Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

இதுக்குத்தான் விசயம் தெரிஞ்சவையோடை போகவேணுமெண்டிறது :lol: . என்னோடை வந்தால் எத்தினை மீனுகளை காட்டியிருப்பன் :D:lol::icon_idea: சாய் ........ என்ன சுண்டு நீர் :D ?

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலும் சுபேசும்.

வேலையால் வந்த சுபேஸ் களைப்பில் உடுப்பை மாற்றி விட்டு இரவுச் சாப்பாட்டிற்காக றொட்டி சுடத் தொடங்குகிறார். கைத்தொலைசேி அடிக்கிறது பாக்கிறார்.. சுண்டல்.. இப்ப அவுசிலை நடுச்சாமம் என்னத்துக்கு இந்த நேரம் அடிக்கிறார் ஏதும் அவசரமாயிருக்குமோ. எடுத்து கலோ. என்ன மச்சான் ஏதும் பிரச்சனையோ.

சுண்டல். ஓம் மச்சான் சின்னப் பிரச்சனை என்ரை p.c.கொம்புயூட்டர் வேலை செய்யிதில்லை மச்சான் நீதானே உதுகளிலை பெரிய விண்ணன் அதுதான் உனக்கு அடிச்சனான் ஏதாவது ஜடியா சொல்லு

சுபேஸ். இப்ப கொம்புயூட்டருக்கு முன்னாலையோ இருக்கிறாய்.

சுண்டல் . ஓம் மச்சான்.

சுபேஸ் . சரி நான் சொல்லற மாதிரி செய். alt.யும் f8 யையும் ஒண்டா அமத்திப்பிடி

சுண்டல். அமத்திறன் மச்சான்.

சுபேஸ். இப்ப மொனிற்றரிலை என்ன எழுதிக் கிடக்கு எண்டு பார்.

சுண்டல்.thomsan எண்டு எழுதிக் கிடக்கடா.

சுபேஸ். விசரா அது மொனிற்றர் மொடல்.. ஸ்கிறீனிலை என்ன எழுத்து விழுது?

சுண்டல். எழுத்து ஒண்டும் விழேல்லை மச்சி என்னை உருவம் தான் சாதுவாய் நிழல் மாதிரி விழுது

சுபேஸ். கொஞ்சம் ரென்சன் ஆகியபடி. டேய் மொனிற்றரின்லை வலப்பக்க மேல் முலையிலை என்னடா இருக்கு

சுண்டல்.நீலக்கலர் பூ வாஸ் ஒண்டிலை சிவப்புக்கலர் பிளாஸ்ரிக் பூ ஒண்டு இருக்கடா.

சுபேஸ். இது சரி வராது... வீட்டு மெயின் சுவிச்சை போய் நிப்பாட்டிட்டு இரண்டு செக்கனாலை திருப்ப போடு

சுண்டல். நிப்பாட்டி போட்டிட்டன் மச்சி.

சுபேஸ் . இப்ப பார் கொம்புயூட்டர் லைற் எரியிதா

சுண்டல். இல்லை மச்சி அதைத் தவிர மற்ற எல்லா லைற்றும் எரியிது.

சுபேஸ்.கொம்புயூட்டர் ON பட்டினை அமத்திப் பிடிச்சபடி பத்து செக்கன் எண்ணு

சுண்டல். 1...2.........ம்.....10 எண்ணிட்டன்

சுபேஸ் ..இப்பை கையை எடுத்திட்டு மொளசை ஆட்டு

சுண்டல் .. சரி மச்சான்

சுபேஸ்..இப்ப என்ன செய்யிது

சுண்டல் . மொளஸ் ஆடுது

சுபேஸ் . அது தெரியும் ஏதாவது வருதா

சுண்டல். காத்து வருது மச்சி.

சுபேஸ் . காத்து வருதா கொம்புயூட்டலிலை இருந்து காத்து எப்பிடியடா வரும்

சுண்டல். அதில்லைமச்சி ஜன்னல் திறந்து கிடக்கு அதுதான் காத்து வருது ஒரு செக்கன் பூட்டிட்டு வாறன்....சரி பூட்டியாச்சு இப்ப சொல்லு மச்சி

சுபேஸ். இப்ப உன்ரை கொம்புயூட்டர் கரண்டு வயரை பிளக்கிலை இருந்து கழட்டு

சுண்டல். அது ஏற்கனவே கழட்டித்தான் கிடக்கு மச்சி.

இதற்கு பிறகு என்ன உரையாடல் நடந்திருக்கும் என்பதை சரியாக எதுபவர்களிற்கு ஒரு பச்சைப் புள்ளி.

Edited by sathiri

சுபேஸ் தனது கொம்பியூட்டரை எறிந்து உடைத்துவிட்டு ............கோபம் தாங்கமுடியாமல் சத்தமாய் கூடாத வார்த்தைகளால் சுண்டலும் ...

