrashighcourt #SriLanka #SriLankan #Tamils #இலங்கைதமிழர் இந்த தளததில் கருத்துக்களை பகிர்ந்திருப்பவர்களில் ஒருவர் கனடாவுக்கு போக சொல்லுங்கள் என்று கருத்திட்டு இருக்கிறார்... https://thaaii.com/.../sc-said-india-is-not-a-camp-to.../- பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்து சிறீதரன் எம்.பி கடிதம் Published By: Vishnu 15 May, 2025 | 06:23 PM கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் நேற்றையதினம் அமைச்சுப் பொறுப்பேற்ற ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அண்மையில் நடைபெற்று முடிந்த கனேடிய பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று, கனேடிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு, ஈழத்தமிழர்கள் சார்பில் எனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் நிறைவடைகிறேன். அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளால் வலிந்து ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் நேரடிப் பிரதிநிதியான தாங்கள், உங்களின் தனிமனித வாழ்வில் எதிர்கொண்ட ஏராளமான தடைகளையும், சவால்களையும் உந்திக்கடந்ததன் பயன்விளைவாய், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த ஒருவராக, சமூகநேயம் மிக்க மக்கள் தொண்டராக இருந்து பின் அரசியல் பணியில் அடியெடுத்துவைத்து, இன்று கனேடிய பாராளுமன்ற உறுப்பினராகவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பெருமிதத்தோடு பதவியேற்றுள்ளமை காலத்தின் பதிவே ஆகும். சவால்களின் எல்லைகளைக் கடந்து நிமிர்ந்தெழுந்து நிற்கும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியான தங்களை, எமது உணர்வுகளோடு நெருக்கமான, எங்களில் ஒருவராகவே எம்மால் பார்க்கமுடிகிறது. அத்தகு மனநிறைவோடு, மக்கள் பணி என்ற மகத்தான கொள்கையோடும், இலட்சியத்தோடும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதியாக பொறுப்பேற்றிருக்கும் தாங்கள், ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களிலும், அரசியல் விவகாரங்களிலும் தங்கள் இயலுமைக்கு உட்பட்ட பணிகளில் இதயசுத்தியோடு இணைந்து செயற்படுவீர்கள் என்ற பெருநம்பிக்கையோடு, உங்களின் வெற்றிக்கான வாழ்த்துகளைக் கூறும் அதேவேளை தங்கள் பணி சிறக்க இறை ஆசிகளையும் வேண்டி நிற்கிறேன். – என்றுள்ளது. https://www.virakesari.lk/article/214832- ஐந்து ரூபாய் கட்டணம்
பெற்றோர் எழுதி வைக்காத விடத்து அனைத்திலும் எல்லா பிள்ளைகளுக்கும் பங்கு கொடுக்க வேணும் . அந்த கனடா பிள்ளைக்கு தெரியாது போலும்..அண்ணன் காரன் தெரிந்து வைத்துக் கொண்டு இருப்பார் போலும்.பேராசை அதிகம் தான்.- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
- பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
கனடாவின் புதிய அமைச்சரவையில் பொது பாதுகாப்பு அமைச்சர்களாக கேரி ஆனந்தசங்கரி மற்றும் அனிதா ஆனந்த் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இருவருக்கும் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.- தமிழினப்படுகொலை நினைவகத் திறப்பு நிகழ்வு Live Brampton
Mohan Ramakrishnan 13h · Tamil Genocide Education Week is at Chinguacousy Park, Brampton. 14h · Mississauga · A historic moment for the Tamil people in Canada and around the world as the Tamil Genocide Monument was inaugurated in Brampton, Canada. The Tamil Genocide Monument is constructed in remembrance of the victims of the Tamil Genocide being committed by the Sri Lankan state. The Tamil Genocide Monument not only honours the innocent lives lost —it speaks to resilience. It is a place for education, reflection, and resistance against denial of the Tamil Genocide.- தமிழினப்படுகொலை நினைவகத் திறப்பு நிகழ்வு Live Brampton
இது பற்றிய முழுமையான காணொளிகளை இங்கே பதிவிட முடியாதிருக்கிறது..- கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
சம்பந்தபட்ட ஆசிரியர் இடமாற்றம் செய்பட்டுள்ளார் என்ற செய்தி ஏ.ஆர்.வி லோசனின் செய்தி தொகுப்பில் பகிரபட்டுள்ளது.. - தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.