Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சந்தோசமான செய்தி - உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அப்பிடித்தான் நினச்சன்.........சிறித்தம்பி!இனியாவது ஜெனிலியாவை விட்டுட்டு சரோஜாதேவி ரசிகர் கூறூப்பிலை நீந்த அன்புடன் அழைக்கிறன் :D:lol:

:lol: :lol: :lol: :lol:

  • Replies 201
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சிறியண்ணாவின் பிள்ளைக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறியின் பிள்ளைக்கு எனது வாழ்த்துக்கள்.

அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழ்சிறி சிறிய வயதினர் என இங்கு பலரும் எழுதுவதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

அவர் பலமுறை இங்கு தனது பிள்ளைகள் பற்றி எழுதியுள்ளார்.

போன வருடம் கூட அடுத்து என்ன படிப்பை தெரிவு செய்யலாம் என்ற திரியை தானே திறந்து வினா எழுப்பியிருந்தார்.

இந்த மறதியைப்பார்க்கும்போது உங்கள் அனைவருக்கும் எங்களைவிட வயது அதிகம் என்பது புரிகிறது.

தமிழ்சிறிக்கும்[அண்ணாவுக்கும்], அவரது மகனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

அது சரி வி அண்ணாவும், தமிழ்சிறி அண்ணாவும் எப்போது எங்களுக்கு பாட்டி கொடுக்கப்போகிறீர்கள் ... :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்ப வேணுமானாலும் வாங்கோ

விருந்து தரலாம் :wub:

என்னை சந்திக்க முடியாவிட்டாலும் லா சப்பலில் நின்று தொடர்பு கொள்ளுங்கோ.

நான் சொல்லும் இடத்தில் விருந்து தருவார்கள். :icon_idea:

எப்ப வேணுமானாலும் வாங்கோ

விருந்து தரலாம் :wub:

என்னை சந்திக்க முடியாவிட்டாலும் லா சப்பலில் நின்று தொடர்பு கொள்ளுங்கோ.

நான் சொல்லும் இடத்தில் விருந்து தருவார்கள். :icon_idea:

ஐயோ என் உடம்பு தாங்காதுங்க அதுவும் லாச்சப்பலா .......................இந்த டீல் வேணாமுங்கோ.... :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு தமிழ் சிறி

பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.

அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த பெற்றேர்கள் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.

லா சப்பலில்

[size=5]யாரோ சொல்லிச்சினம் உந்த இடம் சரியான குப்பை என்று, அப்படியா? என்னோடு சண்டைக்கு வரவேண்டாம்![/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும்... எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை :) .

உங்களது வாழ்த்துக்கள் எனது குடும்பத்தினருக்கு கிடைத்த பெரும் உற்சாகம் :rolleyes: .

என்னை... எல்லாரும், திருமணமாகத இளம் பையன் என்று நினைத்திருந்தது பெரு மகிழ்ச்சியை... தந்தது :D .

அவசரப் பட்டுட்டியே... பரட்டை.. :o .

இனி, எப்படி ஜெனிலியாவுக்கு ஜொள்ளு விடலாம்.... என்பதே, தற்போதையை எனது கவலை :icon_idea: .

மேலும்.. கனடாவில மெடிசன் படிக்கிறது கஸ்டம் என்று எழுதி யூ கே போல அல்ல கனடா என்று எழுதி இருக்கீங்க.

யூ கேல என்ன நடைமுறை பின்பற்றப்படுகுது என்று தெரிஞ்சா இதை எழுதி இருக்கீங்க.. அப்படி தெரிஞ்சா அதை கொஞ்சம் சொல்லுறீங்களா..????????????!

