Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் இந்து டின்னர் 2012

Featured Replies

படம் வருகுதில்லை நாளை முயற்சிக்கின்றேன்.

Edited by arjun

  • Replies 75
  • Views 7.8k
  • Created
  • Last Reply

பாடுவதற்கு வந்து மேடையில் ஏறிவிட்டு மன்னிக்கவும் பாடலை மறந்துவிட்டேன் என்று சொல்வதுபோல் உள்ளது. பிரசுரம் செய்யமுன்னர் previewஇல் பார்த்து இருக்கலாமே. 

  • கருத்துக்கள உறவுகள்

பாடுவதற்கு வந்து மேடையில் ஏறிவிட்டு மன்னிக்கவும் பாடலை மறந்துவிட்டேன் என்று சொல்வதுபோல் உள்ளது. பிரசுரம் செய்யமுன்னர் previewஇல் பார்த்து இருக்கலாமே.

எங்களுக்கு அதுவா முக்கியம்?

அதைவிட முக்கிய வேலையில் மூழ்கியிருக்கிறோம்.(அதாவது என்ன எடுக்கிறோம் என்பது எமக்கு தேவை இல்லாதது............. எதையாவது எடுத்துவிட்டோமே என்பதே எமக்கு பெருமையானது)

  • தொடங்கியவர்
528692_10150805897585376_620340375_11684062_1270866307_n.jpg
  • தொடங்கியவர்

522063_10150805892810376_620340375_11684027_2019975042_n.jpg

பாட்டியின் உச்ச கட்ட காட்சி .இப்படியான படங்கள் இணைக்கலாமோ தெரியாது .பழைய யாழ் இந்து மாணவர்களுக்காக இணைத்தது .பிழைஎன்றால் நீக்கி விடவும் .

சில முன்னைநாள் ஆசிரியர்களுக்கு மதிப்பளித்துள்ளீர்கள். சில நண்பர்கள் ஒன்றுகூடியுள்ளீர்கள்.

அதை விட இந்த விருந்து நிகழ்வின் நோக்கம் என்ன ?

இதனால் இன்றைய பாடசாலைக்கு ஏதும் நன்மை??

அர்ஜூன் பிழையாக எடுக்காவிட்டால் யாழ் இந்து கனேடிய பழையமாணவர் சங்கத்தின் முன்னாள் , இன்னாள் நடைபெறும் உதவித்திட்டங்களை இணைப்பீர்களா ?

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

சந்தியாப் பிள்ளை ஆசிரியரைப் படத்தில் கண்டதில் மகிழ்ச்சி.

சாரங்கன் என்னுடன் படித்தவர் என நினைக்கின்றேன்.

சரியாகத் தெரியவில்லை. 85 உயர்தரவகுப்பாக இருக்கலாம் என நினைக்கின்றேன்

படங்கள் இணைத்ததற்கு நன்றிகள் அர்ஜுன் அண்ணா.

  • தொடங்கியவர்

இந்து நண்பர் ஒருவரின் வேண்டுகோளை மதித்து சில படங்களை எடுத்துவிட்டேன் .மன்னிக்கவேண்டும் உறவுகளே .

அகூதா,கோமகன் யாழ் இந்து கனடா கிளையின் வெப் பக்கம் போய் பார்த்தால் முழு விபரமும் உள்ளது .விபரமாக பின்னர் பதிகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எழுத வேண்டுமென நினைத்தேன் நீங்கள் செய்துவிட்டீர்கள். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
:blink::unsure::lol::icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துக் கல்லூரி மொட்டை பாஸ்களின் டின்னர்..! ஸ்கூலுக்கு எவ்வளவோ செய்ய வேண்டி இருக்குது.. அதைச் செய்ய வக்கில்ல... அங்குள்ள வறிய மாணவர்களுக்கு உந்த நிதியைப் பங்கிட்டு கொடுக்கலாமே தண்ணிச் சாமிங்க. கனடாவில எந்த வெங்காயம் பழைய மாணவ சங்கம் நடத்துது..??! லண்டனில ஒன்று இருக்குதாம்.. விவேகானந்தன் என்று ஒண்டு.. அது வெளிநாட்டுக்கு ஆக்களை அனுப்பிறன் என்று ஊரைச் சுருட்டித்திரிஞ்ச ஒன்றாம். இதுகள் எல்லாம் யாழ் இந்து பழைய மாணவர் சங்க நிர்வாகிகள்..???! கொடுமை...! சமூகத்துக்கு முன்மாதிரியா இருந்த யாழ் இந்துக்கல்லூரி இவங்களால செம்மறியாட்டுக் கூட்ட நிலைக்கு போய்க்கிட்டு இருக்குது..! :(:rolleyes:

