Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிமிக்கி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்ஸ்.... யாவும் கற்பனையல்ல! நடைமுறையில் நடப்பவைதான்!

வெளிநாடு என்பது வெறும் பெயருக்கு. அங்குதான் எம் அடையாளங்களையும் அன்பையும் பாசத்தையும் உறவுகளையும் தொலைக்க ஆரம்பிக்கின்றோம்!

அருமையான கதையை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.

"Like" பண்ண ஒன்றுகூட என்னிடம் தற்போதைக்கு இல்லையே என்பது இந்தக் கதையை வாசித்தபோதுதான் கவலையளிக்கின்றது.

பாராட்டுக்கள் சாத்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

உண்மையிலேயே அருமையாக இருக்கின்றது. :)

கண் கலங்க வச்சிட்டியள்!

கவிதைக்கு பிடித்த கதை.. கவிதை உண்மையில் வெளிநடிடன்பது பகட்டான வாழ்வும் போலித்தனங்களுமே மிஞ் :) சி நிற்கிறது. உண்மையில் சின்ன வயதில் எனது பிறந்த நாளிற்கு போட்ட புது உடுப்போடு ஓடிப்போய் தாத்தாவிற்கு காட்டிவிட்டு அவர் நல்லாயிரு என்று மனதார வாழ்த்தி மடியிலிருந்து ஒரு ரூபாயை எடுத்துத் தரும் போது இருக்கின்ற மகிழ்ச்சி வெளிநாட்டில் என்னதான் மண்டபம் எடுத்து கேக்வெட்டி பாட்டி வைச்சாலும் மன நிறைவை தருவதில்லை. இப்பொழுது உள்ள பிள்ளைகளிற்கும் பரிசுகள் தாராளமாக கிடைகிறதே தவிர பாசமும் அன்பும். பெரியவர்களின் ஆசிகளும் கிடைப்பதில்லை. :(

  • Replies 54
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிச்சு உதறீட்டிங்கள் சாத்து.மற்றது இப்ப இங்குள்ளவர்கள் பெற்றோர்களின் மனதை மட்டும் இல்லை தங்கள் பிள்ளைகளின் மனதையும் புரிய மாட்டார்கள்.காரனம் அவர்களுக்ககே இந்த வாழ்க்கையும் வசதியும் புதிது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை எழுதியவிதம் அருமையிலும் அருமை .முடிவுதான் மனதை கொஞ்சம் சஞ்சலபடுத்திவிட்டது.

எனது பெற்றோரையும் ஒருக்கா இழுத்துவிட்டது,கனநாட்கள் பார்க்க போகவில்லை இன்று போகவேண்டும் .

வெள்ளிவிழா நான் சிறிதரில் பார்த்தேன் (பிழை பிடிக்க வந்துவிடுவார்கள் நாள் திகதி வருடத்துடன் கவனம் )

நீங்கள் சிறீதரிலை படம் பாத்த ரிக்கற்றை காட்டினால்தான் நம்புவமாக்கும்.. :lol: அர்ஜீன் அந்த படமே நான் ரிவியிலைதான் பாத்தனான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

" எங்கை அந்தப் பாட்டை ஒருக்கா பாடுமன்.

எந்தப் பாட்டை ??

அதுதான் அந்தப் பாட்டு. சாவித்திரியும் அவரது காதில் மெதுவாக நடுங்கும் குரலில் காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான் நான் பேசு...................தொண்டை அடைத்தது கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். நாதனின் கை விரல்கள் அவளின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொண்டது.கட்டுநாயக்காவில் தரை தட்டிய விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியபின்னரும் இருவர் மட்டும் இன்னமும் உறக்கத்திலிருந்ததை கவனித்த பணிப்பெண் அவர்களின் அருகில் சென்று உங்கள் பயணம் நிறைவடைந்து விட்டது எழுந்திருங்கள் என்று அவர்களை மெதுவாய் தட்டியவள் பயத்தில் திடுக்கிட்டு உதவி உதவி என கத்தினாள். "

ஒரு தலைசிறந்த எழுத்தாளர் என்றால் அவனுக்குப் பன்முகப்பட்ட ஆழுமை இருக்க வேண்டும் . " போரியலும் , காமமும் தான் சாத்திரியினால் எழுதமுடியும் " என்ற எகடியங்களைப் பலமுறை நீங்கள் தகர்த்தாலும் , இதில் முனைப்பாகவே இருந்திருக்கின்றீர்கள் . இறுதியில் உங்கள் கைவண்ணம் நன்றாகவே தெரிகின்றது . வாழ்த்துக்கள் சாத்திரி .

