Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உணர்வுகள் உறவுகள்'(அம்மம்மா)

Featured Replies

அலைதான் அந்த நேரம் மானிப்பாய் விதானையா இருந்தவா :lol: :lol:

உங்கள் மமாவா??

  • Replies 54
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் சாத்திரியாரின் எழுத்தின் முத்திரை!

'ஒரு மடமாதும் ஒருவனுமாகி, இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி......

எதிர்பார்த்தேன். விட்டு விட்டீர்கள்!

நல்ல கதைக்கு நன்றிகள், சாத்திரியார்!

இந்த பட்டினத்தார் பாடலை இன்னொரு கதையில் விபரமாக எழுதியுள்ளேன் அது இன்னமும் பாதியிலேயே நிற்கின்றது. அதே பாடலை இங்கும் எழுதினால் அதன் சுவாரசியம் குறைந்து விடும் என்பதற்காக இங்கு சேர்க்கவில்லைஎனக்கும் பிடித்தமான பாடல் அது கருத்திற்கு நன்றிகள் புங்கையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மறந்திருந்த பல விடயங்களை ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள் சாத்திரி.

என்னுடைய அம்மம்மாவை "ஆத்தை" என்றுதான் கூப்பிடுவது.. ஒரு மைல் தூரத்தில் இருந்த அவவின் வீட்டுக்கு எப்ப போனாலும் ஒரு பால்க் கஞ்சி உடனடியாக காய்ச்சித் தருவா. அதைப் போல ருசியை இன்னமும் காணவில்லை!

அம்மம்மாவின் பாசம் என்பது ஒரு தனி உணர்வு, அதை எம்மில் பலர் அனுபவித்து இருப்பது ஒரு வரப்பிரசாதம்.

பேரன் பேத்தியின் அன்பில், அரவணைப்பில் மிகச் சிறிய வயது முதல் வாழ்ந்த அனுபவம் எனக்கும் உண்டு, அவர்கள் அவர்களின் மரணச் சடங்குக்குக் கூட போக முடியவில்லை என்பது ஆறாவடு.. :(

பதிவிற்கு நன்றி சாத்திரி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சேவை நாட்டிற்கு தேவை .தொடருங்கள் ,

இதெல்லாம் சேவையா எனக்கு ஏதோ உள்குத்து மாதிரி தெரியிது :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நட்புடன் சாத்திரியாருக்கு....

சில காலமாகத்தான் உங்களை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றேன்...

ஆர்வத்துடன் அலுப்பில்லாமல் வாசிப்பேன்...

யாழ் களத்திற்கு புதியவராகையால் ;உங்கள் இணைப்பின் கீழ் பதிவிட முடியாதுள்ளது....

ஆகவே இங்கே....

தங்கள் சுய அனுபவம் வாசிப்பதற்கு நன்றகா இருந்தது மட்டுமல்ல..

.எனது நினைவலைகளையும் பின்நோக்கி இழுத்துச் சென்றது...

உங்கள் அம்மம்மாவின் இறப்பைப்போலவே ...

எனது அப்பாச்சியினது இறப்பும் 82ம் ஆண்டு நடந்தது...

இந்த அனுபவத்தை எனது மொழியில் எழுத வேண்டும் என இருந்தேன்...

ஆனால் நீங்கள் அழகாகப் பதிவு செய்திருக்கின்றீர்கள்...

இதேபோல் தங்களது அம்மம்மா பற்றிய குறிப்பும்

மற்றும் பலரது அம்மம்மா பற்றிய குறிப்பும்

எனது அம்மம்மாவை நினைவு படுத்தின...

நாம் பிறந்து 20 வருடங்களின் பின் ஒரு நாள் சந்தித்தோம்...

அதன் பிறகு சந்திக்கவேயில்லை...செத்தவீட்டிற்கும் செல்லவில்லை...

இக் குறிப்புகள் எல்லாம் ஒன்றை மட்டுமே சொல்கின்றன...

நம் எல்லோரது வாழ்க்கையிலும் ஒரு பொது தன்மை இருக்கின்றன என்பதே...

மீண்டும் நன்றிகள்....