இந்த நிகழ்வில் ஆடலாம், பாடலாம்.

ஆனால் அத்துடன் ஒரு தொகை நிதியையும் சேர்த்து மாணவர்களுக்கு, இல்லை ஒரு வருடாந்த புலமைப்பரிசில் திட்டம் இல்லை வறியமாணவர்களுக்கு ஒரு உதவி ... இப்படி எதையாவதை அடுத்தமுறை செய்யச்சொல்லி கேளுங்கள்.

இன்னும் அழகாக இருந்திருக்கும்.

நன்றிகள்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்
my-year-off.1201006500.beggar-offering.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வில் ஆடலாம், பாடலாம்.

ஆனால் அத்துடன் ஒரு தொகை நிதியையும் சேர்த்து மாணவர்களுக்கு, இல்லை ஒரு வருடாந்த புலமைப்பரிசில் திட்டம் இல்லை வறியமாணவர்களுக்கு ஒரு உதவி ... இப்படி எதையாவதை அடுத்தமுறை செய்யச்சொல்லி கேளுங்கள்.

இன்னும் அழகாக இருந்திருக்கும்.

நன்றிகள்.

அவர்கள் படித்தவர்கள் (படித்தவர்களாம்.....?) இது எல்லாம் ஒத்துவருமோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

528692_10150805897585376_620340375_11684062_1270866307_n.jpg

இந்தப் படத்தில் அர்ஜூன், எத்தனையாவதாக நிற்கிறார்.

இடது பக்கத்தில் நிற்பவர், சந்தியாப்பிள்ளை மாஸ்ரர் என நினைக்கின்றேன்.

சில, படங்களை நான் பார்க்க, முதல் நீக்கியது... சிறிது கவலை.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

"ஆடுற மாட்டை ஆறி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணு ம் " இந்த அடிப்படையே கோட்பாடே தெரியாமல், ஒவ்வொரு வருடமும் போய் பாடசாலைக்கு என்று போய் பணம் கேட்டால் யார் தருவார்கள் ,எனவே வருடத்தில் மூன்று நிகழ்வுகள் ,டின்னர் ,கலையரசி (கலைநிகழ்ச்சி) விளையாட்டுப்போட்டி.என்று வைத்து பணம் சேர்த்ததாகவும் ,பணம் தருபவர்களை சந்தோஷபடுத்தியதாகவும்,எல்லோரும் ஒன்று கூடியதாகவும் ஆகின்றது .

செய்தது,செய்வது ,செய்யபோறது எதுவுமே தெரியாமல் உடனே சாணியை எறியுங்கோ?

அது பெரும் பட்டியல் ,விளையாட்டு மைதானம் விரிபு படுத்தியதில் இருந்து ,வறிய கெட்டிக்கார மாணவர்களுக்கு ஸ்கோலர்சிப் கொடுப்பது,வன்னி மாணவரை ஹொஸ்டலில் வைத்து படிப்பும், இருப்பிடமும் கொடுப்பது ,விரிவாக கனடா கிளை செய்ததை பட்டியல் விபரங்களுடன் இணைக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

25000 டொலர் சேர்க்கிற இடத்தில.. 23000 டொலரை தண்ணியடிக்க பாவிச்சிட்டு.. 2000 டொலரை ஊருக்கு பெயருக்கு அனுப்பிறதல்ல.. எமக்குத் தேவை. 25,000 டொலர் சேருற இடத்தில குறைந்தது ஒரு 40% வது பாடசாலைக்குப் போயிருந்தால்... ஏன் பாடசாலை இப்படிக் கிடக்குது..!

