Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மக்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளதன் மூலம், அரசாங்கத்துக்கு தெளிவானதொரு செய்தியைக் கூறியுள்ளனர்

Featured Replies

[size=4][size=5]கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: உண்மையான வெற்றி வெற்றி?[/size]

(கே.சஞ்சயன்)

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போலவே, முடிவுகளை தந்துள்ளது. கிழக்கின் இனப்பரம்பல் காரணமாக யாருக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்தும் என்ற கணிப்பு தப்பாகிப் போகவில்லை.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6217 வாக்குகள் அதிகமாகப் பெற்றதன் மூலம், கிழக்கு மாகாணசபையில் 3 மேலதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதன்காரணமாக, 11 ஆசனங்களுடன் இரண்டாம் நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், இந்தத் தேர்தலில் 11 ஆசனங்களை எதிர்பார்த்தது. அதாவது திருகோணமலையில் 4 ஆசனங்கள், மட்டக்களப்பில் 5 ஆசனங்கள், அம்பாறையில் 2 ஆசனங்களை தாம் எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

அத்துடன் இரண்டு போனஸ் ஆசனங்களையும் அவர் எதிர்பார்த்திருந்தார். போனஸ் ஆசனங்களைப் பெற வேண்டுமானால், மாகாண அளவில் கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டியிருந்தது.

அது முடியாமல் போனது. எனினும் அவர்களின் 11 ஆசனங்கள் என்ற குறி தப்பவில்லை. திருகோணமலையில் எதிர்பார்த்ததை விட ஒன்று குறைவாக - 3 ஆசனங்கள் கிடைத்த போதும் மட்டக்களப்பில் கிடைத்த 6 ஆசனங்கள் அதனை சமப்படுத்திக் கொண்டது.

tna(1).JPG[/size]

[size=4]அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்பவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை.

தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கலாம் என்றே கூறியது. அதாவது முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைப்பதிலேயே அதிக நம்பிக்கை கொண்டிருந்தது.

அதேவேளை தமிழ்மக்கள் அதிகளவில் வாக்களித்தால் தனிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ளதையும் சுட்டிக்காட்டியது. இந்தத் தேர்தலில், தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பிரதிபலிப்பு தெளிவாகவே உணர்த்தப்பட்டுள்ளது.

தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே பெரும்பான்மையாக ஆதரித்துள்ளனர். முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பெரும்பாலும் ஆதரித்துள்ளனர்.

அதுபோலவே சிங்களவர்களில் பெரும்பாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் ஐதேகவையும் ஆதரித்துள்ளனர். தமிழ் ம,க்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ் போன்ற சிறுபான்மை கட்சிகளின் வாக்குகள் தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைக் காப்பாற்றியுள்ளன.

இந்தத் தேர்தலில் அதிக ஆசனங்களை வென்றுள்ள போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால், அதைப் பெரிய வெற்றியாகக் கொண்டாட முடியாத நிலையே உள்ளது.

காரணம், அதன் வாக்கு வங்கி கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பெரும் சரிவைக் கண்டுள்ளது. 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கில் சுமார் 44 சதவீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால், இம்முறை வெறும் 30.59 வீத வாக்குகளையே பெற முடிந்துள்ளது.

வாக்குகள் என்ற கணக்கில் பார்த்தால், சுமார் 65 ஆயிரம் வாக்குகளை ஆளும்கட்சி இழந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 20 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற சிவனேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி இம்முறை தனித்து போட்டியிட்டு 9522 வாக்குகளைப் பெற்றது.

இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் கூட,கடந்த 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலை விட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இம்முறை 64,411 வாக்குகள் குறைந்து போயுள்ளன.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், இந்தத் தேர்தலில் ஆசனங்களைக் குறைவாகப் பெற்றுள்ள போதிலும், அதிகளவு வாக்குகளைப் பெற்றுள்ளது.

அவர்களுக்கு இது ஒரு சாதகமான நிலை என்றே கூறலாம். கிழக்கின் சனத்தொகையில் சுமார் 40 வீதமே தமிழ் மக்கள். இவர்களில் வாக்களித்தவர்களில் கிட்டத்தட்ட 30.59 வீதத்தினரின் ஆதரவை அது பெற்றுள்ளது.

slmc1(19).jpg[/size]

[size=4]கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கில் 21.89 வீத வாக்குகளே கிடைத்தன. 2004ம் ஆண்டுக்குப் பின்னர் மட்டக்களப்பை தன் கைக்குள் போட்டுக் கொண்டு விட்டதாக கருதியிருந்த அரசாங்கத்துக்கு, இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் அடியே வீழ்ந்தது எனலாம்.

ஏனென்றால், அங்கு இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து போட்டியிட்ட போதும் வெறும் 2 ஆயிரம் வாக்குகளையே அதிகம் பெற முடிந்துள்ளது.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இங்கு 38 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த முறை கிட்டத்தட்ட 43 வீத வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்த ஆளும்கட்சியால், இம்முறை, வெறும் 28.38 வீத வாக்குகளையே பெற முடிந்துள்ளது. அம்பாறையிலும் அதே கதி தான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 52 வீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால், 33.66 வீத வாக்குகளையே இம்முறை பெற முடிந்துள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி 10.47 வீதத்தில் இருந்து 16.28 வீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்ற பியசேனவை அரசாங்கம் தன்கைக்குள் போட்டுக் கொண்டது.

