Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலைக்கு இந்திய அரசும் உடந்தை டெசோ மாநாட்டில் – விக்கிரமபாகு – தடுத்து நிறுத்தப்பட்டது பேச்சு.

Featured Replies

டெசோ மாநாட்டில் ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம், வடக்குகிழக்கு அவர்கள் தாயகம், ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, இறுதிப் போர் என்று சொல்லி நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதற்க்கு இந்திய நடுவண் அரசும் உடந்தை என்று உண்மையை துணிந்து உரைத்த திரு விக்கிரமபாகு கருணாரட்னவுக்கு எமது கோடானகோடி நன்றிகள்..

குறிப்பு :- இந்திய நடுவண் அரசுக்கு எதிராக அவர் பேசிக்கொண்டு போது இடை நடுவில் அவரது பேச்சு தடுத்து நிறுத்தப்பட்டது ?

http://thaaitamil.com/?p=28678

இந்த விக்கிரமபாகு வை தமிழர்கள் என்றும் கண் எடுத்துப் பார்ப்பது இல்லை. தம்மை கொடூரமாக கொன்ற சரத் பொன்சேகாவுக்கு வாக்குகளை அள்ளி வழங்கிய தமிழர் தமக்காக முதல் நாளில் இருந்து இன்று வரைக்கும் குரல் கொடுக்கும் விக்கிரமபாகுவை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பது அருவருப்பூட்டும் முரண்பாடு.

எமக்கு என்ன இருந்தாலும் துவக்கு பிடித்து சகட்டு மேனிக்கு சுடுபவரைத் தான் பிடிக்கும் போல

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலின்போது விக்கிரமபாகு அவர்களின் பேட்டி ஒன்றினை பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் ரீ ஆர் ரீ வானொலிக்கு ஒழுங்கு செய்து கொடுத்திருந்தேன். அப்பொழுது விக்கிரமபாகு அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தபொழுது தமிழர்களின் மன நிலை எப்படி இருக்கின்றது என்று கேட்டார். நான் சொன்ன பதில் உங்களிற்கு ஒண்டிரண்டு தமிழ் வாக்குதான் விழும் என்றோன். ஏன் என்றார் நான் சொன்ன பதில் சிங்கள இனவாதத்திற்கு சற்றும் குறையாத அதேயளவு சக்தியோடு தமிழ் இனவாதம் இருக்கின்றது . தன்னுடைய இருப்பை காப்பதற்காக இனவாதம் இன்னொரு இனவாதத்தோடு கைகுலுக்கிக் கொள்ளுமே தவிர உங்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்காது என்பதுதான். தேர்தல் முடிந்தபின்னர் நான் சொன்னது உண்மையென்று ஒத்துக்கொண்டார்.

[size=4]உண்மையை கூறிய சிங்கள நண்பருக்கு நன்றிகள். [/size]

[size=4]

டெசோ மாநாட்டில் ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம், வடக்குகிழக்கு அவர்கள் தாயகம், ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, இறுதிப் போர் என்று சொல்லி நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதற்க்கு இந்திய நடுவண் அரசும் உடந்தை என்று உண்மையை துணிந்து உரைத்த திரு விக்கிரமபாகு கருணாரட்னவுக்கு எமது கோடானகோடி நன்றிகள்..

குறிப்பு :- இந்திய நடுவண் அரசுக்கு எதிராக அவர் பேசிக்கொண்டு போது இடை நடுவில் அவரது பேச்சு தடுத்து நிறுத்தப்பட்டது ?

[/size]

[size=4]தடுத்து நிறுத்தப்பட்டது உறுதிப்படுத்தப்படவில்லையா? (கேள்விக்குறி) [/size]

