Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவின் 145ஆவது மகிழ்ச்சியான பிறந்தநாள்

Featured Replies

[size=5]கனடாவின் 145ஆவது மகிழ்ச்சியான பிறந்தநாள் [/size]

[size=4]பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் 1867 ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.[/size]

[size=4]கனடிய ஆதிக்குடிமக்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்: கனடிய செவ்விந்தியர்கள்(Indians), இனுவிட் (Inuit), மெயிரி (Metis, கேட்க). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், இன, மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் கோணங்களில் கனடிய ஆதிக்குடிமக்கள் பலவகைப்படுவார்கள்.[/size]

[size=4]பிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் ரோயல் துறைமுகம் என்ற பகுதியிலும், அதனைத் தொடர்ந்து 1608ம் ஆண்டு கியூபெக்கிலும் முதன்முதலில் குடியமர்ந்தனர். ஆங்கிலக் குடியேறிகள் நியூ பவுண்ட்லாந்தில் 1610 ஆம் ஆண்டு குடியமர்ந்தனர். ஐரோப்பியரின் வருகை, வட அமெரிக்காவுக்கு புது நோய்களை கொண்டுவந்தது. இதனால், அப்புதிய நோய்களுக்கு உடலில் எதிர்ப்புத்திறனற்ற முதற்குடிமக்கள் பெரும்பான்மையானோர் இரையானார்கள்.[/size]

[size=4]பிரெஞ்சு, ஆங்கிலேய குடிவரவாளர்களாலும் ஆதிக்குடிகளாலும் கனடா உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின் போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கனடாவை இணைக்கும் ஒரு [size="2"]தொடருந்துப்[/size] பாதை கட்டவேண்டிய தேவை இருந்தது. இதற்காக 1880களில் சீனர்கள் தொடருந்துப் பாதை கட்டமைப்பில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர்.[1] 1885 ஆம் ஆண்டு தொடருந்துப் பாதை கட்டிமுடிந்த பின்பு சீனர்கள் வரவு கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக "Chinese Exclusion Act" 1923 ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது.[/size][size=3]

[size=4]கறுப்பின மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவில் குடியேறினார்கள். தொடக்கத்திலேயே அவர்கள் அடிமைகளாக பிரெஞ்சு மக்களுடன் கனடாவுக்கு வந்தனர். எனினும் 1793 ஆம் ஆண்டில், மேல் கனடாவில் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பல கறுப்பின மக்கள் கனடாவுக்கு விடுதலை தேடிவந்தனர். இவர்கள் வந்த பாதை நிலத்தடி இருப்புப்பாதை (Underground railroad) என்று அழைக்கப்பட்டது. [2][/size][/size][size=3]

[size=4]1920 ஆண்டளவில், கனடா இன அடிப்படியிலான குடிவரவுக் கொள்கைகளை பின்பற்றத் தொடங்கியது. இதன் காரணமாக ஐரோப்பியர் தவிர்ந்த ஏனைய இன மக்கள் கனடாவுக்குள் வருவது கடினமாக்கப்பட்டது. இக்கொள்கை 1967 இல் நீக்கப்பட்டது. எனினும், இதற்கமையவே இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பல்வேறு ஐரோப்பிய குடிவரவாளர்களை கனடா உள்வாங்கியது. வியட்நாம் போரின்போது அமெரிக்க draft dogers பலரையும் உள்வாங்கியது.[/size][/size][size=3]

[size=4]1971 ஆம் ஆண்டு, உலக நாடுகளிலேயே முதலாவதாக, கனடா பல்லினப் பண்பாட்டுக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு குடிவருவது அதிகரித்தது. 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆபிரிக்கர்கள் புதிய குடிவரவாளர்களில் கணிசமான தொகையாக இருந்தனர்.[/size][/size]

[size=5]கனடாவில் தமிழர்கள்[/size]

[size=3]

[size=5]ஏறக்குறைய 250 000 தமிழர்கள் கனடாவில் வசிப்பதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன, எனினும் தெளிவான ஒரு புள்ளி விபரம் இன்னும் கணக்கிடப்படவில்லை. பெரும்பாலான தமிழர்கள் ரொறன்ரோ நகரத்திலேயே வசிக்கின்றார்கள். பிறரும் மொன்றியால், வன்கூவர், கல்கிறி போன்ற பெரும் நகரங்களிலேயே வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 80 களின் பின்பு ஈழப் போராட்டம் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்றஈழத்தமிழர்கள் ஆவார்கள்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

