Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த அரசின் ஆதரவில் நியூயோர்க் விளையாட்டுப் போட்டி

Featured Replies

  • Replies 120
  • Views 6.2k
  • Created
  • Last Reply

1989 களில் இந்தியப் படைகளின் கீழ் இயங்கிய ஒட்டுக்குழு உறுப்பினர்கள்.. விடுதலைப்புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட போலித் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பகரமான கருத்துக்களை பரவ விட்டிருந்தனர். அவர்களில் பலர் இன்று அசைலிகளாக உலகம் பூராவும் உள்ளனர்.

இவர்கள் இன்றைய எமது இனத்தின் பலவீனமான சூழலுக்குள்.. மீண்டும் எதிரிகளுக்கு சார்பாக இயங்கி எம்மை தொடர்ந்து பலவீனப்படுத்தும் கைங்கரியத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நெல்லையன்.. போன்றவர்கள்.. 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்.. எந்த ஒரு புலம்பெயர் அமைப்பும் பலம் பெறுவதை.. மக்கள் அதன் பின் அணிதிரள்வதை விரும்புவதில்லை. மாறாக.. எல்லா அமைப்புகள் மீது ஏதோ ஒரு வகையில்.. அவநம்பிக்கை ஏற்படுத்தும் கருத்துக்களை விதைத்து மக்களை ஒரு குழப்பகரமான.. எதிர்கால நம்பிக்கை அற்ற தளத்தில் நிறுத்தி வைக்க முயற்சிக்கின்றனர்.

இதன் மூலம்.. எமது இனத்தின் விடுதலை வேட்கையை அழித்துவிட நினைக்கும் எதிரிகளுக்கு இவர்கள் துணை நிற்கின்றனர்.

அந்த வகையில் இன்றைய இக்கட்டான.. இவர்களை தண்டிக்கவோ.. கேள்வி கேட்கவோ.. யாருமற்ற சூழலில்.. இப்படியான.. ஆதாரமற்ற.. புறணிகளை.. மக்கள் முன் வைப்பவர்களை இட்டு மக்கள் அவதானமாக இருப்பதோடு.. இவர்களை எடுத்த எடுப்பில்.. நம்புவதை நிறுத்தி.. உதாரணத்திற்கு.. நா.க.த.அ மீது ஒரு குற்றச்சாட்டு வந்தால்.. உடனே அந்த அமைப்பை தொடர்பு கொண்டு நிலைமைகளை விரிவாக விளக்கி.. உண்மை விபரங்களை மக்கள் அறிந்து கொண்டு.. சூழ்ச்சிக்காரர்களின் வலையில் வீழாது மக்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இன்று எதிரிகளால் பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் பணம் கொடுத்து வாங்கப்பட்ட.. மற்றும் பாரம்பரிய ஒட்டுக்குழு.. காட்டிக்கொடுப்பாளர்கள்.. பல வடிவங்களில் எமக்குள் ஊடுருவி உள்ளனர்.. என்பதை மக்கள் விளங்கிக் கொண்டு செயற்படுதல் அவசியம்..! இங்கு.. நெல்லையனின் செயற்பாடு அதற்கு நல்ல உதாரணமாக உள்ளது..! :icon_idea:

big_skelleton.gifbig_skelleton.gifbig_skelleton.gifbig_skelleton.gifbig_skelleton.gif

... *********! :icon_mrgreen:

Edited by Nellaiyan

நீங்கள் என்னத்தை சொல்லி சடைஞ்சாலும்.. அசைலிகள் கொடுத்த வாக்கு மூலங்கள் எல்லாம் உண்மை.. பேசும்..! கோப்புகள் கோப்புகளாக.. புனைந்து எழுதிய கதைகள் சொல்லும்.. உண்மை..! அசைலிகளில் பலர்.. சொந்தச் சுயலாபத்திற்காக இனத்தையே காட்டிக் கொடுத்தவர்கள்.. இதனை எவர் மறுத்தாலும்... என்னால் உறுதிபடக் கூற முடியும். அதற்கான கோப்புக்களை நான் கண்டிருக்கிறேன்.. வாசித்திருகிறேன்.

நாங்கள் அன்ரன் பாலசிங்கம் போல அரசியல் பிரமுகர்கள் கிடையா. சாதாரண மக்கள். நாங்க என்ன படிச்சம் என்பதை சொல்லி நீங்கள் அதை விளங்கி....??????????????????????????????????! நடக்கிறதா கதையுங்க சார்..! ஏதாவது.. வேற தலைப்போட எழுத இருந்தால் எழுதுங்கள். பதில் தரலாம்.

மேலும்.. நாங்க இன்ன படிச்சம் என்று சொல்லிட்டு திரியுறதில்ல. நீங்கள் தான்.. நாங்க படிச்சம் படிச்சம் என்று எழுதுறீங்க. நீங்களா.. மாணவர் விசா என்று எழுதுறீங்க.... அது காலம் கடந்த விடயங்கள். நீங்கள் உங்கள் கற்பனைக்கு எழுதுவதற்கு எல்லாம்.. நாங்கள் மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அப்படியே தப்புத் தப்பா.. நினைச்சுக்கிட்டு வாழுங்க..! தமிழர்கள் அடுத்தவரைப் பற்றி கற்பனை செய்வது அதிகம்..! தங்கள் தவறுகளை இனங்காணவும் மாட்டார்கள் திருந்திக் கொள்ளவும் மாட்டார்கள்.

