Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் எந்த நேரமும் இனக் கலவரம் வெடிக்கலாம்

Featured Replies

தென் பகுதித் தமிழர்கள் நிம்மதி இல்லாத இரவுகளைக் கழிக்கின்றனர். கடந்த சில நாட்களாக நிலவும் அசாத்திய சூழல் அவர்களுடைய அமைதியைக் கெடுக்கின்றது. இராணுவ வாகனங்கள் தெருக்களில் இரவு பகலாகச் சுற்றுகின்றன. இப்படித் தான் 1983 இனக் கலவரம் தொடங்கியது. முதலில் இராணுவ வாகனங்கள் ஒடித்திரியும். அடுத்ததாகப் புத்த பிக்குகள் விகாரைகளில் அமர்ந்தவாறு மக்களுக்கு தர்ம உபதேம் செய்வார்கள். புத்த மதத்தினர் அல்லாதோரைப் படுகொலை செய்வது பாபச் செயல் அல்லவாம். இது மகாவம்ச இதிகாசத்தில் வழங்கப்பட்ட உத்தரவாதம் என்று பிக்குகள் உபதேசிக்கிறார்கள்.இரவில் தமிழர்கள் வாழும் வீட்டுச் சுவர்களில் இரகசிய அடையாளங்களைச் சிங்களக் காடையர்கள் வண்ணக் கட்டிகளால் போடுகிறார்கள். தமிழர்களின் இருப்பிடங்களையும் எண்ணிக்கைகளையும் மக்கள் கணக்கெடுப்புப் பதிவேடுகளில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். தமிழர்கள் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தங்கள் சுய விபரம், குடும்பத்தினர் சுய விபரம், எண்ணிக்கை, முகவரி, அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவுகளும் தமிழர்கள் வாழ்விடங்களை அடையாளம் காண உதவுகின்றன. வீடு வீடாகச் சென்று பொருள்களை விற்பனை செய்யும் வர்த்தகப் பிரதிநிதிகளும் தமிழர்களை அடையாளம் காண உதவுகிறார்கள். தமிழர்களுக்கு பொருள்களை விற்பனை செய்வதாலும் இலாபம் இனக் கலவரத்தின் போது கொள்ளை அடிப்பதாலும் இலாபம்.

இந்த மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்ட இனக் கலவரத்தை படு வேகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. அரசு இனக் கலவரத்தைத் தொடக்கி அதை முடித்து வைக்கும். குறுகிய காலத்திற்குள் படுகொலைகளையும் தீ வைத்தலையும், சூறையாடல்களையும் நடத்தி முடிப்பதற்கு ஏன் திட்டமிடுகிறார்கள்? காலம் நீடித்தால் வெளி நாடுகள் தலையிடலாம். குறுகிய காலத்திற்குள் முடித்து விட்டால் தலையீடுகளைத் தவிர்க்கலாம். இழப்புக்கள் பெரிதாக இல்லை என்றும் பிரசாரம் செய்யலாம். 2009ம் ஆண்டில் நடந்த வன்னிப் படுகொலைகளை நடத்தியதைப் போல் சாட்சிகள் இல்லாமலும் நடத்தி முடித்து விடலாம். அரசுடன் இணைந்து செயற்படும் ஜாதிக ஹெல உறுமைய என்று சிங்கள இனவாத அமைப்பின் தலைவர் சம்பிக்க றணவக்க அமைச்சரவையில் முக்கிய பதவி வகிக்கிறார். ஜாதிக விமுக்தி பெரமுன என்ற ஜேவீபி கட்சிப் பிரமுகர் விமல் வீரவன்ச பாதுகாப்புச் செயலர் கொத்தபாய ராஜபக்சவின் உயிர் நண்பர். சம்பிக்க றணவக்கவும் விமல் வீரவன்சவும் மீண்டுமொரு இரத்தக் களரியை நடத்தித் தமிழர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று மேடை போட்டுப் பேசுகிறார்கள். இப்படியான அமைதியைக் குலைக்கும் பேச்சுக்களைத் தடை செய்யச் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அரசு ஆதரவு பெற்ற இனவாதிகளைப் பாதிப்பதில்லை.

