Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல..

Featured Replies

இந்த திரியின் நோக்கம் தவிர்த்து திரிக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத விடயங்கள் எழுதுவது சரியா என ஆராய்வது நல்லது.

திரிக்கு சம்பந்தமில்லாத அரட்டை, சீண்டல், கள உறுப்பினர்கள் மீதான நையாண்டிகள், மறைமுக தாக்குதல்கள் தொடர்ந்தால் அவை யாவும் அகற்றப்படும்.

நன்றி

  • Replies 272
  • Views 20.5k
  • Created
  • Last Reply

நியானி, மற்றும் நிருவாகத்தினருக்கு,

நீங்கள் கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணானவை எனக்கருதும் கருத்துக்களை மட்டறுத்தல் செய்யலாம், ஆனால், கருத்துக்களை வெட்டுவோம், கொத்துவோம் எனும் பாணியிலான இந்த வெருட்டல்கள் தேவைதானா என்பதையும் ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள்.

வல்வை சகாறா 2009 காலத்தில் தவறு இழைத்ததுபோல் தமிழச்சி மூலம் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. வல்வை சகாறா 2009 காலத்தில் என்ன செய்தார் என்பதற்கு யாழ் கருத்துக்களத்திலேயே ஆதாரங்கள் உள்ளன. இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு எதிராக அறிக்கை விட்ட ஓர் பெண்மணி பற்றி வல்வை சகாறா சில விடயங்களைக்கூறினார். குறிப்பிட்ட பெண்மணியின் அறிக்கை இங்கு இணைக்கப்பட்ட பின்னரே அவர் தனது கருத்தைப்பதிந்தார். ஆனால், தமிழச்சி பதிந்த கருத்தில் 2009 காலத்தில் வல்வை சகாறா ஏதோ தவறு இழைத்ததுபோல் கருத்துக்கூறியுள்ளார். இங்கு திரிக்கு சம்மந்தமில்லாமல் வாதத்திற்கான திசைதிருப்பல் எங்கே நடைபெறுகின்றது என்பதை நீங்களே அறிந்துகொள்ளலாம்.

தமிழச்சியின் கருத்து வல்வை சகாறாவுக்கு எதிராக அப்பட்டமாக பழிசுமத்தும் தனிப்பட்ட தாக்குதலாக உங்களுக்குத்தெரியாமல் இருப்பது ஆச்சரியமே.

Edited by கரும்பு

இளையராஜாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது. ஏன் இதற்குள் மாட்டினேன் என்பதை நிச்சயமாக பீல் பண்ணுகிறார்.

வீடியோவை பார்த்தால் மாலையை களுத்தில் படவும் விடவில்லை. பொன்னாடையை தன்னும் விரும்பவில்லை. இதையெல்லாம் வரவேற்பாக கண்டு ரசிக்கவில்லை சுத்த "ராகிங்"காகவே பார்க்கிறார். ஓடிசனை பார்த்தால் ஒரே போர் அடிக்கும் முகத்துடன் காணப்படுகிறர். (அதற்கபவரிடம் காட்டிய கலைஞ்ஞர்களின் தரம் காணாது இருந்திருக்கவும் சந்தர்ப்பம்) சின்னமேளத்தை மேடையில் ஏற்றி ஆட்டுவோர் போலத்தான் தன்னை மேடையில் வைத்து தங்கள் அலுவல்களை கொண்டு போவதாக கணக்கு பண்ணுகிறார் போலிருக்கு.

அழைத்து செல்வோர் பொடிகாட்டுகள் போல முகத்தை வைத்திருக்கிறாகள்.

இவர்களின் Weakness தங்களுக்கு தாங்கள் அழைத்த கலைஞ்ஞர்களிடம் செல்வாக்கு இல்லாதது. அரச புரோகிதர்கள் உள்ப்புந்து கலைஞ்ஞர்கள் வரை பேச இடம் கொடுத்துவிட்டார்கள். இல்லையேல் பாரதிராஜா வெளிப்படையாக அரச ஊடுருவல் இருப்பது தனக்கு விளங்கப்படுத்த பட்டதாக கூறியிருக்க மாட்டார். இளையராஜாவின் முகத்தில் நம்பிக்கையை எள்ளவும் காணவில்லை.

இனி இவர்கள் ஒரு நிகழ்சிக்கு கூப்பிடும் போது இரண்டுமுறை செக் பண்ணிக்கொள்ளுவர் போல முகத்தில் கணப்படுகிறது.

நிகழ்சியை ரத்து செய்ய நேர்ந்தால் இளையரஜா பெருது படுத்தமாட்டர் என்று நினக்கிறேன். அரசு ஆயிரம் பொய்களை சொல்லி தமிழ்நாடு கலைஞ்ஞர்களை அழைப்பதால் அவர்களில் சிலர் கொழும்புவரை போய்விட்டு திரும்பியிருக்கிறார்கள். உன்னி நிகழ்சி முடிந்த பின்னர் அவமானத்தை மூடி மறைக்க மன்னிப்பு கேட்டவர். இளையராஜா, இவர்களுடன் தன்னை ஒப்பிட்டு தன்னை மகாராஜாவாகவே கருதுவார்.

உங்களுக்கு இளையராஜாவையும் தெரியாதா?

சமாதாண காலத்தில் தலைவரின் பிறந்த நாள் ஒன்றுக்கு எங்கள் ஊரில் உள்ள சுபாஸ் பேக்கரியில் 21 அடி கேக் வல்வெட்டித்துறை மக்கள் ஓடர் செய்து வெட்டி கொண்டாப்பட்டது..

யூலை மாசம் 5திகதி கரும்புலிகள் தினம் ,யூலை மாசத்தில் இனி ஒரு நிகழ்ச்சியும் கொண்டாடகூடாது.

