Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் வாழ தகுதியான நாடுகளில், கனடாவுக்கு முதலிடம்.

Featured Replies

உங்கள் தேசத்தின் மொழியில் கேட்கிறேன், சொப்னா!

நீங்கள் 'செருப்பு' அல்லது சப்பாத்துப் போடுவதில்லையா?

சில மனிதர்களுக்கு, அவர்களின் மொழியிலேயே பதில் சொல்லுங்கள்!

பெண் என்பவள், கிள்ளுக்கீரையல்ல!

[size=4]செருப்பு சப்பாத்து எலாம் ஓல்டு ஸ்ரைலுங்க அண்ணன் :lol: . இப்போல்லாம் ஹேர்பின்னு பிளேடு கொம்பாஸ் கூர் ன்னு காலேஜ் பெண்ணுங்ககிட்ட ஏகப்பட்ட ஐயிடங்க கைவசம் இருங்குங்க :D கிராமத்து பெண்ணுங்க பாவங்க அவங்கள யோசியுங்க அண்ணன் :( .[/size]

Edited by சொப்னா

  • Replies 62
  • Views 5.3k
  • Created
  • Last Reply

உலகிலேயே சிறந்தது

நஷ்டம் வந்த போதும் நகராத நட்பு.

கஷ்டம் வந்த போதும் கழராத உறவு.

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா. அது எந்நாடு என்றாலும் நம் நாட்டுக்கு ஈடாகுமா...

அப்பு அர்யுன் உங்கட இபி, புளட் ஏன் முந்தி பெண்களை சேர்த்தவை என்பது ஊரறிந்த விஷயம். நீங்கள் போராடவந்த யாரையும் மதிக்கலை எப்பிடி பெண் போராளிகளை மதிப்பிங்க? உங்களை மாதிரி புலிகள் பெண் போராளிகளை கீழ்த்தரமாய் நடத்தவில்லை. உயரிய மதிப்பு கொடுத்தார்கள். இந்த திரியிலும் புலிகளை இழுக்காட்டி நித்திரை வராதோ? அரசியல் கதைக்க வேண்டிய இடத்தில கதையும்.

காகத்திற்கு கனவிலும் எதோ நினைப்பாம். அர்யுன் அளவிற்கு எங்களுக்கு கனவு வராது.. வாழ்த்துக்கள் அர்யுன்

Edited by Ramanan005

  • கருத்துக்கள உறவுகள்

கனடா பெண்களை அல்ல எல்லோரையும் மதிக்கும் ஒரு பல் கலாச்சார நாடு .ஆனால் அவர்களும் ஆதிக்குடிகள் நிலைப்பாட்டில் மிக பிழையாகவே நடக்கின்றார்கள் .

பெண் உரிமை பற்றி ஆண் ஒருவன் கதைப்பதே எனக்கு உடன் பாடில்லை .

இன்னும் இதில் வேடிக்கை ஈ .பி ,புளொட் பெண் போராளிகளை பயிற்சிக்கு எடுக்க நக்கலடித்த புலிகள் கடைசி காலத்தில் (பத்து வருடங்கள் ) உயிர் பலி கொடுத்தது பல சிறுமிகளையே.

இதை புலம் பெயர்ந்த ---------- வீர காவியமாக்கியது வேறு கதை .

வாந்தி இலக்கம்: 2376 :D

டிஸ்கி:

இயக்கம் ஆரம்பித்த உடனேயே பெண்களைச் சேர்ப்பதற்கும், இயக்கம் சற்று வளர்ந்தபின்னால் பெண்களைச் சேர்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

வாந்தி இலக்கம்: 2376 :D

டிஸ்கி:

இயக்கம் ஆரம்பித்த உடனேயே பெண்களைச் சேர்ப்பதற்கும், இயக்கம் சற்று வளர்ந்தபின்னால் பெண்களைச் சேர்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது..

போராட்டத்தோடு ஒன்றியிருந்தால் இதுபோல் எல்லாம் எழுத வருமா???

தள்ளியிருந்தே துப்பிப்பழகிய கூட்டத்தின் வாரிசு.

வேறு எதை வாந்தியெடுக்கமுடியும்???

:( :( :(

உண்மையாகத்தான் இருக்கும்.