பொரியல் .அவியல். துவையல். இதுகளோடை கொஞ்சம் எழுதவும் தெரியும் அவ்வளவுதான். கோமகன் நீங்கள் சொல்கிற அளவிற்கெல்லாம் இல்லை. உங்கள் கருத்திற்கும் நன்றிகள் :)

நட்புடன் சாத்திரிக்கு......

இருவரின் வாழ்வைப் படித்தேன்.....

வாசித்துக் கொண்டு போகும் பொழுது சிமிக்கியை கொடுக்காமலே....

ஒருவரை சாகடித்து விடுவிரோ என்ற ஏக்கத்துடனையே வாசித்தேன்.....

ஆனால் இறுதியில் மகிழ்வைத் தந்தாலும்.....

கண்களைக் கலங்க வைத்து விட்டீர்கள்.....

நிஜமாக....

என்....

குற்றவுணர்வின் வெளிப்பாடாக்கும்...

திரைப்படகதைக்கான பண்பைக் கொண்டிருக்கின்றது போல் உணர்கின்றேன்..

நன்றிகள் பல

நல்ல கதை சாத்திரி அண்ணா. நீங்கள் எழுதிய விதமும் நன்றாக உள்ளது.

என்ன தான் வசதி வெளிநாட்டில் இருந்தாலும் எம் நாட்டில் இருக்கும் சந்தோசம் வராது... வெளிநாட்டில் பலர் படும் துயரங்கள் தான் இவை.

வயதானவர்களுக்கு எம் நாட்டில் மர நிழலில் கொஞ்ச நேரம் இருந்தாலே ஒரு ஈடு செய்ய முடியாத அளவு நிம்மதி, சந்தோசம் கிடைக்கும்.

ஊரில் இருந்தவர்கள் கொழும்புக்கு வந்தாலே இருக்க முடியாமல் தவிப்பார்கள்... அப்படியிருக்கும் போது வெளிநாட்டில் என்றால் சொல்லவும் வேணுமா...........?

கதை எழுதியவிதம் அருமையிலும் அருமை .முடிவுதான் மனதை கொஞ்சம் சஞ்சலபடுத்திவிட்டது.

எனது பெற்றோரையும் ஒருக்கா இழுத்துவிட்டது,கனநாட்கள் பார்க்க போகவில்லை இன்று போகவேண்டும் .

வெள்ளிவிழா நான் சிறிதரில் பார்த்தேன் (பிழை பிடிக்க வந்துவிடுவார்கள் நாள் திகதி வருடத்துடன் கவனம் )

அர்ஜுன் அண்ணா..

கண்டதுக்கும் பிழை பிடிக்க யாரும் வர மாட்டார்கள்.... :D அரசியல் சம்பந்தப்படும் இடங்களில் போடப்படும் திகதிகளில் பிழை என்றால் தான் பிழை பிடிக்கப்படும். அது வரலாற்றை மாற்றி எழுதக்கூடாது என்ற நோக்கத்திற்காக.... :)

  • கருத்துக்கள உறவுகள்

நட்புடன் சாத்திரிக்கு......

இருவரின் வாழ்வைப் படித்தேன்.....

வாசித்துக் கொண்டு போகும் பொழுது சிமிக்கியை கொடுக்காமலே....

ஒருவரை சாகடித்து விடுவிரோ என்ற ஏக்கத்துடனையே வாசித்தேன்.....

ஆனால் இறுதியில் மகிழ்வைத் தந்தாலும்.....

கண்களைக் கலங்க வைத்து விட்டீர்கள்.....

நிஜமாக....

என்....

குற்றவுணர்வின் வெளிப்பாடாக்கும்...

திரைப்படகதைக்கான பண்பைக் கொண்டிருக்கின்றது போல் உணர்கின்றேன்..

