Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிபிசி ராம்ராஜ், ஆனந்த சங்கரி மற்றும் நான் (சிறுகதை)

Featured Replies

#1 சபேசன் சபேசன்

Advanced Member

கருத்துக்கள உறவுகள்

2,132 posts

Gender:Male

Posted 19 November 2008 - 08:38 PM

நான் சொல்ல வருவதை சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக படைத்துறைரீதியில் செய்யப்பட்ட எதிர்வுகூறல்கள், ஆய்வுகள் சரியான முறையில் நடக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறிலங்காப் படையினர் வன்னி மீதான படை நடவடிக்கையை ஆரம்பித்த பொழுது, அவர்கள் பூநகரி வரை வருவார்கள் என்று எம்மில் எத்தனை பேர் எதிர்பார்த்தோம்?

கிழக்கை சிறிலங்காப் படையினர் கைப்பற்றுவார்கள் என்பதை ஒரு சிலர் எதிர்பார்த்திருந்தோம். (அதைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களும் இருந்தார்கள்). ஆனால் வன்னியின் நிலைமை இப்படி வரும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.

இத்தனைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரன் அவர்கள் ஒரு உரையின் போது இப்படிக் குறிப்பிட்டார். "வன்னி முழுவதும் படையினர் வந்தாலும் போர் நடக்கும்". (இந்த உரையை தேடிப் பார்த்தேன். என்னால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. கிடைத்ததும் தருகிறேன்)

ஆனால் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாம் இதற்கு தயாராக இருக்கின்றோமா?

வன்னி முழுவதும் படையினர் வந்தாலும், போராட்டத்தை நாம் தொடர்வோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோமா?

இன்றைக்கும் விடுதலைப் புலிகள் ஒரு பாய்ச்சல் நடத்தி இழந்த பகுதிகளை உடனடியாக மீட்டு எடுப்பார்கள் என்பதைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம். படையினரை விடுதலைப் புலிகளே உள்ளே இழுக்கின்றார்கள் என்றும், அவர்களை அழித்து ஒழிக்கப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே நாம் இருக்கின்றோம்.

எமக்கு எது இனிப்பாக இருக்கிறதோ, அதை மட்டுமே பேசுகிறோம்.

விடுதலைப் புலிகள் வன்னியில் நின்றுதான் போராட வேண்டுமா? இன்றைக்கு இருக்கின்ற ஆட்பலத்தை வைத்துக் கொண்டு இலங்கை முழுவதும் கரந்தடிப் போரை நடத்தினாலும், போராட்டம் முன்னோக்கி நகரத்தானே செய்யும்

இப்படியான ஒரு நிலையில் எமது புலம்பெயர்ந்த மக்கள் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார்களா?

அன்று விசுகு அண்ணா கூறிய பதிலே இன்று நானும் கூறுகிறேன். அதைத்தானே புலம்பெயர் நாம் உறுதியாக செய்துகொண்டிருக்கிறோம் .....................பிறகு ஏன்தான் குழப்பும் வகையான கட்டுரைகளையும், சிறுகதைகளையும் இணைக்கிறீர்கள்.

...நீங்கள் இந்தப்பார்வை எழுதும்போது ... அடி மனதில் உள்ள உண்மையை,உணர்வை அப்படியே எழதியிருந்தால், உண்மையான பார்வையை பார்த்திருந்தால் , அந்தக்கருத்திலே உறுதியாக இருந்திருந்தால் ,இன்று இப்படி ஒரு இன்றைய சூழலில் ஓமருக்கும் உதவாத ஒரு சிறு கதையை எழுதியருக்க மாட்டீர்கள் என்பதே என் கருத்து

Edited by தமிழ்சூரியன்

  • Replies 137
  • Views 12.2k
  • Created
  • Last Reply

இணையத்தில் எழுதாமல் நாவலாய் எழுதியிருந்தால் சிறு குழந்தைகள் கிழித்து விளையாட கொடுத்திருக்கலாம். :lol: :lol: :icon_idea:

- தவறாக எழுதிய கருத்து திருத்தப்பட்டுள்ளது -

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்போரோடு ஒன்றாக நின்றவர்களுக்கு

எது நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில்லை

எதை நாம் அடைய வேண்டும் என்ற இலக்கே இருந்தது.