எல்லா பழைய மாணவர் சங்கங்களும்.. அவர்களின் வருடாந்தக் கணக்கறிக்கையை.. தங்களின் இணையத்திலோ.. அல்லது கல்லூரி இணையத்திலோ.. உறுதிப்படுத்தல்களோடு வெளியிட வேண்டும். வரவு செலவு திருத்தமானதாக அதில் காட்டப்பட்டிருக்க வேண்டும்..! உதில உள்ளால சுருட்டுறவையும்.. கல்லூரிக்கு என்று சேர்க்கிறதில.. தண்ணி அடிக்கிறவையும்.. குத்தாட்டம் போடுறவையும்.. உந்த ஆடம்பரக்களைக் குறைத்து எவ்வளவுக்கு எவ்வளவு சேமிக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சேமிச்சு.. அதனை யாழ் இந்து அன்னை நோக்கி திருப்பின்.. அவளின் பொலிவும் சிறப்பும் இன்னும் இன்னும் உயருமே அன்றி.. குறையாது.

அன்னையின் பெயரால் வயிறு வளர்க்கும்.. விளம்பரம் தேடும் எல்லோருக்கும் இந்தச் செய்தி பொருந்தும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

அர்ஜுன், யாழ் இந்து பழைய மாணவர்சங்கம் இணையத்தளம் நீண்டகாலமாக புதுப்பிக்காமல் உள்ளதே. குறிப்பாக வேலைத்திட்டங்கள் பற்றிய தகவல்கள் 2006இன் பின்னர் இல்லை. பொறுப்பானவர்களிடம் கூறி புதுப்பிக்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கெல்லாம் எங்க இருக்கு நேரமும்.. பணமும். சேர்க்கிறதை எல்லாம் மனிசிமாருக்கு பிள்ளைக்குட்டிக்கு உடுப்பு வாங்கவும்.. அவைக்கு சோ காட்ட ஆடம்பர மண்டபங்கள் எடுத்து.. மாதத்திற்கு ஒரு லண்ஞ்ச்.. டினர்.. வைக்கவும் குடிக்கவும் கும்மாளம் அடிக்கவுமே எல்லாம் சரியாகிடுது. இல்லப் போனா தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களைக் கூப்பிட்டு வைச்சு.. கும்மி அடிக்கிறது தான்..! இதில பழைய வாத்திமார்... வேற... அவைக்கும் ஓசில நாலு பெக் கிடைச்சா.. கூடி.. நிண்டு கூத்தடிச்சு.. போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டுப் போவினம். இத்தனைக்கும் இவைட வெட்டி பந்தாவிற்கு.. பாவிக்கப்படும் பெயர். யாழ் இந்து பழைய மாணவர்கள்...???! நிகழ்ச்சிகளுக்குப் பெயர்.. யாழ் இந்துவிற்கு நிதி சேர்க்கிற நிகழ்வு....! பள்ளி லோகோ வேற இந்தக் கூத்துக்கு..! :icon_idea::(

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்கரின் பதிவுகளை பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை." தானும் செய்யான் தள்ளியும் படான் " இதுதான் அவர் நிலை ,

பாடசாலை அதிபருடன் நேரடியாக தொடர்பு கொண்டு நடப்பதை அறியலாம் .பழைய மாணவர்சங்கம் என்றுமட்டும் நின்றுவிடாமல் அவசரதேவைகள் என்று வரும்போது சிலர் சேர்ந்தும் பணம் அனுப்பியிருக்கின்றோம் .

நாட்டில் பிரச்சனை உச்சத்தில் இருக்கும்போதே இயக்கத்தில் சேராமல் சுழித்து வெளிநாடு ஓடிவந்து படம்காட்டும் பலர் காட்டிக்கொண்டே இருப்பார்கள் .

கலைஞன் அனுமதி பெற்று மற்றைய விபரங்கள் பதிகின்றேன்.