சும்மா சும்மா எல்லாம் அனுமானிக்கக் கூடாது..????! :lol::D:icon_idea:

எனக்கென்றால் கனடாவில.. எல்லாமே ஈசின்னு தோனுது..! :icon_idea: :icon_idea:

நான் படிப்பின் கடினம் பற்றிக்கூறவில்லை. யூகே, கனடாவில் மருத்துவக்கல்வியின் கனதிபற்றி எனக்குத்தெரியாது. நான் கூறியது மருத்துவம் கற்பதற்கு பல்கலைக்கழக அனுமதி கிடைப்பது பற்றியது. எனது உறவினர்கள், அவர்கள் பிள்ளைகள், அறிந்தவர்கள் என யூகேயில் ஏராளம் மருத்துவர்கள் உள்ளார்கள், மருத்துவக்கல்லூரியிலும் மாணவர்களாக பலர் உள்ளார்கள். ஆனால், யூகேயுடன் ஒப்பிடும்போது கனடாவில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே உள்ளார்கள். யூகேயில் கற்கும் மாணவர்களில் சிலர் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் மருத்துவக்கல்வியில் Batch Topஆகவும் விளங்கினார்கள். மருத்துவக்கல்வியைப்பெறுவதற்கு கனடாவைவிட யூகேயிலேயே நம்மவருக்கு வசதி, வாய்ப்புக்கள் ஒப்பீட்டளவில் மிகஅதிகம் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுக்கு, தமிழ்சிறி எப்போது பாட்டி ? :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணாவுக்கும் தமிழ் சிறிக்கும்.பெருமைக்குரிய பெற்றோர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பிள்ளைக்கு. :)

மென்மேலும் பல சாதனைகள் செய்து கல்வியில் உச்சாணிக்கு வர என் வாழ்த்துக்கள்.

நன்றி ஜீவா

உங்கள் கனவை நனவாக்கிய உங்கள் பிள்ளைகளுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள் விசு அண்ணா .

நன்றி கிளியவன்

தம்பிக்கு வாழ்த்துகள் .....!

வாழ்வில் மென்மேலும் உச்சம்களை எட்டட்டும்

நன்றி அபராஜிதன்

ஈழத்தமிழன் என்றால் உலகில் எங்கும் எந்தத்துறையிலும்

முதன்மையான இடத்தில் இருப்பான் என்பதற்கு இன்னுமொரு

உதாரணம்.

அப்படி முதன்மையான இடத்திற்கு பிள்ளைகளை அழைத்துச்

செல்வது பெற்றோரின் முதற்கடமை.

அந்தவகையில் அவரின் பெற்றோருக்கும் அவருடைய

இளைய மகனுக்கும் எமது வாழ்த்துகள்.

நன்றி வாத்தியார்

இப்படித்தான் நான் எல்லேலாருக்கும் வாழ்த்துச்சொல்வேன் இங்கு.

என் பிள்ளை அதிலிருந்து விலக முடியுமா?

வாழ்த்துக்கள் அண்ணா.

பல்கலைகழகத்திலும் சாதனைகள் படைக்கட்டும்

வீட்டுக்கு மட்டுமில்லாது எமது தாய் நாட்டுக்கும் அவரது உயர் படிப்பு கைகொடுக்கட்டும்.

நன்றி கயன்

நிச்சயமாக.

[size=1][size=4]விசுகு அவர்களின் மகனுக்கும் குடும்பத்திற்கும் பாராட்டுக்கள்![/size][/size]

[size=4]கல்வி என்ற சொத்தில் முதலீடுகள் செய்யும் எமது வரலாற்று பண்பியல் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தொடரவேண்டும். [/size]

[size=1][size=4]அதற்கு அரும்பாடு படும் பெற்றோர்களுக்கு நன்றிகள். அடுத்த தலைமுறை முன்னேற வேண்டும். [/size][/size]

[size=1][size=4]உங்கள் குடும்பம் அதற்கு முன்னுதாரணமாக இருக்கட்டும். [/size][/size]

நன்றி அகோதா

எனது பிள்ளைகளுக்கு

எனது இனத்துக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகள்

இழைக்கப்பட கொடுமைகள்

செய்யப்பட்ட ஏமாற்றுக்கள் பற்றி....