[..............] என்று பேசி வந்திட்டாங்கடா இன்ச்சை ரங்குப்பெட்டியையும் தூக்கிக்கொண்டு என்று பேசியவாறு திரும்ப சுபெசின் கதவு பெல் கிநீஈர் என்று அடிக்க அதை கோபத்துடன் வேரயார்ரா பேந்து இந்த நேரத்தில எண்டு கோபமாய் கதவை திறக்க ...........போலிஸ் காரன் அவரை கூட்டிக்கொண்டுபோக [சத்தம் தாங்கமுடியாமல் பக்கத்து வெள்ளை போலிசுக்கு போன் பண்ண] அப்படியே மறுநாள் காலை

போலிஸ் காவடியில் இருந்து சுபேஸ் ப்ளஸ் பக்கை திரும்பிப்பார்க்க ...............சோகமாய் ஓர் இசை மீட்டப்படுகிறது :D :D :icon_idea:

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா நாங்க கதைச்சத சாத்ஸ் அண்ணா ஒட்டு கேட்டிட்டார் :D :D

  • கருத்துக்கள உறவுகள்

கிகிகிகிகி.. :D :D ...நல்லாருக்கு சிறிஅண்ணா,தமிழ்சூரியன் அண்ணா..நல்ல கற்பனை...

ஹா ஹா ஹா நாங்க கதைச்சத சாத்ஸ் அண்ணா ஒட்டு கேட்டிட்டார் :D :D

எத்தினை நாளைக்குத்தான் சிரிச்சுக்கொண்டே இதுகளை தாங்கிறது :lol: :lol: :lol: .

நந்தன் அண்ணாவும் தப்பிலி

அண்ணாவும் வெளில நிண்டு அரசியல் கதைச்சிட்டு இருந்திச்சினம் அப்ப accident ஆனா ஒரு லாரிய கயிறு கட்டி வேற ஒரு லாரி மூலம் கொண்டு போறாங்க......

அப்ப நம்ம தப்பிலி அண்ணா நந்தன் அண்ணாவ பாத்து கேக்குறார்.....

ஒரு கயிறு கொண்டு போக ரெண்டு லாரியா?

இந்த கேள்விக்கு அப்புறமும் நந்து அண்ணா அங்க நிண்டிருப்பார் எண்டு நினைகிறிங்களா? :D

வயது வந்தவர்களுக்கு மட்டும்.

தொடர்ச்சி:

நந்தன் எதுவும் பேசாமல் சிரி சிரி என்று சிரித்துகொண்டு வந்த பஸ்ஸில் ஏறி வீடு போய்விட்டார். தப்பிலிக்கு சற்று மனத்தாங்கலாக இருந்தது. தான் என்ன பிழை விட்டேன் என்று தலையை சொறிந்து கொண்டு வீட்டுக்கு போய் சோபாவில் பொத்தென்று அமர்ந்தார்.

தப்பிலி வந்து சோபாவில் அமர்ந்த சிலமனை கேட்டு விட்டு அறையிலிருந்து "சாப்பிடவில்லையா? கெதியில் சாப்பிட்டுவிட்டு பொடியன் என்னவோ பாடம் கேட்கிறான்; ஒருக்கா அதை பாருங்கோ;. எங்கை இவ்வளவு நேரமும் நின்டனீங்கள்" என்று பேசிக்கொண்டே வெளியில் வந்த தப்பியின் மனைவி அவரின் முகத்தை கண்டதும் ஒரு கணம் ஸ்தம்பித்துபோனா.

சுதாகரித்துகொண்டு "என்ன ஆச்சு? "என்றா.

தப்பிலி விவகாரம் பெரிதாகக்குமுதல் பேசாமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் பிரச்சனை இல்லை என்று நினைத்து நேரத்தை வீண் அடிக்காமல் " இவன் நந்தனோடை வெளியிலை கதைசுக்கொண்டு நிண்டன். நான் என்னவோ பிழை விட்டுட்டன் போல கிடக்கு. அவன் ஒன்டும் சொல்லாமல் சிரிசுக்கொண்டு வீட்டை ஓடிப்போட்டான்" என்றார்.

"அட நானும் எதோ என்னவோ எண்டு நினைச்சு போட்டன்" என்று ஒரே தட்டில் தட்டி விட்டவ, இருந்தாலும் கணவன் மனது சங்கடப்படுகிறதே என்று நினைத்து " நந்தன்தானே; ஒரு கோலை போட்டு கேட்டீங்கள் என்றால் சொல்லிவிடுகிறான்" என்று ஆறுதல் கூறினா.

தப்பிலிக்கும் அதை எப்படியாவது தெரிய வேண்டும் போலிருந்ததால் நந்தன் எப்படி சிரித்தாலும் விடாமல் கேட்டு விட வேண்டும் என்று முடிவுகட்டிக்கொண்டு கோலை போட்டு கேட்டார்.

