Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் காலத்தில் நடத்தப்படும் இளையராஜாவின் நிகழ்ச்சியை புறக்கணிப்போம்-செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலங்கடந்து வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு கைக்கொள்ளும் ஆயுதம் மாவீரர் என்பதுதான் கசப்பான உண்மை.

  • Replies 139
  • Views 10.8k
  • Created
  • Last Reply

சீமானும் இளையராஜா மாதிரியே படத்துறையில் மட்டும் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். இலங்கை அரசுக்கும், கிந்திய காங்கிரசுக்குமாக சில படங்களை தயாரித்திருந்தால், இலங்கையிலும் கிந்தியாவிலும் நிறைய பணம் சேர்த்திருந்திருக்கலாம்.

ஆனால் அவர் ஈழத்மிழருக்காக வேறு பாதையை தெரிந்தார்.

இனறு அவர் கனடாவில் செய்வதை வியாபார போட்டியாக நிலை நிறுத்த முயல்பவர்கள், அவர் ஒரு தடவை அல்ல பலதடவைகள் தனது வியாபாரத்தை கைவிட்டு விட்டு சிறை போனார் என்ற முறையில் இந்த தடவை அவர் போகும் வியாபார போட்டியில் நாம் அவரின் பக்கமெடுத்துத்துதான் செல்லவேண்டுமென்பதை எப்படி மறுக்க முடியும்?

வாங்கும் வரை உதவி வாங்கிவிட்டு டாடா காட்டும் நம்மவர் இயல்பா இது? இந்த வியாபார போட்டியில் எப்படி சீமானை கைவிட்டுவிட்டு இளைய ராஜாவுடன் சேர்ந்து "கலையோ கலை" என்ன முடியும்?

சீமான் தனது படத்துறையை கைவிட்டு விட்டு இரவு பகல் உழைத்து கருணாநிதியை விழுத்திய போது யாராவது சீமானிடம் "நமக்கு அது வேண்டாம் நல்ல ஒரு மசால போட்டுத்தா" என்று கேட்டிருந்தால் அவரும் இன்று நல்ல ஒரு பணக்காரன் ஆகியிருக்க முடியுமே?

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா, சீமான் இருவரில் என்றுமே சீமான்மேல்தான் எனக்கு மதிப்பு அதிகம். ஆனால் இந்த எதிர்ப்பை அன்று அறிவிப்பு வந்தவுடன் காட்டியிருக்க வேண்டும். உண்மையான உணர்விருந்தால் அன்றே வந்திருக்கும். ஆனால் குழப்பியடிப்பவர்கள் சீமான், செல்வமணி, பாரதிராஜா என்று உணர்வாளர்களை இதற்குள் இழுத்துவிட்டிருக்கிறார்கள் என்பதாகவே எண்ணுகிறேன்..!

இல்லையென்றால், இரண்டுமாதங்களுக்கு முன் ஏன் எதிர்ப்பு கிளம்பவில்லை என்பதற்கு ஒரு பதில் வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்திரியில் அதிகம் எழுதாமல் விலகுவதே நான் தம்பி சீமானுக்குக் கொடுக்கும் பெருமதிப்பினால்தான். இங்கு சீமானுக்கு எதிராக அல்லது அவருடைய கருத்திற்கு எதிராக கருத்திடுவதென்பது இன்னொரு வகையில் நாம் கவலைப்படக்கூடியவாறு ஒரு வேற்றுமையைத் தோற்றுவிக்கக்கூடியது. எவ்வளவு தூரத்திற்கு ஒற்றுமைபற்றி பேசுகிறோமோ அதனைப்பாதுகாக்கும் கடமையும் எமக்கிருக்கிறது. இந்த இடத்தில் அதனை உரிமையுள்ள அக்காவாக தம்பி சீமானுக்கும் சொல்லாமல் விட்டுவிடமுடியாது.

நாங்கள் அதிதீவிரவாதிகளாக இருந்தோ இனவெறியர்களாகவோ இருந்து எதையும் சாதிக்க முடியாது .கருணாநிதியின் தேர்தல் தோல்விக்கு ஒரு ஐந்து வீதமும் கூட சீமானின் பங்கு இல்லை.சீமான்,வை.கோ ,திருமாவளவன் ,ராமதாஸ் கூட்டு சேர்ந்தால் கூட பத்து பதினைந்து ஆசனங்கள் பெறுவது கஷ்டம் .எதிலும் யதார்த்தம் அறியாதர்களாகவே இருக்கின்றோம் .

சீமானில் எனக்கு ஒரு போதும் நல்ல அபிப்ராயமில்லை.(அவரது சினிமா பிடிக்கும்.அவர் கட்ட பொம்மனாக நடித்தால் மிக பொருத்தமாக இருக்கும்)

அவரது அரசியல் மிக கீழ்த்தரமானது,சிங்களவன் செய்யும் அரசியல் போன்றது.அவர் தமிழ் நாட்டு அரசியலில் கூட பல இடங்களில் (பெரியார் பற்றி பேசியது ,கூடாங்குளம் பற்றிய நிலைப்பாடு) குழப்பம் காட்டியவர்.

புலம் பெயர் வியாபாரிகளின் கைகளில் அவர் விழுந்து கனகாலம்.

நாங்கள் அதிதீவிரவாதிகளாக இருந்தோ இனவெறியர்களாகவோ இருந்து எதையும் சாதிக்க முடியாது .கருணாநிதியின் தேர்தல் தோல்விக்கு ஒரு ஐந்து வீதமும் கூட சீமானின் பங்கு இல்லை.சீமான்,வை.கோ ,திருமாவளவன் ,ராமதாஸ் கூட்டு சேர்ந்தால் கூட பத்து பதினைந்து ஆசனங்கள் பெறுவது கஷ்டம் .எதிலும் யதார்த்தம் அறியாதர்களாகவே இருக்கின்றோம் .

1.சீமானில் எனக்கு ஒரு போதும் நல்ல அபிப்ராயமில்லை.(அவரது சினிமா பிடிக்கும்.அவர் கட்ட பொம்மனாக நடித்தால் மிக பொருத்தமாக இருக்கும்)

அவரது அரசியல் மிக கீழ்த்தரமானது,சிங்களவன் செய்யும் அரசியல் போன்றது.அவர் தமிழ் நாட்டு அரசியலில் கூட பல இடங்களில் (பெரியார் பற்றி பேசியது ,கூடாங்குளம் பற்றிய நிலைப்பாடு) குழப்பம் காட்டியவர்.

