Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]Najeeb-A_Majeed(1).jpg[/size]

[size=2][size=4]கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=2][size=4]http://tamilmirror.l...8-08-08-22.html[/size][/size]

  • Replies 109
  • Views 6k
  • Created
  • Last Reply

முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி இல்லையா? அவர்கள் கேட்ட அமைச்சர் பதவியும் கிடைக்காமல் போனாலும் ஆச்சரியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி இல்லையா? அவர்கள் கேட்ட அமைச்சர் பதவியும் கிடைக்காமல் போனாலும் ஆச்சரியம் இல்லை.

மகிந்தா சிந்தனை.....சர்வதேசத்திற்க்கு ,தேசியகட்சி(சிறிலங்கா தேசியம்)யில் முஸ்லிம்கள் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கின்றனர் என காட்டவேண்டும் பாருங்கோ தமிழ்தேசியமும் தோல்வி,முஸ்லிம் தேசியமும் தோல்வி...சிறிலங்கா தேசியம் வெற்றி(மறைமுகமாக சிங்கள தேசியம் வெற்றி)

[size=4]இந்த செய்திகளில் முஸ்லீம் காங்கிரசிற்கு என்ன எலும்புகள் போடப்படன என வெளிப்படையாக இன்னும் குறிப்பிடவில்லை. முஸ்லீம் மக்களுக்கு நல்ல பாடத்தை மீண்டும் அதன் தலைமைகள் புகட்டியுள்ளன. [/size]

[size=1]

[size=4]மகிந்தர் இந்திய பயணத்திற்கு முன்னர் இதையும் செய்து, சம்பந்தரையும் அழைத்து கதைத்துள்ளார். பார்க்கலாம் இந்தியா என்ன சொல்லும் என்று. [/size][/size]

[size=4]கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/48858-2012-09-18-10-18-20.html

  • கருத்துக்கள உறவுகள்

உவரின்ர ஆலோசனையிலதான் முதலமைச்சரைத் தெரிவு செய்திருக்கிறாங்க போல.

"தன்னை வெட்டக் கைப்பிடிக்குக் கிளைகொடுத்தாரே - மச்சான்

தம்பிதனை முதல்வராக்க வழியமைத்தாரே

அன்னை தமிழ் ஏங்கியழ அவர் சிரித்தாரே - மச்சான்

அவனியிலே தியாகியென்ற பெயரெடுத்தாரே'

போடு! தந்தனக்க தானனா தந்தனக்க தானனா..."

இப்போதைக்கு இது போதும்.

தமிழன்கள் பேய்ப் பூ ஆண்டிகள்

Edited by karu

1347966635hief.jpg கிழக்கு முதலமைச்சராக நஜீப். ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இன்று மதியம் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் அரசுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டை அடுத்து இந்நியமனம் வழங்கப்பட்டு உள்ளது.

உடன்பாட்டின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சிக்கு கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும்.

--------------------------------------------------------------------------------------------------------------------

முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான நஜீப். ஏ. மஜித் இன்று மதியம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமனம் பெறுகின்றார் என்று உள்நாட்டு முஸ்லிம் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப். ஏ. மஜித் தெரிவு செய்யப்பட்டு உள்ளார் என்றும் நாட்டின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்கிற வரலாற்றுப் பெருமைக்கு உரித்தாகி உள்ளார் என்றும் இவ்வூடகங்கள் மார்தட்டி உள்ளன.

najeeb+a+majeed.jpg

முதலமைச்சராக அவர்தான் ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டு உள்ளார் என்றும் இன்று மதியம் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்கின்றார் என்றும் இவ்வூடகங்களுக்கு மஜித் அடித்துச் சொல்லி உள்ளார்.

குறிப்பாக யாழ் முஸ்லிம் இணையத் தளத்துக்கு பிரத்தியேக பேட்டியும் வழங்கி உள்ளார்.

யாழ் முஸ்லிம் இணையத் தளத்துக்கு மஜித்தால் வழங்கப்பட்டு உள்ள பிரத்தியேக பேட்டியை மீள் பிரசுரம் செய்கின்றோம்.