இந்த இடத்தில் என்னுடைய தனிப்பட்ட அறிவுரையை யாழ்கள் உறவுகள் எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்று தென்படுகிறதால் நான் அதை முதலில் செய்ய வேண்டும். நாம் பல பஞ்சதந்திர கதைகளில் இருந்து படித்த பாடம், குரு தனது சீஷனுக்கு கல்வி புகட்டும் போது பல உதாரணங்களை காட்டி தெளிவான விளங்கள் அழித்து சீஷனுக்கு ஐயம் திரிபற பாடம் புகட்ட வேண்டும் என்பதாகும். இல்லையேல் அந்த பாடம் சீஷனுக்கு பயன்படாமல் போவது மட்டுமன்றி ஆபத்தானதாகவும் மாறலாம். அன்றிரவு நமது யாழ்கள உறவு நந்தன் இதில் சற்று சோடை போகவிட்டுவிட்டார்.

கோலை போட்ட தப்பிலிக்கு நந்தன் திரும்பவும் சிரித்து கொண்டே, "என்ன அண்ணா இது, இதுக்கா போயும் போயும் வீட்டை போனதும் போகாதுமாக கோல் போடுறியல்; அது என்னண்டா ஒரு லாறி அக்சிடென்ரிலை உடைஞ்சு போட்டுது, அதாலை ஓட ஏலாது. நல்ல லொறி ஒன்று கட்டி இழுத்துகொண்டு போனது. சரி இனி போனை வச்சிட்டு போய் சாபிடுங்கோ" என்று அடித்து போனை வைத்துவிட்டு போய்விட்டார். நந்தன் தனது அப்பாவித் தனத்தினால் தான் சில உதாரணங்களுடன் தப்பிலிக்கு விசையத்தை விளங்க வைக்காத தப்பை அந்த நேரம் உணரவில்லை.

மேசையில் சாப்பாட்டுக்கு காத்துகொண்டிருந்த சிறுவன் நேரத்திற்கே தந்தை கோலை முடித்து வருவதை கண்டு மகிழ்சியடைந்த போது, தாயிற்குக்கு இரட்டிப்பு மகிழ்சியாக இருந்தது, தப்பிலி இலேசான மனத்துடன் சிரித்துக்கொண்டும் வந்தது. உண்வை பரிமாறிய படி, என்ன நடந்தது என்று கேட்டா? தப்பிலி சிரித்துகொண்டு தமிழில் கதையை ஆரம்பிக்க மகன் பெரியவர்களின் சிக்கலான தமிழை விளங்கிகொள்ள முடியாமல் "What is it Appa? What is it? tell me that joke in English" என்று சிறுவனுக்கான துடிப்பை காட்டினான். தப்பிலி ஆங்கிலத்தில் கதையை முடிக்க எல்லோரும் சந்தோசமான இரவு சாப்பாடு ஒன்றை முடித்து எழுந்தார்கள்.

அடுத்த சனிக்கிழமை சிறுவன் கன நாளாக கேட்டு வந்த தோட்டத்தில் "செரி பிக்கிங்"கிக்கு மகனையும் மனைவியையும் காரில் ஏற்றிக்கொண்டு தப்பிலி பயணமானார். கார் கிராமப்புறம் போல ஒரு இடத்திற்குள்ளால் போகத் தொடங்கியது. சிறுவன் காரின் கண்ணாடிகளுக்குள்ளால் எட்டி காட்சிகளை ரசித்தபடி தப்பிலியை அவை பற்றி கேள்விகள் கேட்டபடியே இருந்தான். தானும் அறிந்திருந்த குறிப்புக்களை தப்பிலிக்கும் சொல்லிக்கொண்டும் வந்தான். பல மிருகங்கள் தெருவில் அங்கேயும் இங்கேயும் காணப்பட்டதால் தப்பிலி கவனமாக காரை ஓட்டினார். இருந்தாலும் திடு திடுப்பென முன்னால் தோன்றிய இரு நாய்களால் திடுக்கிட்டு போவிட்ட தப்பிலி பலத்த சத்தமாக "அட மூதேவி நாய்கள்" என்று பலத்து திட்டினார்.

"பிள்ளை பக்கத்திலிருப்பது நினைவில்லையா" என்று கடிந்து கொண்டு தான் இதுவரையும் எந்த காட்சியையும் காணதவராய், முன்னால் தொங்கிய "மேக்கப் மிரரை" மட்டும் பார்த்துக் கொண்டுவந்த தப்பிலியின் மனைவி தலையை திருப்பினா. "அட இதுவா" என்றுவிட்டு திரும்பவும் கண்ணாடிக்குள் போய்விட்டா.

"What is that daddyyyyyy" என்ற மகனுக்கு தப்பிலி "One of those dogs have met an accident. They are not moving fast enough. ... Standing in front of my car" என்றார்.

