Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டோப்பும் டூப்பும்.

Featured Replies

கடந்த ஞாயிறு பின்னேரம் 3 க்கு போய் இருபது டொலரை வீணாக்க வேண்டுமா என நான் யோசித்துகொண்டிருக்க, சன் டி வி பார்த்துக்கொண்டிருந்த மனைவி கூப்பிட்டார் “அப்பா இஞ்சை வந்து பாருங்கோ யார் டி வி யில் நிற்கின்றார் என்று “. நானும் எட்டிப்பார்த்தேன். சூர்யா,திரிஷா நடித்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது அதில் சூர்யா ஒரு இளைஞனை பேசிக்கொண்டிருந்தார் .”அட நம்ம கார்த்திக்.ஆள் அப்படியே இருக்கு,பாவம் இப்பவும் இரண்டு மூன்று நிமிட காட்சிகளுடன் தான் போல தான் கிடக்கு இவர் நடிப்பு ”.

பத்துவருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு ஒருமாத கனவுப் பயணம் போனோம்.கன்னியாகுமாரி ,நாகர்கோவில் ,கேரளா படகு வீடு,கோவளம் கடற்கரை,மைசூர்,ஊட்டி,பின் சென்னையும் முக்கியமாக மனைவியின் சொப்பிங்.மூத்த அக்கா போன் பண்ணி சொன்னா “சாலிக்கிராமத்தில் உள்ள தனது வீடு (3 BR FLAT) சும்மா தான் கிடக்கு விருப்பமென்றால் சென்னையில் நிற்கும் போது அங்கு போய் தங்கு என்று”ஓமென்று திறப்பை வாங்கிக்கொண்டேன்.

மதியம் இரண்டு மணி சென்னை போய் இறங்க ஆடி வெக்கை தனது வேலையை காட்டிக்கொண்டிருந்தது,நேர கோல் டாக்சி பிடித்து அக்கா வீட்டிற்கு போனோம்,சாமான்களை அங்கு வைத்துவிட்டு ஒரு நாள் ஓய்வு எடுத்து பயணம் தொடர திட்டம்.அங்கு போய் பூட்டைதிறந்து உள்ளே போனால் கரண்ட் இல்லை.வெளியில் வந்து பியுசை பார்த்தால் காணவில்லை,துண்டு வைத்திருக்கு ஏதோ மூவாயிரத்து சொச்சம் கட்ட வேண்டும் என்று.அருகில் இருப்பவர்களிடம் விபரம் கேட்டு போய் ஒருமாதிரி பில்லையும் கட்டி பியுசையும் வாங்கிவந்து பொருத்தி அப்பாடா என்று சாய்ந்தால்,

மனுசி ஒரு குண்டை தூக்கி போட்டார்” மூத்தமகன் பிறக்கேக்க சுகபிரவசம் என்றால் தான் மொட்டை அடிப்பதாக நேர்த்தி வைத்ததாக”

“இஞ்ச பாரும் இனி ஒரு பிளானும் மாத்தி திருப்பதி போக முடியாது ,அப்படி நேர்த்தி வைத்ததை இஞ்சை வந்து இப்ப சொன்னால் இனி ஏலாது,அப்படியென்றால் வடபழனியில் மொட்டையை போடும்.”

“சரி, ஆனால் மொட்டை அடித்தபின் போட விக் வாங்கவேண்டும்.சும்மா இளக்கமான செயற்கை மயிரிலான விக்கில்லாமல் ஒறியினல் மயிரில் செய்த விக், இப்ப இருக்கின்ற மயிர் மாதிரியே ஓர்டர் பண்ணி செய்யலாமாம்”

