Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் காங்கிரஸின் முடிவு ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]முஸ்லிம் காங்கிரஸின் முடிவு ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல[/size]

- யதீந்திரா

சில நாட்களாக ஊகங்களின் அடிப்படையில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்த ஒரு விடயம் இப்போது தெளிவாகிவிட்டது. வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரான திருகோணமலையைச் சேர்ந்த நஜீப் ஏ.மஜீத் கிழக்கு மாகாணசபையின் முதல்வராக சத்தியப்பிரமாணம் எடுத்த செய்தியுடன், அதுவரை ஒரு புதிராக இருந்த முஸ்லிம் காங்கிரஸின் முடிவும் வெள்ளிடைமலையானது. தமிழ் மக்களுக்கு பாதகமான எந்தவொரு முடிவையும் நாம் எடுக்க மாட்டோம், கிழக்கின் முதல்வராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படுவார். அதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – இவ்வாறெல்லாம் ஹக்கீம் சமீபநாட்களாக ஊடகங்களுக்கு தெரிவித்து வந்தார். இறுதியில் அவற்றுக்கு எந்த பெறுமதியும் இல்லாமல் போய்விட்டது. இன்று ஹக்கீம் தன் முடிவால் - தனது கருத்துக்களுக்கு தானே விசுவாசமானவர் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஹக்கீமின் மேற்படி முடிவு தமிழ் சமூகத்திற்கு பெரியளவில் ஆச்சரியமான ஒன்றாக இருக்கப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஹக்கிம் தலைமையில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் இறுதித் தெரிவு பெரும்பாலும் இவ்வாறுதான் அமையும் என்பதை ஏற்கனவே கணிப்பிட்டிருந்தது. எனினும் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலை கையாளும் பிரதான தலைமை என்னும் வகையில், த.தே.கூட்டமைப்பு இயலுமானவரை முஸ்லிம் காங்கிரசின் வருகைக்காக காத்திருந்தது. தனது நிலைப்பாட்டில் உறுதியையும் வெளிப்படைத் தன்மையையும் காண்பித்திருந்தது.

அரசாங்கம் சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கிழக்கின் தேர்தல் வெற்றியை அறிவிக்க முடிந்த போதும், அரசின் சார்பில் போட்டியிட்ட ஒருவரை முதலமைச்சராக நியமித்த பின்னர்தான் உண்மையிலேயே கிழக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதற்காகக்தான் இத்தனை நாட்களாக முஸ்லிம் காங்கிரஸுடன் அரசாங்கம் பேரம் பேசலில் ஈடுபட்டது. கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் - முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஒரு ஆட்சியை அமைத்துவிடக் கூடாது என்பதுதான் அரசாங்கத்தின் பிரதான இலக்காக இருந்தது - அவ்வாறானதொரு கூட்டு ஆட்சி கிழக்கில் ஏற்படுமாயின், அது மத்திய அரசின் தீர்மானங்களை எதிர்க்கும் ஒரு மாகாண ஆட்சியாக அமைந்துவிடும் என்பதே அரசாங்கத்தின் அச்சமாக இருந்தது. இதன் காரணமாகவே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றிபெற்ற ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தது.

வட மகாணசபை தேர்தல் தொடர்பில் அரசின் மீது அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. அத்தகைய அழுத்தங்களை தொடர்ந்தும் அரசால் தட்டிக்கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெரும்பாலும் அடுத்த ஆண்டு தேர்தலை அறிவிக்க வேண்டிய நிலைமையும் ஏற்படலாம். வடக்கில் தேர்தல் இடம்பெற்றால் நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே வெற்றிபெறும். எனவே வடக்கின் மாகாணசபை அதிகாரமும் கிழக்கின் ஆட்சியதிகாரமும் ஒரே சமயத்தில் அரசுக்கு எதிரானவர்களின் கையில் இருக்குமாயின், இவ்விரு மாகாணசபைகளும் ஒன்றிணைந்து செலாற்றுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். ஒன்றிணைந்து தீர்மானங்களை நிறைவேற்றும் நிலைமையும் ஏற்படலாம். இவ்வாறான நிலைமைகளை அரசாங்கம் துல்லியமாக மதிப்பிட்டதன் காரணமாகவே, கிழக்கில் தங்களால் கட்டுப்படுத்தக்கூடிய ஒருவர் முதல்வராக இருக்க வேண்டுமென்பதில் இந்தளவு தூரம் அக்கறை எடுத்துக் கொண்டது. இந்த பின்புலத்தில்தான் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினரான நஜீப் ஏ. மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அரசாங்கம் இவ்வாறு சிந்திப்பது ஆச்சரியமான ஒன்றல்ல ஆனால் தேர்தல் மேடைகளில் அரசுக்கு எதிராக த.தே.கூட்டமைப்பையும் விஞ்சிவிடுமளவிற்கு வார்த்தைகளை தாறுமாறாக அள்ளி வீசிய முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் எவ்வாறு அரசின் முடிவுக்கு இணங்கினார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேராதுவிட்டாலும் கூட, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்குத்தான் ஹக்கீம் முதலமைச்சர் பதவியை கோருவார் என்னும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இறுதியில் அதனையும் ஹக்கீம் தியாகம் செய்திருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்கும் ஒருவருக்கு முதலமைச்சர் ஆசனத்தைத் தருவதற்கு தயாராக இருந்த நிலையிலேயே, ஹக்கீம் இவ்வாறானதொரு விட்டுக் கொடுப்பைச் செய்திருக்கிறார். ஹக்கீம் இத்தகையதொரு விட்டுக் கொடுப்பைச் செய்வதற்கு பின்னணியாக இருந்த காரணி எதுவாக இருக்க முடியும்?