புலம் பெயர் வியாபாரிகளின் கைகளில் அவர் விழுந்து கனகாலம்.

1.நீங்கள் போகும் பாதை இது. உங்கள் அபிப்பிராயம் உங்கள் தேவைகளுக்கு ஏற்றதாகும். நீங்கள் தெரியும் பாத்திரத்தில் அவரால் நன்றாக நடிக்க முடியுமோ இல்லையோ அவர் பல நடிகர்களுக்கு பாத்திரங்கள் ஆக்கி கொடுத்தவர். நீங்கள் கேட்டால் உங்களுக்கும் கட்டயம் ஒன்று தருவார். நீங்கள் இப்படி உங்கள அடையாளத்தை அடிக்கடி குழம்பவேண்டி வராது.

2.நீங்கள் மட்டும் தான் போராட்டம் பிறகு; புலம் பெயர் வியாபாரம் முதல் என்பவர். சீமான் போராட சொன்னால் வியாபாரம் வேண்டும்; தீவிரவாதம் வேண்டம் என்பவர். இளையராஜா வருகையில் சீமான் .எதையும் இழக்கவில்லை. அவருக்கு கனடாவில் வந்து எந்த நிகழ்சியும் நடத்த முடியாது. அவர் முயலவும் இல்லை.

3. நீங்கள் இதை சொல்லாம். ஆனல் கருணாநிதிக்கு அந்த தைரியம் இல்லை. ஈழத்தமிழர் பிரச்சனையை ஜெயலலிதா எப்போதும் முன்னால் வைத்தது இல்லை. இன்று அவ அதை செய்ய வேண்டி இருப்பது சீமான் போன்றோராலே. ஜெயலலிதா டெசொ போல எதையும் செய்ய வில்லை. கருணாநிதி அதை வைப்பது ஜெயலலிதாவுக்காக அல்ல.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு யார் மேல் என்ன அபிப்பிராயம் என்பதா இங்கு முக்கியம்.மற்றது சிங்களவனின் அரிசியல் கீழ்த்தரமானது என்பது சீமானுடன் ஒப்பிடும் போதுதானா தெரிகிறது. சரி அவர் தமிழகம் சார்ந்து செய்யும் அரசியல் எப்படி என்பது எமக்கு முக்கியமான விடயமாகப்படவில்லை.ஈழம் சார்ந்த சீமானின் அரசியல் எனக்கு சரியாகவே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

1.

சீமான் அண்ணை புலம்பெயர்க் கோஷ்டிகளின் வீணான வியாபரப் போட்டிக்குள் தலையிடாமல் இருப்பது தான் அவர் மீதான மதிப்பை காக்கும். போன வருடம் இதே நாள் பிரமாண்டமாக நடந்த ஜேசுதாசின் இசை நிகழ்ச்சியை நடத்தியது ரொரன்டோவில் இருக்கும் பிரபலமான தமிழ் வர்த்தக நிறுவனம் தான். அவர்களின் பின் புலத்தில் பல புலிகளின் கனடா முன்னால் முக்கியஸ்தர்களும் இருந்தனர் என்பதால் எவருக்கும் அது நடந்தது நவம்பர் முதல் வாரம் என்பதைக் கவனிக்க தோன்றவில்லை. இன்று புதிய நிறுவனம் ஒன்று முதல் முறையாக இப்படி பிரமாண்டமாக நடத்த முற்படும் போதுதான் பிரச்சனையாகிப் போய் விட்டது. இதில் சீமானை இழுத்துவிடுவது உண்மையில் இவர்கள் சீமானுக்கு செய்யும் தீங்காகவே முடியும்.

2.

தலைவரின் பிறந்த தினத்தை அரங்கு எடுத்து கேக் வெட்டிக் கொண்டாடி விட்டுத் தான் அடுத்த நாள் உணர்வு பூர்வமாக மாவிரர் தினத்தையும் அனுட்டித்து அஞ்சலி செலுத்துகின்றோம். ஊரில் தலைவரின் பிறந்த தினத்துகு பொங்கல் பானை வைத்து பொங்கி பரிமாறியும், இனிப்பு வகைகளை கொடுத்து மகிழ்ந்தும் கொண்டாடிய பின் தான் அடுத்த நாள் விளக்கேற்றி இருக்கின்றோம். 2009 இல் இடம்பெற்ற பெரும் அவலத்தின் பின்பு வந்த தலைவரின் பிறந்த தினத்தைக் கூட விமரிசையாக கனடாவிலும் கூட மண்டபம் எடுத்து கேக் வெட்டி மகிழ்ந்து இருக்கின்றோம். இந்த நிகழ்வும் கூட கனடாவின் புலிகளின் முக்கிய ஆதரவாளர்களால் தான் நடத்தப்பட்டது.

தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடி விட்டு அடுத்த நாள் உணர்வு பூர்வமாக மாவீரருக்கு விளக்கேத்துவது எப்படி தவறில்லை என்று எனக்குள் உணர்கின்றேனோ அப்படித் தான் நவம்பர் முதல் வாரத்தில் ஒரு சந்தோசமான நிகழ்வை நடப்பது தொடர்பாகவும் உணருகின்றேன். இது இளையராஜாவின் நிகழ்ச்சி என்பதற்காக அல்ல. எவரது நிகழ்ச்சி என்றாலும் நடப்பதில் தவறில்லை.

3. உண்மையில் சீமான் இவ்வாறு நிகழ்வு நடத்துவது தவறென்று உளமாற சொல்வாராயின், எவரது வேண்டு கோளுக்காகவும் குரல் கொடுக்காமல் சுயமாக செய்கின்றார் எனில் அதனை முதலில் அவர் தமிழகத்தில் நிகழ்த்த முற்பட வேண்டும். புலிகள் ஒட்டு மொத்த தமிழர்களுக்காகத் தான் ஈழ மண்ணில் போராடினார்கள் என்று உணர்வு பூர்வமாக நினைப்பாராயின், மாவீரர் தினம் அன்று புலம் பெயர் வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு தம் வர்த்தக நிறுவனங்களை பூட்டி அனுட்டிக்கின்றனரோ அவ்வாறே தமிழத்திலும் அதே நாளில் அனுட்டிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து, அதற்காக அவர் சார்ந்து இருக்கும் தமிழக சினிமாத் துறையினரது ஆதரவினைப் பெற்று புறக்கணிப்பை நிகழ்த்த முன்வர வேண்டும். இவ்வாறான கோரிக்கையின் வெற்றி தோல்விக்கு அப்பால், அதனை நிகழ்த்தவாவது முன் வரவேண்டும்.