ஆனால், அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை அவரால் உடைக்க முடியவில்லை. எனவே, கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் நிம்மதியாக இருக்க முடியாது.

வடக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ளது போன்று சாதகமான நிலை உள்ளதாக கருத முடியாது.[/size]

[size=4]அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரையில், கடந்த தேர்தலில் ஐதேகவுடன் கூட்டணி அமைத்ததை விட அதிகமான வாக்குகளை இம்முறை பெற்றுள்ளது.

அதேவேளை ஐதேகவுக்கும் கூட அதிக வாக்குகள் தான் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலின் மூலம் கிழக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானோரால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது அம்பாறையில் 18.33 வீதம் தமிழர்களாக இருந்த போதும், வாக்களித்தவர்களில் 16.28 வீதத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்துள்ளனர்.

திருகோணமலையில் 28.75 வீதத்தினரே தமிழர்கள். ஆனால் வாக்களித்தவர்களில் 29 வீதமானவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளனர்.

மட்டக்களப்பில் 74 வீதம் தமிழர்கள். இங்கு வாக்களித்தவர்களில் 51 வீதமானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது இன்னொரு ஆணையாக- அங்கீகாரமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் சார்பில் பேசுவதற்கான பலத்தை, கிழக்கு மக்கள் அவர்களுக்குக் கொடுத்துள்ளனர்.

ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புக் கிடைக்காது போனாலும் கூட, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோல்வியாக கருதப்படாது. அவ்வாறு கருதுவதும் முட்டாள்தனம். ஏனென்றால் கிழக்கின் இனப்பரம்பல், அவ்வாறானது.

கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எப்படியாவது தோற்கடித்து விடலாம் என்று அரசாங்கம் கணக்குப் போட்டிருந்தது. சுலபமான வெற்றியை அது எதிர்பார்த்தது.

ஆனால் கிழக்கு மக்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளதன் மூலம், அரசாங்கத்துக்கு தெளிவானதொரு செய்தியைக் கூறியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பின் உண்மையை, தாற்பரியத்தை அரசாங்கம் உணர்ந்து நடந்து கொண்டால் சரி.[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/48577-2012-09-13-15-34-52.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இக்கட்டுரையை என்னால் நம்ப முடியாது. washington post எழுதினால் தான் நான் நம்புவேன். :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும் அதை ஒரு சிங்களவர் எழுதியிருக்கவேண்டும்........... :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=5]கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: உண்மையான வெற்றி வெற்றி?[/size]

(கே.சஞ்சயன்)[/size]

[size=4]காரணம், அதன் வாக்கு வங்கி கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பெரும் சரிவைக் கண்டுள்ளது. 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கில் சுமார் 44 சதவீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால், இம்முறை வெறும் 30.59 வீத வாக்குகளையே பெற முடிந்துள்ளது.

வாக்குகள் என்ற கணக்கில் பார்த்தால், சுமார் 65 ஆயிரம் வாக்குகளை ஆளும்கட்சி இழந்துள்ளது. [/size]

[size=4]கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 20 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற சிவனேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி இம்முறை தனித்து போட்டியிட்டு 9522 வாக்குகளைப் பெற்றது.

இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் கூட,கடந்த 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலை விட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இம்முறை 64,411 வாக்குகள் குறைந்து போயுள்ளன.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், இந்தத் தேர்தலில் ஆசனங்களைக் குறைவாகப் பெற்றுள்ள போதிலும், அதிகளவு வாக்குகளைப் பெற்றுள்ளது.

அவர்களுக்கு இது ஒரு சாதகமான நிலை என்றே கூறலாம். கிழக்கின் சனத்தொகையில் சுமார் 40 வீதமே தமிழ் மக்கள். இவர்களில் வாக்களித்தவர்களில் கிட்டத்தட்ட 30.59 வீதத்தினரின் ஆதரவை அது பெற்றுள்ளது.[/size]

[size=4]அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இங்கு 38 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த முறை கிட்டத்தட்ட 43 வீத வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்த ஆளும்கட்சியால், இம்முறை, வெறும் 28.38 வீத வாக்குகளையே பெற முடிந்துள்ளது. அம்பாறையிலும் அதே கதி தான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 52 வீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால், 33.66 வீத வாக்குகளையே இம்முறை பெற முடிந்துள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி 10.47 வீதத்தில் இருந்து 16.28 வீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்ற பியசேனவை அரசாங்கம் தன்கைக்குள் போட்டுக் கொண்டது.

ஆனால், அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை அவரால் உடைக்க முடியவில்லை. எனவே, கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் நிம்மதியாக இருக்க முடியாது.[/size]

[size=4]அதேவேளை ஐதேகவுக்கும் கூட அதிக வாக்குகள் தான் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலின் மூலம் கிழக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானோரால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது அம்பாறையில் 18.33 வீதம் தமிழர்களாக இருந்த போதும், வாக்களித்தவர்களில் 16.28 வீதத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்துள்ளனர்.

