Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிக்ஸ் போஸான்.. 'கடவுளை' 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-ஏ.கே.கான்

[size=3][size=4]அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.[/size][/size]

[size=3][size=4]இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் வரும் புதன்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.[/size][/size]

[size=3][size=4]02-higgs-boson-600.jpg[/size][/size]

[size=4]ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை.[/size]

[size=3][size=4]ஆனால், இந்த துணைத் துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பிரபஞ்சம் உருவானது தொடர்பாக சொல்லப்படும் தியரிகள் முழுமை பெறுவதும் இல்லை. கிட்டத்தட்ட பிளாக் ஹோல், டார்க் மேட்டர் மாதிரி இது தியரியிலேயே இருக்கிறது.[/size][/size]

[size=3][size=4]இப்படி கண்ணுக்குப் புலப்படாத இந்த அதிசயத்தைத் தான் விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவரான ஒருவரான (பீட்டர்) ஹிக்ஸ்சின் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள்.[/size][/size]

[size=3][size=4]கூடவே போஸான் என்ற பெயரும் இருக்கிறதே. அது நம் நாட்டைச் சேர்ந்த மாபெரும் இயற்பியல் வல்லுனர் சத்யேந்திர நாத் போஸின் பெயரிலிருந்து வந்தது. அதாவது சப் அடாமிக் பார்ட்டிகிள் எனப்படும் அணுவில் உள்ள துணைத் துகள்களில் 2 வகை உண்டு. ஒன்று நமது போஸ் மற்றும் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்குள் அடங்கும் துகள்கள். அவற்றுக்குப் பெயர் தான் 'போஸான்'.[/size][/size]

[size=3][size=4](இந்த கோட்பாடுகளுக்குள் அடங்காத துகள்களுக்கு பெர்மியான் (fermions) என்று பெயர். அதைப் பற்றி சமயம் வரும்போது பார்ப்போம். இப்போ வேணாம்!).[/size][/size]

[size=3][size=4]இவ்வாறு போஸான் கோட்பாடுகளுக்கு, விதிகளுக்கு உட்பட்ட துணைத் துகள்களில் முக்கியமானவை photons, gluons மற்றும் ஹிக்ஸ் போஸான் ஆகியவை. இதில் போட்டான், குளுயான்கள் இருப்பதை நிரூபித்தாகிவிட்டது. ஆனால், ஹிக்ஸ் போஸான் இன்னும் விஞ்ஞானிகளுக்கு 'விக்கல்' தந்து கொண்டே இருக்கும் ஒரு ரகசியமாகவே உள்ளது.[/size][/size]

[size=3][size=4]இந் நிலையில் தான் இதைக் கண்டுப்பிடித்தே தீருவது என்ற முடிவில் களத்தில் குதித்தனர் உலக விஞ்ஞானிகள். பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்கத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.[/size][/size]

[size=3][size=4]சோதனை என்றால் நாம் சினிமாக்களில் பார்ப்பது மாதிரி ஒரு டெஸ்ட் டியூபில் 2,3 கலர் கலர் திரவங்களைக் கலந்துவிட்டு அதே வேக வைத்து, வடிகட்டி.. ரசம் தயார் செய்வது மாதிரியான சமாச்சாரமல்ல இது.[/size][/size]

[size=3][size=4]பூமிக்கு அடியில் சுமார் 27 கி.மீ. வட்டப் பாதைக்குள் (Large Hadron Collider-LHC) புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் ஒளியின் வேகத்தில் பயங்கரமாக மோதவிட்டு அலற வைக்கும் அடாவடியான விஷயம் இது.[/size][/size]

[size=3][size=4]1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்களின் உதவியோடு வினாடிக்கு 600 மில்லியன் முறை புரோட்டான்- நியூட்ரான் கதிர்கள் எதிரெதிர் திசையில் நேருக்கு நேர் மோதி அவை குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், போட்டான், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என சிதறின.[/size][/size]

[size=3][size=4]கூடவே புரோட்டான்களுக்குள் இருந்த ஹிக்ஸ் போஸானும் எட்டிப் பார்த்ததாக சொல்கிறார்கள். அதைத் தான் வரும் புதன்கிழமை விஞ்ஞானிகள் சொல்லப் போகிறார்களாம்.[/size][/size]