4. நான் இளையராஜா நிகழ்ச்சிக்கு போகப் போவதில்லை. 400 டொலரை ஒரே ஒரு நிகழ்ச்சிக்காக ஒரே அடியாக கொடுக்க விரும்பவில்லை. அத்துடன் எப்படியும் சீடியில் வரும் அப்பொழுது வீட்டில் இருந்து கொண்டு, மனிசி செய்து தரும் பொரியல்களை கொறித்துக் கொண்டு பார்க்கலாம் என்று இருக்கின்றேன்.

நன்றி.

1. சுட்டிக்காட்ட தவறிய தவறை தொடர்ந்து சுட்டிக்காட்டாமல்.. இருந்தால்.. நேற்று ஜேசு தாஸ்.. இன்று இளையராஜா நாளை சீமான் சொன்னது போல.. நவம்பர் 27 அன்றே இசைப்புயலின் இசை நிகழ்ச்சியை இலங்கைத் தூதரகம் செய்ய முன் வந்தாலும் அப்போதும் இதே காரணங்களைச் சொல்லிக் கொண்டு நீங்கள் வரவேற்பீர்களா..????!

2. தேசிய தலைவரின் பிறந்த நாள் என்பது ஒரு அடையாளமாக சிறிய பரிமானத்தில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டதே அன்றி கொண்டாடப்படவில்லை. பெரும் களியாட்டங்கள் நடத்தப்படவில்லை..! பொங்கல் பொங்கி வழங்குவது என்பது அன்னதானம் வழங்குவதற்கு ஒப்பானது. அப்படி பொங்கல் பொங்குவது களியாட்டம் என்றால்.. அப்போ புலம்பெயர் நாடுகளில் எனி பெரு விழாக்கள் நிகழ்வுகள் எங்கனும் ஒரு பொங்கல் பொங்குவதோடு அதனை நிறுத்திக் கொள்ள சொல்வீர்களா..???! தேசிய தலைவரின் பிறந்த நாள் அடையாள அனுஷ்டிப்பு என்பது மக்களின் போராளிகளின் சுயவிருப்பை.. எண்ணத்தை வெளிப்படுத்த வழங்கும் சந்தர்ப்பமாகும். அதை தவிர்க்கச் சொல்லி கோர முடியாது. அதையே அவர்கள் பெரும் களியாட்டமாக நடத்த முனைந்திருந்தால் நிச்சயம் அதற்கு தடை வந்தே இருக்கும்..!

3. கிட்டத்தட்ட 15 இலட்சம் புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம்..எங்களின் வலிகளை நாங்களே உணரச் செய்ய சீமான் என்ற உறவு தேவைப்படுகின்ற போது தமிழகத்தில் 6 கோடி மக்களிடம் அந்த வலியை உணரச் செய்யச் செய்வது என்பது ஓரிரவில் நடக்கக் கூடிய காரியம் அல்ல. அங்கு பல அரசியல் தடங்கல்கள் உள்ளன. சட்டத் தடைகள் உள்ளன. இருந்தாலும் தன்னால் இயன்றவரை சீமான் தான் இந்த விவகாரத்தில் தலையீடு செய்வது முதல் ஆண்டு தோறும்.. மாவீரர் நாளை எழுச்சி மிகும் வகையில் பல இடர்கள்.. தடைகளின் மத்தியில் செய்தே வருகிறார். மாவீரர் நினைவுக் கிராமங்களை அவர்களின் பெயர் கொண்டு உருவாக்கியும் இருந்தார். அதன் பெயர் பலகைகளைக் கூட கருணாநிதி அரசு காவல்துறையை ஏவி கழற்றி வீசியது. இன்று தமிழகத்தில் பிரமாண்ட நினைவுச் சின்னம் எழுப்பப்படுவதற்குப் பின்னால் சீமானின் ஒத்துழைப்பும் இருக்கிறது..! இப்படி ஒன்றை எம்மவர்கள் எங்காவது எழுப்பி இருக்கிறீங்களா..??????????! அல்லது முயற்சி தான் செய்திருக்கிறீங்களா...????!

இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு கொட்டும் பணம் போக.. எமக்காக வாழ்ந்து உயிர்விட்ட போராளிகளை மக்களை மனித குல வரலாறு முழுவதும் இப்பூமிப்பந்தில் நினைவு கூற என்ன எம்மிடம் உள்ளது..?????!

நேரம் இருந்தால் உங்களின் பதிலோடு சம்பந்தப்பட்ட இக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்..!! :icon_idea:

Edited by nedukkalapoovan

உண்மையில் எம் மக்களுக்கு தம்மினத்தின் உணர்வு இருந்தால், இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கட்டுமே?

வேறு யாரும் சொல்லி வரவேண்டிய நிலைமை ஏன் வந்தது?

இந்த நிகழ்ச்சி பற்றி இவ்வளவு நாட்களும் ஏன் இவர்கள் ஒன்றும் செய்யவில்லை? இசை சொன்னது போல் இரண்டு மாதங்களுக்கு முன் ஏன் எதிர்ப்பு கிளம்பவில்லை?

சீமானின் இந்த செயலுக்காக அவர் மேல் சேறடித்து தூற்றுவதும் கூடாது. எமக்காகக் குரல் கொடுக்கும் ஒருவரைத் தாழ்த்திப் பேசுவது முறையாகாது.

நன்றிகள் ஈஸ்.

என்னுடைய தனிப்பட்ட விருப்பம் (இப்போது) இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிப்பது. ஆனால் கடைசி நேரத்தில் இந்தப் புறக்கணிப்பு கோரிக்கைகளை வைப்பதால் ஒட்டுமொத்தமாக வாங்கிய நுழைவுச் சீட்டுக்களை எங்கே கொண்டுபோய் போடுவது? வேண்டாம் என்று தூக்கி எறிந்தாலும், அவர்களுக்கு காசு கட்டியது கட்டியதுதானே? என்னைமாதிரித்தான் பலருடைய நிலமையும். இவர்கள் ஆரம்பிக்க முன்னரே பெருவாரியான நுழைவுச் சீட்டுகள் விற்றுவிட்டன.