திருகோணமலையில் 28.75 வீதத்தினரே தமிழர்கள். ஆனால் வாக்களித்தவர்களில் 29 வீதமானவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளனர்.

மட்டக்களப்பில் 74 வீதம் தமிழர்கள். இங்கு வாக்களித்தவர்களில் 51 வீதமானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது இன்னொரு ஆணையாக- அங்கீகாரமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் சார்பில் பேசுவதற்கான பலத்தை, கிழக்கு மக்கள் அவர்களுக்குக் கொடுத்துள்ளனர்.

ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புக் கிடைக்காது போனாலும் கூட, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோல்வியாக கருதப்படாது. அவ்வாறு கருதுவதும் முட்டாள்தனம். ஏனென்றால் கிழக்கின் இனப்பரம்பல், அவ்வாறானது.

கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எப்படியாவது தோற்கடித்து விடலாம் என்று அரசாங்கம் கணக்குப் போட்டிருந்தது. சுலபமான வெற்றியை அது எதிர்பார்த்தது.

ஆனால் கிழக்கு மக்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளதன் மூலம், அரசாங்கத்துக்கு தெளிவானதொரு செய்தியைக் கூறியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பின் உண்மையை, தாற்பரியத்தை அரசாங்கம் உணர்ந்து நடந்து கொண்டால் சரி.[/size]

மொத்தமாக சொன்னால்

அரசின் அராஐக ஆட்சியையும் தமிழரின் தாகத்தையும் மீண்டும் தமழ் மக்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

;தை கூட்டமைப்பு தமக்கு கிடைத்த வெற்றியாக்கொண்டு பெருமை கொள்ளாமல் தமிழரது ஆணையாக இதைப்பாவிக்கவேண்டும்.

  • தொடங்கியவர்

[size=4]" தாயக மக்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையைத்தான் விரும்புகிறார்கள், உரிமையை அல்ல. [/size]

[size=4]ஆக, புலம்பெயர் புண்ணாக்குகள் தான் இன்றும் தமிழீழம், போராட்டம், விடுதலை, புறக்கணிப்பு, போர் குற்றம்.. என பிழைப்பிற்காக குரல் கொடுத்தவண்ணம் உள்ளனர் " <_< [/size]

[size=4]" நுஹ்மான் கூறியதை பார்த்தேன். ஆகா அதுவெல்லவோ ஆய்வு. [/size]

[size=4]எமது வரலாற்றில் அ, ஆ, இ தெரிந்தால் தான் நாம் எமது அடுத்த கட்டத்தை சரியாக நகர்த்த முடியும்.[/size]

[size=4]இந்த சனநாயக தேர்தல் முடிவோ, அந்த மக்கள் அதன் ஊடாக சொல்லும் செய்தியோ அல்ல " :( [/size]

  • கருத்துக்கள உறவுகள்

படித்த பண்ணாடைகளை நான் எப்பொழுதும் நம்புவதில்லை. அவர்களது குறி முழுவதும் சுயநலம் மட்டுமே.

கிழக்கு தேர்தல் தொடர்பான ஆய்வு கட்டுரையை யாழ் கள உறவிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4][size=5]கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: உண்மையான வெற்றி வெற்றி?[/size]

(கே.சஞ்சயன்)

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போலவே, முடிவுகளை தந்துள்ளது. கிழக்கின் இனப்பரம்பல் காரணமாக யாருக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்தும் என்ற கணிப்பு தப்பாகிப் போகவில்லை.[/size]

[size=4]அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்பவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை.

தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கலாம் என்றே கூறியது. அதாவது முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைப்பதிலேயே அதிக நம்பிக்கை கொண்டிருந்தது.[/size]

[size=4]அவர்களுக்கு இது ஒரு சாதகமான நிலை என்றே கூறலாம். கிழக்கின் சனத்தொகையில் சுமார் 40 வீதமே தமிழ் மக்கள். இவர்களில் வாக்களித்தவர்களில் கிட்டத்தட்ட [/size][size=4]30.59 வீதத்தினரின் [/size][size=4]ஆதரவை அது பெற்றுள்ளது.[/size]

[size=4]அம்பாறையில் 18.33 வீதம் தமிழர்களாக இருந்த போதும், வாக்களித்தவர்களில் 16.28 வீதத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்துள்ளனர்.

திருகோணமலையில் 28.75 வீதத்தினரே தமிழர்கள். ஆனால் வாக்களித்தவர்களில் 29 வீதமானவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளனர்.