வெளியே எட்டிப்பார்த்த மகன் "Be careful daddy. They are broken. Poor dogs!". என்றான்.

தப்பிலி பதிலுக்கு "What you mean by 'they are..?' at least one of them should be OK." என்றார்.

"Nooooooo" என்று நீட்டி இழுத்த மகன் தான் சரிதான என்று நிச்சயம் செய்ய திரும்ப காரின் வெளியே எட்டிப்பார்த்து விட்டு "They both are gone." என்றான்.

தகப்பனதும் மகனினதும் சம்பாசணையை கேட்ட தப்பிலியின் மனைவி சொண்டை திறந்து சத்தம் வராமல் சிரித்தா. இரண்டு நாய்கள் துன்பப்பட்டுவிட்டதால் மனக்கவலை அடைந்து சீட்டில் சிந்தனையுடன் அமர்ந்த சிறுவனுக்கு, "மேக்கப் மிரரில்" தாய் முன் சீற்ரிலிருந்து சிரிப்பது தெரிந்தது. பொத்துகொண்டு வந்த கோபத்தால் " Mommy you are very baaad. I feel really sorry for them" . என்று தாய் மீது பாய்ந்தான்.

"I am sorry my son. I did not pay attention to whatever that you two were talking". என்றுவிட்டு

அத்தோடு தப்பிலியை நோக்கி "இஞ்சை பாருங்கோ, தோட்டம் வரப்போகுது , அங்கை இஞ்சை பிராக்கு பாக்கமல் கவனமாய் ஓடுங்கோ" என்றா.

"I see the farm" என்று சிறுவன் கத்த தப்பிலி காரை நிறுத்தி இறங்கினார்.

வெளியே வந்த சிறுவன் " They both were struggling to help each other. Did you see that daddy?" என்றான்.

கனதியான சிந்தனையுடன் தப்பிலி " Yes, I saw that" என்று சொல்லிக்கொண்டு தோட்டம் போனர்கள். தோட்டத்தை வாழ்நாளில் முதல் முதல் கண்டதால் அங்கும் இங்கும் ஓடிய சிறுவனை கட்டுப்படுத்த தனியாக முயன்று கொண்டிருந்த தப்பிலியின் மனைவி, கணவனின் மனம் மிக ஆழமாக எதிலோ விழுந்து போய் இருந்ததையும் கவனிக்க தவறவில்லை.

இறுதியில் தோட்டத்தை விட்டு வீட்டுக்கு வர மறுத்த மகனை ஒருவழியாக காரில் கொண்டுவந்து போட்டு வீடு திருப்பி வந்தார்கள். பாதி உடுப்பை செரி பழ சாற்றால் சிவப்பாகிவிட்ட சிறுவன் கடைசியாக ஒன்றை கூடையிலிருந்து எடுத்து மென்று கொண்டே "Poor dogs Aren't they daddy?". என்று விட்டு "What is for lunch, Mommy" என்றான். இதுவரையில் தன் நினைவுக்கு திரும்பத்தாத கணவனின் சிந்தனையை கலைக்க விரும்பி மனவி "உங்களுக்கு என்ன வேண்டும்" என்று தப்பிலியை திரும்பி பார்த்துக் கேட்டா.

குழப்பம் மிக்க சிந்தனையில் மூழ்கியிருந்த தப்பிலி "எனக்கு இப்ப ஒன்டும் வேண்டாம்." என்று கூறிக்கொண்டு மேலே எதுவும் பேசாமல் வீட்டுக்குள் சென்று நந்தனின் இலகத்தை தெலி போனில் சுழட்டலானார். எதையுமே கண்டும் காணததும் போல் காடிக்கொள்ளாமல்; பீறிட்டுக்கொண்டு சிரிப்பை அடக்க வாயை பொத்திக்கொண்டு, மனைவி உடுப்பு மாற்றும் சாட்டில் அறைக்குள் சென்று, கதை சாத்திவிட்டு நின்று சத்தம் போட்டு மனம் விட்டு சிரித்தார்.

சும்மா சுண்டல் விட்டதிலிருந்து எழுதி விட்டேன்.

பிரச்சனை தப்பிலி திருமணம் ஆனவரா என்பதுதான் தெரியாது :lol:

Edited by மல்லையூரான்

:lol: :lol: :D

பிரச்சனை தப்பிலி திருமணம் ஆனவரா எனபதுதான் தெரியாது :lol:

இதை வாசிச்ச பிறகு அதுவும் மறந்து போச்சு. :D

:lol: :lol: :D

இதை வாசிச்ச பிறகு அதுவும் மறந்து போச்சு. :D

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:lol: supper kathai mallai annaa....hahaha....

