Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா எங்களின் சொத்து

Featured Replies

ஒரு தனித்துவமான பண்பாட்டின் நல்ல அடையாளம் அதன் தனித்துவமான இசை. தனித்துவமான பண்பாடு இல்லாமல் இனமோ, தேசியமோ இருக்க முடியாது. தனித்துவம் மிக்க தூய்மையான இசையை தருபவன் அந்த இனத்தின், தேசியத்தின் பெரும் சொத்து.

இளையராஜா எங்களின் சொத்து

ஒரு நாள் என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார். „உங்களுக்கு இளையராஜாவை நேரில் சந்தித்து பேச விருப்பமா?'. உடனடியாகவே என்னுடய பதில் 'இல்லை' என்பதாகவே இருந்தது.

அந்த மனிதன் தன்னுடைய இசை மூலம் எங்களுடன் தினமும் பேசிக் கொண்டிருக்கிறான். அவனுடைய புல்லாங்குழல் எங்களுடன் கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் துள்ளிக் குதிக்கும் போது அவன் இசை எங்களோடு சேர்ந்து துள்ளுகிறது. சோர்ந்து வாடி இருக்கும் போது அவன் இசை தலை கோதிச் செல்கிறது.

என்னுடன் தினமும் பேசுகின்ற ஒருவனோடு எதற்கு நான் நேரில் சந்தித்து தனியாகப் பேச வேண்டும்?

நான் நேரில் சந்திக்கின்ற மனிதன் ராசையாவாகத்தான் இருப்பான். அந்த மனிதனை எனக்குப் பிடிக்காமல் கூடப் போகலாம்.

அவன் இளையராஜாவாக மட்டும் மேடையில் நின்று இசை மீட்ட, கூடி நின்று அமைதியாக தலையாட்டி ரசிக்கும் பல இலட்சம் பேர்களில் ஒருவன் நான் என்பதுதான் எனக்கு வேண்டும்.

இசை என்பதைத் தாண்டி வேறு எதுவாகவும் அவனைப் பார்ப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்களின் மத்தியிலே இருந்து வந்தான். ஆயினும் அவர்களுக்காக அவன் தெருவில் இறங்கிப் போராடியது இல்லை. அவர்களின் வாயில் மலம் திணிக்கப்பட்ட போதும், வல்லுறவுக்கு உட்பட்ட போதும் அவன் கொதித்து எழவில்லை.

அதற்காக அந்த மக்கள் அவனுடன் என்றைக்கும் கோபித்தது இல்லை. புறக்கணித்ததும் இல்லை.

ஆயினும் இப்படி ஒரு காட்சி திரையில் ஓடுகின்ற போது, எல்லாவற்றிற்கும் சேர்த்து அவன் தன்னுடைய இசையால் ஓவென்று கதறி அழுவான். அவனால் அதை மட்டும்தான் செய்ய முடியும். இவன் தனக்காகத்தான் அழுகிறான் என்பது சம்பந்தப்பட்டவனுக்கு நிச்சயம் புரியும்.

பழசிராஜா என்று ஒரு படம். மலையாளத்தில் எடுக்கப்பட்டு பின் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அந்தப் படத்திலே ஒரு காட்சி. மன்னன் போரிலே தோற்று, நாடு இழந்து, மனைவி மக்களோடு காட்டுக்குள் பின்வாங்குவான். காட்டுக்குள் நின்றபடி போரை நடத்தப் போகிறான் என்பதை சொல்கின்ற ஒரு வீரம் மிகுந்த காட்சி.

அந்தக் காட்சியில் வீரத்தைச் சொல்லாமல் சோகத்தை அவன் பாடினான். கதறி அழுதபடி ஒப்பாரி வைத்தான். இப்படிக் காட்டுக்குள் பின்வாங்காமல் தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தோடு வீரச்சாவை அடைந்த இன்னொரு மன்னனுக்காக அவன் அழுகிறான் என்பது அவனை சுவாசிக்கின்ற எங்களுக்கு மட்டுமே புரியும்.

இதை விட அவனால் வேறு என்ன செய்ய முடியும்? அவன் ஒரு கவிஞன் என்றிருந்தால், வார்த்தைகளில் தன் சோகத்தையும், கோபத்தையும் வடித்திருப்பான். ஆனால் இவனோ இசையை படைப்பதற்காய் வந்திருப்பவன்.