மட்டக்களப்பில் 74 வீதம் தமிழர்கள். இங்கு வாக்களித்தவர்களில் 51 வீதமானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புக் கிடைக்காது போனாலும் கூட, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோல்வியாக கருதப்படாது. அவ்வாறு கருதுவதும் முட்டாள்தனம். ஏனென்றால் கிழக்கின் இனப்பரம்பல், அவ்வாறானது.[/size]

[size=4]http://www.tamilmirr...3-15-34-52.html[/size]

நண்பர்கள் அன்பர்களுக்கு, இந்த கட்டுரை கொடுத்த விளங்கத்தை இட்டு பெரும் புளகாங்கிதம் அடைகிறேன்...முக்கியமாக அவர்கள் ஏற்ருக்கொளுகிரார்கள், கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 30 வீத வாக்கு வங்கியே உண்டெனவும் ஆகையால் அவர்களால் தனித்து ஒரு மாகாண அரசு அமைக்க முடியாது எனவும், மற்றைய சமூகங்களை சார்ந்து தான் ஆட்சி அமைக்க முடியும் எனவும், அவர் முஸ்லீம் காங்கிரஸ் காராகவோ இருக்கலாம் எனவும், இந்த சனத்தொகை பரம்பலில், வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழீம் என்பன எங்களது கற்பனைக்கு எட்டாத விடயம் என்பதையும் அவர்கள் ஐயம் திரிபுர தமிழ் மிரர் என்கிற முஸ்லீம் பத்திரிக்கை ஊடக அறிந்ததை இட்டு மிகுந்த துயமும் அதேநேரத்தில் சகோதர்களுக்கு ஏற்றபட்ட அறிவு விருத்தியையும் கண்டு கண்ணார கண் குளிர்ந்து போயுள்ளேன்...

கூட்டமைப்பு நிச்சயமாக தனித்து ஆட்சி அமைத்திருக்க முடியும். அது நடைபெறவில்லை. தமிழர்களின் துரதிஷ்டம் மட்டுமே.

இதற்கு உண்மையான களநிலபர பாண்டித்துவம் தேவை இல்லை.

கூட்டமைப்பு பெற்றது ..........................................................................................................................................................................................11

திருமலை சம்பந்தர் திருமலையில் எதிர்பார்த்தது..............................................................................................................................1

மட்டகளப்பு மின்சார நிலையம் திருடியது ..............................................................................................................................................1

அம்பாறையில் மிரட்டப்பட்டதால் நல்ல வேட்பாளர்கள் முன்வராது இழந்தது .....................................................................1

3 மாவட்ட வாக்காளர்கள் மிரட்டப்பட்டதால் வாக்களிக்க முன்வராதால் இழந்தது(குறைந்த வாக்களிப்பால்)..........3

வெற்றி வெகுமதி உறுப்பினர்................................................................................................................................................................................2

கிடைத்திருக்க வேண்டியது............................................................................................................................................19

Edited by மல்லையூரான்

மன்னாரில் ஆமி வர பி.பி.சீ பேட்டிக்கான இளந்திரையன் சொன்னார் ஆமி மடுவிற்கு வந்தால் நாங்கள் மதவாச்சியில் நிற்போம் என்று ,புண்ணாகுகள் விசிலடிதார்கள் .

கிளிநொச்சிக்கு ஆமி வர ஸ்டாலின்கிராட் யுத்தம் எப்படி நடந்து முடித்து தெரியுமா என புலிகள் சொல்ல ரஷ்யாவெ தெரியாதா வெங்காயங்கள் எல்லாம் விட்டிட்டு அடியை பார் என்று துள்ளித்குதிதார்கள்.

கடைசியில் முள்ளிவாய்காலில் நின்று ஆமிக்காரன் அடுத்த பக்கம் இருக்கும் மக்களையும் புலிகளின் நடமாட்டத்தையும் காட்டி வெண்ணிலவே வெண்ணிலவே பாட்டை வேறு உரத்து போட்டு மக்களை தங்களிடம் வரச்சொல்லி அறிவிக்கின்றான் ,நடேசன் சொல்லுகின்றார் "நாம் நடந்து போய் அடிக்க கூடிய தொலைவில் ஆமி வந்து நிற்கின்றது" என்று .சிறிலங்காவின் முக்காலவாசி ஆமி சரி தாளப்போகினம் என கொக்கரிக்கின்றார்கள் .

எங்களுக்கு தெரியும் ---------- கழர போகின்றது என்று .

புலியும் அப்படிதான் சொல்லும் கூட்டமைப்பும் அப்படிதான் சொல்லும்.இதை கேட்டு நீங்களும் விசிலடித்துகொண்டே இருக்கலாம்.

உலகம் எங்களுக்கு சார்பாக சொன்னால் தூக்கி பிடிப்பதும் மாறாக இருந்தால் காசு வாங்கிவிட்டான் அல்லது றோ ,சிறீலங்கா புலனாய்வு ,கருணாவின் ஆள் ,ஒட்டுக்குழு ....... இப்படியே அடுக்கலாம் .

சுயபுத்தி ?.இதைதான் படிப்பு என்று நான் எழுதுவது .அது பட்ட படிப்பு அல்ல .பட்டறிந்த படிப்பு .

அது இல்லாவிடில் தமிழ்நாட்டில் கருணாநிதி சொல்ல கை தட்டி விட்டு போபவர்கள் போல் காலம் பூரா இருங்கோ ,தலையில் வாறவன் போறவன் எல்லாம் அரைத்துக்கொண்டு போய்கொண்டே இருப்பான் .

அரிச்சுன்: அண்மையில் கிழக்கில் ஒரு தேர்தல் நடந்து முடிந்ததாம். நாலும் அறிந்த நீங்கள் அதையும் பற்றிக்கேள்விப்பட்டிருப்பீர்கள். எல்லாவற்றையும் பற்றி எழுதும் நீங்கள் அதையும் பற்றி கொஞ்சம் எழுத முடியுமா?