Edited by வினித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் கருத்துக்களவிதிமுறைகள் என்றொரு பகுதி இருக்கிறது....அங்கு கருத்துக்களவிதிமுறைகள் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளன...ஆனால் அவை கருத்தாடல்களின் போது எல்லோராலும் கடைப்பிடிக்கப் படுகின்றனவா..? அப்படி கடைபிடிக்கப்பட்டால் இந்ததிரியில் மட்டுமே பல கருத்துக்களை வெட்டவேண்டிய பரிதாப நிலையில் நிர்வாகம் இருந்திருக்காது....இப்படி எத்தனை திரிகள்...ஏதாவது ஒரு திரியில் நிலமை எல்லைமீறி தனிமனித தாக்குதல்களை நோக்கி திரி தடம்புரண்டு போகும்போது ஒருகட்டத்துக்குமேல் நிர்வாகம் களவிதிகளை காட்டி கள உறுப்பினர்களை நாகரீகமாக கருத்தாடும்படி நினைவுபடுத்துவது எந்தவிதத்திலும் தவறல்ல...இங்கு பலருக்கு ஆத்திரத்தில் ஞாபகமறதி வருகிறது..அதனால்தான் களவிதிகளை மீறி அநாகரிகமாக கருத்துக்களை வைக்கிறார்கள்..அவர்கள் ஞாபகமறதியில் கண்டதையும் எழுதிவைக்கமுன் அவர்களை அப்படி எதுவும் எழுதிவிடுவதை தவிர்க்கும் முகமாக இந்த ஞாபகப் படுத்தலை மேற்கொள்வது தவறாக தெரியவில்லை...முகம் காட்டாமல் வரும் உறவுகளுக்கு ஏற்படும் பாதிப்பை விட முகம் காட்டி வரும் உறவுகளைப்பற்றி அவதூறான ஒரு கருத்தி எழுதப்பட்டு அதை நிர்வாகம் பார்த்து அகற்றுவதற்கிடையில் எத்தனைபேர் அதனை வாசிப்பார்கள்..அப்படி நீக்கிய பின்னாலும் அதனால் முகம் காட்டிவரும் உறவுகளுக்கு ஏற்படபோகும் மன உழைச்சல்களை நிவர்த்தித்துவிடமுடியுமா..?எதையும் நிகழமுன் தடுக்க நினைத்து நிர்வாகம் மேர்கொண்ட நடவ்டிக்கையாகவே இதை பார்க்கிறேன்...இந்ததிரியில் தனிமனித தாக்குதல்கள் ஒருமுனையில் அல்ல பல முனைகளில் பலருக்கிடையே விரிவடையும் நிலை இருந்தது...நிர்வாகம் பலவற்றை அகற்ராவிட்டிருந்தால் இப்பொழுது இந்ததிரி ஆரம்பிக்கப் பட்ட கருவில் இருந்து நீண்டதூரம் விலகி பல கள உறுப்பினர்களது வீட்டு கொல்லைப்புறக்கதைகளைப் பேசிக்கொண்டிருந்திருக்கும்...பல சுமைகளுக்கிடையேயும் கள உறுப்பினர்களின் ப்ரைவசியை காப்பாற்ற சரியான நடவடிக்கைகளை செய்துகொண்டிருக்கும் நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்...

இந்தியா சினிமா வியாபாரிகளின் அவர்கள் பொக்கற்றை நிரப்ப புலம்பெயர் தேசங்களிற்கு வருகின்றார்கள் புலத்தில் உள்ள நாங்கள் எம்மிடையே இணையத்தில் சண்டை போடுகின்றோம் மேலும் ஒருசிலர் யார் என்னவானாலும் பருவாயில்லை என்று கிடைப்பதன் மூலம் இதனூடாக தங்கள் வயிற்றையும் நிரப்புகின்றனர் இதில் தேசியம் எங்கு என்பதே இன்றைய கேள்வி

இந்திய தொலைக்காட்சிகள் தொடக்கம் சினிமாவரை வெளிநாடுகளில் வாழ்பவர்களின் பணத்தைக்குறிவைத்துள்ளார்கள் என்பது கண்கூடு. இங்கு பிரச்சனை என்னவென்றால் தேசியத்தின் பெயரால் தமது குறுகிய நோக்கங்களைப்பூர்த்தி செய்வதற்கு சிலரினால் முன்னெடுக்கப்படும் செயல்களே. இவர்கள் எதேச்சையாகச்சட்டங்கள் போடுவார்களாம், அதை மற்றவர்கள் கடைப்பிடிக்கவேண்டுமாம். இங்கு பகிடி என்னவென்றால் இதெல்லாம் நடைபெறும் இடம் கனடா நாடு. கனேடிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் கனடாவில் வாழும் மக்கள் சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உள்ளூர் பூசாரிகள் போடுகின்ற விதிமுறைகளைப்பார்க்கும்போது அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை.

உண்மையாக நேரடியாக தாயகப்போராட்டம் நடைபெற்ற பகுதிகளான வடக்கு, கிழக்கில் இப்போது என்னவோ எல்லாம் நடைபெறுகின்றது. அங்கு வேறோர் நிலமையில் மக்கள் வாழ்கின்றார்கள். இங்கு வேறோர் நாட்டில் வந்து தஞ்சமடைந்த உள்ளூர் பூசாரிகள் தேவையில்லாமல் எதேச்சையாக சட்டதிட்டங்களைப்போட்டு பிரச்சனைகளை உருவாக்குகின்றார்கள். மெளமான இருந்து எல்லாக்கூத்துக்களையும் உன்னிப்பாக அவதானிக்கும் பிரதான கனேடிய ஊடகங்கள் மாவீரர் நாள் வரும்வேளையில் கிழிப்பார்கள் அப்போது பாருங்கள். கடைசியில் பாதிக்கப்படுவது கனடாவில் வாழும் அனைத்து தமிழர்களுமே.

நியானி, மற்றும் நிருவாகத்தினருக்கு,

நீங்கள் கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணானவை எனக்கருதும் கருத்துக்களை மட்டறுத்தல் செய்யலாம், ஆனால், கருத்துக்களை வெட்டுவோம், கொத்துவோம் எனும் பாணியிலான இந்த வெருட்டல்கள் தேவைதானா என்பதையும் ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள்.

கரும்பு,

வல்வை சகாறாவின் கருத்துக்குப் பின்னர் வேறு விடயம் குறித்து எழுதப்பட்ட பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. அவை குறித்து நியானி எழுதியது, கருத்துக்கள் நீக்கப்பட்டபடியால் நீங்கள் குறிப்பிடும் கருத்தாடலையொட்டி இருப்பதுபோல் தோற்றமளிக்கிறது.

