Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ANNA-FLYOVER.jpg

bus-accident-edi.jpg

சென்னை:

சென்னை, அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர போக்குவரத்துக்கழக பஸ் இன்று பிற்பகல் தலை குப்புறக் கவிழ்ந்து விழுந்தது. இதில் 38 பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அண்ணா சாலையில் ஜெமினி அருகே உள்ளது அண்ணா மேம்பாலம். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் இந்த மேம்பாலமும் ஒன்று. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி இது.

இன்று பிற்பகல் இந்த மேம்பாலத்தின் வழியே 17 எம் என்ற பேருந்து பிராட்வேயிலிருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்தது. பாலத்தின் மீதுஅது சென்று கொண்டிருந்தபோது வடபழனி செல்ல இடதுபுறமாக பஸ்சைத் திருப்பியுள்ளார் டிரைவர். அப்போது திடீரென கட்டுப்பாடு இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்தது.

பஸ் மேலிருந்து தலைகுப்புற விழுந்ததால் பஸ்சில் இரு்ந்தவர்கள் அலறித் துடித்தனர். பஸ் மேலிருந்து விழுவதைப் பார்த்த கீழே சென்று கொண்டிருந்தவர்கள் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.

இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாகியது. விபத்தை நேரில் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து பேருந்தையும் பயணிகளையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் 38 பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் பலருக்கும் காயம் பலமாக இருந்தது. காயமடைந்த அனைவரும் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த விபத்து காரணமாக அண்ணா சாலையே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துப் போய் விட்டது.

[size=5]அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் விழுவது இதுவே முதல் முறை![/size]

Update:1

சென்னை மாநகரம் எத்தனையோ விபத்துக்களை சந்தித்திருக்கிறது. கோரமான, மோசமான விபத்துக்களை சந்தித்திருக்கிறது. ஆனால் சென்னை மாநகரின் முத்திரை அடையாளமான அண்ணா மேம்பாலத்திலிருந்து ஒரு பஸ் விழுந்து இதுவே முதல் முறை என்பதால் சென்னை முழுவதும் இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

முன்பு ஜெமினி மேம்பாலம் என்று அழைக்கப்பட்டது அண்ணா மேம்பாலம். இதற்குக் காரணம், அப்பகுதியில்தான் ஜெமினி ஸ்டூடியோ முன்பு இருந்தது. பிறகுதான் இதற்கு அண்ணா மேம்பாலம் என பெயர் மாற்றினர். மத்திய சென்னையின் மிக முக்கிய பாலம் இது.

1973ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் இது. மேலும் இதுதான் சென்னை மாநகரின் முதல் மேம்பாலமும் கூட. அண்ணா சாலை, உத்தமர் காந்தி சாலை என அழைக்கப்படும் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ஆகியவற்றில் போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.

அண்ணா சாலையின் நட்ட நடுவில் இருக்கும் இந்த மேம்பாலத்தால் அண்ணா சாலையின் இரு பக்கம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ஜிஎன் செட்டி சாலை உள்ளிட்டவை பயன் பெறுகின்றன. இந்த மேம்பாலத்தின் ஒரு முனையில்தான் அமெரிக்க தூதரகம் உள்ளது. மறுபக்கம் முன்னாள் சபையர் தியேட்டர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நூலகம் உள்ளிட்டவை உள்ளன.

முன்பு ஜெமினி ஸ்டுடியோ இருந்த இடத்தில் இப்போது பார்சன் மேனார் அடுக்குமாடிக் கட்டடம் வந்து விட்டது. அதேபோல பார்க் ஹோட்டலும் வந்து விட்டது. இந்த பாலத்திற்கு அடுத்த பக்கம்தான் கடந்த திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா உள்ளது. இந்த மேம்பாலத்திற்குக் கீழ்தான் கிண்டியில் குதிரைப் பந்தயம் ஒழிக்கப்பட்டதன் நினைவாக குதிரையுடன் கூடிய வீரன் சிலை நிறுவப்பட்டது.

