Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3 வயது மகனுக்கு பாலூட்டலாமா?!

Featured Replies

னது மூன்று வயது மகனுக்கு 26 வயது பெண் ஒருவர் தாய்ப்பாலூட்டுவது குறித்த பிரபல ‘டைம்’ பத்திரிகை அட்டைப்படத்துடன் வெளியிட்ட செய்தியால் அமெரிக்காவில் அனல் பறக்கும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

பிற்ந்த குழந்தைகளுக்கு கட்டாயம் ஒரு வருடத்திற்காவது தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்புகள் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும்,மருத்துவ நிபுணர்களும் ஒருபுறம் வலியுறுத்தி வந்தாலும்,எந்திரமயமாகிப்போன வாழ்க்கைச் சூழலில் அதெல்லாம் சாத்தியமில்லை என்று அதிகம் போனால்,3 மாதங்களுக்குள்ளாகவே அதற்கு குட்பை சொல்லிவிடுகின்றனர் இன்றைய தலைமுறை பெண்கள்.

ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள தாய்ப்பாலுக்குப் பதிலாக,புட்டி பாலை அருந்தி வளரும் குழந்தைகளுக்கு இயல்பாகவே கிடைக்க வேண்டிய நோய் எதிர்ப்பு

சக்தி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கமாலேயே போய்விடுகிறது.

time-magazine400%281%29.jpg

இதனாலேயே தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் உலகம் முழுவதும் வேகமெடுத்துள்ளது.

அந்த வகையில் இது ஒருவகையான பிரச்சாரம் என்று ‘டைம்’ ஏடு கருதியதோ என்னவோ,அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஜெமி லியான் என்ற 26 வயது பெண் ஒருவர்,3 வ்யதாகிவிட்டபோதிலும் தனது மகனுக்கு தொடர்ந்து பாலூட்டி வருவது குறித்த செய்தியை,இந்த வாரம் அட்டைப்படமாக வெளியிட்டு விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது.

தனது தாயார் தனக்கு 6 வயது வ்ரை பாலூட்டியதாக ‘டைம்’ ஏடுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ள ஜெமி,ஆனால் தனது 3 வயது மகனுக்கு தாம் பாலூட்டுவதை மற்றவர்கள் விநோதமாக பார்த்து எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்,இது குழந்தையை துன்புறுத்துவதற்கு - child molestation - ஈடானது என்று மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெமியின் இந்த பாலூட்டும் கருத்து மற்றும் அத்னை வலியுறுத்துவதற்காக அவர் கொடுத்துள்ள அட்டை பட போஸ்-க்கு எதிர்ப்புகள் ஒருபுறம் எழுந்துள்ளபோதிலும்,ஆதரவு குரல்களும் வராமல் இல்லை.

எதிர்ப்பு கருத்து தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கைகு ஈடாக,ஆதரவு மற்றும் ஜெமியை பாராட்டும் கருத்துக்களும் வெளிவந்துள்ளன.

”உடலியல் ரீதியாக இது இயல்பானது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.இதனை (அட்டை படத்தை) ஏராளமான மக்கள் பார்த்தால் நமது கலாச்சாரத்தில் இது இயல்பானடதாகிவிடும்.அந்த நம்பிக்கையில்தான் நான் இந்த போஸை கொடுத்துள்ளேன்.மேலும் இது பெற்றோர் மீது குழந்தை கொண்டிருக்கும் பாசம் மற்றும் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார் ஜெமி.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் பிரப்ல தொலைக்காட்சி ஒன்றின் காலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல டாக்டர் மைக் ப்ரெஸென்னிலோ,இந்த அட்டைப்படம் குறித்து பதட்டப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

கூடவே ட்விட்டர் தளத்தில் இது சரியா...தவறா...?என்பது குறித்த விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கிறது.ஆயிரக்கணக்கானோர் தங்களது ஆதரவு அல்லது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

