Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்கிழக்கு சீமையிலே

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மத்தியதரைக்கடலில் சிறு கப்பலில் இருந்து எடுத்த படம். இதில் பிரான்ஸின் நீஸ் நகரம், மொனாக்கோ நாடு, மற்றும் இத்தாலி நிலங்கள் இடமிருந்து வலமாகத் தெரிகின்றன.

IMG_3210_zpsb7e504a2.jpg

  • Replies 196
  • Views 18.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இடமிருந்து வலமாக எங்களுக்கு ஒரு பெரிய மலைதான் தெரியுது.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடமிருந்து வலமாக எங்களுக்கு ஒரு பெரிய மலைதான் தெரியுது..

நீங்கள் சாத்திரி போட்ட படத்தில பார்த்துச் சொல்கிறீர்களா... :) அதில 4 மலைகள் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் சில நீஸ் படங்கள்..

IMG_3187_zps383f7f6c.jpg

போகஸ் பண்ணும்வரை ஒழுங்காகத்தான் இருந்தான். கிளிக் செய்தபோது ஆளைக் காணவில்லை. கீழே இறங்கிவிட்டார். சரியாக இருந்திருந்தால் நல்ல படமாயிருந்திருக்கலாம்.

IMG_3198_zpsa75d1d03.jpg

நீரிழுக்கும் கோடு

IMG_3180_zpsaccc6a1c.jpg

இரண்டு நீலங்களும் ஒரு நிலமும்

IMG_3144_zps252a2514.jpg

உலகம் உருண்டை

Edited by sayanthan

  • தொடங்கியவர்

நீஸ் நகரின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். இன்னமும் போனதில்லை. உங்கள் கட்டுரை அந்த ஆவலைத் தூண்டிவிட்டது.

வரலாற்றையும் சேர்த்து தருவது நன்றாக உள்ளது.

வேலைப் பழுவுக்கு மத்தியில் இந்தளவு எழுதுவதே பெரிய காரியம். தொடருங்கள். நெருஞ்சி மூலமாக எம்மைக் குத்திவிட்டீர்கள். (நல்ல விதமாகத் தான்). :lol: எனவே தவறாது வாசிப்பேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஈஸ் . உங்கள் விமரசனமொன்று நெருடிய நெருஞ்சியில் அதிகம் சிந்திக்க வைத்த்து . தொடருடன் தொடர்ந்து இருங்கள் :) .

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன் வந்த விமானம் இறங்கி விட்டிருந்ததை தகவல் பலகையில் பார்த்து உறுதிசெய்திருந்தேன். சூறிச்சில் இருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கிய அனைவருமே கிட்டத்தட்ட வெளியேறி விட்டிருந்த நிலையில் சயந்தனை மட்டும் காணவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் பாத்திட்டு பயணிகள் பெயர் பட்டியலை பாக்கலாமெண்டு நினைச்சிருந்தன். சில நெரம் பெடியன் பழக்க தோசத்திலை பாஸ்போட்டை கிழிச்சுப்போட்டு நீசிலை அசேலம் அடிச்சிட்டானொ தெரியேல்லையெண்டு கோமகனுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் போதே பயணபொதியை தள்ளியபடி வெளியில் வந்து கொண்டிருந்தார்கள். வண்டிலுக்கு ஒரு யுரோ இல்லாததாலை வந்த வினை என்று பிறகுதான் தெரிந்தது. இந்த நடைமுறை இப்பதான் புதிதாக கொண்டு வந்திருக்கிறார்கள் சுப்பர் மாக்கற்றுக்கள் (சந்தைகள்) இதே நடைமுறைதான் இல்லாவிட்டால் சனங்கள் வண்டில்களை அதற்குரிய இடத்தில் விடாமல் கண்ட இடங்களில் தள்ளிவிட்டு போய்விடுவார்கள். நான்கு வருடங்களிற்கு முன்னர் சயந்தனை சுவிசில் நேராக சந்தித்திருந்தேன் அது சரியானதொரு கிரமப் பகுதி இரவு 7 மணிக்கு பிறகு ஊரே அடங்கிவிடும். நாங்கள் தாக சாந்தி செய்ய கடை தேடி கடைசியாக யேர்மனிக்குள் நான் காரை ஓடியபோதுதான் சயந்தன் தனக்கு யெரமனிக்குள்ளை வர அனுமதியில்லையெண்டார்.பொலிஸ் பிடிச்சால் என்ன செய்யிறதெண்டார். பொலிஸ் பிடிச்சால் ஓ இதுதானா யெர்மனி தெரியாமல் வந்திட்டம் எண்டு சொல்லிட்டு திரும்பலாம் எண்டு சொல்லியிருந்தேன். ஆனால் உண்மையில் சயந்தனை யெர்மன் பொலிசிட்டை அடைவு வைச்சாவது தண்ணி வாங்காமல் திரும்பிறேல்லையெண்டுதான் முடிவெடுத்திருந்தனான். இப்பதான உண்மையை சொல்லுறன். :lol: ஆனால் அப்பிடியொண்டும் நடக்கேல்லை அல்டியொண்டு (கடையின் பெயர்) கண்ணில் பட்டது அள்ளிக்கொண்டு சுவிஸ் திரும்பியிருந்தோம்.