உங்களுக்கு இளையராஜாவையும் தெரியாதா?

மதிக்க தக்க கௌரமாக நடக்கத்தெரியாதவர்களின் கூட்டம் இளையராஜா என்று நீங்கள் விழுந்தடித்து நிரூபிக்க முயலும் போது, நான் ஏன் இசை நிகழ்சிகளை பார்க்க போதாக ஒருவன் இளையராஜா என் பொகெட் பிரண்ட் என்று நடிப்பான்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி இன்னும் முடியல்லேயா :D நானும் புங்கையூரானுக்கு பதில் எழுத யோசித்திட்டு திரி முடிஞ்சுதாக்கும் என்று விட்டுட்டன் பார்த்தால் இன்னும் முடியிற மாதிரி இல்லை :lol::icon_idea:

சகாறா அக்காவின் நான்கு விரல்களும் கூறுபவை எவை என்று எனக்கும் சொல்லுங்கோ, அறிந்துகொள்ள விரும்புகின்றேன். குற்றச்சாட்டுக்கள் எவை என்று தெரிந்தால்தானே அறிந்துகொள்ளமுடியும்.

இவர் மேலே குறிப்பிட்ட பெண்மனி, இளையோர் நடத்தவிருந்த போராட்டத்தைக் குழப்பியதாக அதில் எழுதியிருக்கிறார். ஆனால் உண்மையிலேயே என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் மற்றவர்களின் சொல்கேட்டு கொடி பிடித்துத் திரிந்தீர்களே தவிர, உண்மையில் என்ன நடந்தது என்று அறிய முற்படவில்லை. இளையோரைத் தடுத்து, அந்தப் பெண்மனியையும் மற்றைய முதியோர்களையும் உண்ணாவிரதம் இருக்கச் சொன்னது அன்றைய உலகத்தமிழர் இயக்கத்தினரே. இதற்கு முற்றுமுழுக் காரணம் அவர்களேயன்றி அந்தப் பெண்மனியல்ல. இந்த உண்மையை தீர விசாரித்து அறிந்து கொள்ளாமல் அந்த வயதிலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க ஒத்துக் கொண்ட அந்தப் பெண்மனியை இவ்வாறு அவதூறாக ஒரு பொதுத்தளத்தில் எழுதுவது எவ்வகையில் நியாயம்? அப்படியே இளையோர் அமைப்பு உண்ணாவிரதம் இருக்க விரும்பியிருந்தால் அவர்களும் இருந்திருக்கலாம்தானே? இந்த முதியோர் இருந்தவுடன் அவர்கள் ஏன் கைவிட வேண்டும்? இவர்கள் ரொறன்ரோவில் இருந்தது அடையாள உண்ணாவிரதமேயன்றி, சாகும்வரையான உண்ணாவிரதம் அல்ல. ஆனால், அந்த முதியோர்கள் சாகும்வரையான உண்ணாவிரதத்தையே மேற்கொண்டிருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் இளையோர் அமைப்பு நடத்திய கூத்துக்கள் உங்களுக்குத் தெரியாதா? போராட்டம் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு, அவர்கள் தங்களுடைய சொந்த கூத்துக்களைத்தான் நடத்தினார்கள். இவ்வாறானவர்களைக் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ யாரும் முன்வரவில்லை. ஏன் இவர்கள்கூட அதைக் கண்டும் காணாமலும்தான் இருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் இவர் மட்டும் தெருக்களில் நிற்கவில்லை. இருபத்தையாயிரத்திற்கும் அதிகமான மக்களும் தெருவில்தான் நின்றார்கள். அப்போது இவர் குறைகூறும் மகளிர் அமைப்போடு சேர்ந்து அவர்கள் விட்ட பிழைகளுக்கு இவரும் உடந்தையாக இருந்துவிட்டு, இப்போது அவர்களைப் பற்றியே அவதூறாகப் பேசுகிறார். இவர் அப்போதே அவர்களின் செயற்படும் முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் அதில் நியாயம் இருக்கிறது. இவரை அவர்கள் துரோகியாக்கியதன் பிற்பாடுதான் அவர்களைப் பற்றிக் குறைகூறி வருகிறார். இந்தக் குறைகள் அவர்களோடு சேர்ந்து செயற்படும்போது தெரியவில்லையா?

அக்காலகட்டத்தில் நடந்த குழப்பங்களுக்கு உலகத்தமிழர்தான் காரணம். இவர் அவர்கள் மீது குற்றம் சாட்டினால் பரவாயில்லை. ஆனால், அவர்களால் தவறான வழியில் வழிநடத்தப்பட்ட தனிநபர்கள் மீது குற்றம் சுமத்துவது எவ்வகையில் நியாயம்? அப்படிப் பார்த்தால் இவரும் குற்றவாளிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலகட்டத்தில் இளையோர் அமைப்பு நடத்திய கூத்துக்கள் உங்களுக்குத் தெரியாதா? போராட்டம் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு, அவர்கள் தங்களுடைய சொந்த கூத்துக்களைத்தான் நடத்தினார்கள். இவ்வாறானவர்களைக் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ யாரும் முன்வரவில்லை. ஏன் இவர்கள்கூட அதைக் கண்டும் காணாமலும்தான் இருந்தார்கள்./////

என்ன கூத்து என்று அதையும் சொல்லுங்களேன்!!

மற்றய அமைப்புக்கள் எல்லாவற்றையும் விட இளையோர் அமைப்பு, ஒழுங்காகத் தான் இருந்தது... இருக்கின்றது... தங்களின் பயணங்களில் அவர்கள் தெளிவாகத் தான் இருந்தார்கள்...

இதற்குப் பதில் தேடும் அதே வேளை, இளையோர் அமைப்பினர் யாராவது இங்கே வந்து ஏதாவது கூறினார்களா? உங்களுக்கு இடையே உள்ள பிற பிரச்சனைகளுக்காக அதை இழுத்துக்கதைப்பது எவ்வகை நியாயம்??

Edited by தூயவன்

இணையவன், தமிழச்சி உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

நான் இந்தப்பதிவுடன் சுருக்கமாக சில விடயங்களைக்கூறிவிட்டு இந்தக்கருத்தாடலில் இருந்து விலகிக்கொள்கின்றேன்.

