Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து பிள்ளைகளுக்கு குறையாமல் பெற்றெடுக்குக

Featured Replies

என் மகன் கிட்ட உனக்கு தம்பி வெணுமா? தங்கச்சி வெணுமா என்று கேட்டேன்.

என்ன சொன்னான்? போப்பா, உனக்கு வேற வேலையே இல்லையான்னு கேட்டுட்டான்.

யாரைக் கேட்டு அந்த மகனைப் பெற்றீர்கள்?

தாங்களும் நேரடி பங்களிப்பு செய்யவேண்டும் என்று வரும் போது, எப்படியெல்லாம் சாக்குப் போக்கு சொல்லி, நழுவல் பிழைப்பு நடாத்தமுடியும் என்பதற்கு இவ்வாறான கருத்துக்கள் நல்ல உதாரணம்!

  • Replies 145
  • Views 9.2k
  • Created
  • Last Reply

துளசியும், ஆராவமுதனுக்கும் பகிடி, வெற்றி தெரியாது போல கிடக்கு.. நகைச்சுவை உணர்வு என்பது மனித சாதிக்கே உள்ள ஒரு தனித்துவமான் ஒரு குணமாம்.

துளசியும், ஆராவமுதனுக்கும் பகிடி, வெற்றி தெரியாது போல கிடக்கு.. நகைச்சுவை உணர்வு என்பது மனித சாதிக்கே உள்ள ஒரு தனித்துவமான் ஒரு குணமாம்.

அண்ணா, பகிடி தெரிந்ததால் தான் அந்த ஜோக் எங்களுக்கும் தெரியும் என்று போட்டிருக்கிறன். வேறு எங்காவது அந்த ஜோக் போட்டிருந்தால் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டன். இங்கு பலர் எழுதிய கருத்துகளை நக்கலடிப்பது போல் உங்கள் ஜோக் அமைந்ததால் தான் நான் அப்படியொரு கேள்வி கேட்டேன். :)

Edited by துளசி

இது எப்படி நக்கலாக இருக்க முடியும்? இப்படியான நடை முறைச் சிக்கல்களையும் சிந்திக்க பதிய பட்ட கருத்தாக ஏன் ஏற்றுக் கொள்ள் முடியாது.

இது எப்படி நக்கலாக இருக்க முடியும்? இப்படியான நடை முறைச் சிக்கல்களையும் சிந்திக்க பதிய பட்ட கருத்தாக ஏன் ஏற்றுக் கொள்ள் முடியாது.

அதை நீங்களும் சிந்திக்கும் விதமாக சொல்லியிருக்கலாம் என்று சொல்கிறேன். மற்றவர்கள் நீங்கள் சொன்னதை பார்த்து சிந்தித்தார்களா சிரித்தார்களா என்பதை மேல்நோக்கி சென்று பாருங்கள். நான் கேட்ட கேள்விக்கும் முடிந்தால் பதிலளியுங்கள். ஏன் கேட்டேன் என்று பிறகு சொல்கிறேன். :)

Edited by துளசி

சிந்திக்கவும் சிரிக்கவும் எடுக்கபட்ட முயற்சி.

இன்றிலிருந்து மற்றவர்களை திருத்த முடியாவிட்டாலும் நான் சரியாக இருக்கிறேனா என்று சிந்தித்து என்னை திருத்திக்கொள்ள முயற்சிக்க போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அதை நீங்களும் சிந்திக்கும் விதமாக சொல்லியிருக்கலாம் என்று சொல்கிறேன். மற்றவர்கள் நீங்கள் சொன்னதை பார்த்து சிந்தித்தார்களா சிரித்தார்களா என்பதை மேல்நோக்கி சென்று பாருங்கள். நான் கேட்ட கேள்விக்கும் முடிந்தால் பதிலளியுங்கள். ஏன் கேட்டேன் என்று பிறகு சொல்கிறேன். :)

சிந்திக்கவும் சிரிக்கவும் எடுக்கபட்ட முயற்சி.

