Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப்பெயர்களின் பின்னால் உள்ள சுவாரசியங்கள்

Featured Replies

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பெயர் உண்டு. இந்தப் பெயர்களைப் பலரும் பல விதமாக வைத்துக் கொள்வார்கள். வெளிநாடுகளில் எல்லாம் குழந்தை பிறந்த மறுகணமே பெயர் வைப்பார்கள். அங்குள்ள எம்மவர்கள் கூட குழந்தை பிறந்த அந்நாளிலேயே பெயர் வைத்துவிடுவார்கள். ஆனால் எங்கள் ஊர்களில் அப்படியல்ல. குழந்தை பிறந்து ஐந்து முதல் 15 நாட்கள் வரையில் பெயர் வைப்பதற்காக எடுத்துக் கொள்வார்கள்.

காரணம் குழந்தை பிறந்த நேரத்தை சாத்திரியாரிடம் கொடுத்து அக்குழந்தைக்குரிய குறிப்பை வரைய வேண்டும். அதற்கேற்றால்போல் நாள், நேரம், நட்சத்திரம் எல்லாவற்றையும் பார்த்துத் தான் பெயர் வைப்பார்கள். பிறந்த எண்ணுக்குத் தகுந்ததாக பெயர் வைக்காவிட்டால் அந்த நபரின் வாழ்க்கையே திசைமாறிப்போய்விடும் என்பதனை ஜோதிடர்கள் அடித்துக்கூறுகிறார்கள்.

இதேபோல ஊர்கள் அல்லது தெருக்களுக்கு குறித்த அந்தப் பெயர்கள் எப்படி ஏற்பட்டன என்பதனை அறியும் போது சுவாரசியமாக இருக்கும். சிலவேளைகளில் அது உண்மையாகவும் இருக்கலாம். பொய்த்தும் போகலாம்.

57216355.jpg

ஆட்சியாளர்களின் பெயரை ஊர்களுக்கு வைக்கும் மரபு பண்டைய காலத்தில் இருந்தே இருந்தது. இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள ‘சங்கிலித்தோப்பு’ சங்கிலியனின் நினைவாக இருக்கின்றது. அதேபோல கொழும்பில் டெரிங்டன், மெயிட்லண்ட் என ஆங்கிலேய தளபதிகளின் பெயர்களில் இன்றும் சில இடங்கள் அழைக்கப்படுகின்றன. 1995ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தின் பல வீதிகள் விடுதலைப்போராட்ட வீரர்களின் பெயரால் அழைக்கப்பட்டன.

குறித்த பிரதேசத்தில் இருக்கும் அல்லது முன்னர் இருந்த குலங்களின் அடிப்படையில் அவ்வூருக்கு பெயர் ஏற்பட்டிருக்கும். உதாரணமாக வண்ணான்காடு, அம்பட்டர்தெரு, புன்னாலைக்கட்டுவன் என அமையும்.

யாழ்ப்பாணத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உதாரணம். இது இன்றும் இளையவர்களுக்கு சொல்லப்படுகின்ற ஒரு விடயம். குப்பிளான் என்ற ஊரின் காரணப்பெயர் வரக் காரணம் என்ன?

பல வருடங்களுக்கு முன்னர் தற்போது குப்பிளான் என அழைக்கப்படும் பகுதிக்கு வந்த ஆங்கிலேயர் அங்கு மக்களின் விவசாயச் செய்கையைப் பார்த்து பாராட்டினர். அதிகளவான அவ்வூர் வாசிகள் மரவள்ளிச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர். மரவள்ளி விளைச்சலைப் பெற்ற பின்னர் வெட்டிய மரவள்ளித் தண்டுகளை சுவரோரமாக சரித்து அழகாக அடிக்கி வைத்திருந்தனர். இதைப்பார்த்த வெள்ளையன் ஒருவன் மக்களிடம் ‘குட் ப்ளான்’ என பாராட்டினானாம். இந்தக் ‘குட் ப்ளானே பிற்காலத்தில் மருவி குப்பிளான்’ ஆகியதாக சொல்வார்கள்.

img_0603.jpg

இதேபோல ‘வில்’ என்ற எச்சத்தில் முடிவடையும் ஊர்ப்பெயர்கள் சில இருக்கின்றன. இணுவில், கோண்டாவில், கொக்குவில், நந்தாவில் போன்ற பெயர்கள் எப்படி ஏற்பட்டன என்பதற்கு சுவாரசியமான ஒரு கதையைச் சொல்லுவார்கள். நிச்சயம் இது கட்டுக்கதையாக தான் இருக்கும். ஆனாலும் ஏற்கக் கூடியதாக இருக்கின்றது.

