Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் ஒலிம்பிக் போட்டி: சில சுவாரஸ்யமான தகவல்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14-london-olympics-2012-logo.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டி: சில சுவாரஸ்யமான தகவல்கள்...

லண்டன்: லண்டனில் 3வது முறையாக நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கவனிக்க வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

* லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த 1908, 1948 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி நடந்துள்ளது. இந்த முறை 3வது முறையாக நடத்துவதன் மூலம், அதிக முறை ஒலிம்பிக் போட்டியை நடத்திய பட்டியலின் முதலிடத்தை லண்டன் மற்றும் ஏதேன்ஸ் நகரங்கள் பகிர்ந்து கொள்கின்றன.

* இந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி லண்டன் ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற 1912 ஸ்டாக்ஹால்ம் ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ம் தேதி முடிவடைந்தது. கடந்த 1948 லண்டனில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 29ம் தேதி துவங்கியது.

* 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் அதிக வயது உடையவர் ஜப்பானை சேர்ந்த குதிரை சவாரி வீரர் ஹிரோஷி ஹோக்ட்சூ. இவருக்கு 70 வயது.

* கடந்த 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து அணி 3 தங்கம் உட்பட மொத்தம் 23 பதக்கங்களை வென்றது. இதன்மூலம் பதக்க பட்டியலில் 12வது இடத்தை பெற்றது. இந்த நிலையில் 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து அணி பெற்ற மொத்த பதக்கங்களில் இருந்து தங்கப் பதக்கத்தை கழித்தால், 20 என்ற எண் கிடைக்கிறது. இதனுடன் இங்கிலாந்து பதக்க பட்டியலில் பெற்ற இடத்தையும் சேர்த்தால், 2012 என்ற எண் கிடைக்கிறது.

* லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சுமார் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் 300 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் 147 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • Replies 102
  • Views 9.8k
  • Created
  • Last Reply

[size=4]பாதுகாப்பு செலவுகள் கூட இதுவரை உலகம் கண்டிராத அளவுக்கு சென்றுள்ளது. இதனால் வருங்காலங்களில் பல நகரங்கள் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதில் பின்னிற்கலாம். [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் விளையாட்டு, உதைபந்தாட்ட உலகக் கிண்ணம், ஐரோப்பியக் கிண்ணம் போன்றவற்றுக்கு அந்தந்த அமைப்புகளும்,

தொலைக்காட்சி போன்றவையும், அதில் அனுசரணையாக இருக்கும் ஒவ்வொரு நிறுவனங்களுமே... பொறுப்புக்களையும், பணத்தையும் வாரி இறைப்பார்கள் என்று நினைக்கின்றேன் அகூதா.

கடந்த உலக உதைபந்தாட்டம் நடந்த ஆபிரிக்க மைதானங்கள் தகுந்த பராமரிப்பு இன்றி... பாழ் பாடுவதாகவும் ஒரு செய்திக் குறிப்பொன்று வாசித்தேன்.

என்ன சுவாரசியம் வேண்டிக் கிடக்கு. :huh:

ஒலிம்பிக் தொடங்க முதல் பெரிதாக தொடர்பே இல்லாத வேலைத் திட்டங்களை முடிப்பதற்காக ஓடுப்பட்டுத் திரிகிற எங்களுக்கு ஒரு 'ஒலிம்பிக் மெடல்' தரவேண்டும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

* காந்தி 1932 ல் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பத்திரிகை நிருபராக கடமையாற்றினார்.

* ஒலிம்பிக் வளையத்தில் மஞ்சள்,பச்சை,சிவப்பு,கறுப்பு,நீலம் ஆகிய நிறங்கள் உள்ளன.இந்த நிறங்களில் ஒன்றோ,பலவோ உலகின் உள்ள எல்லா நாட்டு கொடியிலும் உண்டு.

* எதியோப்பியாவை சேர்ந்த Abebe Bikila என்பவர் முதலாவதாக மரதன் ஓட்டத்தில் வென்ற கறுப்பு இனத்தவர்.ஆண்டு 1960.

* 100 மீற்றர் ஓட்டத்தில் ஒரே ஒரு வெள்ளை இனத்தவர் 10 செக்கனில் ஓடி முடித்தார்.போலந்து நாட்டை சேர்ந்த இவரின் பெயர் Marian Woronin . 40 வருடங்களுக்கு முன் இவர் 10 செக்கனில் 100 மீற்றரை தாண்டினார்.

