Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவன் யார் ?

Featured Replies

1989 ஞாயிறு அதிகாலை புறநகர் பகுதி ஒன்றில் குளிருக்கு போர்வையினுள் சூட்டை தேடிக்கொண்டிருந்த என்னை , தொலைபேசி மணி எடுக்குமாறு அடம்பிடித்துக் கடுப்படித்தது . வேண்டா வெறுப்பாக தொலைபேசியை எடுத்து "கலோ........" என்று மெதுவாக இழுத்தேன் . " மச்சான் நான் குகன் கார் து லியோன் இலை இருந்து பேசிறன் . கோச்சி இபத்தான் லியோனாலை வந்தது . உன்ரை அப்பார்மன்ற் கோட் நம்பறை சொல்லு " என்றான் . நான் நம்பரைச் சொல்லியவாறே ," எத்தினை மணிக்கு இங்கை வாறாய் என்று கேட்டேன் " ? " இன்னும் அரைமணித்தியாலத்திலை உங்கை இருப்பன் " என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான் .

நான் படுக்கையில் இருந்துகொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன் . குகன் எனது வகுப்புத்தோழன் .நானும் அவனும் சிறுவயதிலிருந்தே ஒரே வகுப்பு . இங்கு இருப்பது வேறுவேறானாலும் எங்கள் கூட்டு உடையாது இறுகித்தான் இருந்தது . சிறுவயதில் காதலித்தவனுக்கு தாய் முறுகியபொழுது அவாவைச் சமாதானம் செயது குகனுக்குக் கலியாணம் செய்வித்ததும் நான் தான் . பின்பு 87களில் மனைவியையும் பிள்ளையையும் விட்டுவிட்டு இங்கு என்னிடம் வந்துவிட்டான் .ஆரம்பத்தில் என்னுடன் இங்கு இருந்தவனுக்கு லியோனில் வேலை ஒன்று கிடைத்தபொழுது வேலையைப் பொறுப்பு எடுக்கவும் , என்னைவிட்டுப் பிரியவும் மனம் இருக்கவில்லை . நானே அவனிற்குப் பலபுத்திமதிகள் சொல்லிக் கட்டாயப்படுத்தி லியோனுக்கு அனுப்பி வைத்தேன் .

நான் படுக்கையை விட்டு எழுந்து குசினிக்குள் வந்து தேத்தண்ணி போட வொயிலரில் தண்ணியை விட்டு பட்டினைத் தட்டி விட்டேன் . நான் தேத்தண்ணியைப் போட்டுக் கொண்டு ஓர் சிகரட்டை எடுத்துக் கொண்டு பல்கணியைத் திறந்து வெளியே வந்தேன் .

குளிர் ஊசியாக , போட்டிருந்த சுவற்றரின் ஊடாக ஊடறுத்துப் பாய்த்து எலும்பின் நரம்புகளை கலோ கேட்டதால் உடம்பு நடுங்கியது . அப்பாட்மென்ற் க்கு முன்னால் இருந்த மரங்கள் எல்லாம் பச்சைகளைத் தொலைத்து வறட்சியாக நின்றன , எங்கள் வாழ்வு போல . இரவு பெய்த பனி அவைகளின் மீதும் , நிலமெங்கும் கொட்டி இருட்டும் வெண்மையுமாக வர்ணஜலம் காட்டியது .அந்தக் காலையிலேயே பனிப்புகாரும் ஆள் தெரியாதவாறு மண்டி எனக்குப் பரவச நிலையை ஏற்படுத்தியது . எனக்கு சிகரட் அடிக்காமலே வாய்க்கால் புகை வந்தது .தேத்தண்ணியையும் சிகரட்டையும் பற்ற வைத்துக்கொண்டு ஆண்டவன் எனக்காகப் படைத்த அந்தக் காலை வேளையைத் துளித்துளியாகப் பருகினேன் .

எனது மோனத் தவத்தைக் குலைத்தது கீழே குகனின் "மச்சான் " என்ற குரல் . நான் மேலே வரசொல்லி விட்டு வீட்டின் கதவைத் திறக்கப் போனேன் . குகன் கதவிற்குக் கிட்டே வரவும் நான் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது . குகன் லியோனிற்குப் போனதன் பின்பு இப்பொழுது தான் முதன் முதலாக வந்திருக்கின்றான் . அவன் சற்றுப் பூசியது போலவும் , தோல் சிறிது மாநிறமாகவும் வெளிறி வந்திருந்தான் .