ஐயோ

மல்லை

அந்த மக்களின் தீர்ப்பினால் ஏற்பட்ட கோபத்தைத்தான் மேலே மன்னார் மதவாச்சி என்று எரிந்துள்ளார்

கிழக்கு தேர்தல் பற்றி,

தினமும் காலை சி.ரி.ஆர் கேட்பேன் .கிழமையில் எப்படியும் ஒருநாள் கூட்டைமைப்பு எம்.பி மாரை பேட்டி எடுப்பார்கள் .சம்பந்தன் போனவருடம் சில இடக்கு முடக்கான கேள்விகளால் போனை அடித்து வைத்த பின் பேட்டிக்கு வருவதில்லை .கிழக்கு மாகாண தேர்தல் அறிவித்த பின் வந்த கூட்டைமைப்பு எம்பி க்கள் அனைவரும் பெரும்பான்மை தமக்குத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உடன் கூட்டு வைப்போம் என்ற தொனியில் தான் பேசினார்கள் .தேர்தலுக்கு முதன் நாள் அங்கிருந்து பேசியவர் சொன்னார் தொண்ணுறு வீத தமிழ் மக்களும் வாக்குகள் போட்டால் அறுதிபெரும்பான்மை என்றும் அது கிட்டும் போல இருக்கு என்றும் சொன்னார் .பின்னர் சம்பந்தரும் வானொலியில் வந்தார் (வாக்கு முக்கியம் ) உறவினர்கள் ,நண்பர்களுக்கு அழைத்து மறக்காமல் வாக்கு போட சொல்லவும் என்றார் .

அவர்கள் போட்ட கணக்கிற்கு தேர்தல் முடிவுகள் முற்றிலும் தோல்விதான்.விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது அரசியலில் மிக சகஜம் .

அரிச்சுன்: ரவூப் கக்கீம் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று சில பத்திரிகைகள் கூறுகின்றன. நடப்பதை பொறுத்திருந்து பார்த்துவிட்டுத்தான் பதில் எழுத முடியும்.

தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கும், தமிழ் பேசும் உறவுகளுக்கும் குந்தகம் விளைவிக்காமல் அரசியல் நேர்மையுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவுகளை எடுக்கும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அதேவேளை, அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களைப் பறித்தெடுத்து ஆட்சியமைக்க எவராவது முயற்சிப்பார்களாயின் அவர்கள் தமது விரல்களால் தமது கண்களையே குத்திக் கொண்டவர்களாகி விடுவார்களென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண அரசியல் நிலைவரம் குறித்து கருத்துத் தெரிவித்த ரவூப் ஹக்கீம், மேலும் கூறியவை வருமாறு:

'கிழக்கில் தமிழர்கள் முஸ்லிம்களை ஆள்கிறார்களா, முஸ்லிம்கள் தமிழர்களை ஆள்கிறார்களா என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை. பிரிந்து நிற்கின்ற கிழக்கில் இணக்கப்பாட்டுடனான ஆட்சியே முக்கியம்.

முஸ்லிம்களின் சுயாட்சி, சுயநிர்ணயம், அவர்களின் அபிலாஷைகள் என்பன இந்த வெற்றிக்குப் பின்னர் பேசவேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் அதிகாரப்பகிர்வை நுகரும் இடம் கிழக்கு என்பதால் மாகாண ஆட்சி வெறுமனே தலையாட்டும் பொம்மை ஆட்சியாக இல்லாமல், நீதியாக செயற்படும் அதிகாரமுள்ள ஆட்சியாக இருக்கவேண்டும். இந்த நிலைமைகளை நாம் எமது உறுப்பினர்களுக்குத் தெளிவாகச் சொல்லியுள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களை எடுத்து ஆட்சியமைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இப்படியானதொரு நடவடிக்கை நடந்திருந்தால் அது உண்மையில் ஓர் ஆரோக்கியமான விடயமல்ல.

சிறுபிள்ளைத்தனமானதாகவே அது கருதப்படும். சர்வதேசமே இந்த அரசியல் சூழ்நிலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆட்களைப் பறித்து ஆட்சியமைக்க முயற்சித்தால் அது தமது விரல்களாலேயே அவர்கள் கண்களைக் குத்திக்கொள்கிறார்கள் என்றே அர்த்தம்.

தமிழ் பேசும் சமூகங்களின் அபிலாஷைகளுக்குக் குந்தகமான விதத்தில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது. அதை மட்டும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன்' என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=319616d9-07f3-4eb9-bed1-f236a0e60d1f

கையில் "சமகாலம்" எனும் இலங்கையில் இருந்து வரும் சஞ்சிகை இருக்கின்றது .அதில் சி.குருநாதன் என்றவர் சம்பந்தனை பேட்டி கண்டிருக்கின்றார் .முழுவதையும் எழுதாமல் சம்பந்தரின் தேர்தல் பற்றிய ஒரு பதில்.

சிறீலங்கா அரசு முஸ்லிம் காங்கிரஸ் பங்காளியாக அரசில் இருப்பதன் நிமித்தம் மாகாணசபை ஆட்சியை கைப்பற்றுவது இலகுவாக இருக்கும் என்று நினைத்தது.முஸ்லிம் காங்கிரஸ் தனியாக போட்டியிடும் முடிவை அறிவித்தபின் இந்த தேர்தல் நிலைவரத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டது .