கனடாவில கடைச் சாப்பாடு மலிவாம். வீட்டில சமைக்கவே தேவையில்லை. :D

சுத்தி சுத்தி அர்ச்சுனுக்கு பதில் எழுதி நீங்களும் நொந்து அவரையும் நோகடிக்காமல், கனடாவைப் போல் தமிழீழத்திலும் நமது பெண்கள் சுதந்திரமாக வாழ வழி உண்டா என்று பார்ப்பதுதான் நல்லது.

விடுதலைப் புலிகளின் ஆட்சிகாலத்தில் பெண்கள் பயமின்றி நடுஇரவில் நடந்து சென்றார்கள் என பிரபல பத்திரிகையாளர் எழுதியதாக ஞாபகம். அது காந்தி சொன்ன "இரவு பன்னிரெண்டு மணிக்கு எப்போது ஒரு பெண் கழுத்து நிறைய நகைகளோடு தனியாக வேளியே சென்றுவிட்டுப் பத்திரமாக வீடு திரும்ப முடிகிறதோ, அன்றைக்குத்தான் இந்தியா முழுமையான சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம்." அந்த பெண்களின் துணிவை தமிழீழத்தில் தான் கண்டதாக எழுதியிருந்தார். ஆயினும் இதனை கூகிளில் தேடி பார்த்து இங்கு ஒட்டலாம் என்றால். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

அனாலும் எதிர்பாராத விதமாக, warwick பல்கலைக்கழகத்தை சேர்ந்த MIRANDA ALISON என்ற நபர் 2003இல் எமது பெண்கள் பற்றி எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரை கிடைத்தது.

மேலைத்தேசத்தவர் ஒருவரின் பார்வையில் தமிழீழப் பெண்களின் சுதந்திரத்துக்கான போராட்டம் எப்படிப் பார்க்கப்பட்டது என்பதை அறிய சுவாரஷ்யமாக உள்ளது.

[size=4].............[/size]I would contend, however, that this is equally problematic. Which feminist

discourse does she mean? The LTTE’s female cadres and Women’s Political

Wing do express a form of feminism but clearly not a form Schrijvers is

comfortable with. Further, it seems that she is implying that being a woman in

one’s ‘own right’ entails being somehow ‘unethnicised’, as though concepts of

nation and nationalism are unimportant (or should be unimportant?) if one is a

woman (sisterhood is global?). Many white western feminists in countries not

directly or obviously affected by nationalism or political violence have been

particularly guilty of assuming this; my experiences living in Northern Ireland

in recent years and researching in Sri Lanka have forced me to challenge this.

Women involved in nationalist struggles all over the world have shown that in

their position, for many the above assumption is not only untrue and

impossible but is also undesirable; commitment to the perceived needs of

one’s perceived nation or ethnic group is viewed as just as important, or more

so, than one’s needs ‘as a woman’.

[size=4]Similarly, the debate over whether LTTE women are agents or[/size]

[size=4]victims, liberated or subjugated, emancipated or oppressed strikes me as[/size]

[size=4]an unnecessary and unsophisticated binary. Ultimately Rajasingham Senanayake’s phrase ‘ambivalent empowerment’ seems to fit best.[/size]

[size=4]She argues that:[/size]

[size=4][t]he reality of LTTE women is probably somewhere in-between.[/size]

[size=4]For while they may have broken out of the confines of their allotted[/size]

[size=4]domesticity and taken on new roles as fighters, it is indeed arguable that[/size]

[size=4]they are captive both to the patriarchal nationalist project of the LTTE[/size]

[size=4]leader Prabhakaran and the history and experience of oppression by the[/size]

[size=4]Sri Lankan military. However, to deny these Tamil nationalist women[/size]

[size=4]their agency because they are nationalist is to once again position them[/size]

[size=4]within the “victim” complex, where the militant woman is denied her[/size]

[size=4]agency and perceived to be acting out a patriarchal plot."[/size]

[size=4]http://www2.warwick.ac.uk/fac/soc/pais/people/alison/research/cogs_in_the_wheel/cogs_in_the_wheel.pdf[/size]

Edited by Small Point

இலக்கம்: 2376

கண்வைத்தியர் ஒருவருக்கு விரைவில் $450 கிடைக்கப்போகின்றது என நினைக்கின்றேன்.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

கனடா பெண்களை அல்ல எல்லோரையும் மதிக்கும் ஒரு பல் கலாச்சார நாடு .ஆனால் அவர்களும் ஆதிக்குடிகள் நிலைப்பாட்டில் மிக பிழையாகவே நடக்கின்றார்கள் .