[size=3][size=4]2008ம் ஆண்டு செப்டம்பரிலேயே இந்த சோதனைகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. விஞ்ஞானிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை நடத்தினர்.[/size][/size]

[size=3][size=4]ஒரு குழுவுக்கு 'அட்லஸ்' (A Toroidal LHC Apparatus) என்று பெயர். இன்னொரு குழுவுக்கு 'சிஎம்எஸ்' (Compact Muon Solenoid) என்று பெயர். ஒரு குழுவுக்குக் கிடைக்கும் ரிசல்டை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவே இந்த இரு குழுவினரும் தனித்தனியே இந்த சோதனைகளை நடத்தினர்.[/size][/size]

[size=3][size=4]2008ம் ஆண்டிலேயே ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கினாலும் உண்மையான சோதனைகள் ஆரம்பித்தது 2010ம் ஆண்டு மார்ச் இறுதியில் தான். ஆனால், சோதனைகள் நடக்க ஆரம்பித்தவுடனேயே ஆராய்ச்சிகளுக்கும் 'சோதனை' வந்துவிட்டது.[/size][/size]

[size=3][size=4]ஆராய்ச்சிகள் நடக்கும் சுரங்கத்தில் குளிர்விப்பான்கள் செயல்படுவது பாதிக்கப்பட்டதால், அதை சரி செய்து சோதனைகளை ஆரம்பிக்க மேலும் ஓராண்டு தாமதம் ஆகிவிட்டது. குளிர்விப்பான்களை ரிப்பேர் செய்ய ஒரு வருஷமா என்று கேட்கலாம்.[/size][/size]

[size=3][size=4]LHCயின் உள் வெப்பநிலை -271.3°C. ஹீலியம் வாயு உதவியோடு கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தப்பட்டது.[/size][/size]

[size=3][size=4]காரணம், புரோட்டான்கள் மோதும்போது சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும். அதை குளிர்விக்கவே இத்தனை ஜாக்கிரதை. இவ்வளவு டெக்னிகலான விஷயத்தில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய ஒரு வருடம் ஆகாதா!.[/size][/size]

[size=3][size=4]எப்படியோ இந்த ஆராய்ச்சி மூலமாக ஹிக்ஸ் போஸானை விஞ்ஞானிகள் பார்த்துவிட்டார்கள் என்பது தான் இப்போதைய லேட்டஸ்ட் அறிவியல் கிசுகிசு.[/size][/size]

[size=3][size=4]

http://tamil.oneindi...ent-156877.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 'கடவுளின் துணிக்கைகளையும்' நம்ம சனம், விலைக்கு வாங்கி மூலஸ்தானத்தில வைச்சுக், அதுக்கும் ஒரு கோயில், கட்டிக் கும்பாபிசேகம் நடத்தக், கறையான் கட்டின புத்தில, பாம்பு வந்து குடியிருக்கிற மாதிரிப், புத்தனுக்கும் வசதியாப் போயிரும் பாருங்கோ, தமிழரசு! :D

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கும் வசதியாப் போயிரும் பாருங்கோ, தமிழரசு! :D

சத்தியமா நான் அப்படி செய்யமாட்டேன்......கி..கி...

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த 'கடவுளின் துணிக்கைகளையும்' நம்ம சனம், விலைக்கு வாங்கி மூலஸ்தானத்தில வைச்சுக், அதுக்கும் ஒரு கோயில், கட்டிக் கும்பாபிசேகம் நடத்தக், கறையான் கட்டின புத்தில, பாம்பு வந்து குடியிருக்கிற மாதிரிப், புத்தனுக்கும் வசதியாப் போயிரும் பாருங்கோ, தமிழரசு! :D

நகைச்சுவையாக சொன்னாலும் நிறைய அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றது .

இந்த 'கடவுளின் துணிக்கைகளையும்' நம்ம சனம், விலைக்கு வாங்கி மூலஸ்தானத்தில வைச்சுக், அதுக்கும் ஒரு கோயில், கட்டிக் கும்பாபிசேகம் நடத்தக், கறையான் கட்டின புத்தில, பாம்பு வந்து குடியிருக்கிற மாதிரிப், புத்தனுக்கும் வசதியாப் போயிரும் பாருங்கோ, தமிழரசு! :D

:lol: :lol:

சத்தியமா நான் அப்படி செய்யமாட்டேன்......கி..கி...