தற்போதைய சூழலில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்ற அரசாங்கத்தின் முடிவு தவுடு பொடியாகிவிட்டது.தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடிய ஆசனங்களையும் கூடுதல் வாக்குகள் பெறுகின்ற கட்சியாக வருவதற்கு போதிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன.திருப்புமுனை ......... இப்படியே பத்தி நீண்டு கொண்டு போகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

எழுபது சத வீத தமிழ் மக்கள் கிழக்கில் கூட்டமைப்பிற்கு வாக்களிக்காவிட்டாலும்

எதிர்க்கட்சிகள் கடந்த தேர்தலை விடக் குறைவான வாக்குகளைப் பெற்றதால்

கூட்டமைப்பிற்கு அமோக வெற்றிதான் போங்கோ

சிங்களவன் எல்லாம் தெரிந்துதான் விகிதாசாரத்திக் கொண்டு வந்தவன்.

அந்த விகிதாசாரத்தை வைத்தே நாங்களும் மகிழ்ந்து போகின்றோம்,

எதோ சிங்களவனுக்கு சார்பாக எழுதுவது மாதிரி சண்டைக்கு வராதீர்கள்.

உண்மை நிலையறியாமல் நாம் யாராலும் ஏமாற்றுபடக்கூடாது.நாம் கூட்டமைப்புக்குத்தான் அதரவு ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.(சுத்துமாத்து நடந்தது அதையும் கூட்டமைப்பு எதிர்பார்த்தது).

போனஸ் சீட் இரண்டும் கிடைத்து முஸ்லிம் காங்கிரசுடன் மட்டும் கூட்டு என்ற நிலை வந்திருந்தாலே வெற்றிதான்.

அதுவும் நடக்கவில்லை.

போலியாக எம்மை நாமே திருப்தி படுத்துதல் எனக்கு உடன் பாடு இல்லை .புள்ளிவிபரம் என்று ஒன்று இருக்கு .

  • தொடங்கியவர்

[size=4]தமிழ்மிரர் ஒரு முஸ்லீம் பத்திரிகை ?[/size]

[size=4]இது ஒரு சிங்கள ஊடக அமைப்பின் ஒரு பிரிவு.[/size]

[size=4]விஜயா பத்திரிகை குடும்பத்தில் பல பத்திரிகைகள் உள்ளன, அதிகளவில் உள்ளவை ஆங்கில ஊடகங்கள். [/size]

  • தொடங்கியவர்

[size=4]இந்த கட்டுரையை எழுதியவர், அது யாராகவும் இருக்கலாம், புள்ளிவிபரங்களை ஆராய்ந்து எழுதியுள்ளார். நிலைமையை, கடந்த காலங்களில் ஏற்பட்டு வரும் தமிழன விகிதாசார குறைப்பை, அதன் தாக்கத்தை காட்டியுள்ளார்.[/size]

[size=4]ஒன்று - இதுதான் யதார்த்தம் என கூறி அதற்குள்ளேயே வாழ வழிசமைப்பது.[/size]

[size=4]இரண்டு - இதன் முடிவுகளை எமக்கு சாதகமான முறையில் பயன்படுத்துவது.[/size]

[size=4]- அதிகளவில் வாக்களித்த தமிழர்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்தமை[/size]

[size=4]- நாளை வடக்கிலும் இந்த நிலைமையை ஏற்படுத்த சிங்களம் திட்டமிட்டு குடியேற்றங்களை செய்கின்றது என உரியவர்களிடம் கூறுவது[/size]

  • தொடங்கியவர்

[size=4]தென்சூடானில் நடந்த ஐ.நா.வால் கண்காணிக்கப்பட்ட வாக்கெடுப்பில் எவ்வாறு மக்கள் வாக்களித்தனர்?[/size]

[size=4]- ஒரு குறிப்பிட்ட காலத்தின் முன்னர் அந்த பூர்வீக பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க முடிந்தது[/size]

[size=4]- வாக்களித்தவர்களில், புலம்பெயர்ந்த பூர்வீக மக்களும் உள்ளடக்கப்பட்டனர்[/size]

[size=4]ஐம்பது டாலரும் இல்லாமல் அகதியாக வந்த சாதாரண தமிழர்கள் இருபது வருடத்தில் புலம்பெயர் தேசங்களில் பல சாதனைகளை வெற்றிகளை காணமுடியுமானால், ஒரு இனமாக காண முடியும். [/size]

[size=4][size=4]எதையும் சாத்தியமாக்குவது அவரவர் முயற்சியில் தான் உள்ளது.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இந்த கட்டுரையை எழுதியவர், அது யாராகவும் இருக்கலாம், புள்ளிவிபரங்களை ஆராய்ந்து எழுதியுள்ளார். நிலைமையை, கடந்த காலங்களில் ஏற்பட்டு வரும் தமிழன விகிதாசார குறைப்பை, அதன் தாக்கத்தை காட்டியுள்ளார்.[/size]

[size=4]ஒன்று - இதுதான் யதார்த்தம் என கூறி அதற்குள்ளேயே வாழ வழிசமைப்பது.[/size]