ஹக்கீம் மத்திய அரசில் அமைச்சராக இருந்த நிலையிலேயே கிழக்கில் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்திருந்தார். அந்த வகையில் கிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அதன் தனித்துவமான தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளாகும். இவ்வாறான வாக்குபலத்தைக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பேரம் பேசலில் ஈடுபடுவது தவறான ஒன்றல்ல. யாருடன் இருப்பது தங்களுக்கு உகந்தது என்பதை, பேரம்பேசி தீர்மானிக்கும் உரிமை முஸ்லிம் காங்கிரசுக்கு உண்டு. ஆனால் அந்த பேரம்பேசலின் முடிவு, முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு உதவியதா அல்லது இல்லையா என்பதுதான் கேள்வி. இன்று ஹக்கீம் எடுத்திருக்கும் முடிவிலிருந்து சிந்திக்கும் ஒருவர், ஹக்கீமிடம் அவ்வாறானதொரு உறுதிப்பாடு இல்லை என்பதை காண்பதில் சிரமப்பட வேண்டியதில்லை.

ஹக்கீம் ஏன் இவ்வாறானதொரு முடிவை எடுத்தார் என்பதற்கான விடைகளை ஆராய்வது முஸ்லிம் சமூகத்திற்குரியது. ஹக்கீம் தனது பதவி நலன்களை முன்னிறுத்தித்தான் இத்தகையதொரு முடிவை எடுத்தார் என்பது தமிழ் சூழலின் புரிதலாக இருக்கிறது. ஆனால் இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா? ஹக்கீம் தனது முடிவுக்கான விளைவுகளை விரைவில் அனுபவிப்பார் என இரா.சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அது முஸ்லிம் சமூகத்திற்குள் ஏற்படும் விழிப்புணர்வைப் பொறுத்தது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை - ஒரு அரிய வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமினது முடிவால் கைநழுப் போயிருக்கிறது. தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புக்களை தமிழ் பேசும் மக்களின் அரசியலாக முன்னெடுப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பு இரு பகுதி தலைமைக்கும் வாய்த்தது. இதில் தமிழர் தலைமை உறுதியுடனும் தெளிவுடனும் இருந்தது.

ஹக்கீமினது முடிவு - இதுவரை தமிழ் - முஸ்லிம் உறவு குறித்து உரத்துப் பேசி வந்த குறிப்பாக, அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழர் தரப்பையே அதிகமாக குற்றம்சாட்டி வந்த அனைவருக்கும் ஒரு பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம். இனி தமிழ்-முஸ்லிம் உறவில், தமிழர் தரப்பை நோக்கி விரல் நீட்டும் தகுதிப்பாடு எவருக்கும் இருக்கப் போவதில்லை. முஸ்லிம் சமூகம் விடுதலைப்புலிகளின் மோசமான நடவடிக்கைகளாலும், முஸ்லிம் காடையர்கள் கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பில் தமிழ் மக்கள் மீது புரிந்த அட்டூழியங்களாலும், தமிழ்-முஸ்லிம் வெகுசனங்கள் மத்தியில் ஒரு வெறுப்பும் விரிசலும் ஏற்பட்டிருந்தது உண்மை. ஆனால் இரு சமூகங்களுக்குமான தேவைப்பாடு இவ்வாறான கசப்பான சம்பவங்கள் தந்த அனுபவங்களை கடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை வழங்கியிருக்கிறது. அதற்கான ஒரு அரிய சந்தர்ப்பத்தையும் காலம் வழங்கியது. ஆனால் அதனை சரியாக பற்றிப்பிடித்துக் கொள்ளக் கூடிய தலைமை முஸ்லிம் சமூகத்திற்கு இல்லை.

முஸ்லிம் சமூகத்தின் தலைமை இவ்வாறு நடந்து கொண்டது குறித்து தமிழர் தரப்பில் அதிருப்திகள் உண்டு. ஓர் இக்கட்டான சூழலில் முஸ்லிம் தலைமை காலை வாரிவிட்டது என்னும் ஒரு கருத்து, இன்று தமிழ் வெகுசன அபிப்பிராயமாக மாறியிருக்கிறது. இந்த இடத்தில் முன்னர் முஸ்லிம் சமூகம் விட்ட தவறை தமிழ் சமூகம் விட்டுவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையை இப்பத்தி பதிவு செய்ய விரும்புகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து நிற்க வேண்டுமென்னும் அபிப்பிராயத்திற்கு ஆதரவானவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்தனர். முஸ்லிம் சமூகத்தின் சிந்திக்கும் தரப்பினர் மத்தியிலும் அவ்வாறானதொரு கருத்திற்கு வலுவான ஆதரவு நிலவியது. இவ்வாறானதொரு சூழலில்தான் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இத்தகையதொரு முடிவை எடுத்திருக்கிறார். எனவே தலைமையில் இருப்போரின் முடிவை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் முடிவாக பார்ப்பது தவறானதாகும். முன்னர் புலிகளின் சில முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் முடிவாகவே முஸ்லிம் சமூகம் புரிந்து கொண்டது. இதுவே பிற்காலங்களில் முஸ்லிம்கள் தமிழர் விரோத அரசியலுக்கு முண்டு கொடுப்பதற்கு காரணமாகியது. எனவே முஸ்லிம் காங்கிரஸின் தலைமை தவறான முடிவை எடுத்திருந்தாலும், தமிழ்-முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஆரோக்கியமான உரையாடலுக்கான கதவு இன்னும் திறந்தே இருக்கிறது.

http://www.pongutham...96-60289cd6ebe2

  • கருத்துக்கள உறவுகள்
2768169_o.gif

[size=4]முஸ்லீம் காங்கிரசின் இந்த முடிவைப்பற்றி நுஹ்மான் போன்ற முஸ்லீம் கல்விமான்கள், புத்திஜீவிகள் என்ன கூறுகின்றார்கள் ? என அறிய ஆவலாக உள்ளேன். [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]முஸ்லிம் காங்கிரஸின் முடிவு ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல[/size]

- யதீந்திரா

உது யாரை வைத்து சொல்லுகிறீர்கள்..சும்மா எழுத வேண்டும் என்று எழுத கூடாது...