:lol: :lol:

புத்தன் என்ற பெயரை வைத்ததும் கருத்து சொல்ல வசதியாய் போய் விட்டது. :D

பி.கு:- ஹைக்கூ கவிதையிலும் ஒரு கவிதை எழுதினீர்கள். (உங்கள் பெயரை வைத்து)

Edited by காதல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=6]ஹிக்ஸ் போஸான்.. 'கடவுளை' 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்![/size]

[size=3]

[size=4]-ஏ.கே.கான்[/size]

[/size]

[size=3]

[size=4]கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.[/size]

[/size]

[size=3]

[size=4]இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.[/size]

[/size]

[size=3]

[size=4]Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.[/size]

[/size]

[size=3]

[size=4]இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.[/size]

[/size]

[size=3]

[size=4]ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் 'சக்தியோடு' அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.[/size]

[/size]

[size=3]

[size=4]இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம்.[/size]

[/size]

[size=3]

[size=4]ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத 'சூப்பர் ஸ்டார்' தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.[/size]

[/size]

[size=3]

[size=4]இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.[/size]

[/size]

[size=3]

[size=4]இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.[/size]

[/size]

[size=3]

[size=4]அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.[/size]

[/size]

[size=3]

[size=4]ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)[/size]

[/size]

[size=3]

[size=4]பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.[/size]

[/size]

[size=3]

[size=4]இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.[/size]

[/size]

[size=3]

[size=4]ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.[/size]

[/size]

[size=3]

[size=4]CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.[/size]

[/size]

[size=3]

[size=4]ஆனால், 0.1% கேள்வி இன்னமும் மிச்சமிருக்கிறது...![/size]

[/size]

[size=3]

[/size]

_61348096_computerscreenpretalk_reuters.jpg

சேர்ன் கருத்தரங்கில்

இயற்பியல் துறையின் மிக முக்கிய மைல் கல்லாக அடையாளங்காணப்பட்டுள்ள கடவுள் துகள் பற்றிய தமது ஆய்வு ஆராய்ச்சி தகவல்களை சுவிற்சர்லாந்தின் சேர்ன் நகரில் உள்ள கருத்தரங்கில் வைத்து இன்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

தம்மால் கண்டுபிடிக்கப்பட்டது, கடவுள் துகளுக்கு இசைவான இணை அணுவியல் துகள் (New Subatomic Particle) என ஹாட்ரன் மோதி (Large Hadron Collider - LHC) விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

கடவுள் துகள் உண்மையில் இருக்கிறதா? அப்படியாயின் இதன் நிறை (Mass) என்ன என்தை கண்டுபிடிக்க கடந்த 45 வருடங்களாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

04ss1.jpg

மோதல் வெடிப்பு

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படி, குறித்த நுண்துகளுக்கு 125.3 ஜிகா எலெக்ட்ரோன் வோல்ட்ஸ் (GeV) நிறை இருப்பதாகவும், புரோட்டோனை விட 113 மடங்கு அதிக நிறை கொண்ட இப்பொருள் ஒவ்வொரு அணுவிலும் இதயமாக தொழிற்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.

குறித்த ஆராய்ச்சியின் தொடக்க நிலை முடிவுகளாக இவை கணிக்கபட்டுள்ள போதும், இவை ஆச்சரியந்தருபவையாகவும், உணர்ச்சிகரமானதுமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்கு பெருந்தொகையான பணம் செலவிடப்படுவது தேவைதானா?

'ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இந்நேரத்தில், இந்த ஆராய்ச்சிக்கு பெருந்தொகை பணம் செலவழிக்கப்படுவது ஏன்? என குறித்த கருத்தரங்கின் போது ஜப்பான் மற்றும் சில வெளிநாட்டு நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விஞ்ஞானிகள், இந்த ஆராய்ச்சிக்குழுவில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விஞ்ஞானிகள் தங்களது சுயநலன் பாராது உழைத்திருக்கின்றனர். அபிவிருத்தி அடைந்து வரும் ஆபிரிக்க, ஆசிய நாட்டவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அடிப்படை அறிவியல் (Fundemental Science) என்பது இந்த உலகத்துக்கு பொதுவானது. அது தனித்து யாரும் உரிமை கோரமுடியாது. அடிப்படை அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Appoled Science) இரண்டையும் சமமாகவே உலக மக்கள் கருத வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் உண்பவற்றில், ருசியானது எது? என்பது மட்டும் உங்களுக்கு தெரிந்திருந்தால் போதாது. நஞ்சானதும் எது என தெரிந்திருக்கவேண்டும். இந்த ஆராய்ச்சிகள் அடிப்படை அறிவியலுக்கும், பயன்பாட்டு அறிவியலுக்கும் இடையிலான ஆழமான முடிச்சுக்களை நோக்கி செல்வதாக குறிப்பிட்டனர்.