முழுத்தகவலும் தெரியும்.

நிச்சயம் அது இந்த உலகை ஒரு நாள் தகர்க்கும்.

எனது பெயருக்குப்பின் எந்த தகுதியும் இல்லை. அதனால் எனது அழுகுரலுக்கோ எழுத்துக்கோ எவரும் காது கொடுக்கவில்லை.

ஆனால் சர்வதேசம் அடுத்த தலைமுறையின் கடிதத்துக்கு பதில் எழுதவேண்டி வரும்.

எழுதுவார்கள்.

அந்தவகையில் எனது பக்க நிலைகளை நான் பலமாக அமைப்பேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சந்தோசமான செய்தி!

முன்பு வேறு ஒரு திரியில் உங்கள் பிள்ளைகள் இப்படி செய்வார்களா அப்படி செய்வார்களா? என்று உங்களை ஒருவர் சீண்டியிருந்தார். அதற்கு நீங்களும் ஆம் அவர்கள் அப்படி செய்வார்கள் என்று எழுதியிருந்தீர்கள். அது கொஞ்சம் கவலையாக எனக்கு இருந்தது. காரணம் உங்களுடைய அபிலாசைகளை அவர்களுக்குள் திணிக்க போய் இறுதியில் அவர்களுடைய ஆசையையும் நிறைவேறாது போய்விடலாம் என்ற சின்ன ஏக்கம் இருந்தது.

மேலை நாட்டை பொறுத்தவரை (உலகில் எங்கு என்றாலும்) கல்விதான் மிக முக்கியமானதொன்று. அதை பல்லை கடித்துக்கொண்டு முடித்துவிட்டால் பின்பு வாழ்க்கை மிக சுலபமாகிவிடும். அதை தவற விடேல் எதையும் சாதிக்க முடியாது போய்விடும்.

இதில் உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஒன்று இரண்டு பொறியிலாலர்களை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து உருவாக்கியது. மற்றது உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நிட்சியதன்மை.

அவர்களுக்குள் உங்களுடைய இரத்தம் இருக்கிறது உங்களுக்குள் என்ன துடிப்பு இருக்கிறது அதை அவர்கள் உணர்வார்கள். எதிர்காலத்தில் நிச்சயம் உங்களுடைய ஆசைகளுக்காக அவர்கள் உழைப்பார்கள். "சுவர் இருந்தால்தான் சித்திரம் கீறலாம்" நாங்கள் முக்கி முக்கி செய்யும் சிறு சிறு உதவிகளை அவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றே முடிப்பார்கள். அதற்குரிய வசதி அவர்களிடம் இருக்கும்.

இது தான் ஐயா எனது நிலையும்.

எனது பிள்ளைகள் பற்றி எனக்கு ஒரு கனவு உண்டு எல்லாப்பெற்றோர் போல்.

ஆனால் அவர்கள் எனது நண்பர்கள். அதனால் கலந்து பேசியே முடிவுகள் எடுக்கப்படுகிறது. அதேநேரம் கண்டிப்பான அப்பா.

இவனும் என்னைப்போல்தான். பாடசாலையில் படிப்பதோடு சரி. வீட்டுக்கு வந்தால் நன்றாக தூங்குவான். தாய் என்னுடன் சத்தம் போடுவார். நான் சொல்வேன். படிப்பில் நன்றாக இருக்கின்றான். இதுவரை ஒருதரமும் நின்று படிக்கவில்லை. அத்துடன் 18 வயதில் வீட்டில் பிள்ளை படுத்துக்கிடக்கு என்று பெருமைப்படு. ஊரில் நடப்பதை அறிவீர்தானே என்று.

பாடசாலையில் 3 மாத்துக்கொருமுறை என்னைக்கூப்பிட்டு கதைப்பார்கள். எல்லா ஆசிரியர்களும் என்னிடம் சொல்வது அவர் பாசாவார் என்று அவரது தலைக்குள் முடிவெடுத்துவிட்டார். வீட்டில் கொஞ்சம் படித்தால் நல்லது. இல்லாவிட்டாலும் அவரை உறுத்தவேண்டாம். ஆள் புத்திசாலி என்று.