சுவிஸ் பாசல். இரயில் நிலைய படியில் 4 வருடங்களிற்கு முன்னர் எடுத்த படம்.

12853_1077130788259_5634408_n_zps8cf59443.jpg

சிட்னியில் இந்த நடமூரை, நீண்ட காலமாக இருக்கின்றது, சாத்திரியார்!

புதிதாக வருபவர்கள், இதை அறிந்திருப்பது நல்லது!

இரண்டு டாலர், நாணயம் இல்லாவிட்டால், ஆம்பிளைச் சிங்கங்கள், பிடரியைச் சிலிர்க்க வேண்டியது தான்!!! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிட்னியில் இந்த நடமூரை, நீண்ட காலமாக இருக்கின்றது, சாத்திரியார்!

புதிதாக வருபவர்கள், இதை அறிந்திருப்பது நல்லது!

இரண்டு டாலர், நாணயம் இல்லாவிட்டால், ஆம்பிளைச் சிங்கங்கள், பிடரியைச் சிலிர்க்க வேண்டியது தான்!!! :icon_mrgreen:

சுப்பர் மக்கேட்டில் 10 டொலர் என்றாலும் பரவாயில்லை என்றுதான் சொல்லுவேன்..நாயால் கண்ட இடத்தில விடுகிரதால, நாங்கள் லீஸ் கார் வைத்திருக்கிற ஆக்கள் 1 மைல் தள்ளி விட்டு நடக்க வேண்டும்...இல்லாவிட்டால் காத்திர்ற்கு உந்தா வண்டிகள் அடித்தால், காருக்கு அடுத்த சிலவுதான்..

  • தொடங்கியவர்

[size=4]கால் நோவா? கவலை வேண்டாம். அனுபவரீதியாகக் கண்டது.

தொடர்புக்கு கோமகன்.[/size]

வண்ணம் வண்ணமாய் வகைவகைய பெட்டையள் ஹான்ட்பாக்கோடை ரெண்டு பக்கமும் நிண்டினம் :icon_idea: . நானும் மனிசியும் வலுகலாதியா அவையளை பிராக்கு பாத்து கொண்டு வந்தம் . அவையள பாத்ததால என்ரை கால் நோ எனக்கு மறந்து போச்சுது

தங்கள் பகிர்வுக்கு நன்றி கோமகன்

அட ஒரு பம்பிலுக்கு எழுதினால் பரிசு கெடுத்திறியளே செண்பகன் :lol: :lol: :D :D . எண்டிலும் கருத்துக்கு நன்றி :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]மிகவும் நன்றாக போகிறது.[/size][size=1]

[size=4]அனைவருக்கும் வாழ்த்துக்கள் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நோ.. வலமிருந்து முதலாவது :)

நோ காட்டிக்குடுக்கிறதில யாரும் எங்களை அடிசுக்கொள்ள முடியாது :lol::icon_idea:

இதிலை யார் தலைக்கனம் பிடித்த ஆறாத காயம் சாத்?

இதில் யார் தலைக்கனம் (தலையில் கனம்.. :D ) இல்லாதவர் என்று கேட்டால் சொல்லலாம்.

வேறு யார் ..? மூன்றாவது இருப்பவர் தான் :lol: :lol:

Edited by எல்லாள மகாராஜா

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ கோமகன் நல்லதொரு பயணக்கட்டுரை...

சதாமுடையது மட்டுமல்ல லிபியா கடாபியின் மகனின் ஆடம்பர கப்பலொன்றும் இங்குதான் நிறுத்தி வைக்கபட்டிருந்தது அதுவும் பின்னர் நீஸ் நகரசபையால் கையகப் படுத்தி ஏலத்தில் விற்கப்பட்டது

கப்பலை விற்பதற்க்கு நகரசபைக்கு அதிகாரமிருக்கு ஆகவே நாங்களும் எங்கன்ட மாகாணசபைக்கு அதிகமான அதிகாரங்கள் கேட்க வேண்டும்