இன்றிலிருந்து மற்றவர்களை திருத்த முடியாவிட்டாலும் நான் சரியாக இருக்கிறேனா என்று சிந்தித்து என்னை திருத்திக்கொள்ள முயற்சிக்க போகிறேன்.

பொன்னியின் நகைச்சுவையை வாசித்து, சிரித்து மகிழ்ந்தவர்களில் நானுமொருவன் துளசி.

நகைச்சுவைகளை.... நாம், ரசிக்க வேண்டும். எல்லா... விடயங்களிலும் நாம் சீரியசாக இருக்க முடியாது :) .

என் மகன் கிட்ட உனக்கு தம்பி வெணுமா? தங்கச்சி வெணுமா என்று கேட்டேன்.

என்ன சொன்னான்?

போப்பா, உனக்கு வேற வேலையே இல்லையான்னு கேட்டுட்டான்.

சிந்திக்கவும் சிரிக்கவும் எடுக்கபட்ட முயற்சி.

இன்றிலிருந்து மற்றவர்களை திருத்த முடியாவிட்டாலும் நான் சரியாக இருக்கிறேனா என்று சிந்தித்து என்னை திருத்திக்கொள்ள முயற்சிக்க போகிறேன்.

நன்றி உங்கள் பதிலுக்கு. :)

இனியும் உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. பிறகு ஓடியே போய்விடுவீர்கள். :D

நான் எழுதியதை எனக்கே நக்கலாக திரும்ப பிரயோகிப்பதால் உங்களுக்கு நான் கூற விரும்புவது,

என்னை நான் திருத்திக்கொண்டு வருகிறேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. :) அதற்காக ஒரேயடியாக எழுதியவுடன் திருந்தி விட்டேன் என்று அர்த்தமல்ல. அது என்னால் முடியாது. படிப்படியாக தான் முடியும். அதனால் தான் "என்னை திருத்திக்கொள்ள முயற்சிக்க போகிறேன்" என்று போட்டிருக்கிறேன். :)

சிந்திக்கவும் சிரிக்கவும் என்று நீங்கள் கூறினாலும் அது சிரிப்பதற்கு மட்டுமாகவும் பலரின் கருத்துகளை நக்கலடிப்பதாகவும் இருந்ததாக தான் எனக்கு பட்டது. மற்றவர்களுக்கு அப்படி அமையாமல் இருக்கலாம்.

சிந்திக்கவும் என்று நீங்கள் கூறியிருப்பதால் உங்களையும் சிந்திக்க தூண்டுகிறேன். அதற்கு தான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன், இன்னும் பதில் கூறவில்லை.

(உங்களுக்கு எத்தனை சகோதரம்? அதில் எத்தனையாவது நீங்கள்? உங்கள் பெற்றோருக்கு எத்தனை சகோதரம்?)

  • உங்கள் பெற்றோர் தன் ஒரு பிள்ளையிடம் கேட்டு விட்டா அடுத்த பிள்ளை பெற்றார்கள்?
  • அல்லது உங்கள் அப்பப்பாவும் அப்பம்மாவும் தன் ஒரு பிள்ளையிடம் கேட்டு விட்டா உங்கள் அப்பாவை பெற்றார்கள்? அல்லது உங்கள் அப்பாவிடம் கேட்டு விட்டா உங்கள் சித்தப்பாவை பெற்றார்கள்?

நீங்களும் சிந்தியுங்கள். :D (உங்களுக்கு சகோதரமில்லை, உங்கள் அப்பாவுக்கு, அம்மாவுக்கு சகோதரமில்லை என்று மட்டும் சொல்லிப்போட வேண்டாம்)

சிரிக்கவும் சிந்திக்கவும் என்று கூறும் நீங்கள் நான் சிந்திக்கும் வகையில் சீரியஸாக கேட்ட கேள்விக்கு கோபப்படுவதேனோ? :D என்ன குழப்பிறனோ? :D

எனினும் நான் அப்படி சீரியசாக கேள்வி கேட்டதற்கு மன்னித்து கொள்ளுங்கள். :)

நான் திருந்துவதற்கு முயற்சிப்பதால் வீண் விவாதத்திலிருந்து விடுபடுகிறேன்.... :D

மீண்டும் நன்றி உங்கள் பதிலுக்கு. :)

Edited by துளசி

துளசியும், ஆராவமுதனுக்கும் பகிடி, வெற்றி தெரியாது போல கிடக்கு.. நகைச்சுவை உணர்வு என்பது மனித சாதிக்கே உள்ள ஒரு தனித்துவமான் ஒரு குணமாம்.