ஓம் என்று தலையை ஆட்டினேன்.ஆனால் பேய்க்கொதி. மகன்,நேர்த்தி என்று இழுத்துவிட்டதால் கடத்தவும் முடியாமல் போய்விட்டது. இதுக்குள்ள ஆள் T.V.I யில் ஒரு நிகழ்ச்சி வேறு நாடாத்திக்கொண்டிருந்ததால் முன்னர் இருந்த அதே HAIR STYLE இல் விக் வேண்டுமாம்.பிள்ளைகள் களையில் படுத்துவிட்டார்கள்.கடவுளே என்று காலாற நடக்க பதினைந்து வருடங்களுக்கு பின் புழுதியில் இறங்கினேன்.வியர்வை ஆருவியாய் கொட்டுது.நாடக சீரியலில் வரும் இடங்கள் போல சாலிக்கிராமம் ஓரளவு வசதியுடன் குளிர்மையாக இருந்தது. வடபழனிக்கு அருகில் இருப்பதால் சினிமாக்காரர்களின் ஆதிக்கம்,திரும்பும் இடமெல்லாம் படங்களிலோ,சீரியல்களிலோ பார்த்த துணை நடிக,நடிகைளின் முகங்கள்.குட்டி போலிஸ் நிலையம் சற்று திரும்ப உயர்ந்த கறுப்பு கேட் உடன் விஜய் வீடு.பரோட்டாவும் கறியும் கூலாக இரண்டு கிங்பிசரும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன்.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா கோபிக்க வேண்டாம் இந்தக் கதையின் கரு எனக்கு விளங்கவில்லை

  • தொடங்கியவர்

கோவிக்க வேண்டாம் கதை? இப்ப தான் தொடங்குது ?

எல்லோரும் நல்லா நித்திரை அடித்துவிட்டு விடிய எழும்பி சுற்றுலாவிற்கான ஒழுங்கு செய்ய காலையிலேயே சந்திக்கு வருகின்றோம், ஆட்டோ பிடித்து மவுண்ட்ரோடு போனால் அனைத்து அலுவல்களும் முடித்து விடலாம்.

சந்தியில் உள்ள ஒரு கடையில் மனைவி விக் எங்கு போனால் வாங்கலாம் என விசாரித்து பார்க்கின்றார்.கடைக்காரர் “ சவுரி வாங்க மவுன்ரோடு போங்கம்மா” எனும் போது கீரோகொண்டா மோட்டார் சயிக்கில் ஒன்று கடையடியில் வந்து நிற்க அதிலிருந்து வெகு டிப் டாப் ஆக ஒரு இளைஞன் இறங்கி வந்து அந்த கடையில் சிகரெட் வாங்கியவன் என்னைப்பார்த்து “சிலோனா சார்? லண்டனா? கனடாவா?” என்கின்றான்.

நான் கனடா என சொல்ல, அவன் “விக் வாங்குவதென்றால் வடபழனி தான் சரியான இடம் சார்” என்றபடி அருகில் நின்ற ஆட்டோகாரரை கூப்பிட்டு ஏதோ ஒரு கடையின் பெயரை சொல்லி எம்மை அங்கு அழைத்து செல்ல சொல்லிவிட்டு “நீங்கள் அவரோட போங்க சார் நானும் அரைமணியில் அங்கு வந்துர்றன்,சொறி சார் அறிமுகம் செய்யவே இல்லை,ஐ ஆம் சுந்தர், விளம்பர ஏஜென்சியில் வேலை செய்கின்றேன்,நீங்க எங்கே சார் தங்கியிருக்கின்றிர்கள்,”

நான் நாம் தங்கியிக்கிருக்கும் பிளாட்டை காட்டுகின்றேன் ,”நானும் ரொம்ப அருகில்தான் இருக்கின்றேன், வாறன் சார்” என்று போய்விட்டான்

வடபழனிக்கு ஆட்டோ வெளிக்கிடுகின்றது,எனது பொடிப்பிள்ளைகளுக்கு இது முதல் அனுபவம்,வீதியில் மாடுகளும் நாய்களும் ஒரே வாகனங்களும், அதுவும் எந்த நேரமும் கோன் அடித்தபடி,சனம் சனம் சனம். திரும்பும் திசையெல்லாம் மக்கள் நிறைந்திருக்கின்றார்கள், பஸ் நிரம்பி வழிகின்றது,உள்ள சந்து புந்து எல்லாம் நுழைந்தபடி ஆட்டோக்கள், ஸ்க்கூட்டியில் சல்வாருடன் பெண்கள் பறக்கின்றார்கள்.