1983ம் ஆண்டில் இனக் கலவரத்தை நடத்திய ஜக்கிய தேசிய கட்சி இப்போது ஆட்சி நடத்த வலுவில்லாத எதிர் கட்சியாகச் சுருங்கி விட்டது. இலங்கையில் எதிர் கட்சிகள் நல்ல பிள்ளை வேடம் போடுவதும் அரசுரிமையைப் பெற்றவுடன் இனக் கலவரங்களை நடத்துவதும் அரசியல் சாசனத்தில் இடம்பெறாத வழமை. இப்போது ஜக்கிய தேசிய கட்சி அரசுக்கு உபதேசம் செய்கிறது. அதனுடைய மூத்த உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இனக் கலவரத்தைத் தூண்டாதீர் என்று அரசை எச்சரிக்கிறார். வெளி நாட்டுத் தலையீட்டுக்கு அது வழிவிட்டு விடும் என்பது அவர் வாதம். அவர் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன மீண்டுமொரு தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் வெடிக்கத் தான் போகிறது. இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் ஏற்கனவே உயிராகவும் உடமையாகவும் பெருவிலை கொடுத்து விட்டார்கள். இன்னுமொரு இரத்தப் போக்கிற்கு அவர்களால் முகங் கொடுக்க இயலாது. இதற்கு முடிவே இல்லையா என்று முதியோரும் இளையோரும் தவிக்கின்றனர். முடிவில்லாத பயணங்கள் போல் இலங்கைத் தமிழர்களின் துன்ப துயரம் நீண்டு செல்கிறது. இலங்கையில் இனக் கலவரங்கள் 1956ம் ஆண்டு தொடக்கம் விட்டு விட்டுத் தொடர்கின்றன. இலங்கை இனக் கலவரங்கள் தீடீர் விபத்துக்கள் அல்ல. அவை அரசும் இராணுவமும் இணைந்து செயற்படுத்தும் உயிர்ப் பலி அடங்கிய வேள்வி.

http://www.pathivu.c...ticle_full.aspx

Edited by seeman

இனக்கலவரம் என்பது சிறிலங்காவிற்குச் சாத்தியமாகாதது அல்ல. அவர்கள் இதைப்போன்று பலவற்றையும் திட்டமிடலாம். அவர்கள் நினைப்பதுபோல் முடிவுகள் அவர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை.

இனக்கொலைகளும் சொத்தழிவுகளும் ஏற்படலாம். வெளித் தரப்புத் தலையீடுகளை இது அதிகரிக்கவே செய்யும்.

சிங்களம் புத்திசாலி....இப்ப இனக்கலவரத்தை தோற்றுவித்து தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடாது. சிங்களத்தின் அடுத்த நகர்வு தான் தப்பிக்க மகிந்தவை தூக்கி எறிய முற்படுவதும் ஒரு ஆட்சி மாற்றத்தை நோக்கிச் சென்று தன் இனத்தை தக்க வைப்பதிலுமே இருக்கும்

58ல் பண்டாரநாயக்கா ஏவிவிட்ட காடைகள் நெருப்பு வைக்க தெய்வம் வாழும் கோவில் தேடிப் போனார்கள். அந்த நேரத்தில் அகப்பட்ட பூசாரியை காலில் விழுந்து வணங்கவும் விடாப்பிடியாக கட்டிவைத்து மண்ணெண்னை உற்றி தீவைத்துவிட்டு போனார்கள்.

அடுத்த வருடம் 59ல் தன் வாழ்விடம் தேடி தெய்வம் வந்திருப்பத்தாக மாறி நினைத்து பண்டாநாயக்க வந்தவரின் காலில் விழுந்து வணங்கினார். பண்டாரநாயக்கா விதைத்த வினையாக அந்தக்காடை பண்டாநாயக்காவுக்கே தீவைத்துவிட்டுப் போய்விட்டான்.