தேர்தல் அன்று, சம்பந்தன் சொல்லுகிறார் "வெற்றி நிச்சயம்" முடிவு வந்தாப்பிறகு சொல்லுகிறார், முஸ்லீம் கண்ராஸ் உடன் பேசுகிறோம், பிறகு சொல்லுகிறார் அரசமைக்க தயார் என்று....உப்படி எல்லாம் அந்த மனுசனும் யாழ்ப்பாணத்து உதயன் பேப்பரும் போட்ட செய்திகள் என்ன, விளையாட்டே? இவையைளுக்கு முஸ்லீம் காங்கிரஸ் என்ன செய்யும் என்று தெரியாதே?

அதுதான் முடிந்தது என்றாலும் பரவாயில்லை, "பிள்ளையானுக்கே முதல் அமைச்சர் பதவி இல்லை" பிறகு அவரருடை பேட்டிகள்..எண்டு ஒரு பக்கத்தால போனது/ போகுது...இப்படி எல்லாம் சீரியஸ் ஆனா செய்திகள் நடக்கிற, நடந்த நேரத்தில...உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று எழுதுகிராது..கொஞ்சம் ஓவர்...

விருப்பம் எண்டால் எழுதுங்கோ...

வடக்கின் முதல் அமைச்சர் யார்? இப்ப எழுத வேண்டும், அதை விட்டுவிட்டு...எல்லாம் முடிந்த பிறகு...

செத்த பாம்பை அடிக்கிறதுக்கு "உந்த ஆய்வாளர்களுக்கு", இளகின இரும்பை கொல்லன் குண்டியை தூக்கி தூக்கி அடிப்பதர்ற்கு சமம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஓப்பீட்டளவில் ஏனைய கட்சிகளை விட அதிக ஆசனங்களை பெறும் என நினைத்தார்.அது பிழைத்து விட்டது.பின்னர் வென்ற ஆசனங்களை வைத்து கூட்டமைப்புடனும், அரசுடனும் பேரம் பேசலில் ஈடுபட்டதோடு தனது கட்சிக்கு முதலமைச்சர் பதவி தேவை என்ற கோரிக்கையையும் வைத்தார். தமிழர்கட்சியை புறக்கணித்து விட்டு அரசுடன் சேர்ந்தார்.விரும்பிய அமைச்சர் பதவி , பணம் என்பனவற்றை நிச்சயம் பெற்றிருப்பார்.தனது கட்சியின் முதலமைச்சர் கனவையும் விட்டுவிட்டார்.

மகிந்த அரசு சிறுபான்மையினர் கட்சியில் இருந்து யாரும் முதலமைச்சராக வருவதை விரும்பவில்லை.ஆனாலும் சிறுபான்மையினர் ஆயினும் தனது கட்சியில் இருந்து தனது சொல்லுக்கு ஆடுபவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தது. இதனையே வடக்கிலும் திட்டமிட்டு செயற்படுத்த மகிந்த அரசு முனைகிறது.தற்போதைக்கு டக்ளஸ் தனது தேர்வாக இருந்தாலும் இராணுவத்தில் உள்ள ஒரு சிங்களவரை வடமாகாண முதல்வராக அரசு நியமித்தாலும் (ஒரு பேச்சுக்கு தேர்த்தலில் வெல்லுமிடத்து)ஆச்சரியமில்லை.

இன்னொன்றையும் கவனிக்கலாம்.அதாவது தனது கட்சியின் ஆதரவாளராக தமிழராக இருந்தாலும் தமிழரை நியமிக்க கூடாது என்பதில் அரசு மிகக்கவனமாக இருக்கிறது. உ+ம்: பிள்ளையான்.

[size=4]உண்மை.[/size][size=1]

[size=4]ஆனால், பிள்ளையான் போன்றோர் கழுத்தில் பிடித்து வெளியே போ என்று தள்ளினாலும் போக மாட்டார்கள். [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்கள் விடயத்தில் எமது முன்னோர்கள் தீர்க்கதரிசிகள்..... :)

  • கருத்துக்கள உறவுகள்

அட விடுங்கப்பா அரசியல் உங்களுக்கு விளங்கினது இவளவுதான்

  • கருத்துக்கள உறவுகள்

எவ்ளவு தான் ?

யத்தீந்திரா வழமையில் கூட்டமைப்பு எதை செய்ய வேண்டும் என்று பிறிஸ்கிறிப்பசன் எழுதுவதுதான் வழமை. கதவை திறந்து வைத்து அதையே தான் இங்கேயும் செய்து முடித்திருக்கிறார்.

கக்கீம் மதில் மேல் பூனையாக இருந்தார அல்லது மதிலை கடந்து வந்து அரசின் ஒற்றராக தேர்தல் காலத்தில் செயல்ப்பட்டாரா என்று எப்படி தெரியும்? தமிழருடன் இனி பெரிதாக சண்டை போட ஒன்றும், இல்லை; எனவே அரசு முஸ்லீம்கள் பக்கம் திரும்பும் என்று எதிர் பார்க்கிறோம். அது நடந்தால் கக்கீம் பிழை. இல்லையேல் கக்கீம் பிழையா இல்லையா என்று ஆராய்வது கஸ்டம்.

பத்திரிகை செய்திகளை வைத்தென்றால், கக்கீம் இப்படி அடிமை சாசனம் எழுதி சரண் அடைந்ததிற்கு இரண்டை ஊகங்களை மட்டும் கூறலாம்.

1.மிக மிக மிக.. பெரும் தொகை ஒன்று கக்கீமுக்கு கை மாறியது. இதனால் அவர் வெளிப்படையாக உலமாக்கள் முன் கட்சி வேட்பாளர்களிடம் சத்தியவாக்குகள் வாங்கிய பின்னரும் தன் சமூகத்தை ஏமாற்றினார்.

2.கருணாநிதி நிலைமையில் இருக்கிறார். எதை கொடுத்தும் தன்னும், தன்னையும் குடும்பத்தையும் அரசிடமிருந்து காக்க வேண்டிய தேவை தற்போதுள்ளது.