எனக்கும் எண்பதுகள் மீண்டும் நினைவு வருகின்றது,இவை எல்லாம் நான் தோழர்களுடன்? மோட்டார்பைக் இல் சுற்றியடித்த இடங்கள் தான் ,ஆனால் இப்ப ரொம்பவும் மாறிவிட்டது.சரவணபவனில் இறங்கி மசாலதொசையை வெட்டிவிட்டு விக் கடைக்கு போனால் டிப்டாப் ஆசாமி அங்கே நிற்கின்றான்.

“காலை சாப்பாடு ஆகிடிச்சா சார்? ஆமென தலையை ஆட்டுகின்றேன்.

“இங்குதான் சார் பெரிய சினிமாகாரங்கள் எல்லோரும் விக் ஆர்டர் பண்ணுவாங்கள்,நல்ல கிளினாக செய்துதருவாங்க,”என்ற படி கடைக்காரரை அறிமுகம் செய்துவைக்கின்றார்.

ஒருவாறு விக் அலுவல் முடிந்த திருப்தி எனக்கு.

”தமிழ் நாடு கோயில்கள் சுற்றி பார்க்க வந்தீங்களா? எனக்கு தெரிந்த ரவல்ஸ் இருக்கு ஒழுங்கு பண்ணி விடட்டுமா சார்?

“இல்லை நாங்கள் சும்மா இடம் பார்க்க தான் வந்தனாங்கள்,உங்களுக்கு ஏன் சிரமம், நான் போய் மவுன்ரோடில் ஒழுங்கு பண்ணுகின்றேன்”

“என் கூட பைக்கில வாருங்க சார் உடனே போயிட்டு வந்துடலாம்”

நான் மனைவியிடம் உடன் திரும்பிவருகின்றேன் என்றுவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்துகொண்டேன்.

மவுன்ரோடில் பைக் பறக்கின்றது.

(இன்னும் வரும்)

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலா போகின்றவர்கள், மொட்டை அடித்துவிட்டு நாட்டுக்கு திரும்பி வந்தால்...

இமிகிரேசனில் விக்கையும், பாஸ்போட் படத்தையும்... மாறி,மாறி பார்த்திருப்பார்களே....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக போகிறது அண்ணா அரசியல் கலக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்

  • தொடங்கியவர்

சுற்றி பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலை பார்த்துவிட்டு சுந்தரின் ராவல் ஏஜென்சி நண்பன் சொன்னார் “நீங்கள் முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமாரி போய் பின் அங்கிருந்து ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டு வருவதுதான் நல்லது. அவ்வளவாக களையும் இருக்காது இரண்டு கிழமைக்கு சரியாகவும் அமையும். முதல் கன்னியாகுமாரிக்கு ரெயினில் போங்கள், அங்கு போய் இந்த முகவரை சந்தித்தால் அவர் பஸ்சையும் மிகுதி பயண ஏற்பாடுகளையும் செய்துதருவார்” என்றபடி ஒரு விசிட்டிங் காட்டை நீட்டினார்.

“சார் சாயங்காலமே புக்கிங் ஆபிஸ் போய் கன்னியாகுமாரிக்கு டிக்கெட் போட்டிடுவம்,பாஸ்போட்டை கொண்டுபோனால் டூரிஸ்ட் என்று சொல்லி பார்த் புக் பண்ணிடலாம்” சுந்தரின் பை வடபழனி வந்துவிட்டது.

“அப்ப சாயங்காலம் சந்திக்கின்றேன்” என்றபடி மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கை காட்டியபடி ஆள் பறந்துவிட்டது.

மனைவிக்கு சரியான கோபம்.”என்னப்பா வரக்கிடையில புது பிரெண்ட் பிடித்து வைத்திருக்கின்றீர்கள்,எல்லாவற்றையும் சுத்திக்கொண்டு போக போகின்றான்,இதற்குள் வீட்டு விலாசம் வேறு அவனுக்கு சொல்லுகின்றீர்கள்,எத்தனையோ தரம் ஏமாந்தும் திருந்தவில்லை இந்த மனுஷன்”

எனக்கு இவை காதில் விழுவதில்லை.எத்தனை தரம் எத்தனை பேர் என்னை ஏமாத்தினாலும் முதன் முறை சந்திக்கும் ஒருவர் என்னை ஏமாற்றபோகின்றான் என நான் சந்தேகக்கண் கொண்டு எவரையும் பார்ப்பதில்லை.தியாகராயர் நகர் போய் பாண்டிபசாரில் உள்ள அஞ்சனப்ப செட்டியார் மிடிடரியில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு வீடு திரும்புகின்றோம்.

