Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டி,குட்டி சந்தேகங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிறீன் டீ பகலில் குடிக்க கூடாது என அண்மையில் யாரோ சொன்னார்கள் அது உண்மையா? அத்தோடு சாப்பிட்ட உடனேயும் குடிக்கக் கூடாதாம் ஆனால் சீனர்கள் சாப்பிட்ட உடனேயே கிறீன் டீ தானே குடிக்கிறார்கள் :unsure:

  • Replies 62
  • Views 7.1k
  • Created
  • Last Reply

.

ரோஸ் பாண் சிங்களத்தில் இருந்து தமிழுக்கு வந்த சொல்.

சிங்களவர் ஏனைய மொழிகளை சிங்களமாக்குவதில் வல்லவர்கள்.

ஐஸ் பெட்டிய‌ - fridge

கோச்சிய‌ - coach

போத்தலய‌ - bottle

ஐடிங் கார்ட் - ID

ஸ்கோல் - school

கிறீன் டீ பகலில் குடிக்க கூடாது என அண்மையில் யாரோ சொன்னார்கள் அது உண்மையா? அத்தோடு சாப்பிட்ட உடனேயும் குடிக்கக் கூடாதாம் ஆனால் சீனர்கள் சாப்பிட்ட உடனேயே கிறீன் டீ தானே குடிக்கிறார்கள் :unsure:

காலையில் உணவு சாப்பிட முன்பு ஒரு கோப்பை சீனி போடாது அதற்குப் பதிலாக தேசிக்காய்ப் புளி சேர்த்து குடிக்கலாம். (Green tea) இந்தத் தேநீர் குடிப்பதால் உணவு இலகுவில் செமிபாடு அடைவதற்கு உதவுகிறது, அதோடு தேசிக்காய்ப் புளியும் உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதற்கு உதவுகிறது. குறைந்தது 3 மாதங்களுக்குத் தொடர்ந்து செய்தால், அதன் பிறகு 2 வாரங்களில் பதில் தெரியும் என்று கூறப்படுகிறது.

http://www.blurtit.com/q721428.html

பலர் தினமும் 3 - 4 கோப்பை green tea சீனி போடாமல் மதியம் இரவு உணவிற்குப் பிறகு குடிக்கிறார்கள். ஆனால் இரவு நித்திரைக்குப் போகும் முன்பு இதனைத் தவிர்ப்பது நல்லது. காரணம், தூங்க முடியாமல் செய்துவிடும் என்பார்கள்.

சாப்பிட்ட பின்பு இதனைக் குடிக்கக் கூடாது என்றும் சிலர் சொல்வார்கள், காரணம் சாப்பாட்டில் உள்ள சத்துகளையும் வெளியேற்றிவிடுமாம்.

(கேள்விப்பட்டது மட்டுமே, அனுபவக் கருத்து இல்லை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மொழியில் தேர்ச்சி அடைவதற்கு அந்த மொழி தொடர்பான வாசித்தல்[நூல்கள்,பேப்பர்] அறிவு முக்கியமா அல்லது அந்த மொழியை கேட்பது முக்கியமா அல்லது அந்த மொழி தெரிந்தவர்களோடு உரையாடுவது முக்கியமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களைவிடப் பெண்களே அதிக சுயநலவாதிகள். அவர்களில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாதபோதே இந்த சுயநலம் உருவாக்கம் பெறுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது, பெண்களே அதிக சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.

கடவுள் என்ற ஒன்று இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியே கடவுள். இந்த சக்தியை மனிதன் உரிய முறையில் பயன்படுத்தினாலே வளமாக வாழ முடியும். இந்த சக்தியைத் தவறான முறையில் பயன்படுத்தும்போதே, மனிதன் சொந்த மற்றும் புறச் சிக்கல்களை உருவாக்குகிறான். எம்மைச் சுற்றியுள்ள சக்தியையே கடவுள் என சித்தரிக்கப்படுகிறது.

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்...