மகிந்தசித்தாந்தத்தால் நெய் ஊற்ற பட்டிருக்கும் இலங்கை, மகிந்தா தீயையும் வைத்தாரானால் அனுமார் வைத்த தீயைவிடத்தான் தென்னிலங்கை கொழுந்துவிட்டெரியும்.

மகிந்தா நெய்யை வார்க்கும் போது பண்டாரநாயக்காவை மறக்க கூடாது.

கலவரம் வரமாட்டாது, ஆனால் அதை முழுமையாக மறுக்கவும் முடியாது.

எதற்கும் R2P ( Responsibility 2 Protect) நாம் என்ற சர்வதேச வரைவிலக்கணத்திற்கு அமைய ஐ.நா. உட்பட்ட அமைப்புக்களை அறிவுறுத்தியபடி பாதுகாக்க கேட்டவண்ணம் இருக்கலாம்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் புத்திசாலி....இப்ப இனக்கலவரத்தை தோற்றுவித்து தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடாது. சிங்களத்தின் அடுத்த நகர்வு தான் தப்பிக்க மகிந்தவை தூக்கி எறிய முற்படுவதும் ஒரு ஆட்சி மாற்றத்தை நோக்கிச் சென்று தன் இனத்தை தக்க வைப்பதிலுமே இருக்கும் = நிழலி

நிழலி, நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இப்ப இனக்கலவரம் நடப்பது மகிந்தவுக்கு நல்லதல்ல. ஆனால் ஒரு இனக்கலவரம் நடந்தால் ஜெனீவா தீர்மானம் இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீரழிக்கும் என்றும் இனக்கலவரம் வரலமென்றும் எச்சரித்த ஜாதிக கெல உரிமய போன்ற சக்திகளும் அரசில் உள்ளதல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இனக்கலவரம் நடப்பதை... சிங்களவரோ, தமிழரோ விரும்பாவிட்டாலும்,

முஸ்லிம்கள், தமிழரின் சொத்துக்களை களவெடுக்க ஆயத்தம் பண்ணுவார்கள்.

இது, கடந்தகால வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

இனக்கலவரத்தை தொடங்கி மகிந்த அரசு மேலும் சிக்கலில் மாட்டாது. இனக்கலவரத்தால் பிரயோசனம் இல்லை.தமிழர் பகுதி நிலங்களை பிடிப்பதும் சிங்கள மக்களை தமிழர் பகுதியில் குடியேற்றுவதும் தான் சிங்கள அரசின் எண்ணமும் குறிக்கோளும்.அதனை கனகச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இது தமிழர்களின் நப்பாசை.

ஆனால் இந்த நேரம் நடந்தால் தமிழர்களுக்கு கை மேல் பலன்.

http://www.usetamil.com/

நடக்காது என முழுமையாக மறுக்க முடியாவிட்டாலும், இனக்கலவரம் என்பது சாத்தியமானதுதான்.

அது சரி இச்செய்திகள் எங்கிருந்து இணையங்களுக்குக் கிடைக்கிறது?

இப்படியான செயற்பாடுகளிருக்கும்போது சிறிலங்காவில் இனக்கலவரம் நடக்காது என எப்படிச் சொல்ல முடியும்.

    சுவிஸில் அச்சுறுத்தலின் பின்னணியில் யார்? விசாரிக்க கோருகிறது சர்வதேச அமைப்பு !