" என்ன குளிரடாப்பா எனக்கு ஃகபே போட்டுட்டியே " என்று குசினிக்குள் உள்ளட்டான் குகன் . " போய் பல்லை மினக்கி குளிச்சுப் போட்டு வா ஃகபே பொடிறன் " என்று நான் சொல்லி விட்டு ஃகபே போட ஆயுத்தப்படுத்தினேன் . அவன் பல்லை மினுக்கி குளித்து விட்டு வந்தான் . எனது ஃகபேயை மணந்தவாறே தான் வாங்கி வந்த குறசோன்களை எடுத்து வெளியே வைத்தான் . குறசோன்களின் வாசம் மூக்கைத் துளைத்து எனக்கும் ஃகபே குடிக்கவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது .

இருவரும் ஃகபேயை ஊற்றிக்கொண்டு சிகரட்டையும் எடுத்துக் கொண்டு மீண்டும் பல்கணிக்கு வந்தோம் . "என்ன மச்சான் நித்திரையால எழுப்பி போட்டனே " ? " இண்டைக்கு உனக்கு லீவு தானே? மற்றது நான் இங்கை ரெண்டு நாள் நிக்கவேணுமடாப்பா . உன்ரை றூமை நல்ல திறமாய்த் தான் வைச்சிருக்கிறாய் எனக்கு உப்புடியெல்லாம் பொறுமை இல்லை " என்று சொல்லியவாறே எனக்கு சிகரட்டைப் பற்றவைத்தான் குகன் . நான் சிரித்துக் கொண்டேன் . " அதுசரி ஏன்ராப்பா இருந்தாப்போலை இங்கை வந்தனி "? குகன் சொல்லத் தொடங்கினான்

விளக்கம் :

* குறசோன் ( காலையில் சாப்பிடும் ஒருவகை பன் . சரியான தமிழ் உருவகம் மூன்றாம்பிறை . வடிவத்தால் அந்த உருவகம் வந்தது ) .

** கார் து லியோன் ( பாரிசின் பிரதான வெளியூர் சேவைகளை மேற்கொள்ளும் முக்கிய புகையிர நிலையம் ) .

தொடரும்

Edited by கோமகன்

  • Replies 64
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திருப்பம் வர ஒரு செக்கனுக்கு முதல் முடித்த மாதிரி இருக்கின்றது கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கோமகன் எழுத்துக்களை இவ்வளவு நெருக்கமாக எழுதி இருக்கிறீர்கள் இடைவெளி விடாமல்?...கதையை தொடருங்கோ சுவாரசியமாக இருக்கும் போல கிடக்கு...பிரான்சில் குரோசன்ஸ்,பிரென்ஞ் பாண் எல்லாம் சாப்பிட அந்த மாதிரி இருக்கும் இங்கே அவ்வளவு சுவையாக இருக்காது :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன் அண்ணா பொறுத்த கட்டத்திலை நிப்பாட்டி போட்டியள். கெதியா மிச்சத்தையும் எழுதிபோடுங்கோ. :)

ஏன் கோமகன் எழுத்துக்களை இவ்வளவு நெருக்கமாக எழுதி இருக்கிறீர்கள் இடைவெளி விடாமல்?...கதையை தொடருங்கோ சுவாரசியமாக இருக்கும் போல கிடக்கு...பிரான்சில் குரோசன்ஸ்,பிரென்ஞ் பாண் எல்லாம் சாப்பிட அந்த மாதிரி இருக்கும் இங்கே அவ்வளவு சுவையாக இருக்காது :)

:unsure: :unsure:

நான் அங்கை சாப்பிட்ட புரோச்சின்(Brötchen) மறக்க முடியாது.

நல்ல காலம் பல்லு பறந்திருக்கும்.. :rolleyes::lol:

கோ... மீண்டும் தொடர் எழுத தொடங்கியிருக்கிறியள். நீங்கள் என்னை மாதிரி இல்லை. :D

எப்பிடியெண்டாலும் முடிச்சுப்போடுவியள். :D

நெருடிய நெருஞ்சியில ஊர்முள்ளுக் குத்திச்சு. இதில புலம்பெயர் தேசத்து முள் குத்தும்போல கிடக்கு. :o:rolleyes:

பொறுத்திருந்து பாப்பம்.