முன்பொரு காலத்தில் அரசனும், அவனது தோழனும் குதிரையில் வேட்டைக்குப் புறப்பட்டார்களாம். வழியில் ஓரிடத்தில் கொக்கு ஒன்றை அரசன் அவதானித்தானாம். உடனே நண்பனிடம் கொக்கு ஒன்று பறந்து கொண்டிருக்கின்றது வில்லைத் தா வேட்டையாடலாம் எனக் கூறினானாம். வேகமாக குதிரையில் வந்து கொண்டிருந்ததால் நண்பனிடம் இருந்த வில்லைப் பறிப்பதற்காக நண்பனின் பெயரைச் சொல்லி நந்தா வில்லைத் தா என கோரினானாம். அவர்கள் வேகத்தில் வில்லைப் பெற முடியவில்லை. சிறிது நேரத்தின் பின் கொஞ்சம் கோபமாக கொண்டா வில்என அரசன் கத்தினானாம். இருந்தும் கொக்கை வேகமாக கலைத்ததால் வில்லை பெற இயலவில்லை. அதற்குள் கொக்கும் மறைந்து விட்டது. சோர்வுடன் இனி வில் வேண்டாம் என கூறினானாம்.

நண்பர்களே! மேலே பந்தியில் “...” அடையாளத்தில் காட்டப்பட்டிருக்கும் பெயர்களை சரியாக படியுங்கள். அதுவே மருவி கொக்குவில், நந்தாவில், கோண்டாவில், இணுவில் என மாறியதாக கூறுவார்கள். இந்த நான்கு ஊர்களும் அருகருகே இருக்கின்றன. வேகமாக குதிரையில் பயணித்த இருவரும் குறிப்பிட்ட நேரங்களில் அவ்விடங்களில் பயணித்திருக்க சந்தர்ப்பம் இருக்கின்றது.

LoveLane.jpg

பலரையும் புருவத்தை உயர்த்திப் பார்க்க வைக்கும் ஒரு பெயர் கொண்ட இடம் உடுவில் பிரதேசத்தில் இருக்கின்றது. அது தான் லவ் லேன். முன்பெல்லாம் அந்த வீதியில் ஒரே காதலர்கள் நடமாட்டமாம். அதற்காகவே அந்தப்பெயர் வைத்தார்களாம். நானும் பல தடவை அந்த வீதியால் போய் வந்திருக்கின்றேன். மருந்துக்கு கூட காதலர்களைக் காண முடியவில்லை. இதற்காகவேனும் நான் யாரையாவது காதலித்து அவ்விடத்துக்கு அழைத்துச் சென்று கடலை போட வேண்டும். யார் அந்த மகராசன்?

இதேபோல உங்கள் ஊர்களுக்கான பெயர் வரவதற்கும் பல சுவாரசியமான காரணங்கள் இருக்கும். அவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி- ஈழவயல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதேபோல உங்கள் ஊர்களுக்கான பெயர் வரவதற்கும் பல சுவாரசியமான காரணங்கள் இருக்கும். அவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆக மொத்தம் யாரார் என்ன இடம் என்று தெரிய ஒரு பிட்டு போடுறிங்கள்.. :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை - இங்கு ஒரு சிறு துறைமுகம் உண்டு, இங்கிருந்து பருத்தி ஏற்றுமதி நடந்ததால் இந்த தமிழ் பெயர் வந்தது. இதை அந்நியன் பேதுரு முனை (Point Pedro ) என்று அழைத்தான். இலங்கையின் நீளத்தை அளக்க நாடாவை பிடிக்கும் ஒரு முனை

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்திலை யாழ்ப்பாணத்திலை நத்தாவில் கொக்குவில் கோண்டாவில் இணுவில் இதுகளுக்கு மட்டுமதான் கதை இருக்கு அதை தவிர்த்தா வடமாச்சியிலை பருத்துறை தென்மராச்சியிலை ஒண்டும் இல்லை மன்னார் வன்னி திருகோணமலை மட்டு இங்கை ஊருகளிற்கு பெயரே இல்லை என்ரை ஊரிலைதான் இராமர் மாரிசன் மானை துரத்தி கொண்டு வந்து மானே நிற்பாய் எண்டவர் அதுதான் என்ரை காதிலை மானிப்பாய் எண்டு விழுந்தது அதாலை மானிப்பாய் எண்டு பேரை வைச்சிட்டன். அப்ப புன்னாலை கட்டுவனுக்கு சுண்ணாகத்துக்கு கோப்பாய்க்கு எப்படி எப்பிடி பேர் வந்ததாம்??

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப முன்பொரு காலத்தில ஆக்கள வெட்டி இருபினமோ? அளவெட்டி நு பேர் வர?

நாச்சிமார் கோயிலடில சீனியர் லேன் எண்டு ஒண்டு இருக்கு அப்ப அங்க இருந்த ஆக்கள் எல்லாம் seniorsa ?

