Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் நாவண்ணனுக்கு கண்ணீர் வணக்கம்....!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தில் புகழ்பூத்த கவிஞர் நாவண்ணன் நேற்றிரவு காலமானார். புலிகளின் குரல் ஊடாக பெருமளவான படைப்புக்களை வெளிப்படுத்திய அவர், தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால், இரண்டு தடவை தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். நேற்றிரவு கவிஞர் நாவண்ணன் சாவடைந்தாலும் அவர் தந்து சென்ற படைப்புக்கள் சாகா வரம் பெற்றவை.

புரட்சி கீதம் பாடிய

புரட்சி கவிஞனுக்கு

புரட்சிகர வணக்கங்கள்........

தகவல்:புலிகளின் குரல்

தேசத்தின் கவிஞருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்!

தாயகக் கவிஞனுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தின் பதிவுகளை தனது எழுத்துஇ பேச்சுஇ ஒவியம் சிற்ப்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர் நாவண்ணன். தமிழன் சிந்திய இரத்தம்இ கரும்புலி காவியம்இ இனிமைத் தமிழ் எமதுஇ ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தை பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட வலியும் பழியும் என்ற பிரமாண்டமான நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம் சிற்ப்பம் ஆகிய வற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செயற்ப்பட்டார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதஙக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாக செயற்ப்பட்டமைகாககவும்இ அதன் பின்னர் கவியம் நூல் உருவாக்கம் கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார்

தகவல்: புலிகளின்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துக்கவிஞருக்கு எனது கண்ணீர் அஞ்சலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுத்துவண்ணன், செயல்வண்ணன், ஈழத்தமிழ்மண்மேல் கண்ணான எமது கவிஞன் நாவண்ணனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

அவரின் பணிகளுக்கு எனது சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.

கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்துக்கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

கவிஞ்ஞர் நாவண்ணன் ஐயாவிற்கு எமது வீரவணக்கங்கள்.

கவியுலகின் முடிசுூடா மன்னன் நாவண்ணன் அவர்களுக்கு ஈழ மக்கள் சார்பான கண்ணீர் அஞ்சலிகள்...

200601030276yw.jpg

படம்: புதினம் புள்ளி கோம் www.puthinam.com

நற்தமிழ் அண்ணனே!

நாவண்ணனே!

ஈழமண் விடியலிற்காய்

நற்தமிழ் படைப்புக்கள்

நமக்களித்த ஐயனே!

புலிகளின் வீரத்தை

உங்கள் மொழியில்

எடுத்துரைத்தீர்கள்.

உங்கள் எழுத்துக்களால்

எமக்குள்ளே உணர்வு தீயை

மூட்டி வைத்தீர்கள்.

நீங்கள் மூட்டிய உணர்வுத் தீ

பரந்து எரிகின்றது.

ஆதலால் நீங்கள்

இன்னும் நம்முளே வாழ்ந்து

ஈழ விடுதலை இலக்கினை

நோக்கி உந்தி வேகமாய் தள்ளுகின்றீர்கள்.

உணர்வுள்ல ஈழமகன்

இருக்கும் வரையும்

நீங்களும் வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். :cry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாவண்ணன் அவர்களது எழுத்தில்..உருவாகிய பாடல்கள் சில...

http://vannithendral.net/index.php?option=...id=13&Itemid=41

200601030276yw.jpg

கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்...........

கவிஞரை சுவிஸில் ஒரு முறை சந்தித்த போது மிக மென்மையானவராகவும் அமைதி நிரம்பியராகவும் இருந்தார்.

அவரது இனிய அன்பான பேச்சுகள்

என்னை அவர் மேல் அவர் யார் என்று தெரியாமலே

ஈடுபாடு கொள்ள வைத்தது.

ஒரு சில நிமிடங்களானாலும் மனதை ஆக்கிரமித்த

அன்பான கவிஞருக்கு என் இதய கண்ணீர் அஞ்சலிகள்..........

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழக் கவிஞர் நாவண்ணனுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்!!

எனது கண்ணீர் அஞ்சலி

கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

கவிஞருக்கு அனுதாபங்கள் :cry:

கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்..!

கவிஞர் நாவண்ணனுக்கு விடுதலைப் புலிகள் "நாட்டுப்பற்றாளர்" மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்து மறைந்துள்ள கவிஞர் நாவண்ணனுக்கு "நாட்டுப்பற்றாளர்" மதிப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் அளித்துள்ளனர்.

இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழரின் அடிமை வரலாறுகள் நீங்கி சுதந்திர தேசத்தில் சிறகடிக்க எத்தனித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் "நான் இந்த நாட்டிலே இந்த மண்ணிலே பிறந்திருக்கிறேன்- அதனால் இந்த நாட்டிலே வாழவேண்டும் என்று துடிக்கிறேன்- ஏனெனில் நான் சாகும்வரை தமிழ் எழுதியே சாகவேண்டும்" என்ற உயரிய இலட்சியத்துடன் நடைதளர்ந்த பின்பும் மனம் குன்றாமல் வாழ்நத எங்கள் மதிப்பிற்குரிய மருசலின் சூசைநாயகம் அவர்கள் 15.04.2006 அன்று காலமாகிவிட்டார்.

1948 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் பிறந்த இவர் தனது இளமை வாழ்க்கையை யாழ். இளவாலையிலே தொடங்கினார்.

இம்மண்ணில் ஆயுதப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே இவரும் தன் பேனாமுனையால் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் கருத்துக்களை எழுதத் தொடங்கினார்.

ஒரு கவிஞனாக உருவெடுத்த நாவண்ணன், எமது மக்களுக்குள் எழுந்த விடுதலையின் சுவாலையை மூசி எரிய வைக்க கவிதை வடிவிலும் பாடல் வடிவிலும் நகைச்சுவை வடிவங்களிலும் தன் வரிகளை எழுதினார்.

எதிரியின் யாழ். மீதான ஆக்கிரமிப்பால் வன்னி வந்த இவர் வன்னியில் எதிரியின் படையை விரட்டிப் புலிகளின் படையணிகள் புது வரலாறு படைப்பதற்கு தோளேடுதோள் கொடுத்தவர்.

போராட்டப்பாதையில் அவரின் இளமைக்காலத்திலிருந்தே இறுதிக்காலம் வரை ஓயாது இயங்கினார்.

எமது போராளிகள், மக்கள் செய்த தியாகங்களை- அற்பணிப்புக்களை- சாதனைகளை- அவர்கள் சந்தித்த இழப்புக்களை பதிவுகளுள் செலுத்த வேண்டுமென்பதில் துடியாக துடித்தவர்.

அதற்காக ஊர், ஊராகத்திரிந்து இரவு பகலாக அலைந்து குடிசைகளிலும் கடற்கரைகளிலும் படுத்துறங்கி அவர்களின் வாழ்வை தன்வாழ்வாக்கி உணர்வுகளை வரைந்தார்.

அத்தோடு, நெருப்பாற்றில் நீச்சலிடும் விடுதலைப் போரின் வீச்சுமிக்க பக்கங்களை வெற்றிகளை எழுத்துருவில் மட்டுமல்லாது ஒலிநாடாக்களிலும், இசைத்தட்டுக்களிலும் பதிவு செய்வதற்காகவும் துடிப்பார்.

ஓர் கவிஞனாக மட்டுமல்லாது ஓர் ஓவியனாகவும், சிற்பியாகவும், நாவலாசிரியராகவும் தன் உணர்வுகளை பதிவுகளை பல்வேறு வடிவங்களிலும் ஆவணமாக்கினார்.

எம் தேசத்தின் வாழ்வோடு ஒன்றிணைந்திருந்த இவரது குடும்பத்தில் ஐந்து பெண் பிள்ளைகளிற்கு ஒரேயொரு ஆண் மகனாக இருந்த சூசைநாயகம் கிங்சிலி உதயன் 2 லெப். கவியழகன் என்பவர் இத்தேசத்தின் பயணத்தில் இணைந்து இறுதிவரை களமாடி மாவீரரானார்.

அதனாலும் மனம் தளராது வீர மறவனைப் பெற்றேடுத்தேன்- அவனை வீர புத்திரனாய் மண்ணிற்குள் விதைத்தேன் என்ற தன் உயிர்ப்பிரிவின் உணர்வை இலக்கியமாக படைத்தார்.

இவரின் முதுமைக்காலத்தில் புலிகளின்குரல் வானொலியிலும். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியிலும் தன் ஆற்றலினூடாக பல்வேறு நிகழ்வுகளை உலகுக்கும் உணத்தினார். இவரின் ஆற்றலிற்காக எம் தேசியத் தலைவர் அவர்களிடம் இருமுறை விருதுகள் பெற்றார்.