லண்டனில் இருக்கும் போதே (அப்போ பழைய மாணவர் சங்கம் இல்லை) முதன் முதல் சில பழைய மாணவர் சேர்ந்து மகாதேவா ஆசிரியர் இறந்தவுடன் ஒரு குறிப்பிட்டதொகை சேர்த்து அனுப்பினோம் .(அவர் மனைவி தனிப்பட எல்லோருக்கும் நன்றி சொல்லி கடிதம் அனுப்பினார் ).லண்டனில் பழைய மாணவர் சங்க முதலாம் கூட்டத்துடன் கனடா வந்துவிட்டேன்.பின் கனடாவில் வந்து நாங்கள் நாலுபேர்தான் தான் முதல் இந்த அமைப்பை தொடங்கினோம்.அந்த நேரம் இவ்வளவு வசதிகள் இருக்கவில்லை எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் உருவாக்கி இப்போ விருட்சமாகி விட்டது (எலிகள் தந்த அலுப்பும் கொஞ்ச நஞ்சமில்லை )

நேரம் வரும்போது விபரமாக எல்லாம் எழுதுகின்றேன் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் பதிவுகளை பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை." தானும் செய்யான் தள்ளியும் படான் " இதுதான் அவர் நிலை...

பாடசாலை அதிபருடன் நேரடியாக தொடர்பு கொண்டு நடப்பதை அறியலாம் .பழைய மாணவர்சங்கம் என்றுமட்டும் நின்றுவிடாமல் அவசரதேவைகள் என்று வரும்போது சிலர் சேர்ந்தும் பணம் அனுப்பியிருக்கின்றோம் .

நாட்டில் பிரச்சனை உச்சத்தில் இருக்கும்போதே இயக்கத்தில் சேராமல் சுழித்து வெளிநாடு ஓடிவந்து படம்காட்டும் பலர் காட்டிக்கொண்டே இருப்பார்கள் .

நீங்கள் சிரிக்கவும் வேணாம் அழவும் வேண்டாம் சடையவும் வேண்டாம் மழுப்பவும் வேண்டாம்.. நாங்கள் பள்ளிக்கூடத்தின் பெயரால் காசு சேர்ந்து மனிசிமாரைக் கூப்பிட்டு வைச்சு தண்ணி அடிச்சு ஆட்டம் போடுற கூட்டமில்ல. நாங்கள் கல்லூரிக்கு உதவுறதுன்னா.. நேரடியா உதவிக்கிறம். இப்படி வெட்டி பந்தாவிற்கு சேர்க்கிற காசை எல்லாம் கொட்டிப்போட்டு கொஞ்சத்தை சாட்டுக்கு அனுப்பிற வேலை எல்லாத்தையும் விட்டிட்டு.. உருப்படியா வரவு செலவுக் கணக்கைக் காட்டி.. முறையா அந்தந்த நாடுகளில் பதிவுசெய்யப்பட்ட படி.. தொண்டு அமைப்புக்கள் என்ற வகையில் தொண்டை கல்லூரிக்கு சரியாச் செய்யனும்.. என்பதுதான் எங்கட வேண்டுகோள்..!

எவர் எங்க எப்படி பழைய மாணவர் சங்கம் அமைச்சார் என்பதல்ல.. பிரச்சனை. கல்லூரியின் பெயரைச் சொல்லி ஆரம்பிக்கப்பட்ட பழைய மாணவ சங்கங்களின்.. உறுப்பினர்களின் செயற்பாடுகள் வரவேற்கும் படி இல்லை என்பதும் கல்லூரிக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் சரிவர இவர்களால் கிடைக்கவில்லை என்பதும் தான் பிரச்சனை..!