ஆனால் நீசின் பழய நகரில் உள்ள வீதிகளது பெயர்கள் யாவுமே முதல் பிறென்ஜ் மொழியிலும் இரண்டாவதாக நீசுவா மொழியிலும் பிரான்ஸ் வைத்து நீசுவா மொழியை அழகு பார்க்கின்றது . இதிலிருந்து நான் ஒரு வலியான செய்தியைப் பெற்றுக்கொண்டேன் . அதாவது " எந்த ஒரு சிறுபான்மை இனமும் , அதன் மொழியும் காலப்போக்கில் பெரும்பான்மை இனத்தால் அழிக்கப்பட்டுவிடும் " என்பதே
அப்பதான் ஒரளவுக்கேனும் தப்பிபிழைக்கலாம்
  • தொடங்கியவர்

நன்றாக இருக்குது கோ எனக்கும் நீஸ்சுக்கு போக வேண்டும் என்ட‌ ஆவலை தூண்டி விட்டது...அந்த குரோச‌னைப் பார்த்தால் சாப்பிடோனும் போல இருக்குது :D

இதுக்கெல்லாம் நிண்டு மினைக்கெடக்கூடாது வாற திகதியை தனிமடலில போடுங்கோ . நானும் மனிசியும் உங்களை வரவேற்று உங்களோடை நீசுக்கு வருவம் . மிச்சம் சாத்தர் பாத்துக்கொள்ளுவர் :lol::D:icon_idea: .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

தொடருங்கோ கோமகன் நல்லதொரு பயணக்கட்டுரை...

கப்பலை விற்பதற்க்கு நகரசபைக்கு அதிகாரமிருக்கு ஆகவே நாங்களும் எங்கன்ட மாகாணசபைக்கு அதிகமான அதிகாரங்கள் கேட்க வேண்டும் அப்பதான் ஒரளவுக்கேனும் தப்பிபிழைக்கலாம்

இதைவிட அதிகமான அதிகாரங்கள் உள்ள வாய்ப்புகள் வரும்பொழுது " மமதை " என்ற ஆயுதத்தால் எட்டி உதைத்தோம் . ஆனால் இப்போ ................ சிலவேளைகளில் அறப்படித்த பல்லி களுநீர் பானைக்குள் விழுந்த சொல்லடைதான் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது புத்தன் . வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

அசத்தல் கோம்ஸ்.. :D அதுசரி.. பிள்ளைகளை விட்டிட்டோ போனனியள்? :wub:

பகிடி கூடிப் போச்சு உங்களுக்கு :lol::D :D .

  • தொடங்கியவர்

இடங்களின் பின்னணிக் கதையையும் சேர்த்து எழுதுகிறீர்கள். நன்றாக உள்ளது. தொடருங்கள்.

மிக்க நன்றி தப்பிலி.

யோவ் .. கோ மகன் என்ரை வீட்டுக்கு திரும்புற முடக்கிலை நிண்ட நாலு பெட்டையளிலை ஒண்டை கன நாளாய் காணேல்லை எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி.......

சிவசத்தியமாய் எனக்கு தெரியாது :o . நான்வரேக்கை வடிவாய் எண்ணின்னான் நாலு பேர்தான் நிண்டவை :lol: :lol: . எதுக்கும் ஆறாதகாயத்தை ஒருக்கால் கேட்டுப்பாருங்கோ :icon_mrgreen::icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

கதையப் போடுங்கப்பா எவ்வளவுதான் பொறுக்கிறது :(

கோ கதை எழுத்த தொடங்கினால் ஒரு நூற்றாண்டு எடுக்கும் முடிக்க :rolleyes:

  • தொடங்கியவர்

1890ல் மொனாக்கோ

640px-Monacoc1890.jpg

http://upload.wikime...Monacoc1890.jpg

மொனாக்கோ உலகின் பெரும் கோடீஸ்ரர்கள் பெரும் கறுப்புபண முதலைகளது உறைவிடமாகும் . ஏழ்மை என்ற பேச்சுக்கு இந்த நாட்டில் இடமில்லை . ஒருமுறையாவது இந்த நாட்டில் கால்அடி எடுத்து வைக்கமாட்டோமா என்று ஏங்கும் சிறிய , நடுத்தர பணக்காறர்களின் கனவுலக நாடாம் மொனாக்கோவுக்கு எமது கார் சென்று கொண்டிருந்தது . மொனாக்கோ நாட்டை உருவாக்கிய பெருமை ரஷ்சிய நாட்டை சேர்ந்த சோர்வேனியன் அரசவம்சத்தைச் சேர்ந்த பிறான்சுவாஸ் கிறிமல்லடியையே சாரும் . பிறான்சுவாஸ் கிறிமல்லடி 1297 ஆம் ஆண்டு மொனாக்கோ கோட்டை மீது படைஎடுத்து மொனாக்கோவை தன்வசமாக்கினார் . 1314 ஆண்டளவில் பிரான்சுவா கிறிமல்லடி பிரான்சின் பதினாறாம் லூயி மன்னருடன் ஏபடுத்திக் கொண்ட பாதுகாப்பு ஒபந்தத்தின் பிரகாரம் மொனாக்கோ பிறான்சின் ஆளுகைகுள் வந்தது .