முதலாவதாக, இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு புறக்கணிப்பு வந்தாலும், வராவிட்டாலும், எதிர்ப்பு தோன்றினாலும், தோன்றாவிட்டாலும் நான் இந்த நிகழ்ச்சிக்கு, இப்படியான நிகழ்ச்சிகளுக்கு போகப்போவது இல்லை. இதுவரை இப்படியான எதுவித நிகழ்ச்சிகளுக்கும் போகவில்லை. இவ்விடயத்தில் எதிர்காலத்தில் எனது மனநிலையில் ஏதும் மாற்றம் வருகின்றதோ தெரியாது.

இதற்கு முக்கியகாரணம் நான் இந்திய சினிமா, தொலைகாட்சியை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவு தராரத்துடனே பார்க்கின்றேன். இளையாராஜா, ரஹ்மான் ஆகியோரின் இசையைக்கேட்டு நான் இலயித்தேன், மெய்மறந்தேன் என்பது உண்மை. ஆனால், அவர்களின் நிகழ்ச்சிகளை நேரடியாகச்சென்று பார்க்கவேண்டும் என்று எனக்குத்தோன்றியது கிடையாது. இந்திய தொலைக்காட்சி, தமிழ்சினிமாவும் இவ்வாறே. பொழுதுபோக்காக எப்போதாவது பார்ப்பது. நான் எனது வாழ்க்கைக்கு இவை கட்டாயம் தேவையான தலைபோகின்ற விடயங்களாக நினைப்பது இல்லை. இதற்கான பிரதான காரணம் இவர்களின் படைப்புக்கள் கனடாவில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்கின்ற எம்மை நோக்கியதானவை அல்ல, எமக்குரியதானவை அல்ல - இவ்வாறே நான் உணர்கின்றேன். ஒரு சிலபடைப்புக்கள், விடயங்கள் முழுமையாக அல்லது பகுதியாக எமக்குரியதானவையாக காணப்படலாம். ஆனால், 80%மேல் கண்ட,கண்ட கழிவு, குப்பைகளையே எமது தலையில் ஏற்றப்படுகின்றது. அதேசமயம் மற்றவர்களின் ஆர்வத்தை, இரசனையை நான் மதிக்கின்றேன், அவர்களின் ஆர்வத்திற்கு தடைபோடவிரும்பியதில்லை. இது வீட்டினுள்ளும் சரி, வெளியிலும் சரி.

இசை என்றால் சினிமா இசைக்கு நிகரான அளவில் தாயக இசையும் எனது நெஞ்சில் நீங்காத இடம்பிடித்துவிட்டது. நான் ஊரில் வாழ்ந்த காலத்தில் பல தாயகப்பாடல்களை வரிகளை மாற்றி எனக்கு ஏற்றவகையில் எனக்குள் பாடிமகிழ்வதுண்டு. அந்தவகையில் இளையராஜா ஏற்படுத்திய பாதிப்பை தாயகக்கலைஞர் இசையமைப்பாளர் கண்ணன் அவர்களும் ஏற்படுத்தினார். நான் பல/சில சமயங்களில் த.வி.புவை ஆதரித்தது கிடையாது. ஆனால், வாழ்வில் பல கடினமான பணிகளைச்செய்து முடிப்பதற்கு தாயகஇசை பெரிதளவில் உதவியது. உணர்வுகளை முறுக்கி ஆளை துடித்து உயிர்ப்பிக்கின்ற பலம் தாயக இசைக்கு உண்டு. இந்தவகையில் ஒரு இடத்தில் நெடுக்காலபோவான் வேறுவகையில் கூறியதுபோல் இளையராஜாவை தலையில் வைத்துக்கொண்டாடும் அளவுக்கு எனக்குள் உணர்ச்சி தோன்றவில்லை.

வேறு எதுவும் புதிதாக சொல்வதற்கில்லை.

வணக்கம்.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் இசை நிகழ்ச்சிய நவம்பரில் நடத்தப்படுவதை மக்கள் சுயாதீனமாக தமக்கான காரணங்களோடு எதிர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது..???!

முள்ளிவாய்க்கால் பேரவலம் கண்டு மக்கள்.. சொல்லனா மனத்துயரில் உள்ள இன்றைய வேளையில் நவம்பர் மாதம் என்பது பல ஈழத்தமிழர் வீடுகளில்.. குறிப்பாக மாவீரர் குடும்பங்களில் தங்கள் பிள்ளைகள் குடும்பத் தலைவர்கள் தலைவிகள் பற்றிய நினைவுகளை மீட்டிச் செல்லும் மாதமாக அமைவதும்.. மாவீரர் தினத்திற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபடுவதும் வழமையான மனித நடத்தைகளில் அடங்கும். அந்த மாதத்தில் மாவீரர் சார்ந்த உறவுகளின் எண்ணங்களில் அவர்கள் பற்றிய நினைவுகள் அதிகம் அலைமோதவும் செய்யும். இது மனித இயற்கை..!

இப்போ கார்கில் போர் நினைவு தினத்தில் இசைஞானி ஒரு களியாட்ட இசை நிகழ்ச்சியை நடத்த முன் வருவாரா..??! நிச்சயமாக இல்லை. கார்கில் போரில் செத்த 800 பேரின் வீடுகள் தவிர மிச்சம் கோடி கோடிப் பேரின் வீடுகளில் அந்த நாளில் மகிழ்ச்சி தானே பொங்கி வழியுது. அப்புறம் எதுக்கு.. அதை நிறுத்தனும்..??!

அந்த வகையில் மாவீரர்கள் சார்ந்து உண்மையாகவே நினைவலைகளைத் தாக்கும் மக்கள் இளையராஜா என்ற மனிதர் சராசரி ஈழத்தமிழனின் (இந்த இசை நிகழ்ச்சிக்கு ரிக்கெட் வாங்கக் கூட முடியாத அல்லது விரும்பாத ஈழத்தமிழனும்.. கனடாவில் வாழ்கிறான்..!) மன உணர்வை உள்வாங்க கோரி ஒரு எதிர்ப்பைக் காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது.