ஏன் அசைலிகள் பற்றிய உண்மையைச் சொன்னா சிலர் கடுப்போட அலையினம். உண்மையை ஏத்துக்கிட்டுத்தாங்க ஆகனும். அன்ரன் அண்ணா அசைலியாவா வந்தவர்..???????! அந்தாள்.. வெளிநாட்டு வாழ்வை விட்டு தாயகத்தில் இவ்வளவு நெருக்கடிகள் மத்தியிலும் போய் வாழ்ந்த மனுசன். அவரை ஏன் இதுக்குள்ள...????????????!

அன்ரன் அண்ணா.. சொன்ன.. வடலிக்க இருந்தவன்.. கொமட் கேட்ட கதை தெரியுமோ என்னமோ..???! அது தெரிஞ்சா... சரி. :lol::D

உண்மைதான் .........உங்களால் தெளிவு படுத்த வேண்டிய விடயத்தை சரியாகத்தெளிவு படுத்தமுடியவில்லை சார்.....

அப்புறம் நீங்கள் என்ன படிக்கிறீங்க,என்ன படிச்சியள், என்பதை எல்லாம் எப்படித்தான் மற்றவர்களுக்கு புரியவைக்க

முடியும்??????.......ஏனனில் முதலில் நீங்கள் என்ன எழுதியது என்றே உங்களுக்கு புரியவில்லை....அதற்கு நான் கேட்ட கேள்விகளுக்கு கோமாளிபோல் பதில் கொடுத்துள்ளீர்கள் ..

அதாவது படிப்பதற்கு இங்கு வந்தவர்கள் சிறப்பானவர்கள் என்றும்,அகதிகளாக வந்தவர்கள் கீழ்த்தனமான வர்கள் என்ற

அர்த்தத்திலேயே உங்கள் பதில் அமைந்தது. அதாவது நான் என்ற அகந்தையை அங்கு காணக்கூடியதாய் இருந்தது................சரி கஷ்டப்பட்டு விசா எடுத்து படிப்பதற்காக இங்கு

வந்துள்ளீர்கள்...[இதையும் நீங்கள் தான் வேறொரு திரியில் எழுதினீர்கள்] ஆனால் தாயகத்தில் யுத்த சூழ்நிலை மத்தியிலும்,பல அனைத்தங்கள்

மத்தியிலும் வாழ்க்கையையும்,கல்வியையும் சவாலாக எடுத்து படித்து இன்று எப்படி எப்படி எல்லாம் எம் உறவுகள் இருக்கிறார்கள் ......ஏன் அவர்களைப்போல் உங்களால் அப்படி அங்கு இருந்துகொண்டு படிக்க முடியவில்லை .....இந்தக்கேள்விக்கு நீங்கள் ஆயிரம் ஆயிரம் காரணம் சொல்லலாம்....அதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள தயாராய் இருக்க வேணும்,புரிந்துகொள்ள வேணும் என்பதுதான் உங்கள் எதிர்பார்ப்பானால் அகதிகள் என்னும் விடயத்திலும் உங்கள் பார்வை பற்றி நீங்கள் புரிந்துகொள்ள தயாராய் இருக்கவேணும்,புரிந்துகொள்ள வேணும்.....இதுதான் சார் யதார்த்தம்........

ஏன் அசைலிகள் பற்றி உண்மையை சொன்னால் சிலர் கடுப்போட அலையினம் என்று பண்பாக கேட்டிருந்தீர்கள்......உண்மையாக ,பண்பாக சொன்னால் உங்களை விட படித்தவர்கள்,பண்பானவர்கள்,அறிஞர்கள் ,பாண்டித்தியம் பெற்றவர்கள்,திறமைசாலிகள் பெரும்பாலானோர் அகதிகளாகவே இங்கு வர வேண்டிய சூழ்நிலை...இவர்களை நீங்கள் இழிவு படுத்தும்போது கடும் கோபம் கொள்வர்,,,,இவற்றை இவ்வளவு நாகரீகமாக நான் எழுதக்கூடாது ஆனால் களவிதிகளை மதிப்பதனால்..........

முடிக்கிறேன்.........நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

... புலிகளின் பணத்தில் படிக்க என்று புலமெங்கு வந்தவர்கள் ... கேபியின் செயலாளர் இராமு சுபன் உட்பட, ஏனையோரின் பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை ... உண்மையில் யாரின் பணத்தில் படிக்கிறார்கள்? வாழ்கிரார்கள்? அனுபவிக்கிறார்கள்? ... என்ன இங்கு அகதியாக வந்து தினக்கூலிக்கு உழைத்த பணத்திலும் அள்ளி கொடுத்தவர்களின் பணத்தில்தான்!! ... இங்கு வந்து அனுபவிப்பவர்கள், அப்பணங்களை தாயகத்தில் உள்ள அகதிகளுக்காகவேனும் திருப்பி கொடுக்க வேண்டும், நெடுக்கர் செய்வீர்களா??? ஓஒ .. இங்கு படிக்க வந்தவர்களின் பெயர்களில் "நெடுக்காலபோவான்" என்றில்லையே? நீங்கள் தப்பிக்கலாம் நெடுக்கர்! :icon_mrgreen:

புலிகளட்ட பணம்.. (1990 ஆரம்பத்தில்) அசைலிகள் உழைச்சு வரல்ல (ஆனால் வெளிநாட்டுகளில் பன்னெடும் காலமாக வாழ்ந்த தமிழ் மக்கள்.. அறிஞர்கள்.. போராட்டத்திற்கு அதன் ஆரம்பத்தில் இருந்து.. மூச்சுப் பேச்சின்றி பங்களித்தே வருகின்றனர். அசைலிகள் போல.. கொடுத்திட்டு கொட்டாவி விடுறதும்.. காட்டிக் கொடுக்கிறதும் இல்ல). தாயக மக்கள்.. தங்கப் பவுனா அள்ளிக் கொடுத்ததுகளும்.. காசாக் கொடுத்ததுகளும் தான் அதிகம். அதுதான் பின்னர்.. அசைலிகள் ஆட்டையப் போட வாய்ப்பானது. ஊரில பாஸ் எடுக்கவும் கள்ளப் பொய் சொல்லிட்டு ஓடி வந்து... வெளிநாடுகளிலும் போட்டுக்கொடுத்து அசைலம் அடிச்சு.. போராட்டத்தையே நாசம் பண்ணினதுகள் எல்லாம்... இப்ப புலிகளின் பினாமியாக நினைச்சுக்குட்டு.. குறைபிடிச்சுக்கிட்டு திரியுதுகள்.