அத்துடன் பழக்கவழக்கங்களுக்கு 100 க்கு 90க்கு மேல் தொடர்ந்து எடுப்பார். அதுவே மற்றவைவககளை சமன் செய்து விடும். இதற்கு பெற்றோரே முன் உதாரணம்.

நான் இதுவரை சிகரெட் குடித்ததில்லை. மது பானம் அருந்தியதில்லை.

அதற்காக அவர்களும் என்னைப்போலிருக்கணும் என்ற நினைப்புக்கிடையாது.

அப்பா எமக்காகவே தன்னை கட்டுப்படுத்தி வாழ்கிறார் என்பது தெரியும். அவ்வளவு தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பிள்ளைக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்து விடுங்கள் அண்ணா. :) அவர்களை முன்னேற்றிய உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் பாராட்டுகள். :)

நன்றி துளசி

உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு வழிகாட்டிகளாக இருக்கும் உங்களுக்கும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்..! :icon_idea:

நன்றி நெடுக்கு.

வீட்டில் உங்களது துறைக்குள் ஒருவரைக்கொண்டு வரணும் என்று ஆசை.

ஆனால் இவன் கொஞ்சம் சோம்பேறி.

மறுத்துவிட்டான்.

நானும் கட்டாயப்படுத்தவில்லை.

காரணம் இங்கு மருத்துவ படிப்பில் முதலாவது வருடம் 3000 பேபர் இருக்கும் ஒரு யூனியில் 300 பேரைத்தான் தெரிவு செய்வார்கள். அது ஒரு தற்கொலை முயற்சி என்று எனக்குப்பட்டதால் இவனை விட்டு விட்டேன்.

ஆனால் இன்னெனான்று வைத்துள்ளேன். தயார்ப்படுத்தல் நடக்கிறது.

[size=5]கனவை நனவாக்கிய உங்கள் பிள்ளைகளுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள்.[/size]

நன்றி சுடலை மாறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நல் வாழ்த்துக்களும் அந்தப் பிள்ளையை சென்றடையட்டும்..எனக்கும் மிகவும் பிடித்தமான விடையம் புலம் பெயர்ந்த மண்ணில் பிள்ளைகள் தங்களால் முடிந்த மட்டுக்கு கல்வி ரீதியாக முன்னேற்றிக் கொள்வது..நான் யாருடைய பிள்ளையைக் காணும்போதும் முதலில் கேட்பது என்ன படிக்கிறீங்கள்,எப்படிப் போகிறது என்பதே..அதிகமாக எனது ஊக்குவிப்புக்கள் கூட கல்விகற்றுக் கொண்டு இருக்கும் பிள்ளைகளுக்கு தான்..

நன்றி யாயினி

என் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். பெற்றோருக்கு என் பாராட்டுக்கள்.

நன்றி பாட்டி

உங்கள் வாழ்த்துக்கு கொடுத்து வைத்திருக்கணும். (ரீச்சர் வேறு)

வாழ்த்துக்கள் அண்ணா!

எமது இரண்டாம் தலைமுறைகள் இந்த நாட்டில் கொடி கட்டிப் பறக்க வேண்டும்.

அதற்காக பல தியாகங்களுடன் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் விசுகு அண்ணா உள்ளிட்டஅனைத்துப் பெற்றோருக்கும் பாராட்டுக்கள்...

நன்றி

மணிவாசசகன்

இந்த நாடுகளில் இலவசமாக எல்லா வசதிகளும் செய்து தருகிறார்கள். அதை நாம் பயன்படுத்தவில்லையென்றால் எனக்கு கெட்ட கோபம் வரும். இது எனது மக்களுக்கு தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு, உங்களது மகிழ்ச்சியில்... நானும் பங்கு கொள்கின்றேன் :) .