இந்த மேம்பாலத்தை ஒரு நாளைக்கு குறைந்தது லட்சம் வாகனங்கள் கடந்து செல்வதாக கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர மக்களின் பிரிக்க முடியாத ஒரு அடையாளமான அண்ணா மேம்பாலத்தி்ல இதுவரை பெரிய அளவில் விபத்து நடந்ததில்லை. சிறிய அளவிலான விபத்துக்கள் நடந்துள்ளன. அதேசமயம், அந்தப் பாலத்திலிருந்து ஒரு பேருந்து விழுவது என்பது இதுதான் முதல் முறையாகும்.

எனவே சென்னை முழுவதும் இந்த விபத்துச் செய்தி காட்டுத் தீ போல பரவி விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் விழுந்த பஸ்ஸை பார்க்க அங்கு கூடியதால் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய் விட்டது.

Update:2

[size=5]செல்போனில் பேசியபடி ஓட்டியதாலும், டிரைவர் சீட் கழன்று விழுந்ததாலும் விபத்து?[/size]

சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து நகரப் பேருந்து கவிழ்ந்து விழுந்த சம்பவத்தால் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பஸ்சின் டிரைவர் செல்போன் பேசியபடி ஓட்டியதாகவும், அப்போது திடீரென அவரது சீட் கழன்று விழுந்ததாலும் விபத்து நேரிட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

சென்னை பிராட்வேயிலிருந்து வடபழனி நோக்கி 17எம் பஸ் சென்று கொண்டிருந்தது. அண்ணா சாலையிலிருந்து மேம்பாலத்தில் ஏறிய பேருந்து வடபழனிக்கு செல்ல ஜிஎன் செட்டி சாலைக்கு போக வேண்டும். அதற்காக பேருந்து திரும்பியபோதுதான் விபத்து ஏற்பட்டு விட்டது.

இதுகுறித்து எதிர்திசையில் வந்த பேருந்தில் பயணித்த பயணிகள் திகிலுடன் கூறிய தகவல்கள்....

விபத்தில் சிக்கிய பேருந்தின் டிரைவர் செல்போனில் பேசியபடி பஸ்ஸைச் திருப்பியதை நாங்கள் பார்த்தோம். காதில் செல்போனை வைத்திருந்தார், கை ஸ்டிரியங்கை திருப்பிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் சீட் கழன்று கொண்டது. இதனால்டிரைவர் நிலை தடுமாறினார். அவரால் வேகமாக திரும்பிய வண்டியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பேருந்து தடுப்புச் சுவற்றின் மீது மோதி கீழே விழுந்தது என்று கூறியுள்ளனர்.

விபத்தில் டிரைவரும் படுகாயமடைந்துள்ளார். அவரிடமும், பேருந்தில் பயணித்தவர்களிடமும் விசாரணை நடத்தும்போதுதான் உண்மை என்ன என்று தெரிய வரும்.

Thatstamil.com

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜ vanniyan,

விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். - ஒருவர் இறந்ததாகவும் செய்தி வந்திருந்தது சரியோ தெரியாது .

இதுவாக சென்னையில் உள்ள பெரிய மேம்பாலம்? இதை விட பெரிய பாலங்களும் உண்டா?

மிகவும் கவலைக்கிடமான செய்தி , விபத்தில் காயமானவர்கள் அனைவரும் கூடிய சீக்கிரத்தில் சுகமடைந்து அவர்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இரவனைப்பிரார்த்திக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜ vanniyan,

விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். - ஒருவர் இறந்ததாகவும் செய்தி வந்திருந்தது சரியோ தெரியாது .

இதுவாக சென்னையில் உள்ள பெரிய மேம்பாலம்? இதை விட பெரிய பாலங்களும் உண்டா?

நானும் உங்கள் வேண்டுதலில் பங்குபெறுகிறேன்... அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

இல்லை.... இதைவிட பெரிய மேம்பாலங்கள் நான்குஉள்ளன.

4795308081_6c73761033.jpg

1. தென் தமிழ்நாட்டிலிருந்து சென்னை நுழையும் வாயிலில் கத்திப்பாரா சந்திப்பில் உள்ள மேம்பாலம்.