நன்றி சுபேஸ். புகழ் பகுதி சுண்டலுக்குத்தான் போக வேண்டும். இப்படி ஒரு நகைசுவையான திரிக்கு அத்திவாரம் போட்டது மட்டுமல்லாமல் எனது கதைக்கும் "பித்தா பிறை சூடி" என்று அடி எடுத்து தந்தவரும் அவரே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை நாளைக்குத்தான் சிரிச்சுக்கொண்டே இதுகளை தாங்கிறது :lol: :lol: :lol: .

நாங்க செந்தில் மாதிரி எவ்ளவு அடிச்சாலும் உதைச்சாலும் திட்டினாலும் தான்கிப்பம் மற்றவங்க சிரிக்கிறான்கல்ல அது தான் நமக்கு வேணும் அம்புட்டு தா :D :D

நன்றி சுபேஸ். புகழ் பகுதி சுண்டலுக்குத்தான் போக வேண்டும். இப்படி ஒரு நகைசுவையான திரிக்கு அத்திவாரம் போட்டது மட்டுமல்லாமல் எனது கதைக்கும் "பித்தா பிறை சூடி" என்று அடி எடுத்து தந்தவரும் அவரே

மல்லை அண்ணா உங்களிடம் பல்முக திறமை இருக்கு கதை அந்த மாதிரி சூப்பர் சும்மா அரசியல்ல ஈடுபடமா இனி அடிக்கடி உங்களை இனிய பொழுதுகள் பகுதில பாக்கணும் :D

மல்லை அண்ணா உங்களிடம் பல்முக திறமை இருக்கு கதை அந்த மாதிரி சூப்பர் சும்மா அரசியல்ல ஈடுபடமா இனி அடிக்கடி உங்களை இனிய பொழுதுகள் பகுதில பாக்கணும் :D

நன்றி; முயற்சிக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை ஒராள் தன்னோட தெரிஞ்ச சொந்தக்காரர் வீட்ட போனாராம் அவையளும் இவர நல்லா உபசரிச்சு இருக்க பண்ணி கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் கொடுத்து சொல்லிச்சினமாம் மத்தியானம் நீங்கள் இருந்து வடிவா சாப்பிட்டு தான் போகணும் என்டு.... இவருக்கும் செம சந்தோசம் aahaa நமக்கு இப்பிடி ஒரு அன்பான சொந்தமா என்டு...... சரி என்டு மத்தியானமும் வந்திச்சு இவருக்கு சாப்பாட எடுத்து ஒரு கோப்பைல போட்டு குடுக்க இவரும் வீட்டுக்கு முன் பக்கம் போட்டிருந்த கதிரையில இருந்து சாப்பிட தொடங்கினாராம்..............

அப்ப திடீர் என்டு அந்த வீட்டு நாய் குரைசிச்சாம்......இவரும் என்னடாப்பா திடீர் என்டு இந்த நாய் இப்பிடி குரைக்கிது இவளவு நேரமும் பேசாம தானே இருந்திச்சு இப்ப நான் சாப்பிடேக்க மட்டும் குறைக்கிது ஒரு வேளை பசிபோல என்டு நினைச்சிட்டு அந்த வீட்டு சிறுவன கூப்பிட்டு கேட்டாராம் நாய் ஏன் இப்பிடி குரைகிதேண்டு?

அவனோட அம்மாவும் அப்பாவும் வந்த சொந்தக்கார இவர கவனிக்கிறதில பிஸியா இருந்ததில சிறுவன் பயங்கர பசில இருந்தவர் இவரோட கேள்வியோட செம கடுப்பானவன் சொன்னானாம் அதோட தட்டில யாராச்சும் சாப்பிட்டா அது அப்பிடி தான் குறைக்கும் என்டு.......

அதுக்கு பிறகும் அவர் சாப்பிட்டு இருப்பார் என்டு நினைக்கிறிங்களா?

வீட்ட வந்தவர் டிக்கால் ஜி

அந்த சிறுவன் சுண்டல் ஜி

:D

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம டிக்கால் ஜி கிட்ட நடிகை பாவனாவ பற்றி ஒரு கவிதை எழுத சொல்லுறம்..... இதோ அவர் தன்னுடைய கற்பனை குதுரையை ஓட விட்டு நடிகைய பற்றி கவிதையை எழுதிறார்

உன் பற்றி கவிதை எழுதுமா என் பேனா?!

திரையுலகில் உண்டு ஏற்கனவே ஒரு மீனா,

அவருக்கு சரியான போட்டி இனி நீதானா?!

உன்னை ஒரு நாள் நேரிலே சந்திப்பேனா?

"மேடம், சூப்பர் உங்க படம்" என்று புகழ்வேனா?

இல்லை வெறும் வெள்ளித்திரையில் மட்டும் பார்ப்பேனா?

தினம் தினம் காண்பேனா ஒரு பகல் கனா?