நட்புடன் மீராபாரதி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை போலவே எனக்கும் எனது அம்மம்மா இறந்து ஒரு வருடங்களிற்கு பிறகே எனக்கு தகவல் கிடைத்திருந்தது நான் அப்பொழுது தாய்லாந்தில் இருந்த காலம். மனதிற்குள் அழ மட்டுமே முடிந்திருந்தது :(

மிகக் கொடுமை :(

இதெல்லாம் சேவையா எனக்கு ஏதோ உள்குத்து மாதிரி தெரியிது :lol: :lol:

உங்கள் எழுத்துக்களை வாசிக்க சொல்லி பலருக்கு பரிந்துரை செய்துகொண்டே இருக்கின்றேன்,போனவாரம் சேரனை சந்திக்கும் போது கட்டாயம் வாசிக்க சொல்லி உமது வலைப்பதிவை கொடுத்தேன் .(யாழில் இல்லாமல் போனதனால்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துக்களை வாசிக்க சொல்லி பலருக்கு பரிந்துரை செய்துகொண்டே இருக்கின்றேன்,போனவாரம் சேரனை சந்திக்கும் போது கட்டாயம் வாசிக்க சொல்லி உமது வலைப்பதிவை கொடுத்தேன் .(யாழில் இல்லாமல் போனதனால்)

யாழில் அழித்தவைகள் மீள இணைத்துள்ளேன் அர்ஜீன் அதே நேரம் சேரன் எனது முக புத்தகம் ஊடாக பார்த்திருப்பார் என நினைக்கிறேன்.நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

"இரத்தினன் தொழில் திறமை .பக்தி இதுக்கு அடுத்ததாய் சாதியத்திற்கு எதிரானதொரு போராளியும். யார் செத்தவீட்டிற்கு கூப்பிடப் போனாலும் அவனின்ரை முதல் உத்தரவு தனக்கோ தன்னோடை வாறவைக்கோ சிரட்டையிலை தேத்தண்ணி தரக்கூடாது எண்டு கண்டிப்பாய் சொல்லிவிடுவான்"

பிரபா தமிழில் அவன் இவன் என்பது அன்பின் அடையாளம் வாடா பேடா என்பதும் வீரம் தமிழில் இலக்கியங்கள் படித்து பார்க்கவும். இப்படி சிப்பு போடுவதை விட பழைய படங்கள் பார்த்தாலே போதும் புரியும். கொலை வாளினை எடடா தமிழா கொடியோர் பகை (அறவே)போக்கவே . கம்பனையே கண்ணதாசன் ஏமாந்தான்எண்டுதான் பாடுவான்(விளிப்பான்) .ஏமாந்தார் என்று அல்ல .அல்லது யாராவது தமிழ் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் அருமையான ஆக்கம். நன்றி சாத்திரி

உங்க கதை இன்னிக்குதான் பாத்தேங்க . தமிழ்மணதிலே எழுதிறவங்கதானே நீங்க ?உங்க கதை ஈசியான எழுத்துகளோடை ரொம்ப நன்னாயிருக்கு சாத்திரி அண்ணா .ஆமா ...............நீங்க ஜோசியம் பாப்பீங்களா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்க கதை இன்னிக்குதான் பாத்தேங்க . தமிழ்மணதிலே எழுதிறவங்கதானே நீங்க ?உங்க கதை ஈசியான எழுத்துகளோடை ரொம்ப நன்னாயிருக்கு சாத்திரி அண்ணா .ஆமா ...............நீங்க ஜோசியம் பாப்பீங்களா ?

கருத்திற்கு நன்றிகள் சொப்னா.தமிழ் மணத்தில் எழுதுவது கிடையாது அங்கு எனது வலைப்பக்கத்தை இணைப்பதுண்டு. வரும் பொழுதே சலசப்போடு வருகிறீர்கள். உங்கள் இடம் குன்னூர் என்று போட்டு இருக்கிறீர்கள் உண்மையிலேயே குளுகுளு குன்னூரில் இருந்து வந்திருந்தால் நல்வரவு. நானும் குன்னூரில் தங்கியிருந்திருக்கிறேன் அங்கு பிரபல அம்மன் ஆலயம் ஒன்று இருக்கின்றது என்ன அம்மன் என நினைவில் இல்லை அதன் சுற்றுவட்டாரத்தில் தங்கியிருந்திருக்கிறேன். இறுதியாக ஒரு கேள்வி குறை நினைக்கவேண்டாம் உங்களிடம் கார் இருக்கின்றதா??

உங்களிடம் கார் இருந்தால் நான்ஜேசியம் பார்ப்போன் (நகைச்சுவைக்காக கோபிக்கவேண்டாம்.)

Edited by sathiri

இறுதியாக ஒரு கேள்வி குறை நினைக்கவேண்டாம் உங்களிடம் கார் இருக்கின்றதா??

