Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்திசிகாமணிகளை(Smart phones) வாங்க...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கெட்டிக்கார கைபேசிகள் - 'புத்திசிகாமணிகள்' (Smart phones)[/size]

கைப்பேசிக‌ளின் உபயோகங்களில் தற்பொழுது பாரிய மாற்றங்கள் சமீபத்தில் ஏற்பட்டுள்ள. இவற்றிற்கு காரணம், வன்பொருள்(Hdarware) & மென்பொருள்(Software) மின்னனுவியலில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான புரட்சியாகும்.

கைப்பேசிகள் ஒருகாலத்தில் அடுத்தவருடன் பேச‌வும், குறுஞ்செய்திகள் அனுப்பவும் மட்டுமேவென இருந்த காலம்போய், இன்று இணைய‌ வலைப்பின்னல்களுடன் இணைத்தும், அதற்குமேலும் ப‌ல்வேறு கெட்டிக்கார புத்திக‌ளையும்(Smart Features) கொடுத்து பயனாளிகளுக்கு பலவித அற்புதங்களை கையடக்கத்தில் வந்துள்ளது. ஏறக்குறைய நம்மோடு வரும் நிழல் உதவியாளன் (PA) போல மாறியமை, கைப்பேசித்துறையில் அதீத வளர்ச்சியே.

சரி, நம்மில் சிலர் புத்திசிகாமணிகளை வாங்க நினைத்திருக்கலாம். அவ்வாறு வாங்க‌ உத்தேச‌த்திலிருப்போர்க்கு கீழ்க்க‌ண்ட குறிப்புக‌ள் உதவுமென நினைக்கிறேன்.

கவனிக்க வேண்டியவை:

1. நுண் செயலி(Processor): புத்திசிகாமணிகளின் உடனடி வேலைத் திறனுக்கு இதன் செயல்வேகத்தின் அளவு முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்தது 1GHz இருப்பது நல்லது.

2.இயங்குதளம்(OS) : இந்த புத்திசிகாமணிகள்,க‌ணிணிகளைப் போல‌வே ஏதாவ‌து ஒரு இயங்குதளத்தைக் கொண்டே வெளிவரும். உதாரணமாக கூகிளின் ஆன்ட்ராய்ட், ஆப்பிளின் iOS4, பிளாக்பெர்ரியின் BlackBerry OS ,மைக்ரோசாப்டின் Windows Mobile, நோக்கியாவின் Symbian OS. இந்த‌ இயங்குதளங்களில் எது உங்களுக்கு பரிச்சயமானது,உங்க‌ளுக்கு மிக‌வும் பிடித்த‌மான‌து மற்றும் செளரிய‌மான‌து என‌ முடிவு செய்யுங்கள். ஒவ்வொன்றும் அத‌ற்கென‌ "பய‌ன்பாடு ச‌ந்தை"க‌ளை கொண்டுள்ள‌ன.‌ உதாரணமாக "AppStore or Application Marketplace". இங்கே சிலவற்றை கவனிக்க வேண்டும். நீங்கள் கணணி விளையாட்டுகளையோ அல்லது வேறு சில யுத்திகளைக் கொண்ட புத்திகளையோ(Tools or Utilities) இணையத்தில் தரவிறக்கம் செய்ய இம்மாதிரி பயன்பாடு சந்தைகளில் சில வகைகளுக்கு நீங்கள் பணம் செலுத்தி பெற வேண்டியாதாக இருக்கும். எவற்றில் அதிக இலவசங்கள் (Free) கிட்டுகின்றன என்பதை விசாரியுங்கள். எப்ப‌டியும் உங்க‌ள் புத்திசிகாமணி மேற்சொன்ன‌வைக‌ளில் எதாவ‌து ஒரு இயங்குதளத்தை கொண்டிருப்ப‌தாக‌ பார்த்துக்கொள்ளுங்க‌ள். Androidல் இலவசங்கள் த்ற்பொழுது அதிகமாக கிட்டுகிறது. வசதியானவர்களெனில் iOS4 திறம்.

மேலும் இத்தகைய இயங்குதளங்கள் தற்போதைய பதிப்பாக(Latest Version) இருத்தல் மிக மிக முக்கியம். இல்லையெனில் புதிது புதிதாக வரும் கவர்ச்சியான சில அம்சங்கள்(Features) உங்கள் இயங்குதளத்தின் பதிப்பு(Version) பழையதாக இருந்தால் சரிவர வேலை செய்யாமல் குழப்படி செய்யும்.

3. இணைய இணைப்பு வசதிகள் (Internet Facility) : உங்க‌ள் புத்திசிகாமணியில் கண்டிப்பாக 'Wi-Fi(Wireless Fidelity)' இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கூடவே உங்கள் நாடு, சூழலுக்கேற்ப 4G, UMTS/HSDPA அதாவது 3G,GPRS, EDGE போன்ற இணைய இணையும் வசதிகள் இருக்காவென பாருங்கள். புவி இருப்பு அறிமானி(GPS) இருந்தால் இன்னும் நலம்.

