Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறாவின் மூளையில் "GPS" கண்டுபிடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_59889210_59889209.jpg

அன்றைய காதலர்களும்.. அரசிளம் குமரர்களும்.. குமாரிகளும்.. இன்றைய குமரங்களும் குமரிகளும்.. போல்.. சிமாட் போனை கையில வைச்சுக்கொண்டு ஈமெயில்.. எஸ் எம் எஸ்.. பேஸ்புக் என்று சமூகத் தொடர்பாடல்கள் மூலம்... செய்தி அனுப்பி எல்லாம் காதலிக்க முடியல்ல. அதற்குப் பதிலா அவர்கள்.. புறா அல்லது அன்னப் பறவை.. ஒன்றை பிடிச்சு பழக்கி.. அதன் காலில் அல்லது கழுத்தில்.. செய்திகளைக் கட்டிவிட்டு.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. தூது அனுப்பினார்கள்.

பண்டைய அரசர்களும் போர்.. மற்றும் மற்ற அரசர்களோடு இராஜீய உறவுக்கான தூதுகளை புறாக்களைப் பயன்படுத்தி.. மேற்கொண்டிருந்தனர்.

அந்தப் புறாக்களும்.. திக்கறிந்து திசையறிந்து.. குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்டவரிடம் கொண்டு போய் சேர்த்துவிடும். அதனை நவீன தமிழ் சினிமாக்கள் சிலவற்றிலும் காட்டியுள்ளனர்.

சரி..உந்த காதல் புராணத்தை விட்டு.. இப்ப விசயத்துக்கு வருவம்..! விசயம் என்னென்னா.. எப்படி இந்தப் புறாக்கள் திசைமாறாமல் பறந்து சென்று சேர வேண்டிய இடத்தைச் சேர்கின்றன. புறாக்கள் மட்டுமல்ல.. பறவைகள் எல்லாமே எப்படி திசை மாறாமல் இலக்கு நோக்கிப் பறக்கின்றன என்ற கேள்வி விஞ்ஞானிகளிடம் பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. அதற்கு பல்வேறு கொள்கை விளக்கங்களும் அளிக்கப்பட்டு வந்துள்ளன. இந்த நிலையில்..

_59889299_59889298.jpg

இப்போது அந்தக் கேள்விக்கு கிட்டத்தட்ட ஒரு விடை கிடைக்கிற மாதிரி விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதுதான் புறாவின் மூளையில் 53 நரம்புக் கலங்களைக் கொண்ட விசேட தொகுதி ஒன்று.. இனங்காணப்பட்டிருப்பது. அந்த நரம்புக்கலங்கள் (GPS neurons) பூமியின் காந்தப் புலச் செறிவுக்கு ஏற்ப தூண்டப்பட.. அந்த வழி திசையறிந்து பறக்கின்றனவாம் புறாக்கள்..!

அதெப்படி.. காந்தப்புலத்தை.. குறிப்பிட்ட கலங்கள் கண்டறிகின்றன என்ற விடயம் இன்னும் பூரணமாக விளங்கிக் கொள்ளப்படவில்லை. இருந்தாலும்... இவ்வளவையும் கண்டறிந்த ஆய்வாளர்கள் அதைச் செய்யாமலா இருப்பார்கள். எனவே புறாக் கூட அதன் மூளையில் உள்ள.. இயற்கையான GPS ஐ வைச்சுத்தான் திசை அறிந்து பறக்கிறது என்ற உண்மை உறுதியாக வெளிவர அதிக நாள் எடுக்காது என்று நம்பலாம்.

இது இன்னொரு விசயத்தையும் விளங்கிக் கொள்ள உதவும். குறிப்பாக செறிவான மொபைல் சிக்னல் உள்ள இடங்களில்.. வாழ்ந்து வந்த பறவையினங்கள் பல அருகி விட்டுள்ளதுடன் இன்னும் சில இடம்பெயர்ந்தும் சென்றுவிட்டன. பறவைகளின் இந்த நடவடிக்கைக்கும்.. இதன் மூலம் சரியான விளக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது..!