இந்தக்கேள்விதான் ஆரம்பத்திலேயே எனக்குள் இருந்தது சாத்திரியார்.... :D:icon_idea: .........

கேட்கத்தயங்கினேன் காரணம் நிர்வாகம் ,

திருத்த காரணம் --- எழுத்துப்பிழை, நன்றி

Edited by tamilsooriyan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு சாத்திரி அண்ணா. எனது பெத்தாச்சியையும் சீனிப் பாட்டியையும் நினைக்க வைத்து விட்டது. எனது அம்மம்மாவும் அப்பம்மாவும் எனது சிறுவயதிலேயே புலம்பெயர்ந்து விட்டதால எனக்கு அந்த பாசத்தைக் காட்டி வளர்த்தது எனது சீனிப் பாட்டியும் (அப்பம்மாவின் தங்கை), பெத்தாச்சியுமே. (அவரது அம்மாவுமே). பெத்தாச்சி 89 வயசிலே போய்ச் சேர்ந்து விடா, சீனிப்பாட்டி இப்பவும் இருக்கிறா. பெத்தாச்சி சிறிய வயதிலேயே விதவையானவர். அருமையான மனிசி. அவ சுடும் பனங்காய்ப் பணியாரம் தும்பளை முழுக்க வாசம் வீசும். சீனிப் பாட்டி கதை சொல்லி சொல்லி தீத்தும் புட்டும் முருங்கக் காயக் குழம்பும் எதுக்கும் ஈடாகாது. எனது மூத்திரப் பாயில இருந்து உடுப்பு மட்டும் தோய்ச்சு என்னையும் தம்பியையும் எவளவோ பாத்திருக்கிறா. சண்டை பொருளாதாரத் தடை எண்டு இருந்தாலும் என்றும் பசுமையான இனிய நினைவுகள். நல்ல ஆங்கில அறிவு உள்ளவ. இப்போது புலத்தில இருக்கிறா. போன வார விடுமுறை கூட 850km தாண்டிப் போய் பார்த்து வந்தேன். நல்ல சுக பெலத்துடன் நீண்ட காலம் இருக்க வேண்டும்.

கருத்திற்கு நன்றிகள் சொப்னா.தமிழ் மணத்தில் எழுதுவது கிடையாது அங்கு எனது வலைப்பக்கத்தை இணைப்பதுண்டு. வரும் பொழுதே சலசப்போடு வருகிறீர்கள். உங்கள் இடம் குன்னூர் என்று போட்டு இருக்கிறீர்கள் உண்மையிலேயே குளுகுளு குன்னூரில் இருந்து வந்திருந்தால் நல்வரவு. நானும் குன்னூரில் தங்கியிருந்திருக்கிறேன் அங்கு பிரபல அம்மன் ஆலயம் ஒன்று இருக்கின்றது என்ன அம்மன் என நினைவில் இல்லை அதன் சுற்றுவட்டாரத்தில் தங்கியிருந்திருக்கிறேன். இறுதியாக ஒரு கேள்வி குறை நினைக்கவேண்டாம் உங்களிடம் கார் இருக்கின்றதா??

உங்களிடம் கார் இருந்தால் நான்ஜேசியம் பார்ப்போன் (நகைச்சுவைக்காக கோபிக்கவேண்டாம்.)

சொப்பனக்கா இததான் சாத்திரி அண்ணை உங்ககிட்ட கேக்க நினைச்சார்

http://www.youtube.com/watch?v=PDQDQ5E2uFQ

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, சாத்திரி.

இன்றுதான் படித்தேன், நல்லதொரு நினைவு மீட்டல். ....... பாசத்தின் ஆழத்தை அளவிட முடியாது !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறந்திருந்த பல விடயங்களை ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள் சாத்திரி.

என்னுடைய அம்மம்மாவை "ஆத்தை" என்றுதான் கூப்பிடுவது.. ஒரு மைல் தூரத்தில் இருந்த அவவின் வீட்டுக்கு எப்ப போனாலும் ஒரு பால்க் கஞ்சி உடனடியாக காய்ச்சித் தருவா. அதைப் போல ருசியை இன்னமும் காணவில்லை!

அம்மம்மா என்கிற உறவு ஊரிற்கு ஓர் அல்லது பிரதேசத்திற்கு மாறுபடும் ஆச்சி பெத்தாச்சி ஆயா(பெரும்பாலும் இந்திய தமிழர்) பாட்டி அம்மாச்சி என்றும் கூப்புடுவார்கள். இன்னமும் பெயர்கள் இருக்கலாம். சிலர் அப்பாவை ஜயா எண்டு கூப்பிடுவதையும் பார்த்திருக்கிறேன்.