வரிகளைத் தாண்டிய இசையால்தான் இவற்றை எல்லாம் வெளிப்படுத்துவான்.

அவனுடைய பாடல்கள் பெண் விடுதலையையும் சொல்லும், பெண்ணை அடங்கவும் சொல்லும், சாமியை பாடும், சாமி இருந்திட்டா காமி என்றும் சொல்லும், தமிழைப் போற்றும், 'ஓம் சிவோகம்' என்று வடமொழியிலும் அதிரும், காதலை ஒரு நேரம் போற்றும், மறு நேரம் தூற்றும். இப்படி அனைத்தையுமே அவனுடைய பாடல்கள் கொண்டிருக்கும்.

ஆயினும் அவனுடைய இசை எங்களுடையதாய் இருக்கிறது.

எதைப் பாடினாலும், அது சொல்லுகின்ற கருத்தை புறந்தள்ளி விட்டு, இசையை மட்டும் கொண்டாடுகின்ற பண்பாடு மிகுந்த கூட்டத்தை படைத்த அற்புதம் அவன்.

'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா' என்று அவன் பாடுவான். தாயகம் தானாக கண் முன் விரியும். ஊரைப் பற்றிப் பாடாத மற்றைய பாடல்களும் ஊரையே ஞாபகப் படுத்தும்.

எங்கள் ஊரையும், காலத்தையும், அதைச் சுற்றிய ஞாபகங்களையும் அவனின் பாடல்களைக் கொண்டே நாங்கள் நிரப்பி வைத்திருக்கிறோம்.

கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி அவனின் அன்பு மனைவி இறந்தார் என்னும் செய்தி வந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஒரு புத்தகத்தில் 'மனைவி இறந்த பின்பு ஆண்கள் நீண்ட காலம் உயிர் வாழ்வது இல்லை' என்கின்ற ஒரு ஆய்வைப் படித்துத் தொலைத்திருந்தேன்.

இந்த சோகத்தில் இருந்து அவன் எப்படி மீளப் போகிறான் என்று மனம் தவியாய் கிடந்து தவித்தது.

அவனுக்கு தெரிந்தது எல்லாம் இசைதானே. அவன் தன்னுடைய ஆர்மோனியப் பெட்டியை தூக்கிக் கொண்டு புறப்பட்டான். அதுவரை தனக்குத்தானே போட்டு வைத்திருந்த கட்டுப்பாடுகளை விலக்கி விட்டு, தன்னுடைய பிள்ளைகளைப் பார்க்கப் புறப்பட்டான்.

தன்னுடைய தாலாட்டை கேட்டு வளர்ந்த பிள்ளைகளை பார்ப்பதற்காய் கடந்த ஒரு ஆண்டாக உலகத்தை தொடர்ச்சியாக சுற்றிக் கொண்டிருக்கிறான்.

அவன் எங்கள் வீட்டிலே ஒருவன். எங்களின் உறவாய் இருப்பவன். எத்தனையோ தடவைகள் எங்களுக்கு பைத்தியம் பிடித்து விடாமல் காப்பாற்றி வருகின்ற வைத்தியன். மூன்று தலைமுறைகளாய் நாம் அவனுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.

வெறும் கூலி கொடுத்து இந்த கடனை நாங்கள் அடைத்து விட முடியாது.

அவன் எங்களுக்காய் தெருவில் இறங்கவில்லை, கொடி பிடிக்கவில்லை, அறிக்கை விடவில்லை என்று அவன் மீது எந்தக் கோபமும் எனக்கு இல்லை. இதை நாங்கள் அவனிடம் கேட்கவும் இல்லை. இசையால் மனதிற்கு ஆறுதலைக் கொடுக்கின்ற வேலையைத்தான் அவனுக்கு கொடுத்தோம்.

அவன் தன்னுடைய வேலையை மிகச் சரியாகவே செய்கிறான்.

எங்களின் போராட்டத்தின் நியாயங்களை அவன் பேசாது விட்டாலும், நியாயங்களில் அவனுடைய இசையும் ஒன்றாக இருக்கிறது. நாங்கள் பண்பாடு மிக்க, நாகரீகம் மிக்க தனித்துவமான இனம் என்பதை அவனுடைய இசை சொல்லிக் கொண்டே இருக்கிறது.

