Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவனுக்குத்தான்..........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் அலைகள் ஓய்வதில்லை . சில படங்கள் அவர்களது குடும்பத்துடன் சென்றும் பார்த்துண்டு

நான் நினைச்சன்!

எவ்வளவு அருமையான ஐடியா!

வைர முத்துவின், வைரமான வரிகள், நிறைந்த படம்!

;இரவும் பகலும், உரசிக்கொள்ளும் அந்திப் பொழுதில் வந்து விடு!

அலையின் கரையில் காத்திருப்பேன், அழுத விழிகளோடு!

எனக்கு மட்டும் சொந்தம், உனது இதழ் கொடுக்கும் முத்தம்!

உனக்கு மட்டும் கேட்கும்! எனது உயிர் உருகும் சத்தம்!

நீ மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டால், ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்!

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால், பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்!

ஒரு தூதும், தேவையில்லாமல், நேரடியாகவே காதலைச், சொல்வது மாதிரி!

ஒன்று விட்ட அக்காவுக்கு, ராஜா கிறீம் ஹௌசில், ஒரு பலூடா ஐஸ் கிறீம், வாங்கிக் குடுக்க, அவ சைலன்ஸ்!

கதை நல்லாயிருக்கு, விசுகர்! :D

தொடருங்கள்!

Edited by புங்கையூரன்

  • Replies 91
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று விட்ட அக்காவுக்கு, ராஜா கிறீம் ஹௌசில், ஒரு பலூடா ஐஸ் கிறீம், வாங்கிக் குடுக்க, அவ சைலன்ஸ்!

கதை நல்லாயிருக்கு, விசுகர்! :D

தொடருங்கள்!

பலான ஆளாக இருப்பீர்கள் போலுள்ளது

படம் முடிய போனது சுபாசுக்குத்தான்.

(உள்ளே போய் இருந்துவிட்டால் எவரும் கண்டு பிடிக்கமுடியாதல்லவா?? :wub: )

Edited by விசுகு

தொடருங்கோ விசுகு அண்ணா, நீங்களும் மற்றவர்கள் போல் நல்லா தான் சுத்தியிருக்கிறியள். :D ஆனால் அவர்களை விட கொஞ்சம் குறைவா. அடுத்த பகுதியில் உங்களுக்கும் வில்லன்னுக்குமான சண்டை தான் வரும் போலிருக்கு. :D அடுத்த பகுதிக்காக waiting... :rolleyes:

[size=5]விசுகு அண்ணா ,

அலைகள் ஓய்வதில்லை படம் வந்தது உங்கட பால்ய காலத்திலா !!!

அப்ப ஆழ வேருன்றி கிளை பரப்பி நிற்கும் விழுதெறிந்த விருட்சமாய் இருக்கிறிர்கள்.[/size]

[size=5]இதெல்லாம் கொஞ்சம் ஓவர்!!! :lol:

ஒருநாள் நீங்கள் திண்ணையில போட்டிங்களே எனக்கு ரம்பம் !!

அதுக்கு பிறகு நான் அந்த பக்கமே வார்த்து இல்லை , :lol: :lol: :lol:

அனுபவங்களை தொடருங்கள் . ஆவலாக உள்ளேன் .[/size]

Edited by sudalai maadan

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது தான் வாசித்து முடித்தேன்.தனது வாழ்க்கையில் நிகழ்ந்த காதல் சம்பவங்களை பகிர்வதற்கு ஒரு துணிவு வேண்டும்.விசுகு அண்ணா அந்த துணிவு உங்களுக்கு நிறையவே உண்டு.தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வில்லத்தனங்கள் சிலவற்றை என்னிடம் காட்டத்தொடங்கினார்.

அதிலொன்று அண்ணரிடம் என்னைப்பற்றி போட்டுக்கொடுப்பது. ஆனால் எதற்குமே நான் அசைந்து கொடுக்கமாட்டேன். காரணம்

1- எனது குளப்படி என்பது மிகவும் வரையறைக்குள் இருக்கும். இதுவரை எவரையும் அது பாதித்ததில்லை.