பிரான்சுவாஸ் கிறிமல்டி

576px-Monaco-FrancoisGrimaldi.jpg

http://upload.wikime...oisGrimaldi.jpg

ஆனாலும் மன்னர் குடும்பமே கௌரவப்பிரஜைகளாக நாட்டை வழி நடத்துகின்றனர் . இன்று அவரது பரம்பரையில் வந்த இளவரசர் 2 ஆம் அல்பேர்ட் மன்னராக இருந்தாலும் , பிரான்சின் அதிகாரத்துக்குட்பட்டதாகவே மொனாக்கோ உள்ளது . உலகில் இரண்டாவது தன்னாட்சி கொண்ட மிகச்சிறிய நகரநாடு மொனாக்கோவாகும் . இதன் எல்லைகளாக மத்தியதரைக்கடலும் , இத்தாலியும் பிரான்சும் உள்ளன . இது வெறும் 2 சதுரகிலோமீற்றர் பரப்பளவையும் , அண்ணளவாக 30000 சனத்தொகையையும் கொண்ட ஓர் சிறிய நகர நாடாகும் . எமக்கு மொனாக்கோ என்றால் உடன் நினைவில் வருவது அதன் புகழ்பெற்ற போர்முலா 1 சர்வதேச மோட்டார் கார் பந்தயமும் , றலி சைக்கிள் போட்டியும் தான் . அதைவிட சூதாட்ட விளையாட்டிலும் பெயர் போனது மொனாக்கோ . உலகின் அதிஉயர் வரலாற்று பெருமை மிக்க " மொண்ற் கார்லோ " என்ற கசினோ இங்குதான் உள்ளது . இந்தக்கசினோவில் ஒருமுறை விளையாடினாலே தங்கள் வாழவின் அந்தஸ்த்து எங்கோ போய்விடும் என்று கனவுகாணும் உலக செலவந்தர்கள் எங்கும் உள்ளனர் . மொனோக்கோ 1993 ஆம் ஆண்டு ஐநாசபையில் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டது.

இளவரசர் அல்பேர்ட் 11

Albert_II_Monaco_%282008%29.jpg

http://upload.wikime...naco_(2008).jpg

எமது கார் தார் றோட்டில் வழுக்கிச் சீறியது . சாத்தர் அதை நேர்த்தியாக ஓட்டிக்கொண்டிருந்தார் . வெளியே அந்தக் காலையிலும் வெய்யிலின் உறைப்பு அதிகமாகவே இருந்தது . எனது உடல்வாகினால் ஏற்பட்ட வியர்வையை போக்க சாத்தர் குளிரூட்டியை திறந்து விட்டார் . எமது கார் கடற்கரை சாலையை தாண்டி மலைப்பாதையில் ஏறியது . மொனாக்கோவை சென்றடைய மூன்றுவிதமான பாதைகள் உள்ளன . முதலாவதாக தரைப்பாதையுடன் கூடிய அதிவேக விரைவுப் பாதை . மற்றய இரண்டும் ஏறத்தாள கடல் மட்டத்தில் இருந்து 500 அடிகள் இடைவெளிகளில் உள்ள மலைப்பாதைகள் மொனாக்கோவை இணைக்கின்றன . சாத்தர் எங்களுக்கு நீஸ் இன் அழகையும் மொனாக்கோவின் அழகையும் காட்ட மலைப்பாதையையே தெரிவு செய்தார் . நீஸ் இல் இருந்து மொனாக்கோ எவ்வளவு தூரம் என்று சாத்தாரிடம் கேட்டேன் . "ஒரு 25 கிமீற்றர் அரைமணித்தியால ஓட்டத்தில் போய்விடலாம் " என்று சாத்தர் விடை தந்தார் . நான் அல்ப்ஸ் மலைத்தொடரின் அழகில் சொக்கிப் போனேன் . திடீரென ஒரு மலைப்பாதை முடக்கில் சாத்தர் தனது காரை நிறத்தினார் . நான் என்னவென்பது போல சாத்தரைப் பார்த்தேன் . இதில் இருந்து கீழே பாருங்கள் கோ என்று கையைக் காட்டினார் .