அதில் பங்கேற்ற 6 வயது மகனுக்கு தாயான பாபி மில்லர் என்ற பெண்,இந்த அட்டைப்படத்திற்கும்,ஜெமியின் கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.”ஒரு பசுமாட்டிற்கு கூட தனது பிள்ளைக்கு எப்பொழுது பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பது தெரியும்!” என்று அவர் அதில் கோபத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

http://news.vikatan....ex.php?nid=7968

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

தாய்மை தானம்

வியாழக் கிழமை சாயந்திரம் நாலு மணிக்கு அலுவலகத்தில் மும்முமராய் வேலை செஞ்சிக்கிட்டு இருந்த போது (சொன்னா நம்பணும், சிரிக்கப் படாது), ”Wife Calling" என்றது கைப்பேசி. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவியா? கட் ஆஃப் டையத்துக்கு முன்னாடி கொரியர் அனுப்பனும், நாளைக்குள்ள போய்ச் சேரலேன்னா சனி ஞாயிறு கொரியர் ஆபீஸ்ல தங்கிடும். யாருக்கும் உபயோகம் இல்லாமல் போயிடும், பட்ட கஷ்டம் வீண் என்று பாடம் நடத்தப் பட்டது.

ஆபிஸ்லேருந்து வீட்டுக்குப் போக பத்து நிமிஷம், பார்சல் எடுத்துக்க ஒரு அஞ்சு நிமிஷம் வீட்லேருந்து ஒரு கொரியர் ஆபிஸ் ஒரு அஞ்சு நிமிஷம் எப்படியும் ஒரு இருபது நிமிசத்தில் போயிடலாம் இன்னும் நெறய நேரமிருக்குன்னு கணக்கு போட்டது கார் டிரைவர் மனசு.மவனே இதுல ஏதாச்சும் மிஸ் ஆகி பல்பு வாங்கினா ஆப்பு பலமா இருக்கும்டி என்று எச்சரித்தது “ப்ராக்டிகல் புருஷன்” மனசு. ரெண்டாவது மனசு ஜெயித்ததுன்னு தனியா வேற சொல்லணுமாக்கும். உடனே Fedex ஆபீஸுக்கு போன் பண்ணி cut off time என்னன்னு கேட்டேன், ஆறரை மணி என்றது அந்த முனையில் இருந்த வெள்ளையம்மா. சீக்கிரமா கொண்டாந்தா சீக்கிரமா அனுப்பிடுவீங்களான்னு கேணத்தனமா கேட்டேன். முழு கண்டெய்னர் அளவுக்கு பொருள் இருந்தாத்தான் தனி ஷிப்மெண்ட்னு நக்கலா விளக்கமான்னு புரிஞ்சிக்க முடியாத ஒரு தொனியில் பதில் வந்தது. “நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு”ன்னு சொல்லிட்டு ஆபிஸ் வேலைகளை முடிச்சு அஞ்சு மணிக்கு கெளம்பி வீட்டுக்குப் போனா பார்சல் தயாராகலை. ஏன்னு கேட்டதுக்கு தங்கமணி, உன்னைய நம்பி நான் பேக் பண்ணி வச்சிட்டு உக்காந்திருந்தா நீ அன்னிக்குத்தான் ஆணி அதிகம்னு சீன் போட்டு லேட்டா வருவ , என்னிக்கு நான் தயாரா இல்லையோ அன்னிக்குத்தான் நீ சரியான நேரத்துக்கு வருவ, அதனாலதான் அதை ஃபிரீசர்லேந்து எடுக்கலன்னு சொன்னா. அரக்க பறக்க ஃப்ரீசர் பேக்கை எடுத்து பேக் பண்ணி, பிரிபெய்டு லேபில் ஒட்டி பார்சலை எடுத்துக்கிட்டு ஓடினேன்.