வாழ்த்துக்கள் தொடருங்கள். :)

பந்தி பிரித்து எழுதினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.(எத்தினதரம் சொன்னாலும்... அடம்பிடிக்கிறியளே! :lol: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவிலயும் உந்த குரோசன் இருக்கு.....சாப்பிட நல்லாத்தான் இருக்கும்....கபே குடிச்சுப்போட்டு மிச்சத்தை தொடருங்கோ.....

நல்ல ஆரம்பம் கோமகன். தொடருங்கள். நெருஞ்சி எப்படி ஒரு நினைவில் அகலாத பதிவாகியதோ, இதுவும் அது போல் ஆகும் என்று நினைக்கிறேன்.

ரதி - delice de france - என்று ஒரு நிறுவனம் தயாரித்து சில கடைகளுக்கு விற்பார்கள். அவை நன்றாக இருக்கும்.

  • தொடங்கியவர்

திருப்பம் வர ஒரு செக்கனுக்கு முதல் முடித்த மாதிரி இருக்கின்றது கோமகன்.

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் கிருபன் . உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

ஏன் கோமகன் எழுத்துக்களை இவ்வளவு நெருக்கமாக எழுதி இருக்கிறீர்கள் இடைவெளி விடாமல்?...கதையை தொடருங்கோ சுவாரசியமாக இருக்கும் போல கிடக்கு...பிரான்சில் குரோசன்ஸ்,பிரென்ஞ் பாண் எல்லாம் சாப்பிட அந்த மாதிரி இருக்கும் இங்கே அவ்வளவு சுவையாக இருக்காது :)

திருத்தி விட்டிருக்கிறன் . பிறான்ஸ்சில எப்ப குறசோன்ஸ் பாண் எல்லாம் சாப்பிட்டியள் ? விளப்பமாய் சொன்னால்தானே எங்களுக்கு சந்தோசமாய் இருக்கும் . உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றிகள் அக்கை .

  • கருத்துக்கள உறவுகள்

மிக அழகாக வாசிக்கும் ஆவலைத்தூண்டும் வகையில் அழகாக உவமானங்களைப் போட்டு எழுதி இருக்கிறீர்கள்...மிக நன்றாக இருக்கிறது கோமகன் அண்ணா...இது கதையின் தொடக்கம் மட்டுமே..இன்னும் நீங்கள் கதையின் இரண்டு முக்கியமான கட்டங்களை எழுத வேண்டும்...ஒன்று கதை என்ன என்பதைப் புரியவைக்கும் நடுப்பகுதி, மற்றையது இதுவரை வாசிச்சதுக்குரிய அர்த்தத்தை அப்படியே பளிச்சென்று புரியவைக்கும்,ஏதாவது செய்தியையும் கொடுக்கும் கதையின் இறுதிப்பாகம்..இவை இரண்டையும் அழகாக எழுதுவீர்களானால் உண்மையிலேயே இது மிக அழகான ஒரு சிறுகதையாக வரும்....கதையை ஒருவர் இன்னொருவருக்கு சொல்லுவதுபோல் வெறும் அலட்டலாக எழுதினால் வாசிக்க விசராகவும் வெறும் அலட்டலாகவும் இருக்கும்...நீங்கள் ஆரம்பித்திருப்பதுபோல் அழகாக சுவாரசியமாக் எழுதவேண்டும்..எழுதிவிட்டு உடனே யாழில் போடாமல் ஒருமுறை வாசகனாக இருந்து வாசிச்சுப் பாருங்கள் அப்பொழுது தெரியும் நாம் விட்டதவறுகள் மற்றும் அலட்டலகள்...சப்பென்று முடிக்காமல் தொடருங்கள்...நன்றி...

உங்கள் நட்பு அனுபவத்தை தொடருங்கள் .......ஆரம்பமே ஒரு நாவல் வாசிப்பது போல் பிரமையை ஏற்படுத்தியுள்ளது .அதுவும் உற்ற நண்பனுடன் சேர்ந்து சிகரட் குடிப்பதிலும் ஓர் சுகம்..............