2009 க்கு முன்னர் எத்தனை போராட்டங்களை புலம்பெயர் மண்ணில தாயக விடுதலைக்காக நடத்தி இருக்கீங்க..???! 2009 வரைக்கும் ஏன் காத்துக்கிட்டு இருந்தீங்க...?????! காலம் கடந்தாவது அந்த ஞானம் பிறந்ததை வரவேற்கத்தான் வேண்டும்..!

தேவையான காலத்தில்... நெருக்கடியான காலத்தில்... கேட்டதை விட அதிக.. தங்கப் பவுன்களை அள்ளிக் கொடுத்தவர்களில் நாங்களும் அடக்கம். அதற்காக அதைச் சொல்லிக்கிட்டு திரியுறதில்ல..! அது தாயக விடுதலைக்குக் கொடுத்தது. அது அதற்காகவே தான். யார் என்ன செய்தாலும் எங்களுக்கு கவலையில்ல..!

நீங்கள் எல்லாம் மற்றவனில குறை சொல்ல முதல் தாயக மக்களுக்கு... போராட்டத்திற்கு... நீங்கள் என்னத்தை வெட்டி விழுத்தினீங்கள் என்றாவது சொல்லலாமே. அது சொல்ல வக்கில்ல.... வந்திட்டாங்கையா.. அவன் புலிப் பணத்தில படிச்சான்.. எனக்கு சோத்துப் பார்சலும் கிடைக்கல்லைன்னு ஒப்பாரி வைக்க..! எப்பவும் அடுத்தவன் சாவில.. பணத்தில பிழைக்கவே நில்லுங்கோ. நீங்களா எதையும் செய்யாதேங்கோ..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அசைலிகள் பற்றி உண்மையை சொன்னால் சிலர் கடுப்போட அலையினம் என்று பண்பாக கேட்டிருந்தீர்கள்......உண்மையாக ,பண்பாக சொன்னால் உங்களை விட படித்தவர்கள்,பண்பானவர்கள்,அறிஞர்கள் ,பாண்டித்தியம் பெற்றவர்கள்,திறமைசாலிகள் பெரும்பாலானோர் அகதிகளாகவே இங்கு வர வேண்டிய சூழ்நிலை...இவர்களை நீங்கள் இழிவு படுத்தும்போது கடும் கோபம் கொள்வர்,,,,இவற்றை இவ்வளவு நாகரீகமாக நான் எழுதக்கூடாது ஆனால் களவிதிகளை மதிப்பதனால்..........

முடிக்கிறேன்.........நன்றி

இதைத் தவிர மிச்சம் எனக்கு.. பதில் எழுதக் கூடிய நல்ல கருத்தாகத் தெரியல்ல. எல்லாரும் படிக்கிற.. ஒரே புராணம்.. தான்.. நீங்களும் படிக்கிறீங்கள்.!

உண்மையில் படிச்சவை.. பாண்டித்தியம் உள்ளவை.. அறிஞர்கள்..அசைலிகளா வர வேண்டிய அவசியமே இல்ல. வேறு எத்தனையோ வழிகள் அவர்களுக்கு உண்டு. எத்தனையோ அறிஞர்கள்.. எங்கட பேராசிரியர் துரைராஜா போன்றவர்களும் அங்க தான் வந்து வாழ்ந்தவை. அவை அறிஞர்கள்.. வழிகாட்டிகள்..! இதுகள்.. போராட்ட சூழலை பங்களிப்புக்காக அன்றி.. பிழைப்புக்குப் பயன்படுத்திய கயவர் கூட்டம். இவர்களுக்கு என்ன மதிப்பு மரியாதை வேண்டி இருக்குது..???! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசின் core strategy விளங்காமல்.. அவர்கள் மீது பழி சுமத்தி திரியும் பைத்தியக்காரர்கள்..(பைத்தியம் போல நடித்துக் கொண்டு எதிரிக்கு சேவகம் செய்பவர்கள்) இவ்வாறான காணொளிகளைக் காண வேண்டும். ஏதாவது ஒரு அமைப்பாவது புலம்பெயர் மண்ணில் தமிழீழக் கோட்பாட்டோடு வலுப்பெறுவதை மக்கள் வரவேற்க வேண்டும். தங்கள் ஆதரவை நல்க வேண்டும். அதைவிட்டு சில விசமிகளின் புறணிபாடும் கருத்துக்களால் நிலை தளர்ந்து எதிரிகள்.. எம்மை இன்னும் இன்னும் இலகுவாகப் பலவீனப்படுத்த சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது.