இப்போது தவறு யாரில் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. தனிப்பட்டமுறையில் மாவீரர் வாரம் என்பதே என்னுடையை எண்ணமாக இதுவரையில் இருந்தது. மாவீரர் மாதமல்ல. அவ்வாறு நான் நினைத்திருந்தால் சீட்டுக்களை வாங்கியிருக்கவே மாட்டேன். என்னுடைய எண்ணத்தில் தவறு இருந்தால் போராட்டக்காரர் அன்றே என் போன்றவர்களுக்கு இதை தெளிய வைத்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஆக, இன்று புறக்கணிக்கச் சொல்பவர்களுக்கு இன்னும் தலைமைத்துவப் பண்புகள் காணாது என்பதே அர்த்தம். இதை சீமானை நோக்கிச் சொல்லவில்லை. அவருக்கு இங்கே உள்ள நடைமுறைகள் தெரிந்திருக்குமென‌ நான் எண்ணவில்லை.

வாங்கிய நுழைவுச் சீட்டுகளுடன், யோசனையில்..

‍இ.க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில தலைக்கு மேல பிரச்சனை கிடக்கு அதை பார்க்க வழியில்லை புலம் பெயர்ந்த தமிழரை பற்றி கதைக்க இவர் யார் ?

நவம்பர் பத்து சுவிசில் ஒரு நிகழ்சி நடக்குது கனடாவில் ஒரு நிகழ்ச்சி நடக்குது அவை ஒன்றும் கண்ணுக்கு தெரியவில்லை இதுதான் சிலர் கண்ணை குத்துது போல .

பெயர் எப்ப பத்திரிகையில் வரும் என அலையும் கோஸ்டிகள் இவர்கள் .இஞ்சவேறு சிலர் தமிழ் நாட்டில் போனால் தங்குவதற்கு இவருக்கு கொடி பிடிக்கின்றார்கள்.

[size=1]நியானி: பண்பற்ற சொல்லாடல் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. [/size]

லைக் முடிஞ்சுது அப்புறம் வாறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1.

சீமான் அண்ணை புலம்பெயர்க் கோஷ்டிகளின் வீணான வியாபரப் போட்டிக்குள் தலையிடாமல் இருப்பது தான் அவர் மீதான மதிப்பை காக்கும். போன வருடம் இதே நாள் பிரமாண்டமாக நடந்த ஜேசுதாசின் இசை நிகழ்ச்சியை நடத்தியது ரொரன்டோவில் இருக்கும் பிரபலமான தமிழ் வர்த்தக நிறுவனம் தான். அவர்களின் பின் புலத்தில் பல புலிகளின் கனடா முன்னால் முக்கியஸ்தர்களும் இருந்தனர் என்பதால் எவருக்கும் அது நடந்தது நவம்பர் முதல் வாரம் என்பதைக் கவனிக்க தோன்றவில்லை. இன்று புதிய நிறுவனம் ஒன்று முதல் முறையாக இப்படி பிரமாண்டமாக நடத்த முற்படும் போதுதான் பிரச்சனையாகிப் போய் விட்டது. இதில் சீமானை இழுத்துவிடுவது உண்மையில் இவர்கள் சீமானுக்கு செய்யும் தீங்காகவே முடியும்.

2.

தலைவரின் பிறந்த தினத்தை அரங்கு எடுத்து கேக் வெட்டிக் கொண்டாடி விட்டுத் தான் அடுத்த நாள் உணர்வு பூர்வமாக மாவிரர் தினத்தையும் அனுட்டித்து அஞ்சலி செலுத்துகின்றோம். ஊரில் தலைவரின் பிறந்த தினத்துகு பொங்கல் பானை வைத்து பொங்கி பரிமாறியும், இனிப்பு வகைகளை கொடுத்து மகிழ்ந்தும் கொண்டாடிய பின் தான் அடுத்த நாள் விளக்கேற்றி இருக்கின்றோம். 2009 இல் இடம்பெற்ற பெரும் அவலத்தின் பின்பு வந்த தலைவரின் பிறந்த தினத்தைக் கூட விமரிசையாக கனடாவிலும் கூட மண்டபம் எடுத்து கேக் வெட்டி மகிழ்ந்து இருக்கின்றோம். இந்த நிகழ்வும் கூட கனடாவின் புலிகளின் முக்கிய ஆதரவாளர்களால் தான் நடத்தப்பட்டது.

தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடி விட்டு அடுத்த நாள் உணர்வு பூர்வமாக மாவீரருக்கு விளக்கேத்துவது எப்படி தவறில்லை என்று எனக்குள் உணர்கின்றேனோ அப்படித் தான் நவம்பர் முதல் வாரத்தில் ஒரு சந்தோசமான நிகழ்வை நடப்பது தொடர்பாகவும் உணருகின்றேன். இது இளையராஜாவின் நிகழ்ச்சி என்பதற்காக அல்ல. எவரது நிகழ்ச்சி என்றாலும் நடப்பதில் தவறில்லை.

3. உண்மையில் சீமான் இவ்வாறு நிகழ்வு நடத்துவது தவறென்று உளமாற சொல்வாராயின், எவரது வேண்டு கோளுக்காகவும் குரல் கொடுக்காமல் சுயமாக செய்கின்றார் எனில் அதனை முதலில் அவர் தமிழகத்தில் நிகழ்த்த முற்பட வேண்டும். புலிகள் ஒட்டு மொத்த தமிழர்களுக்காகத் தான் ஈழ மண்ணில் போராடினார்கள் என்று உணர்வு பூர்வமாக நினைப்பாராயின், மாவீரர் தினம் அன்று புலம் பெயர் வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு தம் வர்த்தக நிறுவனங்களை பூட்டி அனுட்டிக்கின்றனரோ அவ்வாறே தமிழத்திலும் அதே நாளில் அனுட்டிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து, அதற்காக அவர் சார்ந்து இருக்கும் தமிழக சினிமாத் துறையினரது ஆதரவினைப் பெற்று புறக்கணிப்பை நிகழ்த்த முன்வர வேண்டும். இவ்வாறான கோரிக்கையின் வெற்றி தோல்விக்கு அப்பால், அதனை நிகழ்த்தவாவது முன் வரவேண்டும்.

4. நான் இளையராஜா நிகழ்ச்சிக்கு போகப் போவதில்லை. 400 டொலரை ஒரே ஒரு நிகழ்ச்சிக்காக ஒரே அடியாக கொடுக்க விரும்பவில்லை. அத்துடன் எப்படியும் சீடியில் வரும் அப்பொழுது வீட்டில் இருந்து கொண்டு, மனிசி செய்து தரும் பொரியல்களை கொறித்துக் கொண்டு பார்க்கலாம் என்று இருக்கின்றேன்.