Magnetic fields light up 'GPS neurons', scientists say

http://www.bbc.co.uk...onment-17855194

(தொகுப்பு: நெடுக்ஸ்)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: :icon_idea: :icon_idea:

பேசாமல் என்ற காருக்குள் ஒரு அழகிய புறாவை ஏற்றிக் கொண்டு போனால் போகும் வழியில் பிரச்சனை ஒன்றும் இருக்காது...சிறப்பாக வழிகாட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் என்ற காருக்குள் ஒரு அழகிய புறாவை ஏற்றிக் கொண்டு போனால் போகும் வழியில் பிரச்சனை ஒன்றும் இருக்காது...சிறப்பாக வழிகாட்டும்

அது வேலைக்கு வழி காட்டுமா?

விடுதிக்கு வழி காட்டுமா? :lol::D :D

அது வேலைக்கு வழி காட்டுமா?

விடுதிக்கு வழி காட்டுமா? :lol::D :D

snickering.gif விசுகு சார் முடியல சார் snickering.gif

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் என்ற காருக்குள் ஒரு அழகிய புறாவை ஏற்றிக் கொண்டு போனால் போகும் வழியில் பிரச்சனை ஒன்றும் இருக்காது...சிறப்பாக வழிகாட்டும்

நல்ல வழி பிறக்கும், :D

அதேன் அழகான புறா ? சுமாரான புறா வழி காட்டத்தா ?? :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வழி பிறக்கும், :D

அதேன் அழகான புறா ? சுமாரான புறா வழி காட்டத்தா ?? :)

ஏனப்பா

கனவு தானே

கற்பனை தானே

அதில் எதற்கு கஞ்சத்தனம்.......??? :lol::D :D

பண்டைய மன்னர்கள் காதலுக்கும், போருக்கும் மற்றும் சாமாதனத்திற்கும் புறாவை பயன்படுத்தினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய சினிமாவில் புறாவை காதலுக்கு தூதுபோக விட்டுள்ளார்கள் :D

என்னபா புறாகு இருகும் மூளை எனகு இல்லயேபா :unsure: :unsure: :(

புறாகு gps 2muchpa :icon_mrgreen:

கடவுளே வை திஸ் கொலவெறி???????????????

  • கருத்துக்கள உறவுகள்

அன்னம் நளனுக்கு ஆறுதல் கூறிச் செல்லல்.

————————————————————–

‘வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய

வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் – சேம

நெடுங்குடையாய்!’ என்றுரைத்த நீங்கியதே அன்னம்

ஒடுங்கிடையாள் தன்பால் உயர்ந்து.

( வைகுவிப்பேன் = பொருந்தச் செய்வேன் , சேம நெடுங்குடை = குடிமக்கட்கு நன்மை செய்கின்ற குடை )

‘ நாட்டு மக்கட்கு நன்மை செய்கின்ற விரிந்த குடையை உடையவனே, வீமராசனுடைய செல்வ மகளான தமயந்தியின் இளமை தவழும் மார்பினை, உன்னுடைய அழகிய உயர்ந்த தோள்களைப் பொருந்தச் செய்விப்பேன்!’ என்று அன்னம் கூறிவிட்டு நுண்மையான இடையை உடையவளாகிய தமயந்தியிடம் பறந்து சென்றது.

நீங்கிய அன்னத்தின் நினைவில் மிதத்தல்.

————————————————————

‘இவ்வளவில் செல்லுங்கொல்! இவ்வளவில் காணுங்கொல்!

இவ்வளவில் காதல் இயம்புங்கொல்!-இவ்வளவில்

மீளுங்கொல்!’ என்றுரையா விம்மினான் மும்மதம்நின்று

ஆளுங்கொல் யானை அரசு.

( மதம் = யானைகளுக்குரிய கன்ன மதம். )

அன்னம் சென்றது. சென்றவுடன் நளன் மனம் அலைபாய்கின்றது! அதனை ஆசிரியர் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

மூன்றுவகை மதங்களும் மிகுந்து அதனால் அவைகளின் வழிபட்டு நிற்கும் கொலைத் தொழிலைப் பூண்ட யானையையுடைய நளன் என்னும் மன்னன்,’ அன்னமானது இத்தனை நேரம் வீமன் தலை நகரான குண்டின புரத்தை அடைந்திருக்குமோ! இத்தனை நேரம் தமயந்தியைக் கண்டிருக்குமோ! இத்தனை நேரத்திற்குள் எனக்கு அவளிடமுள்ள உண்மையான அன்பை உரைத்திருக்குமோ! இதற்குள் அங்கிருந்து திரும்புமோ! திரும்பி வந்து கொண்டிருக்குமோ!’ என்று கூறிக் கூறி பெரு மூச்சு விட்டு ஏங்கிக்கொண்டிருந்தான்.