Published on March 30, 2012-2:07 pm ·  

DSC_2449-150x150.jpgசுவிஸில் உள்ள தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து கடிதங்களை அனுப்பியதன் பின்னணியில் சிறிலங்கா அரசாங்கத்திற்காக பிரசாரம் செய்வதற்காக ஜெனிவாவுக்கு வந்த குழுவும் இருப்பதாக அச்சுறுத்தலுக்குள்ளாகும் மக்களுக்கான சர்வதேச அமைப்பின் (Society for Threatened People (SPT) ஜெனிவாவில் உள்ள பிரதிநிதி அன்கெலா மத்லி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக 20Minuten பத்திரிகை விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து கடிதங்கள் அனுப்பியது தொடர்பாக செய்தியை இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட இப்பத்திரிகை தற்போது அதன் பின்னணி குறித்தும், அச்சுறுத்தலுக்குள்ளாகும் மக்களுக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடந்த போர்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே தினமான மார்ச் 22ஆம் திகதிதான் அச்சுறுத்தல் கடிதங்கள் ஜெனிவா நகரிலிருந்து சில கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள Bursins என்ற இடத்தில் உள்ள தபாலகத்தில் தபாலிடப்பட்டிருப்பதாக அன்கெலா தெரிவித்துள்ளார்.

தாம் விசாரித்து அறிந்தவரை இதன் பின்னணியில் சிறிலங்கா அரசாங்கத்திற்காக பிரசாரம் செய்ய வந்த குழுவும் சுவிஸில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு உளவு பார்க்கும் குழுக்களும் தான் இச்செயலில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சுவிஸில் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருக்காக உளவு பார்க்கும் புளொட் இயக்கம் போன்ற தமிழ் குழுக்கள் தான் தமிழர்களின் விலாசங்களை சேகரித்து அச்சுறுத்தல் கடிதங்களை அனுப்பியுள்ளதாக தாம் சந்தேகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிறிலங்கா குழுவால் அச்சுறுத்தப்பட்டார்கள். இதனால் சில மனித உரிமை செயற்பட்டாளர்கள் அச்சம் காரணமாக ஐ.நா.மனித உரிமை கூட்டத்திற்கு வருவதை தவிர்த்து கொண்டார்கள். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்கியிருந்த இடம், அவர்களின் நடமாட்டம், அவர்கள் யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதை பற்றி எல்லாம் சிறிலங்கா குழு நோட்டம் விட்டு திரிந்ததோடு தொலைபேசி மூலமும், நேரிலும், குறுஞ்செய்தி, மற்றும் மின்னஞ்சல் மூலமும் அச்சுறுத்தல் விடுத்தனர் என அச்சுறுத்தலுக்குள்ளாகும் மக்களுக்கான சர்வதேச அமைப்பின் பிரதிநிதி அங்கெலா தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்திற்கு வந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வெளியில் சென்று தேனீர் அருந்துவதற்கு கூட பயப்பட்டார்கள். அவ்வளவு தூரம் சிறிலங்கா குழுவின் அச்சுறுத்தல் இருந்தது.

சிறிலங்கா குழுவில் 52க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் என்றும் அவர்களில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினர், மற்றும் ஆயுதக்குழுக்களில் இருந்தவர்கள் என பலரும் ஜெனிவாவுக்கு வந்திருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா குழுவில் 30பேர்தான் உத்தியோகபூர்வகுழுவில் இடம்பெற்றவர்கள். ஏனையவர்கள் சிறிலங்கா புலனாய்வு பிரிவைச்சேர்ந்தவர்களும், ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்களுமாவர். அது தவிர முன்னர் ஆயுதக்குழுவில் இருந்து தற்போது சுவிஸ், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவான குழுக்களும் அங்கு வந்திருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றத்தை விசாரிக்க வேண்டும் என கோரி தமிழர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்களை சுவிஸில் உள்ள புளொட் இயக்கத்தினர் புகைப்படம் எடுத்ததாக சுவிஸ் தமிழர் மக்களவையின் தலைவி தர்சிகா பகீரதன் தெரிவித்தார்.

சுவிஸில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக வேலை செய்பவர்களுக்கு இந்த அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பபடவில்லை என்றும், தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாகவும், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகவும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் சாதாரண பொதுமக்களுக்கே இந்த கடிதங்கள் அனுப்பபட்டிருப்பதாக தர்சிகா பகீரதன் தெரிவித்துள்ளார்.