உன்னை நேரில் காணும் ஆசையெல்லாம் போகுமா வீணா?!

:D

  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம டிக்கால் ஜி கிட்ட நடிகை பாவனாவ பற்றி ஒரு கவிதை எழுத சொல்லுறம்..... இதோ அவர் தன்னுடைய கற்பனை குதுரையை ஓட விட்டு நடிகைய பற்றி கவிதையை எழுதிறார்

உன் பற்றி கவிதை எழுதுமா என் பேனா?!

திரையுலகில் உண்டு ஏற்கனவே ஒரு மீனா,

அவருக்கு சரியான போட்டி இனி நீதானா?!

உன்னை ஒரு நாள் நேரிலே சந்திப்பேனா?

"மேடம், சூப்பர் உங்க படம்" என்று புகழ்வேனா?

இல்லை வெறும் வெள்ளித்திரையில் மட்டும் பார்ப்பேனா?

தினம் தினம் காண்பேனா ஒரு பகல் கனா?

உன்னை நேரில் காணும் ஆசையெல்லாம் போகுமா வீணா?!

:D

gothaariviluvaar.jpg

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஐயோ..இவன்ட......தொல்லை......தாங்க முடியலையடா சாமி...

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெரிசல் மிக்க மாநகர பேருந்தில்

சிரம பட்டு ஏறி உள்ளே நகர்தேன்

பேருந்து மெதுவாக நகர்ந்தது

அவ்வளவு அலறல் சத்தத்திலும்

அழகாக கேட்டது எஸ்க்குஸ்மீ என்ற அந்த குரல்,

திரும்பி பார்த்தேன் நான் அந்த குரலை போலவே

அவளும் அவ்ளோ அழகு

சொல்லுங்கள் என்றேன் நான்,

ஒரு அண்ணாநகர் டிக்கெட் வாங்குங்கள் என்றல் அவள் ,

நானும் சரி என்று சொல்லிவிட்டு டிக்கெட் வாங்க முர்ப்படேன்

டிக்கெட் வாங்கும் அந்த கொஞ்ச நேரத்தில் அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சிரித்துகொண்டே இருந்தேன்

அவளும் பார்த்தல் சிரித்தல்

என் மனதில் பட்டாம்புச்சி பறக்க எனக்கும் காதலி கிடைக்க போகிறாள் என்ற சந்தோஷத்தில் டிக்கெட்டை வாங்கி அவளிடம் கொடுத்தேன்

அவள் சிரித்து கொண்டே சொன்னால்

தேங்க்ஸ் அண்ணா ..........

Sundal: ennaa கொடுமை டா இது இன்னைக்கும் வடை போச்சா ...

pl-series-shaver-series-7-760cc-4.jpg

அடுதமுறை பஸ் எடுக்க முதல் இதை பாவிச்சு பாருங்க. நாம அந்த காலத்திலை பாவிச்சது. சூரணம் மாதிரி 108 வியாதிகளுக்கு வகை சொல்லும்." The best facial shaving machine in the world". அண்ணா எல்லாம் பொயி அன்பே........ அப்பிடின்னு ஆகிடும்..

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம

டிக்கால் ஜி : doctor doctor எவ்ளவு தண்ணி அடிச்சாலும் மப்பு ஏற மாட்டேன்கிது.......

அதுக்கு அவர்

டேய் மவனே நீ இப்போ full மப்பில்ல தான் இருக்கே ஏன்னா நான் டொக்டர் இல்லை போலீஸ்

டிக்கால் ஜி= ????

:D

  • கருத்துக்கள உறவுகள்
:D:lol:
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்ப் சுண்டல் !இருநாட்களுக்கு முன் இதப் பார்த்ததிலிருந்து ஒரே மூச்சில் படிச்சு முடித்தேன் .

நானும் என் பங்குக்கு !

காட்சி 1:

மதிய நேரம், லா சப்பலில் ஒரு சொகுசு வண்டி வந்து நிக்குது .அதிலிருந்து சிலர் இறங்குகின்றனர் .

அட ,நம்ம சுண்டல் ,சாத்ஸ் ,கு .சா .,நிலாமதி ,சஹாரா ,சிறி .

அவ்விடத்தில் நம்ம கோ வும் ,சுபேசும் பக்கோடா கொறித்தபடி பராக்குப் பார்த்தபடி நிக்கினம் . அவர்களைப் பார்த்த சாத்ஸ் :

சாத்ஸ்: அட! கோமகன் சுபேஸ் என்ன இங்க நிக்கிறீங்கள் .

கோ : நீசில இருக்கிற நீங்கள் இஞ்ச நிக்கும் போது நாங்கள் நிக்கிறதில என்ன இருக்கு !

சுபேஸ் : சும்மா , வேலைக்கு நேரம் இருக்கு !

