Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியக்கவைக்கும் பெரிய கோயில் 1000 ஆண்டுகள்

Featured Replies

534351_399826426696268_376502049028706_1581954_840890878_n.jpg

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.

  • கருத்துக்கள உறவுகள்

facade-cc-small.jpg

நல்ல, ஒரு அருமையான பதிவு இது. யாழ் அன்பு.

உலகத்திலேயே உயரக் கோபுரமுடைய தேவாலயம் ஒன்று, இங்குள்ளது.

அதன், படிக்கட்டுக்களில் ஏறி... உச்சி வரை சென்று வர... மூச்சு வாங்கும்.

அப்படியும்... ஏறி, உச்சிக்குப் போனால், அங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழ மன்னன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலின் படத்தையும்... வைத்திருந்ததைப் பார்த்து.... ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.

பின், தஞ்சாவூர் சென்று... அந்த அழகிய கற்கோவிலை தரிசித்தது என் வாழ் நாளில் கிடைத்த பாக்கியம் என்றே... சொல்வேன்.

Tanjore_Bragatheeswarar.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒருக்கால் தஞ்சப் பெரியகோயிலுக்குப் போயிருக்கிறேன்.. :D வெயில் நேரத்தில் கற்கள் பதிக்கப்பட்ட இடத்தில் நடந்தால் சூடு தாங்கேலாது.. :D

ஓடிவந்த அன்று இருப்பிடம்,குடிக்க தண்ணி தந்த கோயில் தஞ்சை பெரிய கோயில்

  • கருத்துக்கள உறவுகள்

ஓடிவந்த அன்று இருப்பிடம்,குடிக்க தண்ணி தந்த கோயில் தஞ்சை பெரிய கோயில்

8f8df99pirapaakaran.jpg

ஆயிரம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த ராஜ ராஜ சோழனை, மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டுமென்றால்.....

அடுத்த ஆயிரம் ஆண்டு... தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் மட்டுமே.

நானும் ஒருக்கால் தஞ்சப் பெரியகோயிலுக்குப் போயிருக்கிறேன்.. :D வெயில் நேரத்தில் கற்கள் பதிக்கப்பட்ட இடத்தில் நடந்தால் சூடு தாங்கேலாது.. :D

வெய்யிலின்... சூட்டை தாங்கினாலும், கைடு மார் தரும் அலுப்பு வெறுத்துப் போயிடும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

8f8df99pirapaakaran.jpg

ஆயிரம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த ராஜ ராஜ சோழனை, மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டுமென்றால்.....

அடுத்த ஆயிரம் ஆண்டு... தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் மட்டுமே.

இதை எத்தனை பிறப்பெடுத்தாலும் சிலருக்கு விளங்காது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான பதிவு அன்பு , பாராட்டுக்கள், பாலகுமாரனின் உடையார் நாவலை 14 பாகங்களையும் சுருக்கமாகப் படித்த உணர்வு,

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒருக்கால் தஞ்சப் பெரியகோயிலுக்குப் போயிருக்கிறேன்.. :D வெயில் நேரத்தில் கற்கள் பதிக்கப்பட்ட இடத்தில் நடந்தால் சூடு தாங்கேலாது.. :D

பக்தியுடன் கடவுளை தரிசிப்பவர்களுக்கு கால் சூடு, பஞ்சு மெத்தை மாதிரி..... :)

நீங்க மல்லிகைப் பூ விக்கிற பெண்களில், உங்கள் கண்களை அலை பாய விட்டீர்களா? :icon_idea:

facade-cc-small.jpg

நல்ல, ஒரு அருமையான பதிவு இது. யாழ் அன்பு.

உலகத்திலேயே உயரக் கோபுரமுடைய தேவாலயம் ஒன்று, இங்குள்ளது.

அதன், படிக்கட்டுக்களில் ஏறி... உச்சி வரை சென்று வர... மூச்சு வாங்கும்.

அப்படியும்... ஏறி, உச்சிக்குப் போனால், அங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழ மன்னன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலின் படத்தையும்... வைத்திருந்ததைப் பார்த்து.... ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.

பின், தஞ்சாவூர் சென்று... அந்த அழகிய கற்கோவிலை தரிசித்தது என் வாழ் நாளில் கிடைத்த பாக்கியம் என்றே... சொல்வேன்.