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரம்பம்.. தொடருங்கள் கோமகன்.. :D

Croissant.jpg

:D

  • தொடங்கியவர்

கோமகன் அண்ணா பொறுத்த கட்டத்திலை நிப்பாட்டி போட்டியள். கெதியா மிச்சத்தையும் எழுதிபோடுங்கோ. :)

:unsure: :unsure:

நான் அங்கை சாப்பிட்ட புரோச்சின்(Brötchen) மறக்க முடியாது.

நல்ல காலம் பல்லு பறந்திருக்கும்.. :rolleyes::lol:

இந்த புறோச்சினை எங்கை ராசா சாப்பிட்டியள் ? ஒரே குழப்பமாய் இருக்கே ........ ஜேர்மனியிலதான் புறோச்சின் அந்தமாதிரி இருக்கும் . உங்கள் கருத்துக்கு நன்றிகள் ஜீவா .

  • தொடங்கியவர்

கோ... மீண்டும் தொடர் எழுத தொடங்கியிருக்கிறியள். நீங்கள் என்னை மாதிரி இல்லை. :D

எப்பிடியெண்டாலும் முடிச்சுப்போடுவியள். :D

நெருடிய நெருஞ்சியில ஊர்முள்ளுக் குத்திச்சு. இதில புலம்பெயர் தேசத்து முள் குத்தும்போல கிடக்கு. :o:rolleyes:

பொறுத்திருந்து பாப்பம்.

வாழ்த்துக்கள் தொடருங்கள். :)

பந்தி பிரித்து எழுதினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.(எத்தினதரம் சொன்னாலும்... அடம்பிடிக்கிறியளே! :lol: )

ஆர்வக்கோளாறினாலேயே நீங்கள் சொன்ன " பந்தி பிரித்தல் " தவறுகள் வருகின்றது . இனி இப்படியான தவறுகள் வராது கவிதை . அடிப்படையில் இரண்டுமே முட்கள்தான் . இந்த முள்ளு வீரியமா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும் .

நல்ல எழுத்து நடை. மிகுதி பகுதியையும் விரைவாக எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

மிக அழகாக வாசிக்கும் ஆவலைத்தூண்டும் வகையில் அழகாக உவமானங்களைப் போட்டு எழுதி இருக்கிறீர்கள்...மிக நன்றாக இருக்கிறது கோமகன் அண்ணா...இது கதையின் தொடக்கம் மட்டுமே..இன்னும் நீங்கள் கதையின் இரண்டு முக்கியமான கட்டங்களை எழுத வேண்டும்...ஒன்று கதை என்ன என்பதைப் புரியவைக்கும் நடுப்பகுதி, மற்றையது இதுவரை வாசிச்சதுக்குரிய அர்த்தத்தை அப்படியே பளிச்சென்று புரியவைக்கும்,ஏதாவது செய்தியையும் கொடுக்கும் கதையின் இறுதிப்பாகம்..இவை இரண்டையும் அழகாக எழுதுவீர்களானால் உண்மையிலேயே இது மிக அழகான ஒரு சிறுகதையாக வரும்....கதையை ஒருவர் இன்னொருவருக்கு சொல்லுவதுபோல் வெறும் அலட்டலாக எழுதினால் வாசிக்க விசராகவும் வெறும் அலட்டலாகவும் இருக்கும்...நீங்கள் ஆரம்பித்திருப்பதுபோல் அழகாக சுவாரசியமாக் எழுதவேண்டும்..எழுதிவிட்டு உடனே யாழில் போடாமல் ஒருமுறை வாசகனாக இருந்து வாசிச்சுப் பாருங்கள் அப்பொழுது தெரியும் நாம் விட்டதவறுகள் மற்றும் அலட்டலகள்...சப்பென்று முடிக்காமல் தொடருங்கள்...நன்றி...

உங்கள் விருப்பப்படியே மனதில் கொண்டு அடுத்த பாகத்தை விடுகின்றேன் சுபேஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாட்டில் இவ்வுணவை "(க்)குறைசென்ட்" என அழைப்பார்கள். மிகவும் மிருதுவாக அனால் மொறுமொருவென, தேர்ந்தெடுத்த தயாரிப்பு அன்றேல் மிகவும் விசேடமான காப்பிக் கடைகளில் வாங்கி காப்பியுடன் பகிர்ந்தால் மனதிற்கு இதமாக இருக்கும். கோமகன் தொடரவும்.