கடவுள் துகள் இருப்பதை உறுதிப்படுத்த பல வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட சுவிற்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் உள்ள சேர்ன் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. மேலும், சுற்றி அமைக்கப்பட்ட நிலக்கீழ் குழாய்கள் 17 மைல் தூரத்திற்கு செல்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.4tamilmedia.com/newses/world/6577-higgs-boson-like-particle-discovery-claimed-at-lhc

இந்த கட்டுரைகளை யார் எழுதுகிறார்களோ தெரியவில்லை. நிறையவே பௌதிக தவறுகள் ஆங்காங்கே தெரிகின்றன. முடிந்தவரை சிவப்பு எழுத்துக்களால் திருத்தி இருக்கிறேன். என் கண்ணில் படாமல் மேலும் தவறுகள் இருந்தால் வாசகர்கள் குறிப்பிடவும்.

[size=3][size=4]இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.[/size][/size]

[size=3][size=4]ஒலி என்பதை இங்கு ஒப்பீட்டுக்கு கூட எடுக்க முடியாது. பெரு வெடிப்பு நிகழ்ந்து அண்ணளவாக 10^(-36) செக்கன்களின் பின்னர் தான் ஹெச்ட்கொஸ் துணிக்கைகள் உருவாகின. மேலும் பேரண்டத்தின் விரிவு கிட்டத்தட்ட ஒளியின் வேகத்துக்கு சமனாக இருந்தது. [/size][/size]

[size=3][size=4]Reference: A. Zee, "Einstein's Universe" Gravity at work and play, Oxford University Press, [/size][/size][size=3][size=4]1989.[/size][/size]

[size=3][size=4]அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.[/size][/size]

[size=3][size=4]ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)[/size][/size]

[size=3][size=4]இங்கு அடைப்பு குறிக்குள் தரப்பட்டிருப்பவை பிழையானவை. ஒரு உயர்தர மாணவன் கூட இதற்கு பதில் தரக்கூடும். நிறை என்பது திணிவின் மீது புவியீப்பு செலுத்தும் விசை. [/size][/size]

[size=3][size=4]எடை, நிறை எல்லாமே ஒரே சொற்கள்தான் (weight). திணிவு என்பது mass. உதாரணமாக திணிவு (M) உம், நிறை (W) உம் கருத்தில் எடுக்கப்பட்டால், அண்ணளவாக M = W/g.[/size][/size]

[size=3][size=4]திணிவு எங்குமே மாறாது. இது சடப்பொருளுடன் நேரடியாக தொடர்புபட்டது. நிறை இடத்துக்கு ஏற்றபடி மாறும். நிறை ஈர்ப்பு விசையில் தங்கி இருக்கும்.[/size][/size]

[size=3][size=4]

http://tamil.oneindi...und-157024.html[/size][/size]

மொழி பெயர்ப்பவர்கள் சிறிது விஞ்ஞானத்தையும் கற்றிருப்பது அத்தியாவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பே தவறு.

ஹிக்ஸ் போஸான் போன்ற ஒரு துணிக்கை கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது..! இதுதான் சரியான தலைப்பு.

ஹிக்ஸ் போஸான் இன்னும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை..! இன்றைய இந்த நிலையில் இருந்து ஹிக்ஸை உறுதியாகக் கண்டுபிடிக்க இன்னும் நிறையத் தூரம் பயணிக்க வேண்டிய நிலையில் இவ்வாறான தலைப்பிடுதல்கள் மக்களை தவறாக வழி நடத்தும்..!

அமெரிக்க விஞ்ஞானிகள் அண்மையில் செய்த ஆய்வொன்றில் இருந்து ஹிக்ஸ் கண்டுபிடிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நிலை தெரிந்தவுடன்.. பல கோடி டொலர்களைக் கொட்டி பிறிதொரு பரிசோதனை செய்த மேற்படி.. சேர்ஸ் தன்னை தற்காத்துக் கொள்ள இந்த அறிவிப்பை அவசர அவசரமாக வெளியிடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நிறைய விடயங்கள் பதங்களுக்குள் பதுக்கி அல்லது மறைக்கப்பட்டு சோடிக்கப்பட்டு இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Higgs boson-like particle discovery claimed at LHC

Cern scientists reporting from the Large Hadron Collider (LHC) have claimed the discovery of a new particle consistent with the Higgs boson.