Tanjore_Bragatheeswarar.jpg

//உலகத்திலேயே உயரக் கோபுரமுடைய தேவாலயம் ஒன்று, இங்குள்ளது./

எங்கயுள்ளது அண்ணே ?

  • கருத்துக்கள உறவுகள்

//உலகத்திலேயே உயரக் கோபுரமுடைய தேவாலயம் ஒன்று, இங்குள்ளது./

எங்கயுள்ளது அண்ணே ?

ஜேர்மனி என்னும் நாட்டில், அந்தத் தேவாலயம் உள்ளது. யோக்கர்.

உலகில் உயரமான 10 ஆலயங்கள்

1. Chicago Temple, Chicago, USA (173 m/568 ft)

1332160531_Chicago-Temple-Chicago-USA.jpg

2. Ulm Minster, Germany (161.5 m/530 ft)

1332160094_Ulm-Minster-Germany.jpg

3. Cologne Cathedral, Germany (157 m/515 ft)

1332160110_Cologne-Cathedral-Germany.jpg

4. Rouen Cathedral, France (151 m/495 ft)

1332160132_Rouen-Cathedral-France.jpg

5. St Nicholas, Hamburg, Germany (147 m/482 ft)

1332160154_St-Nicholas-Hamburg-Germany.jpg

6. Strasbourg Cathedral, France (142 m /466 ft)

1332160191_Strasbourg-Cathedral-France.jpg

7. St Peter’s Basilica, Vatican (138 m/452 ft)

1332160222_St-Peter%E2%80%99s-Basilica-Vatican.jpg

8. St Stephan’s Cathedral, Vienna, Austria (136.7 m/448 ft)

1332160240_St-Stephan%E2%80%99s-Cathedral-Vienna-Austria.jpg

9. New Cathedral, Linz, Austria (134.8 m/440 ft)

1332160338_New-Cathedral-Linz-Austria.jpg

10. St Martin’s Church, Landshut, Germany (130.6 m/428 ft)

1332160359_St-Martin%E2%80%99s-Church-Landshut-Germany.jpg

http://www.vacationh...s-in-the-world/

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை பெரும் கோயிலுக்கு நானும் போயிருக்கிறேன்...மத்தியான வெயிலுக்குள் நடக்க மாட்டாமல் ஓடியது இப்பவும் ஞாபகம் இருக்குது :lol:

உலகத்தில் உள்ள பெரிய ஆலயங்கள் ஜேர்மனியில் தான் கூட போல இருக்குது :D

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் உள்ள பெரிய ஆலயங்கள் ஜேர்மனியில் தான் கூட போல இருக்குது :D

தமிழ்சிறிமாதிரி நிறையப்பேர் இருப்பினம் போலை.. :unsure: பாவமன்னிப்பு குடுக்க இடம் தேவைதானே??!! :lol:

ஜேர்மனி என்னும் நாட்டில், அந்தத் தேவாலயம் உள்ளது. யோக்கர்.

நன்றியண்னா !!! இது ஸ்ருக்காட்லய இருக்கு ?

மிக அருமையான பதிவு. வாசிக்க வாசிக்க மனசுக்குள் விரிந்து விரிந்து பரவிச் செல்லுது

ஒருமுறையாவது போய்ப் பார்க்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள்

by

tanjore-big-temple-shadow.png?w=225&h=300thiruchutru.jpg?w=640

தஞ்சை கோவிலைப் பற்றிய பல உண்மைகளோடு, சில பொய்களும் கலந்திருக்கின்றன. அதுவும் எது உண்மை என காலம்காலமாக நம்பும் அளவிற்கு. கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்று நானும் நம்பிக்கொண்டிருந்தேன். நீங்களும் நம்பிக்கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். அது பொய் என்று படம் பிடித்து விளக்கியிருக்கின்றார்கள். இதைப் பற்றி மேலும் அறிய இங்குசொடுக்குங்கள்.

யாளி வீரர்கள் -

கட்டி முடித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவும் தொடங்கிவிட்டது. ஆனால் கோவிலைப் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை அறிய பெரிய கோவிலை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து. அங்கிருக்கும் சிற்பங்களை கண்டறிந்து, சிற்பங்கள் தெளிவாக தெரியாமல் இருந்தால் அதை அழகாக வரைந்து, அதன் புராணத்தினை கண்டறிந்து மக்களுக்கு கல்லிலே கலைவண்ணம் கண்டோம் என்ற இணையதளம் சொல்லுகிறது. அங்கு சென்றால் போதும்.