இயக்கத்தில சேர்ந்திட்டு.. உள்ள ஊர்ப் பெட்டையள இழுத்துக் கொண்டு.. அப்படியே தேசத்தையும் காட்டிக் கொடுத்திட்டு வெளிநாட்டுக்கு.. ஓடிற.. கூட்டங்களைக் காட்டிலும்.. இயக்கத்துக்கு தேசத்துக்கும். தொந்தரவில்லாமல் ஓடிறவன் பறுவாயில்லைத் தானே..! :lol::D

(கவனிங்க... யாரு இதுக்குள்ள.. இயக்கம்.. வெளிநாடு.. ஓடிறதைப் புகுத்திறதெண்டு. அப்புறம்.. நிர்வாகம் வந்து ஐயோ.. அர்ஜீன் பாவம் அவரை எல்லாரும்.. சோத்துப்பார்சல் எண்டினம்.. என்று இரந்து வழியக் கூடாது..!) :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நீங்கள் சிரிக்கவும் வேணாம் அழவும் வேண்டாம் சடையவும் வேண்டாம் மழுப்பவும் வேண்டாம்.. நாங்கள் பள்ளிக்கூடத்தின் பெயரால் காசு சேர்ந்து மனிசிமாரைக் கூப்பிட்டு வைச்சு தண்ணி அடிச்சு ஆட்டம் போடுற கூட்டமில்ல. நாங்கள் கல்லூரிக்கு உதவுறதுன்னா.. நேரடியா உதவிக்கிறம். இப்படி வெட்டி பந்தாவிற்கு சேர்க்கிற காசை எல்லாம் கொட்டிப்போட்டு கொஞ்சத்தை சாட்டுக்கு அனுப்பிற வேலை எல்லாத்தையும் விட்டிட்டு.. உருப்படியா வரவு செலவுக் கணக்கைக் காட்டி.. முறையா அந்தந்த நாடுகளில் பதிவுசெய்யப்பட்ட படி.. தொண்டு அமைப்புக்கள் என்ற வகையில் தொண்டை கல்லூரிக்கு சரியாச் செய்யனும்.. என்பதுதான் எங்கட வேண்டுகோள்..!

எவர் எங்க எப்படி பழைய மாணவர் சங்கம் அமைச்சார் என்பதல்ல.. பிரச்சனை. பழைய மாணவ சங்க உறுப்பினர்களின் செயற்பாடுகள் வரவேற்கும் படி இல்லை என்பதும் கல்லூரிக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் சரிவர இவர்களால் கிடைக்கவில்லை என்பதும் தான் பிரச்சனை..!

இயக்கத்தில சேர்ந்திட்டு.. உள்ள ஊர்ப் பெட்டையள இழுத்துக் கொண்டு.. அப்படியே தேசத்தையும் காட்டிக் கொடுத்திட்டு வெளிநாட்டுக்கு.. ஓடிற.. கூட்டங்களைக் காட்டிலும்.. இயக்கத்துக்கு தேசத்துக்கும். தொந்தரவில்லாமல் ஓடிறவன் பறுவாயில்லைத் தானே..! :lol::D

(கவனிங்க... யாரு இதுக்குள்ள.. இயக்கம்.. வெளிநாடு.. ஓடிறதைப் புகுத்திறதெண்டு. அப்புறம்.. நிர்வாகம் வந்து ஐயோ.. அர்ஜீன் பாவம் அவரை எல்லாரும்.. சோத்துப்பார்சல் எண்டினம்.. என்று இரந்து வழியக் கூடாது..!) :lol:

இங்கு யாரும் சொத்துபாசல் என்பது எனக்கு உறைப்பதில்லை .சொந்த பணத்திலே flight இல இயக்கத்திற்கு போன ஆட்கள் நாங்கள் ,அங்கும் போய் எத்தனையோ அகதிகளுக்கும் உதவி செய்தனாங்கள்,போராட்டத்திற்கும் உதவாமல் அகதிகளுக்கும் உதவாமல் ஓடிவந்து இப்ப அந்த குற்ற உணர்சியில் தான் இங்கு பலர் இணையத்தில் தேசியம் கொட்டுகின்றார்கள் .இவர்களை நான் ஒருவித "ஜந்துக்கள்" ஆகவே பார்கின்றனான்.

லண்டனுக்கு அடித்து சொல்லிவிடுகின்றேன் ,அடுத்த பாட்டிக்கு முடிந்தால் போய் நாலு படத்தை எடுங்கோ ?காசு வேண்டாம் .