nicevisit2012078.jpg

நான் சென்று பார்த்பொழுது கிடுகிடு பாதாளத்தில் நீஸ் நகரமும் துறைமுகமும் . தெரிந்தது நான் நீஸ் துறைமுகத்தின் அழகை அள்ளிப்பருகினேன் . மனைவி கமறாவால் நாலா புறமும் கிளிக்கி எடுத்துக் கொண்டிருந்தா . தூரத்தே இரு நீலங்களும் முத்தமிடல் போட்டியில் மும்மரமாக இறங்கி இருந்தன . கீழ் நீலத்தில் அள்ளித் தெளித்த நட்சத்திரங்களாகப் பலவகையான கப்பல்கள் அணிவகுத்துச் சென்றது என்மனதைக் கிளரவே செய்தது . நாங்கள் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்த பொழுது ஒருபுறம் ஆல்ப்ஸ் மலையின் வனப்பும் , கீழே அதல பாதாளத்தில் மெடிற்றிரேனியன் கடலினது அழகும் என்னை சுண்டி இழுத்தது . சிறிது நேரத்திலேயே மொனாக்கோவின் நுளைவாயிலை எங்களது கார் தொட்டது.

nicevisit2012068.jpg

மலையாலை ஏறிகொண்டு வரும்வரை எனரை மனுசி வாயைபொத்திக் கொண்டு வந்தா. அல்லாட்டி சாத்தரோடை சேந்து என்னை கழட்டுறதுதான் என்ரை மனிசிக்கு வேலை . என்னடா இண்டைக்கு பார்ட்டி விரதமோ எண்டு யோசிச்சுக்கொண்டு நான் வரேக்கை இருந்தாப்போலை பின்னாலை இருந்து குவாக் குவாக் எண்டு சத்தம் கேட்டிது . என்ரை மனிசி ஒரு பையுக்குள்ளை சத்தி எடுத்துக் கொண்டிருந்தா . சாத்தர் அந்தரப்பட்டு ஒரு பார்மசியில காறை நிப்பாட்டி போட்டு சத்தி அடக்கிற மருந்து வாங்க போட்டார் . நாங்கள் காறுக்கை இருக்க மின்னி முழிச்சாப்போல ஒரு மொனாக்கோ பொலிஸ் காறன் மோட்டசைக்கிளில வந்து எங்களுக்கு கிட்ட வந்து நிப்பாட்டி போட்டு என்னக்கு சலூய்ட் அடிச்சான் . நான் என்ன எண்டு கேட்டன் . இதிலை கார் நிப்பாட்டேலாது காறை தூக்கப்போறன் எண்டான் .

"என்ரை கூட்டாளி மருந்து வாங்கப்போட்டார் ஏமெர்ஜென்சி விளக்கு போட்டிருக்கிறது உன்ரை கண்ணுக்கை எத்துப்படேலையோ?"

எண்டு கேட்டன் . " அதெல்லாம் தெரியாதுதான் தூக்கப்போறன் எண்டு அளாப்பினான் " . நான் காறை விட்டு இறங்கி பொறு ராசா என்ரை காட்டாளியை கூட்டியாறன் எண்டு நான் பார்மசியுக்கை போய் அங்கை நிண்ட பெட்டையள் ரெண்டுபேரோடை கடலை போட்டுக் கொண்டு நிண்ட சாத்தரை விசையத்தை சொல்லை ஆளை இழுத்துக் கொண்டு வந்தன் . சாத்தர் வந்து பொலிசிட்டை மன்னிப்பு கேட்டு கொண்டு காரை ஸ்ராட் செய்தார் .என்ரை மனுசி சத்தி மருந்தை போட்டதாலை பழையபடி கட்டுக்கு வந்தா.

நாங்கள் வந்த காரை பார்க் பண்ணிவிட்டு மொண்ட்கார்லோ கசினோவை அடைந்தோம். எம் முன்னே மயாஜால பிரமாண்டமாக மொண்ட்கார்லோ ஓர் பூங்கா நடுவே வியாபித்து இருந்தது.