The particle has been the subject of a 45-year hunt to explain how matter attains its mass.

Both of the Higgs boson-hunting experiments at the LHC see a level of certainty in their data worthy of a "discovery".

More work will be needed to be certain that what they see is a Higgs, however.

Prof Rolf Heuer, director-general of Cern, commented: "As a layman I would now say I think we have it."

"We have a discovery - we have observed a new particle consistent with a Higgs boson. But which one? That remains open.

"It is a historic milestone but it is only the beginning."

http://www.bbc.co.uk.../world-18702455

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ரயிலில் பயணித்தபோது படித்த இலகுவாக விளங்கக்கூடிய கட்டுரை (ஆங்கிலத்தில்) [/size]

[size=6] Found: One particle, masquerading as god[/size]

Wed, 07/04/2012 - 08:54 — Ben Gilliland

Higgs_found.gif

So, after (literally) days of fevered speculation, CERN physicists have announced that they found something that seems to be the Higgs boson – the most famous thing that may, or may not have existed (thus bumping whether or not Justin Bieber has talent into the top spot – physicists don't anticipate that this will be found).

At the Large Hadron Collider, two experiments have been bent to task of locating the Higgs – CMS and ATLAS – and both have detected signals in their data that suggest the presence of a particle that weighs in at about 125-126 GeV – about 130 times heavier than a proton.

At CMS, the team have “attained a confidence level” just shy of the golden “five sigma” level of certainty – with one data set reaching five sigma (a one-in-3.5 million chance they are wrong) and the combined result hitting 4.9 sigma (a one-in-two million chance).

The discovery can be seen as a vindication for the hugely expensive and massively ambitious LHC project, which was built to find the Higgs at a cost of $10bn (it can do other stuff too by the way).

The Higgs boson was summoned into theoretical existence in the 1960s to plug a hole in a theory that was almost perfect – the ‘standard model’ of particle physics.

Infographic: The Standard Model of particle physics (click to make massive)

Standard_model_particles.gif

The standard model has been hugely successful – it can provide explanations and make predictions about how the counter-intuitive quantum world of particles works. But it couldn’t explain one thing – why the universe has mass (it also can’t explain dark energy and dark matter... but you can’t have it all).

This was a crucial omission because, without mass, their is no gravity and, without gravity, the roiling soup of particles spat out by the Big Bang would never have coalesced to form the stars and planets – neither you, me or anything else would exist.

The Higgs boson is seen as the answer to this problem. It is the physical emissary of a all-pervading field that interacts with matter to give it the mass that the universe so desperately needs.

Just a word of caution – just because physicists have found what appears to be the Higgs boson, it doen't mean it is what they were expecting... much more investigation will be required.

Higgs_bluffers_pt2_1.gif

http://cosmonline.co...asquerading-god

[size=5]இதில் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சயம் நோபல் பரிசு கிடைக்கும்.[/size]

[size=5]Peter Higgsக்கு நோபெல் பரிசு வழங்கப்படவேண்டும் - Stephen Hawking[/size]

[size=4]ஹிக்ஸ் போசொன் நுண் துகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில், அந்தத் துகள்கள் குறித்து எதிர்வுகூறிய பீட்டர் ஹிக்சுக்கு நோபெல் பரிசு வழங்கப்படவேண்டுமென பிரபல பௌதிகவியலாளர் Stephen Hawking தெரிவித்தார்.

அந்தத் துகள் கண்டுபிடிக்கப்படாதென தாம் மற்றொரு விஞ்ஞானியுடன் 100 டொலர் பந்தயம் பிடித்ததாகவும், தற்போது அதில் தோல்வியடைந்துள்ளதாகவும் ஹோக்கிங் கூறினார்.[/size]

[size=4]http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12361

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் திணிவைக் கொடுப்பதாக கருதப்படும் ஹிக்ஸ் போசொன் நுண் துகளைக் கண்டுபிடித்துள்ளதாக நம்புவதாக நேற்று விஞ்ஞானிகள் அறிவித்தார்கள்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.