மணி நாலு இருக்கும் யாரோ அழைப்புமணி அடிக்க போய் திறந்தால் “தூங்கி எழுந்தாச்சா” என்றபடி சுந்தர் உள்ளே வருகின்றான்.மனுசி முழுசி பார்க்க நான் தெரியாத மாதிரி பாஸ்போட்டையும் எடுத்துக்கொண்டு சுந்தர் கொண்டுவந்த கெல்மெட்டை அணிந்து கொண்டு பைக்கில் ஏறி குந்துக்கின்றேன்.டிக்கெட் புக் பண்ணி முடித்து வீடுவந்து மனைவியிடம் “நாளை காலை எட்டுக்கு ரெயின்,சுந்தர் இல்லாவிட்டால் இவ்வளவு அலுவலும் ஒரு நாளில் முடித்திருக்க முடியாது” என சுந்தருக்கு ஒரு சேட்டிபிகேட் கொடுத்தேன்.

சுந்தர் எதுவுமே கேட்காமல் விட்டாலும் ஏதாவது கொடுக்க வேண்டும் போலிருந்ததால் ஒரு புது சேட்டை எடுத்துகொடுத்தேன்,மகிழ்சியுடன் வாங்கியபடியே “ என் தங்கைக்கு இரண்டு வாரத்தில் கல்யாணம்,இதையே அணியலாம் போலிருக்கு, நீங்கள் சென்னையில் என்றால் கட்டாயம் உங்களையும் கூப்பிட்டிருப்பேன், பரவாயில்லை திரும்பி வந்த பிறகு வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போறேன் சார்” என்றபடி போனவன்,நின்று “நீங்க தண்ணி பாவிக்கும் பழக்கம் உண்டா “ என்று கேட்டான்.

எனக்கும் ஒரு பாட்னர் கிடைத்த சந்தோசத்தில்” அப்பப்ப அடிக்கிறதுதான்’ என்றேன்.

“மன்மதலீலையில கமல் சொல்லும் வசனம் சார் உது, அப்ப நைட்டு வரட்டா” என்றான்.

சரி சுந்தருடனும் ஒருக்கா அடிச்சா போச்சு என்று இரவு வரச்சொன்னேன்.

(இன்னும் வரும்)

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒருக்காத் தமிழ்நாட்டுப் பக்கம், போகிற விருப்பமிருக்கு, அர்ஜுன்!

நான் சிறு வயதிலிருந்தே, தஞ்சைப் பெரியகோவில், சிதம்பரம், மகாபலிபுரம் போன்றவற்றின் கட்டிடக் கலையைப் பார்க்க விருப்பம் கொண்டிருந்தேன்!

பின்பு, மும்பைக்கு ஒரு தடவை போனபோது கிடைத்த அனுபவங்களால், இந்தியா இப்போதைக்கு வேண்டாம் என்று விட்டுவிட்டேன்!

எனது நெருங்கிய நண்பன் ஒருவனும், இந்தியாவின் கோவில்களின் இவ்வளவு மதிப்பு வைத்திருக்கும் நீ, அங்கே போனால், அந்த மதிப்புக் குறைந்துவிடும் என்று சொன்னான்!

உங்கள் பயண அனுபவம், மிகவும் கவனமாக வாசிக்கப் படுகின்றது, என்பதற்காகத் தான் இதை எழுதுகின்றேன்!

தொடருங்கள், அர்ஜுன்!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அர்ஜூன்....30 வருட போர் சூழல் எம்மை உலகம் சுற்றும் வாலிபனாக்கி போட்டுது...