நகைச்சுவைக்கும், நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தவும் யாழில் "சிரிப்போம் சிறப்போம்", "இனிய பொழுது", போன்ற பல பகுதிகள் உண்டு!

ஊர்ப் புதினத்தில், அதுவும் ஈழத் தமிழரின் எதிர்காலத்துக்கு அத்தியாவசியமான ஒரு தலைப்பில் நகைச்சுவைக்கு எழுதினேன் என்பது, ஆட்டுக்குள் மாட்டை நுழைப்பது அல்லது சிவ பூசையில் கரடி நுழைவது போன்றது.

மேலும் நகைச்சுவை என்று பின்னர் சமாளிக்க முயன்று புகுத்திய கருத்தில் காலத்தின் தேவைக்கு எதிர்மறையான கருத்தே உள்ளது. இத்தகைய மனநிலை உடைய கணிசமானவர்கள் தமிழினத்தில் இருந்ததால் தான் - தமிழினம் ஒப்புவமை இல்லாத ஒரு அரிய மாபெரும் தலைவனைப் பெற்றிருந்த போதும், சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த முயலாமல், சாக்குப் போக்குகளைக் கூறி, பொறுப்புக்களில் இருந்து நழுவி, நழுவி, விதண்டாவாதம் செய்து ஒரு பாரிய பின்னடைவை சந்தித்தது!

படிக்கிற இடத்தில் (நேரத்தில்) விளையாடுவதும் - விளையாடுற இடத்தில் (நேரத்தில்) படிப்பதும் நல்ல மனநிலை உடையவர்கள் செய்யும் செயல் அல்ல.

திருமண சடங்கில் ஒப்பாரி வைப்பவர்களும், மரண சடங்கில் கும்மாளமடிப்பவர்களும் எப்படிப்பட்டவர்களாக இருப்பர் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

[size=5]இது ஒரு முக்கியமான விடயம் . காலத்தின் தேவையும் கூட . மூன்று லட்சத்துக்கு அதிகமான மக்களை இழந்து இருக்கிறோம் . முப்பத்தையாயிரம் போராளிகளை இழந்திருக்கிறோம் . பன்னிரண்டு லட்சத்துக்கு அதிகமான மக்கள் புலம்பெயர்த்து இருக்கிறார்கள் . இதை விட கடத்தபட்டவர்கள், காணாமல் போனவர்கள் . சிறைகளில் இருக்கும் உறவுகள் என்று , ஈழத்தில் எமது இருப்பு கேள்விக்குறியாகி விட்டது .

இறுதிபோரின் பின்பு தடுப்பு முகாம்களில் பெற்றோரை இழந்த சிறிய குழந்தைகள் எண்ணிக்கை ஐந்து ஆயிரம் என்று பேப்பர்களில் வந்திருந்தது . இதன் உண்மை நிலை என்ன என்று தெரியவில்லை. சில இந்து மன்றகளினாலும் , சில போது நல அமைப்புகளினாலும் பல நுறு குழந்தைகள் தத்து எடுக்கபட்டன பின்பு படிப்படியாக குறைந்தது .சிராந்தி ராஜபக்க குழந்தைகளுடன் நிற்கும் படங்களுடன் அது பற்றிய தகவல்களையும் மறந்து போய் விட்டோம் அல்லது மறைகடிக்க பட்டன .

