Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து மக்கள் அச்சம் காரணமாக வெளியேறி வருகின்றனர்

Featured Replies

[size=4]கர்நாடகா மாநிலத்தில் இருந்து, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அச்சம் காரணமாக வெளியேறி வரும் நிலையில், வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டே எச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் அமைதி நிலவுவதாகவும், அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களுக்காக மேலதிக தொடரூந்துகள் அசாமுக்கு இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மாநில முதல்வர் ஜெயதீஸ் ஷெட்டருடன் தாமும், பிரதம மந்திரியும் பேசியதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலைமை குறித்து ஆராய்வதற்காக உயர் மட்டக் கூட்டம் ஒன்றை மாநில முதல்வர் ஷெட்டர் கூட்டியுள்ளார்.[/size]

[size=4]http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12651[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் வதந்தி: பெங்களூரை காலி செய்யும் வட கிழக்கு மாநிலத்தவர்கள்!

Posted Date : 10:40 (16/08/2012)Last updated : 10:49 (16/08/2012)

Guwahati-train.jpgபெங்களூர்: தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கிளம்பிய பீதி காரணமாக, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலத்tதைச் சேர்ந்ததவர்கள் பெங்களூலிருந்து ஒரே நாளில் வெளியேறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரில் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது ஆகஸ்ட் 20-ம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று திடீரென பரவியது.

எஸ்.எம்.எஸ், இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை மூலம் இந்த வதந்தி வேகமா பரவியது.

இதனால் பீதியடைந்த வடகிழக்கு மாநிலத்தவர்கள்,உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்புவதற்காக தங்கள் உடைமைகளுடன் ஒரே நேரத்தில் பெங்களூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

கிடைக்கிற ரயிலில் ஏறி எப்படியாவது சொந்த மாநிலத்துக்கு போய்விட வேண்டும் என்ற தவிப்பில் அனைவரும் இருந்தனர்.அலை அலையாய் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தை நேற்று இரவிலிருந்து முற்றுகையிட்டுக் கொண்டே இருந்தனர்.கவுகாத்தி செல்லும் ரயிலில் ஒரே நேரத்தில் கூட்டமாக ஏற முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.பலர் அவசர ஜன்னல் கதவு வழியாக உள்ளே ஏறிச் சென்றது பரிதாபமாக இருந்தது.இதில் பல பெண்களும் தங்களது கைக்குழந்தையுடன் இதேப்போன்று ஏறி உள்ளே சென்றது வேதனையை ஏற்படுத்துவதாக இருந்தது.

இதனால் பெங்களூரு ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பெங்களூரு ரயில் நிலையம் வந்த கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், "வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், உரிய பாதுகாப்பு தரப்படும் என்றும் வடகிழக்கு மாநிலத்தவரிடம் கேட்டுக் கொண்டார்.மேலும் காவல்துறையினரும் ஒலிபெருக்கி மற்றும் சேனல்கள் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே ஆகியோர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் தொடர்பு கொண்டு, வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

இதனிடையே வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது.

vikatan News

  • தொடங்கியவர்

[size=4]இவர்களுக்கு மகிந்த தலைமயிலான படைகள் பாதுகாப்பும் உயிர் உத்தரவாதமும் கொடுக்க முன்வந்தாலும் வரலாம் :wub: [/size]

  • தொடங்கியவர்

[size=4]இப்பொழுது ஐதராபாத்தில் இருந்தும் வதந்தி காரணமாக வெளியேறுகிறார்கள் - செய்தி [/size][size=1]

http://tamil.yahoo.com/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%9A-181200793.html[/size][size=1]

[size=4]அநேகமாக வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு சென்றாலும் ஆச்சரியம் இல்லை. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையை விட்டுப் போகமாட்டார்கள்.. :icon_mrgreen: தமிழர்கள் வேண்டுமானால் தென்கோடி மாவட்டங்களுக்கு ஓடுவார்கள்.. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது எங்கிட்டாவது அடிச்சிட்டு சாகுங்கப்பா.. மக்கள் தொகை குறையட்டும்..

:icon_idea: :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே காங்கிரசின் நோக்கம் புரட்சி :lol::D :D

வடமாநில மக்களுக்கு உரிய பாதுகாப்பு: முதல்வர் ஜெ. உறுதி!