ஆனால் இதை வைத்து யத்தீந்திரா கதவுகள் திறந்திருக்கு என்று சொல்ல முடியாது. கக்கீம்காங்கிரசுக்கு கிடைத்த பிரதி நிதிகளை விட வெளியே தெரியப்பட்ட முஸ்லீம் பிரதிநிதிகள் அதிகம். சிலர் கக்கீம்காங்கிரசில் கூட்டமைபின் இணக்க அரசியலை ஆதரித்தார்கள். இதை கக்கீம் காங்கிரசில் 50% என்று வைத்தால், கக்கீம் காங்கிரசு பெற்றது 50% கீழ்; என்வே 25% கீழ்ப்பட்டோரே கூட்டமைப்புடன் இணக்க அரசியலுக்கு விரும்புகிறார்கள். இதில் நாம் பார்த்தது கிழக்கு மாகண முஸ்லீம்களை மட்டும் என்பதால் உண்மையில் இலங்கை முஸ்லீம்கள் யத்தீந்திரா சொல்லும் "கதவை" அறிந்து வைத்திருக்கவில்லை என்பது திண்ணம்.

ஆனால் முஸ்லீம்கள் இல்லாமல் தீர்வா என்ற கேள்வியின் கதவை மூடுவது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் அதை ஆராய வேண்டிய நிலையில் இப்போது நாம் இல்லை. நமது முதல் எடுப்பு வடக்கு கிழக்குக்கு தீர்வு என்பதாகும். தீர்வு சாத்தியமாகி ஆனால் முஸ்லீம்கள் கிழக்கில் இருந்து தாம் பிரிய வேண்டும் என்றால் மட்டுமே அந்த கேள்வி வரும். இப்போது வடக்கு-கிழக்கு தமிழரின் பாரம் பரிய மண். அங்கு போக யத்தீந்திர வந்து நமக்கு கதவு திறக்க வேண்டியதில்லை.

இருக்க வேண்டிய தேவைக்கு மேலாக முஸ்லீம்களுக்கு விட்டுக்கொடுப்பை வலியுறுத்தும் யத்தீந்திரா போன்ற எழுத்தாளர்கள் தீர்வுமீது தமிழ் மக்கள் வைக்கும் கவனத்தையே கண்வைக்கிறார்கள் என்பதுதான் பொருள். வடக்கு கிழக்கு பிரதேச சபை தேர்தலில் கூட்டமைப்பு வென்றவுடன் யத்தீந்திரா, எழுதியதாக ராஜகுரு என்ற யாழ்கள உறவு யாழில் பதிந்த கட்டுரையின் அடிப்படைக் கருத்து, கூட்டமைப்பு அரசு கொடுப்பதை கேள்வி இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. இன்று அதே யத்தீந்திரா முஸ்லீம்கள் எதை செய்தாலும் அதற்கு கூட்டமைப்பு எதிர்வினை காட்டினால் அது பழி வாங்குதல் என்று பொருள் கொள்ளவைக்க முயல்கிறார். இதற்கு சாட்சியாக யத்தீந்திரா எடுத்த சம்பந்தரின் பேச்சான " [size=4]ஹக்கீம் தனது முடிவுக்கான விளைவுகளை விரைவில் அனுபவிப்பார்[/size]" என்றது உண்மையாக வேண்டுமாயின் அது முஸ்லீம்கள் தான் உணரவேண்டும் என்றும் கூறி தன்னைத் தாந் கதவு திறந்தா அல்லது பூட்டியா இருக்கிறது என்பது தெரியாமல் தடுமாற்றியுமிருக்கிறார்.

கூட்டமைப்பு செய்ய வேண்டியது, ஒவ்வொரு கதவாகத்தட்டி எது தீர்வின் பாதை என்றை தெரிந்து அந்த கதவை திறந்து கொள்வதாகும். நமக்கு என ஒரு தீர்வு கிடைத்தால் அப்போது கூட்டமைப்பு, SJV போன்ற்வர்களின் நேர்மையான நெஞ்சங்களை புரிந்து கொள்ள முஸ்லீம் பொது மக்களுக்கு நேரம் எடுக்காது. அதுவரையும் பிரித்தாளும் தந்திரத்தை உபயோக்கிக்கும் அரசு முஸ்லீம் தலைவர்களுக்கு எலும்புத்துண்டை வீசி ஏதும் கஸ்டமில்லாமல் சங்கிலியில் வைத்துகொள்ளும். (நம்மிடம் பிள்ளையான், கருணா வடகு-கிழக்கு பேதம் கூறி அதையேதான் செய்கிறார்கள்.) அந்த கதவை திறந்ததிருக்கும் முஸ்லீம்களின் கதவு என்று அதை நோக்கி சென்றால் அது காட்டு யானையை பிடிக்க அரசு அனுப்பி வைக்த்திருக்கும் வீட்டு யானையாகத்தான் இந்த முஸ்லீம் தலைமைகள் மாறும். அதாவது அந்த கதவு உண்மையில் அரசு வர்ணிக்கும் எப்போதும் யாரும் வந்து போகும் சலூன் கதவாதாகத்தான் போய் முடியுமேயல்லாமல் யத்தீந்திரா காணும் கனவுக் கதவல்ல.

பி.கு:

ஆனால் தேர்தல் மேடைகளில் அரசுக்கு எதிராக த.தே.கூட்டமைப்பையும் விஞ்சிவிடுமளவிற்கு வார்த்தைகளை தாறுமாறாக அள்ளி வீசிய முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் எவ்வாறு அரசின் முடிவுக்கு இணங்கினார்?
இந்த வசனத்தில் கூட்டமைப்பு தேர்தல் தாறுமாறாக வார்த்தைகளை அள்ளீ விசியதாக கூறீ யத்தீந்திரா தனது வழமையான பாண்டித்திய செருக்கு அழுக்கை மீண்டும் ஒருமுறை மூடி மறைக்க முடியாமல் தவித்துள்ளார்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எவ்ளவு தான் ?