ஒரு மொழியில் தேர்ச்சி அடைவதற்கு அந்த மொழி தொடர்பான வாசித்தல்[நூல்கள்,பேப்பர்] அறிவு முக்கியமா அல்லது அந்த மொழியை கேட்பது முக்கியமா அல்லது அந்த மொழி தெரிந்தவர்களோடு உரையாடுவது முக்கியமா?

பொதுவாக ஒரு விஷயத்தை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறையில் உள்வாங்குவார்கள். படிக்கும் முறைகளில் முக்கியமாக 3 முறைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது...

  1. பார்ப்பது
  2. கேட்பது
  3. செயலில் செய்வது

http://www.learning-styles-online.com/overview/

நீங்கள் எந்த முறையில் ஒரு விடையத்தை அதிகம் உள்வாங்கிக் கொள்ளுவீர்கள் என்று அறிய கீழுள்ள இணைப்பில் அழுத்துங்கள்...

DISCOVER YOUR PREFERRED LEARNING STYLE

http://www.youtube.com/watch?v=yeBsq7FDvLw

இதில் எந்த முறை உங்களுக்கு ஏற்றதாக இருக்கோ அதன்படி பின்பற்றலாம்...

ஒரு மொழியில் தேர்ச்சி அடைவதற்கு அந்த மொழி தொடர்பான வாசித்தல்[நூல்கள்,பேப்பர்] அறிவு முக்கியமா அல்லது அந்த மொழியை கேட்பது முக்கியமா அல்லது அந்த மொழி தெரிந்தவர்களோடு உரையாடுவது முக்கியமா?

மொழியில் தேர்ச்சி பெறுவதற்கு அந்த மொழி தெரிந்தவர்களோடு உரையாடுவதே சிறந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டி கூறியது போல், றோஸ்ட் செய்த பாண் பேச்சு வழக்கில் திரிந்து ரோஸ் பாணாக மாறிவிட்டது.

ஆண்களைவிடப் பெண்களே அதிக சுயநலவாதிகள். அவர்களில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாதபோதே இந்த சுயநலம் உருவாக்கம் பெறுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது, பெண்களே அதிக சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.

கடவுள் என்ற ஒன்று இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியே கடவுள். இந்த சக்தியை மனிதன் உரிய முறையில் பயன்படுத்தினாலே வளமாக வாழ முடியும். இந்த சக்தியைத் தவறான முறையில் பயன்படுத்தும்போதே, மனிதன் சொந்த மற்றும் புறச் சிக்கல்களை உருவாக்குகிறான். எம்மைச் சுற்றியுள்ள சக்தியையே கடவுள் என சித்தரிக்கப்படுகிறது.

ஆண்களிடையேயா அல்லது பெண்களிடையே போட்டி,பொறாமை அதிகம் எனப் பார்த்தால் அது பெண்களிடையே தான் ஆனால் பெண்களா ஆண்களா அதிக சுய

நலவாதிகள் என்டு பார்த்தால் அது சந்தேகமில்லாமல் ஆண்கள் தான் என்பது என் கருத்து.

பெண்கள் எப்போதும் தனக்காக என்று வாழ்வதில்லை கணவனுக்காக,குழந்தைகளுக்காக,சகோதரங்களுக்காகவே வாழ்கிறாள் அவர்களுக்காக விட்டுக் கொடுக்கிறாள் இது ஆண்களிடையே குறைவு என்பது தான் என் கருத்து...ஆண்கள் ஒரு குறிப்ப்பிட்ட காலத்திற்கு தான் மற்றவருக்காக வாழ்வார்கள் ஆனால் பெண்களோ காலம் பூரா சுய நலமில்லாமல் மற்றவருக்காக வாழ்வார்கள்[விதி விலக்கும் உண்டு.]