Posted Date : 14:39 (17/08/2012) Last updated : 14:40 (17/08/2012

jaya7%2815%29.jpg

சென்னை: சென்னையில் வாழும் வடகிழக்கு உள்ளிட்ட அனைத்து மாநில மக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,"சென்னையில் வசித்து வரும் வடகிழக்கு மாநில மக்கள்,அசாம் கலவரம் காரணமாக இங்கு தங்களது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்திருப்பதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த காரணத்திற்காக அவர்கள் அச்சமடைய தேவையில்லை.அவர்களது பாதுகாப்புக்கு தேவையான உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்துள்ளனர்.

தமிழகம் எப்போதுமே அமைதியான மாநிலம்.தமிழகத்தில் வசிக்கும் இந்தியாவின் எந்த பகுதி மக்களும் எவ்வித பிரச்னையையும் சந்திக்காதவாறு எனது தலைமையிலான அரசு பார்த்துக்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக தாக்குதல் பீதி காரணமாக சென்னையிலிருந்து வடகிழக்கு மாநில மக்கள் நேற்று சுமார் 3000 க்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.vikatan....nid=9946#cmt241

Edited by மல்லையூரான்

கடுமையான நடவடிக்கை எடுத்து மக்களை சாந்திப்படுத்தாவிட்டால் பொருளாதாரம் பாதிக்கப்படும். இது காங்கிரசிக்கு வாய்ப்பாக முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ சிக்கல் முஸ்லீம்களுக்கும் வடவர்களுக்கும் .. முஸ்லீம்களுக்கு கலவரம் நடத்த கூடிய அளவுக்கு கெப்பாஸிட்டி இங்கிட்டு இல்லை.. ஏதாவது வழக்கம் போல குண்டு கிண்டு வைக்கலாம்...

  • தொடங்கியவர்

[size=5]சென்னையிலும் பீதி…வெளியேறுகிறார்கள்[/size]

[size=2][size=4]பெங்களூர், ஹைதராபாத்தைத் தொடர்ந்து தற்போது சென்னையிலிருந்தும் ஆயிரக்கணக்கான வட கிழக்கு மாநிலத்தவர்கள் தங்களது சொந்த மாநிலஙக்ளுக்குக் கிளம்பத் தொடங்கியுள்ளனர்.[/size][/size]

[size=2][size=4]அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் வசித்து வரும் வட கிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று வதந்தி பரவி வருகிறது. இதையடுத்து பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வட கிழக்கு மாநிலத்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சாரை சாரையாக போய்க் கொண்டுள்ளனர்.[/size][/size]

[size=2][size=4]இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கிளம்பத் தொடங்கியுள்ளனர்.[/size][/size]

[size=2][size=4]சென்னையில் வேலை பார்த்து வரும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இவர்கள் பெட்டி படுக்கைகளுடன் நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.[/size][/size]

[size=2][size=4]நேற்று இரவு 10.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து திப்ரூகர் செல்லும் ரயிலில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்கள். அந்த வண்டியில் வழக்கமாக உள்ள 4 பொதுப் பெட்டிகளுடன், கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு அதில் வடமாநிலத்தவர்கள் புறப்பட்டு சென்றார்கள்.[/size][/size]

http://www.alaikal.com/news/?p=111867

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயங்கள் நடக்கின்றது.நடக்கட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

இது நம்பமுடியாமல் இருக்கு.. தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்கு எதிராக கலகங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்தும் ஏன் ஓடுகிறார்கள்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் எப்போதுமே அமைதியான மாநிலம்.தமிழகத்தில் வசிக்கும் இந்தியாவின் எந்த பகுதி மக்களும் எவ்வித பிரச்னையையும் சந்திக்காதவாறு எனது தலைமையிலான அரசு பார்த்துக்கொள்ளும்”

தமிழக அரசுக்கு சூடு சொறணை இல்லை என்பதை இப்படியும் சொல்லலாம்...lolz.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசுக்கு சூடு சொறணை இல்லை என்பதை இப்படியும் சொல்லலாம்...lolz.. :lol:

:lol: :lol: :icon_idea:

  • தொடங்கியவர்

[size=6]பாகிஸ்தான் வதந்திகளைத் தூண்டியதாக இந்தியா குற்றச்சாட்டு[/size]