பெண் உரிமை பற்றி ஆண் ஒருவன் கதைப்பதே எனக்கு உடன் பாடில்லை .

இன்னும் இதில் வேடிக்கை ஈ .பி ,புளொட் பெண் போராளிகளை பயிற்சிக்கு எடுக்க நக்கலடித்த புலிகள் கடைசி காலத்தில் (பத்து வருடங்கள் ) உயிர் பலி கொடுத்தது பல சிறுமிகளையே.

இதை புலம் பெயர்ந்த ---------- வீர காவியமாக்கியது வேறு கதை .

ஈப்பி புளொட் பெண்களை சேர்த்ததை எல்லோரும்தான் நக்கலடித்தார்கள்.

புலிகள் போராட்டத்திற்கு பெண்களை சேர்த்தார்கள். அதை இதையும் ஏன் போட்டு குழப்புறீங்கள்?

எல்லா நாட்டு இரனுவத்திலும்தான் பெண்கள் இருக்கிறார்கள். தற்போது ஆப்கனிஸ்தானில் கூட சில அமெரிக்க பெண்கள் உயிர் துறந்துள்ளார்கள்.

உங்களுடைய வாந்தி பிரச்சனை என்ன என்று எழுதினால் வைத்தியம் பற்றி யோசிக்கலாம்.

உங்களுடைய உலகம் இந்த பூமியில் இல்லாததால் கொஞ்சம் விளக்க குறைவு இருக்கலாம்......

அங்கிட்டு வாந்தியையும் எடுக்கலாமே? இதுக்கு இஞ்ச பூமியில எடுக்கணும் என்பதையும் கொஞ்சம் கவனத்தில் எடுக்கலாம். (தமிழ் விளங்கினால்)

அண்ணா, நானும் இங்கு தனியாக தான் வந்தனான். நான் இருக்கிற நாட்டில் எனக்கு சொந்த காரர் எவரும் இல்லை. அப்பிடியிருக்க அப்பிடியான பெண்களை நான் அறியேல்லை என்று என்னட்டையே சொல்லுறது கொஞ்சம் ஓவரா இருக்கு. :D

அம்மா தனக்கு தெரிந்த ஒருவரை நம்பி இந்த நாட்டுக்கு அனுப்பினா. அவர்கள் ஒருநாள் கைவிட்டிட்டார்கள். (அதற்கு முன் கூட என் அலுவல்களை நான் தான் பார்த்தேன், அவர்கள் எந்த உதவியும் எனக்கு செய்ததில்லை.). இந்த நாட்டில் நான் நடுத்தெருவில் நிண்டனான். ஒரு இரவு காரில் தூங்கினான் (இன்னொருவருடைய கார்). அதுவும் இல்லாட்டால் எனக்கு என்ன நடந்திருக்குமோ தெரியாது. பிறகு ஒரு கிளிநொச்சி நண்பியின் (அவருடன் எனக்கு ஒரு நாள் பழக்கம் மட்டும் தான் இருந்தது) உதவியுடன் ஒரு மாதம் இன்னொரு வீட்டில் தங்கினேன். (அவருக்கு நன்றி)

பின்னர் 2 room மாறினேன். அந்த வீடுகளில் உள்ள ஆண்கள் குடித்து விட்டு என்னுடன் தேவையில்லாத கதைகள் கதைக்க முயற்சிப்பார்கள். :wub: மனைவி மார் தடுத்துவிடுவார்கள். நல்லவேளை. :) ஆனாலும் நான் room ஐ விட்டு பெரிதாக வெளியில் வருவதில்லை. என்றாலும் அங்கு இருக்க விரும்பாமல் இப்ப ஒரு வீட்டில் room எடுத்து இருக்கிறன். இப்ப இருக்கிற வீட்டுகாரரை பற்றி தான் இத்திரியின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் பெண்கள் பயமில்லாமல் இருக்கலாம் என்று. :) room தந்தது தவிர வேறெந்த உதவியும் அவர்களால் எனக்கு இல்லை. நிச்சயம் என்னால் இங்கு வாழ முடியும். அதனால் தான் நான் இங்கு இருக்கிறேன்.