விழுகின்ற நிழல் -

prancing-yaazhi__what-depth.jpg?w=640

who-is-that-to-the-right-of-the-frame.jpg?w=300&h=182

இந்த யாளியில் வீரர்கள் படையெடுத்து செல்வதை பார்த்தீர்களா. இதைப் போன்ற ஏகப்பட்ட வீரர்கள் தங்கள் யாளியுடன் கிளம்பிச் செல்கிறார்கள். இவர்களை தஞ்சைக் கோவிலில் பார்த்திருக்கின்றீர்களா?. இல்லையா ?. இத்தனை யாளிகள் எப்படி உங்கள் கண்களிலிருந்து தப்பின?. தெரிந்து கொள்ள ஆசையா அடுத்த சிற்பத்தினை பாருங்கள். ஒரு பேனா மூடியை வைத்து அந்த சிற்பம் எத்தனை சிறியதாக இருக்கிறதென சொல்லியிருக்கின்றார்கள். பெரிய கோவிலில் இத்தனை சிறிய சிற்பங்கள் கண்களில் படுபவது ஆச்சிரியமானதுதானே. மேலும் இதைப் பற்றி அறியஇங்கு சொடுக்குங்கள்.

மோனோலிசாவை மிஞ்சும் சிவன் -

closeup-of-shiva.jpg?w=640

டாவின்சியின் மோனோலிசாவை எத்தனை உச்சத்தில் வைத்துப் போற்றுகிறோம் நாம். அவள் சோகமாக இருக்கிறாள், அதே சமயம் மர்மப் புன்னகையையும் வீசுகிறாள் என்று அவளின் அழகை போற்றுகிறோம். ஆனால் இங்கே நம் தஞ்சையில் அப்படி ஒரு சிற்பம் இருப்பதை நாம் அறியாமல் இருக்கிறோம் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா. உண்மைதான். இந்த சிற்பத்தில் கோபம் இருப்பதை போன்று அன்பான பக்கமும் இருக்கிறது. கோபமும், புன்னகையும் கொண்ட இந்த சிற்பத்தினை பற்றி அறிய இங்குசொடுக்குங்கள்.

பெரிய நந்தி??? -

closeup-of-the-vimanam-nandhi.jpg?w=640

height-of-the-vimanam-nandhi.jpg?w=640

கோவிலின் முன்னால் இருக்கும் நந்தி வளர்ந்து கொண்டே இருந்தது. அதன் பிறகு அதன் தலையில் ஆணி அடித்து அது வளர்வதை தடுத்து நிறுத்தினார்கள் என்று சிறுவயதில் கதை கேட்டிருப்போம். நாமக்கல் ஆஞ்சிநேயர் சிலைக்கு கூட இதுபோல ஒரு கதை உண்டு. மிகப்பெரிய நந்தியை சிற்பமாக வடித்திருப்பதை நம்ப இயலாமல் சுவாரசியத்திற்காக சொன்ன கதைகள் இவை. ஆனால் உண்மையில் இந்த நந்தி சிற்பம் கோபுரத்தில் உள்ளது. அது எத்தனை உயரமானது என்பதை அழகாக மனிதனை வைத்து நமக்கு காட்டியிருக்கின்றார்கள். இதைப் பற்றி மேலும் அறிய இங்கு சொடுக்குங்கள்.

துவாரபாலகர்கள் -

how-is-this-for-size.jpg?w=640

சரி, குட்டி குட்டி சிற்பங்களையெல்லாம் கண்டு கொள்வது கஸ்டம் தான். ஆனால் ஒரு யானை அளவிற்கு பெரிய சிற்பங்களையே நாம் கோட்டை விட்டிருக்கிறோம் தெரியுமா. பொதுவாக சிற்பத்தின் அளவை நமக்கு காட்ட அவர்கள் பேனாவின் மூடியை, கைப்பேசியை அருகே வைத்து புகைப்படம் எடுப்பது வழக்கம். இந்த சிற்பத்தின் பிரம்மாண்டத்தினைக் காட்ட யானையை உபயோகப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த சிற்பத்தின் மகத்துவம் அறிய இங்கு சொடுக்குங்கள்.

thanks http://sagotharan.wo...AE%B0%E0%AF%8D/

Edited by purmaal

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் நிலம் சூடா இருக்கிறதால கோயிலுக்குள்ளை நிழலே இல்லையெண்டு யாராவது சொல்லியிருப்பினம்.. :D அதை நிழலே விழாது அன்று ஆரோ மாத்தி விட்டுட்டாங்கள்..! :lol:

முதலாவது விடயமாக,

 

யாழ் அன்பு நீங்கள் ஆக்கங்களை இணைக்கும்போது அவற்றின் மூலங்களையும், அல்லது அதை எழுதியவரையும் குறிப்பிடுதல் அவசியம். இவற்றை குறிப்பிடும்போது

 

1. அதே ஆசிரியர் எழுதிய வேறு கட்டுரைகள், ஆக்கங்களையும் வாகசர்கள் பார்வையிட முடியும்.

2. அதை எழுதிய ஆசிரியர் அல்லது படைப்பாளிபற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ளமுடியும்.

3. மற்றவர்கள் ஆக்கங்கள், படைப்புக்களை இங்கு நாம் பகிர்ந்து பயன்பெறும் அதேவேளை, அதன் மூலங்கள், படைப்பாளிகள் அறியத்தரப்படுவதன்மூலம் அவர்களுக்கும் பலவித பயன்கள் கிடைக்கின்றன.

 

தினமலர் - பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2010,23:10 IST : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=90671&Print=1

பாலகுமாரன் பேசுகிறார் - பிரகதீஸ்வரம் - ஒரு விஸ்வரூபம் - Thursday, September 23, 2010 : http://balakumaranpesukirar.blogspot.ca/2010/09/blog-post_23.html

 

அடுத்ததாக,

 

பெரியகோயில் பற்றியதொரு ஆவணப்படம் பார்த்தேன். மிகுந்தபிரமிப்பை தந்தது. நேரம் உள்ளபோது நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் முழுமையாகப் பார்க்கவேண்டிய படைப்பு இது. நீங்கள் பிரமித்துப்போவீர்கள். மிகச்சிறப்பான முறையில் இது இங்கு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. வழமையில் எமது கண்களிற்கு தென்படாதவகையிலான வேறு பல்வேறு கோணங்களில் இது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

 

http://video.google.com/videoplay?docid=-5096103596865842301

 

  • தொடங்கியவர்

ஒரு நண்பர் எனக்கு முகபுத்தகத்தில் அனுப்பியது. இதற்கு மூலம் அனுப்பபடவில்லை மன்னிக்கவும் .

இது சம்மந்தமான மூலங்கள் விபரங்கள் இருந்தால் இணைக்கவும் நன்றி

இவர்பற்றி இவ்வாறு சொல்லப்படுகின்றது:

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் - சில பதிவுகள்

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

http://balakumaranpesukirar.blogspot.ca/

இந்த பலகணி எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் அனுமதியோடும், ஆசியோடும் அவருடைய நெருங்கிய நண்பர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியண்னா !!! இது ஸ்ருக்காட்லய இருக்கு ?

ஸ்ருட்காட்டிலிருந்து 75 கி.மீ தொலைவில் ULM உள்ள என்னும் இடத்தில் உள்ளது யோக்கர்.

  • கருத்துக்கள உறவுகள்

1332160110_Cologne-Cathedral-Germany.jpg

இந்த தேவாலயத்தை மட்டும் இற்றை வரை பார்த்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் நிலம் சூடா இருக்கிறதால கோயிலுக்குள்ளை நிழலே இல்லையெண்டு யாராவது சொல்லியிருப்பினம்.. :D அதை நிழலே விழாது அன்று ஆரோ மாத்தி விட்டுட்டாங்கள்..! :lol:

இசை, இதில் உண்மையிருக்கின்றது! இந்தக் கோவிலின் கோபுரத்தில் உள்ள கல்லானது, எண்பது தொன் எடையுள்ளது! இது இரண்டு கற்கள் சேர்ந்து பொருத்தப் பட்டது! இதனுடைய நிழல், சூரியன் எந்த நிலைக்கு, அசைந்த போதும், கோபுரத்தில் மட்டுமே விழும் படி இது அமைக்கப் பட்டுள்ளது!

இது எவ்வாறு சாத்தியமானது, என்பதைப் பொறியியலாளரின் ஆய்வுக்கே விட்டு விடுகின்றேன்!!! :icon_idea:

  • 4 years later...

 

 

வியந்த வரலாறு. தெரியாத பல செய்திகள். தஞ்சை பெரிய கோயில் வடிவமைப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.