புலம்பெயர் மக்கள் எனப்படுவோர்.. வெறுமனவே அசைலம் அடித்தவர்கள் மட்டுமல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இன்று வரை... பல்வேறு காரணங்களோடு தாயகம் விட்டு வந்து இன்னும் தமிழீழம்.. தமிழ் தேசியம்.. தமிழ் என்ற உணர்வோடு வாழும் எல்லா மக்களும் அதற்குள் அடங்குவர்..! இதற்குள் அறிஞர்களும் அடங்குவர்.. மாணவர்களும் அடங்குவர். புலம்பெயர் மக்கள் என்பதில் அசைலம் அடித்தவர்களும் உள்ளடங்குகின்ற அதேவேளை அவர்களே பெரும்பான்மையினர். அதிலும்.. அவர்களே.. எமது போராட்டத்தைக் கருவியாக்கி பிழைத்தவர்கள் என்ற வகையில்.. அவர்களுக்கு.. தாயக விடுதலை நோக்கிய போராட்டத்தில் பெரும் பங்கு வகிக்கும் தார்மீகப் பொறுப்பு உண்டு..! இதனை எல்லோரும் விளங்கிக் கொண்டு.. புறணிபாடுவதை விட்டு.. எதிர்க்கருத்துக்கள் விமர்சனங்கள் இருந்தால்.. அவற்றை சம்பந்தப்பட்ட அமைப்புக்களோடு நேரடியாகப் பகிர்ந்து கொண்டு குறைதீர்த்து அமைப்புக்களைப் பலப்படுத்த வேண்டுமே தவிர.. அமைப்புக்கள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் எதிரிகளுக்குச் சார்ப்பான வகையில் பிரச்சாரங்களை முன்னெடுக்கப்படுவது இயன்றவரை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

அதனை செய்வதும்.. தாயக விடுதலைக்கு அளிக்கும் பங்களிப்பாகவே நாம் பார்க்கிறோம்..! நிச்சயம்.. நாமும் அதை இயன்றவரை செய்வோம். மக்களும் செய்ய வேண்டும். குறிப்பாக மாணவ சமூகம் இந்த புறணிகளை இனங்கண்டு அவர்களின் உள் நோக்கங்களை பகிரங்கப்படுத்தி.. அவர்களின் செயற்பாடுகளை மக்கள் சரிவர இனங்காணச் செய்வதன் மூலம்.. தாயக விடுதலை.. நலன் நோக்கிய மக்களின் செயற்பாடுகள்.. இன்னும் இன்னும் உத்வேகத்தோடு முன்னெடுக்கப்பட உதவும்.

இதுவே இங்கு.. எங்கள் கருத்தாடலின் நோக்கமும் கூட..!

நன்றி.

Edited by nedukkalapoovan

.. அசைலிகள் ..

.>>>>>>

.. அசைலிகள் ..

>>>>>>

.. :icon_mrgreen:

>>>>>>

[media=]

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

.. அசைலிகள் ..

.>>>>>>

.. அசைலிகள் ..

>>>>>>

.. :icon_mrgreen:

>>>>>>

Edited by Nellaiyan

..நியூயோக்கில் இருக்கும் சொலிசிஸ்டருக்கு, அசைலிகள் தான் சோறு போடுகிறார்களாம் ... அந்த வழக்குகள் இல்லையேல், இலையான் தான் திறந்த வேண்டுமாம்! :D

இதைத் தவிர மிச்சம் எனக்கு.. பதில் எழுதக் கூடிய நல்ல கருத்தாகத் தெரியல்ல. எல்லாரும் படிக்கிற.. ஒரே புராணம்.. தான்.. நீங்களும் படிக்கிறீங்கள்.!

உண்மையில் படிச்சவை.. பாண்டித்தியம் உள்ளவை.. அறிஞர்கள்..அசைலிகளா வர வேண்டிய அவசியமே இல்ல. வேறு எத்தனையோ வழிகள் அவர்களுக்கு உண்டு. எத்தனையோ அறிஞர்கள்.. எங்கட பேராசிரியர் துரைராஜா போன்றவர்களும் அங்க தான் வந்து வாழ்ந்தவை. அவை அறிஞர்கள்.. வழிகாட்டிகள்..! இதுகள்.. போராட்ட சூழலை பங்களிப்புக்காக அன்றி.. பிழைப்புக்குப் பயன்படுத்திய கயவர் கூட்டம். இவர்களுக்கு என்ன மதிப்பு மரியாதை வேண்டி இருக்குது..???! :lol::icon_idea:

கயவர்கூட்டம் ...........தாயகவிடுதலைக்காக இரவும் பகலும் மழை,குளிர்.வெயில் என்று பார்க்காமல் புலம்பெயர்

அகதி மக்களிடம் பங்களிப்பை பெற்று போராட்டத்தின் மையத்திற்கு சேர்த்த மனிதநேயப்பணி செய்தோர் கயவர்கூட்டம் ......

இரவுபகலாக ,குளிர் மழை என்று பாராமல் உழைத்து தம் சேமிப்பையும் துறந்து நிதி ரீதியான பங்களிப்பை செய்த அகதிகளாக இருக்கும் புலம்பெயர்

வாழ மக்கள் கயவர் கூட்டம்..... தம் தாயகத்தில் வாழும் உறவுகளுக்காக .குளிர் மழை என்றுபார்க்காமல் குழந்தைகளுடன் வீதிகளில் போராட்டம் செய்த இந்த அகதி தமிழர்கள் கயவர் கூட்டம்.

ஒட்டு மொத்தத்தில் கயவர் கூட்டம் ,புலம் பெயர் வாழ் தமிழர்களே நீங்கள் கயவர் கூட்டங்களாம்........