இறுதியில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துபோன எம் உறவுகளை நினைந்துருகி ஆழிப்பேரலையின் சுவடுகள் என்னும் அரிய நூல் ஒன்றையும் எழுதினார். இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவிற்குள் கொண்டுவரத்துடிக்கும் இவரின் இழப்பு பேரிழப்பாகும்.

காலத்தின் சுழற்சியோடு தன் வாழ்க்கையை ஒன்றிணைத்து என்றுமே, எப்போதுமே தன் படைப்பின் மூலம் நினைவுகளைப் புரட்டிப்பார்க்க விட்டுச்சென்ற ஓர் உன்னத மனிதன் கவிஞர் நாவண்ணன்.

இம்மண்ணில் ஓர் படைப்பாளியாக நின்று மகத்தான பல பதிவுகளை செய்த கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் என்னும் எமது தேசத்தின் சார்பான மதிப்பினை வழங்குவதோடு அவரது பிரிவால் பிரிவுத்துயரில் மூழ்கியிருக்கும் அவரது குடும்பத்தவர்களின் துயரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாங்களும் பங்கேற்றுக்கொள்கிறோம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்று தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டுப்பற்றாளர் நாவண்ணன் மறைவு குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puthinam.com

கவிஞருக்கு கண்ணீர் அஞ்சலிகள்...

கிளிநொச்சியில் நாட்டுப்பற்றாளர் கவிஞர் நாவண்ணன் இறுதி வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச் சேர்த்த படைப்பாளி நாட்டுப்பற்றாளர் கவிஞர் நாவண்ணன் இறுதி வணக்க நிகழ்வு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.

நிதர்சனம் நிறுவனத்தில் நாவண்ணன் புகழுடல் வைக்கப்பட்டு வணக்க நிகழ்வு நடைபெற்றது.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி பிரதம செய்தி ஆசிரியர் கருணாகரன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மலர்மாலை அணிவித்தார்.

திரைப்பட உருவாக்கல் பிரிவினைச் சேர்ந்த சங்கர், ஓவியர் ராஜன், பேராசிரியர் சண்முகலிங்கன் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்

அதன் பின்னர் புலிகளின்குரல் அமலன் அரங்கில் பிற்பகல் 1 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு புலிகளின்குரல் நிர்வாக இணைப்பாளர் இ.இராஜேஸ்வரன் தலைமை வகித்தார்.

பொதுச்சுடரினை நாவண்ணனின் துணைவியார் ஏற்றினார்.

புகழுடலுக்கான மாலைகளை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, புலிகளின்குரல் பொறுப்பாளர் நா.தமிழன்பன் ஆகியோர் அணிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரங்கல் செய்தியை அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் வாசித்தார்.

கவிஞர் நாவண்ணன் எந்த நேரத்திலும் எந்த உடல்நிலையிலும் படைப்புக்காக உழைப்பவர். அவரின் படைப்புக்கள் தாயக விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பவை என்று கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை தனது வணக்க உரையில் தெரிவித்தார்.

நாட்டுப்பற்றாளர் கவிஞர் நாவண்ணன் தாயக விடுதலைப் போராட்ட வரலாற்று ஆவணங்களின் இருப்பிடமாக இருந்தார் என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் வணக்க உரையில் குறிப்பிட்டார்.

நாவண்ணன் தன் படைப்புகளுடாக அடுத்த தலைமுறைக்கும் வாழ்வார் என்று விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை தனதுரையில் தெரிவித்தார்.

செஞ்சோலையின் தொடக்கம் முதல் அதன் வளர்ச்சியில் நாவண்ணன் அவர்களின் பணி அதிகமானது என்று செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள் கூறினார்.

புலிகளின்குரல் வானொலியில் தன் படைப்புகளுடாக மக்கள் மனதில் தாயக விடுதலைப் போராட்டக்கருத்தை விதைத்வர் நாவண்ணன் என்று புலிகளின்குரல் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தனதுரையில் தெரிவித்தார்.

பின்னர் நாட்டுப்பற்றாளர் நாவண்ணனின் புகழுடல் அவரது தாய்மண்ணான மன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Puthinam.com

.

கவிஞர் நாவண்ணனுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

கவிஞர் நாவண்ணனுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்...

கண்ணான கவிஞன்

விண்னோடு போய் விட்டான்..

நன் நாடு கானத கனவே

கலைந்த விட்டான்

வடிகின்ற கண்ணீருடன்

தொழுகின்றேன் உள்

மலர் பாதங்களை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.