அது ஆயுத போராட்டம் ஆனாலும் சரி , அரசியல் போராட்டம் ஆனாலும் சரி ஆட்பலம் இல்லாட்டில் ஒன்றுமே செய்ய முடியாது கனடாவில இருந்து மாடா உழைச்சு ஊரில நாலு வீடு வாங்கி விட்டவையின்ர நிலைமை இண்டைக்கு சுலபமா சிங்களவர் குடியேற தான் ஏதுவா இருக்கு . இந்தியாவுக்கு இடம்பெயர்தவர்களில் 85% பேர் திருகோணமலையை சேர்த்தவர்கள் . இன்று திருகோணமலையில் எண்ணிக்கையில் முஸ்லிம் மக்களே அதிகமாக உள்ளார்கள் . நான் ஒருநாள் ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாய் ஒருவரும் , அவரது மகளும் ஒரே நாளில் பிரசவத்துக்கு அனுமதிக்கபட்டிருந்ததை பார்த்து, எங்களின் நிலைமையையும் எண்ணி கவலை பட்டேன் .அவர்களது ஒவ்வொரு குடும்பங்களிலும் குறைந்த பட்சம் 7 அல்லது 8 பிள்ளைகள் இருக்கும் . அடுத்ததுதான் தமிழ் . இன்னும் ஒரு சில வருடங்களில் நாங்கள் முன்றாவது இடத்துக்கு சென்று விடுவோம் . ஏனென்றால் மிக பெருவாரியான சிங்கள குடியேற்றம் நாலாபுறமும் நடந்தவண்ணம் உள்ளது . குடியேறிய மக்களின் குடிசைகளுக்கு முன்னே குறைத்து 4 , 5 பிள்ளைகளாவது விளையாடிகொண்டிருக்கும் .

தென்னைமர வாடிக்கு சென்றபோது ஒரு சில மிக வறிய தமிழ் குடும்பங்களியே காண முடிந்தது . ஒரு வயதான முதியவருடன் கதைத்த போது, தனது இரு மகள்களும் கிளிநொச்சியில் இருப்பதாகவும் , தனது நெல் வயல்கள் சிங்களவர்கள் ஆக்கிரமித்து கொண்டதாகவும் , கேட்டால் மிரட்டுவதாகவும் கூறினார் .அனேகமா எல்லா இடமும் இதே நிலைமை தான் ,

பலம் தான் வாழ்வு . பலம் சுருங்க எமது வாழ்வும் சுருங்குது . பலம் என்பது ஆயுத பலமோ இல்லை , ஆட்லறி பலமோ இல்லை . முதல் ஆட்பலம் தான் முக்கியம் . அப்போதுதான் எதிர்கால சந்ததி எந்த போராட்டத்தையாவது கையில் எடுக்கும் . இல்லாடில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான் . விதைக்கும் விதைகள் எல்லாம் விளைச்சலை தருவதில்லை . குறைந்தது ஜந்து பிள்ளைகள் ஒரு குடும்பத்தில் இருந்தால்தான் , அதில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு தேசிய கொள்கைகளினால் உள்வாங்கப்படும் .வெறும் ஒன்று அல்லது இரண்டு தான் பெற்று கொள்வோம் . அதை தேசியம் சார்ந்துதான் வளர்ப்போம் என்பதெல்லாம் வெறும் ஏட்டு சுரைக்காய் கதைதான் . வறுமையை கூட எப்போதும் பிரதான காரணமாக காட்ட முடியாது . மனம் உண்டானால் இடமுண்டு . எமது இனத்தை காப்பதற்காக பூச்சியத்தில் இருந்து இராஜிசத்தை உருவாகிய தலைவர் , எமக்காக அளப்பரிய தியாகங்கள் செய்த மாவிரர்களின் சாதனைகளுக்கு முனனால் எமது இனத்தை தக்கவைக்க வெறும் இனபெருக்கம் என்பது எப்போதும் கடுமையான பாதையாக இருக்காது என்பது எனது கருத்து .