மாற்றம் என்பது இரண்டு வழிகளில் பிறக்க முடியும்.

1. பரஸ்பர புரிந்துணர்வு.

2. எதிர்ப்புக்காட்டுதல்.

முதலாம் வழிக்கு சந்தர்ப்பம் குறைவென்றால் இரண்டாம் வழி தான் மக்களின் தேர்வு.

அதேவேளை.. பல வித சமாதானங்கள் சொல்லிக் கொண்டு இந்த இசை நிகழ்ச்சியை காண ஆவலோடு இருப்பவர்களும் உளர். அவர்களுக்கும் அந்த ஆசையினை திருப்திப்படுத்தும் உரிமை உண்டு. அதை இளையராஜா பூர்த்தி செய்ய முனையலாம். இருந்தாலும்... மக்களில் ஒரு பகுதியினர் இளையராஜாவின் இந்த நிகழ்ச்சியோடு இல்லை.. அதற்கு அவர்கள் ஒரு காரணத்தையும் முன் வைக்கிறார்கள். அதுவும் தவறல்ல. அது இளையராஜாவைப் போய் சேர்வதும் தவறல்ல.

இளையராஜா இசைக்கு ஞானியே தவிர.. மனிதத்திற்கு தலைவன் அல்ல..! அவர் சாதாரண ஆசா பாசமுள்ள சராசரி மனிதன்..! அவர் தமிழினத் தலைவரும் கிடையாது. தமிழ் பேசும் தமிழ் கலைஞன் அவ்வளவே..!

கனடா போன்ற சனநாயக நாட்டில் மக்கள் மாறுபட்ட கருத்தோடு இருப்பதும்.. அதில் நியாயத்தை முன் வைத்து எதிர்ப்புக் காட்டுவதும் தவறே அல்ல. நியாயமற்ற காழ்ப்புணர்வுள்ள.. தொழில் போட்டி சார்ந்து இன்னும் என்னென்னவோ சார்ந்தெல்லாம் எத்தனையோ எதிர்ப்புக்கள் எழும் நிலையில்.. மக்கள் ஒரு நியாயத்தை முன்னிறுத்தி எதிர்ப்புக்காட்டுவது தவறே அல்ல..! அந்த நியாயம் சிலருக்கு தவறாகலாம். பலருக்கு உண்மை ஆகலாம்..! இன்னும் சிலருக்கு முடிவெடுக்க முடியாத நிலை தரலாம்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

இளையராஜாவின் இசை நிகழ்ச்சிய நவம்பரில் நடத்தப்படுவதை மக்கள் சுயாதீனமாக தமக்கான காரணங்களோடு எதிர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது..???!

நிகழ்ச்சியை நடத்திவிட்டுப் போகட்டும். மக்கள் ஜனநாயக முறையில் இந் நிகழ்ச்சியைப் புறக்கணித்து ஏற்பாட்டாளர்களுக்கு நல்ல பாடம் படிப்பிப்பார்கள். :rolleyes:

இளையராஜா தான் நவம்பர் மாதத்தில் நிகழ்ச்சி செய்யப் போவதாகக் கேட்டாரா ?

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யார் ? ஏற்பாட்டாளர்களுக்கிடையான பிரச்சனைக்குள் இளையராஜாவை இழுத்து அறிக்கைகள் விடுவது கேவலமானது.

இளையராஜா ஒரு கலைஞர். பண பேரம் பேசப்பட்டு நிகழ்ச்சிக்கு ஒப்புதல் கேட்டால் ஆம் / இல்லை என்று சொல்வாரே தவிர புலம்பெயர்ந்தவர்கள் ஒரு மாதத்தை மாவீரருக்காக ஒதுக்கி, அம் மாதம் முழுவதும் திருமண, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாது, தண்ணியடிக்காது, திரைப்படம் பார்க்காது புலன்களை அடக்கி விரதமிருப்பார்கள் என்று அவர் அறிந்திருக்க முடியாது. ஏற்பாட்டாளர்கள் அறிந்திருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தான் ஒரு நிகழ்வுகளுக்கோ,விழாக்களுக்கோ போவதில்லை.இசைஞானியின் விழா இங்கு நடந்திருந்தாலும் நான் போய் இருக்க மாட்டேன்...ஆனால் அப்படி போறவர்களை ஏதோ பெரிய பிழை செய்கிறவர்களைப் போல பார்க்கவும் மாட்டேன்....தெரியாமல் தான் கேட்கிறேன் புலத்திலோ,வன்னியிலோ அல்லது ஈழத்திலோ 2009 க்குப் பிறகு விழாக்களோ,கொண்டாட்டங்களோ நடக்கவில்லையா என்ன?[அதுவும் நவம்பர் மாதத்தில்]...களியாட்ட நிகழ்வுகளுக்குப் போகிறவர்களுக்கு தேசிய உணர்வு குறைந்து விடும் அல்லது அவர்கள் செய்வது பிழை என்ட மாதிரி எப்படி எழுதுகிறார்களோ தெரியவில்லை

இது ஒரு இசை விழா...இசைஞானி பொதுவாக மேடையில் நட‌த்துவது இசை நிகழ்ச்சி நடத்துவது குறைவு ஆனால் அவரே இவ் நிகழ்ச்சியை கனடாவில் நட‌த்த முன் வரும் போது அவர‌து ர‌சிகர்கள் பார்ப்பதற்கு முன்னுக்கு நிற்பார்கள் தானே! அதில் என்ன தப்பு?...சாதர‌ண ஒரு விழாவிற்கு மண்ட‌பம் எடுக்கிறதே பெரிய கஸ்ட‌மாக இருக்கும் போது இந்த இசை நிகழ்ச்சிக்குகான மண்ட‌பம் அவர்களுக்கு 3ம் திகதி தான் கிடைத்திருக்கலாம்...ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை நெல்லையன் ஆகஸ்ட் மாதமே கொண்டு வந்து போட்டு விட்டார் அதைப் பார்த்தவுட‌ன் யாழ் கள இந்த இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பாளர்கள் ஒன்றும் பேச‌வில்லையே ஏன்?...யாராவது வந்து உங்களை தூண்டி விட்டால் தான் எழும்புவீங்களோ?...உங்களுக்கு முதலில் இருந்தே மாவீர‌ர் அக்கறை தான் பெரிதாக இருந்தால் அப்பவே இதற்கு எதிராக போர்க் கொடி தூக்கி இருக்க வேண்டும் அப்ப பேசாமல் இருந்து விட்டு இப்ப யாரோ இடையில் புகுந்து அர‌சியல் செய்ய வெளிக்கிட‌ அவர்களுக்கு பின்னால் வால் பிடிக்கிறீங்களே உங்களுக்கு சொந்தமாய் அறிவு இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சியை நடத்திவிட்டுப் போகட்டும். மக்கள் ஜனநாயக முறையில் இந் நிகழ்ச்சியைப் புறக்கணித்து ஏற்பாட்டாளர்களுக்கு நல்ல பாடம் படிப்பிப்பார்கள். :rolleyes:

இளையராஜா தான் நவம்பர் மாதத்தில் நிகழ்ச்சி செய்யப் போவதாகக் கேட்டாரா ?

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யார் ? ஏற்பாட்டாளர்களுக்கிடையான பிரச்சனைக்குள் இளையராஜாவை இழுத்து அறிக்கைகள் விடுவது கேவலமானது.

இளையராஜா ஒரு கலைஞர். பண பேரம் பேசப்பட்டு நிகழ்ச்சிக்கு ஒப்புதல் கேட்டால் ஆம் / இல்லை என்று சொல்வாரே தவிர புலம்பெயர்ந்தவர்கள் ஒரு மாதத்தை மாவீரருக்காக ஒதுக்கி, அம் மாதம் முழுவதும் திருமண, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாது, தண்ணியடிக்காது, திரைப்படம் பார்க்காது புலன்களை அடக்கி விரதமிருப்பார்கள் என்று அவர் அறிந்திருக்க முடியாது. ஏற்பாட்டாளர்கள் அறிந்திருக்க முடியும்.

காந்தி வந்து கேட்டாரா சுதந்திர தினத்தைக் கொண்டாடு என்று. ஜெயந்தி தினத்தைக் கொண்டு என்று. பாகவதர்கள் வந்து கேட்டார்களா மார்கழியை இசைக்கான மாதம் ஆக்கு என்று. கார்கில் போரில் பலியான வீரர்கள் வந்து சொன்னார்களா எமக்காக வருந்துங்கள் என்று.

இவற்றை எல்லாம் இளையராஜா அறிந்து செய்யவில்லையா..! ஈழத்தில் மாவீரர் தினம்.. மாவீரர்கள் என்பது மக்களின் உணர்வோடு இருப்போடு பொருந்திய விடயம் என்பதை இளையராஜா அறியாதவரா..???!

ஈழத்தமிழர்களை வைச்சு காசு பார்க்க முடியுறப்போ.. ஏன் அவர்களின் உணர்வுகளை புரிஞ்சுகன்னு முயலல்ல..! சீமான் சத்தியராஜ் மணிவண்ணன் போன்ற சினிமா ஆக்களும் தான் ஈழத்தமிழங்க மனதோட மனதோடி வாழுறாங்க..???!

இது இளையராஜா மீதான கண்டனம் அல்ல..! இளையராஜாவுக்கும் ஈழத்தமிழரின் சிலரின் மனநிலை புரிய வேண்டும் என்பதற்கான எதிர்ப்பாகவே பார்க்க வேண்டும்..! இளையராஜா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஏற்பாட்டாளர்களையும் போய் சேரும்..!

நவம்பர் மாதம்.. மாவீரர் நினைவு அதிகம் அலைமோதும் மாதம் என்பதால்.. 40,000 க்கும் மேற்பட்ட மாவீரர்களையும் 180,000 மேற்பட்ட உறவுகளையும் மக்கள் நினைந்துருகும்.. காலம். அப்படி உருகாமல் தண்ணி அடிக்கிறவை பெருமளவில் இருக்கலாம். அதற்காக.. உருகிற மக்களைப் புறக்கணிக்க முடியுமோ..?????!

சிறுபான்மை இனத்தினரின் உரிமைக்காகப் போராடும் தமிழர்களே தமக்குள் சிறுபான்மையாக உள்ள மாவீரர் குடும்பங்களின் போராளிகளின் போரில் உயிரிழந்த மக்களின் உறவுகளின் உணர்வோடு சங்கமிக்க விரும்புவதில்லை என்பது கேவலம்.

இங்கு இலண்டனில் ஒரு மாவீரரின் தாய். கோவில் திருவிழா தொட்டு.. எந்த ஒரு ஆடம்பரம்பர நிகழ்விற்கும் போவதில்லை..! தன் பிள்ளையை நினைத்து அப்படி செய்கிறார். அந்தத் தாயின் உணர்தலை மாவீரரின் பெயரால் போரை சாட்டி.. நாட்டை விட்டு ஒரு பாதிப்பும் இன்றி அகதி அந்தஸ்துக்காக ஓடி வந்து பொருண்மியம் தேடி வாழ்பவர்கள் உணர வாய்ப்பில்லை..!

இந்தக் குரல் அப்படியான தாய்மாரின் உள்ளங்களையும் இளையராஜா போன்றவர்கள் உணர வேண்டும். ஒற்றைக் காந்திக்காக பல தினங்கள் அனுஷ்டிக்கும் மக்கள் கூட்டம்.. சொந்தப் பிள்ளைகளை நாட்டுக்காக தாரை வார்த்த உறவுகளை எண்ணி ஒரு மாதத்தில்.. பிரபல்ய களியாட்ட நிகழ்வை நடத்துவதை தவிர்ப்பதால் என்ன ஆகிடும்..??!

