Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ விடுதலை அமைப்புகளின் சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்! - விகடனிடம் பழ.நெடுமாறன்..

Featured Replies

இதுதான் பிழை என்று நிருபிக்கத் தேவையற்ற விதத்தில் தலைப்பே படு அபாண்டமாக இருக்கிறது

உண்மையிலேயே கருணாநிதிதான் இயக்கங்களை பிளவுபடுத்தினாரா? பிளவு இருந்ததனாற்தானே கலைஞரும் எம்ஜிஆரும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இயக்கங்களை அழைத்ததாக நெடுமாறன் சொல்கிறார். 1984இல் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்களாம். அதற்கு முன்பு இயக்க மோதல்கள் (சகோதரச் சண்டை) இருக்கவில்லையா?

எல்லாம் இருந்ததே.

பல்வேறு காரணிகளைக் கொண்ட இயக்க மோதல்களுக்கு ஒட்டு மொத்தப் பழியையும் கலைஞர் மீது தூக்கிப் போடுவது நெடுமாறன் செய்கின்ற மூன்றாம்தர அரசியல்.

  • Replies 74
  • Views 4.5k
  • Created
  • Last Reply

அதற்கு பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாத அவர், 'விடுதலைப்புலிகள் நடத்திய சகோதரச் சண்டை காரணமாகத்தான் இந்த இனஅழிப்பு நடந்தது� என்று திரும்பத் திரும்பச் சொல்லித் திசை திருப்பப் பார்க்கிறார்.
-நெடுமாறன்

தலைப்பு:

ஈழ விடுதலை அமைப்புகளின் சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்! - விகடனிடம் பழ.நெடுமாறன்..

பிளவு இருந்ததனாற்தானே கலைஞரும்

இப்போது தெரிகிறது இவர்களுக்கு நெடுமாறன் மீது காழ்ப்புணர்வு மட்டுமல்ல அவரை குறைகூறுவது. இவர்கள் நெடுமாறனை கூறுவது தமிழை சரியாக வாசிக்க முடியாமையால்த்தான். ஆரம்பத்திலேயே தலைபை வாசித்து பிழை கண்டு பிடித்திருந்தால் அதில் ஒரு பொருள் இருந்திருக்கும். அன்று முதல் தடவை கருத்தை வாசித்து பேட்டியில் எதும் விளங்காததால் பேட்டியைபற்றி எதும் எழுதாமல் பேட்டிக்கு வெளியே சென்று "[size=4]பழ நெடுமாறன் தேர்தலில் நின்றவர்தான்.[/size][size=4] தற்பொழுது யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதனால் நிற்பதில்லை[/size][size=4]. " என்று குரோதம் மட்டும் எழுதினார்கள். இரண்டு[/size] நாளாக திரும்ப திரும்ப நெடுமாறன் பேச்சை வாசித்துப்பார்கிறார்கள் திரிக்கு கருத்தெழுத வென்று. ஆனால் பேட்டியில் இருக்கும் தமிழை இன்னமும் கிரகிக்க முடியவில்லை. இன்று திரும்ப வாசிக்க தொடங்கி தலைப்பை கிரகிக்க முயன்றபோது தலைப்பில் பிழை இருக்குமாப்போல் ஒரு பிரேமை மனத்தில் எழுகிறது.

இயகங்களுக்கிடையில் மட்டும் இல்லை அழகிரி-ஸ்ரலின் மாதிரி அண்ணன் தம்பிக்குமிழையில் பிளவு இருக்கலாம். இரண்டு ஒரு தேவைக்கு தோன்றிவிட்டாலே அதன் கருத்து அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருக்கிறது என்பதுதான். இதில் ஏதும் ஆச்சரியமில்லை. ஆச்சரியம் இதை கண்டு பிடித்து எழுத யாழில் PhD ஊடகவியலார் தேவைப்படுவதுதான். மேலும் அண்ணன் தம்பி தமது வேறுபாட்டை சொத்துபத்துக்கள் மூலம் கதைத்துக்கொள்வார்கள். அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் மேடைகளில் கதைத்துக்கொள்வார்கள். இயக்கங்கள் துவக்கை நீட்டித்தான் கதைக்க முடியும். இதை M.G.R. விரும்பவில்லை. கருணாநிதியும் ,M.G.R. ம் மற்றும் பலரும் இயக்கங்கள் பல இருந்ததையும், அவை அவற்றுக்கிடையில் பிளவுகள் அறிந்துதான் இருந்தார்கள்.

இதில் நெடுமாறன் சொல்ல வருவது.

[size=4]அவர் சொல்லும் சகோதரச் சண்டையை யார் தொடங்கி வைத்தது?[/size]

[size=4]1984-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ விடுதலைப் போராளிகள் அனை​வரும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அதற்காக, போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கமான அழைப்பையும் விடுத்தார். குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு அனைத்துப் போராளி இயக்கத் தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பினார்.[/size]

[size=4]எம்.ஜி.ஆரின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செயல்பட்டார். [/size][size=4]எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட நாளுக்கு முதல்நாளில் தன்னைச் சந்திக்கும்படி போராளிகளின் தலைவர்களுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்தார்.[/size]

[size=4]உண்மையிலேயே போராளிகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்திருக்குமானால். எம்.ஜி.ஆர். அழைப்பு விடுவதற்கு முன்னர் அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரின் அழைப்பு பற்றிய செய்தி வெளியானவுடன் போட்டிக்காக இவரும் ஒரு அழைப்பு விடுத்தாரே தவிர, உண்மையில் போராளிகளை ஒன்றுபடுத்தும் நோக்கம் இவருக்கு இல்லை.[/size]

[size=4]போராளிகள் அமைப்புகளை ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்தும் வேலையைத் தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்[/size]

நெடுமாறன் என்ன சொல்கிறார் என்பதை அறிய இதில் இருக்கும் முதல் வரியையும் கடைசி வரியையும் திரும்பத்திரும்ப படிக்க வேண்டும். பிழை பிடிப்பதற்காக் தலைப்பை மட்டும் திரும்பத்திரும்ப படித்து போதாது.