எழுதுவீர்கள் .பேசுவீர்கள்,..........உங்களின் உள்நோக்கம் என்ன என்று எம்மைப்போல் அறிவு ஜீவிகள் இனம் கண்டு கொண்டுள்ளார்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.....அகதிகளுக்குரிய [உண்மையானவர்களுக்குரிய ]காலம் வரும் ...........அப்போது நீங்கள் ..............தயவு செய்து நாங்கள் படித்தவர்கள் என்று இங்கு எழுதியதைப்போல் வேறெங்கும் எழுதாதீர்கள்.அதை விட நகைச்சுவை இல்லவே இல்லை .............இப்படிக்கு கயவன் .............. :D :D :icon_mrgreen::icon_idea:

நாடுகடந்த அரசு ஒரு முழுமையான அரசாக இயங்க முற்படும் அமைப்பு. விளையாட்டு அதன் துறைகளில் ஒன்று. பல கழகங்கள் போட்டியாக விளையாட்டுகளை நடத்தும் நாடுகளில், இன்றைய நிலையில், நாடுகடந்த அரசு தமிழருக்கான விளையாட்டு அபிவிருத்தி முயற்சிகளில் இறங்கத்தேவை இல்லை. நியுயோர்க்கின் நிலை வேறு. இதில் ஈழப்பிரியன் கூடிய விளக்கம் கொடுக்க கூடியவர்.

விளையாட்டு அபிவிருத்தியின் போது சில பக்க நோக்கங்கள் இருக்கலாம். அதில் பணம் சேர்ப்பதும் ஒன்று. நாடுகடந்த அரசு தனிமனிதர்களுக்கு கடன் பட்டிருப்பதாகத்தான் கேள்விப்படுகிறேன். இதனால் தெரியவருவது நாடுகடந்த அரசின் நிகழ்ச்சிகள் லாபமீட்டுபவையாக இதுவரையில் இருந்ததில்லை. விரைவில் பணம் சேர்ப்பதற்கான நிகழ்வுகளை நடத்த முயலலாம். ஆகையால் விளையாடுக்களை நிதி திரட்ட செய்வதாக கருத முடியாது. அவை புலம் பெயர் மக்களுக்கான விளையாட்டு அபிவிருத்தியே

(துளசிக்கு:-) நாடுகடந்த அரசு தாயகத்தில் நேரடியாக நிவாரணப்பணிகளில் இறங்கியதாக கேள்விப்பட்டதில்லை. சுபா சுந்தரலிங்கம் செய்யும் பணிகளும் தனிமனித முயற்சிகளே. இவைகள் தாயகத்தில் நேரடியாகக் கொடுக்கப் படுவதில்லை. இதுவரை தாயகத்தில் மூன்றாமவர்(பா.உ.க்கள் மத குருமார்) மூலம் தான் செய்கிறா என்றுதான் கேள்விப்பட்டதுண்டு.

சிலர் அவதூறுகளை பரப்பி விடுகிறார்கள். அதனால் இந்த திரியிற்கு சம்பந்தமில்லாதவையையும் பற்றி எழுத வேண்டியிருக்கு. இவை நான் கேள்விப்பட்டவை மட்டும்தான். எனக்கு நிரூபிக்க முடியாது.

பிரதமர் உருத்திராவை கேலியாக எழுத முயல்பவர்கள் எல்லோருக்கும் அவர் யாழ்ப்பாணத்தின் பிரபல அரசியல் குடும்பத்தில் இருந்து வருபவர் என்பது தெரியும். வாளைதோட்டத்து காடை ரவுண்டெபவுட் பிரேமதாசவுக்கு கூட ராஜ விஸ்வநாதனை நல்ல நினைவில் இருக்கும். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று வாழ்ந்தவர் அவர்.

பிரதமர் சட்டத்துறையில் படிக்கத்தான் வெளியில் வந்ததாக கேள்விப்படுகிறேன். ஆனால் அகதியாக வந்தவரோ படிக்க வந்தவரோ,எதுவாக இருந்தாலும் தனது செயல்பாடுகளால், பிரதமர் உருத்திரா பலதடவைகள் இலங்கை அரசின் பல பழிவாங்கல் முயற்சிகளை சந்தித்தவர். கோபத்தபயா அவரை பலமுறை நாடுகடத்தி எடுக்க முயன்ற போது அதனை சமாளித்து, மகிந்தா நியுயோர்க் வந்தபோது அவரை கைது செய்விக்க முயனறதுதான் நா.க.அரசு.முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் பிரதமரின் பெயரை சொன்னாலேயே FBI, CIA போன்றவை சந்தேக நபர்களாக பட்டியல் இடலாம் என்று பயந்த காலங்களில் துணிச்சலாக மக்களைச் சேர்த்து நா.க.அரசை உருவாகியவர் பிரதமர் உருத்திரா.

பிரதமர் தனது தொழிலில் கோடி ஆதாயம் பெறுவதாக சிலர் உருவகிக்க முயல்கிறார்கள். பிரதமர் நியுயோர்க்கில் எந்த பிரபல கோடிஸ்வர வாழ்க்கையும் வாழ்வதாக நான் அறியவில்லை. இதுவரையில் அவதிப்பட்ட தமிழ் மக்களிடம் பணம் உருவி வருவதாகவும் கேள்விப்பட்டதில்லை. இது வெறும் அரசியல் நோக்கம் கொண்டவர்களின் அரசியல் பிரச்சரமாக இருந்தாலுமிருக்கலாம். ஆகவே அவர்கள் கூருபவற்றுக்கு(உ+ம் இந்தியாவின் ரோ பணம் கொடுக்கிறது) அவர்கள் தாம் ஆதாரங்களை முன் வைக்க வேண்டும்.

இந்த திரியை விளையாட்டு சம்பந்தமான திரியாக மட்டும் வைத்திருக்க வேண்டியது நமது யாழ்கள நாகரீகத்தின் தேவை. பிரதமர் உருத்திரா அந்தப் பதவிக்கு தகுந்தவரா இல்லையா என்று விவாதிப்பதை இன்னொரு திரியில் வைப்பதுதான் அழகு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழனால்....