* ஒலிம்பிக் பந்தயத்தில் சீனா தனது முதலாவது பத்தக்கத்தை வென்ற ஆண்டு 1984. Xu Haifeng என்பவர் 50 மீற்றர் பிஸ்டல் சுடும் பந்தயத்தில் சீனாவின் முதல் பதக்கத்தை வென்ற பெருமைக்குரியவர்.

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுவாரசியம் வேண்டிக் கிடக்கு. :huh:

ஒலிம்பிக் தொடங்க முதல் பெரிதாக தொடர்பே இல்லாத வேலைத் திட்டங்களை முடிப்பதற்காக ஓடுப்பட்டுத் திரிகிற எங்களுக்கு ஒரு 'ஒலிம்பிக் மெடல்' தரவேண்டும். :lol:

ஒலிம்பிக் தொடங்க முதல், அந்நாட்டு வேலைத்திட்டங்களை செய்து முடிப்பதற்காக....

அந்த, அந்த நாட்டு... எல்லாமக்களும் மறைமுகமாக பங்களிப்பார்கள்.

அதனை லண்டன் இங்கிலாந்து வாழ் மக்களும் செய்வார்கள், செய்கிறார்கள்.

இங்கும்... அதனையொட்டிய போட்டிகளுடன், எல்லா நிறுவனங்களும்... தங்கள் தலையில், வேலையை.. தூக்கிப் போட்டுக் கொண்டு... சுறு,சுறுப்பாக வேலை செய்வதைபார்க்க.. பெருமையாக இருக்கும்.

தப்பிலி, உங்களின் பங்களிப்பை... விளக்கிக் கூறினால்,

யாழ் களத்திலுள்ள... பன்னாட்டு உறவுகள் மிக்க மகிழ்ச்சியடைவார்கள்.

அந்த, மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும்.. தங்கப் பதக்கத்தை விட மேலானது. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இம் முறை... லண்டனில் நடை பெற இருக்கும் ஒலிம்பிக்கில்,

முஸ்லீம் நாட்டைச் சேர்ந்த, சவூதி அரேபியாவில் இருந்து... பெண், ஓட்டப் போட்டியில் கலந்து கொள்கின்றார்.

இம் முறை... லண்டனில் நடை பெற இருக்கும் ஒலிம்பிக்கில்,

முஸ்லீம் நாட்டைச் சேர்ந்த, சவூதி அரேபியாவில் இருந்து... பெண், ஓட்டப் போட்டியில் கலந்து கொள்கின்றார்.

ஐயோ பாவம் பர்தாவுடன் ஓடப்போறாரே.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்து கொண்டவiரையில் யாழ்கள உறவுகள் ஒலிம்பிக் போட்டியில் ஏதோ ஒரு வகையில் பங்காளிகளாக இருக்கிறார்கள் என்பது மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது... தப்பிலி அண்ணா இது பற்றி கொஞ்சம் சொன்னால் சந்தோசமாக இருப்பமே..நேரம் கிடைக்கும் போது எழுதுங்களன்..:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம் பர்தாவுடன் ஓடப்போறாரே.

article-2172561-14095975000005DC-443_306x423.jpg

இவரே.. அந்தப் பெண். சிற்பி.

அவர், பர்தாவோ... முக்காடோ.. போடாவிட்டாலும், அவரின் துணிச்சலுக்கு ஒரு பதக்கம் கொடுக்கலாம். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்து கொண்டவiரையில் யாழ்கள உறவுகள் ஒலிம்பிக் போட்டியில் ஏதோ ஒரு வகையில் பங்காளிகளாக இருக்கிறார்கள் என்பது மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது... தப்பிலி அண்ணா இது பற்றி கொஞ்சம் சொன்னால் சந்தோசமாக இருப்பமே..நேரம் கிடைக்கும் போது எழுதுங்களன்.. :)

எங்கடை குட்டியும், லண்டன் ஒலிம்பிக் விளையாட்டு முன்னேற்பாடுகளில்... மும்முரமாய், நிற்கின்றார் என நம்புகின்றேன் யாயினி. :D

114771.JPG

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

double%2Bdecker%2Bbus.jpg

லண்டன் ஒலிம்பிக்ஸ்: திசை மாறிச் சென்ற ஆஸ்திரேலியா, அமெரிக்கா அணியினரின் பஸ்கள்.