Fedex ஆபிஸ் போன பொது மணி ஆறு. கவுண்டரில் இருந்த உயர்ந்த மனிதனிடம் இந்த பார்சல் நாளைக்கு கண்டிப்பா போயிடுமா அதில் உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா இப்பவே சொல்லிடு, இப்ப போயிட்டு திங்கக் கிழமை திரும்ப வர்றேன்னு சொன்னேன். Over Night Shipping கண்டிப்பா நாளைக்குப் போயிடும், ஆமா எதுக்கு இவ்வளவு கேக்கறே, அப்படி அதுல என்னதான் இருக்கு தங்கம் அல்லது ஏதாவது விலை உயர்ந்த பொருள் அனுப்பறியான்னு கேட்டான். அதுக்கு நான் இதுக்குள்ள இருப்பதுக்கு விலையே நிர்ணயம் பண்ண முடியாது, தங்ககத்தை விலை கொடுத்து வாங்கிக்கலாம் இதுக்குள்ள இருப்பதை நீயோ நானோ என்ன பண்ணாலும் உருவாக்க முடியாது என்றேன். Hmm, what is so precious 'bout it என்று என்று கேட்டுக்கொண்டே பார்சலின் மீது இருந்த National Milk Bank பேரைப் பார்த்த அவர் ஒ உள்ளே தாய்ப்பால் இருக்கா? இப்ப புரியுது உன் அக்கரைக்குக் காரணம் என்றார். உன் மனைவிக்குத்தான் எவ்வளவு தாராள குணம் அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெறித்துவிடு, தாய்ப்பாலை தானம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை, கிடைப்பவர்கள் எல்லோரும் தானம் செய்வதில்லை என்றார்.

அதுவரை இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டாத எனக்கு அவர் சொன்னதைக் கேட்டதும் பெருமை பிடிபடலை. ஆம் அந்த பார்சலில் இருந்தது 250 Ounce கிட்டத்தட்ட 7.5 லிட்டர் தாய்ப்பால். அது ஒரு பிறந்த குழந்தைக்கு இரண்டு வாரங்களுக்கான உணவு. பிறந்து ஆறு மாதங்களுக்கு வெறும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி பெறுகின்றன என பல மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. குழந்தை பெற்ற தாய்மார்களில் பலருக்கு தேவையான அளவுக்கு பால் சுரப்பதில்லை, அதில் ஒரு சில குழந்தைகளின் பசியை என் மனைவி போக்கியிருக்கிறாள், அதை கொண்டு சேர்த்த புண்ணியத்தை நான் கட்டிகொண்டேன். பகிர்ந்தளிக்கும் அளவுக்கு வழங்கிய கடவுளுக்கு நன்றியையும, பகிர்ந்த என் மனைவிக்குப் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது கண்டிப்பா தம்பட்டம் அடிக்க அல்ல. ரத்த தானம், கண்தானம், உறுப்பு தானம் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும், பலர் செய்தும் வருகிறோம். தாய்ப்பால் தானம் பற்றிய அறிதல் மிகக் குறைவு, அதற்காகவே இப்பதிவு. இதைப் படிக்கும் யாரேனும் ஒருவர் இன்னொரு தாய் தன்னிடம் உபரியாக இருக்கும் தாய்ப்பாலை தானம் செய்யத் தூண்டினால் அதுவே போதும்.

இதுக்காக என் மனைவி, National Milk Bank இடம் கேட்டது எங்க மகள் பெயரில் ஒரு ThankYou Note. தனக்கு மட்டுமே உரித்தான சொத்தை அவள் சக குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறாள், இது அவளுக்கு இன்று புரியாது. விவரம் புரியும் போது விளக்கி இந்த ThankYou Note காட்ட எண்ணம். "சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப் படுத்திப் பாக்கறதுதான்" இதை எங்க மகளின் மனதில் விதைக்க எண்ணியுள்ளோம்,

நீ பிறந்ததிலிருந்தே உனக்கானதை பகிர்ந்தவள் என்று சொல்லி புரியவைக்க இது உதவியா இருக்கும்.