கடந்த தேர்தலின்போது விக்கிரமபாகு அவர்களின் பேட்டி ஒன்றினை பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் ரீ ஆர் ரீ வானொலிக்கு ஒழுங்கு செய்து கொடுத்திருந்தேன். அப்பொழுது விக்கிரமபாகு அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தபொழுது தமிழர்களின் மன நிலை எப்படி இருக்கின்றது என்று கேட்டார். நான் சொன்ன பதில் உங்களிற்கு ஒண்டிரண்டு தமிழ் வாக்குதான் விழும் என்றோன். ஏன் என்றார் நான் சொன்ன பதில் சிங்கள இனவாதத்திற்கு சற்றும் குறையாத அதேயளவு சக்தியோடு தமிழ் இனவாதம் இருக்கின்றது . தன்னுடைய இருப்பை காப்பதற்காக இனவாதம் இன்னொரு இனவாதத்தோடு கைகுலுக்கிக் கொள்ளுமே தவிர உங்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்காது என்பதுதான். தேர்தல் முடிந்தபின்னர் நான் சொன்னது உண்மையென்று ஒத்துக்கொண்டார்.

கசப்பான உண்மை சாத்து

[size=4]தமிழர்களின் வாக்கை சந்தர்ப்பம் கருதி அதனின் பலனை வைத்தே அவர்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில் தமிழர்கள் சிங்கள பெரும்பான்மை மக்கள் ஆதரிக்கும் முதல் இருவரில் ஒருவரை வெல்லவோ இல்லை தோற்கவோ வைக்க முடியும் சக்திகளாக உள்ளனர். [/size]

[size=4]எனவே சிங்களம் திரு விக்கிரமபாகு கருணாரத்தினாவை ஏற்காதவரைக்கும் அவருக்கு வாக்களிப்பது ஒரு செய்தியை சொல்லலாம், ஆனால் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தாது. [/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தெகிவளை நகரசபை தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகளால் நான் வென்றேன் என விக்கிரமபாகு கூறியுள்ளார்.....

தெகிவளை நகரசபை தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகளால் நான் வென்றேன் என விக்கிரமபாகு கூறியுள்ளார்.....

அப்ப த.தே.க. வும் அவருக்கு ஆதரவளித்து இருந்தது என நினைக்கின்றேன். அத்துடன் மனோ கணேசனும் ஆதரவு தந்து இருந்தார் என ஞாபகம்.

நான் இலங்கையில் முதலும் கடைசியுமாக வாக்களித்ததும் அவருக்கு அன்று தான்.

கடந்த தேர்தலின்போது விக்கிரமபாகு அவர்களின் பேட்டி ஒன்றினை பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் ரீ ஆர் ரீ வானொலிக்கு ஒழுங்கு செய்து கொடுத்திருந்தேன். அப்பொழுது விக்கிரமபாகு அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தபொழுது தமிழர்களின் மன நிலை எப்படி இருக்கின்றது என்று கேட்டார். நான் சொன்ன பதில் உங்களிற்கு ஒண்டிரண்டு தமிழ் வாக்குதான் விழும் என்றோன். ஏன் என்றார் நான் சொன்ன பதில் சிங்கள இனவாதத்திற்கு சற்றும் குறையாத அதேயளவு சக்தியோடு தமிழ் இனவாதம் இருக்கின்றது . தன்னுடைய இருப்பை காப்பதற்காக இனவாதம் இன்னொரு இனவாதத்தோடு கைகுலுக்கிக் கொள்ளுமே தவிர உங்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்காது என்பதுதான். தேர்தல் முடிந்தபின்னர் நான் சொன்னது உண்மையென்று ஒத்துக்கொண்டார்.

[size=4]தமிழனத்திற்கு உள்ள இனவாதம் காணாது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரமபாகுவுக்கு முதற்கண் நன்றிகள்..!

தேர்தலில் தமிழர்கள் விக்கிரமபாகுவுக்கு வாக்களித்தால் இலங்கையின் வாக்கு அரசியலில் இப்போதுள்ள செல்வாக்கு கூட கிடைக்காது. இது ஒரு கசப்பான மருந்து.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலின்போது விக்கிரமபாகு அவர்களின் பேட்டி ஒன்றினை பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் ரீ ஆர் ரீ வானொலிக்கு ஒழுங்கு செய்து கொடுத்திருந்தேன். அப்பொழுது விக்கிரமபாகு அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தபொழுது தமிழர்களின் மன நிலை எப்படி இருக்கின்றது என்று கேட்டார். நான் சொன்ன பதில் உங்களிற்கு ஒண்டிரண்டு தமிழ் வாக்குதான் விழும் என்றோன். ஏன் என்றார் நான் சொன்ன பதில் சிங்கள இனவாதத்திற்கு சற்றும் குறையாத அதேயளவு சக்தியோடு தமிழ் இனவாதம் இருக்கின்றது . தன்னுடைய இருப்பை காப்பதற்காக இனவாதம் இன்னொரு இனவாதத்தோடு கைகுலுக்கிக் கொள்ளுமே தவிர உங்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்காது என்பதுதான். தேர்தல் முடிந்தபின்னர் நான் சொன்னது உண்மையென்று ஒத்துக்கொண்டார்.