[size=4]கனடாவின் பிறந்தநாளை முன்னிட்டு சகல உறவுகளுக்காகவும் இன்றை ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்ட இறுதி ஆட்டம் வழங்கப்படுகின்றது[/size] [size=4] :D[/size]

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

வாழ்த்துகள் கனடா.

happy_birthday_canada.jpg

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கனடா 145வது ஆண்டுக்குள் கால் பதிக்கிறது.இந்த வேளையில் நாங்கள் வசிக்கும் நாட்டுக்கு வாழ்த்துவதோடு நன்றிகளும் உரித்தாகட்டும்.எங்களை வரவேற்றது மட்டுமல்லாது எங்களின் ஒவ்வொரு முன்னேற்றதிற்கும் தேவைகளுக்கும் முடிந்த மட்டுக்கு உதவிகளை வளங்கி ஊக்குவிக்கிறது..இப்படி நிறைய விடையங்களை கனடாவைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம்.ஆகவே நாங்கள் எங்கள் தாயகத்தை எப்படி மதிக்கிறமோ அப்படி மதிப்பு வசிக்கும் நாட்டின் மீதும் இருக்க வேணும் எனது அவா..happy canada day.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் கனடாதின வாழ்த்துக்கள்..! தாயகத்தில் அடிமைப்பட்டு காணமுடியாத சுதந்திரத்தின் பெரும்பகுதியைக் காணக்கிடைத்த நாடு..!

  • கருத்துக்கள உறவுகள்

happy canada day.

கனடிய கள உறவுகளுக்கு வாழ்த்துக்கள்

எம் மண்ணில் நடந்த அனர்த்தனங்களிலிருந்து பாதுகாப்புத்தேடி ஓடி வந்த எமது உறவுகள் லட்சோப லட்சம்பேரை பொறுப்பெடுத்து அரவணைத்த தேசமே

உனக்கு தலை வணங்குகின்றேன். :wub:

  • தொடங்கியவர்

[size=4]எனது பார்வையில் என் கனடா [/size]

[size=1]

[size=4]கேள்வி: கனடா புதிய குடிவரவாளர்களை வரவேற்கும் நாடா?[/size][/size][size=1]

[size=4]பதில்: நிச்சயமாக. ஆனால்,கடந்த பத்து வருடங்களில் பல மாற்றங்கள் வந்துள்ளன. கதவு மூடப்பட்டு வருகின்றது, காலப்போக்கில் மிகச்சிறிய அளவே திறந்திருக்கும். [/size][/size]

[size=1]

[size=4]கேள்வி: கனடா உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளாதா?[/size][/size][size=1]

[size=4]பதில்: கீழ் மட்ட மற்றும் நடுத்தர மட்டங்களில் முன்னேற முடியும். அதற்கு மேலே பயணிப்பது என்பது கடினமானது. ஒரு காரணம், இனத்துவேசம். [/size][/size]

[size=1]

[size=4]கேள்வி: நீங்கள் ஒரு பூரண பிரசையாக உணருகிறீர்களா?[/size][/size][size=1]

[size=4]பதில்: ஆம்: வந்த புதிதில். அப்பொழுது ஊர் உணவகத்தில் துப்பரவாக்கல், உணவுகள் சமைத்தல் பகுதியில் வேலை செய்தேன். [/size][/size][size=1]

[size=4]இல்லை: வேலைத்தளத்தில் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டேன். ஒருவர் தனிய சந்திப்பைக்கேட்டு கூறினார்: 'நான் இந்த நாட்டின் பத்தாவது தலைமுறை. எனக்கு உமக்கு கீழே வேலை செய்ய விருப்பமில்லை. வேலை குழுமத்தை மாற்றப்போகின்றேன்". [/size][/size]

[size=1]

[size=4]கேள்வி: அடுத்த எமது தலைமுறைகள் எவ்வாறு வாழும்? [/size][/size][size=1]