[size=4]போராளிகள் அமைப்புகளை ஒன்றுபட விடாமல் [/size][size=4]மேலும்[/size][size=4] பிளவுபடுத்தி சண்டைகளை தொடக்கி வைத்தவரே கருணாநிதிதான்.[/size]

[size=4]இயக்கங்கள் [/size]பிளவு பட்டிருந்ததை கண்டு M[size=4].G.R. யாரும் இயக்கங்களை அழைத்தார். அதேமாதிரி [/size]பிளவு பட்டிருந்ததை கண்டு கருணாநிதியும்[size=4] இயகங்களை அழைத்தார். ஆனால் மேலே நெடுமாறன் சொல்லியிருப்பது M.G.R இணைத்துவைக்க அழைத்தார். குள்ள நரி கருணாநிதி மேலும் பிரித்துவைத்து சண்டை பிடிக்க வைத்து அதில் குளிர்காய அழைத்தார் என்பதுதான். இதை விளங்கிக்கொள்ள ராகெட் சயன்ஸ் ஏதும் தேவை இல்லை. இரண்டு நாளாக தொடந்து படித்தும், இன்னம் தலைப்பு கடக்க முடியாமல் அவதிப்பட ஒன்றும் இதில் இல்லை. [/size]

Edited by மல்லையூரான்

சகோதரச் சண்டையால்தான் நாம் ஈழத்தில் அழிக்கப்பட்டோம் என்று கலைஞர் சொல்வதை நான் ஏற்கவில்லை. அழிவுக்கான பல காரணிகளில் இதுவும் ஒன்று. அதே போன்று கலைஞரால்தான் சகோதரச் சண்டை தொடங்கியது என்று பழநெடுமாறன் சொல்வதையும் நான் ஏற்கவில்லை.

வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளோடு மோதிய மற்றைய இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் பிளவினை வலுப்படுத்தினார் என்று சொன்னால் ஒரு தர்க்கத்திற்காக என்றாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அது கூட விவாதத்திற்கு உட்பட்டதே.

நெடுமாறனோ போகிற போக்கில் சகோதரச் சண்டையை தொடக்கி வைத்ததே கருணாநிதிதான் என்று சொல்லி, பல அக, புற, வரலாற்றுக் காரணங்களைக் கொண்ட இயக்க மோதல்களை திரித்து விட்டார்.

சுயவாசிப்புக்கு இயக்க மோதல்கள் பற்றிய நீண்ட ஆழமான ஆய்வுகள் அவசியம். எதிர்காலச் சந்ததி என்ன நடந்தது என்பதை சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும்.

நெடுமாறன் போன்றவர்கள் தருகின்ற இது மாதிரியான பேட்டிகள், உரைகள் வரலாற்றை திரிவுபடுத்தி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் இயக்க மோதல்கள பற்றி ஆய்வு செய்து என்னத்த செய்ய போறிங்க?

புலிகள் சகோதர யுத்தத்தில் ஈடுபட்டது தப்பு அப்பிடின புலிகள் இருக்கும் போதே அத நேரடியா விமர்சிச்சு இருக்கணும் இப்போ en சும்மா மக்களை போட்டு குழப்பிட்டு?

KP மாமா இலங்கையில இருந்து வரேக்க நல்ல assignment கொடுத்து தான் அனுப்பி இருக்கிறார் :D

புலிகள் இருக்கைக்க புலிகள ஆதரிச்சும் இப்போ இல்லாத நேரம் புலிகள் விட்ட பிழைகள சுட்டி காட்றம் என்ற போர்வையில புலிகள விமர்சிப்பதும் ஏனோ?

நாளை யாராவது தமிழீழத்திற்கு போராடப் புறப்பட்டால், அவர்களுக்கு நடந்தவைகள் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் வரலாற்றை சரியாக உள்வாங்கி விட்ட இடத்தில் இருந்து போராட்டத்தை மேலும் வலுவாக நடத்திச் செல்வார்கள்.

போராடுவதற்கு தயாராக இல்லாத நாம் எதற்கு இவற்றை ஆய்வு செய்ய வேண்டும்? எமக்கு இவைகள் தேவையில்லை. எதிர்காலச் சந்ததிக்குத்தான் தேவை. அதைத்தான் சொன்னேன்.

உண்மையான வரலாற்றை நாம் எழுதி வைத்தாலே போதும்.

மல்லையூரான், நீங்கள் எழுதிய கருத்தின் மீது நான் எழுதியதன் பிற்பாடு வேறு கருத்துக்களையும் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எடிட் செய்து கொண்டிருந்த பொழுது நான் எனது கருத்தை எழுதி விட்டேன் என்று நினைக்கிறேன். பரவாயில்லை.

தலைவரும் உமாமகேஸ்வரனும் தமிழ்நாடடில் ஆயுத மோதலில் ஈடுபட்டதற்கும் கருணாநிதியா காரணம்?

சுண்டல், இன்னும் ஒரு விடயம். நான் இங்கே எதிலும் விடுதலைப் புலிகளை விமர்சிக்கவில்லை. நீங்கள் கருத்தை சரியாக வாசியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி cool boss cool :D

பட் don't வொர்ரி அண்ணா மீண்டும் போராட வெளிகிட்டாலும் காட்டி கொடுக்கவும் கூட்டிக்கொடுக்கவும் ஒரு குரூப் வெளிக்கிடும்

சபேசன் , புலிகளை விடுங்கள். ஆயிரம் ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அது தெரிந்தும் ,தமிழ் நாட்டில் நடந்த போராட்டங்களை இந்திய மத்திய அரசின் பணிப்புக்களுக்கு ஏற்ப ஒடுக்கிய கருணானிதியை நியாயப்படுதுவது எங்கனம் சாத்தியப்படுகிறது? இதற்க்கு கருணாணிதி காரணம இல்லையா? இந்தியா வழங்கிய இராணுவ உதவிகள் ஆலோசனைகள் எங்களது போராட்டத்தை ஒடுக்குவதற்க்கு முக்கியமான காரணமாக இருக்கும் போது அதனை மறைப்பதற்காக தனது துரோகத்தை வரலாற்றில் இருந்து நீக்குவதற்காக கருணானிதி இவ்வாறான கருதுக்களைச் சொல்லி வருகிறார்.அவற்றை நெடுமாறன் எதிர்கொள்கிறார்.

இதில் சொல்லப்படுபனவற்றின் பின் புலம் வரலாற்று நியாயம் இவை எவை பற்றியும் நீங்கள் கருத்தில் கொள்ளவில்லையா?