நன்றி.

லைக் முடிஞ்சுது அப்புறம் வாறேன்.

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் ஈஸ்.

என்னுடைய தனிப்பட்ட விருப்பம் (இப்போது) இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிப்பது. ஆனால் கடைசி நேரத்தில் இந்தப் புறக்கணிப்பு கோரிக்கைகளை வைப்பதால் ஒட்டுமொத்தமாக வாங்கிய நுழைவுச் சீட்டுக்களை எங்கே கொண்டுபோய் போடுவது? வேண்டாம் என்று தூக்கி எறிந்தாலும், அவர்களுக்கு காசு கட்டியது கட்டியதுதானே? என்னைமாதிரித்தான் பலருடைய நிலமையும். இவர்கள் ஆரம்பிக்க முன்னரே பெருவாரியான நுழைவுச் சீட்டுகள் விற்றுவிட்டன.

இப்போது தவறு யாரில் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. தனிப்பட்டமுறையில் மாவீரர் வாரம் என்பதே என்னுடையை எண்ணமாக இதுவரையில் இருந்தது. மாவீரர் மாதமல்ல. அவ்வாறு நான் நினைத்திருந்தால் சீட்டுக்களை வாங்கியிருக்கவே மாட்டேன். என்னுடைய எண்ணத்தில் தவறு இருந்தால் போராட்டக்காரர் அன்றே என் போன்றவர்களுக்கு இதை தெளிய வைத்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஆக, இன்று புறக்கணிக்கச் சொல்பவர்களுக்கு இன்னும் தலைமைத்துவப் பண்புகள் காணாது என்பதே அர்த்தம். இதை சீமானை நோக்கிச் சொல்லவில்லை. அவருக்கு இங்கே உள்ள நடைமுறைகள் தெரிந்திருக்குமென‌ நான் எண்ணவில்லை.

வாங்கிய நுழைவுச் சீட்டுகளுடன், யோசனையில்..

‍இ.க.

என்னதான் பூசி மெழுகி எழுதினாலும் இந்த விடயத்தில் உள்ள வெற்றிடம்......நிரவப்பட்டாலே தவிர மற்றப்படி எல்லாம் தாறுமாறாகத்தான் நடக்கும். எனக்குத் தெரிய பலர் இந்தப்பற்றுச்சீட்டுக்களைப்பெற்றுள்ளார்கள் அதற்காக அவர்களெல்லாம் ஒட்டுமொத்தமாக உணர்வற்றவர்கள் என்று சொல்லிவிடமுடியாது. என்னைப் பொறுத்தவரை மாவீரர் வாரம்தான் தாயகத்தில் அனுட்டிக்கப்பட்டது அதனை நாம் தொடர்வதுதான் முறை புனிதவாரமாக அது பிரகடனப்படுத்தப்படவேண்டும் அதே நேரம் முள்ளிவாய்யகால் சம்பவங்களினூடாக மே மாதம் புனிதமாதமாக அறிவிக்கப்படவேண்டும். சரியான திசையில் மக்களை வழிநடத்துங்கள். வெறுமனே அவரவருக்கு பிரியப்பட்ட மாதிரி மாற்றம் செய்யாதீர்கள். இப்போதும் இளையராசா பணம் கொடுத்தால் மாவீரர் நாளிலும் நிகழ்வு நடாத்தலாம் என்று சொல்லக்கூடியவர்கள்தான் முகநூலில் பிரச்சாரத்தின் மேல் பிரச்சாரம் செய்கிறார்கள் அப்படிப்பார்க்கும்போது அவர்களுக்கு இந்தப்பிரச்சனையின் அடிப்படை என்ன என்பதே தெரியாத அப்பாவித்தனத்தைத்தான் உணரமுடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமே எழுத விரும்பல

தலைவருடைய பிறந்த நாளுக்கும்

மாவீரர் நாளுக்கும் முடிச்சுபபோடுவதை என்னவென்று எழுத.............???

என்னைப்பொறுத்தவரை

கார்த்திகை 26 இல் காலையில் எழும்பி முழுகிவிட்டு கடவுள் படத்துக்கு முன் தலைவரோடிருங்கள் என்று வேண்டுவதோடு எனது மாவீரருக்கான அமைதி வணக்கம் ஆரம்பிக்கும். அடுத்த நாள் காலை வீட்டில் விளக்குக்கொழுத்தி மாவீரர் நிகழ்வுக்கு போய் பூவைத்து வீட்டுக்குவந்து நித்திரைக்குப்போகும் வரை அந்த அமைதி என்னுள் குடிகொண்டிருக்கும்.

ஒரு தரப்பு நிகழ்ச்சி நடத்துகின்றது என்னுமொன்று எதிர்க்கின்றது. இது புதிய பழைய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர். இதற்குள் பணம் பார்ப்பதே பிரதான குறி. இவர்களுக்கு நடுவில் நடக்கும் போட்டிக்குள் மாவீரரை இழுத்து அதன் வழியே சீமானும் இதற்குள் வந்திருக்கின்றார். தற்போது புறக்கணிப்புச் செய்யச் சொல்லி சொல்பவர்கள் இரண்டுமாதத்திற்கும் மேலாக ஏற்பாட்டை பார்த்தவண்ணம் இருந்துவிட்டு நுழைவுச் சீட்டுகள் விற்பனையானபின்னர் சரியான தருணம் பார்த்து குழப்புகின்றார்கள். இதிலிருந்தே தெரிகின்றது குழப்பும் தரப்பு தேசீயம் மாவீரரரை தமது சுயநல்ன்களுக்கு பாவிக்கின்றார்கள் என்பது. இவர்களின் சூழ்ச்சி அறியாது சீமான் இதற்குள் வருவதுக்கு யார் என்ன செய்ய முடியும்?

இந்த இசை நிகழ்ச்சியை குழப்பி புறக்கணித்து தடுத்து நிறுத்தி மக்களை தேசீயத்தின் மீதும் மாவீரர் மீதும் அக்கறை உள்ளவர்களாக மாற்ற முடியாது. மாறாக வெறுப்பும் அதிருப்தியும்தான் இவற்றின் மீது மக்களுக்கு வரும். இநதக் குழப்பவாதிகளுக்கு இந்த சமூகத்தை வழிநடத்தும் தகுதி துளியும் கிடையாது. பண்புள்ள எவனும் நுளைவுச் சீட்டுக்கள் விற்கும் வரை பார்த்துவிட்டு இறுதியில் குழப்ப மாட்டான். இந்த குழப்பவாதிகளுக்கும் தேசீயத்துக்கும் மாவீரருக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை. இது அப்பட்டமான சுயநலன் . புறக்கணிக்ப்படவேண்டியது குழப்பவாதிகளையே அன்றி இசைநிகழ்சியை அல்ல.