இளையராஜா எங்களின் சொத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முடிவோடை தான் இருக்கிறிங்கள் போல.. :rolleyes::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா எங்களின் சொத்து அதனால அவர வித்து நாங்க ஜனங்க கிட்ட வாங்க போறம் நல்ல மொத்து.... டண்டணக்கா ஆ டனக்குனக்கா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எழுதின உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியல்ல?ஐயோ ஐயோ

  • கருத்துக்கள உறவுகள்

இளையராசா சொத்துத்தான்

அப்படியென்றால்

காலத்தால் அழியாத பாடல்களைத்தந்து கொண்டிருந்து

இளையராசாவின் வருகையின் பின்னால்

இளையராசா போல் இசையை கெடுக்கமாட்டேன் என ஒதுங்கிய விசுவநாதன் (ராமமூர்த்தி)??????????

  • கருத்துக்கள உறவுகள்

இளையராசா சொத்துத்தான்

அப்படியென்றால்

காலத்தால் அழியாத பாடல்களைத்தந்து கொண்டிருந்து

இளையராசாவின் வருகையின் பின்னால்

இளையராசா போல் இசையை கெடுக்கமாட்டேன் என ஒதுங்கிய விசுவநாதன் (ராமமூர்த்தி)??????????

அப்படிக் கெடுக்கமாட்டேன் என்று சொன்னவர் தனது பிழைப்புப் பழுதான கோபத்தில் சொல்லியிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வியாபாரிகளுக்கிடையே வியாபாரப் போட்டி.. நடுவில் சிக்கி சின்னாபின்னமானவர்கள் மாவீரர்கள்.. சிக்கிப்பட்டிருப்பவர்கள் இளையராஜா, விஸ்வநாதன், சீமான், செல்வமணி.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிக் கெடுக்கமாட்டேன் என்று சொன்னவர் தனது பிழைப்புப் பழுதான கோபத்தில் சொல்லியிருப்பார்.

இவரைப்போல் இசையமைக்க தன்னாலும்முடியும என நினைத்தாலே இனிக்கும என்றொரு படத்துக்கு இசையமைத்து வெற்றி பெற்றுத்தான் ஒதுங்கினார்.

அதற்காக இளையராசா எமது சொத்தல்ல என்று நான் சொல்லவில்லை.

இளையராசா எமது சொத்து என்று முதன் முதலில் இங்கு எழுதியதே நான் தான்.

ஆனால் சபேசனின் இந்த முடிச்சு சரியல்ல என்பதற்காகவே வேறு ஒருவரை உதாரணம காட்டினேன்.

எங்களாலும் இப்படிடி முடிச்சு போட்டு எழுதிக்கொண்டிருக்க முடியும்...........?

புரிந்தால் சரி :(

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வியாபாரிகளுக்கிடையே வியாபாரப் போட்டி.. நடுவில் சிக்கி சின்னாபின்னமானவர்கள் மாவீரர்கள்.. சிக்கிப்பட்டிருப்பவர்கள் இளையராஜா, விஸ்வநாதன், சீமான், செல்வமணி.. :blink:

இசை ஏன் இதற்குள் நின்று புலம்புகிறீர்கள்?

நவம்பர் 3 மக்கள் தீர்ப்பு எல்லா வியாபாரிகளையும் திருத்தும். நாங்கள் அமைதி காப்போம். இப்போதைக்குச் சிறந்த வழி அதுதான்

இசைக்கு மொழி இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா சரியான திமிர் பிடிச்சவர் சக கலைஞர்களை மதிக்க தெரியாதவர்

Ar ரஹ்மான் தான் தமிழரின் சொத்து இளையராஜா இசை யானி என்ற பட்டதிக்கு மட்டும் தான் தகுதி உடையவர்

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா சரியான திமிர் பிடிச்சவர் சக கலைஞர்களை மதிக்க தெரியாதவர்

Ar ரஹ்மான் தான் தமிழரின் சொத்து இளையராஜா இசை யானி என்ற பட்டதிக்கு மட்டும் தான் தகுதி உடையவர்

முடியல சுண்டல் :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

மற்ற இசை அமைப்பாளர்களோடு இசைஞானியோடு ஒப்பிட்டுக் கொண்டு வாதிடுவது வீண் வேலை.

ரசிக்கக் கூடிய வித்தியாசமான இசையை தந்த நிறைய இசை மிகச் சிறந்த அமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவர்கள்.