[size=4]பதில்: அவர்களை முழுமையான பிரசைகளாக படிப்படியாக பெரும்பான்மை சமூகம் ஏற்கும். அதேவேளை பலவேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். தமது கடுமையான உழைப்பு மூலம் மட்டுமே வெற்றிகளை உறுதி செய்யலாம். [/size][/size]

[size=1]

[size=4]மொத்தத்தில் கனடாவில் நாம் கடுமையான உழைப்பு ஓரளவிற்கு நல்லகாலமும் இருந்தால் முன்னேறி மகிழ்வாய் இருக்கலாம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

கனடா உறவுகளுக்கு இனிய கனடா தின வாழ்த்துக்கள்.இலவச மருத்துவ வசதி பற்றி பேசாத கனடிய தமிழர்களை வன்மையாக கண்டிக்கிறேன். :)

  • தொடங்கியவர்

கனடா உறவுகளுக்கு இனிய கனடா தின வாழ்த்துக்கள்.இலவச மருத்துவ வசதி பற்றி பேசாத கனடிய தமிழர்களை வன்மையாக கண்டிக்கிறேன். :)

[size=1]

[size=4]'இலவச மருத்துவம்' - இப்பொழுது சில விடடங்களில் தனியார் நிலையங்களும் உள்ளன. [/size][/size]

[size=4]'இலவச மருத்துவம்' - சாதாரண மக்கள் அனைவருக்கும் கவனிப்பு உள்ளது. ஆனால், கவனிப்பு அளவுகள் வித்தியாசம்.[/size][size=1]

[size=4]'இலவச மருத்துவம்' - அதிகூடிய வரிப்பணம் மாநில அளவில் இதற்கு செலவழிக்கப்படுகின்றது. அதனால் ஒருவகை ஊழலும் வளர்ந்துள்ளது. [/size]

[size=4]'இலவச மருத்துவம்' - தீர்க்கமான சில மாற்றங்களை கொண்டுவராவிட்டால், முழுக்க முழுக்க இல்லாமல் போய்விடலாம். [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா மக்களுக்கு இந்த சிறியேனின் வாழ்த்துக்கள்.

[size=4]எனது பார்வையில் என் கனடா [/size]

[size=1][size=4]கேள்வி: கனடா புதிய குடிவரவாளர்களை வரவேற்கும் நாடா?[/size][/size]

[size=1][size=4]பதில்: நிச்சயமாக. ஆனால்,கடந்த பத்து வருடங்களில் பல மாற்றங்கள் வந்துள்ளன. கதவு மூடப்பட்டு வருகின்றது, காலப்போக்கில் மிகச்சிறிய அளவே திறந்திருக்கும். [/size][/size]

[size=1][size=4]கேள்வி: கனடா உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளாதா?[/size][/size]

[size=1][size=4]பதில்: கீழ் மட்ட மற்றும் நடுத்தர மட்டங்களில் முன்னேற முடியும். அதற்கு மேலே பயணிப்பது என்பது கடினமானது. ஒரு காரணம், இனத்துவேசம். [/size][/size]

[size=1][size=4]கேள்வி: நீங்கள் ஒரு பூரண பிரசையாக உணருகிறீர்களா?[/size][/size]

[size=1][size=4]பதில்: ஆம்: வந்த புதிதில். அப்பொழுது ஊர் உணவகத்தில் துப்பரவாக்கல், உணவுகள் சமைத்தல் பகுதியில் வேலை செய்தேன். [/size][/size]

[size=1][size=4]இல்லை: வேலைத்தளத்தில் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டேன். ஒருவர் தனிய சந்திப்பைக்கேட்டு கூறினார்: 'நான் இந்த நாட்டின் பத்தாவது தலைமுறை. எனக்கு உமக்கு கீழே வேலை செய்ய விருப்பமில்லை. வேலை குழுமத்தை மாற்றப்போகின்றேன்". [/size][/size]

[size=1][size=4]கேள்வி: அடுத்த எமது தலைமுறைகள் எவ்வாறு வாழும்? [/size][/size]

[size=1][size=4]பதில்: அவர்களை முழுமையான பிரசைகளாக படிப்படியாக பெரும்பான்மை சமூகம் ஏற்கும். அதேவேளை பலவேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். தமது கடுமையான உழைப்பு மூலம் மட்டுமே வெற்றிகளை உறுதி செய்யலாம். [/size][/size]

[size=1][size=4]மொத்தத்தில் கனடாவில் நாம் கடுமையான உழைப்பு ஓரளவிற்கு நல்லகாலமும் இருந்தால் முன்னேறி மகிழ்வாய் இருக்கலாம். [/size][/size]

உங்கள் நிஜபார்வைக்கு நன்றி அகூதா.