மாவீரர் நாள் என்பது முழுமையாக அற்பணிப்புடன் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு நாள். மாவீரர் வாரம் என்பது உணர்வுபூர்வமானது. மாவீரர் மாதம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாது. இது எதிர்மறை விழைவுகளை எற்படுத்தி மாவீரர் வாரம் மற்றும் நாட்களின் மீதான இயல்பான பற்றை இல்லாமல் செய்யும். உணர்ச்சி அரசியல் திணிப்பு அரசியல் எதிர்மறை அரசியல் இவற்றுக்கெல்லாம் அற்ப ஆயுள் என்பதே உண்மை.

50,000 மாவீரர்களினதும் 180,000 மக்களினதும் உறவுகளில் ஒருவராகவா இதனைச் சொல்கிறீர்கள். அல்லது 3ம் மனிதனாகவா..???!

நிச்சயமா ஒரு மாதத்தை என்ன.. இவர்களின் நினைவுகளை மனித வரலாறு முழுவதும் காக்க வேண்டிய கடமை உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது என்பதை உணராத வகைக்கு சினிமா மோகம் எம்மவர்களை ஆட்கொண்டிருப்பதை தமிழக சினிமா உலகமே கண்டு வெட்கித் தலைகுனியும் காலம் வந்துவிட்டது..!

நிச்சயம்.. மாற்றங்கள் பிறக்கும்..! செல்வமணி சொன்னது போல.. மாற்றம் தமிழகத்தின் பக்கமிருந்து எனி வரும். தேசிய தலைவர் இருந்த போது மாற்றங்கள் ஈழப்பக்கமிருந்து வந்தன. இன்று அவர் உருவாக்கிய உண்மை வாரிசுகளை தமிழகம் தத்தெடுத்துள்ளதால் எனி அது அங்கிருந்து வரும். எனி நீங்க கூப்பிட்டாலும் அவன் வரமாட்டான் என்ற நிலையை அது உருவாக்கும்.

அதுவரை நன்றி மறந்த கூட்டத்தவரே.. முடிந்ததை செய்து சுய மகிழ்ந்து கொள்ளுதலே உங்களுக்கு சாத்தியமான ஒன்று..!

மயிலே மயிலே இறகு போடுன்னா.. ஈழத்தமிழர்கள் இறகு போடக் கூடியவர்கள் அல்ல. அப்படி போடக் கூடியவர்கள் என்றால்.. எமது போராட்டம்.. இன்று வெல்லப்பட்டிருக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

எதையும் காலம் கடந்து செய்வதால் குழப்ப தான் முடியும் சாதிக்க முடியாது,......

நிச்சயமா ஒரு மாதத்தை என்ன.. இவர்களின் நினைவுகளை மனித வரலாறு முழுவதும் காக்க வேண்டிய கடமை உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது என்பதை உணராத வகைக்கு சினிமா மோகம் எம்மவர்களை ஆட்கொண்டிருப்பதை தமிழக சினிமா உலகமே கண்டு வெட்கித் தலைகுனியும் காலம் வந்துவிட்டது..!

உண்மை தான். நாம் அவர்களது வரலாற்றையும், தியாகங்களையும் என்றுமே நெஞ்சில் நிறுத்தக் கடமைப்பட்டவர்கள்.

ஆனால் ஒரு மாதம் முழுவதும் என்பது சண்டமாருதன் சொல்வது போல் நடைமுறைக்கு ஒவ்வாது என்பதும் உண்மையே.

சகாறா அக்கா சொன்னது போல், மாவீரர் வாரம் என்று தானே தொடங்கப்பட்டது?

Edited by Eas

விரும்பினால் வார வருடத்தில் இருந்து மாவீரர் நாள் ஒரு மாதம் என்றும் நவம்பர் மாதம் புனிதமாதம் என்று அறிவிப்பை செய்யலாம்.

50,000 மாவீரர்களினதும் 180,000 மக்களினதும் உறவுகளில் ஒருவராகவா இதனைச் சொல்கிறீர்கள். அல்லது 3ம் மனிதனாகவா..???!

நிச்சயமா ஒரு மாதத்தை என்ன.. இவர்களின் நினைவுகளை மனித வரலாறு முழுவதும் காக்க வேண்டிய கடமை உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது என்பதை உணராத வகைக்கு சினிமா மோகம் எம்மவர்களை ஆட்கொண்டிருப்பதை தமிழக சினிமா உலகமே கண்டு வெட்கித் தலைகுனியும் காலம் வந்துவிட்டது..!

நிச்சயம்.. மாற்றங்கள் பிறக்கும்..! செல்வமணி சொன்னது போல.. மாற்றம் தமிழகத்தின் பக்கமிருந்து எனி வரும். தேசிய தலைவர் இருந்த போது மாற்றங்கள் ஈழப்பக்கமிருந்து வந்தன. இன்று அவர் உருவாக்கிய உண்மை வாரிசுகளை தமிழகம் தத்தெடுத்துள்ளதால் எனி அது அங்கிருந்து வரும். எனி நீங்க கூப்பிட்டாலும் அவன் வரமாட்டான் என்ற நிலையை அது உருவாக்கும்.

அதுவரை நன்றி மறந்த கூட்டத்தவரே.. முடிந்ததை செய்து சுய மகிழ்ந்து கொள்ளுதலே உங்களுக்கு சாத்தியமான ஒன்று..!

மயிலே மயிலே இறகு போடுன்னா.. ஈழத்தமிழர்கள் இறகு போடக் கூடியவர்கள் அல்ல. அப்படி போடக் கூடியவர்கள் என்றால்.. எமது போராட்டம்.. இன்று வெல்லப்பட்டிருக்கும்..! :icon_idea:

50 000 மாவீரர் 180 000 மக்கள் தியாகங்களை பார்த்துக்கொண்டுதான் இறுதி யுத்தத்துக்கென்று சேர்த்த காசை ஆட்டையை போட்டார்கள். புலிகளின் பொது வர்த்ததகங்களை தத்தமது ஆக்கிக்கொண்டார்கள். இன்று நடப்பதும் ஒரு போட்டி. ஒருவன் நிகழ்ச்சி நடத்தவதை என்னுமொருவன் விரும்பபவில்லை. அதற்காக ஒருதரப்பு மாவீரரரையும் தேசீயத்தையும் இழுத்து விட்டுள்ளது. இவர்கள் சொல்வதே சரி இவர்களுக்குப் பின்னால் போங்கள் என்று நாம் சொன்னால் அது மட்டும் துரோகமாகாதா? இதற்கும் சினிமா மோகத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பண்பற்ற ஒருவன் நுளைவுச்சீட்டுகள் விற்கும் வரை பார்த்துவிட்டு இறுதியில் உணர்வு பூர்வமான மாவீரர் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து விளையாட்டுக் காட்டுகின்றான். இதற்குப் பலியானால் இவ்வாறான தவறுகளை எதிர்காலத்தில் திருத்தவே முடியாது.

