Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

வவுனியா புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

உலங்குவானூர்திகள் மற்றும் ஆட்டிலறி பீரங்கிகளின் சூட்டாதரவுடன் டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகளின் துணையுடன் 20.08.1997 அன்று புளியங்குளத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படையினரால் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பல மணிநேரம் தீரமுடன் களமாடி படை நடவடிக்கையை முற்றாக முறியடித்தனர்.

இதன்போது சிறிலங்கா படையினரின் இரு முதன்மை போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டதுடன் மேலும் இரு டாங்கிகள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டன. 73மி.மீட்டர் பீரங்கி பொருத்தப்பட்ட கவச ஊர்தி ஒன்று உட்பட பெருமளவான ஆயுதங்கள் மற்றும் படைய கருவிகள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.

சிறிலங்கா படையினரின் வல்வளைப்பு முயற்சிக்கு எதிராக தீரமுடன் களமாடி 52 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம் மாவீரர்களினதும்

இதே நாளில்

ஜெயசிக்குறு படையினருடன் மதியாமடுப் பகுதியில் இடம்பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிய

கப்டன் சங்கரதாஸ் (தெய்வநாயகம் பிரபாகரன் - மட்டக்களப்பு)

ஜெசிக்குறு படையினரின் எறிகணைத் தாக்குதலில் மாங்குளத்தில் வீரச்சாவைத் தழுவிய

2ம் லெப்டினன்ட் ராஜன் (சுப்பிரமணியம் சந்திரன் - கண்டி)

திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவைத் தழுவிய

கப்டன் வசந்தன் (றம்போ) (நடராஜா மனோராஜன் - யாழ்ப்பாணம்)

ஆகியோரினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

புளியங்குளச் சமரில் காவியமான மாவீரர்களின் விபரம் வருமாறு

மேஜர் காவிரிநாடன் (றொசான்) (இராஜகுலேந்திரன் வாசகன் - யாழ்ப்பாணம்)

மேஜர் சௌதினி (துரைராஜா றோகினி - யாழ்ப்பாணம்)

கப்டன் சந்திரமதி (ரட்ணசாமி ஜெயலட்சுமி - வவுனியா)

கப்டன் தயாவதி (கணேசமூர்த்தி லலிதாதேவி - யாழ்ப்பாணம்)

கப்டன் வைதேகி (பொன்னழகன் இராசலட்சுமி - கிளிநொச்சி)

கப்டன் வேந்தினி (பூபதிராஜா கஸ்தூரி - முல்லைத்தீவு)

கப்டன் செந்தணல் (விநாசித்தம்பி அன்பரசி - யாழ்ப்பாணம்)

கப்டன் கௌரவன் (இராயகோபால் இராஜசேகர் - வவுனியா)

கப்டன் சந்தியா (கனகரட்ணம் செல்வகுமாரி - வவுனியா)

கப்டன் பாமகள் (கிருஸ்ணா ஜெனார்த்தனி - கிளிநொச்சி)

லெப்டினன்ட் சுபாங்கனி (மகேந்திரராசா கிருபாலினி - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் தாரணி (சுஜித்தா) (கண்ணையா விஜயகுமாரி - அவிசாவளை)

லெப்டினன்ட் அமுதநிலா (அமவாசி வக்சலாதேவி - கண்டி)

லெப்டினன்ட் அருச்சுனன் (துரைசிங்கம் ஜசிந்தராஜ் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வண்ணமலர் (வேலாயுதம் டெய்சினி - வவுனியா)

லெப்டினன்ட் ஈழநாயகி (யேசுதாசன் சசிகலா - வவுனியா)

லெப்டினன்ட் இளந்திரையன் (கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணதாசன் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் சந்திரவதனா (வல்லிபுரம் சந்திரகலா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வேட்பாளன் (கணேசன் நடேசன் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் சூரியலதா (செல்லத்துரை அருட்செல்வி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் முல்லை (பிரியா) (சுப்பிரமணியம் புவனேஸ்வரி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மன்னவன் (கிருஸ்ணபிள்ளை சாமுவேல் - அம்பாறை)

2ம் லெப்டினன்ட் பிருந்தா (வல்லிபுரம் சாரதா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் பாமினி (பாணுகா) (வேலுப்பிள்ளை கமலாதேவி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வசந்தி (பஞ்சலிங்கம் குகந்தினி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சின்னமணி (கந்தையா இராசலிங்கம் - வவுனியா)

2ம் லெப்டினன்ட் எழிற்கொடி (சுப்பிரமணியம் அமிர்தரஞ்சினி - வவுனியா)

2ம் லெப்டினன்ட் ஜோதி (அருமைத்துரை தர்மினி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் ஆடலரசன் (ஆறுமுகம் சுதர்சன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் குலேந்திரன் (செல்வநாயகம் விஜயராசா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கடலரசன் (கதிரவேலு சிவகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அமுதவீரன் (மலர்விழியன்) (பத்மநாதன் சுயதீபன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இராஜேஸ்வரன் (ராஜா ஜெயச்சந்திரன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை உமையாள் (குணமணி சுகந்தா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சிந்துஜா (கந்தசாமி ராஜி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை நளினி (சரவணமுத்து செல்வமலர் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்ச்செல்வி (அன்புமங்கை) (முனியாண்டி தமயந்தி - கண்டி)

வீரவேங்கை செந்தூரா (தங்கராசா சரஸ்வதி - திருகோணமலை)

வீரவேங்கை குறிஞ்சி (உலகநிலா) (வேலுப்பிள்ளை உமாரூபி - வவுனியா)

வீரவேங்கை அருணந்தி (கணேஸ் யோகமலர் - முல்லைத்தீவு)

வீரவேங்கை தமிழ்மொழி (தம்பிராசா சுபாஜினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மாங்கனி (வெள்ளைச்சாமி மாரியம்மா - கொழும்பு)

வீரவேங்கை விடிவுமகள் (முருகுப்பிள்ளை பர்மிலா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அன்புவிழி (இராமச்சந்திரன் ஜெயதீஸ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பாமதி (இராசலிங்கம நிர்மலாதேவி - மட்டக்களப்பு)

வீரவேங்கை சேந்தன் (வேந்தன்) (சந்திரசேகரம்பிள்ளை இராசேந்திரம் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஈகைச்செலவன் (பரமசிவம் உதயசீலன் - கிளிநொச்சி)

வீரவேங்கை சிவப்பிரியா (சீவரட்ணம் ஜெயந்தி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சுடர்நிலா (தமிழினி) (சக்திவேல் சுவர்ணாதேவி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை நல்லவள் (சின்னராசா சுகிர்தினி - முல்லைத்தீவு)

வீரவேங்கை அல்லி (கிருஸ்ணபிள்ளை சுமித்திரா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கயலழகி (உதயகுமாரி) (வடிவேல் தேவி - வவுனியா)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

animierte_kerze.gif

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4][size=4]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][size=4] [/size]

Posted

தாயக மீட்புக்காக தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Posted

வீரர்களே உங்களுக்கு என் வீர வணக்கங்கள்.. !

Posted

அனைத்து மாவீரர்களுக்கும் என் வீர வணக்கங்கள்.

Posted

[size=4]வன்னி மண்ணை இரண்டாக பிரிக்க சிங்களம் நடாத்திய ஆக்கிரமிப்பு போரை முறியடிக்க போராடி தம்மை அர்பணித்த மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!![/size]

Posted

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.