இதெல்லாம் சொல்லி பரிதாபம் தேட எனக்கு விருப்பமில்லை. அது தான் நான் இவ்வளவு நாளும் அதை விட்டிட்டு கருத்துகளால் மட்டும் மோதிக்கொண்டிருந்தேன். இன்று கொஞ்சம் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் என்னை மட்டும் வைத்து கதைக்கவில்லை. இங்குள்ள பல பெண்களின் பிரச்சனைகளை அறிந்து கதைக்கிறேன். ஏஜென்சி மூலம் வந்த பல பெண்கள் அந்த ஏஜென்சி காரனாலேயே வழியில் நாசமா போன கதையெல்லாம் கேட்டு வைத்திருக்கிறன். :( எனவே உங்களை விட பெண்கள் மேல் அக்கறைப்பட எனக்கு உரிமை உண்டு.

உங்களுக்கு தெரிந்த சிலர் நன்றாக இருக்கிறார்கள் என்பதற்காக அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும் எண்டு நினைக்காதையுங்கோ. :wub:

யாழ் இணையத்தில் முகம் தெரியாது என்பதால் நான் தனிய இந்த நாட்டில் இருக்கிறேன் என்று துணிந்து சொல்கிறேன். ஆனால் நேரில் யார் கேட்டாலும் நான் சொந்தக்காரருடன் இருக்கிறேன் என்று எனக்கு பல சொந்தங்கள் இருப்பதாக அவர்களை நம்ப வைத்துக்கொண்டிருக்கிறேன். என் பாதுக்காப்பிற்காக. :icon_idea:

நானும் இந்த திரியில் இருந்து விலகுகிறேன். நன்றி வணக்கம். :rolleyes:

Note: அந்த கிளிநொச்சி பெண் யாழின் உறுப்பினராகவோ அல்லது யாழின் வாசகராகவோ இருந்து என்னை இனங்கண்டால் நான் யாழில் உறுப்பினராக இருப்பது பற்றி என் குடும்பத்தவரிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் எழுதிய கருத்திருக்கு மட்டுமே எனது பதில் கருத்தை எழுதி இருந்தேனே தவிர உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிலைமையையோ நீங்கள் இருக்கும் நாட்டையோ நான் அறிய வாய்ப்பில்லை!

உங்களின் திறமையை பயன்படுத்த உங்கள் வாழ்கையில் ஏற்பட்ட ஒரு சந்தர்ப்பம்/ அனுபவமாக நினைத்து உங்களால் முடிந்த அளவு செயல்ப்படுங்கள்.. இங்கு இலவசமாக படிப்பு, வீடு, விசா, அரசாங்க, சட்டரீதியான ஆலோசனைகள் பெற citizens advice bureau என்று ஒரு அமைப்பு உள்ளது, நீங்கள் இருக்கும் நாட்டில் அப்படி உள்ளதா என்று விசாரித்துப் பாருங்கள் (தெரிந்தவர்கள் மூலம் கேட்பது உங்கள் பாதுகாப்பிற்க்குப் பிரச்சனையாக இருக்குமா இருந்தால், அருகில் உள்ள பொது நூலகத்தில் இவ்வாறான information எடுக்கலாம் என நினைக்கிறேன்.. எமது வாழ்கையில் ஏற்படும் ஒவ்வொரு அனுபவங்களும் எம்மை ஒரு திடமான மனிதனாக்ககிறது என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உங்களுக்கு சிறந்த பலனைத் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்! :)

நீங்கள் எழுதிய கருத்திருக்கு மட்டுமே எனது பதில் கருத்தை எழுதி இருந்தேனே தவிர உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிலைமையையோ நீங்கள் இருக்கும் நாட்டையோ நான் அறிய வாய்ப்பில்லை!

உங்களின் திறமையை பயன்படுத்த உங்கள் வாழ்கையில் ஏற்பட்ட ஒரு சந்தர்ப்பம்/ அனுபவமாக நினைத்து உங்களால் முடிந்த அளவு செயல்ப்படுங்கள்.. இங்கு இலவசமாக படிப்பு, வீடு, விசா, அரசாங்க, சட்டரீதியான ஆலோசனைகள் பெற citizens advice bureau என்று ஒரு அமைப்பு உள்ளது, நீங்கள் இருக்கும் நாட்டில் அப்படி உள்ளதா என்று விசாரித்துப் பாருங்கள் (தெரிந்தவர்கள் மூலம் கேட்பது உங்கள் பாதுகாப்பிற்க்குப் பிரச்சனையாக இருக்குமா இருந்தால், அருகில் உள்ள பொது நூலகத்தில் இவ்வாறான information எடுக்கலாம் என நினைக்கிறேன்.. எமது வாழ்கையில் ஏற்படும் ஒவ்வொரு அனுபவங்களும் எம்மை ஒரு திடமான மனிதனாக்ககிறது என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உங்களுக்கு சிறந்த பலனைத் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்! :)