2- குடி சிகரெட் போன்ற எந்த பழக்கங்களுமில்லை

3- படிப்பில் கண்ணாக இருப்பேன்

4- ஒரு கெட்ட வார்த்தைகளோ(தூவணம்) எவரையும் மனம் கோணும்படியான செயல்களோ என்னிடமிருந்து வராது

5- எனக்கு பகைவர் இல்லை. எவரிடம் போய் என்ன சொன்னாலும் கேட்டாலும் சில நிமிடங்களில் அவை என்னை வந்தடையும்

6- மிக முக்கியமானது. பெண்ணுக்காக என்னை மாற்ற எப்போதும் தயாரில்லை ( இதை அவளிடமே நான் சொல்லியுள்ளேன். அவளும் இன்றுவரை என்னை எவரும் கை காட்டிக்கதைக்கவே அனுமதிக்கமாட்டாள்)

இதனால் அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அவரது வீட்டிலேயே அவருக்கு ஆதரவு இல்லை. ஆனால் அவர்தான் வீட்டில் மூத்தபிள்ளை மற்றும் நல்ல வேலையில் இருப்பவர் என்பதால் முடிவுகள் அவரது கையில்தான்.

ஆனால் அவரது பக்க நியாயத்தை நான் ஓரளவு ஏற்றுக்கொண்டேன். நான் ஒருத்தியை ஏமாற்றியதாக ஒரு சந்தேகம் அவருக்கு. பொல்லைக்கொடுத்து அடி வாங்கிய நிலை எனது.

இப்படியே காலம் ஓடிக்கொண்டிருந்தது. நானும் பாடசாலை விடுமுறைக்குப்போனால் கூட்டிக்கொண்டு சுற்றுவதும் தொடர்ந்தது.

எனக்கான காலமும் வந்தது.

1970 கடைசிகளில் அல்லது 80 ஆரம்பங்களில் வங்கிகளில் வேலை செய்வோரின் தராதரம் சாதாரணதரப்பரீட்சையே. இதன் மூலம் வங்கிகளில் புகுந்து வேலை செய்தவரே எனது ரூமில் இருந்த 3வரும். ஆனால் இவர்கள் திருமணம் முடிக்காதவர்கள். இவர்களுக்கு நல்ல சீதனங்கள் கொடுக்கக்கூடிய கேள்வி அப்பொழுது இருந்தது. தற்போது தெரியவில்லை. ஆனால் இவர்கள் உயர்தரப்பரீட்சையில் பங்கு பற்றிவென்றால் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் காத்திருந்தன. இதனால் உயர்தரம் அதிலும் கணக்கியல் படிக்கும் எனது ஆதரவு அவர்களுக்கு தேவைப்பட்டது. அதில் மனமில்லாவிட்டாலும் உதவி கேட்டுவந்தவர் கண்ணன் மைச்சான். அவரது இந்தக்கோரிக்கைக்கு நான் காட்டிய இடம் ராஐரத்தினம் ஆசிரியருடன் சேர்ந்து நாங்கள் ஒரு பத்துப்பேர் பம்பலப்பிட்டியக்கும் வெள்ளவத்தைக்கும் இடையில் கடற்கரைப்பக்கமிருக்கும் ரதீசின் வீட்டின் பின் பக்கம் நாங்கள் ஏற்பாடு செய்து கணக்கியல் படித்த சிறிய கொட்டில்.

அங்கு வந்தார். எம்மோடு இருந்தார். என்னோடு ஆசிரியரும் மற்றைய மாணவர்களும் பேசிக்கொண்ட முறையை வைத்து நான் வகுப்பில் முதல் தரத்திலும் எல்லோராலும் விரும்பப்படும் விதத்திலும் முதல் இடத்திலும் இருப்பதை நேரில் பார்த்தார். அன்றிலிருந்து என்னுடனான அவரது அணுகுமுறைகள் வேறுபட ஆரம்பித்தன. அவரது வங்கிப்பரீட்சையிலும் அவர் சித்தியடைந்தார்.