சுவிஸில் உள்ள தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பட்டமை தொடர்பாகவும், ஜெனிவாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாகவும் முழுமையான விசாரணை ஒன்றை நடத்துமாறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மக்களுக்கான சர்வதேச அமைப்பு சுவிட்சர்லாந்தின் சமஷ்டி காவல்துறையினரை கோரியுள்ளனர். இது தொடர்பாக எழுத்து மூலமாகவும் காவல்துறைக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர் என சுவின்சிக் மினுட்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

(ஜேர்மன் மொழியில் சுவான்சிக் மினுட்டன் என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியை தமிழில் மொழிபெயர்ந்து தினக்கதிர் வெளியிடுகிறது. இதை மீள்பிரசுரம் செய்வோர் இந்த அடிக்குறிப்பை பிரசுரிக்கவும். தினக்கதிர் ஆசிரியர்குழு) http://www.20min.ch/schweiz/news/story/Steckt-UNO-Delegation-hinter-Drohbriefen–29638827

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கும் வேளையில் அப்படி ஒரு தப்பை சிங்களவன் இனி ஒருபோதும் செய்யமாட்டான், அப்படி செய்தால் அதுதான் நாடு பிரிவதற்கான முதற்படியாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் கையில் அதிகாரம் இருக்கும்வரையில் எதையும் கூறமுடியாது..! சுருக்கு இறுகினால் மகிந்தவுக்கு சிங்களநலன் என்பதெல்லாம் கால்தூசு..! :D

சிறிலங்காவை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கும் வேளையில் அப்படி ஒரு தப்பை சிங்களவன் இனி ஒருபோதும் செய்யமாட்டான், அப்படி செய்தால் அதுதான் நாடு பிரிவதற்கான முதற்படியாக அமையும்.

சிங்களமக்கள் அதை செய்ய மாட்டார்கள். ஆனால் சிங்களவன் செய்யமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்....?????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் நாடுகளிலிருந்து இந்த,அடுத்த வாரங்களில் இலங்கைக்கு பயணம் செய்ய இருந்தவர்கள்...பயணத்தை இரத்து செய்துவிட்டார்கள்.யாழ்மாவட்டத்திலிருந்து அவசர அலுவலக வேலைகளுக்காக கொழும்பு வந்தவர்களும்,வியாபாரரீதியாக வந்தவர்களும் அவசரமாக ஊர்திரும்பிக்கொண்டிருப்பதாக தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளிலிருந்து இந்த,அடுத்த வாரங்களில் இலங்கைக்கு பயணம் செய்ய இருந்தவர்கள்...பயணத்தை இரத்து செய்துவிட்டார்கள்.யாழ்மாவட்டத்திலிருந்து அவசர அலுவலக வேலைகளுக்காக கொழும்பு வந்தவர்களும்,வியாபாரரீதியாக வந்தவர்களும் அவசரமாக ஊர்திரும்பிக்கொண்டிருப்பதாக தகவல்.

:unsure: :unsure: :unsure:

ICG, International Amnesty போன்றவற்றிக்கும் அறிவித்து வையுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:unsure: :unsure: :unsure:

காதிலை,ரெலிபோனிலை வந்ததை சொன்னன்....ஏதோ பிபிசி சீஎன்என் சொன்னமாதிரி என்னை பாக்கிறியள்?

அய்யா,"என்று அழைக்கும் குரல் கேட்டது.தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் தலை நிமிர்ந்தார்."ஒரு செய்தி சொல்ல வந்தேன்,"என்று எதையோ சொல்ல முயன்றான் வந்தவன்.

"அவசரப்படாதே,நண்பனே!அந்தச் செய்தியை மூன்று சல்லடைகளில் சலித்துப் பார்த்தாயா?"

அவனுக்குப் புரியவில்லை."மூன்று சல்லடைகளா?"

"முதல் சல்லடை உண்மை அல்லாததைத் தடுத்து விடும்.நீ சொல்ல வந்த செய்தி உண்மையானதுதானா?"

'அது எனக்குத் தெரியாது.மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.அவ்வளவுதான்'

"இரண்டாவது சல்லடை கெட்டசெய்திகளைத் தடுத்து விடும்.நீ சொல்ல வந்தது நல்ல செய்தியா?"