02THKOYAMBEDU_JUNCT_279641f.jpg

2. சென்னை கோயம்பேடு - நெற்குன்றம் சந்திப்பில் உள்ள மேம்பாலம்.

flyover-at-padi-junction.jpg

3. சென்னை அண்ணா நகர்-பாடி சந்திப்பில் உள்ள மேம்பாலம்

maduravoyalnew.jpg

4. சென்னை புறவழிச்சாலை - மதுரவாயலில் புதிதாக கட்டபட்டுள்ள மேம்பால்ம்.

.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தரவுகளுக்கு

இதுக்குத்தான் உங்களைமாதிரி புத்திசிகமானிகள் வேணும், அவைகளோட தொடர்பு வைத்திருக்க வேண்டும் எண்டு ஆக்கள் சொல்லுகிறவை :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தரவுகளுக்கு...

இதுக்குத்தான் உங்களைமாதிரி புத்திசிகமானிகள் வேணும். :)

ஒரே வெட்கமா இருக்கு..கு..கு..! :icon_mrgreen:

பாராட்டுக்கு நன்றி எரிமலை.. எல்லாம் கூகிளாண்டவர் செயல்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மேலதிக படங்கள்...[/size]

AVN_FIRSTPIC_1126532g.jpg

AVN_UNDERSIDE_1126535g.jpg

AVN_NISHESHOT_1126537g.jpg

AVN_CRANE_1126539g.jpg

AVN_FLIPPED_1126540g.jpg

AVN_COPCLICK_1126547g.jpg

[size=5]விபத்து நடந்த இடத்தை வேடிக்கை பார்க்கும் மக்கள்[/size]

AVN_MASSCROWD_1126546g.jpg

[size=5]கதீட்ரல் சாலையில் போக்குவரத்து நெரிசல்[/size]

AVN_JAMJAM_1126538g.jpg

நன்றி: 'தி இந்து''

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]விபத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்[/size]

DSC_7571.jpg

DSC_7492.jpg

[size=5]காவல்துறையின் மீட்புப் பணி[/size]

DSC_7448.jpg

DSC_7453.jpg

DSC_7472.jpg

DSC_7495.jpg

-டெக்கான் கெரால்ட்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]விபத்து நடந்த இடம் குறிக்கபட்ட செய்மதி படம்[/size]

2u9lv0g.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக பேரூந்துகள் அநேகமாக... மக்கள் நெரிசலாகவே பயணிக்கும்.

அது மேம்பாலத்திலிருந்து தலை குப்புற கவிழ்ந்தது என்னும் போது... அதற்குள்ளிருந்த மக்கள் பெரிதும் அவதிப்பட்டிருப்பார்கள்.

காயமுற்றவர்கள் விரைவில் குணம் பெற, இறைவனை வேண்டுகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கவிழ்ந்த பேருந்தின் வழித் தடம், அம்புக்குறிகளால் [/size]

[size=5]வரையப்பட்டுள்ள செய்மதி படம்[/size]

2c12jq.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடுகளில் இப்படியான வளைவுகளுக்கு வேகத்தடையுடன் கமராவும் வைத்திருப்பார்கள்.எனினும் விபத்துக்குள்ளாகிய அனைவரும் நலமுடன் வீடு திரும்ப வேண்டும்.

படங்களுடன் கூடிய தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன்.

[size=4]அனைவரும் நலமடைய வேண்டுகிறேன்.[/size]

[size=4]இப்படியான நிகழ்வுகளை தவிர்க்க ஊழலும் அரசியலும் கலக்காத தலைமை வேண்டும். அதை மக்கள் தெரிய வேண்டும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

காயம்பட்டவர்கள் விரைவில் குணமடையவேண்டும்..

பாலங்களின் தடுப்புச்சுவர் என்பது உண்மையில் தடுக்கும் சுவராக இருக்க வேண்டும்.. செங்கல்லில் கட்டியுள்ளார்கள்போல் உள்ளது.. :unsure: பொதுப்பணித்துறையில் உள்ள இரண்டுபேரைத் தூக்கி உள்ளேபோட வேணும்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் எங்கும் ஊழல்.