இசைஞானி மண்ணின் இசையை தந்தார். தமிழர்களின் ரத்தத்தில் ஊறியிருந்த இசையை தேடிக் கண்டுபிடித்து தந்தார். எங்களின் அடையாளத்தை மீட்டு எடுத்தார். இசை என்னும் ஆயுதத்தை எடுத்த ஒரு போராளி அவர்.

இதுவே அவரை எங்களவர் என்று ஆக்கியது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஏன்னா சும்மாவா செய்தார் காசுக்காக செய்தார் அவர போய் தமிழரின் சொத்து எண்டெல்லாம் பில்ட் up கொடுக்க முடியா :D

பெரியார் படத்திக்கு இசையமைக்க சொல்லி கேட்ட பொழுது மறுத்தவர் எல்லாம் எப்பிடி தமிழரின் சொத்து?

  • தொடங்கியவர்

பெரியார் படத்திற்கு இசை அமைக்காமல் ராமராஜ்ஜியம் படத்திற்கு இசை அமைத்த இளையராஜாவை பெரியாரின் மீது பேரன்பு வைத்திருக்கும் எனக்கு பிடிக்கிறது அல்லவா? இதனால்தான் அவர் தமிழரின் சொத்து

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழரின் சொத்து என்றால் ஒரு 50 இசை நிகழ்ச்சிகளை நடாத்தி சில அகதிகளுக்கு உதவி இருக்கலாமே.அப்படி செய்யவில்லை.செய்ய மனம் வரவில்லை. ஆகவே இசைஞானி என்ற பட்டமே இப்போதைக்கு போதுமானது.

  • தொடங்கியவர்

<p>இளையராஜாவை அவர் தந்த இசையின் ஊடாகவும், அது எங்களின் மீது ஏற்பட்ட தாக்கத்தின் ஊடாகவும் மட்டுமே நாம் பார்க்க முடியும்

அவருடைய பேட்டிகளை படித்தாலே "என்னடா இந்த மனிசன்" என்று எனக்கு தோன்றுவது உண்டு. மேடைகளிலும் அவர் சில வேளை சங்கடப்படும்படியாக நடப்பது உண்டு. ராசையா என்னும் மனிதன் ஆயிரம் குறைகளைக் கொண்டவனாக இருக்கட்டும்.

அவர் தமிழ் மக்களுக்கு தந்த இசையின் ஊடாக மட்டுமே நான் அவரைப் பார்க்கிறேன். ஒரு நல்ல இசையை தருகின்ற மேதையாக அவர் தமிழ் சமூகத்திற்கு தன்னுடைய பெரும் பங்களிப்பை செய்கிறார்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா: அண்மைக்காலமாக யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருப்பவர்களில் சுண்டலும், நீலமேகமும் முதன்மையானவர்கள். அவர்கள் எமது சொத்து.. :icon_mrgreen:

சபேசன்: சுண்டல் தன்ரை பொழுதுபோக்குக்கு எழுதிறார் அவர் எப்பிடி எங்களுக்கு சொத்து? ^_^

சுண்டல்: :blink:

நீலமேகம்: :unsure:

நுணா: அதெப்பிடி.. அவையள் சொத்து என்றால் தங்கட வருமானத்திலை பாதியை நாட்டுக்கு குடுப்பினமா? :mellow:

சுண்டல்: அடப்பாவிகளா.. அடிமடியிலயே கை வைக்கிறாங்களே.. :mellow:

சபேசன்: சுண்டல் யாழுக்கு வாறதே வேறை வேலையா.. இவர் எப்பிடி எங்களுக்கு சொத்து? :lol:

நீலமேகம்: கொக்காமக்கா.. சும்மா ஓரமா நிக்கிறம்.. இழுத்து நடுச்சந்தியில விட்டு நாறடிக்கிறாங்களே..! :huh:

:D :D

  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

இசையின் கருவையே எடுத்துக்கொண்டால்

நேற்றுக்கூட சுண்டல் தாயக வளர்ச்சித்திட்டம் ஒன்றுக்கு 200 ஈரோக்களை தருவதாக அறிவித்தார்

அது அவரது இந்த மாத வருமானத்தில் 10 வீதமாக இருக்கலாம்.

இதுவரை இளையராசா என்ன குடுத்துள்ளார் என அறியத்தந்தால் நாமும் ஒரு திரி தொடங்கி கும்பிடுவோமல்லவா??