இடையில் சிறிலங்கா சென்று டக்கிளசுடன் இணக்க அரசியல் செய்யப் போவதாகச் சொல்லி எழுதி இருந்தீர்கள் அதற்க்கு என்ன நடந்தது? ஏன் இப்படி அடிக்கடி தடம் புரளுகிறீர்கள்? ஓரழுவுக்கு சிந்திக்கத் தெரிந்தவர் என்றே உங்களை நினைத்திருந்தேன். எதாவது மனம் புண்படி எழுதி இருந்தால் மன்னிக்கவும்.

சீமான் மீதும் வைகோ மீதும் நெடுமாறன் மீதும் ஆயிரம் விமரிசனம் இருந்தாலும் அவர்கள் உண்மையானவர்கள்.ஆனால் கருணானிதியை போல் ஒரு மோசடி அரசியற் பேர்வழிக்கு நீங்கள் ஆதரவு தருவது சகிக்க முடியவில்லை. கருணானிதியின் அரசியலுக்கு முடிவு கட்டாமல் தமிழ் நாட்டில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது.அதற்கான தருணம் இது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல்வாதி எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு முன்னுதாரணம் மு.கருணாநிதி

[size=3]

karunanidhi.jpg

நாட்டுக்கும் வீட்டுக்கும் கூட உண்மையாக இல்லை. மூன்று தலைமுறையினரை, தமிழ் அறிஞர்களை, தமிழ் ஜனநாயகவாதிகளை காயடித்த பெருமை கொண்ட கருணாநிதி என்ற ஆளுமை. சமூகத்தில் தனி மனிதர் ஒருவர் எப்படி அரசியல்வாதியாக வளர்ச்சி பெற்று கடமை ஆற்றியுள்ளார், இந்த தனி மனிதர் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள வழித்தோன்றல்களும் பிழைப்புவாத அரசியலும் எவ்வாறு ஒரு சமூகத்தை படு பாதாளத்தில் தள்ளி இருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் கலைஞர் மு.கருணாநிதி.

தன் உடன்பிறப்புகள் மட்டும் அல்ல, தன் கட்சியும் கழகமும் கூட அல்ல, தமிழக அரசியலில், தமிழ் நாட்டில் தன்னை எதிர்த்து அரசியல் பணி புரிந்தோரையும், தமிழ் நாட்டில் உள்ள பிற அரசியல் கட்சியினரையும் கூட எவ்வாறு பிழைப்புவாதம் மட்டுமே கொண்ட கட்சிகளாக, அரசியல் எழுச்சியாக மாற்றி உள்ளார் மு.க. என்ற தனி நபர். இந்திய தேசியத்தில் மட்டும் நிற்கவில்லை இவரின் பிழைப்புவாத அரசியல், அண்டை நாட்டில் உள்ள சிறு தமிழ் இனத்தை அழித்த பெருமையும் டாக்டர் மு.க.வுக்கு உண்டு.

இவையெல்லாம் போதாது என்று, ஜனநாயக முறையிலான ஆட்சி அமைப்பையே, வாக்குக்கு பணம் என்று இந்திய அரசியலையே பண விநியோக அடிப்படையிலான அரசாக ஆட்சியாக மாற்றத் துடித்தவர். எல்லாவற்றிற்கும் எல்லா தவறுகளுக்கும் விளக்கம், சமுக அற நெறிகளை கேலி கிண்டல் செய்யும் தமிழ் சமூகமாக மாற்றியவர். எப்படியும் வாழலாம், தவறுகள் யார் தான் செய்யவில்லை என்று நியாயப்படுத்தியவர். ஆரியர்களும் பார்ப்பன பனியாக்களும் செய்யத் துணியாத செயல்கள் இவைகள். மூன்று தலைமுறை தமிழ் அறிவாளிகளை, அறிஞர்களை தனது அரசியலை ஏற்றுக் கொள்ளச் செய்தவர். தமிழன் என்றால் அவன் இந்திரலோகத்திலும் மந்திரலோகதிலும் வாழும் ஒரு இனம் என்று கருத வைத்தவர். வேறு வழியே இல்லாமல் தமிழ் இனம் சாதிவழியே தன்னை புதுப்பித்துக் கொள்ள வைத்தவர்.

இன்று உடன்பிறப்புக்கு கடிதம் மூலம் கனிமொழி தவறு செய்யவில்லை என்று விளக்கம் கூறி இருக்கிறார். திருட்டு ரயில் எறி சென்னை வந்தேன் என்ற தனது ஒப்புதல் வாக்குமூலத்தை இந்த கடிதம் மூலம் மாற்ற முயன்றிருக்கிறார். இவ்வாறு கூறுகிறார்.

இந்தியாவிலேயே அல்லது தமிழ்நாட்டிலேயே அதிகார செல்வாக்கைப் பெருக்கி - " ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, லட்சம் கோடி சம்பாதித்து மூட்டைகளாகக் கட்டி வைத்திருக்கிற குடும்பம், கருணாநிதியின் குடும்பம் " என்று தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தவர்கள், மழை விட்டும் தூறல் விடவில்லை என்பதைப் போல, இப்போதும் கூட அந்த பிரசாரத்தை ஏடுகள் வாயிலாக, ஏனைய ஊடகங்களின் வாயிலாக கூறிக் கொண்டிருக்கிறார்களே, அவற்றை பொய்யுரை என்றும், புனைந்துரை என்றும், புளுகு மாயப்புளுதி மாயம் என்றும், என் தமிழ் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக சிலவற்றைத் தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன் என்று ஆராம்பிக்கிறார் தனது வசனத்தை.

அதிகார செல்வாக்கு என்பதும் பொய், ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, லட்சம் கோடி என்பதும் பொய், கருணாநிதி குடும்பம் என்பது பொய் என்று எவ்வளவு துணிச்சலாக சொல்கிறார் பாருங்கள், அந்த அளவிற்கு தமிழ் இனத்தை, தமிழ் மக்களை 'மொன்னை கிறுக்குகள்' கூட்டம் என்று நினைத்துள்ளார்.

14 வயதில் அரசியலுக்குள் புகுந்து 87 வயதிலும் நடை வண்டியில் அரசியல் பணி செய்து வருகிறேன் என்கிறார். ஐந்து முறை முதலமைச்சர், 12 முறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் அதுதான் எம்.எல்.ஏ. ஆக்கியும் பொன்விழாக்கள், பவள விழாக்கள் கொண்டாடியும் கூட, இலக்கிய வேந்தர், கலை வேந்தர் என வேந்தர் பட்டங்களை பெற்றாலும் கூட, வேண நிலங்களுக்கு சொந்தக்காரன் என்றோ, வான்தொடும் மாளிகைகளுக்கு உரிமையாளன் என்றோ, அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக்கொள்ள நினைத்ததும் இல்லை, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை, அவற்றைத் தேடிக்கொள்ள திருட்டு வழியை தேடிக் கொண்டவனுமில்லை.