அதற்குப்பலியாவது ஏழை மக்கள்.

அனைவரும் குணமடைய பிரார்த்திப்போம்.

பஸ் விபத்தில் காயப்பட்டாவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விபத்தில் காயம் அடைந்த அனைத்து உறவுகளும் விரைவில் குணமடைய வேண்டுகின்றேன் !

மேற்கு நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மனித உயிருக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைவு இதுவே இவ்வாறான விபத்துகளுக்கு முக்கிய காரணம் .

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் விபத்தில் காயப்பட்டாவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா மேம்பாலம், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையினால் (TN Highways Department) கட்டப்பட்டு. பராமரிக்கபட்டு வருகிறது. விபத்து நடந்த மேம்பாலத்தின் கீழே சாலையின் மறுபுறம் நெடுஞ்சாலை துறையின் இம்மேம்பால பராமரிப்பு அலுவலகமும் உள்ளது. கீழே காணும் காணொளியில் "கார்த்தி சிதம்பரம்" என எழுதப்பட்டுள்ள சுற்றுச்சுவர், இவ்வலுவலகத்தின் மதில்சுவர் தான்!

காணொளி இதோ...

.

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]யாருமே ஓட்ட அஞ்சிய பஸ்- டிரைவர் சீட்டை கயிற்றால் கட்டி 'டிரிப்' அடித்த போக்குவரத்து கழகம்![/size]

[size=4]சென்னை: சென்னை அண்ணா மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த பஸ் மிகவும் மோசமான நிலையில் இருந்த ஸ்பேர் பஸ்ஸாம். யாருமே இந்த பஸ்ஸை ஓட்ட முன்வருவதில்லையாம். பல ஓட்டைகளுடன் கூடிய இந்த பஸ்ஸின் டிரைவர் சீட்டை கயிறு போட்டுக் கட்டி வைத்திருந்தனராம். இந்த பஸ்ஸைத்தான் நேற்று டிரைவர் பிரசாத் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகியிருக்கிறார்.[/size]

[size=4]நேற்று சென்னை அண்ணா மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகி கீழே இருந்த சர்வீஸ் ரோட்டில் ஒரு நகரப் பேருந்து விழுந்து நொறுங்கியது. இதில் 38 பேர் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.[/size]

[size=4]விபத்தில் சிக்கிய பஸ் வட பழனி டிப்போவைச் சேர்ந்ததாகும். இதன் எண் டிஎன் 01 4680. இது உண்மையில் ஒரு ஸ்பேர் பஸ்ஸாகும். ஏதாவது பஸ் பழுதுபட்டு விட்டால் இந்தப் பேருந்தை டிரிப்புக்கு அனுப்பி வைப்பார்கள்.[/size]

[size=4]ஆனால் இந்தப் பஸ்ஸே மகா மோசமான நிலையில் இருந்துள்ளதாம். எந்த டிரைவருமே இந்தப் பஸ்சை ஓட்டமுன்வர மாட்டார்களாம். அவ்வளவு பிரச்சினைகள் இதில் இருந்துள்ளன. மேலும் மகா கொடுமையிலும் கொடுமையாக டிரைவர் சீட்டே கேவலமாக இருந்துள்ளது. அதாவது கயிறு போட்டு டிரைவர் சீட்டை, பஸ்சின் தரைத் தளத்தில் உள்ள கம்பியோடு கட்டி வைத்துள்ளனர்.[/size]

[size=4]இந்த சீட்டில் அமர்ந்துதான் டிரைவர் பிரசாத் பஸ்ஸை ஓட்டிச் சென்றுள்ளார். பஸ்சில் பல குழப்பங்கள், இருந்தாலும் டிரைவர் பக்கம்தான் முக்கியத் தவறு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பஸ்ஸை இடதுபுறமாக திருப்பியபோது அவர் வலது கையில் செல்போனில் பேசியபடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இடது கையால் ஸ்டிரியங்கைப் பிடித்துள்ளார். பஸ்ஸைத் திருப்பும்போது வேகமாக அது போயுள்ளது. அதேசமயத்தில் டிரைவர் சீட்டும் பிடுங்கிக் கொள்ள பஸ் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளாகி விட்டது.[/size]