எனது வாழ்த்துக்களையும்... உங்கள் மகனுக்கு தெரிவித்து விடுங்கள்.

எனது மகனும்... இந்த முறை Abitur எடுத்து எல்லாப் பாடங்களிலும் முதலாவது புள்ளி எடுத்து, பாடசாலையிலேயே... முதலாவது மாணவனாக தேறியுள்ளார். அவருக்கு, மருத்துவத் துறையில் தான் படிக்க ஆர்வமாக... உள்ளது. அதனால்.. மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும், சில பொறியியல் பலகலைக்கழகத்திற்கும் விண்ணப்பித்து விட்டு... பதிலை எதிர்பார்த்துக் கொண்டுள்ளார், இங்கு... ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் தான்... பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கும்.

தமிழன் உயரணும்

அவனது சொல்லை உலகம் கேட்கும் நிலைவரணும்

அதுவே எம்மை மீட்கும்.

அந்தவகையில் மேலும் ஒரு நற்செய்தி தந்த தமிழ்சிறி மற்றும் அவரது குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள். அத்துடன் யாழிலும் சரி தமிழனாகவும் சரி நாமெல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்.

அந்தவகையில் வரம்புயர என்பதே எமது நிலைப்பாடு.

நனன்றி சிறி

வாழ்த்துக்கும் பதிவுக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கனவை நனவாக்கிய உங்கள் பிள்ளைகளுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள் !

அவருக்கு வழிகாட்டிகளாக இருக்கும் உங்களுக்கும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் !!

நன்றி தமிழரசு

விசுகு அண்ணா உங்கள் மகனிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்[அவர் தமிழ் வாசிப்பாரா?]...அதே போல தமிழ்சிறியின் மகனுக்கும் எதிர் பார்த்த வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்

நன்றி ரதி

ம்... வெளிப்படையாகச்சொன்னால் கேட்பதற்கு எரிச்சலாக உள்ளது. தாயகப்போராட்டத்தை காட்டி அசைலம் அடித்த, கோப்பை கழுவுகின்ற அசைலிகளின் பிள்ளைகள் படித்து முன்னுக்குவருவதை அறிய சற்றுச்சங்கடமாகவே உள்ளது.

உங்களுக்கு இந்த வயதில் ஒரு புதல்வர் உள்ளாரா? நம்பமுடியவில்லை.

கனடாவில் என்றால் மருத்துவராக வருவது என்பது மிகுந்த சவாலான விடயம், பெரிய சாதனை என்றும் கூறலாம். யூகே போல் அல்ல கனடா. ஆனால், பொறியியலாளராக வருவது ஒப்பீட்டளவில் இலகுவானது.

நன்றி கரும்பு.

... பெற்றோரிற்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய மகிழ்ச்சி, அவர்களது பிள்ளைகளின் முயற்சி/வளர்ச்சி/உயற்சிகளின் போதே! நாம் சூழ்நிலைகளின் நிமிர்த்தம் தவற விட்ட கனவுகளை, எம் பிள்ளைகள் நனவாக்கும் போது, உலகமே எம் கைகளுக்குள் அடங்கியது போல் பிரமை ஏற்படும்! ... நன்றிகள் விசுகு, உம் மகிழ்ச்சியை ஏனையோரிடம் பகிர்ந்ததற்கு! மகனுக்கும் வாழ்த்துக்கள்!

... புலத்தில் எம் அடுத்த சந்ததியை சார்ந்த பலர் உச்சங்களை தொடுவதை பிரமிப்போடு பார்க்கும் அதேவேளை சிலர் தமக்கான புதைகுழிகளை தோண்டுவதையும் பார்க்கிறோம் ... வேதனை!

நன்றி நெல்லையன்

ரொம்ப நல்லது.... நன்றாக படிக்க வைங்க தோழர்... :) :)

நன்றி புரட்சி (என் ரத்தம்)

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

நன்றி இணையவன்

மிக்க மகிழ்ச்சி விசுகு அண்ணா எதோ எனது சொந்தத்திற்கு நடந்தது போன்று உணர்வடைகிறேன்.....