எவ்வளவு தான் வலிகள் வந்தாலும் பாதை அதை அடைவதை மட்டுமே குறிக்கோளாக இருந்தது.

இதில் தலைவர் தளபதிகள் போராளிகள் மக்கள் என்ற பாகுபாடு இருக்கவில்லை.

தற்போது தோல்வி வந்துள்ளநிலையில் (விடுதலைப்புலிகளுக்கு)

அதனுடன் நின்றோர் சிலர் தாம் தம்மை விடுவித்துக்கொள்வதற்காக புலிகள் ஏமாந்துவிட்டார்கள் என்கின்றனர்.

அவர்களுக்கு கண்ணுக்கு தெரியவில்லை என்கின்றனர். இது மிகவும் தவறான விளக்கம்.

குறிக்கோளே வழி காட்டியது என்பதே உண்மை.

அந்தக்குறிக்கோளில் முன்னுக்குத்தான் வந்துள்ளோம். அதுவும் உண்மை.

இந்த புத்திசாலிகளும் ஓணான்களும் தலைவர் இவ்வளவு தீர்க்கதரசியா என வியக்கும் காலம் தூரமில்லை.

(முள்ளிவாய்க்கால் இழப்பு என்பதும் எதிர்பார்க்கப்பட்டதா என்றால் இந்தளவுக்கு உலகம் விடாது என்பதற்கே கடற்கரை தெரிவு செய்யப்பட்டது)

புலிகளை அழிக்கும் திட்டத்தில் சங்கரியும்,ராம்ராஜ்யூம் பங்காளிகள்...கடைசியில் சபேசனும் தன்ட பிழையை சரிக்கட்ட் இணையத்தில் எழுதிக் கொண்டு இருந்த போராளி மீது பழியை போட்டுட்டார்

:lol: :lol:

  • தொடங்கியவர்

அன்றைக்கு வன்னி முழுவதும் இராணுவத்தின் பிடிக்குள் வந்து விடும், விடுதலைப் புலிகள் கரந்தடி முறைக்கு போக வேண்டி வரும் என்று எழுதியதற்கு வந்த கண்டனங்கள் அதிகம்.

கிளிநொச்சி விழாத ஒரு நிலையில் இப்படி எழுதுவதே பெரும் பாவமாகத்தான் பார்க்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட நடேசன் அவர்கள் குமுதத்திற்கு "இராணுவம் களைத்து விட்டது, நாங்கள் நடந்து போய் அவர்களை துரத்துகின்ற நிலையில்தான் இருக்கின்றோம்" என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

வன்னி முழுவதும் பறிபோகப் போகிறது என்கின்ற என்னுடைய எதிர்வுகூறலைக் கூட மிகவும் தயங்கித் தயங்கி யாழ் களத்தில்தான் நடத்தியருந்தேன். அதுவும் ஒரு விவாதமாக. வேறு பத்திரிகைகளில் எழுதவில்லை. எழுதினால் பிரசுரிக்கப்படாது என்பது வேறு விடயம்.

ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய பெரும்பாலானாவர்கள் வன்னிக்கு தொடர்பு கொண்டு பேசி விட்டுத்தான் எழுதுவார்கள். விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் "திருப்பி அடிப்போம்" என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு எதிராக எழுத முடியாது. அப்ப எழுதுவது என்றால் தேனியிலும் ரிபிசியிலும்தான் எழுத வேண்டி வந்திருக்கும்.

  • தொடங்கியவர்

யாழ் களத்திலும் „சமாதானம்“ என்ற பெயரில் ஒருவர் நடக்கப் போகும் அழிவுகள் பற்றி எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார். அவரையும் நாங்கள் ஒரு துரோகியாகத்தான் பார்த்தோம்.

கொஞ்சமாவது நாங்கள் எப்படி நடந்து கொண்டோம் என்று சிந்தித்துப் பாக்க வேண்டும். எப்பொழுதும் எங்களுக்கு பழியைப் போடுவதற்கு சிலர் தேவைப்படுவார்கள். இப்பொழுது ஆய்வுக் கட்டுரை எழுதியவர்கள் மீது பாய்ந்து கொண்டிருக்கிறோம்.