“ எனது தந்தை 17 வருடங்களாக எம்.பி.யாக இருந்து மக்கள் சேவையாற்றினார். நான் 13 வருடங்களாக எம்.பி.யாக இருந்தேன். தற்போது முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் நிலையில் அச்சமூகத்தை சேர்ந்த ஒருவரையே ஜனாதிபதி முதலமைச்சராக நியமித்துள்ளமை பெருமையளிக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் வாழும் எல்லா மக்களையும் சென்றடையக்கூடிய வகையில் எனது சேவைகள் அமையும். தேர்தல் காங்களில் நாம் வாக்குகளை அடிப்படையாக கொண்டு செயற்பட்டிருக்கலாம். அல்லது உரையாற்றியிருக்கலாம். இருந்தபோதும் அதையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு தற்போது மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த வாய்ப்பை நாம் முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அரசில் கட்சி சார்பின்றியே எனது சேவைகள் தொடரும். ஏனைய கட்சிகளுடைய அபிப்பிராயங்களையும் செவிமடுக்க நான் தயாராகவுள்ளேன். அந்த கட்சிகள் முன்வைக்கும் நல்ல திட்டங்களுக்கு நிச்சயம் ஒத்துழைப்பு நல்குவேன். கிழக்கு மாகாணத்தில் மூவின சமூகங்களும் ஒற்றுமையாக வாழும் நிலையில் அந்த ஒற்றுமைக்காக என்னை அர்ப்பணித்துச் செயற்பட தயாராகவுள்ளேன்.

மேலும் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு என்று தனித்துவ பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை வழங்குவேன். குறிப்பாக காணிப்பிரச்சினையை தீர்க்க முன்னுரிமை வழங்குவேன். பேச்சுவார்த்தைகள் மூலம் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென்பது எனது நம்பிக்கை. ஏற்கனவே தோப்பூரில் பேச்சுவார்த்தகைள் மூலம் காணிப்பிரச்சினை சிலவாற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் ஏனைய நடைமுறை பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வை பெற்றுக்கொடுக்க முயல்வேன்.

என்னை முதலமைச்சராக நியமிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அல்லது பஸில் ராஜபக்ஸ ஆகியோரிடமிருந்து எத்தகைய அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. எத்தகைய நிபந்தனைகளும்கூட விதிக்கப்படவில்லை. அவர்களின் நோக்கமெல்லாம் கிழக்கு மாகாண மக்களுக்கு உயர் சேவைகள் சென்றடைய வேண்டுமென்பதுதான். ஏனைய மாகாணங்கள் எத்தகைய அபிவிருத்தியை நுகருகின்றனவோ அதுபோன்று கிழக்கு மாகாணமும் அபிவிருத்தியடைய எனது முதலமைச்சருக்கான முழு அதிகாரங்களையும் முழுமையாக பிரயோகிப்பேன்.

இந்நிலையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர், கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்றவகையில் எனது சேவைகளை முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் கிடைக்கச்செய்யவும் முயற்சிப்பேன். என்மீது நம்பிக்கை கொண்டு இந்தப்பதவியை எனக்கு வழங்கிய ஜனாதிபதிக்கு எனது நன்றிகள். எனது இந்தப் பதவியை தந்தமை மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளதாக நான் கருதுகிறேன்.

இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒரேயொரு சிறிலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் உறுப்பினர் நான்தான். அந்தவகையில் நான் முதலமைச்சராக ஜனாதிபதியினால் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் ஒரு ஊடகம் என்ற வகையில் யாழ் முஸ்லிம் இணையத்திற்கே எனது முதலாவது பேட்டியை வழங்குகிறேன். இதற்காக மகிழ்வடைகிறேன்.

எதிர்காலங்களிலும் யாழ் முஸ்லிம் இணையம் எனது சேவைகள் குறித்து மக்களுக்கும், மக்களின் குறைகள் பற்றி எனக்கும் அறியத்தரும் ஊடகப் பணியை முன்னெடுக்கவேண்டும். ”

http://www.thainaadu.com/read.php?nid=1347942869#.UFhb-GeaKSo

Edited by எல்லாள மகாராஜா

என்னதான் தாயும் பிள்ளையுமா பழகினாலும் வாயும் வயிறும் வேறதானே.

அண்டைக்கு தலைவர் அடிச்சுத் துரத்தினதுக்கு இண்டைவரைக்கும் யாராச்சும் காரணம் தேடிகொண்டிருந்தால்......

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் அடித்துத் துரத்தினார் என்பது தவறான செய்தியாகும். துரத்தியதற்குப் பொறுப்பு வேறு ஆட்கள். இது தலைவரை அவமதிக்கும் செய்தியாகவுள்ளது.

பேய்த்தமிழன் வாழ்க .கிழக்கிலை இன்னும் தமிழன் தான் முதலாவது பெருன்பான்மை இரண்டாவது தான் இஸ்லாமிய தமிழர்கள். ஒரு முஸ்லிம் முதலமைச்சரா வந்ததன் மூலம் இனி ஜென்மத்திற்கும் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை. இப்பிடியே குண்டுச் சட்டிக்கை குதுரை ஓட்டுங்கோ. இதுக்குதான் கருணா பிள்ளையான் போன்ற பரதேசிகள் ஆசைப்பட்டார்கள்.

