Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............கிரிகட்டும் அரசியலும்{அப்பே கம்முத(இராணுவம்)கொந்தாய்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்கள பெளத்த தேசத்தின் கிரிக்கெட் அணித் தலைவர் தங்கள் இன இராணுவத்தை மேம்படுத்திச் சொல்லாமல்... மனிதாபிமானமா கதைப்பார்.

ஆனால் சங்ககார சொன்னதில் ஒரு உண்மை வெளிப்பட்டுள்ளது. வயல் நிலமா இருந்த காணி.. இப்போ கிரிக்கெட் மைதானமாகியுள்ளதாம். யார் காணியோ...????! எல்லாமே பலாத்காரமாகச் செய்யப்படும் போது....

மேலும்.. பேட்டி காண்பவருக்கு வடக்குக் கிழக்குப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை போலும். உண்மையில் அவர் தெரிந்திருந்தால்.. ஏன் இராணுவத்தைக் கொண்டு அதைக் கட்டினீர்கள்.. இராணுவம் பொதுவாக பேரனர்த்த வேளைகளில் தான் உதவிக்கு அழைக்கப்படுகிறது. அதுதான் உலக நியதியும் கூட. போர் முடிந்து இத்தனை ஆண்டுகளின் பின்னும் ஏன் இராணுவத்தை பாவிக்கிறீர்கள்.. உள்ளூர் மக்களைக் கொண்டு கட்டி இருப்பின் அது அந்த மக்களுக்கு வருவாய் அளிப்பதோடு கிரிக்கெட் கட்டுமானத்துறையில் ஒரு பயிற்சி களமாக மாற்றப்பட்டிருக்குமே என்ற கேள்வியைக் கேட்க முடியாமல் இருந்தமையானது.. எல்லாமே bias ஆக.. பிரச்சார ரீதியானது என்ற நிலையில் வைத்துத்தான் பார்க்கப்பட முடிகிறது..! :icon_idea:

பகிர்விற்கு நன்றி கரும்பு. :)

Edited by nedukkalapoovan

சிங்களவர்களைப்போல் அரசியல் செய்வதற்கு நாமும் கற்றுக் கொள்ள வேண்டும்.இருந்தும் சிங்களவர்களைப்போல் அரசியல் செய்வதானால் நிறைய பொய் சொல்ல வேண்டி இருக்கும். இருந்தும் அரசியலுக்காகக்கூட பொய் சொல்லத் தெரியாத எமது அரசியல்வாதிகள் உண்மையில் போற்றப்பட வேண்டியவர்கள் .

Edited by கிளியவன்

  • கருத்துக்கள உறவுகள்

இதை சொல்வதற்கு மிகவும் வருத்தமாயிருக்குது எது எப்படி இருந்தாலும் தமிழீழ அணி உருவாகும் வரை எனது ஆதரவு இலங்கையணிக்கே

தமிழர்களின் பலவீனம் எது என்பதையும், அதனை எவ் வகையில் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்தலாம் என்பதை சிறிலங்கா இராணுவத்தில் இருந்து சங்ககார வரை அறிந்து வைத்துள்ளார்கள். அவர்களின் மதி நுட்பமே அவர்களை ஆயிரம் ஆண்டுகளாக இத் தீவில் வாழ வைத்திருக்கிறது. கிரிக்கட்டை அவர்கள் மிகப் பலம் வாய்ந்த தேசியவாத ஆயுதமாகப் பாவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை சொல்வதற்கு மிகவும் வருத்தமாயிருக்குது எது எப்படி இருந்தாலும் தமிழீழ அணி உருவாகும் வரை எனது ஆதரவு இலங்கையணிக்கே

நான் எப்பவும் முதலாவதாக இந்திய அணிக்குத்தான் ஆதரவு கொடுப்பேன். சிறிலங்காவுக்கு வெளிப்படையாக அல்லது மனதிற்குள்ளேயோ ஒருபோதும் ஆதரவு கொடுத்ததில்லை (முரளிதரன் தமிழராக இருந்திருந்தும்)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதை சொல்வதற்கு மிகவும் வருத்தமாயிருக்குது எது எப்படி இருந்தாலும் தமிழீழ அணி உருவாகும் வரை எனது ஆதரவு இலங்கையணிக்கே

நான் ஆதரவு தருவது அவுஸ்திரெலியா அணிக்கு. நான் பிறந்த மண்ணில் எனக்கு கல்வி உரிமை யாழ்ப்பாணத்தமிழன் என்ற காரணத்தினால் (தரப்படுத்தலால்) நிராகரிக்கப்பட்டது. நான் வாழ்ந்த இடம் உயர் பாதுகாப்பு வலயம் என்று சொல்லி இராணுவம் பறித்துவிட்டது. நான் தமிழ் மொழி பேசுகிறவன் என்பதற்காக சித்திரவாதை செய்து என்னைக் கொல்லப்பார்த்தது. ஆனால் நான் வாழும் அவுஸ்திரெலியாவில் நான் படிப்பதற்கு தமிழன் என்று எனது கல்வி மறுக்கப்படவில்லை. நான் விரும்பிய இடத்தில் வாழ்வதற்கு எனக்கு உரிமை வழங்கியது. எனது மொழியில் எனது கலாச்சாரத்தினைப் பேண பன்மொழிக் கலாச்சாரத்துக்கு அவுஸ்திரெலியா நிதி உதவி தந்து ஊக்குவிக்கிறது. சிங்கள நாட்டுக்கு சென்று சிங்கள அரசு தமிழன் என்ற காரணத்தினால் என்னைக் கைது செய்யும் போது நான் அவுஸ்திரெலியன் என்று சொல்லி எனக்காக என்னைப் பாதுக்காக்கிறது. நான் அவுஸ்திரெலியாத்தமிழனாக வாழ்வதில் பெருமைப் படுகிறேன். இதனால் நான் ஆதரிப்பது அவுஸ்திரெலியாவைத்தான்.அவுஸ்திரெலியா விளையாடாத சந்தர்ப்பங்களில் மேற்கிந்தியா தீவுகள், நியூசிலாந்து தீவுகளுக்கு ஆதரவு வழங்குவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை சொல்வதற்கு மிகவும் வருத்தமாயிருக்குது எது எப்படி இருந்தாலும் தமிழீழ அணி உருவாகும் வரை எனது ஆதரவு இலங்கையணிக்கே

எப்படி இருந்தாலும் தமிழீழ அணி உருவாகும் வரை எனது ஆதரவு ஒன்றுக்குமே இல்லை

பகிர்வுக்கு நன்றி கரும்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.