(இளையராசா சொத்தில் அரைவாசி தந்தால் ஈழம் உலக வரைபடத்தில் பணக்காற நாடாகிவிடும். அந்த ஆசையெல்லாம் எமக்கில்லை) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் கருவையே எடுத்துக்கொண்டால்

நேற்றுக்கூட சுண்டல் தாயக வளர்ச்சித்திட்டம் ஒன்றுக்கு 200 ஈரோக்களை தருவதாக அறிவித்தார்

அது அவரது இந்த மாத வருமானத்தில் 10 வீதமாக இருக்கலாம்.

இதுவரை இளையராசா என்ன குடுத்துள்ளார் என அறியத்தந்தால் நாமும் ஒரு திரி தொடங்கி கும்பிடுவோமல்லவா??

(இளையராசா சொத்தில் அரைவாசி தந்தால் ஈழம் உலக வரைபடத்தில் பணக்காற நாடாகிவிடும். அந்த ஆசையெல்லாம் எமக்கில்லை) :lol:

நான் சொல்ல முயன்றது ஒன்று.. அதாவது இளையராஜா நான் தமிழரின் சொத்து என்று சொன்னதாக ஞாபகம் இல்லை (கதையின்படி சுண்டலும் யாழ்களத்தின் சொத்து என்று சொல்லவில்லை. :D )

ஆனால் அவர்கள் சொத்து என்று ஒரு பகுதி சொல்வதும், சொத்தல்ல என்று மறுபகுதி சொல்வதும் வேடிக்கையானது. நடுவில் அசிங்கப்படுவது சுண்டலும், இளையராஜாவும் மட்டுமே என்பதைத்தான் சொல்ல வந்தேன்.. :rolleyes:

  • தொடங்கியவர்

இதுவரை இளையராஜா தமிழ் மண்ணுக்கு அதன் அடையாளமான இசையை கொடுத்தார். நாளையும் அதைத்தான் கொடுப்பார்.

ஒரு இனத்தின் இசை என்பது அதனுடைய பண்பாட்டின் பெரும் பகுதி. அதன் முக்கியத்துவத்தை அறிந்ததால் அப்படியான ஒன்றை தருபவனிடம் போய் வேறு விடயங்களை கேட்டுக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா: அண்மைக்காலமாக யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருப்பவர்களில் சுண்டலும், நீலமேகமும் முதன்மையானவர்கள். அவர்கள் எமது சொத்து.. :icon_mrgreen:

சபேசன்: சுண்டல் தன்ரை பொழுதுபோக்குக்கு எழுதிறார் அவர் எப்பிடி எங்களுக்கு சொத்து? ^_^

சுண்டல்: :blink:

நீலமேகம்: :unsure:

நுணா: அதெப்பிடி.. அவையள் சொத்து என்றால் தங்கட வருமானத்திலை பாதியை நாட்டுக்கு குடுப்பினமா? :mellow:

சுண்டல்: அடப்பாவிகளா.. அடிமடியிலயே கை வைக்கிறாங்களே.. :mellow:

சபேசன்: சுண்டல் யாழுக்கு வாறதே வேறை வேலையா.. இவர் எப்பிடி எங்களுக்கு சொத்து? :lol:

நீலமேகம்: கொக்காமக்கா.. சும்மா ஓரமா நிக்கிறம்.. இழுத்து நடுச்சந்தியில விட்டு நாறடிக்கிறாங்களே..! :huh:

:D

இசை இதை வாசித்து சிரித்துச் சிரித்தே வயிறு நொந்துவிட்டது.

இதைப்போலத்தான் செம கமெடி இசைஞானி விடயத்திலும்...

:lol:

  • தொடங்கியவர்

ஈழத் தமிழினம் நடந்த நிகழ்வுகளால் பெரும் மனச் சிக்கலுக்குள் ஆழ்ந்திருப்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். அனைத்தையும் இந்த சம்பவங்களுக்குள்ளால் பார்க்கின்ற பலர் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

ஆனால் இன்று எமக்கு பரந்த பார்வை அவசியம். எம் இனத்தில் உள்ள துறைசார் வல்லுனர்களை, மேதைகளை தொடர்ந்து இயங்க விடுவது எமது மீட்சிக்கு முக்கியமானது.

தேசியம், மாவீரர் என்னும் பெயர்களில் இவர்களின் எல்லைகளை நாம் குறுக்குவது தமிழினத்திற்கு நன்மையாக அமையாது.</p>

Edited by சபேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.