அமெரிக்காவில் இதை National Milk Bank என்ற சேவை நிறுவனம் செய்து வருகிறது (www.nationalmilkbank.org). நீங்க தயாரா இருந்தாலும் அவர்கள் உடனே பெற்றுக் கொள்வதில்லை, முதலில் தாயின் ரத்தத்தைப் பரிசோதனை செய்து பாக்கறாங்க, பின்னர் தாயின் மருத்துவரிடமும் குழந்தையின் மருத்துவரிடமும் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று அவங்களுக்கு அனுப்பனும். அப்புறம்தான் ஃப்ரீசர் பேக்கை அனுப்புவாங்க. குறிப்பிட்ட அளவு பால் சேர்ந்ததும் அவங்க செலவில் கொரியர் அனுப்பிடலாம். யாரிடமிருந்து பெறப்பட்டது யார் யாருக்கு வழங்கப் பட்டது போன்ற தகவல்கள் ரகசியமாக வைக்கப் படுகின்றன.

வாய்ப்பும், விருப்பமும் இருப்பவர்கள் உபரி தாய்ப்பாலை தானமாக வழங்கலாம், வாய்ப்பில்லாதவர்கள் இந்நிறுவனத்துக்குப் பொருளதவி வழங்கலாமே !!!

http://bostonsriram.blogspot.in/2011/08/blog-post.html

இயற்கையாக கிடைக்கும் தாய்ப்பால்தான் குழந்தையின் வளர்ச்சிக்கான ஆரோக்கியமான உணவு. ஊரில் நாலு, ஐந்து வயது மட்டும் தாய்ப்பால் குடித்த குழந்தைகளும் உண்டு.

இங்கு இந்தப் பெண் 'போஸ்' கொடுப்பது தனது சுய விளம்பரத்திற்காகவும் இருக்கலாம்.

இயற்கையாக கிடைக்கும் தாய்ப்பால்தான் குழந்தையின் வளர்ச்சிக்கான ஆரோக்கியமான உணவு. ஊரில் நாலு, ஐந்து வயது மட்டும் தாய்ப்பால் குடித்த குழந்தைகளும் உண்டு.

இங்கு இந்தப் பெண் 'போஸ்' கொடுப்பது தனது சுய விளம்பரத்திற்காகவும் இருக்கலாம்.

தப்பிலி சொன்ன மாதிரி 5 வயது வரைக்கும் பால் குடித்த பலர் ஊரில் உள்ளனர். எனவே அதில் தவறில்லை. ஆனால்இந்தப் படத்தால் வளர்ந்த பின் இதிலிருக்கும் சிறுவன் துன்பங்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகலாம். பல காலத்துக்கு அவனுக்கு பாதிப்புகள் தொடரப் போகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளுக்கு கட்டாயம் முதல் 3 - 6 மாதங்களுக்கு பாலூட்ட வேண்டும். அதன் பின்னர் உணவோடு.. பாலூட்டலை செய்யலாம். அது தாயின் வசதிக்கு ஏற்ப 5 வருடங்கள் வரை போகலாம்.

பாலூட்டல் இயற்கையான கருத்தடை என்பதுடன்.. பாலூட்டும் தாய்மாரில் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறைவாகும்..!

பல்லு முளைத்து தொடர்ந்து பாலூட்டின் குழந்தைகளின் பல் வரிசையில் மாறுதல்கள் வரலாம். இதில் கவனம் தேவை.

மேலும்.. சில குழந்தைகளில் 2 அல்லது 3 வயதை அடையும் போது பாலை நொதிக்கச் செய்யும் இரைப்பை நொதியமான பெப்சினின் அளவு வீழ்ச்சியடையலாம். இதனால் பால் சமிபாடடைதல் பிரச்சனைகள் தோன்றக் கூடும். பொதுவாகவே குழந்தைகள் வளர வளர பாலை நொதிக்கச் செய்யும்.. பெப்சின் நொதியம்.. சுரப்பது இரைப்பையில் குறைவடைவது இயற்கையாகும்..!