கனிமொழி கைது பற்றி நிருபர்கள் கேள்வி கேட்கிறார்கள், உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்திற்கு கைது செய்யப்பட்டால் உங்கள் இதயம் எப்படி இருக்குமோ..? அப்படி உள்ளது என் இதயம் என்று சொல்லி இருக்கிறார், அந்த மானங்கெட்ட நிருபர்களும் பேசாமால் வாயை மூடிக்கொண்டு வந்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட உனது மகளை பற்றிக் கேட்டால் எனது மகளையா சொல்கிறாய் என்று செருப்புகளை கழட்டி இருக்க வேண்டாமா...? இந்திய நாட்டின் வளங்களை கொள்ளை அடிப்பீர்கள், நாட்டு மக்களின் வளங்களை கொள்ளை அடிப்பீர்கள், கேட்டால் செய்யாத குற்றம் என்றால் என்ன...? என்று அங்கேயே சொல்லி இருக்க வேண்டாமா..? நிருபர்கள். எங்களுக்கு இப்படி ஒரு மகள் இருந்தால் கிணற்றில் தள்ளி கொன்றிருப்போம் என்று.

மகிந்தா ராஜபக்சே பார்த்து கைகுலுக்கி விட்டு வந்து, அங்கு முகாம்களே இல்லை என்று சொன்னவர் கனிமொழி. இப்படிப்பட்ட மகள் எங்களுக்கு இருந்தால் சங்கை அறுத்து கொன்றிருப்போம் என்று சொல்ல வேண்டாமா..? வாய் மூடி மௌனியாக இருந்திருக்கிறார்கள் நிருபர்கள், ஒருவேளை கருணாநிதியின் நிருபர்களாக இருந்திருப்பார்கள் அவர்கள். ஒன்று இரண்டு ஊடகங்களா வைத்திருக்கிறார்கள். இருக்கும் அணைத்து ஊடகங்களையும் வைத்துக் கொண்டு நான் தமிழ் இனத்திற்கு வாழ்வு கொடுத்த தலைவன் என்று அல்லவா சொல்கிறார் இந்த மு.க.

இப்படியே நிறைய சொல்ல முடியும் மு.கருணாநிதியைப் பற்றி, கருணாநிதியின் தமிழ் இன அழிப்பு பற்றி, கருணாநிதியின் பிழைப்புவாதம் பற்றி, கருணாநிதியின் கழக உடன்பிறப்புகள் கிட்டத்தட்ட குட்டி கருணாநிதிகளாக மாறிப்போய் உள்ளதை பற்றி சொல்லிக்கொண்டே போக முடியும். தமிழகம் எங்கும் பார்க்கலாம். தமிழன், தமிழ்மொழி, ஈழம் என்று சொல்பவர்கள் மீது கழக உடன்பிறப்புகள் சோடா பாட்டில்களையும் உருட்டுக் கட்டைகளையும் தூக்கிக் கொண்டு பாய்வதை இன்று தமிழகம் எங்கும் பார்க்கலாம்.

தயாளு அம்மாள், கனிமொழி மற்றும் தன் சொத்து விபரங்களை தந்திரமாக வெளியிடும் கருணாநிதி, அழகிரி, மு.க. ஸ்டாலின் செல்வி என்று தொடங்கி மாறன் வகையறா வரைக்கும் ஆன சொத்துக்களை கூறவில்லை. மு.க. வுக்கு தெரியாமல் கழக உடன்பிறப்புகள் சொத்துக்கள் வைத்திருந்தால் கூட கண்டுபிடித்து பறிமுதல் செய்து விடும் மு.க. தனக்கு ஒரு கோடி ரூபாய் தான் சொத்து உள்ளது என்று சொல்கிறார். என்ன சொன்ன போதிலும் தமிழக மக்கள் இம்முறை மிக நன்றாக உணர்ந்து உள்ளனர். மு.க. குடும்பம் கொள்ளைக்கூட்ட குடும்பம் என்று, ஊழல் என்ன ஊழல்..? நாட்டையே சூறையாடிய குடும்பம் என்று, எனவே மு.க. வின் உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகளை சொல்லி நிறைவு செய்வோம்.

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள போதிலும்கூட, அத்துடன் நிம்மதி அடையாது, நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இருவண்ணக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி - புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என்று அதுவும் ' தர்ப்பைப் புல்' முளைத்த இடமாகப் போக வேண்டுமென்று குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரையிலே உள்ளவர்கள் தவம் கிடக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. எப்படி கூறியிருக்கிறார் நடப்பை என்று பாருங்கள்.

இந்த லட்சணத்தில் காங்கிரஸ் பெருச்சாளிகள் இரண்டு ஆண்டுகளை முடித்து, மூன்றாவது ஆண்டில் கால் எடுத்து வைப்பதற்கு விழா எடுக்கிறார்கள் , அந்த விழாவிற்கு செல்ல விரும்பாமல், மகள் கனிமொழியை திகார் சிறையில் பார்த்து விட்டு, மறுநாள் யாருக்கும் தெரியாமல் சோனியா அம்மையாரின் காலை பிடித்துக் கொண்டு கதறி அழுதாவது தயாளு அம்மையார் சிறைக்குப் போவதை தடுத்து விடலாம் என்று மனக்கணக்கு போட்டு நடை வண்டியிலேயே டில்லி சென்று உள்ளார் திராவிடன் டாக்டர். மு.கருணாநிதி.

இரண்டாவது ஆண்டின் சிறப்பை விளக்கி விட்டு, சோனியா + மன்மோகன் சிங் கூட்டாக அறிக்கை விட்டார்கள். இந்தியாவில் ஊழல்வாதிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று. யாரை யார் ஊழல்வாதிகள் என்று சொல்கிறார்கள்..? அல்லது காற்று வெளியில் கத்தியை சுழற்றுகிறார்களா.அல்லது திராவிட போர்வாள் மு.கருணாநிதி குடும்பத்தை சுற்றிலும் வேலி அடைத்து, அந்த வேலிக்குள் இருக்கும் அனைவரும் ஊழல்வாதிகள் என்று சொல்லிவிட துடித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் பெருச்சாளிகள் என்றால் மிகை இல்லை எனலாம்.