லண்டன்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் ஏறி வந்த சொகுசு பஸ்களை ஓட்டிய ஓட்டுநர்களுக்கு வழி தெரியாமல் பல மணி நேரம் லண்டன் நகரை சுற்றி திரிந்தது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளன. பல நாடுகளை சேர்ந்த அணியினர் தங்குவதற்காக, சகல வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் லண்டன் நகருக்கு வந்து குவிந்து கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும அமெரிக்கா நாடுகளை சேர்ந்த அணியினர் லண்டனுக்கு விமானத்தில் வந்து சேர்ந்தனர்.

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து ஒலிம்பிக் கிராமத்திற்கு விரைவில் சென்றுவிடலாம். ஆனால் ஆஸ்திரேலியா விளையாட்டு வீரர்கள், நிர்வாகிகள் உட்பட 30 பேரை ஏற்றி வந்த சொகுசு பஸ்சை ஓட்டிய ஓட்டுநர் வழித் தெரியாமல் தவித்தார்.

இதனால் பாக்கிங்காம் அரண்மனை, வெஸ்ட் ஹம் தெருவின் பின்புறம் வழியாக செல்ல வேண்டிய பஸ்சை, வேறு வழியாக இயக்கினார். இதனால் சுமார் 3.30 மணிநேரம் லண்டன் நகரை சுற்றி திரிந்த அந்த பஸ், பின்னர் ஒலிம்பிக் கிராமத்தை வந்தடைந்தது.

அதேபோல அமெரிக்க வீரர்கள், வீராங்கனைகள் பயணித்த சொகுசு பஸ்சை ஓட்டிய ஓட்டுநரும், வழி தெரியாமல் சுமார் 4 மணிநேரம் லண்டன் நகரை சுற்றி காட்டினார். 23 மைல்கள் சுற்றிய பிறகு, அமெரிக்க அணியினர் ஒலிம்பிக் கிராமத்தை வந்தடைந்தனர்.

இது குறித்து ஒலிம்பிக் போட்டிக்கான போக்குவரத்து கமிஷனர் பீட்டர் ஹென்ரி கூறியதாவது,

ஒலிம்பிக் கிராமத்திற்கு வீரர்களை அழைத்து வந்த பஸ்கள் வழி தவறி 4 மணிநேரம் சுற்றி திரிந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மை என்றால், ஒலிம்பிக் கிராமத்திற்கு செல்லாமல், செளத்என்ட் பகுதிக்கு பஸ் சென்றிருக்கலாம். மேலும் 4 மணி நேரம் அப்பகுதியில் சுற்றி திரிந்தால், இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதிகள் முழுவதையும், அவர்கள் பார்த்திருக்கலாம் என்றார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

லண்டன் பஸ்களில் Navigation இல்லையா... அல்லது ஒலிம்பிக் செலவில் ஊர் சுத்திப் பார்க்க, திட்டம் தீட்டியுள்ளார்கள் போலுள்ளது. :D:icon_idea:

லண்டன் பஸ்களில் Navigation இல்லையா... அல்லது ஒலிம்பிக் செலவில் ஊர் சுத்திப் பார்க்க, திட்டம் தீட்டியுள்ளார்கள் போலுள்ளது. :D:icon_idea:

தொண்டராக வந்த சாரதிக்கு பஸ்சிலிருந்த 'Navigation' கருவியை பாவிக்கத் தெரியவில்லையாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

18-olympic-medels-300.jpg

ஒலிம்பிக் பதக்கங்கள் வடிவமைப்பு-சுவாரஸ்சியமான தகவல்கள்.

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு வழங்கப்பட உள்ள பதக்கங்களின் வடிவமைப்பு குறித்து சில சுவாரஸ்சியமான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் ஆசை. இதேபோல லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்பட உள்ள பதக்கத்தை கைப்பற்ற உலகம் முழுவதும் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் லண்டன் நகரில் குவிந்து வருகின்றனர்.

ஆனால் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு வழங்கப்பட உள்ள பதக்கங்கள் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கும் தெரியாது.