நாடு கடந்த அரசின் பிரதமர் என்னும் வார்த்தை ஜீரணிக்க கஷ்டம் என்றால்....

உங்களுக்கு... சிங்களவன் தான் சரியான ஆள்.

உங்கள், யாழ்ப்பாண வீட்டிற்கு, புத்த பிக்குகள் வரும் போது... உண்டியலை நிரப்பவும்.

நன்றி மல்லையூரன் அண்ணா,

நானும் இந்த விளையாட்டுப்போட்டியை இப்பொழுது நடத்த தேவையில்லை என்ற கருத்துப்பட சொல்லியிருந்தேன். உருத்திரகுமார் அண்ணா எந்தவிசாவில் வந்தவர் என்பது எமக்கு பிரச்சினையில்லை. நெடுக்ஸ் அண்ணாவின் அகதிகள் பற்றிய கருத்துக்காக தான் உருத்திர குமார் அண்ணா அல்லது நாடுகடந்த அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் என்னவிசாவில் வந்தார்கள் என்பது பற்றி இடையில் கொண்டுவரப்பட்டது. நெடுக்ஸ் அண்ணாவை நக்கலடித்து தான் நான் கருத்தெழுதியிருந்தேன். அர்ஜுன் அண்ணா தான் உருத்திரகுமார் அண்ணாவை நக்கலடித்து எழுதியிருந்தார்.

நான் நாடுகடந்த அரசாங்கத்திற்கு எதிராக கருத்துகளை முன்வைக்கவில்லை. விளையாட்டு போட்டியை தவிர்த்து அரசியல் விடயங்களை செய்வது இக்காலத்திற்கு அவசியம் என்று தான் கூறினேன்.

அர்ஜுன் அண்ணாவுக்கு பதிலளித்த நெடுக்ஸ் அண்ணா நாடுகடந்த அரசாங்கம் சிங்கள அரசுடன் தேவைப்பட்டால் டீல் பண்ண போகும். அதையும் நாம் ஏற்க வேண்டும் என்ற கருத்தை கூறியிருந்தார். அதை என்னால் ஏற்க முடியாது. சிங்கள அரசுடன் டீல் பண்ணி எதையும் பெற முடியாது... அதை பல தடவைகள் உணர்ந்து விட்டார்கள். இனியும் போனால் அவர்கள் அரசாங்கத்தின் பக்கம் மாறி விட்டார்கள் என்று அர்த்தம். (அதற்காக அப்படி செய்வார்கள் என்று சொல்லவில்லை)

எனவே நெடுக்ஸ் அண்ணாவின் அந்த கருத்துக்கு எதிராக அவர்கள் அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பது பற்றி நான் பதிலளித்தேன்.

இங்கு நாடுகடந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் நெடுக்ஸ் அண்ணா மக்களிடம் எப்படி கருத்து வைத்து ஆதரவு திரட்டுவது என்று தெரியாமல் கருத்து வைக்கிறார். அவரின் கருத்துகள் தான் இந்த திரியில் நாடுகடந்த அராங்கம் பற்றி திரி திசைதிரும்ப காரணமானது. அவர் தான் உருத்திரகுமார் அண்ணாவையும் இத்திரிக்குள் இழுத்தார்.

(துளசிக்கு:-) நாடுகடந்த அரசு தாயகத்தில் நேரடியாக நிவாரணப்பணிகளில் இறங்கியதாக கேள்விப்பட்டதில்லை. சுபா சுந்தரலிங்கம் செய்யும் பணிகளும் தனிமனித முயற்சிகளே. இவைகள் தாயகத்தில் நேரடியாகக் கொடுக்கப் படுவதில்லை. இதுவரை தாயகத்தில் மூன்றாமவர்(பா.உ.க்கள் மத குருமார்) மூலம் தான் செய்கிறா என்றுதான் கேள்விப்பட்டதுண்டு.

இதை ஏன் எனக்கு சொன்னீர்கள் என்று தெரியவில்லை. தாயகத்தில் நாடுகடந்த அரசாங்கம் நேரடியாக நிவாரணப்பணியில் இறங்க வேண்டும் என்று இத்திரியில் எங்காவது கருத்து தெரிவித்தேனா?

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டுப் போட்டி நன்றாகவே நடந்து முடிந்தது.அங்கு சேர்ந்த பணத்தில் செலவு போக மிகுதி எல்லோர் முன்நிலையில் பிரதமர் ருத்திரா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.அங்கு கருத்துக்கள் எழுதி உற்சாகப்படுத்திய உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.

தட்டுங்கள் திறக்கப்படும் என்பது போல் நன்மை தீமைகளைப் பற்றி பேசினால்த் தான் நியாயம் பிறக்கும் .

அந்த வகையில் தாயக மக்களை மீட்டெடுக்க எல்லோரும் ஏதோ ஒரு வகையில் முயற்சி செய்து கொண்டிருப்பது தெரிகிறது.

சிங்கள அரசு தான் எமது எதிரி என்று சொல்லி ஓரிரு அமைப்புக்களே இயங்குகின்றன.

ஏதாவது ஒரு அமைப்புடன் சேர்ந்து இயங்குங்கள்.அடுத்த அமைப்பை அழிக்க நினைக்காதீர்கள்.

தேவை ஏற்படும் பட்சத்தில் இந்த அமைப்புக்கள் நாளை ஒன்று சேரலாம்.

நெல்லையன் நீங்கள் இந்த அமைப்புக்களை விட புலனாய்வுப் பிரிவுகள் மேல் ரொம்ப நம்பிக்கை வைப்பதாக தெரிகிறது.