  • கருத்துக்கள உறவுகள்

படைகள் சந்தித்தமையால் சந்திவெளி என்றும்,இளைப்பாறியமையால் வந்தாறுமூலை என்றும் பெயர் வந்ததாம்

சுன்னாகம், மல்லாகம், கொடிகாமம் போன்று காமம் என்று முடியும் ஊர்கள், சிங்கள சொல்லான கம (கிராமம்) என்பதன் தமிழாக்கம் என்று யாரோ சொல்லக் கேட்டேன். தெரிந்தவர்கள் விளக்கம் கூறினால் நன்று.

[/quoteஊர் [size=5]பெயர்கள் பொதுவாக இடுகுறிப் பெயர்களாகவோ காரணப் பெயர்களாகவோ இருக்கும் . காமம் என்பதற்கு பாலியல் என்ற விளக்கத்துக்கு அப்பால் ஊர் குடி இறை என்ற பொருளும் உண்டு.அது போல காமம் என்பதற்கு விருப்பம் என்ற ஒரு பொருளும் உண்டு.கொடியை விரும்பியவர்கள் கொடிக்காக உயிர் நீத்தவர்களின் நினைவாக கொடிகாமம் என்ற பெயர் வந்திருக்கலாம்.[/size]

[size=5]அதே போல அம் என்னும் விகுதி தமிழ் மொழிக்குரியது.மல்லாகம் சுண்ணாகம் பண்ணாகம் முதலான பெயர்களை எடுத்துப் பார்த்தால் அகம் என்ற செல்லின் விகுதியாகவே அவை இருப்பது புரிகிறது.அகம் என்பதற்கு வீடு உறைவிடம் ஊர் என்றும் பொருள் உள்ளது.மல்லாகம் என்று எடுத்துப் பார்த்தால் மல்யுத்தத்தில் சிறந்த வீரர்கள் வாழந்த ஊராக அது இருந்திருக்கலாம்.அது போல சுண்ணாகம் குடாநாட்டின் மிகப்பெரிய மூலப்பொருளான சுண்ணாம்பு கைத்தொழிலை செய்தவர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அந்தப்பெயர் வந்திருக்கலாம்.அதேபோல பண்ணாகம் என்பது இசைக் கலைஞர்கள் வாழந்த ஊராக இருக்கலாம்.[/size]

[size=5]நாங்கள் எங்களுடைய உண்மையான வரலாற்றின் மீது அக்கறையற்றவர்களாக அவற்றை தொலைத்துவிட்டு மாற்றான் எங்கள் மீது திணித்துவிட்டுப் போன போலி வரலாற்றை எங்களுடைய வரலாறாக பீத்திக் கொண்டிருப்பதால் தான் சிங்களவர்கள் விகாரை இருந்த இடம் எல்லாம் தங்களுக்குச் சொந்தம்; பௌத்தம் என்றால் அது சிங்களவர்களுடைய வரலாற்று முதுசம் என்று உலகை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.[/size]

[size=5]சிங்கள பௌத்த பேரினவாதத்தை தோற்கடிக்கவேண்டுமானால் இலங்கையில் இருந்த தமிழ் பௌத்த வரலாறு ஆதாரத்துடன் நிறுவப்படவேண்டும்.அனுராதபுரத்தில் தமிழ் பௌத்தம் அதாவது மகாயான பௌத்த விகாரையான அபியகிரி விகாரையின் வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்?[/size]

[size=5]சிங்கள அரச பரம்பரையினர் 18 ம் நூற்றாண்டுவரை பாண்டி நாட்டு இளவரசிகளையே பெரும்பாலும் திருமணம் செய்திருந்தார்கள். [/size]

கேள்விப்பட்டதில் சில.

'புளியன்' என்பவர் ஆண்டதால் புளியந்தீவு (மட்டக்களப்பு)

'காத்தான்' என்பவரின் பெரிய குடும்பம் குடியிருந்ததால் 'காத்தான்குடி'

அழகிய பாறை - 'அம்' பாறை

கடலுக்குள் நிறைய கற்கள் உள்ள முனை - கல்முனை

நெல் அதிகமாக விளைந்ததால் - நெல் பட்டி முனை - நற்பட்டிமுனை (சில சனம் 'நாய்ப்பட்டி முனை' என தவறுதலாக அழைக்கும்)

கண்டி மன்னனுக்கு மலர்கள் விளைவித்ததால் 'மல்லிகைத்தீவு' (மல்வத்த)

திருக்கோயில் - கோயில் திரும்பியதாக சைவ சமயத்தவர்களிடம் ஒரு பழைய கதையுண்டு.