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]'இலவச மருத்துவம்' - தீர்க்கமான சில மாற்றங்களை கொண்டுவராவிட்டால், [/size][/size][size=1][size=4]முழுக்க முழுக்க இல்லாமல் போய்விடலாம். [/size][/size]

இங்கும் இதே நிலைதான்

ஆபிரிக்க அராபிய மக்கள் தங்களது நாடுகளுக்கு முழு மருந்துகளையும் இங்கு இலவசமாகப்பெற்று அனுப்பிவருவதாகவும்

ஆபிரிக்க அராபிய மக்கள் தங்களது பெரும் நோய்களுக்கும் அறுவைச்சிகிச்சைக்கும் இங்கு வந்து செய்து தமக்கு பெரும் நட்டங்களை ஏற்படுத்தி வருவதாகவும் இங்கு குற்றச்சாட்டுக்கள் உண்டு.

அது உண்மையும் கூட.

(இந்த சலுகைகளை ஒரு போதும் நான் பெற்றதில்லை என்பதில் ஒரு இறுமாப்பு எனக்கு)

  • தொடங்கியவர்

[size=4]கனடாவில் மருத்துவ செலவில் அதிக செலவீடு செய்யப்படும் இடம் - சம்பளம். பெரும்பகுதியை வைத்தியர்கள் எடுக்கின்றார்கள். அதேவேளை மாறிவரும் தொழில்நுட்பம் ஊடாக தமது நேரத்தை குறைவாக செலவீடு செய்தாலும், அதிகமான சம்பளம் வருடம் வருடம் கேட்கிறார்கள். [/size]

[size=4]உதாரணத்திற்கு கண் வைத்தியர் - ஒப்தமொலஜசிட். முன்னர் ஒரு கற்றாக்ட் கண்ணை திருத்த சில மணித்தியாலங்கள் தேவைப்பட்டன, இப்பொழுது பத்து நிமிடங்களே. ஆனால், அதே பணம் வேண்டும் என சண்டை பிடித்தவண்ணம் உள்ளார்கள். [/size]

[size=4]Happy Canada Day [/size]

இனிய கனடிய தின வாழ்த்துக்கள்.

http://www.canadadaylondon.com/

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த நாட்டுக்கு வரும் போது தாய் மொழியாகிய தமிழ் மட்டுமே தெரிந்தவளாக வந்தேன்..இன்றைய நிலையில் உடல் ரீதியாக,கல்வி ரீதியாக நன்கு வளர்ந்திருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும்..அதற்கு நான் நன்றி என்ற வார்த்தை மட்டும் தெரிவித்து போதாது.சரி அதை விடுத்து பார்க்கப் போனால்....