nicevisit2012082.jpg

இந்த மொண்ட் கார்லோ கசினோ 1866 ல் மொனாக்கோவின் இளவரசர் சார்ல்ஸ் 3 ஆல் உருவாக்கப்பட்டதாகும். அது உலகின் உள்ள ஆடம்பரங்கள் அனைத்தையும் உள்வாங்கி இருந்தது . அங்கே மொண்டகார்லோவில் றோமானியக் கட்டிடக்கலை வரலாற்றுசாட்ச்சியாக என்முன்னே விரிந்து இருந்தது . அதன் அருகே உலகின் முதல்தர மார்க் பொருட்களின் கடைகள் தங்கள் வேர்களை பதித்து இருந்தன. என்னால் கண்ணாடிக்கால் ஒவ்வொன்றையும் ஆசைக்கு தொட்டுப் பார்க்கவே முடிந்தது. அவைகளின் விலைகளின் குறைந்தபட்சப் பெறுமதையே 1000 யூரோக்கள் . கசினோவின் அருகே கொட்டேல் டு பரிஸ் ( Hotel de Paris ) என்ற ஐந்து நட்சத்திர ஆடம்பர கொட்டேல் ஒன்று காணப்பட்டது . இதுவும் இளவரசர் சார்ல்ஸ் 3 ன் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது . அறைகளின் விலைகள் தலையைச் சுற்றப்பண்ணியது . அதன் ரெஸ்ரொறண்டின் உணவு விலைப்பட்டியலைப் பார்த்தேன் 300 யூரோக்களுக்கு குறைவாக காணமுடியவில்லை . அந்த கொட்டலின் அருகே அங்கு வருகை தந்திருந்த உலக்கத்து செல்வச் சீமாட்டிகளினதும் சீமான்களதும் பழமை வாய்ந்த அதி விலை கூடிய ஆடம்பரக் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன . மக்கள் அவற்றின் முன்பு படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள் . அவர்களால் அதைத் தான் செய்யமுடிந்தது . நானும் எனது பங்கிற்கு ஒரு றோல்ஸ் றொய்ஸ் காரின் முன்னால் நின்று படம் எடுத்தேன்.

nicevisit2012083.jpg

கசினோவிற்கு முன்னால் உள்ள இடத்தில் இருந்து போர்முலா 1 கார்பந்தையம் தொடங்குவதா சாத்தர் கூறினார் . இதன் ஓடுபாதை இங்கிருந்து மேலே மலையில் உள்ள மன்னர் மாளிகைகைவரை சென்று மீண்டும் இங்கு வருவதாகச் சாத்தர் கூறினார். இந்த போர்முல் 1 கிறாண்ட் பிறிஸ் (Formula Gr(and Prix ) சர்வதேச சம்பியன்ஷிப் கார் போட்டி 1950ல் இருந்து நடத்தப்பட்டு வருகின்றது . நான் சாத்தரிடம் கசினோவில் விளையாடுவோமா என்று கேட்டேன் . சாத்தர் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு

" கோ இந்த உடுப்பகளோடை எங்களை விடமாட்டாங்கள் . அதுக்கு கோர்ட் சூட் போடவேணும். அதோடை விளையாட ஆக குறைஞ்ச தொகை 500 ரூபா என்றார்".

நான் ஆசையில் அந்த வாசில் தொட்டுப் பார்த்து அதன் முன்னால் படம் எடுத்துக்கொண்டேன். அப்பொழுது கிருபன் இங்கை விளையாடி கையை சுட்டதாக திண்ணையில் கதைக்கும்பொழுது எழுதியது நினைவுக்கு வந்தது . எனது எண்ண ஓட்டத்தை அறிந்தோ என்னவோ சாத்தர் தான் விலைமலிவான கசினோவில் விளையாடக் கூட்டிப் போவதாக உறுதி அளித்தார்.

இளவரசரின் கோட்டை

nicevisit2012129.jpg

நாங்கள் மலையில் உள்ள மொனாக்கோவின் இளவரசர் இரண்டாம் அல்பேர்ட் வசிக்கும் கோட்டைக்குச் சென்றோம். கோட்டையில் மாலைச்சூரியன் செவ்வண்ணம் பூசி கோட்டையை மேலும் சிவப்பாக்கியது . அந்த இதமான மாலை வேளையில் மக்கள் கோட்டையையும் அதன் சுற்றுப்புறங்களையும் தங்களது கமறாவிற்குத் தீனி போட்டுக்கொண்டிருந்தனர் . கோட்டை வாயில் இருபக்கமும் காவலர்கள் விறைத்துப்போய் நின்றனர் . இருமருங்கும் அந்தக்காலத்தைய பீரங்கிகள் இரண்டு பூட்டப்பட்டிருந்தன . நான் கோட்டையடியில் உலாவிக்கொண்டிருந்தபோது மன்னரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிமாற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. கம்பீரமான அணிவகுப்புடன் புதிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளே நுளைய , அங்கிருந்தவர்கள் வெளியேறினார்கள் . சுற்றுலாப்பயணிகள் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களை எனது கமறாவில் உள்வாங்கிக்கொண்டேன்.