இன்று வரை நீங்கள் எந்த அமைப்புக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தவில்லை.நீங்கள் ரொம்ப குழம்பி மற்றவர்களையும் குழப்ப முயற்சி பண்ணுவது மட்டும் தெரிகிறது.

sportsmeet2012jpg1.jpg

Uploaded with ImageShack.us

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு தான் எமது எதிரி என்று சொல்லி ஓரிரு அமைப்புக்களே இயங்குகின்றன.

ஏதாவது ஒரு அமைப்புடன் சேர்ந்து இயங்குங்கள்.அடுத்த அமைப்பை அழிக்க நினைக்காதீர்கள்.

தேவை ஏற்படும் பட்சத்தில் இந்த அமைப்புக்கள் நாளை ஒன்று சேரலாம்.

நன்றி தகவலுக்கு

தங்கள் கருத்தே எனதும்.

இலக்கு ஒன்றே.

தட்டுங்கள் திறக்கப்படும் என்பது போல் நன்மை தீமைகளைப் பற்றி பேசினால்த் தான் நியாயம் பிறக்கும் .

அந்த வகையில் தாயக மக்களை மீட்டெடுக்க எல்லோரும் ஏதோ ஒரு வகையில் முயற்சி செய்து கொண்டிருப்பது தெரிகிறது.

சிங்கள அரசு தான் எமது எதிரி என்று சொல்லி ஓரிரு அமைப்புக்களே இயங்குகின்றன.

ஏதாவது ஒரு அமைப்புடன் சேர்ந்து இயங்குங்கள்.அடுத்த அமைப்பை அழிக்க நினைக்காதீர்கள்.

தேவை ஏற்படும் பட்சத்தில் இந்த அமைப்புக்கள் நாளை ஒன்று சேரலாம்.

நிச்சயமாக அண்ணா. நன்மை தீமைகளை நாம் கதைக்க வேண்டும். அதே நேரம் இன்றைய காலத்தில் அரசியல் விடயங்கள் தான் முக்கிய தேவை.

அத்துடன் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டிய தேவை இன்றேயுள்ளது. அவர்கள் ஒரு அமைப்பாக ஒன்றிணையா விட்டாலும் தமக்குள் பேசி ஒருவர் நடத்தும் நிகழ்வுக்கு மற்றவர்களும் செல்ல வேண்டும் என்ற உடன்பாடு கிடைக்க வேண்டும். இதற்கு நாடுகடந்த அரசாங்க தலைவர் அல்லது உறுப்பினர்கள் மற்றைய அமைப்புடன் கதைத்தால் நல்லது. மக்களின் நலன் கருதி ஒரு பகுதியினர் என்றாலும் மறுபகுதியினருடன் தாமாக போய் கதைப்பதில் தவறில்லை.

நீங்களும் நெடுக்ஸ் அண்ணாவும் அவர்களிடம் இந்த விடயத்தை பற்றி கூறுவீர்களா? பின்னொருகாலம் நானும் அவர்களை சந்திப்பேன்.

Edited by துளசி

உறவுகளே இந்ததிரியில் கருத்து எழுதியவன் என்ற வகையில் நானும் சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டிய

நிலையிலேயே மீண்டும் இங்கே எழுதுகிறேன். இந்த திரியின் அடிப்படை கருத்தான நாடுகடந்த அரசாங்கத்தை பற்றிய

எந்த கருத்துக்கும் நான் கருத்து எழுதவில்லை. எனக்கும் நெடுக்க்சுக்கும் வேறு ஒரு வகையான விவாதமே நடந்தது.

ஆனால் இப்பவும் சரி எப்பவும் சரி நான் ஒரு போதும் தேசியத்துடன் சார்ந்து நிற்கும் நாடு கடந்த அரசாங்கத்தையோ

அல்லது அது போல் செயற்படும் ஏனைய அமைப்புக்களையோ அவர்களின் செயற்பாடுகளையோ பிழையாக விமர்சிப்பவன் அல்ல ,குறை கூறுபவன் அல்ல . இங்கு ஒன்றை ஒன்று பிடித்து தின்னும் வகையிலான கருத்துக்களை வாசிக்கும் பொது அதிகம் வேதனையும் ,கவலையும் கொள்பவன்...அதனால் கருத்து எழுத விருப்பம் இன்றி விட்டுவிடுவேன்..... இன்னொரு திரியில் இது சம்பந்தமாக எனது ஆதங்கத்தை

கொட்டித்தீர்தேன்..அதையும் கீழே இணைக்கிறேன்....நன்றி

<p>

Posted 07 July 2012 - 03:46 PM

ஐயோ தாங்கமுடியவில்லை ...வெட்கக்கேடு ,வெட்கக்கேடு. எனையா இந்தக்கொலைவெறி எம் எல்லோர்க்கும்.....

தேசியத்திலும்,இலட்சியத்திலும் ஒன்றுபட்டு அனாதரவின்றி நிற்கும் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாய் ?? இன்றைய

சூழலில் செயல்படும் ஒவ்வொரு அமைப்புக்களையும் சார்ந்த நீங்கள் ஒருவரை ஒருவர் பிடித்து தின்னும் போக்கை

தயவு செய்து விட்டு விடுங்கள்.....உண்மையாக உங்களிடம் இலட்சியம் ,தேசிய ஒற்றுமை இருந்தால் நான் பெரிது,நீ பெரிது

அல்லது அவர்கள் தான் அதற்கு பொறுப்பு என்று எழுதுவதை தவிர்த்து விடுங்கள்.ஒரு விடயத்தில் பிழை நடந்தால் அதற்குரிய காரணத்தை பக்குவமாய் அணுகி இன்னொரு முறை அது நடப்பதை

தவிர்த்துவிடுங்கள்.அதற்காக எந்த சாக்கு போக்குகளும் கூறாதீர்கள். முடியாவிட்டால் ஒதுங்கி விடுங்கள்.......