4.தொடுதிரை(Touch Screen) : இது ஒரு கவர்ச்சியான வசதியென்றே சொல்லவேண்டும்.. உங்கள் புத்திசிகாமணியில் தொடுதிரை வேண்டுமா இல்லை, வேண்டாமாவென முடிவுசெய்து கொள்ளுங்க‌ள். சில‌ வகைகளில் இர‌ண்டு வசதியுமே கொண்டுள்ளன.. அதே மாதிரி, திரைகளின் அடர்த்திபுள்ளிகள் (Pixel Resolutions). அதிக அடர்த்திபுள்ளிகள்( உதாரணமாக Full HD -1080P) கொண்ட புத்திசிகாமணியை வாங்கினால் விளையாட்டுகள், காணொளிகளை மிக மிக துல்லியமாக பார்க்க இயலும். மேலும் ஒளியூட்டப்பட்ட இத்திரையில் தோன்றும் அம்சங்கள் (icons), பகல் சூரிய வெளிச்சத்தில் தெளிவாக தெரியுமாவென பார்த்துக் கொள்வது நல்லது.

அதே மாதிரி புத்திசிகாமணியின் தொடு உண‌ர்வு. ந‌ல்ல‌ தொடு உண‌ர்வை முடிவு செய்ய, வாங்குமுன் சிலமுறை தொடுதிரையை தொட்டுப் பார்த்து, அது உங்களுக்கு சரிவருமாவென தெரிந்து கொள்ளுத‌ல் ந‌லம். உங்கள் விரல்கள் விளையாட வசதியான திரையின் அளவும் (Screen Size) வேண்டும்.

5.நினைவகம் (Internal Memory): ப‌ய‌ன்பாடுக‌ளை நிறுவ‌ அதிக‌ உள்ளார்ந்த நினைவகம் தேவைப்ப‌டும். குறைந்த பட்சம் 8 GB யாவது க‌ண‌க்கில் இருத்தல் ந‌ல்ல‌து. மேற்படி அதிகம் தேவைப்பட்டால் அதிகரிக்கும் வசதியும் இருந்தால் இன்னும் நலம்.

6.மின்கலம்(Battery) : கடைசியாக, ஆனால் மிக முக்கியமாக மின்கலத்தின் பயன்பாடு கால அளவையும்(Battery Life Span) தெரிந்து கொண்டு வாங்க வேண்டும்.

7.திருத்தும் சேவை(Service) : இவ்வளவும் பெறுமதியான பொருளை வாங்கிவிட்டு, பிந்நாளில் பழுதானால், அவற்றை திருத்த உரிய வசதியுடன் கூடிய சேவை மையங்கள்(Service Centres) இல்லையென்றால் எப்படி? இவற்றையும் நோக்க வேண்டும்.

galaxy-s3-01b.jpglumia-900-01b.jpgxperia-s-01b.jpgiphone-4s.jpg

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளுக்காக சில பாகங்களின் மாதிரி(typical) படங்களை இணைக்கிறேன்..

ambarella-ione.jpg

நுண்செயலி(Micro Processor):

இயங்குதளம்(Operation System-OS)

இது பல்வேறு கணக்கு கட்டளைக்கொண்ட மென்பொருள் மறையுள் தொகுப்பாகும். கண்களால் பார்க்க இயலாது.

47d7581b-ee17-4a06-9d4e-e1ed209293e8_17.png

நினைவகம் (Memory Module)

pc246878-fcb048_cdma_450mhz_dual_sim_wifi_touch_screen_android_smartphone.jpg

தொடுதிரை(Touch Screen)

battery-for-o2-xda-graphite-pda-smartphone-battery.jpg

மின்கலம்(Battery)

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில வடிவில்.. இப்படி பல பதிவுகள் இணையவெளியில் இருந்தாலும்.. தமிழில் இடம்பெற்றுள்ள இந்தப் பதிவு தமிழ் சிமாட் போன் வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி ராஜவன்னியன்.. இவற்றை பகிர்ந்து கொள்வதற்கு..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, ராஜவன்னியன்.

நன்றி பகிர்வுக்கு ராஜவன்னியன் அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இப்ப ஒரே தமிழ் படிக்கிற ஆர்வத்தில இருக்கிறோம் எங்கே உந்த [size=5]கெட்டிக்கார கைபேசிகள் - 'புத்திசிகாமணிகள்' (Smart phones)[/size]

என்ற சொல்லை கண்டு பிடித்தநீர்கள் என்று சொல்ல முடியுமா?. இல்லாவிட்டால் நீங்கள்தான் கண்டுபிடித்தது/ உருவாகினது அதற்குரிய விளக்கம் ஏதும் இருக்க ? ஏன் என்றால் நாங்களும் எதிகாலத்தில் புதிய பெயர்களை கண்டுபிடிக்க உதவும்..:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்ப ஒரே தமிழ் படிக்கிற ஆர்வத்தில இருக்கிறோம் எங்கே உந்த [size=5]கெட்டிக்கார கைபேசிகள் - 'புத்திசிகாமணிகள்' (Smart phones)[/size]