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்

nicevisit2012142.jpg

nicevisit2012143.jpg

மன்னர் கிறிமல்டி இந்தக்கோட்டையை பிடித்து கட்டுவதற்கு தொழில்நுட்பம் வளராத அந்தகாலத்தில் என்பாடுபட்டிருப்பார் ? எத்தனை மனிதர்களது உளைப்பையும் உயிரையும் உள்வங்கி இன்று எங்களுக்கு வரலாற்று சாட்சியாக இருக்கின்றதே என்று எனது மனம் நினைத்துக்கொண்டது. நாங்கள் கோட்டையின் பின்பக்கம் சென்றபொழுது இளவரசர் அல்பேர்ட்டின் திருமணம் நடைபெற்ற கதீட்ரல் எங்கள் முன் விசாலமாக உயர்ந்திருந்தது . அதற்கு முன்னால் நீலக்கடல் கீழே பாய்விரித்திருந்தது . ஒருபுறம் மொனாக்கோவின் துறைமுகம் தெரிந்தது . அந்த துறைமுகமும் லும்பியா துறைமுகத்தைப்போலவே செல்வந்தர்களுக்கான உல்லாசக்கப்பல்கள் நிறுத்த ஒரு துறையும் , பொதுப்பாவனைக்கென்று ஒரு இறங்குதுறையும் காணப்பட்டது. ஆழங்கூடிய நீலக்கடலில் வெண்பறவைகளாக அந்தக்கப்பல்கள் ஒரு சீரான ஒழுங்கில் அணிவகுத்து நின்றிருந்தன. நாங்கள் மாலை இருட்டிக் கொண்டுவருவதால் மலையிலிருந்து இறங்கி எமது கார்பாக்கிங்கை நோக்கிப் போனோம் . எமது கார் நீஸ் நோக்கி விரைந்தது.

மொனாக்கோ துறைமுகம்

nicevisit2012151.jpg

என்ரை மனுசி வரேக்கை செய்த குளப்படியளால, இந்தமுறை சாத்தர் தரைப்பாதையாலை காரை விட்டார். ஓட்டோ றோட்டிலை எங்கடை கார் 100இல போச்சுது . எங்களை கால் மணித்தியாலத்திலை சாத்தர் நீஸ்சுக்குள்ளை கொண்டுவந்து விட்டார் . எங்களுக்கு நல்லபசி . எனக்கு பசியில தலைசுத்த தொடங்கீட்டிது. நாங்கள் சாத்தற்றை வீட்டடிக்கு போக சாத்தற்றை பொடிகாட் வீட்டுவாசலில நிண்டார். எங்களை கண்ட உடனை ஓடயந்து , எங்களை சுத்திவந்து மணந்து பாத்து வீட்டுக்கை விட்டார் . நாங்கள் வரேக்கையே வாங்கியந்த பிறென்ஜ் பக்கற்றை , வெந்தயக் குழம்போடை சேத்து ஒரு எறி எறிஞ்சம்.

ஆறாத காயம் வந்து இறங்க என்னம் ஒரு மணித்தியாலத்துக்கு கிட்ட இருக்கு . நானும் சாத்தரும் ஆறாத காயத்தை கூப்பிட ஏயார்ப்போர்ட்டுக்கு போனம். நீஸ் ஏயார்போட் கட்டுநாயக்காவை விட கொஞ்சம் வெடிப்பாய் இருந்திது. அங்கையும் தனிப்பட்ட ஆக்களின்ரை பிளேன் நிப்பாட்ட ஒருபக்கம் , மற்றப்பக்கம் பொதுப்பாவனைக்கெண்டு ரெண்டு பிரிவை வைச்சிருந்தாங்கள் . நாங்கள் அங்கை போய் பிளேன் இறங்கிற இடத்தில இருந்த போர்ட்டைப் பாத்தம். பிளேன் இறங்க என்னம் பதினைஞ்சு நிமிசம் இருந்திது . அப்ப பாத்து சாத்தர் சொன்னர் ,

"இவர் ஆறாதகாயம் நேற்று சாமம் போன்பண்ணி ரென்சன்பண்ணிபோட்டார் கோ . நீங்கள் இதிலை நில்லுங்கோ . நான் தெமி அடிக்கப்போறன் . ஆள் வந்த 5 நிமிசத்தாலை வந்து உங்களை சந்திக்கிறன்"எண்டு . நான் சொன்னன் ,

"எனக்கு ஆளை தெரியாது "எண்டு .

"ஆதாலை தான் கோ உங்களை விடுறன் . பார்ட்டி வந்து அல்லாடட்டும்" .