தமிழிச்சி எழுதின மாதிரி நம்பிக்கைக்கும்,சுய நலத்திற்கும் சம்மந்தம் இல்லை...தன் மீது நம்பிக்கை குறைந்தால் தன்னோட ஒத்தவர்கள் நல்லாயிருப்பதை பார்த்து போட்டி,பொறாமை தான் கூடுமே அதில் சுயநலமிருக்காது என்பது என் கருத்து.

உலகளாவிய மொழிகளை எடுத்துக்கொண்டால் அத்தனை மொழிகளிற்குமான அடிப்படை ஒன்று தான் என்பது மட்டுமன்றி அத்தனை மொழிகளிற்குமான அந்த அடிப்படையோடுதான் அனைத்துக் குழந்தைகளும் (வருத்தங்கள் குறைபாடுகள் நீங்கலாக) பிறக்கின்றன என்பது நோம் ச்சோம்ஸ்கியின் கண்டறிதல் (இல்லாது போயின் ஜப்பானில் பிறந்த குழந்தையினைத் தத்தெடுத்து யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணியாக வளர்க்க முடியாது--இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளதால் திரும்பப் பேசவில்லை). எனினும்இ கலாச்சாரம் பாரம்பரியம் பிரதேசம் வாழ்வியல் முதலிய இன்னோரன்ன காரணிகள் நிமித்தம் மனிதன் உருவாக்கிய மொழிகள் ஒன்றிற்கொன்று முற்றிலும் அந்நியமானவையாக உருவாகிக்கொள்கின்றன.

உதாரணமாகச் சொல்வதானால், கணனி மொழிகளை எடுத்துக் கொண்டால் இந்த மொழிகள் கணனிக்கான கட்டழைகளை தத்தமது பாணியில் பேசுகின்றபோதும், கணினி மெசின் கோட்டைத் தான் புரிந்து கொள்கிறது. கொம்பைல் பண்ணும் மொழிகள் இன்ரபிறிற் பண்ணும் மொழிகள் என்று ஏகப்பட்ட கணனிக்கட்டழை மொழிகள் உயர்மட்டத்தில் இருக்கின்றன. ஒரு கணனி மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஒருவரிற்கு இன்னுமொன்று அன்னியமாய்ப்படுவது சாத்தியம். மேலும், ஒவ்வொரு கணினி மொழி எழுதுபவர்களும் தத்தமது மொழிகளிற்குள் இது தான் புனிதம், இப்படித் தான் இதை எழுத வேண்டும் என்று ஏகப்பட்ட ஒழுங்குகளை ஒரு மதம் போலக் கடைப்பிடிப்பார்கள். அவர்கள் கடைப்பிடிக்கும் மேற்படி ஒழுங்குகளுட் சில அனுபவத்தால் வந்த ஏற்றுக்கொள்ளக் கூடிய விதிகள். அதாவது பட்டறிவால் அடையாளப்படுத்தப்பட்ட பரிகாரங்கள். ஆனால் பல ஒரு மத நம்பிக்கை போன்றன. எனவே, ஒரு மொழியில் பாண்டித்தியம் பெறவேண்டும் என்றால் இலக்கணத்தையும் விதிகளையும் மட்டும் படித்துவிடுவது போதுமானதல்ல. அந்தந்த மொழி பேசும் கலாச்சாரத்திற்குள் ஒரு மதநம்பிக்கை போன்று எம்மை எதிர்ப்பின்றி அமிழ்த்திக்கொண்டால் மட்டுமே அம்மொழியில் எமக்குப் பாண்டித்தியம் கைவரும். ஏனெனில் மொழி என்பது ஏறத்தாள ஒரு மனவமைப்பின் பிரதிபலிப்பு.

ஆனால், எந்தக் கலாச்சாரத்தை எவ்வாறு புரிந்து கொள்ள ஆரம்பிப்பது என்பது ஏதாவது ஒரு காலாச்சாரம் தெரிந்த அனைவரிற்கும் தெரியும். ஏனெனில் அத்தனை காலாச்சாரங்களிற்கும் பொதுவான அடிப்படை இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

குறை நினைக்காதையுங்கோ ரதி அக்கா....எனக்கும் இரண்டு மூண்டு சந்தேகம் இருக்கு...உங்கட திரியை பாவிச்சு தீர்த்துக்கிறன்...