ஏனனில் எனது வாழ்க்கையிலும் பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொரு வெற்றிப்படிகளையும் தாண்டி முன்னேறும் போது எனது தெய்வீகப்பிறவியான அந்த தந்தையின் முகத்தில் ஏற்பட்ட மாற்றமும் ,உற்சாகமும்.மகிழ்ச்சியும் இன்றும் எனது மனதில் படமாய் ஓடுகிறது....அப்படி ஒரு உணர்வு உங்களுக்கு வரும்போது எப்படி நீங்களும் இருப்பீர்கள் என்பதை நன்றாக புரிய முடிகிறது......

நாம் [size=5]அகதிகளாய் [/size]இங்கு வந்தாலும் எம் சந்ததியினரை பண்பட்ட ,படித்த சமுகமாக வளர்க்க வேண்டியது எம் பொறுப்பு .......அந்தப்பொறுப்பில் நீங்கள் வெற்றியடைந்து கொண்டு இருக்கிறீர்கள் .........வாழ்த்துக்கள்......உங்கள் மகனுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுங்கள்

நன்றி தமிழ்சூரியன்

பறிக்கப்பட்டவைகளின் அருமை எமக்குத்தெரியும்

அகதியாய் ஏன் வந்தேன் என்பதை நான் அறிவேன். அதற்காக வெட்கப்பட்டுவருகின்றேன்.

முள்ளி வாய்க்காலுக்குப்பின் அதன் வருத்தம் மேலும் அதிகரித்துள்ளது. அதற்கு என்னால் முடிந்தவரை ஒத்தணம் கொடுத்துள்ளேன். அதன் தொடர்ச்சியே எனது அடுத்த தலைமுறையை தயாராக்குவதும். என் மகனுக்கும் பேரனுக்கும் பூட்டனுக்கும் அதை உணர்த்தியே நான் வீழ்வேன்.

நெடுக்கு எழுதுவதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. அத்தனையும் உண்மை. நல்ல விசாவுக்காகவும் வருமானத்துக்காகவும் சொகுசாக வாழவும் எம் மாவீர செல்வஙங்களை எமக்காக எல்லாவற்றையும் தர தயாராக களத்தில் நின்ற தளபதிகள் போராளிகள் அனைவரையும் நாம் தவறாக பயன்படுத்தினோம் என்பது உண்மையே. சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையே சர்வதேசத்தில் எடுபட்டது. அதை நாம் முதலில் யீரணிக்கணும். இல்லையென்றால் தப்பான முடிவுகளே தொடரும்.

.

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா. வாழ்க்கையில் பல்கலைக்கழகம் ஒரு முக்கியமான மைல் கல் - படிக்கல்.

கல்வி தான் எம் அழியாச் சொத்து.

நன்றி ஈசன்

எம் வீட்டை வந்த போது மிக அமைதியாக இருந்தவர் தானே? கல்வியில் மென்மேலும் முன்னேறி பல சிகரங்களைத் தொட மேலும் அன்பான வாழ்த்துக்கள்!!

நன்றி நிழலி

அவரே தான்

உங்கள் வாழ்த்து முக்கியம்

ஏனெனில் நேரில் பார்த்தவர் தாங்கள்.

எனது வளர்ப்பை மெச்சியவர் தாங்கள்.

[size=5]எனது வாழ்த்துக்களை மகனுக்குச் சொல்லிவிடுங்கோ விசுகு![/size]

[size=5]வாழ்த்துக்கள் டமிழின் மகனுக்கு[/size] :)

[size=5]எனக்கு இன்று தான் தெரியும் டமிழ் குடும்பகாரன் என்று. [/size]

நன்றி அலைமகள்

மகிழ்ச்சியான செய்தி, வாழ்த்துக்கள் விசுகு அண்ணா. சிறி அண்ணாவுக்கு யூனி போகும் வயசில மகனா :o :o :o ? இனி உங்களை அங்கிள் சிறி எண்டு அழைப்பதாக உத்தேசம் :icon_mrgreen: .