இப்படி அவற்றை எழுதுவதால் நடப்பது என்ன ???? குழப்பம்,குழப்பம்,குழப்பம்......நீங்களும் குழம்பி,மக்களையும்

குழப்புவதை தவிர்த்து விடுங்கள்.....நீங்கள் எந்த அமைப்புகளையும் வைத்திருங்கள்,....அது தலமைச்செயலகமாய் இருக்கட்டும்,நாடுகடந்த

அரசாய் இருக்கட்டும்,உலகத்தமிழர் பேரவையை இருக்கட்டும்,அனைத்துலக செயல்பாட்டவராய் இருக்கட்டும்

பரவாயில்லை...... உண்மையில் .இலட்சியத்திலும்,உணர்வுகளிலும்,தேசியத்திலும் ஒன்றுபட்டே இருக்கிறீர்கள்..........இதுதான் யதார்த்தம்......நீங்கள் கூறும்,அல்லது எழுதும் கருத்துக்கள் இந்த யதார்த்தத்திற்கு

முரண்பட்டு இருப்பதனால் நீங்கள் அனைவரும் உண்மையானவர்களா என்று சிந்திக்கத்தோன்றுகிறது.....எம் தேசியத்தலைமை படிப்பித்து விட்டுச்சென்ற பாதையை பின்பற்றுங்கள் ........சிந்தியுங்கள்.....செயற்படுங்கள்....

கருத்தெழுதுங்கள் .......நன்றி ....

இந்த திரியில் எனது ஆதங்கத்தை கொட்டித்தீர்ப்பதற்கே எழுதினேன்...மாறாக யாருடைய மனதையும் நோகடிப்பதற்காக இல்லவே இல்லை .....

தமிழரின் இன்றைய நிலை மாறும்.

மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.

பிரதமருடன் நிற்பவர் யாழ் இந்து ஓட்டவீரர் ---------.இவர் எமது பிக்னிக்கும் வந்தவர்.

திபெத் என்ற தன்னாட்சி பிரதேசம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. திபெத் இனத்தவரும் எம்மை போல் தான் ஒருபகுதியினர் புலம்பெயர்ந்தும் இன்னொருபகுதியினர் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழும் வசிக்கின்றனர். அவர்களின் தலைவர் (தலாய் லாமா என்று குறிப்பிடுவார்கள்) போராட்டத்தை கைவிட்டு இந்தியாவில் அடைக்கலம் பெற்றார்.

அவர்கள் நாடுகடந்த அரசாங்கம் போல் ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். அதையொத்த முறையில் ஆனால் அதை விட பல கட்டமைப்புகளை எமது நாடுகடந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

[size=4]ஆனால் [/size]இன்றுவரை திபெத்தியர்கள் அனைவரிடமும் காணப்படும் ஒற்றுமை அனைவரும் நாட்டுப்பற்று கொண்டவர்கள்.

தமிழர்கள் நாமோ மாறி மாறி ஒவ்வொரு குழுவாக பிரிந்து நான் பெரிது நீ பெரிது என்று அடிபட்டுக்கொண்டிருக்கிறோம். புலம்பெயர் தேசத்திலுள்ள எமது அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர வேண்டிய தேவை இன்றுள்ளது. ஒரு அமைப்பு ஒழுங்கு செய்யும் நிகழ்வுக்கு மற்ற அமைப்பும் மக்களுக்கு அழைப்பு விட வேண்டும். இதன் மூலம் நாம் புலம்பெயர் தேசத்தில் ஒற்றுமையாக முடியும். ஒற்றுமையாவார்களா தமிழர்கள்?????????

ஏனோ இன்று எனக்கு திபெத் பற்றி எழுத வேண்டும் போல் தோன்றியது. எழுதினேன். எனக்கு முழுமையாக தெரியாது. தெரிந்தவர்கள் யாரும் ஒரு திரி ஆரம்பித்து எழுதுங்கள்.

சீனாவினால் தடைசெய்யப்பட்ட திபெத்தியர்களின் கொடி.

240px-Flag_of_Tibet.svg.png

- google தேடல் மூலம் படம் பெறப்பட்டது -

Edited by துளசி

ஆம் துளசி [காதல்] எப்போது எமக்கிடையே ,எம் அமைப்புகளுக்கிடையே ஒற்றுமையும்,புரிந்துணர்வும் ஏற்படுகின்றதோ

அன்றில் இருந்து எமக்கு முக்கால் பங்கு தமிழீழம் கிடைத்ததற்கு சமனாகும்.....இதுவே தாயக கனவுடன் தம்மை

அர்ப்பணித்த மாவீரர்களின் கனவுமாகும்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய திரியில் எழுதுவது என்று குறை நினைக்க வேண்டாம்...

யாருக்கும் ஞாபகம் இருக்கோ தெரியவில்லை, இந்த திரி தொடக்கத்தில் நான் பதிந்தது--ஒரே ஆக்கள் டபுள் அக்டிங் போடுவதால் வந்த வினை என்று...

நேற்று ஒரு போட்டியாளர் தனது வெற்றி படங்களை facebook போட்டிருந்தார் அதில் உள்ள கொடி, முந்திய முறைப்படி இந்துக்கல்லூரி கொடியாகவே உள்ளது "வெள்ளையும் நிலமும்" ஒரு நாடு கடந்த கொடியையும் காணோம். அவர் அதுக்கு (அந்த போட்டிக்கு ) ஒரு வினோதமான பேரும் போட்டிருந்தார்...போட்டியாளர்கள் விளங்கப்படுத்தினால் நன்றாக இருக்கும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.