கிழக்கு மாகாண தமிழர்கள் அனைவரும் மூன்றில் இருந்து ஐந்து பிள்ளைகளாவது பெற்றுகொள்லனும்....அப்போ தான் காக்காக்கு இணையா பறக்கலாம்....

இது நல்ல யோசசனை இதை நடை முறைப்படுத்துங்கள் இதுவே தமிழ் இனத்தின் இருப்பை காத்து நிற்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

03(384).jpg

[size=5]அவர் சொல்லுகின்றார் நாம் செய்கின்றோம். :D [/size]

[size=5]இவங்களை தாங்களாக எதையும் யோசிக்கவிடக்கூடாது .. :icon_mrgreen: [/size]

[size=4][size=5]இரண்டரை வருடங்களின் பின் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி: ஹக்கீம்[/size]

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியானது சுழற்சிமுறையில் வகிக்கப்படவுள்ளது. இதற்கமைய, இரண்டரை வருடங்களின் பின்னர் இப்பதவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது எனவும் முஸ்லிம் காங்கிரஸுக்கு இரு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (லங்காதீப) [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கேதோ சகுனம் சரியில்லாதமாதிரி இருக்கு இது நீடித்து நிலைக்கிறமாதிரி தெரியேல்ல பொறுத்திருந்து பார்ப்போம்.

அரசு 2 1/2 வருடம் பதவியை வைத்திருக்க போகிறது. உலமாகட்சி தலைவர் சொல்வது 2 வருடத்தில் ஆட்சி கலைக்கப்படலாமென்பது. இந்த நாசம் கட்டின மசிரை பார்த்தால் நம்ம கோடாலி காம்பு பிள்ளையானுக்கு அண்ணன் மாதிரி இருக்கு.

எனக்கேதோ சகுனம் சரியில்லாதமாதிரி இருக்கு இது நீடித்து நிலைக்கிறமாதிரி தெரியேல்ல பொறுத்திருந்து பார்ப்போம்.

[size=4]ஆம், இந்திய பிரயாணத்திற்கு முன்னர் செய்யப்பட்ட ஒரு அவசர ஒப்பந்தம். இந்தியாவில் அவர்கள் தர இருக்கும் அழுத்தங்களை குறைக்க போடப்பட்ட முடிச்சு. வந்ததும், இது அவிழும். [/size]

03(384).jpg

[size=4]மீசையுடன் உள்ளவர் : "பணம், பதவி என்றா[/size][size=4]ல்[/size][size=4] [/size]தனது இனத்தின் பிணத்தையே உண்ணும் பிறவிகள்"

[size=1][size=4]மீசை இல்லாதவர்கள்: " உங்களை விட பெரிய எலும்பாக யார் போட்டாலும் உங்களுக்கு பிரியாவிடை தான்"[/size][/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமா சொல்லுறதெண்டா முள்ளிவைக்காளுக்கு பிறகு தமிழர் தரப்பு இரண்டாவது தடவையாக சிங்கள பேரினவாதத்தால் தோற்கடிக்க பட்டிருக்கு.......

மீண்டும் எழ முடியாத தமிழனாக கவலையுடன் சுண்டல்.....

சுருக்கமா சொல்லுறதெண்டா முள்ளிவைக்காளுக்கு பிறகு தமிழர் தரப்பு இரண்டாவது தடவையாக சிங்கள பேரினவாதத்தால் தோற்கடிக்க பட்டிருக்கு.......

மீண்டும் எழ முடியாத தமிழனாக கவலையுடன் சுண்டல்.....

சுண்டல் கவலை படாதையுங்கோ ,காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை .

நாங்கள் விட்ட பிழைகளுக்கான தண்டனை காலம் தான் இது .உலகம் முழுக்க அசிங்கமானவர்களை அரங்கேற்றியது நாங்கள் தான் ,நாட்டில் இருப்பவர்களை விட புலம்பெயர்ந்த இடங்களில் பொறுப்புகளில் இருப்பவர்கள் மிக கேவலம் .