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தரம் எத்தனை பேர் என்னை ஏமாத்தினாலும் முதன் முறை சந்திக்கும் ஒருவர் என்னை ஏமாற்றபோகின்றான் என நான் சந்தேகக்கண் கொண்டு எவரையும் பார்ப்பதில்லை

:rolleyes: ஆச்சரியமாக இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் எங்கை மிச்சத்தை காணவில்லை டோப்படிச்சிட்டு படுத்தாச்சோ :lol: :lol:

  • தொடங்கியவர்

தண்ணியடிக்க வருவதாக சொன்ன சுந்தர் பத்துமணிபோல் வந்து மணியை அடித்தார், பெடியங்கள் வீடியோ கேமும் கையும்அவங்களுக்கு கனடா என்ன இந்தியா என்ன ஓர் வித்தியாசமும் இல்லை , ரீ.வீ பார்த்துக்கொண்டிருந்த மனைவி என்ன நடக்குது இங்கே என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தார், சின்ன ஒரு அலுவல் என்று புறப்பட்டுவிட்டேன்,

மொட்டைமாடி பப் (இந்தியாக்காரன் எல்லாம் வெள்ளைகளிடம் இருந்து கொப்பிதான்) மங்கிய வெளிச்சத்தில் பூமரங்கள் பல சூழவர ஒரு மெல்லிய இதமான சித்தார் இசையில் இந்தியன் ஜின் அருந்த நான்றாகதான் இருந்து, தான் விளம்பர படங்கள் எடுக்கும் முயற்சியில் இருப்பதாகவும் நிறைய பேர் இப்போ இந்த துறைக்கு வந்துவிட்டதால் போட்டிகள் கூடி ஒரு ஒப்பந்தம் எடுப்பதே பெரிய விடயமாக இருக்கு என்று சுந்தர் சொந்தக்கதை சோகக்கதை தொடங்கிவிட்டார்.

காலை புறப்படவேண்டும் என்பதை நினைவூட்டினேன், தங்கையின் கலியாணத்திற்கு வான் வாடைகைக்கு எடுத்து வைத்திருப்பதாகவும் அதில் கொண்டுபோய் ஸ்ரேசனில் விடுவதாக சொல்லி குண்டுதோசையும் சிக்கின் குருமாவும் ஓர்டர் பண்ணினார், நான் தோசையுடன் மாமிசம் உண்பதில்லை ஆனால் அந்த கொம்மினேசன் அப்போ மிக நன்றாக இருந்தது.நான் பில்லுக்குகாசை கொடுக்க வெளியேறினோம்.

காலை வானில் வந்து ஸ்டேசனில் கொண்டுபோய் இறக்கினார்.என்ன உதவி செய்யலாம் என்று நூறு அமெரிக்கன் டொலரை நீட்டினேன் மிகவும் சந்தோசமாக வாங்கிகியபின், முடிந்தால் திரும்பசந்திப்போம் என போய்விட்டார்.

எமது பயணம் திட்டமிட்டபடி மிக சந்தோசமாக அமைந்தது,(அது எழுத கோமகனின் பயணக்கட்டுரை போலாகிவிடும்) சென்னை திரும்பிய பின்பும் பயண களைப்பு காரணமாக சாலிக்கிராமம் வராமல் மகாலிங்கபுரத்தில் ஒருநாள் தங்கி அடுத்தநாள் மாலை சாலிக்கிராமம் திரும்பினோம்.

அடுத்தநாள் இரவு ஒன்பது மணியிருக்கும் யாரோ அழைப்பு மணி அடித்தார்கள்.

“அப்பா உங்கட சுந்தர்தான் போய் கதை திறவுங்கோ” என மனைவி சொல்ல நான் போய் கதவை திறந்தேன்.

“கலோ நான் கார்த்திக்,சுந்தரின் பிரெண்ட்,இன்று சுந்தரின் தங்கைக்கு ரிசப்சன்,உங்களுக்கு இஸ்டம் என்றால் கூட்டிவரச்சொன்னார்” அவரும் ஒரு ஹோண்டாவில் தான் வந்திருந்தார்.