நன்றி Thumpalayan

வாழ்த்துக்கள் விசு.. ஈழத்தின் புத்திஜீவிகளில் புதிதாக ஒரு சீவன் சேருகிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. அவர்களாவது உங்கள் கனவை சாதிக்கட்டும்.

ஈழ புத்திஜீவிகளுக்கென்று ஒரு இறுகிய, ஒற்றுமையான அமைப்பு ஏதாவது இருக்கா...? இல்லை, வழக்கம் போல் அங்கேயும் குடுமிபிடி சண்டைதானா? :unsure:

ஓ.. தமிழ் சிறி, உங்களுக்கு கல்லூரி செல்லும் வயதில் பையனா..? உங்கள் குரலைக் கேட்டால் அப்படி தோன்றவில்லையே...! :rolleyes:

உங்களும், உங்கள் பொடியனுக்கும் மென்மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்...!

நன்றி ஐயா

வாழ்த்துக்கள் விசுகண்ணா உங்களுக்கும் உங்கள் மகனுக்கும்,மற்றும் சிறி அண்ணாவின் மகனுக்கும் வாழ்த்துக்கள்

நன்றி வாதவூரான்

பிஞ்சுகளின் பெருமை கண்டு.

நெஞ்சு நிமிர்கிறது, நண்பா!

புங்கையூர், இன்னுமொரு.

பூம்புகார் ஆகட்டும்!

வாழ்த்துக்கள், விசுகர்! :D

அதுதுதுதுது

நன்றி ஐயா....

[size=4]வாழ்த்துக்கள் விசுகண்ணா

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

வாழ்த்துக்கள் மகனுக்கு விசுகண்ணா.[/size]

[size=4]மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

எந்நோற்றான் கொல்லெனும் சொல். [/size]

நன்றி மல்லையூரான்

இலக்கு கொக்கின் தலையே.........

வாழ்த்துக்கள் விசுகர்!ஒரு தாய்தந்தையரின் வளர்ப்பில்தான் பிள்ளைகளின் எதிர்காலம் தங்கியுள்ளது என்பதற்கு நீங்களும் ஒரு எடுத்துக்காட்டு.உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைவியாருக்கும் என் பாராட்டுக்கள்.

சிறித்தம்பியர்! உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.ஜேர்மன் பாடசாலைகளில் முதலாவது புள்ளிகள் எடுப்பதன் கடினம் எனக்கும் தெரியும்.அந்த வகையில் உங்கள் மகனுக்கு என்பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

நன்றி ஐயா

உங்கள் வாழ்த்துக்கு கொடுத்து வைத்திருக்கணும்.

உங்கள் கனவை நனவாக்கிய உங்கள் மகனுக்கு, அவருக்கு வழிகாட்டிகளாக இருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

நன்றி 'VENDAN'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு தமிழ் சிறி

பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.

அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த பெற்றேர்கள் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.

நன்றி eelapirean

உங்ககளது இந்த பெயருக்காக ஒரு விடயத்தை எழுதணும் போல் இருக்கு.

பங்குனி மாதம் நடந்த பெற்றோர் ஆசிரியரர் கூட்டத்துக்கு மகனுடன் போயிருந்தேன்.

நான் அப்படியான இடங்களுக்கு போகும் போது கொஞ்சம் அவர்களுக்கு பிடிக்குமாப்போல் உடையணிவேன்.

அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்த போது தான் இவனது கழுத்தை கவனித்தேன்.

தமிழீழ தேசியக்கொடி பதித்த துணியை கழுத்தில் போட்டிருந்தான். பின்னர் வெக்கையாக இருந்ததால் கழட்டி கையில் வைத்திருந்தான்.