நீங்கள் மாவீரர் மீது கொண்ட பற்றை மதிக்கின்றேன் அதே நேரம் கனடாவில் நடக்கும் கூத்துகளுக்கு அந்த பற்றுடன் நீங்கள் ஆதரவளித்தால் அது தவறானவர்களின் கைகளையே பலப்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மாவீரர் மீது கொண்ட பற்றை மதிக்கின்றேன் அதே நேரம் கனடாவில் நடக்கும் கூத்துகளுக்கு அந்த பற்றுடன் நீங்கள் ஆதரவளித்தால் அது தவறானவர்களின் கைகளையே பலப்படுத்தும்.

கனடாவிலோ.. புலம்பெயர் நாடுகளிலோ.. எம்மவர்கள் அதிக குதியாட்டம் போட.. தமிழக திரையுலகமே காரணமாக உள்ளதால்.. அந்தத் திரையுலகமா உண்மையை உணர்ந்து சிலவற்றை விதியாக்கின் எம்மவர்கள் தாமே அடங்குவர். நவம்பர்... மே மாதங்களை தமிழக திரையுலகத்திற்கு இசை நிகழ்ச்சிகளுக்கு உகந்த மாதமல்ல என்பதை அண்ணன் சீமான் போன்ற இன உணர்வாளர்கள் உணரச் செய்து தமிழக கலைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வருதலே மிச்ச சொச்சம் என்றாலும் தமிழர்களுக்காக தியாகம் செய்த தியாகிகளின் பெயரை வரலாற்றை தமிழர்கள் மத்தியில் நிலை நிறுத்த உதவ முடியும்.

இன்றேல் எம்மவர்களை அதனை போட்டிகளால்.. சினிமா மோகத்தால்.. தனிநபர் விருப்பு வெறுப்புக்களால் துவம்சம் செய்ய பின் நிற்க மாட்டார்கள்.

அண்ணன் சீமான்.. ஈழத்தமிழர்களை நோக்கி மட்டுமல்ல.. தமிழக கலைஞர்களை நோக்கியும் கவனம் செலுத்துவார் என்பதற்கு செல்வமணியின் வேண்டுகோள் சான்று.

மாவீரர்களை.. மாண்ட மக்களை.. தியாகங்களை மதித்து.. தமிழகக் கலைஞன் வர முடியாதுன்னா.. எங்கட காசு பணம்.. என்ன வாலா ஆட்ட முடியும்..! அப்போ போட்டி பொறாமைகளும் அடங்க வாய்ப்பிருக்கும். இன உணர்வினை மற்றவர்களை உயர்த்தும் போது எம்மவர்களுக்கு கொஞ்சம் ரோசமாவது பிறக்க வாய்ப்பு ஏற்படும்..! ஒரு சாஸ்திர சப்பிரதாயத்திற்காவது அந்த மாதங்களை புனிதமாக கருதும் உணரும் நிலை தோன்றும்.

இந்தப் பிரச்சனையை மாற்றங்களுக்கான மூலமாக்கி.. அதன் மூலம்.. இப்படியான பிரச்சனைகளுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பின்றிய நிலையை தேடாது விடின் குழப்பவாதிகளின் கையில் சிக்கி எம் இன உணர்வுகளும் தியாகங்களும் சீரழிவதை கண்கூடே காண வேண்டி ஏற்படும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

திருடனா பார்த்து திருட்டை ஒழிக்கா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

அதே போல் எம்மக்கள் அனைவரும் மே,நவம்பர் மாதங்களை புனித மாதமாக அனுஸ்டிக்க வேண்டும். அதன் மூலம் உலகத்திற்கும் பல செய்திகளை சொல்லலாம். எம்மினம் மீட்சி பெற இதை விட ஒண்டும் பண்ண முடியாது.

நன்றி நெடுக்ஸ் உங்க ஆக்க பூர்வ கருத்துகளுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். நாம் அவர்களது வரலாற்றையும், தியாகங்களையும் என்றுமே நெஞ்சில் நிறுத்தக் கடமைப்பட்டவர்கள்.

ஆனால் ஒரு மாதம் முழுவதும் என்பது சண்டமாருதன் சொல்வது போல் நடைமுறைக்கு ஒவ்வாது என்பதும் உண்மையே.

சகாறா அக்கா சொன்னது போல், மாவீரர் வாரம் என்று தானே தொடங்கப்பட்டது?

மாவீரர் நாள் என்பதை கிட்டத்தட்ட 1000 மாவீரர்கள் உருவாகிய நிலையிலும் கூட நாங்கள் 1990 வரை வைத்திருந்தவர்கள் அல்ல. அதனை உருவாக்கியதும் நடைமுறைக்கு கொண்டு வந்தததும்.. தேசிய தலைமை ஏற்படுத்திய மாற்றி யோசி தான்..!

அதேபோல் மாவீரர் வாரம் என்பதும் அதே தான்.

ஆனால் இன்று அந்தத் தலைமை அற்ற வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு.. எமது இனத்தின் எல்லாவற்றையுமே சீரழிக்க முயலும் எதிரிக்கு நிகராக எம்மவர் சிலர் எம்மத்தியிலேயே கங்கணம் கட்டி நிற்கும் இந்த வேளையில்.. மாற்றம் என்பது வந்தாக வேண்டும். அதனை நிச்சயம் தமிழகம் கொண்டு வர முடியும்.

தேசிய தலைமையின் பால் உண்மையான பற்றும் அக்கறையும்.. கொண்ட தமிழக வாரிசுகள் நினைத்தால்... இன்னொரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அதற்கான முஸ்தீவே இது ஆகும்..!