தனியா வாங்க சொல்லித்தாறன்

முஸ்லீம்கள் விடயத்தில் எமது முன்னோர்கள் தீர்க்கதரிசிகள்..... :)

நமது முன்னோர்கள் மட்டுமில்லை உலகமே சரியாக புரிந்துவைத்துள்ளார்கள் ஆனால் அவர்களை கையாள்வதுக்கு சிறந்த திறமை வேண்டும். சும்மா அடித்து துரத்தி ஒன்றும் ஆகாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது முன்னோர்கள் மட்டுமில்லை உலகமே சரியாக புரிந்துவைத்துள்ளார்கள் ஆனால் அவர்களை கையாள்வதுக்கு சிறந்த திறமை வேண்டும். சும்மா அடித்து துரத்தி ஒன்றும் ஆகாது .

ஆட்டுக்கை மாட்டை கொண்டுவந்து ஓட்டப்படாது...நான்சொன்னது எமது மூதாதையர்கள் அனுபவப்பட்டவர்கள்.......சோனகர்கள் பழைய இரும்புக்கு பேரீச்சம்பழ வியாபாரம் பண்ணி பலதையும் சிதறடிக்கக்கூடியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் திருகுதாளங்களுக்கு அம்மக்களை குறை கூறுவது பொருத்தமாகாது.

ஒசாமா குழு எனும் குழுவை உருவாக்கியவர்கள் சிங்கள அரசியல் வாதிகளும் முஸ்லிம் அரசியல் வாதிகளும் என்பதை யாரும் மறுக்க முடியாது. முஸ்லிம் இளைஞர்களை பலிக்கடாவாக்கியவர்கள் அரசியல் வாதிகளே.

வடக்கில் காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் பண முதலைகள் அரசியல்வாதிகளின் பின்னால் செயற்பட்டவர்கள்.

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் திருகுதாளங்களுக்கு அம்மக்களை குறை கூறுவது பொருத்தமாகாது.

ஒசாமா குழு எனும் குழுவை உருவாக்கியவர்கள் சிங்கள அரசியல் வாதிகளும் முஸ்லிம் அரசியல் வாதிகளும் என்பதை யாரும் மறுக்க முடியாது. முஸ்லிம் இளைஞர்களை பலிக்கடாவாக்கியவர்கள் அரசியல் வாதிகளே.

வடக்கில் காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் பண முதலைகள் அரசியல்வாதிகளின் பின்னால் செயற்பட்டவர்கள்.

நான் சொன்னது நடைமுறைக்கு சாத்தியமற்றது. புலிகள் முஸ்லிமை நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு இரு காரியங்களை சமாந்தரமாக செய்தது.

ஒன்று முஸ்லிம் அரசியல் வாதிகளை வைத்து முஸ்லிம் இளைஞர்களை புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட வைத்தது.

இதனால் புலிகள் முஸ்லிம் இளைஞர்களை கொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தை உருவாக்கியது.இதன் மூலம் இரு சிறுபான்மை இனங்களை மோத விட்டு கூத்து பார்த்தது சிங்கள அரசு.இன்று இரு இனங்களும் சந்தேகம் கொண்டு பார்ப்பதும் இவர்களின் சுய நலங்களே.

கிழக்கு தேர்தல் முடிவுகளால் அதிக லாபம் பெற்றிருப்பது முஸ்லிம்கள் தான் .(நுணாவிலன் என்ன கணக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மை பெறும் என நினைத்தார்கள் என எழுதுகின்றிர்கள்)

இங்கிருந்து நாங்களே இவ்வளவு ஆய்வுகள் நடாத்தும் போது தேர்தல்களில் நின்ற தரப்புகள் எவ்வளவு நுணுக்கமாக சிந்தித்து முடிவுகளை எடுத்திருப்பார்கள் .

கூட்டமைப்பை முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றியது உண்மைதான் ஆனால் தேர்தல் முடிவுகள் இப்போ வந்த கணக்கில் வந்தால் முஸ்லிம் காங்கிரஸ் இந்த முடிவைத்தான் எடுக்கும் என கூட்டமைப்பிற்கு தெரியும் .அரசுடன் சேர்ந்து இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மந்திரியாக இருக்கும் கக்கீம் இதை விட வேறு என்னசெய்வார்கள் .

தேர்தல் கணக்கு சற்று மாறியிருந்தால் (கூட்டமைப்பு பதினைந்து இடங்களுக்கு கிட்ட எடுத்திருந்தால்) முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் தான் சேர்ந்திருக்கும் .

இதைவிட நாங்கள் புரியவேண்டிய முக்கியவிடயம் இதுதான் .இலங்கையில் தமிழர்கள் கேட்கும் தீர்வு தனியரசு அல்லது தமிழ் பேசும் மக்களுக்கு(முஸ்லிம்களையும் உள்ளடக்கிய ) சுயநிர்ணய உரிமை உடைய மாகாண அரசு .

முஸ்லிம்கள் என்ன தீர்வு கேட்கின்றார்கள் ?கிடைக்கபோகும் போகும் தமிழர்கான தீர்வில் தமக்கான நிலைப்பாடு என்ன என்று?

எமக்கு தீர்வு கிடைத்தபின் நமக்குள் அதை பார்த்துக்கொள்ளலாம் என்பதில் அவர்கள் ஒருகாலமும் உடன்படவில்லை,அத்துடன் தமிழ் தலைமைகளை அவர்கள் நம்பவும் இல்லை .அதனால் எப்போதும் எமக்கான ஒரு தீர்வு பற்றி பேச்சுவார்த்தைகள் வரும்போது அவர்களும் அதற்குள் தலையிட்டு தீர்வில் முஸ்லிம்களுக்கான பங்கு என்ன என்று கேட்பார்கள்.

இப்போது தமிழர்கள் ஆயுதபோரட்டத்தில் கையறு நிலையில் நிற்கும் போது ,எமக்கான தீர்வு என்ன என்று நாமே தெரியாமல் நிற்கும் போது எங்களுடன் கூட்டு சேர அவர்கள் என்ன முட்டாள்களா?