சந்தேகம் 1) வெளிநாடுகளில் பேச்சுச் சுதந்திரம் இருக்கு என்கிறார்கள் அப்புறம் எதுக்கு போன் பில்லை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்..?

சந்தேகம் 2) குடிச்சிட்டு வாகனம் ஓட்டக்குடாது என்கிறார்கள் அப்புறம் எதுக்கு பப்பில பாக்கிங் வைக்கிறார்கள்..?

சந்தேகம் 3) பஸ்சிற்கு ரிக்கற் எடுத்தா பஸ் ஸ்டாப்பில உக்காரலாம்,பஸ் ஸ்டாப்பிற்கு ரிக்கற் எடுத்தா பஸ்ஸில ஏன் உக்கார முடிவதில்லை..?

சந்தேகம் 4) ஒரு இடத்துக்கு ஓடிப்போனா களைக்குது அதே இடத்துக்கு நடந்து போனால் ஏன்அதே அளவு களைப்பதில்லை..?

சந்தேகம் 5) குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்றால் ஏன் குரங்கு அப்படியே இருக்கு..?

சந்தேகம் 6) வெஜ் சாப்பிடும் ஆடுமாடுகளை ஏன் non வெஜ் என்கிறார்கள்..?

இதைப் பாத்திட்டு நீங்கள் எனக்கு அடிக்க வராதீர்கள்... :(:D

Edited by சுபேஸ்

அப அலை அக்கா ஆணா pouting.gif

எனகும் குட்டி சன்தேகம்பா

குட்டி என்டா பெடியனா பெடையா

எனக்கும் ஒரு சந்தேகம்........ குண்டா நீங்கள் ஆண்பிள்ளையா??அல்லது............. :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு சந்தேகம்........ குண்டா நீங்கள் ஆண்பிள்ளையா??அல்லது............. :D:icon_idea:

என்ன தமிழ்சூரியன் எண்டு பெயரிலையே தமிழை வைச்சிக்கிட்டு இதற்கெல்லாம் சந்தேகப்படலாமா...?

குண்டா என்றால் பெடியன் "குண்" உடன் "டி" சேர்ந்தால்தான் பெட்டை.. :(

புரிந்துவிட்டது தோழா ... :icon_idea::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மொழியில் தேர்ச்சி அடைவதற்கு அந்த மொழி தொடர்பான வாசித்தல்[நூல்கள்,பேப்பர்] அறிவு முக்கியமா அல்லது அந்த மொழியை கேட்பது முக்கியமா அல்லது அந்த மொழி தெரிந்தவர்களோடு உரையாடுவது முக்கியமா?

  • அந்த மொழியில் தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கம்.
  • அந்த மொழி தெரிந்தவருடன் பேசுதல். அவர்கள் பேச்சை அவதானித்தல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறை நினைக்காதையுங்கோ ரதி அக்கா....எனக்கும் இரண்டு மூண்டு சந்தேகம் இருக்கு...உங்கட திரியை பாவிச்சு தீர்த்துக்கிறன்...

சந்தேகம் 1) வெளிநாடுகளில் பேச்சுச் சுதந்திரம் இருக்கு என்கிறார்கள் அப்புறம் எதுக்கு போன் பில்லை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்..?

சந்தேகம் 2) குடிச்சிட்டு வாகனம் ஓட்டக்குடாது என்கிறார்கள் அப்புறம் எதுக்கு பப்பில பாக்கிங் வைக்கிறார்கள்..?

சந்தேகம் 3) பஸ்சிற்கு ரிக்கற் எடுத்தா பஸ் ஸ்டாப்பில உக்காரலாம்,பஸ் ஸ்டாப்பிற்கு ரிக்கற் எடுத்தா பஸ்ஸில ஏன் உக்கார முடிவதில்லை..?