மாவீரர்களை மாண்ட மக்களை இன அழிப்பை அடையாளப்படுத்தும் மாதங்களாக நவம்பர்.. மே இரண்டையும் கணித்து பெரும் எடுப்பிலான களியாட்டங்களை தவிர்க்கக் கோருவது என்பதில் எந்தத் தவறும் யாரும் காண முடியாது. அப்படி காணும் ஈழ வரலாறு தெரிந்த தமிழர்கள்.. சராசரி மனிதர்களாக இருக்கக் கூட தகுதி அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்..!

தமிழக திரையுலகமும்.. கலைஞர்களும்.. தமிழ் தேசிய உணர்வாளர்களும்.. தமிழீழ ஆர்வலர்களும்.. தமிழின ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்தால்.. தமிழீழ தேசிய தலைமை அற்ற இன்றைய வெற்றிடத்தை நிச்சயம் ஓரளவுக்கு என்றாலும்.. நிரப்ப முடியும். அந்தளவுக்கு அங்கு இன உணர்வுள்ளவர்கள் நேர்மையாக இனத்துக்காக உழைக்கக் கூடியவர்கள் உள்ளனர்.

இன்றைய புலம்பெயர் தமிழர்களில் அநேகரின் செயற்பாடுகள் தாந்தோன்றித்தனமாக.. திக்கற்ற திசையற்ற போக்குக்கு பயணிக்கும் பயணிகளாகவே அவர்களை இனங்காட்டி உள்ளன. இவர்களை சினிமாவும் எதிரியும் மிக இலகுவாக தம் வசப்படுத்தும் நிலை காணப்படுகிறது. இது போராட்ட காலத்திலும் அவதானிக்கப்பட்ட ஒன்று தான். ஆனால் அன்று தேசிய தலைமை இந்த நிலை கட்டுக்கடங்காமல் போவதை தவிர்க்கும் நோக்கில் கண்காணித்து அதற்கேற்ப செயற்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இன்று அந்த நிலை இல்லை..!

இதனில் ஒரு காரணியான சினிமாவே எம்மவர்களின் பலவீனத்தை அறிந்து உணர்ந்து.. அவர்களை அவர்களின் சரியான பாதைக்குக் கொண்டு வரும் என்றால் அதை செய்வதற்கு இன்று சினிமா உலகம் தன்னார்வம் கொண்டுள்ளது என்றால் அது ஒரு பொன்னான வாய்ப்பே..!

அதனை நிச்சயம் அண்ணன் சீமானும் மற்றவர்களும் செய்ய வேண்டும். நல்ல உருப்படியான மாற்றங்கள் வர வேண்டும். எமது விடிவு நோக்கிய மக்களின் சிந்தனையும் செயலும் மீண்டும் ஒரு புள்ளி நோக்கி குவிக்கப்பட வேண்டும். அது புலம்பெயர் நாடுகள்.. தாயகம்.. தமிழகம்.. உலகத் தமிழினம் என்று அமைய வேண்டும். அதனை செய்வதில் தமிழக திரை உலகிற்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு. அது இன்று அதனை உணர்ந்து நிற்கிறது. அல்லது உணரச் செய்யப்பட இந்தப் பிரச்சனையும் காரணமாகியுள்ளது.

அந்த வகையில்.. நிச்சயம் எமது இனம் சார்ந்த ஒரு நல்ல மாற்றத்தை இந்தப் பிரச்சனை பிரசவிக்கும் என்பதற்கான அறிகுறிகள் தமிழகத்தில் இருந்து வருவது.. சப்பைக் கட்டுகளோடு தப்பிப் பிழைக்க விளையும் ஈழத்தமிழ் சினிமா மோகிகளுக்கு நிச்சயம் ஒரு சாட்டை அடியாகவே இருக்கும்.

அதற்காக மாற்றங்களுக்கு எனி இடமே இல்லை என்று வாழ்ந்திட முடியாது. அது வந்தே தீரும். அதற்கான காள்கோளை நாம் தான் எமது ஈனத்தனமான செயல்களால் இடவும் போகிறோம்..!

நிச்சயம் தமிழகத் திரையுலகம் நினைத்தால்.. எமது போராட்டத்தில்.. தமிழர்களின் இன உணர்வில்.. புதிய புரட்சிக்கு வழிவகுக்க முடியும். சீமான் அதனை நிச்சயம் மெல்லச் செய்வார்..!

நாம் மாற்றங்களை முழுமையாக ஏற்கும் பக்குவமற்றவர்கள். தேசிய தலைமை கொண்டு வந்த எத்தனையோ மாற்றங்களை கடுமையாக விமர்ச்சித்தவர்கள். இன்று அவற்றிற்காக ஏங்கி அங்கலாய்ப்பவர்களாகவும் எம்மைக் காட்டிக் கொள்பவர்கள். எமது நேரத்துக்கு நேரம் அமையும் நடிப்புகளுக்கு அப்பால் இன விடுதலை என்பது திடமான கொள்கை கோட்பாட்டை கொண்ட மாற்றங்களை நகர்த்திச் செல்பவனின் கையில் தான் தங்கியுள்ளது.

அன்று அதை தேசிய தலைமை செய்தது. இன்று அதை சீமான் போன்ற இன உணர்வாளர்கள் செய்கின்றனர். அதுதான் வித்தியாசம்..! :icon_idea:

கனடா வாழ் இளைய சமூகத்தில் உள்ள சிலர் கூட சொன்னார்கள்.. தமக்கும் இந்த நிகழ்ச்சிக்கு போகும் உத்தேசம் இல்லை என்று. கனடா வாழ் உறவுகள் எல்லோரும் தாயக நிலையை உணராது வாழ்வில்லை. ஒரு சில பணக்காரர்களும்.. எதிரிகளுக்கான கூலிகளும்.. பிற கூலிகளும்... மக்களில் ஒரு பகுதியினரின் பலவீனத்தை தமக்கான வருமானத்திற்கு பாவிக்கும் நிலை தான்.. இது.

அமீரின் இந்தப் பேச்சையும் கேளுங்கள்..! கனடாவில் உள்ள இன உணர்வுள்ள உறவுகளின் நிலையை.. அறிய அது உதவும். அந்த உறவுகளை நோக்கியல்ல எமது எழுத்துக்கள்.. என்பதையும் அந்த உறவுகள் புரிந்து கொள்ளுதல் அவசியம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ்கீயூஸ்மி வருகின்ற நவம்பர் மாதம் பூரா சீமானுக்கு எந்த சூட்டிங்கும் இல்லையா என யாராவது கேட்டுச் சொல்வீங்களா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.