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு . இங்கு கொடியே இல்லாமல் எங்கே திரளுவது ??? குறிப்பாக புலம் பெயர்த்தவர்கள் ஜந்து பிள்ளைகளுக்கு அதிகமாக பெற்று கொள்ள வேண்டும் . அப்படி இப்போது இல்லாதவர்கள் கூட காலத்தின் தேவை கருதி இனத்தின் இருப்புக்கு செய்யும் கடமையாக கருதி இழந்த சொந்தங்கள்,மாவிரர்களின் கனவுகளை ,இலச்சியங்களை கருதித் கொண்டாவது உங்களுக்கு இருக்கும் பிள்ளைகளுடன் .ஓர் இரு குழந்தைகளை கூட பெற்றுகொண்டு அவர்களுக்கு உங்களுடன் இருந்து மாவிரரான உங்கள் நண்பர்களின் பெயரையோ , மச்சாளின் பெயரையோ . இழந்த சொந்தத்தின் பெயரையோ , காணாமல் போன அக்காவின் பெயரையோ வைக்கலாம் . மேலே நண்பர் ஒருவர் குறிப்பிட்டது போன்று ஓர் இரு பிள்ளைகளை ஊரில் அவர்களது தாத்தா, பாடியுடன் வாழ வைக்கலாம் .இது இனத்துக்கு நீங்கள் செய்யும் கடமையாகவும் ,பிள்ளைகளை பிரிந்து முதுமையில் தனிமையில் வருந்தும் வயதானவர்களுக்கு ஆறுதலாகவும் இருக்கும். வயதான் பெற்றோரையும் இங்கு அழைத்து அங்கு எமது வாக்குரிமை விகிதாசாரத்தையும் இழகுறோம். அவர்களை இங்கு அழையாது அந்த பணத்திற்கு அவர்களை பராமரிப்பதுக்கு வேறு பலருக்கு தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கலாம் .

ஈழத்தை பொறுத்தவரையில் நாங்கள் எல்லோரும் நிலம் வாங்கி குடியேறவில்லை .எல்லாமே எங்களின் பரம்பரை சொத்து .பாட்டன் , முப்பாட்டன் , தாத்தா , அபபா, நான் நாளைக்குஎனது மகன் என்றுதான் இருக்கிறோம் . அதை விடுத்து இப்ப நம்மவர் கையில் எடுத்து இருகின்ற நாமிருவர் நமககிருவர் என்ற சித்தாந்தம் எமக்கு ஒருபோது உதவாது . அப்பிடி வாழ்வோமாக இருந்தால் கந்தசாமியும் , கனகசபையும் இருந்த இடத்தில அப்புகாமியும் , அப்துமரைக்காரும் தான் வாழுவினம் .

அடுத்ததாக முக்கியமான விடயங்களில் ஒன்று போரினால் பாதிக்கபட்ட எமது எமது உறவுகளுக்கான உதவி. ஒரு இனத்தின் இருப்பானது அதனது அதனது இன பெருக்கத்தையும் தாண்டி அவர்களது பொருளாதார பலத்திலேயும் தங்கி உள்ளதினால் தற்போது அந்த விடயங்களிலே கவனம்[/size][size=5] செலுத்த வேண்டும் . மிககடுமையான வாழக்கை சுழற்சியில் சிக்கி தவிப்பவர்கள் , கணவனை இழந்த பெண்களும் , அவர்களது பிள்ளைகளும்தான் . கணவனை இழந்த பெண்களை திருமணம் செய்ய ஆண்கள் முன்வர வேண்டும் .அல்லது அவர்களுக்கான சிறு கைத்தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் . இதேபோல அங்கவீனம் ஆன உறவுகளுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல் வேண்டும் . எமது பிள்ளைகளின் பிறந்தநாள் கொண்டாடங்களின் போது ,அல்லது இறந்த உறவுகளின் திதி செய்யும் போது ஒரு தொகை பணத்தில் இரு பால் மாடுகளையோ , ஏதாவது தொழில் செய்யும் கருவிகளையோ வாங்கி கொடுத்து அவர்களின் பொருளாதார வளச்சிக்கு உதவலாம் . குறிப்பாக ஈழத்திலே கோவில் திருவிழாக்களின் போதும் , திருமண வீடுகளின் போதும் அதிகமான பணம் ,இந்தியாவில் இருந்து வரும் சின்னமேளம் போன்றவருக்கு விரயமாகபடுகிறது .இவற்றை விடுத்தது பொருளாதார வரியா மக்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும் .இதை விட சில கறுப்பாடுகளின் களையெடுப்பும் அவசியமாக உள்ளது [/size].