[size=4]விபத்தில் சிக்கிய பஸ் 2007ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகும். இதன் மதிப்பு ரூ. 10 லட்சம். இந்தப் பஸ்சின் ஆயுட்காலம் ஏற்கனவே முடிந்து விட்டது. இருந்தாலும் ஒட்டுப்போட்டு ஓட்டி வந்துள்ளனர்.[/size]

[size=4]இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக பணியாளர் சங்கத்தின் தலைவர் சந்திரன் கூறுகையில், இந்த பஸ்ஸை வட பழனி டிப்போவில் யாருமே விரும்ப மாட்டார்கள். ஒரு சாதாரண டிரிப் அடிக்கக் கூட அஞ்சுவார்கள். காரணம், இதில் அவ்வளவு கோளாறுகள் இருந்தன. டிரைவர் சீட்டும் முறையாக இல்லை என்றார்.[/size]

[size=4]இந்த பஸ் மட்டுமல்லாமல் மேலும் பல பஸ்கள் இப்படித்தான்ஓட்டை உடைசலாக உள்ளன. பயணிகளின் உயிர்கள் குறித்தோ, டிரைவர்களின் பாதுகாப்பு குறித்தோ போக்குவரத்துக் கழகம் சற்றும் அக்கறை காட்டுவதில்லை. மாறாக, ஏதாவது ஒரு பஸ்ஸைக் கொடுத்து ஓட்டச் சொல்லி டிரைவர்களை வற்புறுத்துகின்றனர். வேறு வழியில்லாமல் அவர்களும் இதுபோன்ற பஸ்களை ரிஸ்க் எடுத்து ஓட்டிச் செல்கின்றனர் என்றார்.[/size]

[size=4]ஆனால் இதை வடபழனி டிப்போ அதிகாரிகள் மறுத்துள்ளனர். அந்தப் பஸ் ஸ்பேர் பஸ் அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் டிரைவர் சீட்டை கயிறு போட்டுக் கட்டியிருந்தனரா என்பது குறித்து அவர்கள் பதிலளிக்க மறுக்கிறார்கள்.[/size]

[size=4]பஸ் ஓட்டையோ, உடைசலோ மொத்தத்தில் பயணிகள் உயிருடன் விளையாடி விட்டனர்.[/size]

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மனித உயிருக்கு மதிப்பு கொடுப்பது கிடையாது ! [/size]

[size=5]அதனாலேயே இப்படியான அலற்ட்சியபோக்கில் பேருந்து ஓட்டுனர்கள் .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப் பட்டவர்கள், விரைவில் நலம்பெறப் பிரார்த்திக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டுநரில் ஒரேயடியாகப் பழியைப் போட்டுவிடமுடியாது.. :unsure:

  • செல் தொலைபேசி பேசியபடி பேருந்து ஓட்டக்கூடாது என்கிற சட்டம் தமிழகத்தில் / இந்தியாவில் உள்ளதா? :rolleyes: இருந்தால் முதல் தவறு ஓட்டுநரில்.
  • திருப்பத்தில் வளைத்தபோது வேகம் அதிகமாக இருந்துள்ளதால் இருக்கையை நிலையில் வைத்திருந்த கயிறு அறுந்துள்ளது. இதற்குப் போக்குவரத்துக் கழகமே பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • பாலத்தின் தடுப்புச் சுவரை முட்டியபோது அந்தத் தடுப்புச்சுவர் வாகனத்தை வீதிக்குள்ளே வைத்திருக்க வேண்டும். இது நடக்காததால் நெடுஞ்சாலைத்துறையிலும் தவறு உள்ளது.