உண்மையை சொல்லுங்கள்! „விடுதலைப் புலிகள் போகின்ற வழி பெரும் அழிவைத் தரும், மக்கள் சாவார்கள், போராளிகள் கையேந்தும் நிலை வரும், தலைவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் போகும்“ என்றெல்லாம் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தால் நீங்கள் என்னை என்ன செய்திருப்பீர்கள்?

  • தொடங்கியவர்

மன்னிக்கவும் விசுகு! அங்கே .................... இருக்க, நான் இது எல்லாம் தலைவரின் தீர்க்க தரிசனம் என்று எழுத முடியாது. திருந்த விட மாட்டீர்கள் போலிருக்கறதே!!

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைக்கு வன்னி முழுவதும் இராணுவத்தின் பிடிக்குள் வந்து விடும், விடுதலைப் புலிகள் கரந்தடி முறைக்கு போக வேண்டி வரும் என்று எழுதியதற்கு வந்த கண்டனங்கள் அதிகம்.

கரந்தடி யுத்தத்துக்கு தயாராக வேவண்டுமென்பதை எங்கடை ஆய்வாளர்கள் சொல்ல முதல் 2004இல் சில தளபதிகள் எதிர்வுகூறிவிட்டனர். வன்னிக்குள்ளிருந்து நாங்கள் தோற்றகமாட்டோம் என்று சொல்லிக்கொண்டிருந்த நிலாந்தன் 2004 என நினைவு யதார்த்தங்களை எழுதப்போய் ஈழநாதம் பதத்திரிகையில் நிலாந்தனின் யதார்த்தம் தவிர்க்கப்பட வேண்டுமென வேண்டப்பட்டு அத்தோடு நிலாந்தன் எழுதும் எழுத்துக்கள் வெளிவரவாது போனது. அதுபோல திரு.பாலகுமாரன் அவர்கள் நேருக்கு நேர் சண்டையைவிடுத்து அரசியல் போர்தான் முடிவென்று உரைக்கப்போய் தோற்று தனது கடைசி காலங்களை விவாசாயத்தோடும் விரக்தியோடும் கழித்தது நிசம். இப்படி உணர்ந்திருந்தும் ஒரு வல்லமையோடும் நம்பிக்கையோடும் போராடியவர்கள் புலிகள்.

Edited by shanthy

இதைப்பார்த்தபோது நீங்கள் சொல்லித்தான் அவர் எழுதியது போலும்

எனவே ரிபிசி ராம்ராஜ், ஆனந்த சங்கரி போன்றவர்களின் வழிகாட்டுதலை எம்மக்கள் பின் பற்றவேண்டும் பின் பற்றியிருக்கணும் என்ற கருத்தை நீங்களும் ஏற்று அதை தங்கள் நண்பர்ககளுக்கும் அறறிமுகப்படுத்தியது போலிருந்தது.

இது உண்மையென்றால்

நான் தங்கள் மீதான தவறான பார்வையை மாற்றுகின்றேன்....???

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடாதீர்கள் விசுகர் . கருத்து இலக்கம் 3 சபேசன் எனக்கு தந்த பதிலைப் பாருங்கள் விசுகர் . வடிவாக வாசித்துத்தான் எனக்கு கருத்து எழுதுகின்றீர்களா என்ன ? நான் சொல்லி சபேசன் எழுத , சபேசன் ஒன்றும் விரல்சூப்பி இல்லை . பிரச்சனை , நான் சபேசனுக்கு பச்சை குத்தியதிற்கு நீங்கள் நக்கல் நளினக் கருத்து எழுதியது . எனக்கான கருத்துச் சுதந்திரத்தை தீர்மானிப்பது நனே ஒழிய நீங்கள் இல்லை . ஒரு கள உறவின் படைப்புகளை விரும்புவது விரும்பாமல் விடுவது ஒவ்வொருவரின் தனி சுதந்திரம் . எனது கேள்வி , ஒருவரது கருத்து சுதந்திரத்தில் உங்களது அத்துமீறிய நுளைவை இட்டதே ஒழிய உங்கள் கற்பனை கதைகளைப்பற்றியதல்ல . உங்களுக்குப் பிடிக்காவிட்டால் உங்களுக்கு நிர்வாகம் தந்த சிவப்பு புள்ளி முறையை பாவித்திருக்க வேண்டும் . அதை விடுத்து என்னை கருத்துக் களத்தில் நக்கல் நளினம் அடிப்பதை இன்றுடன் நிறுத்துங்கள் .