சில மாதங்களில் யாழ்ப்பாணம் போயிருந்தார். அப்போது அவரது சகோதரிக்கு(என் காதலிக்கு) திருமணம் பேசி வந்திருந்ததாம். அவர் சொன்னது. நான் முடிவு செய்துவிட்டேன். அவள் அவனுக்குத்தான். :wub:

அவளே எனது மனைவி.

(இத்துடன் இது நிறைவு பெறுகிறது. ஆனால் தற்பொழுது நானும் ஒரு தகப்பனாக இருப்பதால் அது பற்றி சில வரிகள் எழுதணும். எழுதுவேன்)

1- எனது குளப்படி என்பது மிகவும் வரையறைக்குள் இருக்கும். இதுவரை எவரையும் அது பாதித்ததில்லை.

2- குடி சிகரெட் போன்ற எந்த பழக்கங்களுமில்லை

3- படிப்பில் கண்ணாக இருப்பேன்

4- ஒரு கெட்ட வார்த்தைகளோ(தூவணம்) எவரையும் மனம் கோணும்படியான செயல்களோ என்னிடமிருந்து வராது

5- எனக்கு பகைவர் இல்லை. எவரிடம் போய் என்ன சொன்னாலும் கேட்டாலும் சில நிமிடங்களில் அவை என்னை வந்தடையும்

6- மிக முக்கியமானது. பெண்ணுக்காக என்னை மாற்ற எப்போதும் தயாரில்லை ( இதை அவளிடமே நான் சொல்லியுள்ளேன். அவளும் இன்றுவரை என்னை எவரும் கை காட்டிக்கதைக்கவே அனுமதிக்கமாட்டாள்)

-----------

-----------

-----------

சில மாதங்களில் யாழ்ப்பாணம் போயிருந்தார். அப்போது அவரது சகோதரிக்கு(என் காதலிக்கு) திருமணம் பேசி வந்திருந்ததாம். அவர் சொன்னது. நான் முடிவு செய்துவிட்டேன். அவள் அவனுக்குத்தான். :wub:

அவளே எனது மனைவி.

(இத்துடன் இது நிறைவு பெறுகிறது. ஆனால் தற்பொழுது நானும் ஒரு தகப்பனாக இருப்பதால் அது பற்றி சில வரிகள் எழுதணும். எழுதுவேன்)

:lol: :lol: :lol:

அண்ணா சுபமாக முடிந்ததில் எங்களுக்கும் சந்தோசம்... :) இனி தந்தையாக என்ன எழுத நினைக்கிறியளோ தொடருங்கோ. :rolleyes:

உங்களிடம் எனக்கு பிடித்த முக்கிய 3 குணங்கள் மேலே தடித்த எழுத்தில் காட்டியிருக்கிறன். :) :) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன விசுகு அண்ணா "சப்புனு" முடிஞ்சு போச்சு.. :(

நான் உங்ககிட்டை இருந்து நெறைய எதிர்பார்த்தேன். :D:lol:

என்ன விசுகு அண்ணா "சப்புனு" முடிஞ்சு போச்சு.. :(

நான் உங்ககிட்டை இருந்து நெறைய எதிர்பார்த்தேன். :D:lol:

அதுக்கு தானே நீங்கள் இருக்கிறீங்கள். :lol: கொஞ்ச நாளால் எழுத தொடங்குங்கோ. :D:icon_idea:

என்ன விசுகு அண்ணா "சப்புனு" முடிஞ்சு போச்சு.. :(

நான் உங்ககிட்டை இருந்து நெறைய எதிர்பார்த்தேன். :D:lol:

[size=5]உண்மைதான் ஜீவா ,

நாங்களும் கிளைமக்ஸ்சுக்காக பார்த்துகொண்டு இருந்தனாங்கள் .[/size] :D :D

Edited by sudalai maadan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசுகு அண்ணா "சப்புனு" முடிஞ்சு போச்சு.. :(

நான் உங்ககிட்டை இருந்து நெறைய எதிர்பார்த்தேன். :D:lol:

வரும்

ஆனா வராது

காரணம் எல்லாத்தையும் எழுதினால் நீங்களே அடிப்பீர்கள் :lol::D

அத்துடன் உண்மையை எழுதச்சொல்லி இங்கு அன்புக்கட்டளை.