நன்றிகள் பல

ஒரே ரத்தம்.உங்கள் கருத்துக்களின் தன்மையை மாற்றினால் சேர்ந்து கும்மி அடிக்கலாம் :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு சாத்திரி. அதிகமாக புலத்தில் நடக்கும் அனுபவக் கதை. தமிழ் சினிமாப் பாணியிலான கடைசி முடிவைத் தவிர்த்திருக்கலாம்.

மேலோட்டமாக வாசித்து விட்டு, ரமணி சந்திரன் ரேஞ்சில எழுதத் தொடன்கிட்டீன்களோ என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு முதல் கருத்தைப் பதிந்து விட்டேன்.

தப்பிலி ரமணிச்சந்திரன் ஜெயமோகன் றேஞ்சுக்கெல்லாம் போகாமல் சாதாரணமாய் சாத்திரியாகவே நினைச்சு படிச்சிங்கள் எண்டால் பிரச்சனையிரக்காது. :) அடுத்தது கதையின் பாத்திரங்கள் வாழ்வில் ஏற்கனவே நிறைய சிரமங்களை அனுபவித்து விட்டதால் இதுக்கு மேலையும் அவர்களை சிரமப் படுத்த விரும்பவில்லை அதுதான் முடிச்சிட்டன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதியக்கா அலைமகள். யாயினி சாரா அக்கா( :lol: ).. காதல் என யாழ் களத்தின் பெரும் பெண் புள்ளிகள் எல்லாருமே என்கதைக்கு வரவேற்பு கொடுத்தததை பார்த்தால் உறவு உறவுகளிற்கிடையிலான உணர்வுகளிற்கு பெண்கள் எப்பொழுதும் முதலிடம் குடுக்கினம் என்பது புரிகிறது எனவே யாழ்கள பெண்புள்ளிகள் அனைவரிற்கும் நன்றி... :wub: ஆத்தா நான் பாசாயிட்டேன்...........

36_2_36.gif

பி;கு..கனடா வர இருப்பதால் தான் சகாராவிற்கு இந்த திடீர் மரியாதை ஜீப்பிலை என்னை துரத்திற மாதிரியே அடிக்கடி கனவு வருது

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் கருத்திட்ட .சுபேஸ். ஜீவா. விசுகு.மருதங்கேணி புங்கையூரான் ஆகியோரிற்கும் நன்றிகள். :) மற்றையவர்களிற்கு பின்னர் கருத்திடுகிறேன். அதே நேரம் அதென்ன பெண்களிற்கு மட்டும் தனி மரியாதை தனியா வாழ்த்து சொல்லுறன் எண்டு ஆண்கள் குறை நினைக்கமாட்டியள் என்பது எனக்கு தெரியும் ஏனெண்டால் நீங்களும் பட்டு அனுபவிச்சிருப்பியள். :lol: அனுபவம்தானே வாழ்க்கை :icon_idea:

நிலாமதியக்கா அலைமகள். யாயினி சாரா அக்கா( :lol: ).. காதல் என யாழ் களத்தின் பெரும் பெண் புள்ளிகள் எல்லாருமே என்கதைக்கு வரவேற்பு கொடுத்தததை பார்த்தால் உறவு உறவுகளிற்கிடையிலான உணர்வுகளிற்கு பெண்கள் எப்பொழுதும் முதலிடம் குடுக்கினம் என்பது புரிகிறது எனவே யாழ்கள பெண்புள்ளிகள் அனைவரிற்கும் நன்றி... ஆத்தா நான் பாசாயிட்டேன்...........

சாத்திரி அண்ணா, என்னை எல்லாம் பெரும் பெண்புள்ளிகள் பட்டியலில் சேர்க்காதீர்கள். அதற்கு எனக்கு தகுதி இல்லை. :(

மற்றும் கருத்திட்ட .சுபேஸ். ஜீவா. விசுகு.மருதங்கேணி புங்கையூரான் ஆகியோரிற்கும் நன்றிகள். மற்றையவர்களிற்கு பின்னர் கருத்திடுகிறேன். அதே நேரம் அதென்ன பெண்களிற்கு மட்டும் தனி மரியாதை தனியா வாழ்த்து சொல்லுறன் எண்டு ஆண்கள் குறை நினைக்கமாட்டியள் என்பது எனக்கு தெரியும் ஏனெண்டால் நீங்களும் பட்டு அனுபவிச்சிருப்பியள். அனுபவம்தானே வாழ்க்கை