நான் நினைக்கிறேன்.. சொந்தப் பணத்தில் பிளைட் பிடிச்சு தமிழீழம் கேட்கப் போராடின ஆள் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்தளவிற்கு உங்கள் பண பலம் இருந்துள்ளது.. இதை நீங்கள் சொல்ல ஊரே நம்பனும் என்றீங்க...! இது.. இந்திய எல்லையில்.. ஒரு மீன்பிடிப் படக்கில இருந்து ஒரு எம் எவ் மைக்கை வைச்சுக் கொண்டு தமிழீழம் கண்ட கதையாத்தான் இருக்கப் போகுது..!

போராட்டத்திற்கு உதவாமல்.. அகதிகளுக்கு உதவாமல்.. வந்தவனட்டைப் போய் சொல்லுங்கோ.. நான் உங்களை விட திறமடா.. அந்த வகையில் யாழ் இந்துக்கல்லூரி சார்பில் சேர்க்கிற காசை வைச்சு தண்ணி அடிப்பன்.. பாட்டி வைப்பன்.. எவன் கேட்கிறது. கேட்டீங்க அடிச்சு வீழ்த்தி தாட்டுப் போடுவன்.. என்று. அவங்கள் பயந்து ஓடிடுவாங்கள்..! :lol::D

இந்தக் கதையளப்புகள் எங்களட்ட வாயாது. எங்களுக்குத் தெரியும் கல்லூரி எதிர்பார்த்தது என்ன..??! கல்லூரிக்குக் கிடைத்தது என்ன.. கல்லூரியின் பெயரால் சேர்க்கப்பட்டது எவ்வளவு.. சுருட்டினது எவ்வளவு.. உங்க வெளிநாட்டில மட்டுமல்ல... உள்ளூரிலும் தான்..!

எங்களுக்கு பார்ட்டிக்குப் போகனும் என்றால் சொந்தக் காசில.. கிளப்பில போயிட்டு.. ஆடிட்டுப் போவம். அது பிரச்சனை இல்ல. ஆனால் கல்லூரியில் பெயரால் கணக்குக்காட்டாமல்.. ஓசில ஆடுறதுகளை எப்படி கல்லூரியின் பெயரால் அனுமதிக்க முடியும்..!

இது பிச்சை எடுத்து.. கோபுரம் கட்டின கதையா எல்லோ இருக்குது. யாழ் இந்து அன்னையை வைச்சு இன்னும் ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்..??! அதிலும் தெருவோரத்தில் நின்று எடுக்கலாம்...! கல்வி கற்பித்த அன்னைக்கு பெருமை சேர்க்க வேண்டாம்.. குறைஞ்சது.. சிறுமையை உண்டுபண்ணாத செயலாகச் செய்ய விளையுங்கள்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நான் நினைக்கிறேன்.. சொந்தப் பணத்தில் பிளைட் பிடிச்சு தமிழீழம் கேட்கப் போராடின ஆள் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்தளவிற்கு உங்கள் பண பலம் இருந்துள்ளது.. இதை நீங்கள் சொல்ல ஊரே நம்பனும் என்றீங்க...! இது.. இந்திய எல்லையில்.. ஒரு மீன்பிடிப் படக்கில இருந்து ஒரு எம் எவ் மைக்கை வைச்சுக் கொண்டு தமிழீழம் கண்ட கதையாத்தான் இருக்கப் போகுது..!----நெடுக்ஸ் .

லண்டனில் இருந்து இந்தியா போக என்ன மில்லியன் பவுன்ஸ்சா டிக்கெட் ? ஒரு அறுநூறு பவுன்ஸ். அப்ப நான் கட்டுகின்ற fees இல் அரைவாசிதான். கென்டக்கியில் கோழி பொரிச்சு மிச்சம் பிடிச்ச காசு ?

அது புலியில் இருந்தவர்கள் தான் மில்லியனில் உருண்டு சொந்த பொக்கெற்றுகையும் தள்ளினவை . அரைவாசி பேர் அங்கு சேர்ந்ததே அதற்காதத்தான் ,(அவங்களுக்கு கணக்கு வேறு பாக்க வராது )

அடுத்தமுறை லண்டனுக்கு அமலபாலை கூப்பிட போகினம் வசதி எப்படி ?

Edited by arjun

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.