இந்த இசை நிகழ்ச்சியை இசை நிகழ்ச்சியாக வரவேற்பவர்கள்.. நீங்களும் உணர்வுள்ள மனிதர்கள் தானே..???! உங்கள் வீட்டில் கருமாரி என்றால் இளையராஜாவை கூப்பிட்டு வைச்சு கூத்தா அடிப்பீர்கள்..????! :(:rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் நிகழ்ச்சிய அறிவித்த அன்று எதிர்த்திருக்கணும் அதென்ன இளையராஜா Canada வந்த உடன எதிர்க்கிறது? எது எப்பிடி இருப்பினும் மண்டபம் நிறைந்த மக்களுடன் நிகழ்ச்சி இனிதே நடை பெரும் டிக்கெட் எல்லாம் பெரும்பாலும் விற்று தீர்ந்து விட்டனவாம் என்று கனடா தகவல்கள் கூறுகின்றன :D

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு இசை விழா...இசைஞானி பொதுவாக மேடையில் நட‌த்துவது இசை நிகழ்ச்சி நடத்துவது குறைவு ஆனால் அவரே இவ் நிகழ்ச்சியை கனடாவில் நட‌த்த முன் வரும் போது அவர‌து ர‌சிகர்கள் பார்ப்பதற்கு முன்னுக்கு நிற்பார்கள் தானே! அதில் என்ன தப்பு?...சாதர‌ண ஒரு விழாவிற்கு மண்ட‌பம் எடுக்கிறதே பெரிய கஸ்ட‌மாக இருக்கும் போது இந்த இசை நிகழ்ச்சிக்குகான மண்ட‌பம் அவர்களுக்கு 3ம் திகதி தான் கிடைத்திருக்கலாம்...ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை நெல்லையன் ஆகஸ்ட் மாதமே கொண்டு வந்து போட்டு விட்டார் அதைப் பார்த்தவுட‌ன் யாழ் கள இந்த இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பாளர்கள் ஒன்றும் பேச‌வில்லையே ஏன்?...யாராவது வந்து உங்களை தூண்டி விட்டால் தான் எழும்புவீங்களோ?...உங்களுக்கு முதலில் இருந்தே மாவீர‌ர் அக்கறை தான் பெரிதாக இருந்தால் அப்பவே இதற்கு எதிராக போர்க் கொடி தூக்கி இருக்க வேண்டும் அப்ப பேசாமல் இருந்து விட்டு இப்ப யாரோ இடையில் புகுந்து அர‌சியல் செய்ய வெளிக்கிட‌ அவர்களுக்கு பின்னால் வால் பிடிக்கிறீங்களே உங்களுக்கு சொந்தமாய் அறிவு இல்லையா?

நிகழ்ச்சி ஏற்பாட்டின் போதே எதிர்ப்புச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இளையராஜாவோ.. ஏற்பாட்டாளர்களோ குழந்தைகள் அல்ல. உலகை உலக நிகழ்வுகளை அவதானிப்பவர்கள். அவர்களா உணர்ந்து திருத்தங்கள் மாற்றங்களைக் கொண்டு வர அவகாசம் அளிப்பது அவசியம். அது பண்பு. அவர்கள் அதனை உணராத போது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் திகதி மாற்றமின்றி உறுதிப்படுத்தப்பட்ட பின் அதனை இட்டு கருத்துவேறுபாடு கொண்டுள்ள மக்கள் தம் உணர்வை பதிவு செய்வதில் நீங்கள் என்ன தவறு கண்டீர்கள்..???!

எல்லோருக்கும் இளையராஜா தொடர்பில் ஒரே பார்வை தான் இருக்கனுன்னு அவசியம் இல்லை. அவர் இது விடயத்தில் கொஞ்சம் மக்களின் உணர்வையும் புரிந்து கொள்ளக் கோரப்படுவது.. எதிர்காலத்தில் அவர் அந்த மக்களின் உணர்வுகளை இனங்காணவும்.. அதற்கேற்ப தன்னை தானே வழிநடத்தவும் உதவலாம்..! அதை ஏன் நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்..???! :icon_idea:

இந்தக் குரல் அப்படியான தாய்மாரின் உள்ளங்களையும் இளையராஜா போன்றவர்கள் உணர வேண்டும். ஒற்றைக் காந்திக்காக பல தினங்கள் அனுஷ்டிக்கும் மக்கள் கூட்டம்.. சொந்தப் பிள்ளைகளை நாட்டுக்காக தாரை வார்த்த உறவுகளை எண்ணி ஒரு மாதத்தில்.. பிரபல்ய களியாட்ட நிகழ்வை நடத்துவதை தவிர்ப்பதால் என்ன ஆகிடும்..??!

இந்த இசை நிகழ்ச்சியை இசை நிகழ்ச்சியாக வரவேற்பவர்கள்.. நீங்களும் உணர்வுள்ள மனிதர்கள் தானே..???! உங்கள் வீட்டில் கருமாரி என்றால் இளையராஜாவை கூப்பிட்டு வைச்சு கூத்தா அடிப்பீர்கள்..????! :(:rolleyes::icon_idea:

மாவீரர் குடும்பங்களையும் மாவீரர்களை உணர்வுபூர்வமாக நினைவுகூருபவர்களையும் மதிக்கிறேன்.

நான் கருமாரி வீட்டில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்வது - செய்யாமல் விடுவது எனக்கும் சுற்றத்தாருக்கும் இடையிலுள்ள பிரச்சனையே தவிர கச்சேரி செய்ய வந்தவனில் பிழை பிடிப்பது தவறு.

இதை தவிர எவ்வளவோ நல்ல அரசியல் உள்ளது அதை செய்யலாமே. இன்னும் எங்கள் மக்கள் விடிவுக்காக காத்திருகிறார்கள் , தாயக நிலம் பறி போகிறது , போர்குற்ற விசாரணைகள் கிடப்பில் இருக்கிறது, முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத்துக்கு வழி இல்லாமல் இருக்கிறார்கள். இதில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்துவது சரியா பிழையா என்ற அரசியல் தேவை தானா

மாவீரர் நினைவுகளை மதிக்கிறோம் அதுக்கு நவம்பர் மாவீரர் மாதம் மே மாதம் முள்ளிவாய்க்கால் மாதம் , செப்டெம்பர் திலீபன் மாதம் , இப்படி எல்லா மாதத்திலும் இசை நிகழ்சிகளையும் களியாட்டங்களையும் தடுத்து நிறுத்தி உங்கள் அரசியல் போராட்டங்களை நடத்தி எப்போ தமிழீழம் பெற்று தருவீர்கள்.

மக்களின் மன அழுத்தத்திற்கும் விரக்திகளுக்கும் தான் இசை நிகழ்சிகள். இதை தடுப்பதன் மூலம் மக்கள் மனங்களை எப்படி வென்று எடுப்பீர்கள் .