மொத்தத்திலை யாழ்ப்பாணத்திலை நத்தாவில் கொக்குவில் கோண்டாவில் இணுவில் இதுகளுக்கு மட்டுமதான் கதை இருக்கு அதை தவிர்த்தா வடமாச்சியிலை பருத்துறை தென்மராச்சியிலை ஒண்டும் இல்லை மன்னார் வன்னி திருகோணமலை மட்டு இங்கை ஊருகளிற்கு பெயரே இல்லை என்ரை ஊரிலைதான் இராமர் மாரிசன் மானை துரத்தி கொண்டு வந்து மானே நிற்பாய் எண்டவர் அதுதான் என்ரை காதிலை மானிப்பாய் எண்டு விழுந்தது அதாலை மானிப்பாய் எண்டு பேரை வைச்சிட்டன். அப்ப [size=5]புன்னாலை கட்டுவனுக்கு சுண்ணாகத்துக்கு கோப்பாய்க்கு எப்படி எப்பிடி பேர் வந்ததாம்??[/size]

எனக்கு தெரிஞ்ச மட்டிலை , புன்னாலைக் கட்டுவனுக்கு , முன்னைய காலங்களில் இங்கு அதிக அளவு புன்னை மரங்கள் இந்த இடத்திலை இருந்ததாயும் , அப்ப இதை புன்னை நகர் எண்டு கூப்பிட்டிச்சினமாம் . பேந்து கால ஓட்டத்தில இது மருவி போய் புன்னாலைக் கட்டுவன் எண்டு பேர் வந்திதாம் . மற்றது சுன்னாகம் , சுன்னாகத்தை சுத்தி ஒரே சுண்ணாம்பு பாறையள் . அதால் சுண் + அகம் எண்டு சுன்னாகமாய் மருவீச்சுதாம் . அடுத்தது கோப்பாய் , இதுக்கு மூண்டு காரணம் இருக்கு . ஒண்டு சங்கிலி அரசனது அரன்மனைகளின் பகுதி இங்கை இருந்ததால கோ = அரச‌ன் , பாய் = இருப்பிடம், அதாவது அரச‌னின் இருப்பிடம் என பொருள்படுகிறது எண்டு ஒருபக்கம் சொல்லுது :) . மற்றப்பக்கம் நல்லூர் இராசதானியை இணைக்கிற இராசபாதையில அப்ப அரசர்கள் குதிரையில பாஞ்சு போனதால கோ + பாய் = கோப்பாய் எண்டு வந்ததாயும் சொல்லுது :lol: . இதுக்கிடையில இந்த இடத்தில கூட மாடுகள் பட்டி அடைச்சதால கோ = மாடு பாய் = இருப்பிடம் எண்டு கோப்பாயா வந்திதாம் எண்டு இன்னும் ஒரு பகுதி இந்தக் கோப்பாயை பத்தி சொல்லுகியினம் :o:lol::D . விளக்கம் காணுமோ சாத்திரி :lol::D:icon_idea: ?

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிஞ்ச மட்டிலை , புன்னாலைக் கட்டுவனுக்கு , முன்னைய காலங்களில் இங்கு அதிக அளவு புன்னை மரங்கள் இந்த இடத்திலை இருந்ததாயும் , அப்ப இதை புன்னை நகர் எண்டு கூப்பிட்டிச்சினமாம் . பேந்து கால ஓட்டத்தில இது மருவி போய் புன்னாலைக் கட்டுவன் எண்டு பேர் வந்திதாம் . மற்றது சுன்னாகம் , சுன்னாகத்தை சுத்தி ஒரே சுண்ணாம்பு பாறையள் . அதால் சுண் + அகம் எண்டு சுன்னாகமாய் மருவீச்சுதாம் . அடுத்தது கோப்பாய் , இதுக்கு மூண்டு காரணம் இருக்கு . ஒண்டு சங்கிலி அரசனது அரன்மனைகளின் பகுதி இங்கை இருந்ததால கோ = அரச‌ன் , பாய் = இருப்பிடம், அதாவது அரச‌னின் இருப்பிடம் என பொருள்படுகிறது எண்டு ஒருபக்கம் சொல்லுது :) . மற்றப்பக்கம் நல்லூர் இராசதானியை இணைக்கிற இராசபாதையில அப்ப அரசர்கள் குதிரையில பாஞ்சு போனதால கோ + பாய் = கோப்பாய் எண்டு வந்ததாயும் சொல்லுது :lol: . இதுக்கிடையில இந்த இடத்தில கூட மாடுகள் பட்டி அடைச்சதால கோ = மாடு பாய் = இருப்பிடம் எண்டு கோப்பாயா வந்திதாம் எண்டு இன்னும் ஒரு பகுதி இந்தக் கோப்பாயை பத்தி சொல்லுகியினம் :o:lol::D . விளக்கம் காணுமோ சாத்திரி :lol::D:icon_idea: ?

நான் வேற ஏதோ எதிர் பார்த்தேன் . :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.