[size=4]இந்தியாவின் தென்னிந்திய நகரங்களில் மாணவர்களாகவும் தொழிலாளிகளாகவும் வாழும் வடகிழக்கு மாநிலத்தார் பலர் அந்நகரங்களில் இருந்து வெளியேறி சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிப்போகக் காரணமான வதந்திகளில் பெரும்பான்மையானவற்றைக் கிளப்பியது பாகிஸ்தான் என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.[/size]

[size=4]இந்தியர்கள் இடையே அச்சத்தையையும் பீதியையும் கிளரிவிட்டது பாகிஸ்தான் என செய்தியாளர் கூட்டம் ஒன்றில் இந்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் குற்றம்சாட்டினார்.[/size]

[size=3][size=4]வடகிழக்கு மாநிலத்தாருக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதாக வதந்திகளைப் பரப்பிய இணையதளங்கள், கைத்தொலைபேசி குறுந்தகவல்கள் மற்றும் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றை இந்திய அதிகாரிகள் தற்போது அடையாளம் கண்டிருக்கிறார்கள் என்றும், அப்படியான விஷயங்கள் பாகிஸ்தானிலிருந்து கிளமியிருக்கின்றன என்றும் சிங் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=3][size=4]தென்னிந்திய நகரங்களில் வாழும் வடகிழக்கு மாநில தொழிலாளர்கள் எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் விதமாக இந்த தகவல்கள் அமைந்திருந்தன என்றும் அவர் கூறினார்.[/size][/size]

[size=3][size=4]இந்த நெருக்கடியை உருவாக்கியதில் பங்குபெற்ற குற்றச்சாட்டின் பேரில் ஒரு டஜனுக்கும் அதிகமான சந்தேகநபர்கள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/india/2012/08/120819_indiablamepakistan.shtml

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இது நம்பமுடியாமல் இருக்கு..

தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்கு எதிராக கலகங்கள் நடந்ததாகத் தெரியவில்லை.

அப்படி இருந்தும் ஏன் ஓடுகிறார்கள்? :rolleyes:

தமிழர்களும் மனிதர்கள்தானே என அவர்கள் நினைத்திருக்கக்கூடும். :lol::D :D

[size=4]சென்னையில் இன்றும் திரண்ட வட கிழக்கு மாநிலத்தவர்-1000 பேர் சொந்த மாநிலம் திரும்பினர்[/size]

சென்னை: சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ஏராளமான அஸ்ஸாமியர்கள் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலத்தவர்கள் திரண்டனர். அனைவரும் ரயிலில் சொந்த மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு ஆபத்து வரப் போவதாக பீதி கிளப்பப்பட்டதால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் அஸ்ஸாமியர்கள் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலத்தவர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

சென்னையிலும் கடந்த 3 நாட்களாக அஸ்ஸாமியர்கள் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலத்தவர்கள் சாரை சாரையாக சொந்த மாநிலங்களுக்குப் போய்க் கொண்டுள்ளனர். இதுவரை பல ஆயிரம் பேர் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், இன்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ரயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். திருவனந்தபுரத்திலிருந்து வந்த சாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டு அவற்றில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

http://tamil.oneindia.in/news/2012/08/19/tamilnadu-4th-day-thousands-assamese-leave-from-chennai-159897.html

இந்தியா உடைகிறதா ......?

  • தொடங்கியவர்

[size=4] இந்தியா உடைகின்றதா? [/size]

[size=4]பாகிஸ்தான் இதன் பின்னால் உள்ளது என இந்தியா கூறுகின்றது. ஆம், சீனாவும் பாகிஸ்தானும் உடைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். இதற்கு இன்னும் சில நாடுகள் துணை. [/size]

[size=4]ஒரு நாள் சோவியத் யூனியன் போல சடுதியாக உடையலாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இந்தியா உடைகின்றதா? [/size]

[size=4]பாகிஸ்தான் இதன் பின்னால் உள்ளது என இந்தியா கூறுகின்றது. ஆம், சீனாவும் பாகிஸ்தானும் உடைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். இதற்கு இன்னும் சில நாடுகள் துணை. [/size]

[size=4]ஒரு நாள் சோவியத் யூனியன் போல சடுதியாக உடையலாம். [/size]

இறைவா

அதை என் கண்ணால் பார்க்கணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.