Edited by sudalai maadan

<p>

நகைச்சுவைக்கும், நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தவும் யாழில் "சிரிப்போம் சிறப்போம்", "இனிய பொழுது", போன்ற பல பகுதிகள் உண்டு!

ஊர்ப் புதினத்தில், அதுவும் ஈழத் தமிழரின் எதிர்காலத்துக்கு அத்தியாவசியமான ஒரு தலைப்பில் நகைச்சுவைக்கு எழுதினேன் என்பது, ஆட்டுக்குள் மாட்டை நுழைப்பது அல்லது சிவ பூசையில் கரடி நுழைவது போன்றது.

மேலும் நகைச்சுவை என்று பின்னர் சமாளிக்க முயன்று புகுத்திய கருத்தில் காலத்தின் தேவைக்கு எதிர்மறையான கருத்தே உள்ளது. இத்தகைய மனநிலை உடைய கணிசமானவர்கள் தமிழினத்தில் இருந்ததால் தான் - தமிழினம் ஒப்புவமை இல்லாத ஒரு அரிய மாபெரும் தலைவனைப் பெற்றிருந்த போதும், சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த முயலாமல், சாக்குப் போக்குகளைக் கூறி, பொறுப்புக்களில் இருந்து நழுவி, நழுவி, விதண்டாவாதம் செய்து ஒரு பாரிய பின்னடைவை சந்தித்தது!

படிக்கிற இடத்தில் (நேரத்தில்) விளையாடுவதும் - விளையாடுற இடத்தில் (நேரத்தில்) படிப்பதும் நல்ல மனநிலை உடையவர்கள் செய்யும் செயல் அல்ல.

திருமண சடங்கில் ஒப்பாரி வைப்பவர்களும், மரண சடங்கில் கும்மாளமடிப்பவர்களும் எப்படிப்பட்டவர்களாக இருப்பர் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

சரி நாங்கள் எல்லாம் சிவ பூசையில் கரடி, நீங்கள் எல்லோரும் சிவ பூசையில் கண்ணப்ப நாயனார். இங்கு கலந்து ஆலோசித்து எமது தமிழ் இனத்துக்கு ஒரு வழி காட்டுவீர்கள் என்று நம்புவோம்.

இலங்கையில் முஸ்லிம் மக்களின் சனத் தொகை வளர்ச்சி வீதம் வேகமாக அதிகரித்துள்ளது.

increase_CI.png

இலங்கையின் சனத் தொகை வளர்ச்சி தொடர்பான புதிய கணக்கெடுப்புகளுக்கு அமைய நாட்டில் ஏனைய இனங்களுடன் ஒப்பிடும் போது, முஸ்லிம் மக்களின் சனத் தொகை வளர்ச்சி வீதம் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில், 1981 ஆம் ஆண்டு பின்னர், கடந்த 2011 ஆம் ஆண்டு அதாவது 30 வருடங்களுக்கு பின்னர், 2012 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சனத் தொகை கணக்கெடுப்பில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.

தமிழ் மக்களின் சனத் தொகை வளர்ச்சி சுமார் 3 சத வீதமாக குறைந்துள்ளது.தமிழ் மக்களின் சனத் தொகை வளர்ச்சி வீத எண்ணிக்கையின் வெற்றிடத்தை முஸ்லிம் மக்கள் சனத் தொகை வளர்ச்சி ஈடு செய்துள்ளது. இதடினப்படையில் முஸ்லிம் மக்களின் சனத் தொகை வளர்ச்சி வீதமானது2.2 வீதமாக அதிகரித்துள்ளது.