[size=4]இரண்டு - இதன் முடிவுகளை எமக்கு சாதகமான முறையில் பயன்படுத்துவது.[/size]

[size=4]- அதிகளவில் வாக்களித்த தமிழர்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்தமை[/size]

[size=4]- நாளை வடக்கிலும் இந்த நிலைமையை ஏற்படுத்த சிங்களம் திட்டமிட்டு குடியேற்றங்களை செய்கின்றது என உரியவர்களிடம் கூறுவது[/size]

கூட்டமைப்பிலிருந்து ஒருசிலரை வெளியேற்றி ஒருசிலரை உள்வாங்கி

இளைய புதிய தலைமையின்கீழ் கூட்டமைப்பு வந்தால் மட்டுமே

சிங்களத்தின் இறுமாப்பை உடைத்து தமிழ் மக்கள் அனைவரும் ஒருகுடையின் கீழ்

ஒன்றாக சிங்களத்திற்குச் சவாலாக இருக்கலாம்.

இல்லையேல் கிழக்கு மட்டுமல்ல வடக்கும் ஒட்டுக் குழுக்களின் ஆதரவுடன்

சிங்கள பௌத்த இனவாத அரசின் கட்சியினால் ஆழப்படும் காலம்

வெகுவிரைவில்வரும்

  • கருத்துக்கள உறவுகள்

சத்திர சிகிச்சை வெற்றி.. ஆனால் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்பதுதான் இந்தக் கட்டுரையை வாசித்தபோது நினைவுக்க வந்தது. கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு தமிழர்களிடம் இருந்தும் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியைக் கைப்பற்றமுடியவில்லை. அடுத்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் 90 வீத ஆதரவு கிடைத்தாலும் கூட்டமைப்பால் தனித்து ஆட்சி அமைக்கமுடியாது என்பது கவலையைத் தருகின்றது!

நுஃமானின் நேர்காணலில் இருந்து!

தமிழ் பேசும் மக்களுக்குரிய அரசியல் எதிர்காலம் என்ன?

அது பெரிய கேள்விக்குறிதான். அவர்களின் அடிப்படை வாழ்வே கேள்விக்குள்ளாகி இருக்கிறது. சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாதிருக்கிறது. இன்றைய நிலைமையில் சிங்களத் தீவிரவாதம்தான் மேலோங்கியுள்ளது. அது சிறுபான்மையினரின் உரிமைக்குச் சாதகமாக இல்லை. தோல்வியில் முடிந்த முப்பது ஆண்டு யுத்தம் சிறுபான்மையினரின் அரசியலைச் சிக்கலான இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அது அண்டிப் பிழைப்போரின் அரசியலாகியிருக்கிறது. மைய நீரோட்டத்தில் மாற்றங்கள் ஏற்படாதவரையில் இது தொடரும் என்றுதான் தோன்றுகின்றது.

சம்பந்தர் தெரியபட்டவர்களுடன் நடத்திய கூட்டத்தில் தெளிவாக சொல்லியுள்ளார் அரசின் சில நடத்தைகளால் தமிழ் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழப்பார்கள் என்று.

அவரின் தலைமை கேள்வி கேக்க ஒரு அவசரமும் வரவில்லை. அவர் சில செய்திகளை அரசுக்கு தெளிவாக சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் கிழக்கில் எப்படியான அரசு அமைகிறதென்பதை பார்த்துதான் சொல்ல வேண்டும்.

நாம் இங்கே(பத்தரிகைகள்) எழுதுபவற்றால்த்தான் அரசு தேசிய அரசு அமைத்து தான் தப்பிக்க முயன்றது. யார் அரசு அமைக்கிறார்கள் என்பதை பார்த்துத்தான் அடுத்ததை கதைக்கலாம்.

  • தொடங்கியவர்

கூட்டமைப்பிலிருந்து ஒருசிலரை வெளியேற்றி ஒருசிலரை உள்வாங்கி

இளைய புதிய தலைமையின்கீழ் கூட்டமைப்பு வந்தால் மட்டுமே

சிங்களத்தின் இறுமாப்பை உடைத்து தமிழ் மக்கள் அனைவரும் ஒருகுடையின் கீழ்

ஒன்றாக சிங்களத்திற்குச் சவாலாக இருக்கலாம்.

இல்லையேல் கிழக்கு மட்டுமல்ல வடக்கும் ஒட்டுக் குழுக்களின் ஆதரவுடன்

சிங்கள பௌத்த இனவாத அரசின் கட்சியினால் ஆழப்படும் காலம் வெகுவிரைவில்வரும்

[size=4] மிகப்பெரிய இராணுவ பிரசன்னம், ஒட்டுக்குழுக்கள்,.... நமக்கு ஏன் தேவையில்லாத வேலை? [/size]

[size=1]

[size=4]இதனால் தான் அங்கே யார் வந்தாலும் எதையும் சாதிக்க முடியுமா? என்ற நிலை. சரி இதனையும் மீறி இந்த கூட்டமைப்பு புலம்பெயர் மக்களிடம் பத்தாயிரம் டாலர்களை தேர்தலுக்கு முக்கியமான பிரச்சாரத்திற்கு கேட்டது - அது கூட அவர்களுக்கு கிட்டவில்லை (எமது கள உறவு கஜன் ஆயிரம் டாலர்களை அன்பளிப்பு செய்து யாழ் களத்தை பெருமைப்படுத்தினார்) . [/size][/size]