நன்றி என் மீதான அக்கறைக்கு. :)

தனியே வரும் பெண்கள் படும் பிரச்சினைகள் பற்றி உங்களுக்கு அறிய தர தான் நானும் என்னையும் இங்குள்ள வேறு பலரையும் உதாரணமாக கூறினேன். பின்னர் தான் தேவையில்லாமல் கூறிவிட்டேனோ என்று யோசித்தேன். :D பரவாயில்லை. :)

எமது குடும்பத்தில் பண கஸ்ரம் இருந்தாலும் எனக்கு செலவழிக்க பணம் உள்ளது. இலவச உதவியை இன்னும் நாடவில்லை. இனியும் நாட மாட்டேன்.

இந்த நாட்டு மொழி ஆங்கிலம் இல்லை. அனேகமாக இங்கு எவரும் ஆங்கிலம் கதைக்க மாட்டார்கள். (பொதுநூலகத்தில் கூட).

உதவி செய்வதற்கு எவரும் எனக்காக மினக்கட்டு வர மாட்டார்கள். ஏதும் தேவை என்றால் உரிய இடத்திற்கு நான் நேரடியாக செல்வேன். அங்குள்ளவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் ஆங்கிலத்தில் கதைப்பேன். தெரியாவிட்டால் ஆங்கிலம் தெரிந்தவர்களுடன் உரையாடி மொழி பெயர்ப்பேன். இல்லாவிட்டால் வந்து விட்டு இன்னொரு நாள் செல்வேன்.

இங்கு தமிழ் பெண்கள் சிலர் உரிய இடத்திற்கு வந்தால் அவர்களிடம் கேட்டால் மொழி பெயர்ப்பார்கள். ஆனால் அவர்களுடன் வந்த அவர்கள் கணவன் மார் என்னிடம் என்னைப்பற்றி full details கேட்காமல் விட மாட்டார்கள். நானும் சொல்வேன். அதில் முக்கால்வாசி பொய். :D (எல்லா ஆண்களையும் குறை சொல்லவில்லை)

எனவே அதிகமாக ஆங்கிலம் தெரிந்த வேறு நாட்டவர்கள் இருந்தால் அவர்கள் மூலம் மொழிபெயர்ப்பேன். சிலர் phone number கேட்பார்கள். முடியாது என்று சொன்னால் போய் விடுவார்கள். சிலர் பிறகும் கேட்டால் எனக்கு boyfriend இருக்கு என்று சொல்வேன். பிறகு கேட்க மாட்டார்கள்.

தமிழர்கள் மட்டும் துரத்தி துரத்தி கேட்பார்கள். :D (எல்லாரையும் சொல்லவில்லை). நான் அவர்களுடன் கதைக்காமல் phone இல் பாட்டு கேட்டுக்கொண்டு வந்து விடுவேன். (phone எப்ப பறிபடுமோ தெரியாது :D)

எங்கு செல்வதென்றாலும் internet இல் இடத்தை பார்த்து விட்டு செல்வேன். எல்லாம் பழகி விட்டது. வந்து ஒரு வருடம் ஆகி விட்டதே. விசா இல்லாமல் படிக்க தான் முடியாது. ஒரு class க்கு தான் போக முடிந்தது. அதுவும் நான் address மாறிய பின் எடுக்க மாட்டார்கள் என்று நிறுத்தி விட்டார்கள்.

சில நேரம் internet இலும் youtube இலும் படிக்கிறேன். வேறு எங்காவது சேருவதென்றால் இனி september இல் தான். இப்ப summer holiday. அதுவும் விசா இல்லாமல் எடுப்பார்களோ தெரியாது.

கவலைப்படாதீர்கள். என்னால் வாழ முடியும். நான் உட்பட என் குடும்பத்தினர் சிறு வயதிலிருந்து அடிபட்டு அடிபட்டு வளர்ந்தோம். இதெல்லாம் கஸ்ரமாக எனக்கு தெரியவில்லை. ஆனால் இங்கு சிலர் (ஆண்கள் உட்பட) படும் பாட்டை பார்க்க தான் கஸ்ரமாக இருக்கு.

நான் வேறு யாரிடமும் உதவி கேட்பதை விட வேறு ஆட்களுக்கு உதவி செய்தது தான் கூட. (பெருமைக்கு கூறவில்லை) அந்தளவுக்கு அநாதரவாக கைவிடப்பட்டவர்களும் உள்ளார்கள்.