கவிதைஅவவுக்குப் பிறகு...என்னுடைய அம்மம்மா மட்டுந்தான் எனக்கு அம்மம்மா என்று சொல்லிக்கொள்ள இருந்தா!. பென்ஷன் எடுத்தாப்பிறகும்.... அவ புறுபுறுக்கிறத நிப்பாட்டவில்லை என்றாலும்... எனக்கு ஒரு அம்மம்மாவாக எல்லாமாக இருந்தா. இப்பவும் இருக்கிறா. வயசு 90+. பிள்ளையள் எல்லாரும் வெளிநாட்டில. அம்மப்பாவின்ர பென்ஷனும் சேர்ந்து டபிள் பென்ஷன். மனிஷி இன்றைக்கும் திடமா இருக்கு.

இப்பவும் புறுபுறுத்தபடி அதே தினாவெட்டோடு... றாங்கியோடு... வாழுறா என் அம்மம்மா! அவ நூறுவருசத்துக்கு மேல் வாழவேணும் என்பதுதான் இந்த பேரப்பிள்ளையின்.... உறவும் உணர்வும் வேண்டுதலும்!!!

இந்த பழசுகளிடம் தினாவெட்டு றாங்கிக்கு குறைச்சலில்லை அதுவே காலமாற்றத்திற்கும் தலைமுறை மாற்றத்திற்கும் இடைஞ்சலாக நின்று பல பாரதூரமான பிரச்சனைகளாகவும் முடிந்து விடுகின்றது என்பது சோகமான விடையம்.

Edited by sathiri

"அதிகாலையே சினேகிதங்களோடை சேந்து ஊர் முழுக்க இழவு சொல்லிவிட்டு விடியமுதலேயே சுன்னாகம் இரத்தினன் வீட்டிற்கு ஓடினான். காரணம் செத்த வீட்டிற்கு வெள்ளை கட்டிறவன். ஜயர் இவையளிற்கு முதல் முக்கியமான ஒருவன் இரத்தினன். அந்த நேரத்திலை நாடகத்திற்கு வைரமுத்து . தவிலிற்கு தட்சணாமூர்த்தி மாதிரி பறையடிக்கிறதுக்கு இரத்தினன். இரத்தினின்ரை நாள் சரிவாராமல் பிணம் எடுக்கிறதை தள்ளிப் போட்ட சம்பவங்களும் நடந்திருக்கு. கறுத்த மெலிஞ்ச வலிச்ச உடம்பு வெத்திலை போட்டு சிவந்தவாய் இதுதான் இரத்தினன்.இரத்தினன் தொழில் திறமை .பக்தி இதுக்கு அடுத்ததாய் சாதியத்திற்கு எதிரானதொரு போராளியும். யார் செத்தவீட்டிற்கு கூப்பிடப் போனாலும் அவனின்ரை முதல் உத்தரவு தனக்கோ தன்னோடை வாறவைக்கோ சிரட்டையிலை தேத்தண்ணி தரக்கூடாது எண்டு கண்டிப்பாய் சொல்லிவிடுவான்"

ஒரேவேளையில் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கின்றீர்கள். ஒன்று உறவுகளின் இறுகிய பிணைப்பு , மற்றயது தொழில் சார் சாதீயத்தின் பிணைப்பு . இரண்டும் நேர்கோட்டில் சென்றாலும் , இரண்டாவது செய்தியின் கனதி குறைவாகவே இதில் காணப்படுகின்றது . எதெற்கும் துணிந்த சாத்திரி ஏன் இரத்தினன்அப்படியொரு நிபந்தனைய விதித்தான் என்ற காரணத்தை சிறிது விபரித்திருக்கலாம் . மேலும் தளையசிங்கம் , எஸ்போ ,அகஸ்த்தியர் போன்றோர் சாதீயக் கலாச்சாரப் பூசாரிகளிடம் சந்திக்காத பிரைச்சனைகளையா நீங்கள் சந்திக்கப்போகின்றீர்கள் ?? மேலும் தொடர வாழ்துக்கள் சாத்திரி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"