[size=1]

[size=4]இங்கேதான் புலம்பெயர் மக்கள் பலவேறு வழிகளால் சிங்களத்தை பலவீனமாக்க வேண்டிய தேவை உள்ளது: பரப்புரை, போர்க்குற்ற அழுத்தங்கள், ஐ.நா. மனித உரிமை அமர்வுகள், பொருளாதார தடை என்பன அவற்றில் சில. [/size][/size]

[size=1]

[size=4]ஏனெனில் தமிழர்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு நாட்டுக்கு வெளி அழுத்தம் மூலம் மட்டுமே சாத்தியம். [/size][/size]

இலங்கையில் இதுவரையில் தாக்கபட்டவர்கள். தமிழர்கள். போர்வரையும் முதல் சிறுபான்மையர். வடக்கு-கிழக்கு தமிழர். இலங்கையில் மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகம் மலையகத்தமிழர். இன்றைய(அரசின் படி) முதல் சிறுபான்மை. முஸ்லீம்கள். அவர்கள் இதுவரை பெரும்பான்மையால் பாரதூரமாக ஒதுக்கப்படவில்லை. ஆகவே தீர்வா, இணக்க அரசியலா என்பதை தீர்மானிக்க அவர்களிடம் பொறிமுறை இல்லை.

தீர்வு எப்படி இருக்கும் என்பது தெரியாது.

வடக்கு-கிழக்கை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு தீர்வு தேடும் ஆற்றல் உண்டு. தீர்வில் உள்ளடக்க படுபவர்கள், வடக்கு-கிழக்கில் வசிப்போர், வடக்கு கிழக்கில் இல்லாமல் இலங்கையில் வசிப்போர் (கொழும்பு, புத்தளம்,சிலாபம்), இலங்கைக்கு வெளியில் அகதிகளாக உரிமைகள் பெற்றோர், பெறாதோர். மலைய மக்களுக்கு தீர்வு தேடும் ஆற்றல் அருகிவருகிறது. எனவே வடக்கு-கிழக்கு தீர்வில் அவர்களும் பங்கு தாரர்கள். அவர்கள் சம்பந்தமான வாக்கெடுப்பு தேவை இல்லை. அவர்கள் தம்மில் பிரிவுகளை அமைத்து தன்னும் தீர்வை பெற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும். அதாவது. குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் வடக்கு கிழக்கில் குடியேற விருப்பத்தின் பேரில் விண்ணப்பிக்க சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். இது சிறிமா - சாஸ்திரி உடன் படிக்கை மாதிரி இல்லாமால் மனித தன்மையானதாக இருக்க வேண்டும் . வடக்கு கிழக்கு முஸ்லீம்களுக்கு அவர்கள் இது வரையில் தேவையை உணராவிட்டாலும் தொலை நோக்கில் அவர்கள் சிங்களம் படித்து சிங்கள இடத்து முஸ்லீம்கள் மாதிரி அவர்களுடன் சங்கமமாகி சலுகை பெற்று வாழ்வது எளிதல்ல. எனவே தீர்வில் பங்கு பற்ற அவர்கள் முன் வரவேண்டும். தீர்வில் பங்கு பற்றாதவிடத்து அம்பாறையை இணையாமல் வடக்கு கிழக்கை இணைக்கலாம்.

தற்கால அனுமானத்தில் வடக்கு கிழக்கில் இல்லாத முஸ்லீம்கள் தீர்வில் இல்லை. வடக்கு-கிழக்கை பூர்வீகமாக கொள்ளாதவர்களுக்கு தீர்வின் ஆதாயங்களில் பங்கிருக்காது (கண்டி, மாவனெல்ல, புத்தளம்). ஆனால் அவர்கள் தீர்வில், தீர்வு தீர்மானிக்க முதல் பங்கு பற்ற விரும்பினார்களாயின் தீர்வில் புத்தளம், சிலாபம், அம்பாறை நிலப்பகுதிகள் கட்டயாமாக இணைக்கப்பட வேண்டும்.

தீர்வை, நாட்டை எப்படி பிரிப்பது என்பதில் அல்ல அக்கறை செலுத்தவேண்டும். தீர்வால் எப்படி இனப்பிரச்சனையை தீர்ப்பது என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும். அரசு வன்முறையாக குடியேற்றுவதால் தீர்வின் பின் வன்முறையாக குடியெழுப்ப முடியாது. விருப்பதின் பேரில் பல மீள் பரிவர்த்தனை இடம் பெற வேண்டும். பூர்வீக தமிழ் நிலங்கள் தீர்வில் உள்ளடக்கப்பட வேண்டும். ஆனாலும் மக்களுக்கு விருப்படி இடம் பெயர்ந்து தீர்வை அனுபவிக்க நிலங்கள் பங்கிடப்படவேண்டும்.

எனவே வடக்கு கிழக்கில் நடக்கும் பொதுசன தேர்தல் தீர்வை நிர்ணயிக்க முடியாது. இதில் தோற்றாலும் வென்றாலும் தீர்வின் முன்னெடுப்புக்கள் தொடர வேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.