இலவச மருத்துவக் காப்புறுதி திட்டம் மற்றும் வெல்பெயார் ஒரு விதத்தில் நன்மையாக இருந்தாலும் வேறு விதத்தில் பார்த்தால் மக்களை சோம்பேறிகளாக்கிக் கொள்கிறது என்றே சொல்லலாம்.சிலர் தாங்களும் வேலைக்கு போக முயற்சிக்காமல் வேலைக்கு போகவேணும் அக்ரிவாக இருக்க வேணும் என்று நினைப்பவர்களையும் சாட்டுப் போக்கு சொல்லி வேலை என்ற ஒன்றை நினைக்க கூடாது என்பது போலவே வைச்சு இருக்கிறார்கள்..காரணம் இந்த இலவச காப்புறுதி திட்டம் தான்..அண்மைய காலங்களில் சம்பள உயர்வு கோரி மருத்துவர்கள் மத்தியில் குளப்ப நிலை ஏற்பட்டுள்ளது.சாதரணமாக ஒரு சத்திரசிகிச்சை நிபுணரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ ஏற்படுத்தாத ஒரு குளப்ப நிலையை,குறுகிய நேரத்திற்குள் நோயாளிகளுக்கு இருக்கும் பிரச்சனைகளை அறிந்து அதற்கு ஏற்ப வைத்தியம் பார்த்துட்டு அனுப்பி வைக்கும் கண்வைத்தியர்களோ அல்லது பல் வைத்தியர்களோ தான் சம்பளம் உயர்வு அது இது என்று கேட்டு பிரச்சனைகளை ஆரம்பித்து வைப்பது. அண்மைய காலங்களில் வைத்தியரிடம் போகும் போது காச்சல் என்று சொன்னால் அதற்கு மட்டும் தான் சிகிச்சை அளிக்கபடுவதாகவும் பலர் குறைபட்டுக் கொள்வதை அறிந்து இருக்கிறன்...இவை எல்லாம் ஒரு வித மட்டுப்படுத்தல்களேயன்றி வேறு ஒன்றும் இல்லை..காலக்கிரமத்தில் குடும்ப வைத்தியர்களாக இருக்க கூடியவர்கள் கூட பெரும் அளவானவர்கள் ஓய்வு நிலையை நோக்கி போய் கொண்டு இருக்கிறார்கள்.அதன் பின்பு இன்னும் சிக்கல்களை எதிர் நோக்க வேண்டி வரலாம்...ஏன் எதிர்வரும் காலத்தில் புதிதாக இந்த நாட்டுக்குள் அகதி அந்தஸ்த்து கோரி வருபவர்களுக்கு மருத்துவ உதவிகள் வணக்கப்படக் கூடாது என்றும் பேச்சு வார்த்தைகள் நடை பெறுவதாக செய்திகளில் படிக்க கூடியதாக இருக்கிறது..இது கூட புதிதாக வருபவர்களுக்கு ஒரு வித தாக்கம் தான்...

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]இல்லை: வேலைத்தளத்தில் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டேன். ஒருவர் தனிய சந்திப்பைக்கேட்டு கூறினார்: 'நான் இந்த நாட்டின் பத்தாவது தலைமுறை. எனக்கு உமக்கு கீழே வேலை செய்ய விருப்பமில்லை. வேலை குழுமத்தை மாற்றப்போகின்றேன்". [/size][/size]

அவருக்குத் தெரிந்த சட்டங்கள் அவ்வளவுதான்.. Discrimination என்கிற வார்த்தையை உபயோகித்திருந்தீர்கள் என்றால் அடங்கியிருப்பார். :unsure:

ஒருமுறை நானும், மேலாளரும் வேலைக்கு ஆள் எடுக்க வேலைக்குறிப்புகளைப் பரிசீலித்துக் கொண்டிருந்தோம். அதில் ஒருவர் நன்கு அனுபவப்பட்டவராக இருந்தார். அவர் வேலை செய்த ஆண்டுகளைக் கூட்டிப் பார்க்க ஆளுக்கு ஒரு அறுபதில் இருந்து அறுபத்தைந்து வயது இருக்கும்போல் தெரிந்தது. எங்களுக்கு அந்த வயதுக் குழுமத்தில் ஆள் எடுக்க வேண்டியிருக்கவில்லை.

நான் அதைக் குறிப்பிட்டபோது அது வயதின்பால் மேற்கொள்ளப்படும் Discrimination என்று கொள்ளப்படலாம்; வேறு காரணங்கள் தேவை என எனது மேலாளர் கூறினார். :rolleyes:

  • தொடங்கியவர்

அவருக்குத் தெரிந்த சட்டங்கள் அவ்வளவுதான்.. Discrimination என்கிற வார்த்தையை உபயோகித்திருந்தீர்கள் என்றால் அடங்கியிருப்பார். :unsure:

[size=4]அவரின் தனிமனித உரிமையை மதித்து, அவருக்கு உதவினேன். அவரும் நாமும் மகிழ்ந்தோம்[/size] [size=4] :D[/size]

நேற்று பிறந்த நாளை கொண்டாடிய கனடாவுக்கு என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்

[size=5]எனக்கு பிடித்த கனேடிய தேசிய கீதம் [/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.