சந்தேகம் 4) ஒரு இடத்துக்கு ஓடிப்போனா களைக்குது அதே இடத்துக்கு நடந்து போனால் ஏன்அதே அளவு களைப்பதில்லை..?

சந்தேகம் 5) குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்றால் ஏன் குரங்கு அப்படியே இருக்கு..?

சந்தேகம் 6) வெஜ் சாப்பிடும் ஆடுமாடுகளை ஏன் non வெஜ் என்கிறார்கள்..?

இதைப் பாத்திட்டு நீங்கள் எனக்கு அடிக்க வராதீர்கள்... :(:D

இப்ப என்ரை மண்டையிலை இருக்கிற மயிரை பாத்தால்..........காத்து எந்தப்பக்கம் அடிக்குது எண்டு கடக்கண்ணாலை பாத்தாலே தெரியும்......தம்பியர்! உங்கடை உந்த குறுக்குகேள்வியை பாத்தவுடனை...நடுவிலை நிக்கிற நாலுமுடியும் நட்டமரம் மாதிரி நிலைச்சு நிக்குது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மொழியில் தேர்ச்சி அடைவதற்கு அந்த மொழி தொடர்பான வாசித்தல்[நூல்கள்,பேப்பர்] அறிவு முக்கியமா அல்லது அந்த மொழியை கேட்பது முக்கியமா அல்லது அந்த மொழி தெரிந்தவர்களோடு உரையாடுவது முக்கியமா?

ஒரு மொழியை கற்பதற்கு அம்மொழியை வாசிப்பதன் மூலமும்,எழுதுவதன் மூலமும் ,கேட்டல் மூலமும், அம்மொழியை தாய் மொழியாய் கொண்டவருடன் பேசுவதன் மூலமும் அம்மொழியில் பாண்டித்தியம் பெறலாம்.

என்ன தமிழ்சூரியன் எண்டு பெயரிலையே தமிழை வைச்சிக்கிட்டு இதற்கெல்லாம் சந்தேகப்படலாமா...?

குண்டா என்றால் பெடியன் "குண்" உடன் "டி" சேர்ந்தால்தான் பெட்டை.. :(

என்னபா சு.பேஸ்டு

குண்டன் பெடியன்

குண்டனி பெடை xd.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொழி தொட‌ர்பான சந்தேககத்தை தீர்த்து வைத்த குட்டி,இன்னுமொருவன்[உங்களது விளக்கம் வித்தியாச‌மாகவும் நன்றாகவும் இருந்தது.],தமிழிச்சி,இ.கலைஞன்,நூணாவிலான் ஆகியோருக்கு நன்றிகள்...அந்த மொழி தெரிந்தவர்கள் கதைப்பதை அவதானிப்பதன் மூலமும்,அவர்களோடு கதைப்பதன் மூலமும் ஒரு மொழியில் தேர்ச்சி பெறலாம் என்பது தான் எனது கருத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகளாவிய மொழிகளை எடுத்துக்கொண்டால் அத்தனை மொழிகளிற்குமான அடிப்படை ஒன்று தான் என்பது மட்டுமன்றி அத்தனை மொழிகளிற்குமான அந்த அடிப்படையோடுதான் அனைத்துக் குழந்தைகளும் (வருத்தங்கள் குறைபாடுகள் நீங்கலாக) பிறக்கின்றன என்பது நோம் ச்சோம்ஸ்கியின் கண்டறிதல் (இல்லாது போயின் ஜப்பானில் பிறந்த குழந்தையினைத் தத்தெடுத்து யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணியாக வளர்க்க முடியாது--இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளதால் திரும்பப் பேசவில்லை). எனினும்இ கலாச்சாரம் பாரம்பரியம் பிரதேசம் வாழ்வியல் முதலிய இன்னோரன்ன காரணிகள் நிமித்தம் மனிதன் உருவாக்கிய மொழிகள் ஒன்றிற்கொன்று முற்றிலும் அந்நியமானவையாக உருவாகிக்கொள்கின்றன.