மேலே நீங்கள் பாசாகிவிட்டீர்கள் என்று கூறி விட்டு இந்த கருத்தை எழுதி மீண்டும் பெயிலாயிட்டீங்களே :lol::D

உங்கள் வாழ்த்து பெண்கள் மனதை மகிழ்விப்பதற்காக போலியாக கூறப்பட்ட ஒன்றே தவிர உண்மையில் உங்கள் உள்ளத்திலிருந்து வரவில்லை என்பது இதன் மூலம் புலனாகிறது. :wub:

அதோட நாங்கள் மரியாதை எதிர்பார்த்து கருத்து எழுதவில்லை அண்ணா. :) :)

எது எப்படியோ உங்கள் மரியாதைக்கும்(????? :D) வாழ்த்துக்கும்(????? :D) நன்றிகள். :icon_idea:

Edited by காதல்

ஏற்கனவே கருத்து சொன்ன சிலரை போல வசிக்கும் பொது எங்கே சிமிக்கியை கடையில் வாங்கமுதலே பெரியவரை சாகடித்து விடுவீர்களோ என நினைத்தான்.

கதையை வாசிக்கும் போது சினிமா தனம் இருப்பது போல இருந்ததது.

இன்றுதான் இந்தக் கதையை வாசித்தேன்... 50 வருட தாம்பத்திய வாழ்க்கையை ஒரு சின்னஞ் சிறு கதைக்குள் கொண்டு வர சிரமப்படும் போதே கதையின் அழகியல் தொலைந்து விட்டதாகவே உணர்கின்றேன். கதையின் ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் இடையில் 50 வருடங்களாவது போயிருக்கும். முடிவும் சினிமாப் பாணியில் தான் உள்ளது.

சாத்திரியின் வழக்கமான கதை சொல்லும் பாணி கண்ணை மூடினால் visual ஆக விரியும் பாணி. இதில் அதுவும் இல்லை. ஒரு ஆயிரம் கதைகளை இந்த சிறுகதைக்குள் இருந்தே எழுதலாம்.

ரமணிச் சந்திரன் தான் கதை வாசிக்கும் போது கண்ணில் தெரிந்தார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கருத்து சொன்ன சிலரை போல வசிக்கும் பொது எங்கே சிமிக்கியை கடையில் வாங்கமுதலே பெரியவரை சாகடித்து விடுவீர்களோ என நினைத்தான்.

கதையை வாசிக்கும் போது சினிமா தனம் இருப்பது போல இருந்ததது.

நீண்ட நாளைக்கு பின்னர் குளையை கண்டது மகிழ்ச்சி கருத்துக்களிற்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இந்தக் கதையை வாசித்தேன்... 50 வருட தாம்பத்திய வாழ்க்கையை ஒரு சின்னஞ் சிறு கதைக்குள் கொண்டு வர சிரமப்படும் போதே கதையின் அழகியல் தொலைந்து விட்டதாகவே உணர்கின்றேன். கதையின் ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் இடையில் 50 வருடங்களாவது போயிருக்கும். முடிவும் சினிமாப் பாணியில் தான் உள்ளது.

சாத்திரியின் வழக்கமான கதை சொல்லும் பாணி கண்ணை மூடினால் visual ஆக விரியும் பாணி. இதில் அதுவும் இல்லை. ஒரு ஆயிரம் கதைகளை இந்த சிறுகதைக்குள் இருந்தே எழுதலாம்.

ரமணிச் சந்திரன் தான் கதை வாசிக்கும் போது கண்ணில் தெரிந்தார்

உண்மை நிழலி கதையை திரும்ப படிக்கும் பொழுது அவசரமாய் ஓடியது போல இருந்தது. ஒரு குறு நாவலாக வேண்டிய கதையை குறுங்கதையாக்கியதால் வந்தத விழைவாக இருக்கலாம். அதே நேரம் இது பத்திரிகைக்காக எழுதியது. பத்திரிகையில் கதை இதைவிட குறைவு பின்னர் கொஞ்சம் நீளமாக்கி யாழில் இணைத்தேன். மற்றும்படி முடிவு சினிமாத்தனம்தான் காரணம் அவசரமாக முடிக்கவேண்டியிருந்தது. கருத்திற்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நட்புடன் சாத்திரிக்கு......