உணர்வு தானாக வரவேண்டுமே தவிர திணிக்கப்பட கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் குடும்பங்களையும் மாவீரர்களை உணர்வுபூர்வமாக நினைவுகூருபவர்களையும் மதிக்கிறேன்.

நான் கருமாரி வீட்டில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்வது - செய்யாமல் விடுவது எனக்கும் சுற்றத்தாருக்கும் இடையிலுள்ள பிரச்சனையே தவிர கச்சேரி செய்ய வந்தவனில் பிழை பிடிப்பது தவறு.

இளையராஜா மீது பிழைபிடிப்பதல்ல இந்த நிகழ்ச்சிக்கு எதிரான குரல்களின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இளையராஜா உள்ளிட்டவர்கள் தமது உணர்வை மதிக்காத சந்தர்ப்பம் கண்டு ஒரு பகுதி மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதும் பதிவு செய்வதுமாகவே உள்ளது..!

அந்த வகையில்.. இந்த எதிர்ப்பு இளையராஜாவை நோக்கியும் பதியப்படுகிறது. காரணம் அவரும் இவற்றை அறிந்து பின்னணிகள் உணர்ந்து இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வது எதிர்காலத்தில் நன்று என்பதலாகக் கூட இருக்கலாம்..!

கருமாரிக்கு எவரும் இசை நிகழ்ச்சி வர மாட்டன் என்றிட்டால்.. உங்களுக்குள்ளோ உறவினருக்குள்ளோ பிரச்சனை வராதே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

அழுவதா, சிரிப்பதா ஆண்டவா...!!!

அண்ணா எங்கிருந்தாலும், இனி எந்த பிறப்பிலும் தமிழனாக பிறக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை தவிர எவ்வளவோ நல்ல அரசியல் உள்ளது அதை செய்யலாமே. இன்னும் எங்கள் மக்கள் விடிவுக்காக காத்திருகிறார்கள் , தாயக நிலம் பறி போகிறது , போர்குற்ற விசாரணைகள் கிடப்பில் இருக்கிறது, முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத்துக்கு வழி இல்லாமல் இருக்கிறார்கள்.

இதில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்துவது சரியா பிழையா என்ற அரசியல் தேவை தானா

மாவீரர் நினைவுகளை மதிக்கிறோம் அதுக்கு நவம்பர் மாவீரர் மாதம் மே மாதம் முள்ளிவாய்க்கால் மாதம் , செப்டெம்பர் திலீபன் மாதம் , இப்படி எல்லா மாதத்திலும் இசை நிகழ்சிகளையும் களியாட்டங்களையும் தடுத்து நிறுத்தி உங்கள் அரசியல் போராட்டங்களை நடத்தி எப்போ தமிழீழம் பெற்று தருவீர்கள்.

மக்களின் மன அழுத்தத்திற்கும் விரக்திகளுக்கும் தான் இசை நிகழ்சிகள். இதை தடுப்பதன் மூலம் மக்கள் மனங்களை எப்படி வென்று எடுப்பீர்கள் .

உணர்வு தானாக வரவேண்டுமே தவிர திணிக்கப்பட கூடாது

மாவீரர்களும்.. போராளிகளும்.. மரணித்த மக்களும்.. யாரோ அடுத்தவர்கள் என்ற சிந்தனையின் வெளிப்பாடு இந்தக் கருத்து..!

இப்படியான கருத்தியலோடு இருந்து கொண்டு எந்த ஜென்மத்திற்கும் தமிழீழத்தை என்ன சிறீலங்காவில் ஒரு துரும்பைக் கூட தமிழர்கள் சொந்தம் கொண்டாட முடியாது..!

இந்த இசை நிகழ்ச்சிக்கு போய் விசிலடிச்சிட்டு வந்திட்டா மட்டும் தமிழீழம் கிடைக்க வழி பிறக்குமாக்கும்..?????????????!

தனிப்பட்ட மாவீரர்களின் நினைவு தினங்கள் வேறு. மாவீரர் தினம் என்பது வேறு. அதனால் தான் நினைவு தினங்களுக்கு அப்பால் மாவீரர் நாள் என்ற ஒன்றை தேசிய தலைவர் சிந்தனையால் உருவாக்கித் தந்து சென்றுள்ளார். அது மாவீரர்களின் நினைவேந்தலோடு அவர்களின் இலட்சியம் வெல்ல உழைப்பதற்கு உறுதி செய்ய செயற்படுதலுக்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது..! அத்தோடு மக்கள் பணி செய்யவும் என்று தான் உள்ளது. அதற்காக 12 மாதமும் மாவீரர்களை நினைக்க எவரும் வற்புறுத்தவில்லை..!

வெள்ளைகள் கூட பொப்பி வாரத்திற்கு அளிக்கும் மதிப்பை.. எம்மவர்கள் மாவீரர் தின மாதத்திற்கு அளிக்க முன் வராமை.. கேவலம்..! பொப்பி வாரத்தில்.. பொப்பி மலர் அணிந்து பணிகள் செய்யும் வெள்ளைகள் எங்கே.. தம் சுய மன அழுத்தம் போக்க.. மாவீரர்களை அவர்களைப் பெற்ற உறவுகளை தூக்கி எறியும் எம்மவர்கள் எங்கே..???!

தமிழர்களுக்காக தம் உயிர் தந்த மாவீரருக்குரிய மாதத்தில் பெரும் களியாட்டங்களை தவிர்க்கச் சொல்கிறார்களே தவிர தனிப்பட்ட விடயங்களை அல்ல..!

முதல் வாரத்தில் களியாட்டம்.. மூன்றாம் வாரத்தில் மாவீரர் வாரம்..! நாட்டுக்காக மரணித்த தன்னிகரற்ற அந்த மாவீரர்களை நினைக்க வேண்டாம்.. மதிக்க வேண்டாம். மிதிக்காமல்.. கேவலப்படுத்தாமல் இருக்கலாம் இல்லையா..????!

மாவீரர் தினத்தை குழப்புகின்ற எதிரிக்கும்.. ஒட்டுக்குழுக்களும்.. இவர்களுக்கும் என்ன வேறுபாடு..???! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.