ஓரளவு பிரமாண்டமான திருமண மண்டபம் விருந்தினர்களால் நிரம்பியிருந்தது, லைவ் மியுசிக் கானக்குயில்கள் “வளையோசை கலகலவென” என்று ஒரு பிசகிலாமல் மெய்மறக்க வைக்க , மிக நீண்ட சாப்பாடு பந்தி எங்கும் பலகாரங்களும், சமையல் சாதங்களும் நிரம்பியிருக்க, காஞ்சிபுரங்களும் பட்டு தாவணிகளும் அமலாக்களை அள்ளிகொட்டி நிரப்பியிருந்து.

சுந்தர் வந்து எனது கையை பிடித்து மேடைக்கு அழைத்து மணப்பெண்ணயும் மாப்பிள்ளையும் “கனடா நண்பன்” என்று என்னை அறிமுகம் செய்துவிட்டு, அருகில் இருந்த இன்னொரு பெண்ணை கூப்பிட்டு இவரும் ஒரு தங்கை என்றார். எனக்கு இந்த அழகான தங்கையை எங்கேயோ பார்த்தது போலிருந்தது ஆனால் சொல்லவில்லை.

மேடையால் இறங்கி கலியாண மண்டபத்தின் முக்கிய இடத்திற்கு அழைத்து போகின்றார், சுமார் ஒரு பதினைந்து சுந்தரின் நண்பர்கள் அந்த மாதிரி அனைத்தும் அடுக்கி வைத்து வாசித்துக்கொண்டிருந்தார்கள்.”கனேடிய இலங்கை நண்பன்” என்ற அறிமுகத்துடன் தான் பிசி என்று சுந்தர் போய்விட்டார். நான் கார்த்திக் அருகில் போய் இருக்கின்றேன்.

அவர்கள் என்னை கேட்ட முதல் கேள்வி “சினிமா பார்பீர்களா சார்” என்பதுதான், நானும் எனது பாண்டியத்தை இவர்களுக்கு காட்ட கூடாது என்று “நேரம் கிடைத்தால்,அதுவும் நல்ல படமென்றால் மட்டும்” என்றேன்,

“இல்லை நாங்கள் எல்லோருமே சினிஉலகில இருக்கின்றவங்க சார் அதனால் தான் கேட்டேன், இவர் சேரனின் அசிஸ்டென்ட் ,இவர் ரவிகுமாரின் அசிஸ்டென்ட் ,இவர் குஷியில் விஜயின் நண்பன், இவர் வாலியில அஜித்துடன் நடித்தவர்,இவர் சூர்யாவின் டூப்,இவர் மாதவனின் டூப்” என்று போய் கொண்டே இருந்தார்.

“இப்படி இருந்தால் சினிமாவில் வரும் வருமானம் உங்களுக்கு வாடகையும் கொடுத்து சாப்பிடவும் காணுமா” என கேட்டேன்.

“சிலவேளை ஊரில இருந்து எடுப்போம்,சிலசமயம் வேறு வேலைகளும் செய்வோம்,இருந்தாலும் சினிமாவில ஏதாவது சாதிக்கணும் என்றுதான் சினிமாவை விடமுடியாமல் இருக்கின்றோம் சார், விக்கிரம்,சியாம் கூட போன வருஷம் வரை எங்கள் கூடத்தான் சுத்திகிட்டு இருந்தாங்கள்,இப்ப அவங்க நிலையை பார்தீங்களா சார்? எங்களுக்கும் ஒரு பிரேக் கட்டாயம் கிடைக்கும் சார்”

நானும் விஸ்கியின் துணையுடன் அவர்களில் ஒருவனாகி, சந்தோசமாக அவர்களின் அனுபங்களை பகிர்ந்துகொள்ளுன்றேன், அப்போது தான் திடிரென்று நினைவு வந்தவனாக “சுந்தரும் சினிமா நடித்திருக்கின்றாரா?” எனக் கேட்டேன்,