சிங்கள மக்களின் சனத் தொகை வளர்ச்சியானது 6 சத வீதமாக உள்ளது. சிங்கள மக்களின் எண்ணிக்கையானது 74 சத வீதத்தில் இருந்து 74.6 வீதமாக அதிகரித்துள்து. இலங்கையின் மொத்த சனத் தொகையில் சிங்களவர்கள் 74.6 வீதமாகவும் இலங்கை தமிழர்கள் 11.2 வீதமாகவும் முஸ்லிம்கள் 9.3 வீதமாகவும் இந்திய தமிழர்கள் 4.0 வீதமாகவும் உள்ளனர் எனவும் தெரியவருகிறது.

எவ்வாறாயினும் நடத்தப்பட்ட சனத் தொகை கணக்கெடுப்பின் உத்தியோகபூர்வ இலங்கை புள்ளிவிபரத் திணைக்களம் விரைவில் வெளியிட உள்ளது.

யாழ் அன்பு அண்ணா இணைத்துள்ள இத்திரிக்கு செல்ல...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104835

[size=5] இன்று திருகோணமலையில் எண்ணிக்கையில் முஸ்லிம் மக்களே அதிகமாக உள்ளார்கள் . நான் ஒருநாள் ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாய் ஒருவரும் , அவரது மகளும் ஒரே நாளில் பிரசவத்துக்கு அனுமதிக்கபட்டிருந்ததை பார்த்து, எங்களின் நிலைமையையும் எண்ணி கவலை பட்டேன் .அவர்களது ஒவ்வொரு குடும்பங்களிலும் குறைந்த பட்சம் 7 அல்லது 8 பிள்ளைகள் இருக்கும் . [/size]

:rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பன்னி 12 குட்டி போடுது என்பதற்காக.. மனிசனும் போட முடியுமா..????!

உலகம் பூராவும் தான்.. வறிய நாடுகளாக உள்ள முஸ்லீம் நாடுகளில்.. சனத்தொகை பெருகிக்கிட்டு இருக்குது. அதுகளுக்கு வேற வேலை இல்ல....சோமாலியாவில வறுமை.. எதியோப்பியாவில வறுமை.. அங்கெல்லாம் அல்லாவா வந்து பாதுகாக்கிறார்.

குட்டி போடுறது பெரிய விசயமில்ல.. அந்தக் குட்டிகளை கல்வி அறிவு பெற்ற பொருண்மிய வளம் மிக்க ஆரோக்கியமான சமூகமாக மாற்றிறது தான் சவால் நிறைந்த விடயம். இலங்கையில எத்தனை முஸ்லீம் குடும்பங்கள் வறுமைக்கோட்டில வாழுது என்ற புள்ளிவிபரத்தையும் சேர்த்து வெளியிடுங்கோ...!!!

கொழும்பில கூட.. இவர்கள் வாழும் பகுதி.. உருப்படியான அபிவிருத்தி இன்றி இருக்குது. அந்த நிலை தமிழனுக்கும் வரனும் என்று சிலர் ஆசைப்படுகினம் போல...! :icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பன்னி 12 குட்டி போடுது என்பதற்காக.. மனிசனும் போட முடியுமா..????!

அது... :D:lol:

பன்னி 12 குட்டி போடுது என்பதற்காக.. மனிசனும் போட முடியுமா..????!

ஏலுமானவன் போடுறான் விடுங்கப்பா... :unsure::rolleyes::lol::icon_idea:

கொழும்பில கூட.. இவர்கள் வாழும் பகுதி.. உருப்படியான அபிவிருத்தி இன்றி இருக்குது. அந்த நிலை தமிழனுக்கும் வரனும் என்று சிலர் ஆசைப்படுகினம் போல...! :icon_idea::)

நெடுக்கு வன்னித் தமிழனின் நிலை அதைவிட மோசமாக உள்ளது! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து பிள்ளையள், அதுவும் நாங்கள்? நடக்கிற விசயமாய் கதையுங்கோ பாஸ். ஒண்டு பெற முதலேயே ஊறுப்பட்ட வேலை செய்ய வேண்டியிருக்கு. ரெண்டே ரெண்டு கண்ணே கண்ணு. ஏதாவது விபரீதம் நடந்தால் மூன்று. அதுக்கு மேலே வயரை கட் பண்ண வேண்டியது தான். பொன்னியின் நகைச்சுவையை நானும் வாசித்து சிரிச்சேன். இங்க கன பேர் பிரசர் குளிசயோட தான் சீவியம் போல.