சங்கிலிக்கருப்பு[/size][size=3]

http://suthumaathukal.blogspot.ca/2011/05/blog-post_980.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழப்போராட்டத்தை நன்கு உணர்ந்த பழ நெடுமாறன் ஐயா அவர்களுக்கு அன்றைய காலத்து கருணாநிதியின் நயவஞ்சகத்தனம் நன்கு தெரியும் இவரின் கபடநோக்கம் சூழ்ச்சி எல்லாம் அறிந்தவர் நெடுமாறன் ஐயா அவரிடம் கலைஞரின் இந்தநாடகம் பலிக்காது

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரச் சண்டையால்தான் நாம் ஈழத்தில் அழிக்கப்பட்டோம் என்று கலைஞர் சொல்வதை நான் ஏற்கவில்லை. அழிவுக்கான பல காரணிகளில் இதுவும் ஒன்று. அதே போன்று கலைஞரால்தான் சகோதரச் சண்டை தொடங்கியது என்று பழநெடுமாறன் சொல்வதையும் நான் ஏற்கவில்லை.

வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளோடு மோதிய மற்றைய இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் பிளவினை வலுப்படுத்தினார் என்று சொன்னால் ஒரு தர்க்கத்திற்காக என்றாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அது கூட விவாதத்திற்கு உட்பட்டதே.

நெடுமாறனோ போகிற போக்கில் சகோதரச் சண்டையை தொடக்கி வைத்ததே கருணாநிதிதான் என்று சொல்லி, பல அக, புற, வரலாற்றுக் காரணங்களைக் கொண்ட இயக்க மோதல்களை திரித்து விட்டார்.

சுயவாசிப்புக்கு இயக்க மோதல்கள் பற்றிய நீண்ட ஆழமான ஆய்வுகள் அவசியம். எதிர்காலச் சந்ததி என்ன நடந்தது என்பதை சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும்.

நெடுமாறன் போன்றவர்கள் தருகின்ற இது மாதிரியான பேட்டிகள், உரைகள் வரலாற்றை திரிவுபடுத்தி விடும்.

ஆனா இதை நீங்களோ அல்லது தோழரோ எழுதிப்போடதீங்கோ :(

நாரதர்,

உங்களுக்கும் என்னுடைய கருத்துக்கள் விளங்கவில்லை என்பது ஆச்சரியத்தை தருகிறது. ஒரு கருத்தை எந்த இடத்தில் எந்தச் சந்தர்ப்பத்தில், எந்த நொக்கத்தில் சொல்கிறோம் என்பது முக்கியம் அல்லவா?

யுத்தம் முடிந்த சில நாட்களில் புலம்பெயர் மக்கள் மீது பலரின் பார்வை திரும்பி இருந்த பொழுது, இங்கே அமைப்புக்கள் தமக்குள் மோதுப்பட்டு பிளவுபட்டு நின்ற நேரத்தில், இப்படியே நிலைமை தொடர்ந்தால் நான் டக்ளஸிடம் போய் சேர்ந்து விடுகிறேன் என்று ஒரு கருத்தை வைத்தேன்.

இதை நான் ஒரு கோபத்தில் சொன்னேன். ஆனால் இன்றைக்கும் பலர் இங்கே நடக்கின்ற பிளவுகளால், விரக்தியுற்று, இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் கொழும்பு சென்று சிறிலங்கா அரசுடன் சமரசம் செய்து வருவரை நாம் பார்க்கிறோம்.

மற்றது, கருணாநிதி நல்லவர் என்றோ, நேர்மையானவர் என்றோ நான் எங்கும் கருத்துக்களை வைக்கவில்லை. அவரை நம்பும்படியும் நான் கோரவில்லை. அவரை எமக்கு ஏற்றபடி நாம் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்களை தவற விட வேண்டாம் என்றே கேட்கின்றேன்.

அத்துடன் இங்கே அர்ஜுன் சொல்வது போன்று நெடுமாறன் எமது போராட்டத்தை வைத்து வியாபாரம் செய்தார் என்று எல்லாம் நான் சொல்லவில்லை. அவர் அப்படியானவர் என்றும் நான் நம்பவில்லை.

ஆனால் அவருடைய அண்மைய பேச்சுக்கள் கருணாநிதியை தாக்குவதில்தான் நிற்கின்றது. மாறி மாறி குற்றம் சாட்டி விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக்குவதை நெடுமாறன் ஊக்குவிக்கத் தேவையில்லை.

Edited by சபேசன்

நாரதர்,

உங்களுக்கும் என்னுடைய கருத்துக்கள் விளங்கவில்லை என்பது ஆச்சரியத்தை தருகிறது. ஒரு கருத்தை எந்த இடத்தில் எந்தச் சந்தர்ப்பத்தில், எந்த நொக்கத்தில் சொல்கிறோம் என்பது முக்கியம் அல்லவா?

யுத்தம் முடிந்த சில நாட்களில் புலம்பெயர் மக்கள் மீது பலரின் பார்வை திரும்பி இருந்த பொழுது, இங்கே அமைப்புக்கள் தமக்குள் மோதுப்பட்டு பிளவுபட்டு நின்ற நேரத்தில், இப்படியே நிலைமை தொடர்ந்தால் நான் டக்ளஸிடம் போய் சேர்ந்து விடுகிறேன் என்று ஒரு கருத்தை வைத்தேன்.

இதை நான் ஒரு கோபத்தில் சொன்னேன். ஆனால் இன்றைக்கும் பலர் இங்கே நடக்கின்ற பிளவுகளால், விரக்தியுற்று, இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் கொழும்பு சென்று சிறிலங்கா அரசுடன் சமரசம் செய்து வருவரை நாம் பார்க்கிறோம்.

ஒரு ஆளுமை உள்ள தலமை உருவாகும் வரை இவ்வாறு தான் இருக்கும்.சிந்திக்கக் கூடிய அரசியல் தெளிவுள்ளவர்கள் அவ்வாறான ஒரு தலமை உருவாக்கத்தில் பங்களிப்பார்கள் அன்றி ஊசலாட்டமான கருத்துக்களை முன் வைக்க மாட்டார்கள். மேலும் நீங்களும் கொழும்பு சென்று வந்தன் பின் இனி இணக்க அரசியல் தான் சாத்தியம் என்று எழுதியதாக நாபகம்.இது பிழையெனில் உங்களது தற்போதைய நிலையைத் தெளிவு படுத்தவும்.