சாத்திரியின் இனவாதம் பற்றிய கருத்தே எனது கருத்தும்.

ஆனால் தமிழர்கள் விக்கிரமபாகுவுக்கு ஆதரவளிக்காததற்கு இனவாதம் மட்டும் காரணமல்ல. விக்கிரமபாகுவிடம் மக்களுக்கு விடிவு தரத்தக்க திட்டம் தெளிவாக இல்லை. பொன்சேகாவிடம் அவ்வாறான திட்டம் இருந்ததா என்ற கேள்விக்கு பதில், தமிழர்கள் பொன்சேகாவை வெறும் பொன்சேகாவாக பார்க்காமல் அமெரிக்க அரசின் பின்னணியிலும் இந்திய ஆதரவுடன் செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னணியிலும் உள்ள திட்டத்தின் முன்னணி பிரதிநிதியான பொன்சேகாவாக பார்த்தே வாக்களித்திருப்பார்கள். மக்களின் தேவை ஒரு விடிவு. அவர்கள் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பும் அமெரிக்காவும் பொன்சேகாவை வைத்து பெற்றுத்தரவுள்ளதாக நினைத்து வாக்களித்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. பொன்சேகாவும் விக்கிரமபாகுவும் சிங்களவர்கள் என்ற அடிப்படையில் விக்கிரமபாகுவுக்கு வாக்களிக்காமல் தமிழர்கள் பொன்சேகாவுக்கு வாக்களித்ததற்கு முக்கிய காரணம் இனவாதம் என்று கொள்வது சரியாகாது என்பதே எனது கருத்து.

உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதை அடித்து கூறும் செயல்கள் இவை. இதை நாங்கள் உலக மயபடுத்துவதில் தான் உண்மையான ஜனநாயம் வெற்றி பெறும்

SLFP யை தவிர இலங்கையில் தத்துவார்த்த அரசியல் முறைகளில் கடைசி வரையும் நின்றுபிடித்தவர்கள் இடதுசாரிகள். இடது சாரிகளின் அரசியல் தனித்துவத்தை 1970 களில் இலங்கையில் இல்லாது அழித்தொழித்த பெருமை சிறிமாவை சாரும். இப்படி கெடுபட்டவர்களில் பிரபலமானவர்கள். கொல்வினாடி சில்வா, என் எம் பெரேரா, வி. பொன்னம்பலம் போன்றோர். இலங்கையின் அதிதிறமையான அரசியல்வாதிகளான இந்த மூவரையும் பீலிக்ஸ்சும், சிறிமாவும் அணைத்துவைத்து செல்லாக்காசுகளாக மாற்றி தூக்கி எறிந்தார்கள். அதன் பின்னர் இடதுசாரிகள் இலங்கையில் தனித்துவத்தையும் மதிப்பையும் இழந்தார்கள்.

ஒக்ஸ்போட்டில் மேற்குநாட்டு கல்வி பயின்ற பண்டாரநாயக்கா UNP யில் கருத்து முரன்பாட்டில் இருந்து வெளியேறியபோது கொள்கை வேறுபாடான இடதுபக்க சார்பு SLFPயை ஸ்தாபித்ததிற்கு காரணம் அப்போது அங்கேயிருந்த குடியானவர்களாகிய பொதுமக்களை ஈர்க்கத்தக்க கொள்கை வளம் நிறைந்த இடதுசாரிகளின் தாக்கத்தால் மட்டுமே. அரசபரம்பரைப் பெண் என்று தன்னை அழைத்துக்கொண்ட சிறிமா, தன்னிடம் அதிகாரம் கிடைத்தபோது, SLFPயின் இடதுசாரித்தன்மைகளை முழுவதாக நீக்கி, அதை தனிய இனவாத கட்சியாகமாற்றினார். அதுமட்டுமல்ல தமிழரசுக்கட்சி தனது கடைசிநாள் வரையும் தன்னை ஜனநாய சோசலிச கட்சியாக காட்டிகொண்டதும் ஆரம்ப காலங்களில் இலங்கையின் இடதுசாரிகள் உணமையான அரசியலில் காட்டிவைத்த வழி முறைகளாலேயே.