அதன் பின்னர் அது சிறுகுடலில் தான் பொதுவாக சமிபாடடையச் செய்யப்படும்..! அதிலும் சில குழந்தைகளுக்கு lactase நொதியம் சரியாக சுரக்கவில்லை (மரபணுக் காரணங்கள் உட்பட) எம்றால் அவர்களுக்கு பாலை சமிபாடடையச் செய்யும் பிரச்சனை தொடர்ந்து இருக்கும். இது lactose intolerance எனப்படும்..! இது குறித்தும் தாய்மார் கவனம் செலுத்துவது அவசியம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அம்மாவும், பத்திரிகையும் இதிலேயும் விளம்பரம் செய்வதுதான் கேவலமாக இருக்கு.. :(

அந்த அம்மாவும், பத்திரிகையும் இதிலேயும் விளம்பரம் செய்வதுதான் கேவலமாக இருக்கு.. :(

Times இல் வந்த நல்ல செய்திகளை மொழிபெயர்க்காமல், பரபரப்பிற்காக கிடைத்ததை உடனுக்குடன் தமிழ்ப்படுத்தி போடும் கேவலமான நிலையில்தான் தமிழ் ஊடகங்களும் உள்ளார்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அம்மாவும், பத்திரிகையும் இதிலேயும் விளம்பரம் செய்வதுதான் கேவலமாக இருக்கு.. :(

இப்படியான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விடுவதும் நன்று தானே இசை அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அம்மாவும், பத்திரிகையும் இதிலேயும் விளம்பரம் செய்வதுதான் கேவலமாக இருக்கு.. :(

பணமும் புகழும் சேர்ந்து வந்தால் யார்தான் விடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிலை அரிவரிக்கு போட்டு வந்து தாய்ப்பால் குடித்தவர்கள் அதிகம். :D

பெத்தபிள்ளைக்கு பால் குடுத்தால் அங்கை சுருங்கிப்போகும்.......இஞ்சை இறங்கீடும்.....எண்டு நினைச்சு தாய்ப்பால் குடுக்காமல் இருக்கிற ஜென்மங்களை நினைக்கேக்கை......இந்த தாயின் செயல் வரவேற்க வேண்டியது..............வேலைவேலை எண்டு திரியிற பொண்டுகளுக்கும்....தங்களை அழகுராணிகள் எண்டு நினைச்சுக்கொண்டு திரியிறவைக்கும் ஒரு நெத்தியடி. :icon_idea:

செய்தி இணைப்பிற்கு நன்றி அபராஜிதன்.

ஒரு தாய் தனது பிள்ளைக்குத் தாய்பால் கொடுப்பது ஒரு பிரச்சனையே இல்லை.. அச்செயல் எப்பவும் எல்லோராலும் வரவேற்கப்படும்... பிள்ளைக்குத் தாய் பாலூட்டும் போது அதனை யாரும் பார்க்க ஊட்டுவதில்லை, இது எல்லா இனத்தவர்களிலும் உள்ள ஒரு உணர்வு... போது இடங்களிலும் கூட ஒரு தாய் தனது மார்பகத்தை ஒரு துணியால் மூடியே தனது பிள்ளைக்குப் பாலூடுவாள். விளம்பரத்திற்காக இப்படி ஒரு படம் போட்டதே சர்ச்சைக்குரிய விடையமானதே தவிர அந்தத் தாய் தனது பிள்ளைக்கு 3 வயது வரை பாலூட்டியது இல்லை... 3 என்ன 5 வயது வரையும் தாயிடம் பால்குடித்தவர்களும் உள்ளார்கள்... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.