நன்றி வணக்கம் .

Edited by கோமகன்

எப்பொழுதும் எங்களுக்கு பழியைப் போடுவதற்கு சிலர் தேவைப்படுவார்கள்.

ஓம் அண்ணா, பாவம் அந்த போராளி. நீங்கள் பழியை போடுறதுக்கு அவர் மாட்டுப்பட்டிட்டார். அதுவும் போர் முடிந்து 3 வருடங்கள் கழிந்த நிலையில்.

உண்மையை சொல்லுங்கள்! „விடுதலைப் புலிகள் போகின்ற வழி பெரும் அழிவைத் தரும், மக்கள் சாவார்கள், போராளிகள் கையேந்தும் நிலை வரும், தலைவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் போகும்“ என்றெல்லாம் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தால் நீங்கள் என்னை என்ன செய்திருப்பீர்கள்?

உங்களுக்கு தெரிந்திருந்தால் தானே எழுதியிருப்பீர்கள்??? :lol:

இதெல்லாம் எனக்கு முதலே தெரியும் என்று சொன்னாலும் சொல்லிப்போடுவியள். :D

உரிய நேரத்தில் எழுதி போட்டு என்ன நடந்தாலும் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். அப்ப எழுதாமல் விட்டிட்டு இப்ப சம்பந்தமிலாமல் பல திரிகளை தொடங்கிறீர்கள். <_<

இங்கு நாங்கள் என்ன சொல்வோமென்று பயப்பட்டு எமக்காக உங்கள் கருத்தை மாற்றுபவர் என்றால் உங்களிடம் எப்படி நியாயமான கருத்துகளை எதிர்பார்க்க முடியும். :wub:

இப்பொழுது ஆய்வுக் கட்டுரை எழுதியவர்கள் மீது பாய்ந்து கொண்டிருக்கிறோம்.

எப்பொழுதும் வெற்றியின் பக்கம் மாற்றமடையும் உங்கள் எழுத்துகளை பார்த்து பாராட்ட சொல்கிறீர்களா? இப்ப தான் தெரியுது நீங்கள் ஏன் முஸ்லிம்களுக்கு ஒரு திரி தொடங்கினியள் என்று :D. அவர்களில் பெரும்பாலானோரின் குணமும் அதுதானே. (ஏனைய முஸ்லிம்கள் மன்னிச்சுக்கொள்ளுங்கப்பா :))

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லுங்கள்! „விடுதலைப் புலிகள் போகின்ற வழி பெரும் அழிவைத் தரும், மக்கள் சாவார்கள், போராளிகள் கையேந்தும் நிலை வரும், தலைவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் போகும்“ என்றெல்லாம் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தால் நீங்கள் என்னை என்ன செய்திருப்பீர்கள்?

சும்மா கதை விடாதீர்கள் சபேசன்

உங்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது

ஆனால் சொல்லமுடியவில்லை என்கிறீர்களா?

அப்படியாயின் தற்போதும் எவருக்காகவோ தான் எழுதுகின்றீர்கள். நீங்கள் சுய புத்தி அற்றவர் என்பது தான் பொருள்.

தெரிந்திருந்தும் இத்தனை இழப்புகளை பொருட்படுத்தாது குளிர் காய்ந்துள்ளீர்கள்.

நல்லா வாயில வருகுது...........

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன், மாவிலாற்றில் ஏன் சண்டை ஆரம்பித்தது ? மாவிலாற்றை பூட்டிய தளபதி யார் ?

சபேசன், மாவிலாற்றில் ஏன் சண்டை ஆரம்பித்தது ? மாவிலாற்றை பூட்டிய தளபதி யார் ?