என்ற சொல்லை கண்டு பிடித்தநீர்கள் என்று சொல்ல முடியுமா?. இல்லாவிட்டால் நீங்கள்தான் கண்டுபிடித்தது/ உருவாகினது அதற்குரிய விளக்கம் ஏதும் இருக்க ? ஏன் என்றால் நாங்களும் எதிகாலத்தில் புதிய பெயர்களை கண்டுபிடிக்க உதவும்.. :)

பதிவிற்கு ஊக்கமளித்த நெடுக்ஸ், நுணா, இணையவன், அபராஜிதன் மற்றும் எரிமலை ஆகியோருக்கு மிக்க நன்றி.

http://senthamil.org/அகராதி/smart

"ஸ்மார்ட்" என்பதற்கு தமிழில் அர்த்தம் என்ன? என இணையத்தில் தேடினேன்..அதற்கு கிடைத்த பதில் "புத்திசாலி" அல்லது "கெட்டிக்காரன்" என பதில் கக்கியது இணையம்..

எங்கள் கிராமத்தில் யாரும் அறிவாளியாக, அவசியத்திற்கு தகுந்தாற்போல செயல்படுவர்களை "புத்தி சிகாமணிகள்" என அழைப்பதுண்டு.

இது சம்பந்தமாக, "இருவர் உள்ளம்" திரைப்படத்தில் ஒரு பாடல் கூட உண்டு...

"ஆராரோரர ஆராரோ...! இது புத்திசிகாமணி பெற்ற பிள்ளை" என தொடங்கும். அந்த ஞாபகம் எனக்கு வந்ததால், நம் சொல்படிகேட்கும் 'ஸ்மார்ட் கைப்பேசி'க்கு புத்திசிகாமணி என நாமம் சூட்டினேன். :icon_idea:

தப்பில்லை தானே? :lol:

பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே

பதிவிற்கு ஊக்கமளித்த நெடுக்ஸ், நுணா, இணையவன், அபராஜிதன் மற்றும் எரிமலை ஆகியோருக்கு மிக்க நன்றி.

http://senthamil.org/அகராதி/smart

"ஸ்மார்ட்" என்பதற்கு தமிழில் அர்த்தம் என்ன? என இணையத்தில் தேடினேன்..அதற்கு கிடைத்த பதில் "புத்திசாலி" அல்லது "கெட்டிக்காரன்" என பதில் கக்கியது இணையம்..

எங்கள் கிராமத்தில் யாரும் அறிவாளியாக, அவசியத்திற்கு தகுந்தாற்போல செயல்படுவர்களை "புத்தி சிகாமணிகள்" என அழைப்பதுண்டு.

இது சம்பந்தமாக, "இருவர் உள்ளம்" திரைப்படத்தில் ஒரு பாடல் கூட உண்டு...

"ஆராரோரர ஆராரோ...! இது புத்திசிகாமணி பெற்ற பிள்ளை" என தொடங்கும். அந்த ஞாபகம் எனக்கு வந்ததால், நம் சொல்படிகேட்கும் 'ஸ்மார்ட் கைப்பேசி'க்கு புத்திசிகாமணி என நாமம் சூட்டினேன். :icon_idea:

தப்பில்லை தானே? :lol:

ஆழ்ந்த கருத்து, தீர்த்தது சந்தேகம்..... :icon_mrgreen::lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, தமிழ்சூரியன், வேந்தன் மற்றும் கிஸ்ஸன்.

Android_Market.png

இன்று ஆன்ட்ராய்ட்(Android) இயங்குதளத்தில் கிட்டும் தமிழ் பயன்பாடு (Tamil Applications) மென்பொருட்களை பயனர் சந்தையில்(Application Market) துழாவினேன்...

கிட்டியவைகளின் சிறு அட்டவணை:

திருக்குறள்

கல்கியின் நாவல்கள்

தமிழ் பாடல்கள் (டிஜிட்டல் தரம்)

தமில் வானொலி

தமிழ் ஊடகங்கள்

தமிழ் தொலைக்காட்சிகள்

தமிழ் நாட்காட்டி

தமிழ் நகைச்சுவை

தமிழ் அகராதி

பாரதியார் படைப்புகள்

MTC பேருந்து வழித்தடம்

திருமணப் பொருத்தம்

பல தமிழ் நடிக, நடிகைகளின் படங்கள்

ஜாதக பொருத்தம்

....

....

....

யப்பா...! பட்டியல் இன்னும் நீள்கிறது

Edited by ராஜவன்னியன்

.

தமிழில் தொழில்நுட்ப தகவல் முயற்சிகள் கொஞ்சம் சிக்கலானவைதான். :D

பாராட்டுக்கள் ராஜவன்னியன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.