'இல்லை அய்யா,'

"மூன்றாவது சல்லடை மற்றவர்களுக்குத் துன்பம் தரும் செய்திகளைத் தடுத்து விடும்.நீ சொல்ல வந்தது மற்றவர்களுக்கு நன்மை தரக் கூடிய செய்தியா?"

'இல்லை'

"நீ என்னிடம் சொல்ல வந்த செய்தி உண்மையானது அல்ல;நல்ல செய்தியும் அல்ல;அதனால் யாருக்கும் நன்மையோ மகிழ்ச்சியோ ஏற்படப்போவதில்லை.

அப்படித்தானே?"

'ஆமாம்'

"அருமை நண்பனே!அப்படிப்பட்ட செய்தியைப் பற்றி நாம் பேசி ஏன்நமது நேரத்தையும் உழைப்பையும் வீணாக்க வேண்டும்?"

வந்தவன் வாயை மூடிக் கொண்டான்.

காதிலை,ரெலிபோனிலை வந்ததை சொன்னன்....ஏதோ பிபிசி சீஎன்என் சொன்னமாதிரி என்னை பாக்கிறியள்?

இப்போது எங்கிருந்து வருகிறது என்று நாம் அதிகம் ஆராச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.

இதை நாம் முதலில் பார்த்தது சம்பந்தர் ஏன் ஜெனீவா போகவில்லை என்றதிற்கு வெளியிட்ட அறிக்கையில்த்தான்.

1. சம்பந்தர் போவதாக கூறினார்.

2. தமிழருக்கு போவதால் ஆபத்துக்கள் வரும் என்று அறிக்கைவிட்டார்.

3. பயணத்தை ரத்து செய்தார்.

அதாவது இதை யாரும் கட்டுக்கதையாக ஆரம்பிக்க வில்லை. நிச்சயமாக சம்பந்தர் மிரட்டப்பட்டிருக்கிறார். இந்த முறை ஏதாவது நடைபெற்றால்

1. அதை நாம் தடுக்க முயன்று வெற்றி பெற்றால் இப்படி ஒரு மிரட்டலைப் பாவிக்க இனி மகிந்தா முயலமாட்டார்.

2. முயற்சிகளை மீறி ஏதாவது நடைபெற்றல் இந்தியா அதற்கான பலனை அறுவடை செய்ய முயலுமுன், மேற்குநாடுகளின் NATOவை தலையிட வைக்க வேண்டும்.

அரசாங்கங்கள் ஆதாரமின்றி செய்திகளை ஏற்கமட்டா. ஆகவே நாம் அடிமட்டத்திலிருந்து நமது பாதுகாப்புக்களை தொடரவேண்டும்.

சம்பந்தர் இந்த மிரட்டலால் தடுக்க பட்டது பிரேரணையை தோற்கவைக்க. பிரேரணை வெற்றி. ராசபக்சா, தான் சும்மா மிரட்டவில்லை, சிங்கள மக்கள் உண்மையாக கோபமாக இருக்கிறார்கள் என்று சம்பந்தருக்கு தன்னும் காட்ட விரும்பலாம்.

அறிந்தவர்கள் இந்த திரியில் தொடர்ந்து எழுத வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

காதிலை,ரெலிபோனிலை வந்ததை சொன்னன்....ஏதோ பிபிசி சீஎன்என் சொன்னமாதிரி என்னை பாக்கிறியள்?

இல்லை.. சொந்தக்காரர் இருக்கினம்.. அதான் ஒரு ரென்சன்..

இனக்கலவரம் என்கிற பதம் சரியில்லை என்று நினைக்கிறேன்..! :unsure: தமிழரும் சிங்களவரும் இங்கு அடிபடவில்லையே?? தமிழருக்குத்தான் அடிதான் விழுகுது..! இன அழிப்பு என்று பிரச்சாரத்தில் கொண்டுவரவேண்டும்..! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.