நன்றிகள் கோமகன் இங்கு இரத்தினன் என்கிற சாதியத்திற்கு எதிரான போராளி பற்றி எழுதுவதானால் தனியாகவே ஒரு பதிவு அவரைபற்றி இடலாம். ஆனால் எனது கதையில் அவனது பாத்திரமும் வருவதால் மெதுவாக தொட்டுச்சென்றிருக்கிறேன். அத்தனை புகழ்பெற்ற ஒரு கலைஞன் பின்னை காலத்தில் மேல்சாதிக்காரர்களின் அனியாயங்களால் தான் இனி மேளமே அடிப்பதில்லையென சபதமெடுத்து தனது மேளங்களை கொத்தி கொழுத்திவிட்டு கூலிவேலைகள் செய்து திரிந்தார். பின்னர் இயக்கங்கள் வளர்ந்து சாதியம் ஓரளவு அடங்கிப் போன பின்னர்தான் மீண்டும் தன் கலையை தொழிலாக செய்யத்தொடங்கியிருந்தார்

அடுத்த பதிவில் இரத்தினனின் கதையை எதிர்பார்க்கின்றேன் சாத்திரி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, சாத்திரி.

இன்றுதான் படித்தேன், நல்லதொரு நினைவு மீட்டல். ....... பாசத்தின் ஆழத்தை அளவிட முடியாது !

நன்றிகள் தமிழரசு உங்களை காணவில்லையென பலர் தவிக்கிறார்கள் இனியாவின் பகுதியில் உடனே அடுத்த பதிவை இடுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரும் ஏன் அப்பம்மாவை பற்றி எழுதவில்லை? நாங்கள் தாய்வழி சமூகம் என்பதாலா? நான் பார்த்தவரைக்கும் எனக்கும் அம்மம்மாவுக்கும் இருந்த உறவு, அப்பம்மாவுடன் இருந்த்தைல்லை..அதே போல அம்மம்மாவும் எங்களுடன் இருந்தது போல், அவவின் மகன்வழி பிளைகளுடன் இருந்தது இல்லை..எல்லாத்துகும் காரணம் நம்ம அம்மா மரோ?>

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமை சாத்திரி

பழைய நினைவுகளைக்கிளறியதால் கண்கள் பனித்துவிட்டன.

எனக்கும் என் அம்மாவின் தகப்பனாரைத்தவிர வேறு எவரையும் கண்டதில்லை. அவரும் இறக்கும்போது எனக்கு 7 வயசு.

ஆனால் 5 பெட்டைகளுக்கு பின் பிறந்ததால் நான் என்றால் அவருக்கு உயிர் என்றும் பவுண் பவுணாக வாங்கி (அறுணாக்கொடிவரை) எனக்குப்போட்டு அழகு பார்ப்பார் என்றும் சொல்வார்கள்.. அவர் சாகும்போது அவருக்கு வயது சரியாக 100.

அவரது செத்தவீட்டுக்கு வந்த மச்சாள்மாருடன் விளையாடிக்கொண்டிருந்தது மட்டுமே ஞாபகம் உள்ளது. :lol::D

தொடருங்கள்.

வணக்கம் விசுகு உங்கள் கருத்திற்கு நினைவு மீட்டலிற்கு நன்றி கூறிக்கொள்வதோடு இந்தத் தரியில் உங்கள் பதிலிற்கு பதில் கருத்து எழுதாதற்கு காரணம் அடுத்தடுத்த பதிவுகளால் இந்தப் பதிவு கீழே தள்ளப்பட்டுவிட்டிருந்தது அதே நேரம் எனது நேரமின்மை காரணமாகவும் உங்களிற்கு மட்டுமல்ல வேறு பலரிற்கும். தமிழ் சூரியன் ஈசன் ராமதேவன் போன்றவர்களிற்கும் பதில் போட்டிருக்கவில்லை. இதுதான் நடந்தது. ஆனால் உங்களிற்கு பதில் தரவில்லையென் நீங்கள் கவலையடைந்திருந்தது இன்னொரு திரி முலமாக அறிந்தேன். அப்படி உங்கள் மனது சங்கடப்பட்டிருப்பின் மன்னிக்கவும். அதே நேரம் எனது கதைகளிற்கு கருத்திட்ட அனைத்து உறவுகளிற்கும் அன்பு கலந்த நன்றிகளும் வணக்கங்களும் சொல்லிக்கொள்வதோடு. தனித்தனியாக அனைவரிற்கும் பதில் அளிக்க முடியாவிட்டாலும் முடிந்தளவு உங்கள் கருத்தக்களை உள்வாங்கியபடியே எனது பதிவுகளை தொடருவேன் நன்றி சாத்திரி :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.