நான் நினைக்கிறேன் இந்தத்திரி தொடர கொஞ்சம் நேரமெடுக்கும் ........

நன்றி அக்கா

சாத்திரி அவர்கள் அருளிய சமையல் ஆய்வுக்குறிப்பு.

நீங்களும் செய்து பாக்கலாம்

funny-dog-picture-dog-chef.jpg

நீங்களும் செய்து பாக்கலாம்

சாத்திரி(ஒரு பேப்பர்)

வணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன்.

சரி தயாரா??

தேவையான பொருட்கள்

1)கூகிழ் தேடி

2)விக்கி பீடியா தகவல்

3)கூகிழ் வரைபடம்

4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள்

5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. போன்றவற்ரை பாத்தாலே போதும்.)

6)ஒரு தமிழ் அகராதி

தயார்ப்படுத்த வேண்டியவை

1)முதலில் உங்கள் கணணி மற்றும் அச்சு இயந்திரத்தையும் இயக்கி சிறிது நேரம் சூடாக விடவும்.

2) கணணி சூடாகி விட்டதா?? இப்பொழுது தமிழ் நெற் அல்லது புதினம் பதிவு போன்ற செய்தித் தளங்களை திறந்து இன்றைய செய்திகளைப் படியுங்கள்.

3) இப்பொழுது ஏதோ ஒரு செய்தியைப் பார்த்ததும் உங்கள் மூளையில் ஒரு மின்குமிழ்(பல்ப்பு) விட்டு விட்டு எரியத் தொடங்கும்.(அது நிச்சயமாக ஒரு தாக்குதல் செய்தியாகத்தானிருக்கும்)

4)உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த அந்தச் செய்தியை ஒரு கடதாசியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.

இனி செய்முறை (இதுதான் சரியான கஸ்ரமானது எனவே எதைப்பற்றியும் யோசிக்காமல் செய்யவும்)

முதலில் சூடாகிய உங்கள் கணணியில் உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த செய்தி(உதாரணமாக கடைசியாக வவுனியா ஜோசப் படைமுகாம் மீதான விமானத்தாக்குதல்) நடந்த இடத்தின் ஊரின் பெயரை கூகிழ் வரை படத்தில் சிறிதளவு போடவும்.இப்பொழுது அது நன்றாக வந்து விட்டதா. அடுத்ததாக விக்கிபீடியாவி்ல் சிறிதளவு கலந்து மேலதிக மணம் குணம் நிறைந்த தவவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.அவை புலிகளின் விமானம் எப்படி எந்தப் பாதையால் வவுனியா வந்தடைந்தது என்பதனை விரிவாக சேர்க்க வரை படத்த்திலும் தேடலாம். அல்லது உங்களிற்கு ஊரில் பேருந்து நடத்துனராக அதாவது (பஸ் கொண்டக்டர்) இருந்த அனுபவம் போதும்.அதாவது சில ஊர்களின் பெயரை வரிசையாக போடவும்.உதாரணமாக யாழ்ப்பாணம். அஞ்சுசந்தி.ஆனைக்கோட்டை. மானிப்பாய்.சண்டிலிப்பாய்.சங்

கானை.சித்தங்கேணி.வடலியடைப்பு

.

பண்டத்தெரிப்பு.மாதகல் .சில்லாலை ஏறு எண்டு பஸ்கொண்டக்ரர் சொல்லுறமாதிரி .கிளிநெச்சியிலை இருந்து வவுனியா வரை படஉதவியுடன்.சில ஊர்களின்ரை பெயரை வரிசையாய் போடலாம்.இதில் தமிழ் அகராதியில் இருந்தும் சில சொற்களைச்சேர்த்து நன்றாகக் கலக்கவும்.அத்துடன் இந்தத் தாக்குதலிற்கு என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கும் என்று சில ஆயுதங்களின் பெயரும் சில இராணுவச் சொற்களையும் சேர்த்தால் சுவையை அதிகரிக்கலாம். இறுதியாக அடுத்த தாக்குதல் எங்கே எப்பொழுது நடக்கும் என்றொரு ஊகத்தினையும் மேலே தூவிவிடுங்கள். இப்பொழுது சுடச்சுட சுவையான சமையல் தயார். இதனை நீங்கள் அச்செடுத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இணையத்தளங்களிற்கும் பத்திரிகைகளிற்கும் பரிமாறலாம்.