உதாரணமாகச் சொல்வதானால், கணனி மொழிகளை எடுத்துக் கொண்டால் இந்த மொழிகள் கணனிக்கான கட்டழைகளை தத்தமது பாணியில் பேசுகின்றபோதும், கணினி மெசின் கோட்டைத் தான் புரிந்து கொள்கிறது. கொம்பைல் பண்ணும் மொழிகள் இன்ரபிறிற் பண்ணும் மொழிகள் என்று ஏகப்பட்ட கணனிக்கட்டழை மொழிகள் உயர்மட்டத்தில் இருக்கின்றன. ஒரு கணனி மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஒருவரிற்கு இன்னுமொன்று அன்னியமாய்ப்படுவது சாத்தியம். மேலும், ஒவ்வொரு கணினி மொழி எழுதுபவர்களும் தத்தமது மொழிகளிற்குள் இது தான் புனிதம், இப்படித் தான் இதை எழுத வேண்டும் என்று ஏகப்பட்ட ஒழுங்குகளை ஒரு மதம் போலக் கடைப்பிடிப்பார்கள். அவர்கள் கடைப்பிடிக்கும் மேற்படி ஒழுங்குகளுட் சில அனுபவத்தால் வந்த ஏற்றுக்கொள்ளக் கூடிய விதிகள். அதாவது பட்டறிவால் அடையாளப்படுத்தப்பட்ட பரிகாரங்கள். ஆனால் பல ஒரு மத நம்பிக்கை போன்றன. எனவே, ஒரு மொழியில் பாண்டித்தியம் பெறவேண்டும் என்றால் இலக்கணத்தையும் விதிகளையும் மட்டும் படித்துவிடுவது போதுமானதல்ல. அந்தந்த மொழி பேசும் கலாச்சாரத்திற்குள் ஒரு மதநம்பிக்கை போன்று எம்மை எதிர்ப்பின்றி அமிழ்த்திக்கொண்டால் மட்டுமே அம்மொழியில் எமக்குப் பாண்டித்தியம் கைவரும். ஏனெனில் மொழி என்பது ஏறத்தாள ஒரு மனவமைப்பின் பிரதிபலிப்பு.

ஆனால், எந்தக் கலாச்சாரத்தை எவ்வாறு புரிந்து கொள்ள ஆரம்பிப்பது என்பது ஏதாவது ஒரு காலாச்சாரம் தெரிந்த அனைவரிற்கும் தெரியும். ஏனெனில் அத்தனை காலாச்சாரங்களிற்கும் பொதுவான அடிப்படை இருக்கிறது.

அருமையான விளக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடவை எனது குட்டிக் கேள்வி லண்டன் தொடர்பானது;

1)லண்டனில் மிகப் பெரிய விமான நிலையம் ஹித்துரு விமான நிலையம்.அங்கு போவதற்கு சாதரண போக்குவரத்து செலவுகளோட போகலாம்[நான் சொல்வது புகையிரதப் பயணம் காரில் போவதையல்ல] ஆனால் சான்ட்சட்[stansted],கட்வீக்[gatwick] விமான நிலையத்திற்கு போவது என்டால் ஏன் அதிக காசு அறவிடுகிறார்கள்? அந்த விமான நிலையங்களுக்கு சாதரண கட்டணத்தில் போய் வரக் கூடிய மாதிரி ஏன் செய்யவில்லை?

2)பிரித்தானியாவில் இலகுவாக வேலை எடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

1) Gatwick & Stansted விமான நிலையத்தை விட Heathrow விமான நிலையத்தில் அறவிடப்படும் வரி அதிகம் என நினைக்கிறன். அதனால் மற்றைய விமான நிலையத்திற்குப் போகும் தரைவழி (Coach & Train) போக்குவரத்து திணைக்களம் அதனை அறவிடுகிறது, இது பெரும்பாலும் கடைசி நேரத்தில் விடுமுறைகளை ஆயத்தப் படுத்துவதால் வரும் வீண் செலவு என்றே கூறுவேன்.

நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ அடிக்கடி மற்றைய விமான நிலையங்களைப் பாவிப்பவர்களாக இருந்தால், network railcard எடுப்பது சிறந்தது. இதனைப் பெறுவதற்கு £28.00 ஒரு வருட காலத்திற்குப் பாவிக்கலாம். ஒரு தரம் நீங்கள் இதனைப் பெற்றால், அதன் பிறகு ஒவ்வொரு முறையும் பயணிக்கும் போது

1 /3 ஒரு பகுதி கட்டணம் (காலை 10 மணிக்குப் பிறகு) மட்டுமே நீங்கள் செலுத்துவீர்கள்.

http://www.railcard....es/File/map.pdf

இதை விட, (easy bus) ஈசிபஸ்சில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு ஒருவழி (£2 .00 களிலிருந்து) இருவழி x 2 கட்டணத்தோடு செய்யலாம்.

National Express Coachஇதுவும் குறைந்த விலையில் ஒருவழி (£7.00 களிலிருந்து) இருவழி x 2 முன்பதிவு செய்யலாம்.

(இதுக்குத்தான் எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும் என்றகிறது... ^_^:icon_idea:)

2) இதைக் குட்டிக் கேள்விக்குள் சேர்ப்பது உங்களுக்கே சரி என்று தோணுதா? :huh::rolleyes:

இலகுவாக என்று சொல்ல முடியாது, ஆனால் முயற்சித்தால் முடியும் என்றே நினைக்கிறன்.

உங்களுக்கு ஏற்ற பகுதி எதுவென்று முடிவெடுத்தபின்பு கீழுள்ள இணைப்புகளில் தினமும் தேடித் பாருங்கள் பாருங்கள்.

http://jobseekers.di...8f9eb8471&pid=2

http://www.reed.co.u...CFc0htAodzFxBnA

http://www.jobs.nhs.uk/

இதோடு நிறுத்தாமல் நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள employment agencies-யில் உங்கள் தரவுகளைப் பதிவு செய்து கொள்ளுங்கள், உங்களுக்கேற்ற வேலை வரும் போது அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளுவார்கள். தொடர்பு கொள்ளாவிட்டால் அவர்களோடு நீங்களே தொடர்ப்பை ஏற்படுத்திக் கதைத்துப் பார்க்கலாம்.

வேலை செய்யும் நண்பர்கள், தெரிந்தவர்களிடம் சொல்லி வையுங்கள். அதே நேரம், நீங்களும் நேரமெடுத்து நம்பிக்கையோடு தேடிப்பாருங்கள்.

வேலை எடுப்பது இன்றைய சூழ்நிலையில் இலகுவானது இல்லை, எனவே இவை யாவும் உங்களைக் கைவிட்டால், மனம் தளராமல் வாரத்தில் குறைந்தது ஒரு நாளை ஒதுக்கி அருகில் உள்ள ஒரு அரசாங்க நிறுவனத்தில் voluntary வேலையில் உங்கள் பெயரைப் பதிவு செய்து குறைந்தது 3 மாதங்களாவது செய்யுங்கள், அந்த அனுபவம் எதிர்காலத்தில் உங்கள் வேலை தேடும் படலத்திற்கு வலுச்சேர்க்கும் (சிறுவர் பள்ளி, வைத்தியசாலை போன்றவற்றைத் தெரிவு செய்வதன் மூலம் நல்ல reference ஐப் பெற்றுக் கொள்ளலாம் என நினைக்கிறன்.)