முதலமைச்சர் பதவிக்காலம் அரைவாசி முஸ்லிம்காங்கிரசுக்கு எனவும் அதைவிட சில அரச பதவிகளும் கொடுக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது .இதை வைத்து எதிர்காலத்தில் கிழக்கில் முஸ்லிம்களின் அரசியல் இருப்பை பலமாக்குவதை விட்டு காலம் பூராகவும் கூட்டமைபுடன் சேர்ந்து எதிர்ப்பு அரசியல் செய்ய எவனும் உடன்படான்.

தமது அரசியலுக்கும் இருப்பிற்கும் முஸ்லிம்களை பொறுத்தவரை சாணக்கியமாகத்தான் நடந்துகொள்கின்றார்கள்.அதில் வெற்றியும் பெறுகின்றார்கள் .

இதைவிட முஸ்லிம் காங்கிரசுக்கு அரசுடன் இருக்கும் முஸ்லிம்களுக்கு போட்டியாகவும் செயற்படவேண்டிய ஒரு நிலைப்பாடு .இவற்றை எல்லாவற்றையும் தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வெற்றி கொண்டிருக்கு என்பதும் முக்கியம்.

குறிப்பு-இதைதான் மலையக கட்சிகளும் ,தலைமைகளும் செய்துவந்தன செய்துகொண்டு இருக்கின்றன .இதையே முஸ்லிம்கள் செய்தவுடன் தொட்டிபிரட்டிகள் என்பது வக்கிரம் .

காசு பெட்டி மாறிவிட்டது என்பதெல்லாம் அரசியல் தெரியாத இராஜதந்திரம் சாணக்கியம் எள்ளளவும் இல்லாத படிக்காத முட்டாள்கள் விட்டுவிட்டு போன இயலாமை அரசியலின் மிச்ச சொச்சம்.

Edited by arjun

குறிப்பு-இதைதான் மலையக கட்சிகளும் ,தலைமைகளும் செய்துவந்தன செய்துகொண்டு இருக்கின்றன .இதையே முஸ்லிம்கள் செய்தவுடன் தொட்டிபிரட்டிகள் என்பது வக்கிரம் .

காசு பெட்டி மாறிவிட்டது என்பதெல்லாம் அரசியல் தெரியாத இராஜதந்திரம் சாணக்கியம் எள்ளளவும் இல்லாத படிக்காத முட்டாள்கள் விட்டுவிட்டு போன இயலாமை அரசியலின் மிச்ச சொச்சம்.

11:00pm க்கு இப்படியான சில நிதானமான சிந்தனைகள் வரும்.

சொந்த மனைவியை விபச்சாரி என்று விளம்பரம் செய்து கேவலம் செய்யும் தொழில்தான், நூற்றாண்டுகாலமாக இலங்கையில் வதைக்கப்படும் மலையகத்தமிழரை தொப்பிரட்டி அரசியல் செய்கிறார்கள் என்று கூச்ச நாச்சமின்றி கூறும் தமிழர் ஒருவரின் சொல். மேலும் அவளை தன்வீட்டில் மாற்றார் கட்டிவைத்து அடித்த குற்றத்தில் ஒரு பங்கு யாழ்ப்பாணத்து கங்காணிகள், தோட்டத்து வாத்திகள், பொன்னம்பலம் வரைக்கும் போகிறது என்றதை ஊத்தையை கம்பளத்தின் கீழ் கூட்டி தள்ளி விடுகிறார்கள்.

கட்டுரையில் கவனிக்க மறந்தவை:

1. கக்கீம் தேர்தலின் முன் சுதந்திர முண்ணனியுடன் ஒற்றுமை காண முடியாமல் போனது.

2. தேர்தல் பிரசாரத்தில் சுதந்திர கட்சியை தாக்குவதிலும் பார்க்க பிக்குகளை தாக்கி மத பிரசாரமாக்கியது.

3. யத்தீந்திர கூறியவையான கக்கீம் "தேர்தலுக்கு பின்னாலான தனது வாக்குகளை தான் திரும்ப விழுங்கியமை". இந்த பகுதி மிக முக்கியம் ஏன் எனின் இதில் எழுதப்படும் கருத்துகள் யத்தீந்திராவின் கருத்துக்கு பதில் அழிக்க வேண்டும். அதை மறப்பது அவமானம்.

4.கசன் அலி "சேதக்குறைப்பு முயற்சி" என்பது போல ஒரு பத்திரிகையாளர் மகாநாடு கூட்டி(கக்கீம் இதில் இருக்கவில்லை) முதலமைமைச்சர் பதவி மு.கா வுக்கு வரவிட்டால் கடுமையான பிரச்சனை இருக்கு என்று சுதந்திர கூட்டணியை வெருட்டி இருப்பது, தேர்தலுக்கு முன்னர் சுதந்திர கூட்டணியுடன் ஒற்றுமை காண முடியாமல் மு.கா தேர்தலில் தனித்துவிடப்பட்ட போது, கக்கீம் தான் தனித்து நின்றி போட்டி போட்டு அரசை தனது காலடியில் விழுத்தி விட்டத்தாக கூறியதற்கு ஒப்பானது. அலி இனி சுதந்திய கூட்டணியை மு.கா ஒன்றும் செய்ய இயலாது என்றதைதான் பத்தியையாளர் மகாநாட்டில் மு.கா-கூட்டணி ஒபந்தத்தை வெளியிட முடியாது என்று கூறியதன் மூலம் ஒத்துக்கொண்டார்.

அரிச்சுனுக்கு அரைத்த மாவை மட்டும்தான் அரைக்க முடிகிறது. 1948 லிருந்து 2009 ம் ஆண்டுவரைதான் முஸ்லீம்கள் சலுகை பெற்று அரசியல் நடத்தி வந்தார்கள். இப்போது தமிழ் பேசும் புலனாய்வுகள் அரசுக்கு தேவை இல்லை. கிழக்கு தேர்தலில் 15 ஆசங்களை பெற்ற முஸ்லீம்களுக்கு எத்துவும் கிடைக்க வில்லை. ஆட்சி சிங்கள அரசின் கைகளில் மட்டும். அங்கும் மிகசிறந்த அடிமையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கு. இந்த பாரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்திருப்பதை காணாமுடியாமல் இருப்பது 11:00 அரசியல் எழுதுவதால் மட்டுமே.