மற்றது, கருணாநிதி நல்லவர் என்றோ, நேர்மையானவர் என்றோ நான் எங்கும் கருத்துக்களை வைக்கவில்லை. அவரை நம்பும்படியும் நான் கோரவில்லை. அவரை எமக்கு ஏற்றபடி நாம் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்களை தவற விட வேண்டாம் என்றே கேட்கின்றேன்.

அத்துடன் இங்கே அர்ஜுன் சொல்வது போன்று நெடுமாறன் எமது போராட்டத்தை வைத்து வியாபாரம் செய்தார் என்று எல்லாம் நான் சொல்லவில்லை. அவர் அப்படியானவர் என்றும் நான் நம்பவில்லை.

ஆனால் அவருடைய அண்மைய பேச்சுக்கள் கருணாநிதியை தாக்குவதில்தான் நிற்கின்றது. மாறி மாறி குற்றம் சாட்டி விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக்குவதை நெடுமாறன் ஊக்குவிக்கத் தேவையில்லை.

இன்று தமிழ் நாட்டில் எழுந்து இருக்கும் ஈழத்தமிழர் ஆதரவு அலையை தமக்கு ஏற்பட்ட அரசியற் சரிவை நிவர்த்தி செய்ய மட்டுமே கருணானிதி பயன் படுதுகிறார்.அடுத்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவர் மீண்டும் தனது உழைப்பை பார்க்கப் போய்விடுவார்.இதன் மூலம் எமக்கு எதுவித பயனும் இல்லை.

மாற்றாக எமக்கு ஆதரவான சக்திகள் இருக்கும் ஆதரவை வைத்து தம்மை அரசியல் ரீதியாக பலப்படுத்த வேண்டும்.இதன் மூலம் மட்டுமே நாம் பயன் பெற முடியும்.அதனால் தான் எல்லா உலகத் தமிழ் அமைப்புக்களும் கூட்டமைப்பும் அவரின் டெசோ நாடகத்தைப் பகீஸ்கரித்தன.கருணானிதியயை அம்பலப்படுதுவதன் மூலமும், அவரின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதன் மூலமும் மட்டுமே , எமக்கு ஆதரவான சக்திகள் தமிழ் நாட்டில் பலம் பெற முடியும்.அதனை அச் சக்திகளே செய்வார்கள்.இதில் கருணானிதிக்கு ஆதரவு தந்து நாம் அவருக்கு மறு வாழ்வு அழிக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

1980ம் ஆண்டுத் தேர்தல் அதிமுக கூட்டணி (எம்.ஜீ.ஆர் தலைமை) 162 இடங்களைப் பிடித்தது.(அதிமுக 129 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி 11 இடங்கள், இந்திய கம்னியுஸ்ட் கட்சி 9 இடங்கள்)திமுக கூட்டணி 69 இடங்களைப் பிடித்தது( 37 திமுக, 31 இந்தியா காங்கிரஸ்). மத்திய மதுரை தொகுதியில் நெடுமாறன் 58.13% வீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பழனிவேல் ராஜன் (திமுக கூட்டணி) 40.15 வீத வாக்குகளைப் பெற்றார்.

1984ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி 195 இடங்களைப் பிடித்தது (அதிமுக 132, காங்கிரஸ் 61 இடங்கள்) திமுக கூட்டணி 34 இடங்கள் (திமுக 24,மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி 5 இடங்கள்) மத்திய மதுரையில் இந்தியக்காங்கிரஸ் கட்சி தேவநாயகம் 50.76 வாக்குகளைப் பெற அவரை எதிர்த்து நெடுமாறன் தமிழ் நாட்டுக்காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 47.98 வாக்குகளைப் பெற்றார்.

Edited by கந்தப்பு

ஆனால் அவருடைய அண்மைய பேச்சுக்கள் கருணாநிதியை தாக்குவதில்தான் நிற்கின்றது. மாறி மாறி குற்றம் சாட்டி விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக்குவதை நெடுமாறன் ஊக்குவிக்கத் தேவையில்லை.

அதுக்கு நெடுமாறன் அண்ணையை குறை கூறி பயன் இல்லை... அவர் தீவிரமாக நம்பும் ஒருவிடயம், அவருக்கு மிகவும் நம்பிக்கையானவர்கள் கூறிய விடயத்தை அவர் நம்புவதிலும் வெளியில் சொல்வதிலும் என்ன தவறு....???

இதேவிடயத்தை தானே சீமானும் சொன்னார்... எனக்கு நம்பிக்கையானவர்கள் தலைவர் இறந்து விட்டார் என்பதை எனக்கு உறுதிப்படுத்தவில்லை அதனால் நான் அதை நம்பவில்லை எண்று...

ஒருவேளை சிங்கள அரசாங்கமும், கருணாவும் சொல்லுறதுகள் மட்டும் தான் உங்களுக்கு கூட உண்மையாக தெரியுதோ என்னவோ...?? அப்பிடிப்பாத்தால் அவர்கள் மட்டும் தான் நம்பிக்கையானவையோ...???

நெடுமாறன் அண்ணை எப்போதும் நான் தலைவரோடை கதைச்சனான். அவர் எங்கை இருக்கிறார் எண்று தெரியும் அவர் வருவார் எண்டு சொல்ல இல்லை.. அவர் வருவார் எண்று நம்பிகை வெளிப்படுத்துறார்.... அவ்வளவுதான்.. பெரிய பகுத்தறிவு வாதிகள் எண்டுறீயள் இதைக்கூட பகுத்தறிய தெரியாமல்...

சரி தலைவர் இறந்து விட்டதை எந்தவகையான அமைப்புக்கள் நாடுகள் ஊடகங்கள் உறுதிப்படுத்தினது எண்டு ஒருக்க சொல்லுங்கோ...???

தயாவை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவசரமாக வெளியில் செல்ல வேண்டும். வந்து உங்கள் கருத்துக்கு பதில் சொல்கிறேன்.