“ஆமா சார், கிரோவாக தான் நடிப்பன் என்று வந்த சின்ன சான்ஸ்களை விட்டுவிட்டு இப்ப ஒன்றுமில்லாமல் போயிட்டார் சார் ,ரவிகுமாரின் நட்புக்காக படத்தில் மட்டும் தலையை காட்டினார், ரவிகுமார் படையப்பாவில சான்ஸ் தாறதாக சொன்னதால், பின் அந்த இடத்தில அப்பாஸை போட்டுடாங்கள் சார்,அதுதான் இனி நடிப்பதில்லை என்று விளம்பர படமெடுக்கும் முயற்சியில் இறங்கிட்டார் சார், மேடையில பாத்தீங்களா சார்

சுந்தர் தங்கச்சி அவ அண்ணாமலையில ரஜனி குஷ்பு மகளா நடிச்சா சார் அப்புறம் அவங்களுக்கும் சான்ஸ் கிடைக்கலை( அட அந்த வடிவான பெண்ணு ). சுந்தர் குடும்பம் தான் சார் அநேக சினிமா ஸூட்டிங்குகளுக்கு சமையல் செய்து அனுப்புவாங்க,அதில நல்ல வருமானம் சார்”

இதுதான் இந்தியாவின் சினிமா கனவுகூடம்.

அடுத்தநாள் சுந்தர் கார்த்திக் உதவியுடன் மனைவி வடபழனியில் மொட்டை வழித்து, விக்கும் வைத்து அடுத்த நாள் கனடா பயணமானோம்.

குறிப்பு –

சுந்தர், சினேகாவுடன் சன் ரீ வி யில் ஒரு கலைநயம் மிக்க ஒரு சரவணபவன் புடவை கடை விளம்பரத்தில் வந்தார்,பின்னர் ஆளில்லை.கலியாணம் பண்ணி கேரளாவிள் செற்றில்ஆகிவிட்டார்.

கார்த்திக் இப்பவும் ஐந்து நிமிட சீன்கள் தான் போலும் ,அதுதான் ஆறு படத்தில் பார்த்தது ..

அதைவிட ஒருவர் சாயி கைலாசின் கீழ்உதவி இயக்குனராகாக பிரபலமாகின்றார்.

இவர்கள் எல்லோருக்கும் “பிரேக் “ கிடைக்க இறைவனை தான் வேண்ட வேண்டும்.

Edited by arjun

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த ஞாயிறு பின்னேரம் 3 க்கு போய் இருபது டொலரை வீணாக்க வேண்டுமா என நான் யோசித்துகொண்டிருக்க, சன் டி வி பார்த்துக்கொண்டிருந்த மனைவி கூப்பிட்டார் “அப்பா இஞ்சை வந்து பாருங்கோ யார் டி வி யில் நிற்கின்றார் என்று “. நானும் எட்டிப்பார்த்தேன். சூர்யா,திரிஷா நடித்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது அதில் சூர்யா ஒரு இளைஞனை பேசிக்கொண்டிருந்தார் .”அட நம்ம கார்த்திக்.ஆள் அப்படியே இருக்கு,பாவம் இப்பவும் இரண்டு மூன்று நிமிட காட்சிகளுடன் தான் போல தான் கிடக்கு இவர் நடிப்பு ”.

பத்துவருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு ஒருமாத கனவுப் பயணம் போனோம்.கன்னியாகுமாரி ,நாகர்கோவில் ,கேரளா படகு வீடு,கோவளம் கடற்கரை,மைசூர்,ஊட்டி,பின் சென்னையும் முக்கியமாக மனைவியின் சொப்பிங்.மூத்த அக்கா போன் பண்ணி சொன்னா “சாலிக்கிராமத்தில் உள்ள தனது வீடு (3 BR FLAT) சும்மா தான் கிடக்கு விருப்பமென்றால் சென்னையில் நிற்கும் போது அங்கு போய் தங்கு என்று”ஓமென்று திறப்பை வாங்கிக்கொண்டேன்.