Edited by மல்லையூரான்

[size=5]முஸ்லிம் காங்கிரஸ் விரும்பிய மாகாண அமைச்சுகளை வழங்க அரசு மறுப்பு! நெருக்கடியில் ஹக்கீம்!![/size]

கிழக்கு மாகாணசபை அமைச்சரவையில் தமக்கு கல்வி உட்பட முக்கிய அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளை அரசு அடியோடு நிராகரித்திருப்பதால் புதிய சர்ச்சை உருவாகியிருக்கிறது.

அரசின் இந்த நிராகரிப்பினால் கடுமையாக அதிருப்தியடைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தீர்மானமொன்றை எடுப்பதில் குழப்பத்தில் உள்ளதாகத் தெரிவருகின்றது.

தாம் கோரிய அமைச்சுப் பதவிகளை அரசு வழங்காவிட்டால் கிழக்கு மாகாண அமைச்சரவையில் வேறு எந்த அமைச்சுப் பொறுப்புகளையும் ஏற்காமல் சுயாதீனமாக செயற்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூரத் தீர்மானித்துள்ளது எனவும் அறியமுடிகின்றது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இரண்டு போனஸ் ஆசனங்கள் அடங்கலாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தாலும் ஆட்சியமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையை அது கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் அரசின் பங்காளிக் கட்சியாக இருந்துக்கொண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஏழு ஆசனங்களைக் கைப்பற்றிய முஸ்லிம் காங்கிரஸ் இறுதி நொடியில் தனது ஆதரவை அரசுக்கு வழங்கி அரசிடம் சரணடைந்தது. இதனால் ஆட்சியமைக்கும் சக்தியை அரசு பெற்றது.

அரசுக்கு ஆதரவை வழங்குவதற்கு முஸ்லிம் முதலமைச்சர், மாகாணத்தில் முக்கிய அமைச்சுகள் என முஸ்லிம் காங்கிரஸ் சில நிபந்தனைகளை விதித்தது. கிழக்கில் ஆட்சியமைத்தே தீரவேண்டும் என்ற விருப்பத்தில் இருந்த அரசு, தனது இலக்கை அமைத்துக் கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள நிபந்தனைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பை விடுத்து தனது இலக்கை எட்டியது.

ஆனால், தேர்தல் முடிவடைந்த கையோடு அரசு மு.கா.வின் கோரிக்கைகளையும் கைகழுவ ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே அதிர்ச்சிவைத்தியத்தை எதிர்கொண்ட மு.கா. கிழக்கு மாகாண அமைச்சரவையில் தாம் கோரிய அமைச்சுப் பதவிகள் குறித்து அரசிடம் பேசியது. ஆனால், மு.கா. கோரியுள்ள கல்வியமைச்சுப் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகளை வழங்குவதற்கு அரச தரப்பு மறுத்துவிட்டது.

இதனால் கடும் அதிருப்தியிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தாம் கோரிய அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டால் வேறெந்த அமைச்சுப் பதவிகளையும் ஏற்கப்போவதில்லை என விடாப்பிடியில் இருப்பதுடன் தனது இலக்கை எட்டிக்கொள்வதற்கு கடும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டு வருகின்றது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திருப்பியதும் மு.கா. உறுப்பினர்கள் அவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். அதன் பின்னரே அக்கட்சியின் அடுத்தக் கட்ட நகர்வுகள் எவையென்பது தெரியவரும் என நம்பப்படுகிறது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=d18c2895-394e-4ddf-8857-e6b45ae4201f

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

.(நுணாவிலன் என்ன கணக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மை பெறும் என நினைத்தார்கள் என எழுதுகின்றிர்கள்)

38% மான முஸ்லிம்கள் வாழும் கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்க மாட்டார்கள்.தெற்கில் மகிந்த அரசால் நடாத்தப்பட்ட பள்ளிவாசல் உடைப்புக்கள் போன்றன் முஸ்லிம் மக்கள் மகிந்த அரசின் மீது வெறுப்பு கொள்வது நியாயமானது.வாக்களிக்க மாட்டார்கள் என்பதும் நடைமுறை சாத்தியமானதே. அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மீது விருப்பமோ இல்லையோ அக்கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பதும் எதிர்பார்க்கக் கூடியதே.

26% சிங்களவர்கள் மகிந்தவுக்கும் ஐ.தே.காவுக்கும் வாக்களிப்பதால் பெரும்பான்மையை எதிர்பார்க்க முடியாது. 36% தமிழர்களின் வாக்கு முஸ்லிம் காங்கிரசை தவிர ஏனைய கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள் அல்லது வாக்களிக்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம் தானே. இங்கு பெரும்பான்மை என நான் சொன்னது 50% க்கும் மேலான பெரும்பான்மை அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]முஸ்லீம் காங்கிரசின் இந்த முடிவைப்பற்றி நுஹ்மான் போன்ற முஸ்லீம் கல்விமான்கள், புத்திஜீவிகள் என்ன கூறுகின்றார்கள் ? என அறிய ஆவலாக உள்ளேன். [/size]

Muslim academics condemn Rajapaksa politics of SLMC

[TamilNet, Wednesday, 26 September 2012, 14:31 GMT]

“As a member of the Eastern Muslim community, I am ashamed and take this opportunity to condemn the deceitful actions of the SLMC,” says Dr. Mohamed Ismail Zulfika, responding to the politics of Sri Lanka Muslim Congress (SLMC) that has joined the Rajapaksa government in forming the Eastern Provincial Council administration after getting the Muslim votes by campaigning against the government. This is betrayal of trust of the Muslim voters and even if projected as means of ‘bargaining politics’ it will affect the long-term goals of the war-torn society of the North and East, Zulfika who is now in the diaspora further said in a feature received by TamilNet. Meanwhile, Professor M.A. Nuhman and Dr. M.S.M. Jalaldeen, two prominent Muslim academics from the East, serving universities in the island, have also come out with similar views.