இது நெடுமாறன் அறிக்கைக்கான கலைஞரின் பதில்:

கடந்த 1984ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர்., ஈழ விடுதலைப் போராளிகள் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்று கூறியதாகவும், நான் (கருணாநிதி) அந்த முயற்சியை முறியடிக்கும் செயலிலே ஈடுபட்டேன் என்றும் தற்போது நெடுமாறன் கட்டுரை எழுதியிருக்கிறார்.

உண்மையில் சகோதர யுத்தத்தைத் தூண்டிவிட்டது பழ.நெடுமாறன் போன்றோர்தான். இதனைப் போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களே நன்கு உணர்வர். நெடுமாறன் வாதப்படி ஈழப் போராளிகள் இயக்கங்களை நான் தான் தூண்டிவிட்டேன் என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொள்கிறேன்

1985ஆம் ஆண்டு மே திங்களில் என் தலைமை யில் உருவான டெசோ அமைப்பில் இந்த நெடுமாறன் ஏன் ஒரு முக்கிய உறுப்பினராகச் சேர்ந்தார்? டெசோ... அமைப்பின் சார்பில் கோவை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் என்னுடன் எதற்காக நெடுமாறன் கலந்து கொண் டார்? கடைசியாக நடைபெற்ற வேலூர் பேரணியில் நெடுமாறன் கலந்து கொள்ளாமல் யாருக்கும் தெரியாமல் இலங்கை சென்ற போது, 10 -10 -1985 தேதியிட்டு எனக்கொரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், டெசோ இயக்கத்தை மேலும் வளருங்கள். ஏனெனில் தமிழீழம் காணப் போராடும் விடுதலைப் போராளிகளுக்கும் மக்களுக்கும் நமது டெசோ இயக்கத்தைத் தவிர உற்ற துணைவன் , உண்மையான துணைவன் வேறு யாருமில்லை என்று எழுதிய கை நெடுமாறன் கை தானே?

ஈழப் போராளிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர். ஈடுபட்டார் என்றால், நெடுமாறன் எனக்கு எழுதிய கடிதம் கற்பனையானதா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரசர் குளிசை போட்டே நான் போய்சேர்ந்த்டிடுவன் போல இருக்கே .

.......

உண்மையில் சகோதர யுத்தத்தைத் தூண்டிவிட்டது பழ.நெடுமாறன் போன்றோர்தான். இதனைப் போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களே நன்கு உணர்வர். நெடுமாறன் வாதப்படி ஈழப் போராளிகள் இயக்கங்களை நான் தான் தூண்டிவிட்டேன் என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொள்கிறேன்

........

.........

........

ஏனெனில் தமிழீழம் காணப் போராடும் விடுதலைப் போராளிகளுக்கும் மக்களுக்கும் நமது டெசோ இயக்கத்தைத் தவிர உற்ற துணைவன் , உண்மையான துணைவன் வேறு யாருமில்லை என்று எழுதிய கை நெடுமாறன் கை தானே?

ஈழப் போராளிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர். ஈடுபட்டார் என்றால், நெடுமாறன் எனக்கு எழுதிய கடிதம் கற்பனையானதா?

அறளை பேர்ந்த கருணாநிதி செய்வது, பேசுவது விளங்காமல் செய்கிறார். M.G.R சமாதான கூட்டம் கூட்ட தானும் கூட்டி அதை கெடுத்தார். நெடுமாறன் அதனால் பிளவை வளர்த்து சண்டையை தூண்டினார் என்று குற்றம் சாட்ட தானும் நெடுமாறனை திருப்பி சாட்டினார். நெடுமாறன் எப்படி சகோதர சண்டையை தூண்டினார் என்றால் அன்றைய டெசோவை(இன்றைய டெசோவை அல்ல) ஆதாதரித்து கடிதம் எழுதியதால். ஏன்? கருணாநிதியின் கருத்து இன்றைய டெசோ அல்ல அன்றைய டெசோவும் கூட ஈழவிடுதலையை கெடுத்து தமிழகத்தில் அரசியல் செய்ய என்ற சின்னத்தனத்தில்தான் கூட்டப்பட்டதென்கிறாரா? அதை நெடுமாறனும் தெரிந்துதான் வைத்திருந்து கொண்டுதா டெசோவை வளர்க்க வேண்டும் என்றாரா? .. அடபாவி! அந்த டெசோவை ஆதரித்து கடிதம் எழுதுபவனையே சகோதர யுத்தத்தை தூண்டியவன் என்றால் அந்த டெசோவயையே திட்டமிட்டு நடத்திய குள்ளநரி எப்பேற்பட்ட சிண்டுமுடிதல் தந்திரி என்பதை சொல்லவும் வேண்டுமா?

பி.கு:

V.நவரத்தினம் எத்தனை தேர்தல்களிலும் தோற்றிருக்கலாம். துணிச்சலுடன்வடக்கு கிழக்கில் சுயாட்சி என்று கூறிய முதல் மனிதன் அவர். தேர்த்லை மட்டும் வைத்து திறமையையை, நேர்மையை அளவிடமுடியாது. V.நவரத்தினது சிந்தனை ஆற்றலிற்கு சரியாக யாரும் இன்னும் வரவில்லை.

Edited by மல்லையூரான்

கருணாநிதி அந்த மாதிரி பதில் கொடுத்திருக்கின்றார் .நெடுமாறன் தேர்தலில் தோற்று பின் ஒரு கட்டத்தில் கட்டுக்காசும் எடுக்காத பேர்வழி .

அதன் பின் தான் ஈழவிடுதலை அரசியலை வியாபாரமாக தொடங்கினார்.

இங்கு பலருக்கு விடிந்ததும் தெரியாது பொழுது பட்டதும் தெரியாது தலைவரோடு நின்று எடுத்த படம் இருந்தால் காணும் என்ற நிலை .

தமிழ் நாட்டில் எமது போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பும் பின்னர் எல்லாம் தலை கீழாக மாறியதும் முட்டாள் பேர்வழிகள சிலரால் தான் .

நெடுமாறனுக்கு என்ன நம்பிக்கையும் இருக்கலாம் அதற்கு மற்றவனை முட்டாளாக வெளிக்கிடகூடாது.தமிழ் நாட்டில் மட்டும் இல்லை புலம் பெயர்ந்தும் ஒரு பெரிய முட்டாள் கூட்டம் இருக்கு என்று அந்த ஆள் கண்டு பிடித்து கனகாலம் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியிலாவது

அதிமுக

திமுக

எனும் இரு வல்லரசுகளுக்கிடையே

தமது இலட்சியக்கனவுக்கான அவர்களது ஆதரவை பெறுவதற்காக புலிகள் எவ்வாறெல்லாம் போராடினார்கள் என்ற வரலாற்றை அர்யூன் பதிவார் என எதிர்பார்த்து காத்திருந்தேன்.