எனவே விக்கிரமபாகுவில் சில நல்ல அரசியல் பண்புகள் காணப்பட்டால் அதை இனச்சார்புடன் தொடர்புபடுத்துவது சரியல்ல. விக்கிரமபாகு இடதுச் சாரிப்போக்கில் போக ஆரம்பிக்கும்போது இலங்கையின் கடந்தகால அரசியலை நன்கறிந்துதான் முடிவெடுத்திருப்பார் என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே அவரின் அரசியல் பாதையின் போக்கில் தமிழரின் பிரச்சனைகளும், முள்ளிவாய்க்காலும் ஒரு மைல் கல்லோ அல்லது ஒரு தங்குமிடம் மட்டுமே. ஆனால் சுதந்திரம் தொடங்கி இன்றுவரை அது நமக்கு முழுமைத்துவமான அரசியல்.

அவர் பெரும்பான்மைத்தவர். இலங்கையை ஒன்றாகப் பார்ப்பவர். மொத்த இலங்கைக்கு ஒரு நல்ல அரசியல் எதிர்காலத்தை ஏற்படுத்த உழைப்பவர். நாம் சிறு பான்மையினர். சிங்களவருடன் போதும் போதும் என்றாகியிருப்பவர்கள். சிங்களவரிடமிருந்து சுதந்திரத்தை தேடுபவர்கள். தனிநாடுமட்டும் தீர்வாக முடியும் என்று எமது பதையை எடுத்து செல்பவர்கள். ஒரு இரவு மேய்ப்பன் இந்த ஆடுகள் இரண்டையும் ஒருகட்டையில் கட்டியிருந்தான். ஆனால் அவை வெவ்வெறு மந்தையை சேர்ந்தவை. சந்தர்ப்பவசமாக ஒருஇரவு சேர்ந்த இவை இரண்டும் உறவு முறையானவை அல்ல.

சிங்கள மக்களே ஏற்றுகொள்ளாத சிங்களவனாகிய விக்கிரமபாகுவின் தூய இடதுசாரிக் கொள்கைகளை தமிழ் மக்கள் வரவேற்று விக்கிரபாகுவுக்கு வாக்களிக்க போவது நடக்குமா தெரியாது. அதுவும் மேற்குலக முதலாளித்துவ வாடையின் நறுமணத்தில் மிகவும் திளைத்திருக்கும் புலம் பெயர்மக்கள் விக்கிரமபாகுவின் கொள்கையில் எவ்வளவு பிடிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது சொல்லமுடியாது. அரசியல்வாதி என்றமுறையில் விக்கிரமபாகு இவற்றை எல்லாம் விளங்கி கொண்டிருப்பார். அரசியல்வாதி என்றமுறையில் நேர்மையான இடதுசாரி அரசாங்கம் ஒன்றை அமைப்பது எவ்வளவு கடினம் என்றும் அறிந்து வைத்திருப்பர். என்வே தனது இனமான சிங்கள மக்களிடமிருந்து இதுவரையில் தனக்கு வராத ஆதரவு தமிழ் மக்களிடமிருந்து வரவில்லையாயின் அது தமிழ் மக்களின் இனவாதமாக தனக்குதான் விளங்கப்படுத்தியிருக்க மாட்டார்.