M_A_Nuhman.jpg

Professor M.A. Nuhman

Speaking to Jaffna-based Uthayan daily a few days ago, Dr. Nuhman, Senior Professor or Peradeniya University, criticized the ‘bargaining’ politics of the SLMC and said that its modus operandi only shows the absence of any policy in the party, caring people’s interest or regional interest.

Dr. Jalaldeen, Senior Lecturer of the South Eastern University was saying that the consequences of the SLMC politics would be disastrous.

MSM_Jalaldeen.jpg

Dr. M.S.M. Jalaldeen

SLMC that should have stood up like TNA to Tamils, rejected the hand extended by Tamils and has gone to the side where it should not go. There was anticipation that along with this provincial election, a political unity would unfold between Tamils and Muslims, but the golden opportunity is lost, Dr. Jalaldeen further said.

Dr. Zulfika echoed the same opinion.

Mohamed_Ismail_Zulfika_100.jpg

Dr. Mohamed Ismail Zulfika

“The actions of the SLMC have caused a severe damage to the reconciliation process between these Tamil and Muslim communities that live together in the Eastern province. SLMC has not only made a historical blunder that goes against the will of the Eastern Muslim community but also damaged the social environment for a healthy co-existence of both communities. Further, both communities have lost a fresh and long awaited opportunity for reconciliation to build a long lasting peace with justice, equality and respect. A golden opportunity was lost,” she said.

Alternative political activists among Eezham Tamils urged the civil society of both the Tamils and Muslims in the island to facilitate the emergence of a joint people’s movement for the edification of their political parties.

TNA as primarily a political party in the clutches of powers is gagged from coming out with a mass movement spearheading a people’s struggle, the activists said.

They cited to the TNA taking the decision of contesting a farce election against all warnings just because of power pressures, the alleged ‘assistances’ the TNA was receiving from India in the elections, the alleged role TNA played along with India in silencing independent Tamil national voices in Tamil media, including the editorial change in a leading Tamil daily, and the kind of candidates it fielded in the elections – all ultimately serving the designs of the international Rajapaksa abetters to bail out the state and regime, the activists said.

Urging people’s movements to independently develop in the island and in the diaspora, they were hopeful of the opinion steps taken by the Muslim academics.

Full text of the feature by Dr. Zulfika, sent in response to some questions put forth by a TamilNet contact in Canada, follows:

In the 2012 eastern provincial council election, out of 33% of the total Muslim voters in the East about 20.98% voted for the Sri Lanka Muslim Congress (SLMC). This represents the voice of 63% of the total Muslim population in the Eastern Province. This percentage is equal to the percentage of total anti-government vote in the eastern province in this election. The Muslim people in the east now, have strongly demonstrated their anti-government stance.

Mohamed_Ismail_Zulfika_100436_200.jpg

Dr. Mohamed Ismail Zulfika

In my opinion, the SLMC has betrayed the trust of Eastern Muslims by taking a covert decision to joint the very government that was vehemently criticized by them in the election campaign. The SLMC has not only failed to respect and represent the aspirations and concerns of Eastern Muslims; it has also abused the power and mandate given to them by the Muslim people of the east.

Since the majority of the Eastern Muslim community has clearly expressed their dissatisfaction with the ruling United People Freedom Alliance (UPFA) government, the decision by the SLMC to joint the government should be seen as abuse of people’s power for the benefits of the leaders of the SLMC.

The decision also contravenes the SLMC’ s promises to the Muslim community during election campaign and goes against the aspirations and concerns of the Eastern Muslim community. The SLMC’ s decision to support the very government that acts openly against the minority rights and wishes, behaves like a ‘big brother” (in the words of a SLMC leader), works in favor of ‘majority’ and implements a chauvinistic agenda is deplorable.

The ‘bargaining politics’ with the ‘majority government’ can be considered as a ‘life saving strategy’ to bring maximum benefits to ‘minority’ community when and if it is based on justice, short term and long-term benefits for the whole community without jeopardizing the rights and interests of other community. When considering a war-torn North –East society’s short term and quick development needs, one should be mindful of the compromises that affect the long-term goals in the selfish interest of the short-term benefits.

The SLMC has deceived the Muslim community for the sake of its dominant individual’s power hungry and narrow economic interests. Once again, The SLMC has betrayed the Eastern Muslim community.

The Muslim people voted to elect their own counselors. They voted for the SLMC in the hope that the party would represent and fight for the ‘unique and specific goals of the Muslim community’, for which the party was originally formed. This time around their vote was also a solid protest vote for the UPFA government’s attacks on Mosques and other anti-Muslim activities. As a member of the Eastern Muslim community, I am ashamed and take this opportunity to condemn the deceitful actions of the SLMC.

In the future, as in the past, the government would use the support of the SLMC to garner more support from Muslim countries of the world for its racist and discriminatory agenda. In that sense, the support will be used against minorities, particularly against the Tamils. The support extended by the SLMC is a classic example of ‘using your hand to hurt your own eye’!

The actions of the SLMC have caused a severe damage to the reconciliation process between these Tamil and Muslim communities that live together in the Eastern province. SLMC has not only made a historical blunder that goes against the will of the Eastern Muslim community but also damaged the social environment for a healthy co-existence of both communities. Further, both communities have lost a fresh and long awaited opportunity for reconciliation to build a long lasting peace with justice, equality and respect. A golden opportunity was lost.

[Dr. Zulfika, coming from Kalmunaikkudi in the Eastern Province had her schooling there and graduated from the University of Jaffna. She received her doctorate in psychosocial wellbeing and education in post-disaster context from the University of New England in Australia. She is currently a counsellor in the field in Toronto and also an executive director of the Muslim Women Research and Action Forum in the island of Sri Lanka. She is a noted Tamil poet credited with three published collections.]

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=35603

நக்குற மாட்டுக்கு செக் என்ன மகிந்த என்ன எல்லாம் ஒன்டுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.