பின்குறிப்பு: உண்மையில் நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி குட்டி எனக்கு தேவையான தகவல்களை சிரமம் பாராமல் தேடிப் பிடித்து தருவதற்கு மீண்டும் நன்றி...வேலை எனக்கில்லை,எனக்கு மிகவும் வேண்டப்பட்டவருக்கு...லோக்கல் employment agencies ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறதா? அதை எப்படி கண்டு பிடிப்பது?...பாடசாலை சம்மந்தமான வேலைகள் எப்படி எடுக்கலாம்?...நன்றி :)

நீங்கள்/ உங்களுக்கு வேண்டப்பட்டவர் வசிக்கும் borough இணையத்தில் jobs என்ற பகுதிக்குச் சென்றால், அதில் Teaching & Non-teaching vacancies என்று இருக்கும், அங்கே தினமும் பாருங்கள். voluntary வேலையாக இருப்பின் நீங்கள் வேலை பழக விரும்பும் பள்ளியின் தலைமை ஆசிரியருடன் தொடர்பு கொண்டு உங்களின் நல்ல காரணங்களைச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள்.

employment agencies ஒவ்வொரு பகுதியிலும் உள்ளது, கூளிள் உங்கள் இடத்தின் பெயரைப் போட்டு employment agencies என்று தேடுங்கள், சிலதுகள் வரும். எதுக்கும் நீங்கள் இருக்கும் பகுதி town center-ல் தேடிப்பாருங்கள், அல்லது பொது நூலகத்தில் கேட்டு அறியலாம் என்று நினைக்கிறன்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னம்மா செய்தது சரியா/பிழையா?

நேற்று எனது நண்பி எனக்கு போன் பண்ணி நீயே இதற்கு நியாயம் சொல்லு அவர்கள் செய்தது சரியா? பிழையா? என என்னிடம் கவலைப் பட்டார்.எனக்கு அவருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை விசயம் இது தான்;

அவவும்,அவவுடைய பெயர் கவிதா என வைப்போம்.கவிதாவும்,கவிதாவின் சின்னம்மாவும் மொபைலில் கதைத்துக் கொண்டு இருக்கும் போது சின்னம்மாவின் வீட்டு தொலைபேசிக்கு கவிதாவின் சொந்த தங்கை மாலதி போன் பண்ண சின்னம்மா மாலதி அடிக்கிறால் என சொல்லிப் போட்டு மொபைலைக் கட் பண்ணாமல் மாலதியோடு வீட்டு போனில் கதைக்க கவிதா மொபைலில் கேட்டுக் கொண்டு நின்றவவாம்.திடிரென்று அக்கா கவிதாவைப் பற்றி மாலதி கதையெடுக்க சின்னம்மா திடீர் என மொபைலைக் கட் பண்ணிப் போட்டாவாம் :) [அதாவது கவிதாவின் அழைப்பை சின்னம்மா துண்டித்து விட்டார்].

கவிதாவின்ட‌ அழுகைக்கு கார‌ணம் என்ன என்டால் தன்னைப் பற்றி கதைப்பதற்காகத் தான் சின்னம்மா மொபைலை கட் பண்ணிணவ என்டும் :rolleyes: அத்தோடு தான் லைனில் நிற்கிறது என்டு தெரிஞ்சும் தன்னை கட் பண்ணிப் போட்டு அப்படி என்னத்தை மாலதியோட‌என்னைப் பற்றி கதைத்தவ [இத்தனைக்கும் மாலதிக்கு கவிதா லைனில் நின்ட‌து தெரியாது] என்டும் :D ,முக்கியமாக சின்னம்மா செய்தது பிழை என்பது அவளது வாதம் மாலதியோட‌ போன் வருகுது என்டால் தன்னிட‌ம் கட் பண்ண சொல்லிப் போட்டு போனைக் கட் பண்ணிட்டு போயிருக்கலாம் தானே!அதை விட்டு விட்டு தன்னை பற்றிய கதை என்ட‌வுட‌ன் போனை கட் பண்ணியிருக்க கூடாது என்பது இவளது வாதம்.

கருத்தாளர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது குறித்த உங்கள் கருத்து என்ன?...நீங்கள் என்டால் கவிதாவுக்கு என்ன சொல்வீர்கள்?

முருகா ................. முடியேலையே .....................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.