இருவரின் வாழ்வைப் படித்தேன்.....

வாசித்துக் கொண்டு போகும் பொழுது சிமிக்கியை கொடுக்காமலே....

ஒருவரை சாகடித்து விடுவிரோ என்ற ஏக்கத்துடனையே வாசித்தேன்.....

ஆனால் இறுதியில் மகிழ்வைத் தந்தாலும்.....

கண்களைக் கலங்க வைத்து விட்டீர்கள்.....

நிஜமாக....

என்....

குற்றவுணர்வின் வெளிப்பாடாக்கும்...

திரைப்படகதைக்கான பண்பைக் கொண்டிருக்கின்றது போல் உணர்கின்றேன்..

நன்றிகள் பல

கருத்துக்களிற்கு நன்றிகள் மீரா பாரதி. ஆனால் இந்தக்: கதை எனக்கு உண்மையில் மன நிறைவை தரவில்லை அவசரமாக பேப்பரிற்காக எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக எழுதியது. ஆனால் இங்கு பலரும் எழுதியதைப்போல என்னிடமிருந்து எதிர் பார்க்கும் அந்த கதைக்களம் மனதில் விரியவில்லை. இனிவருங்காலங்களில் அதனை கவனத்தில் எடுக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன். கோகுலன். வாத்தியார். படம் போட்ட குண்டனிற்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி, உங்ககிட்ட இந்த மாதிரி கதை எதிர்பாக்கல்ல அந்த மாதிரி கதை எதிர்பாத்தன் :icon_idea:

சாத்திரி, உங்ககிட்ட இந்த மாதிரி கதை எதிர்பாக்கல்ல அந்த மாதிரி கதை எதிர்பாத்தன் :icon_idea:

:lol::D

சாத்திரி அண்ணாவின் பெயர் அப்படி அடிபட்டு போச்சு.... :D

இப்ப ஒழுங்கா எழுதுபவர்களை குழப்பாதீங்கப்பா.... :lol::D

இது யாவும் கற்பனையல்ல. இவ்வுலகில் இன்னும் இப்படியான ஆத்மார்த்தமான அன்பான தம்பதிகள் இருக்கின்றனர் சாத்திரி அண்ணா. வாலிப வயதின் சந்தோசங்கள் வயோதிப வயதில் வாழ்வின் நினைவுகளை அழகாக்குவது போல , உண்மையான அன்பு தோழமையை அவ்வயதில் ஏற்படுத்தும் என்பதை சில இளைய தலைமுறைகள் புரிந்து கொள்ள விரும்புவதில்லை. சிமிக்கி இதை அழகாக விளிக்கின்றது. பாராட்டுக்கள் ...தொடருங்கள்...

நீங்க தொங்கட்டான் கதை தானே சொன்னீங்க சாத்திரி அண்ணா . ரெம்ப நன்னா இருக்கு . ஒங்க கீரோ ரொம்பத்தான் அன்பு வைச்சிருக்காருங்க தன்னோட பொண்டாட்டில . ஆமா ஏன் சினிமா மாதிரி கதையை முடிச்சீங்க ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி, உங்ககிட்ட இந்த மாதிரி கதை எதிர்பாக்கல்ல அந்த மாதிரி கதை எதிர்பாத்தன் :icon_idea:

அது எந்த மாதிரி கதை ?? சொன்னா தெரிந்து கொண்டு எழுதுவம்தானே :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா கதை நன்றாக எழுதியுள்ளீர்கள், மனதில் ஒரு வித பயத்துடன் தான் வாசிக்க முடித்தது, எப்படி முடிக்கப் போறியளோ என்று. வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

அது எந்த மாதிரி கதை ?? சொன்னா தெரிந்து கொண்டு எழுதுவம்தானே :unsure:

அப்பாவி யார் எனத் தெரிந்தால் அவருக்கு எந்த விதமான கதை பிடிக்குமென உங்களுக்குத் தெரியும் :lol::D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.