மதியம் இரண்டு மணி சென்னை போய் இறங்க ஆடி வெக்கை தனது வேலையை காட்டிக்கொண்டிருந்தது,நேர கோல் டாக்சி பிடித்து அக்கா வீட்டிற்கு போனோம்,சாமான்களை அங்கு வைத்துவிட்டு ஒரு நாள் ஓய்வு எடுத்து பயணம் தொடர திட்டம்.அங்கு போய் பூட்டைதிறந்து உள்ளே போனால் கரண்ட் இல்லை.வெளியில் வந்து பியுசை பார்த்தால் காணவில்லை,துண்டு வைத்திருக்கு ஏதோ மூவாயிரத்து சொச்சம் கட்ட வேண்டும் என்று.அருகில் இருப்பவர்களிடம் விபரம் கேட்டு போய் ஒருமாதிரி பில்லையும் கட்டி பியுசையும் வாங்கிவந்து பொருத்தி அப்பாடா என்று சாய்ந்தால்,

மனுசி ஒரு குண்டை தூக்கி போட்டார்” மூத்தமகன் பிறக்கேக்க சுகபிரவசம் என்றால் தான் மொட்டை அடிப்பதாக நேர்த்தி வைத்ததாக”

“இஞ்ச பாரும் இனி ஒரு பிளானும் மாத்தி திருப்பதி போக முடியாது ,அப்படி நேர்த்தி வைத்ததை இஞ்சை வந்து இப்ப சொன்னால் இனி ஏலாது,அப்படியென்றால் வடபழனியில் மொட்டையை போடும்.”

“சரி, ஆனால் மொட்டை அடித்தபின் போட விக் வாங்கவேண்டும்.சும்மா இளக்கமான செயற்கை மயிரிலான விக்கில்லாமல் ஒறியினல் மயிரில் செய்த விக், இப்ப இருக்கின்ற மயிர் மாதிரியே ஓர்டர் பண்ணி செய்யலாமாம்”

ஓம் என்று தலையை ஆட்டினேன்.ஆனால் பேய்க்கொதி. மகன்,நேர்த்தி என்று இழுத்துவிட்டதால் கடத்தவும் முடியாமல் போய்விட்டது. இதுக்குள்ள ஆள் T.V.I யில் ஒரு நிகழ்ச்சி வேறு நாடாத்திக்கொண்டிருந்ததால் முன்னர் இருந்த அதே HAIR STYLE இல் விக் வேண்டுமாம்.பிள்ளைகள் களையில் படுத்துவிட்டார்கள்.கடவுளே என்று காலாற நடக்க பதினைந்து வருடங்களுக்கு பின் புழுதியில் இறங்கினேன்.வியர்வை ஆருவியாய் கொட்டுது.நாடக சீரியலில் வரும் இடங்கள் போல சாலிக்கிராமம் ஓரளவு வசதியுடன் குளிர்மையாக இருந்தது. வடபழனிக்கு அருகில் இருப்பதால் சினிமாக்காரர்களின் ஆதிக்கம்,திரும்பும் இடமெல்லாம் படங்களிலோ,சீரியல்களிலோ பார்த்த துணை நடிக,நடிகைளின் முகங்கள்.குட்டி போலிஸ் நிலையம் சற்று திரும்ப உயர்ந்த கறுப்பு கேட் உடன் விஜய் வீடு.பரோட்டாவும் கறியும் கூலாக இரண்டு கிங்பிசரும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன்.

தொடக்கம் சூப்பர் அண்ணா.  பரோட்டா வித் கிங்பிஷர் குட் சாய்ஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை அழகண்ணா.  தொடர வாழ்த்துக்கள்.

நல்ல நக்கலாக செல்கிறது. 

உண்மைதான் அர்ஜுன், திரைக்கு பின்னால் பலரது வாழ்க்கை இன்னும் வெளிச்சத்தை தேடி ஓடி கொண்டு தான் இருக்கிறது.

என்றைக்காவது ஒரு நாள் அவர்களுக்கும் திருப்பம் வரும், ஆனால் அப்படி திருப்பம் கிடைத்தவர்கள், தங்களை போல இருந்தவர்களுக்கு கை கொடுக்கவேண்டும். இப்படி ஒரு சங்கிலி தொடர் பிணைப்பு இருந்தால் மட்டுமே அவர்களின் வாழ்க்கைக்கு விடிவு கிடைக்கும்.

நன்றி உங்கள் அழகான பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கதை முழுவதும் வாசித்தேன்.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.