இது குறித்த சில சுவாரஸ்சியமான தகவல்கள் இதோ:

* ஒவ்வொரு ஒலிம்பிக் பதக்கமும் உருவாக்கும் போது, சுமார் 1,300 பாரன்ஹீட் வெப்பநிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு 2 மில்லியன் எடையுடன் கூடிய அச்சு வைத்து 15 நிமிடங்கள் அழுத்தம் அளிக்கப்படுகிறது.

* 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வெற்றியாளர்களுக்கான பதக்கம் தயாரிப்பில் மொத்தம் 800 பேர் ஈடுபட்டனர்.

* இதுவரை வழங்கப்பட்டுள்ள ஒலிம்பிக் பதக்கங்களிலேயே, 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வழங்கப்பட உள்ள பதக்கங்களின் எடை சற்று அதிகமாக உள்ளது.

* 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியின் பதக்கங்களை வடிவமைத்தவர் பிரபல இங்கிலாந்து கலைஞர் டேவிட் வாக்கின்ஸ்.

* ஒவ்வொரு பதக்கத்தின் உருவாக்கத்திற்கும் சுமார் 10 மணி நேரம் தேவைப்படுகிறது. இதற்காக கொலோசஸ் என்ற பிரத்யேக அழுத்த முறை பின்பற்றப்படுகிறது.

* ஒலிம்பிக் பதக்கத்தின் முன் பக்கத்தில் சிறகுகளுடன் இருக்கும் நபரின் உருவம் கிரேக்க விளையாட்டு கடவுளான 'நைக்'கை குறிக்கிறது. இவர் பார்த்தினானில் இருந்து இங்கிலாந்து நகருக்குள் நுழைவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு ஒலிம்பிக் தங்கப்பதக்கத்திலும் 1.34 சதவீதம் மட்டுமே தங்கம் இருக்கும். மீதமுள்ள பகுதி தாமிரத்தால் ஆனது. (ஒவ்வொரு தங்கப்பதக்கத்திலும் 6 கிராம் அளவு தங்கம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உத்தரவு).

* ஒவ்வொரு ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கமும் 92.5 சதவீதம் வெள்ளினால் செய்யப்பட்டது.

* லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக 4,700 பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

* பதக்கம் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட உலோக தாது சர்வதேச தரத்திலானது. இதற்காக சால்ட் லேக் சிட்டி, உத் மற்றும் மங்கோலியா பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து உலோக தாது பெறப்பட்டுள்ளது.

* லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள், இங்கிலாந்தில் உள்ள வால்ஸ் பகுதியை அடுத்த போன்டைகுலன் என்ற கிராமத்தில் உள்ள 'த ராயல் மின்ட்' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள் இவ்வளவு சிறப்பு அம்சங்கள் கொண்டது. இந்தியாவில் இருந்து செல்லும் வீரர்கள், வீரர்கனைகள் எத்தனை பதக்கங்களை வென்று நாடு திரும்புவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி (கீரோ) :lol::D

தமிழ் சிறி அண்ணா

ஒலிம்பிக் விளையாட்டுகளை முன்னிறுத்திக் கள உறவுகளுக்கிடையில்

ஒரு போட்டியை ஆரம்பிக்கலாமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி (கீரோ) :lol::D

தமிழ் சிறி அண்ணா

ஒலிம்பிக் விளையாட்டுகளை முன்னிறுத்திக் கள உறவுகளுக்கிடையில்

ஒரு போட்டியை ஆரம்பிக்கலாமே

வாத்தியார் வருகின்ற வெள்ளிக்கிழமை, ஒலிம்பிக் தொடங்க... இருப்பதால்,

டக்கெண்டு கேள்விகளை தயார் செய்து, நீங்களே போட்டியை ஆரம்பியுங்களேன் :rolleyes: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

25-london-olympics-village-toilet.jpg

லண்டன் ஒலிம்பிக் கிராமத்தில் கழிவறை வசதி 'கம்மி': காத்திருந்து 'வெளியே' போகும் வீரர்கள்...