இதெல்லாம் இளம் தலைமுறைக்கு புகுத்தி வருவதில்லை. தானாக வரணும். வந்திருக்கு.

அதை நான் வாங்கிக்கொடுக்கவுமில்லை. நானே அப்பொழுதுதான் கண்டேன்.

வாழ்த்துக்கள் விசுகு அண்ணாவுக்கும் தமிழ் சிறிக்கும்.பெருமைக்குரிய பெற்றோர்கள்.

நன்றி நுணாவிலான்

வாழ்த்துக்கள் விசுகு, தமிழ்சிறி மற்றும் உங்கள் பிள்ளைகளுக்கும்.....

செல்வங்களில் மேலான செல்வம் கல்விச்செல்வம். பெற்றோர் பிள்ளைகளிடம் இருந்து எதிர் பார்ப்பதும் இந்தச்செல்வம் ஒன்றைத்தான் அது உங்கள் இருவருக்கும் கிடைத்துள்ளது. உங்கள் பிள்ளைகளுக்கு பாரட்டுக்களும் மீண்டும் எனது வாழ்த்துக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவின் புதல்வனுக்கும் தமிழ் சிறீயின் மகனுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவின் புதல்வனுக்கும் தமிழ் சிறீயின் மகனுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

புதல்வனுக்கும், மகனுக்கும் என்ன வித்தியாசம் வல்வை சகாரா?

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் நான் அழுதிடுவேன் :unsure::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு.

வீட்டில் உங்களது துறைக்குள் ஒருவரைக்கொண்டு வரணும் என்று ஆசை.

ஆனால் இவன் கொஞ்சம் சோம்பேறி.

மறுத்துவிட்டான்.

நானும் கட்டாயப்படுத்தவில்லை.

காரணம் இங்கு மருத்துவ படிப்பில் முதலாவது வருடம் 3000 பேபர் இருக்கும் ஒரு யூனியில் 300 பேரைத்தான் தெரிவு செய்வார்கள். அது ஒரு தற்கொலை முயற்சி என்று எனக்குப்பட்டதால் இவனை விட்டு விட்டேன்.

ஆனால் இன்னெனான்று வைத்துள்ளேன். தயார்ப்படுத்தல் நடக்கிறது.

மருத்துவம் சார் துறைகளில் போட்டி அதிகம் தான். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தி இதற்குள் கொண்டு வராதீர்கள். ஆர்வமுள்ள ஒருவர் இத்துறைக்கு வந்து சாதிப்பதை விட.. கட்டாயப்படுத்தலில் வாறவர்கள் கஸ்டப்படுவதையே அநேகம் காண்கிறோம். எனவே அவரவர் திறமைக்கு விருப்புக்கு ஏற்ப துறைகளை தெரிவு செய்வது அவர்கள் அதில் எதிர்காலத்தில் மிளிர வகை செய்யுங்கள்.

எனக்கு மருத்துவத் துறையில்.... research scientist ஆகன்னென்னு தான் ஆசை..! வைத்தியம் பார்க்கிற மருத்துவர் ஆகனுன்னு ஆசையே இல்லை. அந்த ஆசை இப்பதான் கொஞ்சோண்டு நிறைவேறி இருக்குது. இடையில்.. நிறைய சவால்களை சந்திக்க வேண்டி வந்துவிட்டதால்.. எதிர்பார்த்த அளவு விரைவாக அந்த நிலைக்கு வர முடியவில்லை. அதற்காக எல்லோருக்கும் அப்படி என்றல்ல. நேரமும் வாய்ப்புக்களும் சந்தர்ப்பங்களும் வசதியும்..விடா முயற்சியும்.. சரியாக அமைந்தால்.. நிச்சயம் விரைவாக வர முடியும்..! இவற்றைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளுக்கு வழிகாட்டுக்கள்...! :icon_idea::)

Edited by nedukkalapoovan

தமிழ் சிறியின் மகனுக்கும் வாழ்த்துகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.