( மற்றவர்களும் வந்து அறிமுகமாகி இருவரிடமும் கை குலுக்கி நலம் விசாரிக்கின்றனர் !

சகாரா : நாம் பிரான்சில் பல இடங்களையும் பார்த்துக் கொண்டு வாறம் .

நிலாமதி : நாங்கள் லூர்து ,நீஸ் ,பார்சிலோனா .....

சிறி : வல்ராஸ் ,ஈபிள் டவர் , தோவில் ,....

கு .சா .: நோர்மண்டி , புதுர்ச்கோப் , வேர்செயில் .....

சகாரா : டிஸ் நிலாந்த், லூவர் எல்லாம் வடிவைப் பார்த்தோம் .

கோ :அப்படியா , சந்தோசம் .நீங்கள் ஓடி ,ஓடி எல்லா ஊரையும் பார்த்துக் கொண்டு வாறீங்கள் !

நாங்கள் இருந்த இடத்திலிருந்தே எல்லா ஊரையும் பார்த்து க் கொண்டு நிக்கிறம் !

சிறி : எப்படி கோ !

கோ : இப்படியே பாருங்கள் எல்லா ஊரைச் சேர்ந்தவர்களும் எங்களைத் தாண்டிக் கொண்டு அங்காலையும் ,இங்காலையும் போய் வருகிறார்கள் !

( எல்லோரும் கோரஸ் சாய் ஒரு ஒ போடுகின்றனர் .)

சாத்ஸ் : வாருங்கோ நல்லாப் பசிக்குது எங்காவது நல்ல ஓட்டலாய்ப் பார்த்து சாப்பிடுவம் !

கோ : இது என்ன விசுவின் வண்டி போல ,

கு.சா : ஓம் ! அவருடையதுதான் .

கோ : அவர் புதுசாய் உணவகம் திறந்துள்ளார் , அங்க போவோம் !

எல்லோரும் போகின்றார்கள் ! வண்டி "நோ பார்க்கிங்கில் " தேமே என்று நிக்கின்றது .

ஒரு காவலர் பில் புத்தகத்தை எடுத்தபடி வந்து கொண்டிருக்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 2 :

சுனாமி விலாஸ் !

இணையவன் கல்லாவில் இருக்கும் விசுவுடன் கதைத்தபடியே கொத்து ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார் .

காலடியில் மடிக்கணணி . அருகில் ஒருவர் மசாலாத் தோசை ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார் !

சாப்பாட்டு ரசிகர் : அண்ணே ,அண்ணே கரப்பான் , கரப்பான் அண்ணே. சத்தம் போடுகின்றார் .

இணையவன் அப்படியே முழிக்க ,விசு நைசாக அங்கால திரும்பி தனக்குள் "சே இவன் சுவியை சொன்னனான் கவனமாய் பார்த்துச் சமை என்று !

சொதப்பிப் போட்டான் . அப்போது சுவி ,

சுவி : இதோ கொண்டு வாறன் கத்தாதைங்கோ , என்ன அவசரம் ! எண்டு சொல்லி

இந்தாங்கோ கரைப் பாண் , பாணில இருந்து சீவிக் கொண்டு வர வேண்டாமே !

சா .ரசிகர் : அண்ணை , அதில்லை அண்ணை கரப்பானைத் தேடுகின்றார் . (அது மீண்டும் சட்டிக்குள் )

விசு : தம்பி உதுதான் கரைப்பான் , நீங்கள் எது கேட்டாலும் உடன தருவம் , எமக்கு கஸ்டமரின் திருப்திதான் முக்கியம் .

தனக்குள் சுவிக்கு இருபது ஈரோ பின்னேரம் குடுப்பம் , சமாளிச்சுட்டான் !

இனியவன் தனக்குள் சுவி நீ கரைப் பாணா வெட்டுறாய் ! அங்க வா ஒரு வாரத்துக்கு உனக்கு இருக்கப்பு வெட்டு !

விசு : சா .ரசிகரிடம் , உதுக்குத்தான் உனக்கு அப்பவே சொன்னனான் கொத்து ரொட்டி சாப்பிடு என்று, இந்தா அவர் ஏதாவது கதைக் கிறாரா !

பேசாமல் சாப்பிடல !

இனியவன் : ஆ ...ஆ ... இங்குமா ! மவனே இருங்க உங்களுக்கு கிடாவே வெட்டுறன் !

சுவி : இதத்தான் சொல்லுறது "வானத்தால போற சனியனை ஏணி வைத்து இறக்கிறதெண்டு ".

சா .ரசிகர் : என்ன சொல்லுறீங்கள் , யார் சனி எனக்கு இப்ப தெரிஞ்சாகனும் !

சுவி :ஐயகோ ! சத்தியமாய் உங்களை இல்லை அண்ணை , இன்று புரட்டாசிச் சனி , அதுதான் நாக்குல சனி , பழமொழில வந்திட்டுது .