இங்க சிலர் குடி, போதையுடன் வழிதவறிப் போய் பொழுதுபோக்குச் சீவியம் போல!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு வன்னித் தமிழனின் நிலை அதைவிட மோசமாக உள்ளது! :icon_idea:

வன்னியும் கொழும்பும் ஒன்றா..???!

வன்னி அங்குலம் அங்குலமாக குண்டுகளால் துளையிடப்பட்ட தேசம். அந்த மக்களின் வறுமை.. தற்காலிகமானது.. வெளியாரின் சரியான உதவி இருப்பின் அது விரைந்து சீராகக் கூடியது. சிங்களம் திணித்த கொடும் போருக்கு முன்னர் தானிய தன்னிறைவு கண்ட பகுதி வன்னி..!

கொழும்பின் வறுமை..??????! எவ்வளவோ முதலீடுகளைப் போட்டும்.. நிமிர்த்த முடியாத கொடுமை..!!! :icon_idea:

குட்டி போடுறது பெரிய விசயமில்ல.. அந்தக் குட்டிகளை கல்வி அறிவு பெற்ற பொருண்மிய வளம் மிக்க ஆரோக்கியமான சமூகமாக மாற்றிறது தான் சவால் நிறைந்த விடயம். இலங்கையில எத்தனை முஸ்லீம் குடும்பங்கள் வறுமைக்கோட்டில வாழுது .... அந்த நிலை தமிழனுக்கும் வரனும் என்று சிலர் ஆசைப்படுகினம் போல...! :icon_idea::)

வன்னி அங்குலம் அங்குலமாக குண்டுகளால் துளையிடப்பட்ட தேசம். அந்த மக்களின் வறுமை.. தற்காலிகமானது.. வெளியாரின் சரியான உதவி இருப்பின் அது விரைந்து சீராகக் கூடியது. சிங்களம் திணித்த கொடும் போருக்கு முன்னர் தானிய தன்னிறைவு கண்ட பகுதி வன்னி..!

கேள்வியும் பதிலும். :)

எங்கள் தமிழ்ச்சமுதாயத்திடம் கல்விக்கான உறுதியான கட்டமைப்பு இருக்கிறது. 5 பிள்ளை பெற்றாலும் தாங்கக் கூடிய கட்டமைப்பு அது. சந்தேகமே வேண்டாம்.

இலங்கையில் எங்கட பிரச்சனையே நாங்கள் சிறு பான்மை என்பது தான். அதாவது எங்கட சன‌த்தொகை காணாது.

புலம் பெயர்ந்த நாட்டிலும் எங்களுக்கு ஆள் பலம் இருந்தால் அரசியல் பலம் வரும்.

சனத்தொகை அதிகரிப்பு எப்ப பிரச்சனையாகும் என்றால்.. ஒரு பிரதேசத்தின் வளங்களுக்கு மேல் மக்கள் தொகை இருந்தால்.. அங்க சன‌த்தொகை ஒரு பிரச்சனை. 3 மில்லியனைவிட குறைந்த சனதொகை கொண்டவர்களுக்கு சனத்தொகை அதிகரிப்பு ஒரு பிரச்சனை அல்ல. 5 மில்லியனை தாராளமாகத் தாண்டலாம்.

5 பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் கொஞ்சம் பிரச்சனை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை பெறுறது இருக்கட்டும் முதல்ல கல்யானத்த கட்டுங்கப்பா........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.