உங்களுக்கும் ஏனையவர்களுக்கும் கடைசியாக ஒன்று சொல்கிறேன். கஸ்ரப்படுபவர்களை பார்த்து இரங்குங்கள். உதவி செய்யுங்கள். ஆனால் பரிதாபப்பட்டு விடாதீர்கள். அது உங்கள் நண்பர்களாக இருந்தாலும் கூட. பரிதாபம் என்பது இறுதியில் உங்களையே ஏமாற்றி விடும் (advise சொல்லேல்லை)

கோபமாக வாதாடியவரில் திடீர் மாற்றம். உங்களை பற்றிய என் கணிப்பை வைத்து கூறுகிறேன். :) (தவறாக இருந்தால் மன்னியுங்கோ. பிறகு அதுக்கும் சண்டை பிடிக்க வந்திடாதையுங்கோ :icon_idea: )

என் மேல் கொண்ட அக்கறைக்கு மீண்டும் நன்றி. :)

முள்ளிவாய்க்காலில் இருந்து பெற்றோரை இழந்து ஆதரவற்று வந்த ஒருவருக்கும் reject. :( அது தான் மிகப்பெரும் கவலை. :( (அவர் இயக்கமா இல்லையா எனக்கு தெரியாது :unsure:)

அவரை 2 நாள் தான் சந்தித்திருந்தேன். எங்கு இருக்கிறார் என்று தெரியாது. ஆனால் அவர் எவரிடமிருந்தும் ஒரு உதவியையும் (பணம்,பொருள் சம்பந்தமாக) பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. அவர் மன வலிமையை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நான் உட்பட. :rolleyes:

அன்புச்சகோதரி காதல் உங்கள் உங்கள் நிலவரம் பற்றி இந்த திரியின் மூலம் அறிந்தேன்.

இவ்வளவு பிரச்சனைகள் மத்தியிலும் உங்கள் மன உறுதியும், விடாமுயற்சியும், கலகலப்பும்,இதுக்கும் மேலாக

தாய்நாட்டின் மேல் உள்ள உங்கள் பற்றும் வியக்க வைக்கிறது. கவலைப்படாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு படிக்கும் உங்கள் கால்களை வையுங்கள் எல்லாம் நன்றாக அமையும் ,நல்லவர்களுக்கு இறைவன் சோதனைகளை கொடுப்பார் கை விடமாட்டார்.............என்னால இயன்ற உதவிகள் உங்களுக்கு எப்போதும் செய்யத்தயாராய் உள்ளேன் ............வெகு விரைவில் உங்கள் வாழ்க்கை வசந்தகாலமாய் விளங்க வாழ்த்துகிறேன் ..............அன்புடன் சகோதரன் ...........

அன்புச்சகோதரி காதல் உங்கள் உங்கள் நிலவரம் பற்றி இந்த திரியின் மூலம் அறிந்தேன்.

இவ்வளவு பிரச்சனைகள் மத்தியிலும் உங்கள் மன உறுதியும், விடாமுயற்சியும், கலகலப்பும்,இதுக்கும் மேலாக

தாய்நாட்டின் மேல் உள்ள உங்கள் பற்றும் வியக்க வைக்கிறது. கவலைப்படாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு படிக்கும் உங்கள் கால்களை வையுங்கள் எல்லாம் நன்றாக அமையும் ,நல்லவர்களுக்கு இறைவன் சோதனைகளை கொடுப்பார் கை விடமாட்டார்.............என்னால இயன்ற உதவிகள் உங்களுக்கு எப்போதும் செய்யத்தயாராய் உள்ளேன் ............வெகு விரைவில் உங்கள் வாழ்க்கை வசந்தகாலமாய் விளங்க வாழ்த்துகிறேன் ..............அன்புடன் சகோதரன் ...........

ஏதோ அவசரத்திலை கொஞ்சம் சொல்லிப்போட்டன். பிறகு தான் ஏன் சொன்னனான் என்று யோசித்தன். :lol: ஆனால் சொன்ன பிறகு ஒண்டும் செய்ய ஏலாது. :D தெரிந்தால் தான் என்ன, என் முகம் தான் யாருக்கும் தெரியாதே. அதாலை அப்பிடியே இருக்கட்டும் எண்டு விட்டுட்டன். :)

நன்றி அண்ணா. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.