பொன்சேக்காவுக்கு தமிழ் மக்கள் வாக்கு போட்டதற்கு கூட்டமைப்பு ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. கூட்டமைப்பு அதை ஏன் செய்தது என்பதற்கும் வெளிநாடுகள்தான் காரணம். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் UNP க்குத்தான் வாக்களிக்க விரும்புவர்கள். ஆனால் SLFP யா UNP யா ஆட்சிக்கு வரும் என்பதை சிங்கள வாக்குகள் மட்டும்தான் தீர்மானிப்பவை. ஆனால் ராசபக்சாவுக்கு முதல் தேர்தலில் மட்டும் போதுமான வாக்குகள் இருக்காத காரணத்தினால் இவர் தலைவரிடம் தேர்தலை பகிஸ்கரிக்க கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் தமிழர் UNP க்கு வாகளிப்பவர்கள் என்று வைத்தே இந்த முயற்சி நடந்தது.

மேற்கு நாடுகள் தேர்தலை பொதுவில் சிங்கள வாக்குகளே தீர்மானிக்கின்றன என்பதை மறுத்து ராசபக்சாவின் வெற்றிக்கு புலிகளே காரணம் என்று நிலை நிறுத்த முயற்சித்தார்கள். தமிழ்மக்களின் முதல் எதிரியான பொன்சேக்காவை UNP யில் நிறுத்தி தமிழ் மக்களை வலோற்காரப்படுத்தி பொன்சேக்காவுக்கு வாக்களிக்க வைத்தது அவர்கள் தங்கள் கருதுகோளை சோதித்து பார்க்கவே. இதன் இன்னொரு பங்கு தமிழர் தமது வாக்குக்களை கவனமாக பாவித்தால், சிங்கள கட்சிகளை கட்டுப்படுத்தி தமது நலங்களை முன்னெடுத்து சர்வதேசநாடுகள் விரும்பும் கொள்கையான ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் வாழமுடியும் என்பதை காட்ட முயன்றதுவுமேதான். ஆனாலும் சிங்கள மக்களேதான் அந்த தேர்தலிலும் முடிவை தீர்மானித்தார்கள்.

சாதாரணமாக ஈழத்தமிழ்மக்கள் எவ்வளவு கொள்கை நேர்மை இருந்தாலும், இடதுசாரிகளுக்கோ அல்லது சிங்களவருக்கோ வாக்களிக்க மாட்டார்கள். உண்மையை ஆராய்ந்து பார்த்தால் பொன்சேக்காவும் சிங்கள இடதுசாரி. விக்கிரமபாகுவும் சிங்கள இடதுசாரி. சுதந்திரம் தமது கையில் இருந்தால் நல்லவர் கெட்டவர் என்று பாராமல் தமிழ்மக்கள் இருவருக்குமே வாக்களிக்க மாட்டார்கள். என்வே விக்கிரமபாகுவுக்கு வாக்களியாததை இனத்துவேசமென்றோ அல்லது பொன்சேக்காவுக்கு வாக்களித்ததை கொள்கை பிடிப்பிலென்றோ முடிவெடுக்க இயலாது.

Edited by மல்லையூரான்

[size=4]இனவாதம் என்றால் என்ன? [/size]

[size=4]அது எவ்வாறு இனப்பற்றில் இருந்து வேறுபடுகின்றது?[/size][size=1]

[size=4]தமிழர்களின் இனவாதம் என்பதை எதை வைத்து அளவிடுவது? [/size][/size]

அப்ப த.தே.க. வும் அவருக்கு ஆதரவளித்து இருந்தது என நினைக்கின்றேன். அத்துடன் மனோ கணேசனும் ஆதரவு தந்து இருந்தார் என ஞாபகம்.

நான் இலங்கையில் முதலும் கடைசியுமாக வாருணாக்களித்ததும் அவருக்கு அன்று தான்.

நிழலி ஒரு சின்னத் திருத்தம்..தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழு மனதுடன் ஆதரிக்கவில்லை. மதில் மேல் பூனையாக இருந்தார்கள். குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமது ஆதரவைத் தெரிவிக்காமல் இழுத்தடித்தார்கள். ஆனால் செல்வம் அடைக்கலநாதன் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற ஒரு சிலர் மனோ கணேசனுக்கும் விக்கிரமபாகு கருணாரட்ணவிற்கும்ஆதரவாகப் பிரசாரம் செய்தார்கள் என்று நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.