மீண்டும் மீண்டும் ஏமாற்றம்.

அதே புளித்துப்போன புலி வாந்தி. :( :( :(

Edited by விசுகு

இந்த திரியிலாவது

அதிமுக

திமுக

எனும் இரு வல்லரசுகளுக்கிடையே

தமது இலட்சியக்கனவுக்கான அவர்களது ஆதரவை பெறுவதற்காக புலிகள் எவ்வாறெல்லாம் போராடினார்கள் என்ற வரலாற்றை அர்யூன் பதிவார் என எதிர்பார்த்து காத்திருந்தேன்.

மீண்டும் மீண்டும் ஏமாற்றம்.

அதே புளித்துப்போன புலி வாந்தி. :( :( :(

என்ன நடந்தது என்ற சில விடயங்கள் தெரியாமல் இருக்கலாம் ,ஒன்றுமே தெரியாமல் இருக்கின்றீர்கள் போல கிடக்கு .

அதற்குள் வந்து எல்லாம் தெரிந்தது போல் பின்னூட்டம் வேறு .கடைசி அடேலின் சுதந்தர வேட்கையை ஆவது வாசித்திருக்கலாம் (தமிழிலும் இருக்கு )

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது என்ற சில விடயங்கள் தெரியாமல் இருக்கலாம் ,ஒன்றுமே தெரியாமல் இருக்கின்றீர்கள் போல கிடக்கு .

அதற்குள் வந்து எல்லாம் தெரிந்தது போல் பின்னூட்டம் வேறு .கடைசி அடேலின் சுதந்தர வேட்கையை ஆவது வாசித்திருக்கலாம் (தமிழிலும் இருக்கு )

உங்களுடைய கருத்தை (அந்தக்காலத்தில் அங்கு இருந்ததாக சொன்னதால்) எதிர்பார்த்ததற்கு நல்ல பதில். திருப்தியடைந்தேன். நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறனுக்கு என்ன நம்பிக்கையும் இருக்கலாம் அதற்கு மற்றவனை முட்டாளாக வெளிக்கிடகூடாது.தமிழ் நாட்டில் மட்டும் இல்லை புலம் பெயர்ந்தும் ஒரு பெரிய முட்டாள் கூட்டம் இருக்கு என்று அந்த ஆள் கண்டு பிடித்து கனகாலம் .

அவர்கள் தான் முட்டாள் போகட்டும். நீங்கள் அறிவுசாலிகள்.. மாற்றுக்கருத்து என்று பேச வெளிக்கிட்டு.. புலி வாந்தி எடுத்து.. கடந்த 35 வருடமா சாதித்தது என்ன..?????!

அவர்களை விட நீங்கள் முழு முட்டாள்கள். அவர்களாவது இனம் ஒன்று வாழ்கின்றது என்ற அடையாளத்தை தக்க வைச்சுக் கொண்டு கதைக்கிறார்கள்.. நீங்களோ.. சொந்த இனத்தை அடையாளத்தை எதிரிகளுக்கு காட்டிக்கொடுத்து எதிரியினதாக்கி கேவலம் கேட்ட அடிமை வாழ்வு வாழ்கிறீர்கள்..! உங்களுக்கு நீங்கள் செய்வது அதிபுத்திசாலித்தனமாகவே தெரியும்.

நெடுமாறன் ஐயா தீவிர அரசியல்வாதியல்ல..! பெரியார் பெரியார்.. தமிழகத்தின் தந்தை என்று முழங்கும் தூய பெரியார் கழகங்கள் தேர்தலில் கூட நின்றதில்லை. அதை விட.. நெடுமாறன் ஐயா பறுவாயில்லை. நடிகர் திலகம் என்று பெயர் பெற்ற சிவாஜி கணேசன்.. தேர்தலில் நின்று படுதோல்வி கண்டார்..!

இன்றைய நிலவரப்படி.. தமிழக மக்களின் அறியாமை.. சினிமா மோகம்.. வறுமை.. சாதியம் இவற்றில் நன்கு ஊறக் கூடிய கட்சிகள் தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். நெடுமாறன் ஐயா போன்ற அறிவாளிகள் அங்கு ஆட்சியமைக்க முடியாது..! கருணாநிதி.. தனக்காக ஆட்சியமைப்பவர். நெடுமாறன் கொள்கைக்காக வாழ விளையும் மனிதர்கள். கொள்கையாளர்கள் தோற்றது தான் அதிகம்.. வென்றதிலும்..! அதற்காக அவர்களை முட்டாள் என்று நினைப்பவர்கள் தான் முழு முட்டாள்கள்..! :icon_idea:

எனக்கு விளங்கிய வகையில் கலைஞர் என்ன சொல்கிறார் என்றால்,

அன்றைக்கு இயக்க மோதல்கள் ஆரம்பித்த பொழுது, தமிழ்நாட்டின் பெரும்பான்மையான கட்சிகளும், அமைப்புக்களும் நடுநிலை வகித்தோ, அல்லது தோற்றுக் கொண்டிருந்த இயக்கத்திற்கு அனுதாபத்தை தெரிவித்தோ அவற்றின் மூலம் இயக்க மோதல்களை முடிவுக்க கொண்டு வரும்படி அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருந்த போது, நெடுமாறன் போன்றவர்கள் சண்டைகளில் கையோங்கியிருந்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தந்ததன் ஊடாக, இயக்க மோதல்கள் தொடர்வதை ஊக்குவித்தார் என்கிறார்.

அத்துடன் 84ஆம் ஆண்டிலேயே தான் இயக்க மோதல்களை தொடக்கி வைத்து, ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டிருந்தால் எதற்காக 85ஆம் ஆண்டிலும் தன்னுடன் இணைந்து செயற்பட்டார் என்று கேட்கிறார். நெடுமாறன் எழுதிய உருக்கமான கடிதங்களையும் ஆதாரமாக காட்டுகிறார்.

எனக்கு என்னவோ இவர்கள் இருவரும் இணைந்துதான் இயக்க மோதல்களை தொடக்கி வைத்திருப்பார்களோ என்று இப்பொழுது தோன்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.