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த வீரர்கள், வீராங்கனைகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறதாம். இதனால் வீரர்கள், வீராங்கனைகள் காலையில் பயிற்சி செல்லும் நேரத்தை மாற்றி அமைத்து சிரமப்படுகின்றனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்குகிறது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். லண்டன் சூழல்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்ளும் வகையில், பல நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் போட்டி துவங்கும் முன்னதாகவே லண்டன் வந்து சேர்ந்துள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக, லண்டனில் ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கழிவறை வசதிகள் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒலிம்பிக் கிராமத்தில் சில இடங்களில் ஒரே கழிவறையை 4 வீரர்கள் பகிர்ந்து கொண்டு பயன்படுத்த வேண்டியுள்ளது. சில இடங்களில் ஒரே கழிவறையை 6 பேர் கூட பயன்படுத்துகின்றனர். இதனால் பயிற்சிக்கு செல்லும் வீரர்கள், வீராங்கனைகள் தங்களின் நேரத்தை மாற்றி அமைத்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து இந்திய அணியின் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

உலகின் மிக பெரிய விளையாட்டு போட்டியில் இது போன்ற பிரச்சனை எழுந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சாதாரண மக்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனை என்றார்.

இது குறித்து இந்திய குத்துச்சண்டை வீரர் ஒருவர் கூறியதாவது,

ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள வசதி குறைவை சுட்டி காட்டி, கூடுதல் கழிவறை உள்ள அறையை நாம் கேட்க முடியாது. எனவே வேறு வழியில்லாமல் கிடைத்த வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் போட்டிகள் துவங்கும் போது, இது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்றார்.

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஒருவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்காக அமைக்கப்பட்ட கிராமத்தில் கூட இது போன்ற பிரச்சனை ஏற்படவில்லை. கழிவறைக்கு செல்ல யாரும் அங்கு வரிசையில் நிற்கவில்லை என்றார்.

இந்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேக்கன், டுவிட்டர் இணையதளத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், லண்டன் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் பேசினேன். லண்டனை விட டெல்லி காமன்வெல்த் போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட கிராமத்தில் சிறப்பான வசதிகள் இருந்ததாக தெரிவித்தனர் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி தற்ஸ்தமிழ்.

[size=4]இந்த ஒலிம்பிக் அமைப்பின் வேலையாளர்கள் அனைவரும் பெரும் அரசர்கள் / இராணிகள் போன்றே நடக்கின்றனர். ஆனால் பல நாடுகளிலும், குறிப்பாக வறுமை மிகுந்த நாடுகளில், ஆற்றல் மிகுந்த வீரர்கள் தகுந்த பண வசதிகள் இல்லாதமையால் போட்டிபோட முடிவதில்லை. [/size]

[size=1]

[size=4]எனவே பெரும்பணம் பெரும் இந்த ஒலிம்பிக் அமைப்பு வீரர்களுக்கு அதில் ஒரு பகுதியை கொடுக்கவேண்டும். [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலண்டன் ஏற்கனவே போக்குவரத்து பிரச்சனை கூடின இடம்.அதுக்குள்ளை ஒலிம்பிக் வேறை.சொல்லவே வேணும்......அண்ட கிறவுண் ...அதுதான் ரியூப் அடிக்கடி மக்கர் பண்ணுதாம்...சின்னல் லைற்ருகள் ஒழுங்காய் வேலை செய்யாமல் ஒரே இழுபறிகளாம்......வாகனங்கள் பார்க் பண்ணுறதுக்குக்கூட இடங்கள் இல்லையாம்.....மூஞ்சூறு தான் போக காணேல்லை விளக்குமாத்தையும் காவிக்கொண்டு போனமாதிரித்தான் லண்டன் ஒலிம்பிக் கதையும்...... :D

நிலமைகளை அவதானித்தால் பிரித்தானியா சொதப்பப்போகின்றது போலவே உள்ளது. பிரமாண்டமான வகையில் சீனாவினால் நடாத்தப்பட்ட 2008 ஒலிம்பிக் போட்டியை பார்த்தவர்களுக்கு நிச்சயம் பிரித்தானியா ஒலிம்பிக் சலிப்பை ஏற்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பாரம்பரிய விளையட்டுப் போட்டி ஒன்றை மக்கள் மயப்படுத்தி நடத்த முடியாத நிலையில் பிரிட்டன் அதனை இராணுவ மயப்படுத்தி நடத்துகிறது..