ஜயையோ.......சத்தியமாய் நான் சமையல்குறிப்புத்தான் எழுதத் தொடங்கினனான். எழுதிமுடிச்சுப்போட்டு கடைசியாப்பாத்தால் அரசியல் இராணுவ ஆய்வு மாதிரி வந்திட்டுது.இப்ப எங்கடையாக்கள் பலர் அரசியல் இராணுவ ஆய்வு செய்யிறம் எண்டு எழுதிறது சமையல் குறிப்புகள் மாதிரி இருக்கிறதாலை அதுகளைப் படிச்சு குழம்பிப் போய் சமையல் குறிப்பு எழுத வந்த நானும் குழம்பி அரசியல் ஆய்வு செய்யிறதெப்பிடி எண்டு எழுதிப்போட்டன். சரி மினக்கெட்டு எழுதிப்போட்டன் இனி என்ன செய்யிறது படிக்கவேண்டியது உங்கடை தலைவிதி. அதனாலை இதையும் படியுங்கோ அடுத்த தடைவை உண்மையாவே கூழ் காச்சிறது எப்பிடியெண்டு செய்முறையோடை வாறன்.

http://www.yarl.com/...showtopic=44093

சம்பூரை நோக்கி பெரும் படை நடவடிக்கை நடந்து கொண்டிருந்தது. பல ஆயிரம் எறிகணைகள் ஒரே நேரத்தில் வந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த வாரத்திற்கான கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தேன்.

கிழக்கை இழக்க வேண்டி வரும் என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தொடர்ச்சியாக இல்லாமல் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களால் துண்டாடப்பட்டிருந்தன.

சம்பூரில் சபேசன் அவர்களின் சற்லைட் இயங்கிக்கொண்டிருந்ததா ? கதைவிடுவதற்கும் கெட்டித்தனம் வேணுமய்யா. :icon_idea:

Edited by DAM

ஆகா .....அரசியல் ஆய்வு = சமையல் குறிப்பு ............ரொம்பப்பொருத்தம் சார் ................. :D :D :icon_idea:

நீங்கள் கூழ் காய்ச்சுவது எப்படியென்று கூறத்தேவையில்லை .மேலுள்ள ஆய்வு போதும் சார் நன்றி

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்

விசுகு,

சாந்திக்கு அளித்த பதிலில் வன்னிப் போர் பற்றிய என்னுடைய கணிப்பு எப்படி இருந்தது என்பதை சொல்லியிருக்கிறேன். என்னால் முடிந்தளவு நேரடியாகவும், மற்றயைபடி சொற்களுக்கு இடையிலும் அதை நான் சொல்லி வந்திருக்கிறேன்.

ஆய்வுக் கட்டுரையில் நடந்து கொண்டிருக்கும் சண்டை பற்றி எழுதிக் கொண்டிருக்கின்ற பொழுது விடுதலைப் புலிகளிடம் செய்திகளை அறிந்து எழுதுவது தவிர்க்க முடியாதது. அவர்கள் சொல்வதற்கு விரோதமாக எழுதாமல் இருப்பது, போராட்டத்திற்கு செய்யும் ஒரு பங்களிப்பாகவே நான் கருதியிருந்தேன்.

சாந்தி,

எனக்கு பரிசோதனை வைக்கிறீர்கள் போல் இருக்கிறது. விடுதலைப் பலிகள் பூட்டினார்கள் என்பதுதான் எனக்கு தெரியும். இதற்காக அவர்கள் திறப்புவிழா போன்று ஒரு பூட்டு விழா நடத்தி அதை ஒரு தளபதி நடத்தி வைத்தார் என்பது எனக்குத் தெரியாது.

  • தொடங்கியவர்

சாத்திரி எழுதியதை ஏற்கனவே படித்திருக்கிறேன். சரியாகத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அவருடைய எழுத்தில் இருப்பது போன்று மிக இலகுவாக சமைக்கக் கூடிய விடயம் அல்ல ஆய்வு என்பது.