எண்டார் சாத்தர் . சாத்தர் என்னை விட்டிடு தெமி அடிக்கப்போட்டார். நான் அப்ப போர்ட்டை பாத்தன் . ஆறாதகாயம் வந்த பிளேன் இறங்கீட்டுது . நான் ஒரு கெத்தாய் கறுப்பு கண்ணாடியை போட்டுக் கொண்டு நிண்டன். சனம் எல்லாம் வெளீல வந்துகொண்டு இருந்திது . ஆறாதகாயத்தை காணேலை . சாத்தற்றை போன்வந்திது .நான் விசயத்தை சாத்தருக்கு சொன்னன் . சாத்தர் சொன்னார் " பழக்கதோசத்தில பார்ட்டி புத்தகத்தை கிழிச்சு போட்டுதோ"? எதுக்கு கொஞ்சம் நில்லுங்கோ எண்டு சொன்னார். என்னுக்கு விசராப்போச்சுது . ஒருகால் மணித்தியாலம் கழிய ஆறதாகாயம் , மனுசி , புச்சி புச்சி கொண்ட படையணி கதவுக்குள்ளாலை வந்தினம் . நான் தெரியாத மாதிரி நிக்க , என்னட்டை வந்து நான் சிறிலங்கனோ எண்டு கேட்டார் . நான் சொன்னன் இல்லை மொறீஷியன் எண்டு . அவர் ஏமாத்தமாய் நிண்டார் . தூரத்தில நிண்டு பாத்து போட்டு சாத்தர் பின்னாலை வந்து ஆறாதகாயத்தின்ரை தோளைத் தட்டினார் . அவைகதைச்சுக் கொண்டு போக ஆயுத்தப்படுத்த , சாத்தர் என்னைப் பாத்து "கோ போவமே ?" எண்டு கேட்டார் . அப்ப ஆறாதகாயத்துக்கு மூஞ்சையைப் பொத்தி அறைஞ்சமாதிரிக் கிடந்தது .

தொடரும்

பின் இணைப்பு :

ஐரோப்பாவில் கடலினுள் அமைந்த அக்குவாறியத்தின் நுளைவாயில்

nicevisit2012161.jpg

மொனாக்கோ நகரின் ஆடம்பர அடுக்குமாடி வீடுகள்

nicevisit2012154.jpg

மொனாக்கோ துறைமுகத்தின் தோற்றம்

nicevisit2012152.jpg

மொனாக்கோ துறைமுகம் மேலிருந்து பார்வை

nicevisit2012120.jpg

மொனாக்கோ ஐ வியூ

nicevisit2012114.jpg

ஹொட்டேல் து பரிஸின் பின்புறத்தோற்றம்

nicevisit2012105.jpg

ஹொட்டல் து பரிஸ் ஆடம்பர 5 நட்சத்திர விடுதி

nicevisit2012103.jpg

யாழ்கள பெணமணிகளுக்கு :lol::D:icon_idea: (ஆரம்பவிலை 5000 யூரோக்கள்)

nicevisit2012094.jpg

மொண்ட் கார்லோவின் முன்னால் உள்ள பூங்காவில் வாத்து

nicevisit2012090.jpg

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

என்ன கோமகன்? அடிக்கடி தம் அடிக்கிறியள் போலை கிடக்கு.......தண்ணியை விட கெட்ட சாமான் எல்லோ :D ......சரி அதை விடுவம்......மனதிலை இருக்கிறதை....பார்த்ததை அப்பிடியே எழுதுறியள் நல்ல விடயம்....வாழ்த்துக்கள்.

அனுபவப்பட்டனிங்கள் சொல்லுறியள் ........... தட்டேலாது :) . நான் வந்தபுதிசில மனவிரக்கத்தியால தொடங்கினது . கோதாரியை விடேலாமல் கிடக்கு . ஆனால் இப்ப குறைச்சுபோட்டன் . தண்ணி மட்டும் அடிக்கமாட்டன் :icon_idea: . உங்கடை அக்கறையை எப்பவும் மறக்கமாட்டன் குமாரசாமி அண்ணை :) . வருகைக்கு நன்றி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தண்ணி மட்டும் அடிக்கமாட்டன் :icon_idea:

இதனை நான் உறுதிப்படுத்துகிறேன் :)

  • தொடங்கியவர்

கதையப் போடுங்கப்பா எவ்வளவுதான் பொறுக்கிறது :(

போட்டாச்சு .

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒரு சுற்றுலாவுக்கு கூட்டிப்போன மாதிரியான அனுபவம் தந்த பயணக்கதை அருமை. .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

முன் பக்கம் பின் பக்கம் எல்லாம் அக்கு வேறு ஆனி வேறாக காட்டிய கோவுக்கு கோடி நன்றிகள். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் இன்னும் ஆவலைத்தூண்டுது கோமகன் அண்ணா.

தொடர்ந்து படிக்க காத்த்இருக்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.