ஒலிம்பிக் விளையாட்டு அரங்கை நெருங்கினால்.. ஏதோ இராணுவ ஆக்கிரமிப்புக்குள் நிக்கும் பயமே மிஞ்சுகிறது. ஏவுகணைகளும்.. கனரக இராணுவ வாகனங்களும்.. ஆயுதம் ஏந்திய.. ஏந்தாத சீருடை அணிந்த இராணுவத்தினரும்.. பொலிஸாரும்.. தான்.. எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகின்றனர். சுதந்திர நடமாட்டம் என்பது மட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சலிப்பையே ரிக்கெட்டுக்கு காசு கொடுத்தி வாங்கி வைச்சிருப்பதாக எண்ணுகின்றனர்.

வாகனச் சோதனைகள்.. ஏன் ஆட்களில் உடல் பரிசோதனைகளும் கூட. இதை விட.. மெட்டல் டிரெக்டர்களுக்கும்.. சிசிரிவி களுக்கும் தான் அங்கு அதிகம் வேலை..!

பலர்.. இப்படி சிரமப்பட்டுப் போய் இதை பார்க்கத்தான் வேணுமா.. அதை விட்டிட்டு பேசாம.. தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கவே நினைக்கின்றனர்.

இத்தனை ஒலிப்பிக் வேலைவாய்ப்புக்கள் மத்தியிலும்...சலசலப்புக்கள் மத்தியிலும்.. பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி -0.7 என்ற நிலைக்கு வந்துள்ளது. வேலை வாய்ப்பும் தற்காலிக இரு வார.. 4 வார வேலைகள் தான். ஒலிம்பிக் முடிய.. பொருண்மிய நெருக்கடியும் வேலை வாய்ப்பின்மையும் இன்னும் இன்னும் அதிகரிக்குமோ என்ற ஒரு அச்ச உணர்வே மக்கள் மத்தியில் இருக்கிறதே தவிர ஒலிம்பிக்கை நிம்மதியாக கண்டு மகிழக் கூடிய மனநிலையில் அநேக பிரிட்டிஷ் மக்கள் இல்லை..! இது தான் இங்கு கள யதார்த்தம்.

தெருவுக்கு 1500 பவுன் கொடுத்து.. அரசாங்கம் தான் ஒலிம்பிக் தெரு விருந்துபசாரங்களை செய்ய.. ஒலிம்பிக் பல வர்ண.. பல் தேசியக். கொடிகளை கட்ட வைக்கிறது. மக்கள் சுய ஆர்வத்தோடு இவற்றில் பங்கெடுப்பதாக தெரியவில்லை.. பல இடங்களிலும்..!

இது ஒலிம்பிக் வரலாற்றில்.. அது மக்கள் மனங்களை கவரத் தவறிய ஒரு தோல்வியே என்று சொல்லலாம்..!

ஆனால் அரசைப் பொறுத்தவரை இந்த ஒலிம்பிக் போட்டு பிரிட்டனுக்கு புதிய முதலீடுகளையும்.. வேலைவாய்ப்புக்களையும் கொண்டு வரும் என்று திடமாக நம்புகிறது. அது கிட்டத்தட்ட 13 பில்லியன் பவுன்கள் (அடுத்த 10 வருடங்களுக்குள்) வரை அமையலாம் என்றும் கருதுகிறது. அதேபோல்.. ஒலிம்பிக் மூலம்.. உள்ளிளுக்கப்படும்.. வெளிநாட்டு முதலீடுகள் மூலம்.. உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புக்களில் கணிசமானவற்றை தக்க வைக்கலாம் என்றும் அரசு கருதுகிறது.

ஒலிம்பிக் கிராமம் அமைந்துள்ள.. கிழக்கு லண்டனிலோ.. அமோக ஒலிம்பிக் அலங்காரங்களும்.. நவீன தொடர்மாடிகளும் எழுந்துள்ள அதேவேளை.. அங்கு இருக்கும் சேரி வாழ்க்கையிலும்.. மாற்றமில்லை....

http://www.bbc.co.uk/news/uk-18989124

(காணொளி காண்க)

பொறுத்திருந்து பார்ப்பம்.. போகப் போக என்னாகுது என்று..??!