அதனால் சில விடயங்களில் மௌனம் :wub:

(தக்காரா படம் பார்த்ததையே ஆயிரம் தடவை யோசித்து விட்டுத்தான் பதிந்தேன்)

கணக்கு (கணக்கியல்) காட்டி காதலியைப் பிடிச்சிருக்கிறியள். வாழ்த்துக்கள்....

வாழ்த்துக்கள் விசுகர் இப்பொழுது ஓரளவு நம்பிக்கை வருகின்றது ( கதை எழுதுவதில் ) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகர் இப்பொழுது ஓரளவு நம்பிக்கை வருகின்றது ( கதை எழுதுவதில் ) .

நீங்கள் எனது கனடா பயணம் பற்றிய கட்டுரை பற்றி குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கின்றேன்.

அக்கட்டுரையை பலமுறை எழுதிவிட்டு அழித்துவிட்டேன்

ஒரு 3 கிழமை

அதிலும் முழுதாக வெளியில் போனது என்றால் 10 நாளும் வராது.

இந்த நிலையில் கனடா பற்றி எழுதிவிட்டு வாசித்தபோது எனக்கே ஒரு மாதிரி இருந்தது

எனக்கு அதற்கு தகுதியுண்டா என.

எனவே அடுத்தமுறை போய் முழுமையாக பார்த்துவிட்டு அல்லது கலந்து எல்லோருடனும் பேசிவிட்டு வந்து எழுதுகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுக்கு தானே நீங்கள் இருக்கிறீங்கள். :lol: கொஞ்ச நாளால் எழுத தொடங்குங்கோ. :D:icon_idea:

விசுகண்ணை 3 எண்டு எழுதினார் நான் எதையெண்டு எழுதுறது?????? :lol: :lol: :icon_mrgreen::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணை 3 எண்டு எழுதினார் நான் எதையெண்டு எழுதுறது?????? :lol: :lol: :icon_mrgreen::icon_idea:

நெஞ்சக்குள் வந்தது 3 என்ற தான் எழுதினேன்.

மீண்டும் வாசிக்கவும்

தம்பி

திருமணம் ஆகி ஒரு பத்து வருடமாவது இதுகளை புதைத்துவிடுங்கள்.

தற்போது சொன்னால் உண்மை :(

அப்புறம் சொன்னால் குறும்பு விளையாட்டு மட்டுமே. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இவவைத் தான் கட்டுவீர்கள் என எனக்குத் தெரியும்...ஏற்கனவே ஒரு பதிவில் மாமி வீட்டுக்குப் போய் பாட்டெல்லாம் பாடி மகளை கட்டினேன் என எழுதியிருந்தீர்கள்...உங்களுக்கு பொருத்தமானவராய் பார்த்துத் தான் கட்டியிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி

எங்கே சில நாட்களாக ஆளைக்காணோம்???

:lol: :lol: :lol:

அண்ணா சுபமாக முடிந்ததில் எங்களுக்கும் சந்தோசம்... :) இனி தந்தையாக என்ன எழுத நினைக்கிறியளோ தொடருங்கோ. :rolleyes:

உங்களிடம் எனக்கு பிடித்த முக்கிய 3 குணங்கள் மேலே தடித்த எழுத்தில் காட்டியிருக்கிறன். :) :) :)

நன்றி துளசி

உடன் பதில் போட்டதற்கு

மச்சான் சம்மதித்ததும் கொஞ்சம் எனது மாமனார் வீட்டுக்கான வருகை அதிகரித்திருந்தது

அந்த நேரங்களில் மாமா மாமி மற்றும் மைத்துணிகளின் செயல்களில் ஒரு நெருப்பைக்கட்டிய பயம் தெரியும்

அதைத்தான் தகப்பனாக எழுத இருக்கின்றேன்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு (கணக்கியல்) காட்டி காதலியைப் பிடிச்சிருக்கிறியள். வாழ்த்துக்கள்....

ஆனால் எந்த நிலையிலும் கணக்குவிடவில்லை

(சுத்த மாத்து செய்யவில்லை)

நன்றி கருத்துக்கு மணிவாசகர்

கம்பன் ஏமாந்தான். இளம் கன்னியரை ஒரு மலரென்றானே...கற்பனை செய்தானே.