விசு : ஏய் சுவி , பழமொழியை மாத்து !

சுவி : எப்படி !

விசு : வெளில போற ஓணானை மடில விட்டுக் கொண்ட மாதிரி !

சுவி : அது பரவாயில்லை , அவர் ஓணான் யார் எண்டு கேட்கப் போறார் .

இணையவன் கோபத்துடன் எழும்ப , அங்கெ நிலாமதியும் சகாராவும் உள்ளே வர தொடர்ந்து மற்றவர்களும் .....

எல்லோரையும் ஒரே நேரத்தில் பார்த்த இனியவன் கூலாகி தனது கணணியை விசுவிடம் கொடுத்து விட்டு எல்லோரையும் வரவேற்கின்றார்

கோவும் ,சுபேசும் , எல்லோரும் ஒன்றாய் இருக்கின்ற மாதிரி மேசைகளைப் போட சுவிக்கு உதவுகின்றனர் . இனியவனும் சேர்ந்து கொள்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

ஆனால்

இணையவன் கணணியை கை விடுவார் என்பது உதைக்குது சுவி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 3:

( எல்லோரும் குஷாலாய் கதைத்துக் கொண்டிருக்கினம் .)

விசு : சுவி எல்லோருக்கும் தண்ணி கொண்டு வந்து வை ! அப்படியே ரோஸ் வைனும் ...

சுவி எல்லாவற்றையும் வைத்து விட்டு ஓடர் எடுக்கிறார் . சாத்ஸும் , கு .சா வும் வைனை ரசித்துச் சுவைத்துக் கொண்டிருக்கினம் .

சகாரா : ஒரு இடியப்பக் கொத்து !

சாத்ஸ் : மாட்டுக் கொத்து !

கு .சா வும் ,சுபேசும் : பிரியாணி !

சிறி : எனக்கு மீன் சோறு !

கோ : எனக்கு ஒரு இஞ்சி போட்ட தேநீர் போதும் !

நிலாமதி :எனக்கு சைவச் சாப்பாடு !

சுண்டல் : எனக்கு ஒரு மசாலாத் தோசை ! எனக்கு நல்ல விருப்பம் , அதுவும் பரிசில ம் ...ம் ! சப்புக் கொட்டுகிறார் !

சா. ரசிகர் : ஐயோ ! தம்பி நீ யார் பெத்த புள்ளையோ , உன்னானை அதை மட்டும் கேட்காத!

(விசு வேகமாய் ஓடி வந்து தம்பி நீ காசைப் பிறகு தா , இப்ப நடையக் கட்டு )

சுவி இணையவனிடம் தம்பி உங்களுக்கு ,

இணையவன் அவசரமாய் மறுத்து விட்டு எனக்கும் ஒரு தேநீர் போதும் !

விசுவும் ,சுவியுமாய் எல்லாவற்றையும் கொண்டுவந்து அவரவர் கேட்டபடி மேசையில் வைக்கின்றனர் !

மீண்டு ம் சுவாரசியமாய் பேச்சும் ,அரட்டையும் மாய் , சாப்பாடு காலியாகிக் கொண்டிருக்கிறது !

சுவி : என்னமாதிரி ! எல்லா இடமும் வடிவாய்ப் பார்த்தீங்களோ !

சிறி : ஓ , சாத்தோட போனால் கேட்கவே வேணும் !

சகாரா : எனக்கு நோர்மண்டி பார்க்க சோகமாய் இருந்தது .

கு .சா : ஓம் , எனக்கும் மாவீரர் கல்லறைகள் ஞாபகம் வந்தது .

சுண்டல் : என்ன ஒரு அமைதி !

இனியவன் : அந்த இடத்தை அமரிக்கர்கள் தான் பராமரிக்கின்றார்கள் .

நிலாமதி : ஏன் அப்படி ?

கோ : அங்கு 10000 அமரிக்க வீரர்களை ஜேர்மன் படைகள் சுட்டுக் கொன்றன , அதுதான் !

சிறி : அப்பா யேர்மானிய ரின் கல்லறைகள் இல்லையா ?

சுபேஸ் : ஏன் இல்லை ! அதுவும் அங்காலை இருக்கு !

சாத்ஸ் : வேகமாய் சுண்டலின் இலையில் இருந்து எதையோ எடுத்து ,

அஹா ! ஒரு முழுச் செத்தல் மிளகாய் , நல்ல காரமாய் இருக்கும் . கு . சா உங்களுக்கும் வேணுமா ?

கு .சா : எனக்கு உறைப்பு கூடாது . நீங்கள் சாப்பிடுங்கோ !

இணையவனும் , விசுவும் ஆ ...ஆ ..ஆ .என்றபடி முழிக்க

சுவி கத்தியை எடுக்க ஓடுகின்றார் பாணிலை கரைப் பாணை வெட்ட !!!! :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.