எல்லாம் ஒரு இரு வாரக் கூத்து. அதுக்கு 7 வருசமா.. ஏற்பாடு...ம்ம்ம்.... ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் மக்களை மாயைகளால் கட்டி வைச்சு ஆளுறாங்க என்பதற்கு இது நல்ல சாட்சி..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய மண்ணில் இருந்தும் சில மக்கள் ஒலிம்பிக்கை கண்டு களிப்பதற்காக அவ்விடம் வந்திருக்கிறார்கள்..நீங்கள் சொல்லி இருக்கும் விதத்தைப் பாhக்கும் போது தாரளமாக சுதந்திரமாக நடமாடும் நாட்டில் ஒலிம்பிக் என்ற ஒன்றால் இராணுவமயமாக்கப்பட்ட நகரமாக காட்சியளிக்கிறது போலும்....பல லட்டசம் பவுண்சைக் கொட்டி யுத்த பூமி போல் அலங்கரிக்கபட்டு இருக்கும் தறுவாயில் மனிதனின் இயற்கை உபாதைகளை களிப்பதற்கு ஏற்ற தாராள இடங்களை நிர்மானிப்பதில் கஞ்சத் தனம் பண்ணி இருக்கிறார்கள்....எல்லா பைலாக்களும் எதிர்வரும் 12ம் திகதி மட்டும் தான்...மிகுதி பொறுத்திருந்து பாhப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒலிம்பிக் உதைபந்தாட்ட விளையாட்டின் போது

வடகொரியாவும் கொலும்பியாவும் மோதின.

விளையாட்டு ஆரம்பத்தின் போது வீராங்கனைகளை அறிமுகம் செய்தவர்

ஒரு வடகொரிய வீராங்கனையின் படத்திற்குப் பதிலாக தென்கொரிய வீராங்கனையின்

படத்தினைத் திரையில் காட்டியதால் ஆத்திரம் கொண்ட வடகொரிய அணியினர்

ஒரு மணி நேரம் தாமதத்தின் பின்னரே விளையாட்டில் கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒலிம்பிக் உதைபந்தாட்ட விளையாட்டின் போது

வடகொரியாவும் கொலும்பியாவும் மோதின.

விளையாட்டு ஆரம்பத்தின் போது வீராங்கனைகளை அறிமுகம் செய்தவர்

ஒரு வடகொரிய வீராங்கனையின் படத்திற்குப் பதிலாக தென்கொரிய வீராங்கனையின்

படத்தினைத் திரையில் காட்டியதால் ஆத்திரம் கொண்ட வடகொரிய அணியினர்

ஒரு மணி நேரம் தாமதத்தின் பின்னரே விளையாட்டில் கலந்து கொண்டனர்.

[size=4]மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கை நடாத்தும் இலண்டன் இப்படி பிழைகளை விடுவதன் பின்னால் அரசியல் உள்ளதா என வினவத்தோன்றுகின்றது. [/size]

இன்று ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்லும் வைபவம் சென் போல் கதீட்ரல், ரபல்கர் சதுக்கம், டவுனிங் தெரு, பக்கிங்காம் அரண்மனை போன்ற முக்கிய பகுதிகளைச் சுற்றி நடைபெற்றது.

உத்தியோகபூர்வ ஒலிம்பிக் வாகன தொடரணி, போலிஸ் வாகனத் தொடரணி முன் தொடர ஒருவர் ஒலிம்பிக் சோதியை ஏந்திக் கொண்டு ஓடினார். திறந்த பேருந்துகளில் மிகவும் திறந்த, சிக்கனமான உடைகளில் மகளிர் ஆடிப் பாடிச் சென்றது காணக் கண்கொள்ளாக் காட்சி.

பொது மக்களும் நகர அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்களும் மிக உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். நாளை உத்தியோகபூர்வ வைபவம் ஆரம்பிக்க இருப்பதால் நகரப் பகுதி மக்கள் மிக உற்சாகமாகக் காணப்படுகிறார்கள். இதன் பொருளாதாரப் பாதிப்புக்கள் ஒலிம்பிக் முடிந்த பின்தான் தெரியும்.

இன்று காலை ஒரு வேலைத்தளத்திலிருந்து மற்றுமொரு தளத்திற்குச் செல்லும் பொழுது 'பிளீட்' வீதிக்கும் 'சென் போல்' கதீட்ரல் இற்கும் இடையில் எடுத்த படம்.

post-7051-0-73995000-1343299242_thumb.jp

post-7051-0-52165400-1343299243_thumb.jp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.