ஆனால் கடைசியில் ஓட்டுநரின் தலையில் கொண்டுவந்து முடித்துவிடுவார்கள் (தனிமனிதத் தவறு).. :rolleyes:

ஓட்டுநரில் ஒரேயடியாகப் பழியைப் போட்டுவிடமுடியாது.. :unsure:

  • செல் தொலைபேசி பேசியபடி பேருந்து ஓட்டக்கூடாது என்கிற சட்டம் தமிழகத்தில் / இந்தியாவில் உள்ளதா? :rolleyes: இருந்தால் முதல் தவறு ஓட்டுநரில்.
  • திருப்பத்தில் வளைத்தபோது வேகம் அதிகமாக இருந்துள்ளதால் இருக்கையை நிலையில் வைத்திருந்த கயிறு அறுந்துள்ளது. இதற்குப் போக்குவரத்துக் கழகமே பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • பாலத்தின் தடுப்புச் சுவரை முட்டியபோது அந்தத் தடுப்புச்சுவர் வாகனத்தை வீதிக்குள்ளே வைத்திருக்க வேண்டும். இது நடக்காததால் நெடுஞ்சாலைத்துறையிலும் தவறு உள்ளது.

ஆனால் கடைசியில் ஓட்டுநரின் தலையில் கொண்டுவந்து முடித்துவிடுவார்கள் (தனிமனிதத் தவறு).. :rolleyes:

அந்த தடுப்புச் சுவரின் பலம் இவ்வளவு தான் என்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த மேம்பாலத்தின் வழியாக எத்தனை தரம் மோட்டர் சைக்கிளில் வலம் வந்திருப்பேன்.

காயமுற்றோர் சீக்கிரம் குணமடையட்டும். இதனால் எத்தனை குடும்பங்களுக்கு கஷ்டம் வரப்போகிறது!

மற்றைய மேம்பாலங்கள் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி ராஜவன்னியன்.

சென்னை எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது. மதுரவாயல், கோயம்பேடு, அண்ணாநகர், பாடி எல்லாம் நான் திரிந்த இடங்கள். பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

....சென்னை எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது. மதுரவாயல், கோயம்பேடு, அண்ணாநகர், பாடி எல்லாம் நான் திரிந்த இடங்கள். பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

சிறு தகவல்கள்:

சென்னையின் சமீபத்திய வளர்ச்சி அபரிமிதமானது.

விரைவில் மீஞ்சூர், திருவள்ளூர், பூந்தமல்லி, தாம்பரம், கேளம்பாக்கம் போன்ற ஒரு முழுவட்ட சென்னையின் புறநகர்கள் பகுதிகள், சென்னை மாநகரத்துக்குள் சேர்ந்து விழுங்கப்படும். இப்போதே சென்னை மாநகரின் மக்கள்தொகை 7 மில்லியனை (70 இலட்சம்) தாண்டிவிட்டது.

பெருங்களத்தூரிலிருந்து கிண்டி வரை பல மேம்பாலங்கள் வந்துவிட்டன..மதுரவாயலிலிருந்து சென்னை ராயபுரம் வரை ஏறக்குறைய 14கி.மீ வரை தொடர் மேம்பாலம் கட்டும்பணி நடந்துவருகிறது.

அதேபோல் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை ஒரு பாதையும், வண்ணாரப்பேட்டை முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை என இன்னொரு பாதையும் இரு வெவ்வேறு வழிதடங்களில் மெட்ரோ இரயில் அமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. இதில் வண்ணாரப்பேட்டை முதல் அண்ணா நகர் திருமங்கலம் வரை நிலத்தடி இரயில் நிலையங்களாகும். அதே போல் மற்றொரு வழித் தடத்தில் சென்னை சென்ட்ரல் முதல் சைதாப்பேட்டை வரை நிலத்தடி ரயில் நிலையங்களாகும்.

இதனால் காடுமாதிரி கிடந்த கோயம்பேடு,போரூர் பகுதிகளில் வீட்டுமனைகளின் மதிப்பு, கடந்த பத்தே ஆண்டுகளில் 11 மடங்காக உயர்ந்துள்ளது.

Edited by ராஜவன்னியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.