  • தொடங்கியவர்

கருத்துக்களைப் பகிர்ந்த லியோ , புத்தன் , ஈஸ் , தமிழ் சூரியன் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் . உங்கள் எதிர்பார்ப்புகள் வீண்போகாது

  • தொடங்கியவர்

நல்ல ஆரம்பம்.. தொடருங்கள் கோமகன்.. :D

Croissant.jpg

:D

தொடருவம் . நெடுகத்தான் என்னோடை குசும்பு டங்குவிற்கு . மிக்க நன்றிகள் உங்கள் கருத்திற்கு .

நேரத்தை ஒதுக்கிய எழுஞாயிறு , குளக்காட்டானிற்கு மிக்க நன்றிகள் .

கோ தொடருங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

கோ எங்கயப்பா? தொடங்கி ஒரு கிழமையாச்சு துரையை காணேல்ல :unsure:

  • தொடங்கியவர்

கோ எங்கயப்பா? தொடங்கி ஒரு கிழமையாச்சு துரையை காணேல்ல :unsure:

எழுதி கை நோகுதப்பா போடிறன் தும்ஸ் .

  • தொடங்கியவர்

" மச்சான் என்னை றீ அப்பீலிலை கொமிசனுக்கு கூப்பிட்டிருக்கிறாங்கள் . நாளைக்கு வழக்கு . எனக்கெண்டால் இதில நம்பிக்கை இல்லாமல் கிடக்கு ஒஃபறாவிலை றிஜெக்ற் பண்ணினவங்கள் , இதில கிடைக்குமேயடாப்பா ? " என்று கவலையுடன் சொன்னவனை நான் இடைமறித்தேன் " நீ ஒண்டுக்கும் கவலைப்படாதை . கொஞ்சத்தாலை உன்ரை கேஸ் எழுதின பூபாலசிங்கத்தாரிட்டைப் போவம் . மற்றது உன்ரை லோயர் மிஷேல் பஸ்குவாக்கு போன் பண்ணி வழக்கை ஞாபகப்படுத்துவம் . பஸ்க்குவான்ரை வழக்குகள் பெரிசாய் தோக்கிறேலை ".என்று அவனை ஆறுதல் படுத்த முயன்றேன் .

குகனின் நெஞ்சு ஒப்பறேசன் லிபறேசனாலும் அதன் தொடர்சியான அன்னியப் படைகளின் அட்டூளியத்தினாலும் கனன்று கொண்டிருப்பதை அவன் முகம் எனக்குக் காட்டியது . குகன் வீட்டில் மூத்தவன் அவன் பின்பு தம்பி தங்கை என்று அளவான குடும்பம் . தந்தை தமிழ் ஆசிரியர் . தம்பி நாடு காக்கப் போனதால் யுத்தமும் அன்னியப்படையும் அவனது குடும்பத்தை சுனாமியாய் புரட்டிப் போட்டது . ஒரு நாள் வீதிச் சோதனையில் பெண்டருடன் கூனிக்குறுகி , தலையாட்டிகளின் முன்பு வேள்விக் கிடாயாக நின்றபொழுது , இவன் அப்பா கதைக்கப் போனதால் அவன் முன் சிங்களத்தின் கலாக்ஷ்னிக்கோவ் அவரை சல்லடைபோட்டு இரத்தக்குளியலாக்கியது . இதைப் மக்களுன் மக்களாகப் பார்த்துக் கொண்டிருந்த அவனது தம்பி அதே சிங்களக் கும்பலை வேறொரு இடத்தில் வைத்துக் கணக்குத் தீர்த்துக் கொண்டான் .

இதேவேளையில் சமாதானம் என்று சொல்லி சமாதனத்தைத் தொலைக்க அன்னியப்படைகள் தாயகத்தில் அப்பம் பிரிக்க அகலக் கலைப் பரப்பன . எங்களுடன் படித்த ரமேஸ் மூலம் மீண்டும் குகன் வீதியில் பெண்டருடன் படுக்கவைக்கப்பட்டான் . ரமேஸ் சித்தாந்தங்களால் இழுபட்டு அவனும் விடுதலயை அவனது வழியில் தேடினான் .