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் பாப்பம் என்ன நடக்க போகுதெண்டு.....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பொறுத்த வரை இனி ஓரு ஜாதர்த்தமாக சிந்தித்து ஜாதர்தபூர்வமான அரசியல் செய்ய கூட்டமைப்பு முன் வரவேண்டும் இல்லை என்றால் மூன்றாவது சிறுபான்மையாக இருக்கும் ஓரு இனம் தான் எங்களை வடக்கிலும் கிழக்கிலும் தமிழனை ஆட்சி செய்ய போகுது.......இணக்க அரசியலுக்கு வரலாம்...... பெரும்பான்மையினர் சில விட்டுகொடுப்புகளுக்கு வர போறதில்ல அத புரிஞ்ச்கொண்டு அரசியல நடத்தணும்....இன்று ஓரு இக்கட்டான நிலையில நாங்க இருக்கம்...... தனித்து நின்று சிங்கள பகுதிகள்ல போட்டி இட்டா கூட இராஜபக்ஷ கட்சி தான் வெற்றி பெற போகுது சிங்கள மக்களின் ஏக பிரதிநித்தியாவும் அவன் ஆகிறான்.... சோ தமிழர் தரப்பு சில விட்டுகொடுப்புகளுடனும் பல நெளிவு சுழிவுகளுடனும் அரசியல் செய்யணும் செய்யுமா?

புறச்சூழல் அகச்சூழல் இவற்றுக்கு ஏற்ப கால மாற்றங்களையும் கருத்தில் எடுத்து இரு தரப்பும் இதய சுத்தியுடன் பேசணும் செய்வாங்களா?

[size=4]சுண்டல்,[/size][size=1]

[size=4]முஸ்லீம் தலைமைகள் அன்று தமிழர் தரப்பு ஒப்பீட்டளவில் பலமாக இருந்தபொழுது எடுத்த அரசியல் நகர்வுகளை இன்றும் மாற்றவில்லை. அதாவது சிங்கள பேரினவாதத்துடன் இணைந்து தமிழர்களின் பலத்தை ஒடுக்கவேண்டும் என்ற சிந்தனையை இன்றும் முன்னெடுக்கின்றனர்.[/size][/size]

[size=1]

[size=4]இந்த நிலைமையை உணர்ந்து மகிந்த கூட்டம் சிறுபான்மை இனத்தை ஒன்றை வைத்து ஒன்றை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]இதை தமிழர் தரப்பும் முஸ்லீம் தரப்பும் உணருவதுடன் மட்டுமல்லாது அதற்கு வடிவமும் தனது செயலில் இறங்கினாலே மாற்றம் சாத்தியம்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது செய்யணும் அண்ணா நிலைமை ரொம்ப மோசமாகுது......இப்பிடியே விட்டுட்டு போக முடியா

பழசுகள கதைச்சுக்கொண்டு இருந்து ஒண்டுமே ஆகபோரதிள்ள இன்னும் இன்னும் பின் நோக்கி போறம்....புதிய சிந்தனையுடன் கூடிய அரசியல் மாட்றம் மன மாற்றம் கண்டிப்பா தேவை

[size=4]தேர்தல் ஆளுநர் வெற்றிபெற்றோர் பட்டியலை வர்த்தமானியில் பிரசுரித்த பின்னரே யார் ஆட்சி அமைப்பது பற்றி கூற முடியும் என சம்பந்தருக்கு கூறினார். [/size]

[size=1]

[size=4]நேரம் மகிந்தாவால் வாங்கப்பட்டது. [/size][/size]

[size=1]

[size=4]இந்திய பிரயாணத்திற்கு முன்னர் தன்னை கிழக்கில் பலம் பொருந்தியவராக காட்ட மகிந்தர் முடிவெடுத்தார். [/size][/size]

[size=1]

[size=4]முஸ்லீம் காங்கிரஸ் மகிந்தாவின் தேவையை உணர்ந்து இறுக்கமாக சில பேரங்களை பேசியவண்ணம் இருந்துள்ளது. மகிந்தாவும் வெளிப்படையாக என்ன விட்டுக்கொடுப்புக்களை செய்யப்போகின்றேன் என கூறவில்லை, காரணம் சிங்கள எதிர்ப்பாளர்கள். ஹக்கீமும் தமக்கு முதலமைச்சர் பதவி இன்னும் இரண்டு அரை வருடத்தில் கிடைக்கும், அமைச்சர் பதவிகளும் கிடைக்கும் என கூறியுள்ளார். [/size][/size]

[size=1]

[size=4]ஆனால் இவை எல்லாம் கிழக்கு வாழ் முஸ்லீம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் என பல முஸ்லீம்களே வெளிப்படையாக கூறுகின்றனர். இவர்களுடன் கூட்டமைப்பு உறவுகளை வளர்க்கவேண்டும்.[/size][/size]

மகிந்தாவின் திட்டம், 11+7+4 இல் ஒரு 10 தன்னும் 2 1/2 வருடத்தில் உடைத்துவிடலாம் என்பதுதான். அதன் பின் மு.கா வை தேவை இல்லை. ஆனல் அவர் அதை மு.கா.வில் மட்டும் செய்தாராயின் மிகவும் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.