நான் முன்பு நடத்திக் கொண்டிருந்த சஞ்சிகையில் ஆய்வுகள் எழுதிக் கொண்டிருந்தேன். தொண்ணுறுகளின் மத்தி அது. இப்பொழுது போன்று இணையம், கூகிள் வசதி எல்லாம் அப்பொழுது இல்லை.

மாணலாறு மாவட்டத்தினை அடிப்படையாக வைத்து அதை எழுதிக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு ஒளிவீச்சு அல்லது தரிசனத்தில் பார்த்த காட்சி ஒன்று நினைவில் வந்தது. புலிகளின் தளபதி ஒருவர் ஒரு வரைபடத்தை வைத்து மணலாற்றில் இராணுவ முகாம்கள் எங்கே உள்ளது என்று விளங்கப்படுத்திக் கொண்டிருப்பார்.

அந்தக் கசற்றை எடுத்தேன். அந்தக் காட்சியை நிறுத்தி நிறுத்தி ஓட விட்டேன். வரையும் திறமை இருந்ததால் யாரிடமும் இல்லாத ஒரு வரைபடத்தை நான் உருவாக்கி முடித்தேன்.

அந்தச் சஞ்சிகை வெளிவந்த பொழுது இங்கே உள்ள பிரதிநிதிகள் இந்த வரைபடம் எனக்கு எப்படிக் கிடைத்தது என்றும் இந்த இராணுவ முகாம்கள் எல்லாம் இங்கே இருப்பது எனக்கு எப்படித் தெரியும் என்று விவாதித்ததாக அறிந்து கொண்டேன். சிறிலங்கா அரசிடம் பெற்றிருப்பேன் என்றும் அதில் யாரோ சொன்னாராம்.

Edited by சபேசன்

  • தொடங்கியவர்

வடக்கில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதை விமர்சித்து என்னுடைய சஞ்சிகையில் எழுதியதால் அன்றைக்கு அமைப்பினால் "விடுதலை விரோதி" என்கின்ற சிறப்புப் பட்டத்தை பெற்றிருந்த நேரம் அது என்பது இதில் சொல்ல வேண்டிய கூடுதல் தகவல். (பட்டம் வைப்பதிலும் வி, வி என்று மோனை வருவது போன்று வைத்து அப்பொழுது தமிழை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்)

சபேசன், மாவிலாற்றில் ஏன் சண்டை ஆரம்பித்தது ? மாவிலாற்றை பூட்டிய தளபதி யார் ?

உங்கள் கேள்விகளுக்கு இப்ப பதில் வராது. :lol: :lol:

மற்றைய திரிகளில் ஏனையவர்கள் கேள்வி கேட்டு காத்துக்கொண்டிருக்க அவற்றுக்கு பதிலளிக்காமல் இவர் வேற வேற திரி திறந்து என்னென்னமோ எல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறார். அந்த கேள்விகளுக்கே இவருக்கு யாரும் இன்னும் பதில் எழுதிக்கொடுக்கவில்லை போலிருக்கு. அப்பிடி இருக்க உங்கள் கேள்விக்கு இப்ப பதில் வராது. :lol: :lol:

அல்லது இங்கும் பல கேள்விக்கணைகள் பாயும் போது அதற்கு பதில் தெரியாமல் போகும் போது உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் வேறொரு திரி திறந்து போடுவார்... :lol::icon_idea:

  • தொடங்கியவர்

காதல்,

அங்கே பதில் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

முதல் மல்லையூரான் அண்ணாவின் கேள்விகளுக்கு பதிலளியுங்கோ. அவர் உங்களிடம் கேள்வி கேட்டது நேற்று 12 ஆம் திகதி 3.45 AM. நீங்கள் இந்த திரி தொடங்கியது அதே நாள் (நேற்று 12 ஆம் திகதி) 9.55 PM.

இதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.

http://www.yarl.com/...=80#entry768929

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் சபேசன் முந்தித் தான் புலிகள் இருந்தார்கள் புலிகள் சொன்னதாக சொல்லி அதற்கும் மேலாக உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று காட்ட மக்களை உசுப்பேத்திற மாதிரி கட்டுரை எல்லாம் எழுதினீர்கள் :D இப்பத் தான் எல்லாம் முடிஞ்சு போச்சே வன்னியில் இருக்கிற மக்கள் படுகின்ற கஸ்டங்களை கட்டுரையாக எழுதிறது :) அல்லது இப்பதைய சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி கட்டுரை எழுதுகிறது :) ...இப்பத் தான் குற்றம் சாட்டவோ,பழியைப் போடவோ யாருமே இல்லை :lol:

  • தொடங்கியவர்

அதை விட பொதுவாகவே திசை திருப்பும் கேள்விகளை நான் தவிர்ப்பதும் உண்டு. அதை விட எனக்கு சாந்தியின் கேள்வியில் உள்ள உள்அர்த்தம் புரியவும் இல்லை.

எனக்கு தெரியுமா என்று பொதுஅறிவு பரீட்சை வைக்கிறாரா? இதற்கு சீரியசாக பதில் சொல்வதா? அல்லது கிண்டல் அடிப்பதா? தவிர்த்து விட்டு விவாதத்தை தொடர்வதா? இப்படி நிறைய யோசித்துக் கொணடிருக்கிறேன்.

இதிலே ஒரு தகவல். அன்றைக்கு மாவிலாறை ஏன் பூட்டினார்கள் என்பதற்கு விடுதலைப் புலிகள் தரப்பு விளக்கத்தை திரு எழிலனிடம் பெற்று பதிவு செய்த முதலாவது இணையத் தளம் என்னுடையதுதான். அதை வைத்துத்தான் மற்றைய தளங்கள் பின்பு எழுதின.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிக்கோயினார் என்றொரு இனம் இருக்கு...அதன் குணம்குறிகள் யாருக்கும் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அதை விட பொதுவாகவே திசை திருப்பும் கேள்விகளை நான் தவிர்ப்பதும் உண்டு. அதை விட எனக்கு சாந்தியின் கேள்வியில் உள்ள உள்அர்த்தம் புரியவும் இல்லை.

எனக்கு தெரியுமா என்று பொதுஅறிவு பரீட்சை வைக்கிறாரா? இதற்கு சீரியசாக பதில் சொல்வதா? அல்லது கிண்டல் அடிப்பதா? தவிர்த்து விட்டு விவாதத்தை தொடர்வதா? இப்படி நிறைய யோசித்துக் கொணடிருக்கிறேன்.

இதிலே ஒரு தகவல். அன்றைக்கு மாவிலாறை ஏன் பூட்டினார்கள் என்பதற்கு விடுதலைப் புலிகள் தரப்பு விளக்கத்தை திரு எழிலனிடம் பெற்று பதிவு செய்த முதலாவது இணையத் தளம் என்னுடையதுதான். அதை வைத்துத்தான் மற்றைய தளங்கள் பின்பு எழுதின.

மாவிலாறை பூட்டிய நான்கு நாட்களின் பின்னர்தான் எழிலன் அங்கு மக்களுடன் சென்று நாங்கள்தான் மாவிலாறை பூட்டினோம் என்று போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு அறிவித்தார். மாவிலாறு பூட்டப்பட்ட செய்தியை தலைவர் அப்பொழுதுதான் அறிந்திருந்தார். அதன் பின்னரே அதன் விளைவுகளை நான் பொறுப்பெடுக்கிறேன் அதனை திறந்து விட்டு சண்டையை தொடருங்கள் என்று அறிவித்திருந்தார். இதனை சபேசனிற்கு தகவல் கொடுத்த அந்த திருகோணமலை போராளியும் தகவலாக கொடுத்திருப்பார் என நினை;கிறேன்.காரணம் அன்றைய காலகட்டத்தில் அரசியல் பிரிவு இராணுவபிரிவு மற்றும் புலனாய்வு பிரிவுகளிற்குள் விழுந்துவிட்ட பெரிய யார் பெரியவர் என்கிற மோதல். ஆளாளிற்கு எழுந்த அதிகார போட்டியை பாதுகாப்பு என்கிற காரணத்தால் பிரபாகரனும் முடக்கப்பட்டிருந்தார்

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.