குகனுக்கும் ரமேசுக்கும் குகனது சரக்குப் பிரச்சனையில் றாட்டல் இருந்ததைக் குகன் எனக்கு கடிதம் மூலம் எழுதியிருந்தான் . நான் ரமேசுக்கு கடிதம் மூலம் சொன்ன எதுவுமே ரமேசுக்கு ஏறவில்லை . றமேசுக்கு எங்கள் பள்ளிக்கூட நட்புகள் பெரிதாகத் தெரியவில்லை . யுத்தம் சிறிய மன உணர்வுகளயே கூறபடுத்தி வெற்றி கண்டிருந்தது .

றமேஸ் சந்தர்ப்பத்தை அன்னியப்படைகள் மூலம் சரியாகக் குகனில் தீர்த்துக் கொண்டான் .குகனின் அம்மா குகன் தொலைந்தே விட்டான் என்ற நினப்பில் இருந்தபொழுது , குகன் புலி என்று எதுவுமே சரியாக நிரூபிக்கப்படாததால் படைமுகாமால் மூன்று மாதத் தொடர் போராட்டத்தால் விடுவிக்கப்பட்டான் . அப்பொழுது குகனால் சரிவர இயங்க முடியவில்லை . அன்னியப் படைமுகாம் அவனை உடல்ரீதியாக உருட்டிப் போட்டிருந்தது . பல மருத்துவ சிகிச்சைகளின் பின்பு , மனைவி , பிறந்த பிள்ளையை விட்டு விட்டு இங்கு என்னிடம் வந்து விட்டான் . அவனைப் பற்றி எனக்கு வேறு ஒரு திட்டம் இருந்ததால் , அதை அவனுக்கு வெளிக்காட்டது குசினியில் இருவருக்கும் ஃகபே எடுக்கப் போனேன் .

குகன் ரொயிலெற்ருக்குப் போய்விட்டுத் திரும்பவும் பல்கணிக்கு வந்தான் . இப்பொழுது பனிப்புகார் விலகி , நிலத்தில் வெளிச்சத்திற்கும் இருளிற்கும் நடந்த ஊடலில் இருள் வெளிச்சத்தை விட்டுக் கொடுத்தது . காலை 7 மணியாகி இருந்தது . பல்கணிக்கு முன்னே இருந்த நடைபாதையில் ஓரிரு கால் தடங்களுடன் பனி வெண்மையாகப் பரவி இருந்தது . அந்தக் காலை வேளையில் சிறு குழந்தைகள் தங்களுக்குள் பனியை உருட்டி எறிந்து விளையாடிக்கொண்டு , அம்மா அல்லது அப்பாவுடன் பள்ளிக்கூடம் சென்றார்கள் . சில கறுவல் குழந்தைகள் நித்திரைக் கலக்கத்துடன் பள்ளிக்கூடத்திற்கு இழுபட்டன . நாங்கள் ஃகபேயைப் பருகியவாறே அவர்களை விடுப்புப் பார்த்தோம். குகன் எனது மௌனத்தைக் கலைத்தான் " என்னமச்சான் எங்கடை கலட்டி பள்ளிக்கூடப் பக்கம் நிக்கிறாய் போலக் கிடக்கு " ? நான் கெக்கட்டம் விட்டுச் சிரித்தேன் . " எல்லாருக்கும் சின்னவயசுப் பள்ளிக்கூடந்தான்ராப்பா அழியாத நினைவுகள் . நீ அதே குறும்போடை அப்பிடியே இருக்கிறாயடாப்பா . " எனக்கு இந்தப் பகிடிக் குணமும் இல்லாட்டி எப்பவோ செத்திருப்பன் " என்ற குகனின் முகம் இறுகியது .