தம் வாழ்வில் காதல் அனுபவத்தையுடையவர் இப்பாடலின் அருமையை நங்குணர்வர்.

  • கருத்துக்கள உறவுகள்

பறவையைக் கண்டான் விமானம் அமைத்தான்.

புறா தன் மூளையை வைத்து ஏன் திசையை அறிய முடியாது.

முன்பு ஒரு காலத்தில் நாங்கள் வளர்த்த புறாவை சுமார் 15 மைல்களுக்கு அப்பால் வாழ்ந்த எங்கள் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்தோம்.

இரு நாட்களுக்குப் பின்னர் அந்த வீட்டில் இருந்த இரண்டு புறாக்களுடன்

எங்கள் புறா எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னம் நளனுக்கு ஆறுதல் கூறிச் செல்லல்.

————————————————————–

‘வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய

வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் – சேம

நெடுங்குடையாய்!’ என்றுரைத்த நீங்கியதே அன்னம்

ஒடுங்கிடையாள் தன்பால் உயர்ந்து.

( வைகுவிப்பேன் = பொருந்தச் செய்வேன் , சேம நெடுங்குடை = குடிமக்கட்கு நன்மை செய்கின்ற குடை )

‘ நாட்டு மக்கட்கு நன்மை செய்கின்ற விரிந்த குடையை உடையவனே, வீமராசனுடைய செல்வ மகளான தமயந்தியின் இளமை தவழும் மார்பினை, உன்னுடைய அழகிய உயர்ந்த தோள்களைப் பொருந்தச் செய்விப்பேன்!’ என்று அன்னம் கூறிவிட்டு நுண்மையான இடையை உடையவளாகிய தமயந்தியிடம் பறந்து சென்றது.

நீங்கிய அன்னத்தின் நினைவில் மிதத்தல்.

————————————————————

‘இவ்வளவில் செல்லுங்கொல்! இவ்வளவில் காணுங்கொல்!

இவ்வளவில் காதல் இயம்புங்கொல்!-இவ்வளவில்

மீளுங்கொல்!’ என்றுரையா விம்மினான் மும்மதம்நின்று

ஆளுங்கொல் யானை அரசு.

( மதம் = யானைகளுக்குரிய கன்ன மதம். )

அன்னம் சென்றது. சென்றவுடன் நளன் மனம் அலைபாய்கின்றது! அதனை ஆசிரியர் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

மூன்றுவகை மதங்களும் மிகுந்து அதனால் அவைகளின் வழிபட்டு நிற்கும் கொலைத் தொழிலைப் பூண்ட யானையையுடைய நளன் என்னும் மன்னன்,’ அன்னமானது இத்தனை நேரம் வீமன் தலை நகரான குண்டின புரத்தை அடைந்திருக்குமோ! இத்தனை நேரம் தமயந்தியைக் கண்டிருக்குமோ! இத்தனை நேரத்திற்குள் எனக்கு அவளிடமுள்ள உண்மையான அன்பை உரைத்திருக்குமோ! இதற்குள் அங்கிருந்து திரும்புமோ! திரும்பி வந்து கொண்டிருக்குமோ!’ என்று கூறிக் கூறி பெரு மூச்சு விட்டு ஏங்கிக்கொண்டிருந்தான்.

தம் வாழ்வில் காதல் அனுபவத்தையுடையவர் இப்பாடலின் அருமையை நங்குணர்வர்.

புலவர் புறாவின் மூளையில் "GPS" மாதிரி அன்னத்தின் மூளையில் என்ன இருக்கும் என்று நெடுக்கரிடம் கேட்பதற்காக இந்தப்பதிவை இங்கு பதிவிட்டுவிட்டீர்களா? :rolleyes:

புறாவின் மூளையில் "GPS" கண்டுபிடிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

அதே!!!

பல கண்பிடிப்புகளும் இயற்கையை வைத்தே கண்டி பிடிக்கப்படுகின்றன. நியூட்டன் ஏன் ஆப்பிள் பழம் கீழே விழுகின்றது என அறிந்தான் - புவி ஈர்ப்பு சக்தி பற்றி கண்டுபிடித்தான்.

இப்படி பல கண்டுபிடிப்புக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அது வேலைக்கு வழி காட்டுமா?

விடுதிக்கு வழி காட்டுமா? :lol::D :D

:D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.