Edited by நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

அவசரமாக எழுதி முடித்துவிட்டீர்கள்..! :D தொடர் நன்றாக இருந்தது.. நன்றிகள்.. :)

நன்றி வி அண்ணா அருமையான காதல் [வாழ்க்கை] கதைக்கு ........

அது சரியண்ணா நீங்கள் கொழும்புத்துறை ,அரியாலை வீதிகளிலும் நிச்சயம்

வலம்

வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்..................காதல் வானில் பறப்பதற்குரிய அருமையான இடங்கள் .......அதனால் தான் சொல்லவந்தேன் ....... :D :D :D

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் ஏமாந்தான். இளம் கன்னியரை ஒரு மலரென்றானே...கற்பனை செய்தானே.

இதுவும் எனது காலப்பாட்டுத்தான்

அந்த மாதிரீப்பாடுவேன் இப்பாடலை.

நன்றி நீலமேகம்

அவசரமாக எழுதி முடித்துவிட்டீர்கள்..! :D தொடர் நன்றாக இருந்தது.. நன்றிகள்.. :)

நேரம் கிடைக்காமையால் இதுவும் இழுபடக்கூடாது என்ற காரணம்தான்.

கதை தானே முடிந்தது

அனுபவங்கள் தெதாடரும்

உங்களை ஏமாற்றுவேனா???

நன்றி இசை

நன்றி வி அண்ணா அருமையான காதல் [வாழ்க்கை] கதைக்கு ........

அது சரியண்ணா நீங்கள் கொழும்புத்துறை ,அரியாலை வீதிகளிலும் நிச்சயம்

வலம்

வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்..................காதல் வானில் பறப்பதற்குரிய அருமையான இடங்கள் .......அதனால் தான் சொல்லவந்தேன் ....... :D :D :D

ஆகா

பழைய ஞாபகங்கள் திரும்ப வருகின்றன தங்கள் கேள்வியின் பின்.

அநந்த பழைய பூங்கா

சுண்டிக்குளியடி

அப்படியே பாசையூர் அந்தோனியார்

அந்த சென் யோன்சால் வந்து கண்டி வீதியில் ஏறும் இடத்தில்தான் ரியூசனுக்கு போவார்.

அப்படியே அப்பிக்கொண்டு சுத்துவது தான். மழை வந்தால் ரொம்ப சந்தோசம்......... :wub::D :D

(பக்கத்தில் வருவார். வீட்டுக்கும் லேற்றாக போகலாம்)

கொழும்பு துறை வீதியை சொல்லுறீங்களோ? சபேசன் சேரிடம் படித்தாரா? :D (எனக்கு ஆளை தெரிய வாய்ப்பில்லை. பயப்படாமல் சொல்லுங்கள்.)

Edited by துளசி

ஆகா அந்த வீதிகள் ,இடங்கள் எல்லாம் அன்று நடந்தவயை நிச்சயம் மறந்திருக்காது...............வி அண்ணா உங்கள் கதை போல் எனக்குள்ளும் மறக்க முடியாத பல நினைவுகள் ,கதைகள் சில நேரம் என் மனதை ஊடுருவும் ........என்ன செய்வது காலத்தின் கோலம் .... நேரம் இருந்தால் எனது பசுமயான ,இனிமயான அந்த நாள் ஞாபகங்களை கதையாய் எழுதுகிறென்.

பழைய பூங்கா வீதியில் முடிவில்,இரு வீடுகள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்....அதில் ஒன்றில் தான் எனது குடியிருப்பு[அறை வாடகை] இருந்தது.விடுதிச்சாலையில் இருந்து வெளியெறியபின் [துரத்துப்பட்டபின்].

சரி இத்துடன் நிறுத்துகிறேன்.......விட்டால் உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றயும் எழுதி விடுவேனோ என்ற பயத்தினால்.........

பி.குறிப்பு ......1989 தொடக்கம் 1993 காலப்பகுதியில் நீங்கள் அங்கு இருந்திருந்தால் நிச்சயம் என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும்....னன்றி அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.