நாங்கள் இருவரும் பூபலசிங்கத்தார் வீட்டிற்குப் போய் வழக்கு விபரங்களை அவரிடம் கதைக்கும்பொழுது பூபலசிங்கத்தார் , " குகனின் வழக்கு பலகீனமாக இருப்பதாகவும் , புலியாலையும் கூடப் பிரச்னை எண்டு இதில சேர்த்தால் வழக்கை வெல்லலாம் " எண்டு அபிப்பிராயப்பட்டார் . குகனினின் முகமாற்றத்தை அவதானித்த நான் " பூபாலசிங்கத்தார் அப்படியெல்லாம் செய்யவேண்டாம் . புலியாலை குகனுக்கு ஒருபிரச்சனையும் இல்லை . இப்பிடித்தான் வழக்கு இருக்கவேணும் எந்த மாற்றமும் இருக்கபடாது " . என்று முடிவாகவே சொன்னேன் .

நாங்கள் எங்கள் அலுவல்களை விரைவாக முடித்துக் கொண்டு வரும் வழியில் மாலா கடையில் மரக்கறியும் , வெல் வீலில் (Belle ville ) குசனின் இறைச்சிக்கடையில் மாட்டிறச்சியும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினோம் . நான் சமைக்கும் பொழுது குகன் எனக்கு உதவியாக மரக்கறியை வெட்டிக் கொண்டு பழைய கதையள் பம்பலடித்துக் கொண்டிருந்தான் . எனது மண்டையோ வேறு ஒரு திட்டத்தில் பாய்ந்து கொண்டு அவனது பம்பலுக்கு " உம் " கொட்டிக் கொண்டிருந்தது .

எனது முகமாற்றங்களைக் கவனித்த குகன் " என்னடா மச்சான் உனக்குப் பிரச்சனை " என்று என்னை வெட்டினான் . நான் சிரித்தவாறே " இல்லையடாப்பா என்ரை கனடாவில இருக்கிற சகோதரம் தன்னட்டை வரச்சொல்லி ஒரே அரையண்டம் . ஒரு ஏஜென்சியிட்டைக் கதைச்சனான் . அவன் என்னை றோமிலை வைச்சு புத்தகம் மாத்தி அனுப்பி விடுறானாம். நானும் ஓம் சொல்லிப்போட்டன் . உனக்கு தப்பித் தவறி கொமிசனில வழக்குப் பிழைச்சால் , நீ என்ரை றெசிடன்ஸ் மட்டையை வைச்சிரு . நான் றோமில இருந்து உனக்கு அனுப்பி விடுறன் " .என்று எனது திட்டத்தைச் சொன்னேன் .

நான் சொன்னதை வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தவன் ." மச்சான் உதிலை ஏதாவது வில்லங்ம் வராதே " ?என்றான் . " இல்லையடாப்பா நான் கனடாக்குப் போடுவன் . நான் தான் " நீ " பேந்தென்ன ? நீயா வில்லங்கங்களுக்கு போகாதவரைக்கும் , பொலிஸ் உன்ரை மட்டையை செக் பண்ணினாலும் மட்டை ஒறிஜினல் தான் . அதோடை உன்ரை முகமும் என்ரை முகமும் கிட்ட முட்ட ஒண்டு ". குகன் சமாதனமடைந்தவனாக " சரியடாப்பா நீ சொல்லுறதைக் கேக்கிறன் " என்றான் .

நாங்கள் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் நித்திரை அடித்து விட்டு பின்னேரம் கூட்டுகளைச் சந்திக்க மாலா கடையடிக்குப் போனோம் . மாலா கடைக்குப் பக்கத்திலிருந்த பாரில் , எனக்கு கபேயும் குகனுக்கு தெமியும் சொல்லிவிட்டு போளை அடித்தோம் . குகன் போளை அடிப்பதில் விண்ணன் . நான் அவனிடம் கூடத் தோற்றுத் தான் இருக்கிறன் . இரண்டு கைகளாலும் ஸ்ரைக்கரால் பல போளைகளை ஒரே நேரத்தில் விளையாடுவான் . நாங்கள் சுவாரசியமாக போளை அடித்துக் கொண்டிருந்த போது , எனது ஏஜென்சி பெடியன் என்னைச் சந்திக்க வந்தான் . என்னை இரண்டு நாளில் றோமிற்கு போக ஆயுத்தப்படுத்தும்படி சொன்னான் . நானும் குகனும் சிறிது நேரம் மாலா கடையடியில் நின்று பம்பல் அடித்த்து விட்டுக் குகன் மாலாகடையில் எடுத்த றெஸ்லிங் கொப்பியுடன் வீடு திரும்பினோம் .

இரவு பாகைமானி சைபருக்கும் கீழே இறங்கி 7 ஐத் தொட்டது . குகன் குஸ்குஸ் பொட்டுக்கொண்டிருந்தான் . நான் ரீவி யில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தேன் . செய்தியில் குளிரால் வாடிய பிச்சைக்காறர்களை செஞ்சிலுவைச் சங்கம் மீட்கப் போராடியது . அவர்களது அடிப்படைத் தேவைகள அரசுகள் பூர்த்தி செய்யாது , குளிர் நேரத்தில் மட்டும் இந்தப் பிச்சைக்காறர்கள் ஒரு நாள் ராசாவாக இருப்பார்கள் . அரசுகளும் அவர்களை சுமையாகவும் தங்களுக்கு கௌரவக்குறைச்சலான ஆட்களாகவும் பார்த்தது தான் என்னை உறுத்திய விடையம் .

மறுநாள் அதிகாலையே குகன் நித்திரையால் எழுந்து எனக்கும் சேர்த்துக் ஃகபே போட்டிருந்தான் . இருவரும் ஃகபேயைக் குடித்து விட்டு நான் வேலைக்கும் , குகன் கொமிசனுக்கும் போய்விட்டோம் . மாலை வீடு திரும்பிய குகனின் முகம் குழம்பிய நிலையிலேயே இருந்தது . விசாரித்தளவில் தன்னால் வழக்குப் பற்றி ஒரு முடிவிற்கும் வரமுடியாமல் இருப்பதாகச் சொன்னான் . நான் அவனை ஆறுதல் படுத்தி விட்டு றோமிற்குப் போக வேண்டிய ஆயத்தங்களைச் செய்தேன் . மறு நாள் மதியம் நாம் இருவரும் நெஞ்சு முட்டிய கவலைகளுடன் கார் து லியோனில் றோமிற்கும் , லியோனுக்குமாகப் பிரிந்தோம் .

விளக்கம் :

** பெல் வீல் = ஒரு தொடரூந்து நிலையம் .

***தெமி = காற்று அழுத்தத்துடன் கூடிய பியர் .

****கொமிசன் = புகலிடத்தஞ்சக் கோரிகையை மீளாய்வு செய்யும்அலுவலகம் .

***ஒஃபிறா = அகதி தஞ்சம் கோரும் அலுவலகம் .

***குசன் = அரபுக்கள் எபொழுதும் மச்சான் என்று அன்பாக உரிமையுடன் கூப்பிடுவார்கள் .

தொடரும்

Edited by கோமகன்

நிறுத்தாதீர்கள் கோ அண்ணா........காத்திருந்து தொடராக வாசிப்பதற்கு மனம் பொறுமைக்கு இடம் கொடுக்குதில்ல..............அந்தளவிற்கு ஆர்வமாக இருக்கிறது.உங்கள் உண்மைக்கதை. ஏனனில் புலம்பெயர் வாழ் எமது வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்து கொண்டிருக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளின் வடிவங்களில் ஒன்றாக உங்கள் அனுபவக்கதையும் அமைந்திருப்பதால் ஆர்வமாக வாசித்து முடிக்கவேணும் போல் தோன்றுகிறது.

கை வலிக்கிறது என்று எழுதியிருந்தீர்கள்.உண்மைதான் புரிகிறது. இந்த இடத்தில் எமக்கு ஒரு தொழில்நுட்பம் உண்மையாக தேவைப்படுகிறது. நாம் வாயால் பேசினால் மட்டும் போதும் அந்த வார்த்தைகளை கணணி எழுத்தாக[ஆங்கிலத்தில்] எழுதிவிடும். அந்த வசதி கொண்ட கணணி என்னிடம் இல்லை ஆனால் நான் பார்த்திருக்கிறேன்.இப்படிப்பட்ட கணணியை அதாவது நாம் பேசினால் எமது தமிழ் எழுதுருபை கொடுக்கும் கணணியை பயன்படுத்துவதே இதற்கு ஒரு வழி என்று நான் நினைக்கிறேன்.அப்படி வசதி கொண்ட கணணி இருக்கிறதா??? தெரிந்தால் கூறுங்கள் உறவுகளே ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.