Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலதும்,பத்தும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1) பதினெட்டுப் படி என்பது ஒரு வாழ்க்கைத் தத்துவம்.மனித வாழ்க்கை குழந்தையாக இருந்து படிப்படியாக வளர்ந்து முதுமையை அடைந்து பின் முடிந்து போகும் ஓர் அமைப்பாகும்.கூர்ந்து கவனித்தால் ஒவ்வொருவருமே தன் வாழ்வில் 18 படித்தளங்களை ஏறியவராக இருப்பர்.
 
பிறந்த குழந்தையாகத் தொட‌ங்கி முதல் ஆண்டைப் பூர்த்தி செய்யும் அந்த இடைப்பட்ட 365 நாட்களில் அந்தக் குழந்தை சீராட்டப்படும் விதம்,மனம் என்னவென்பதே தெரியாத நிலையில் அதன் மனத்தில் பதிவாகும் காட்சிகளில் தான் தாய்,தந்தை என்ற இரு பேரகளுட‌ன் அவன் அடுத்து பெறப் போகும் 16 பேறுகள் உள்ளன.அவையாவன;
 
புகழ்,கல்வி,வலி,வெற்றி,நன்மக்கள்,பொன்,நெல்,நல்லூழ்,நுகர்ச்சி,அறிவு, அழகு,பெருமை,இளமை,துணிவு,நோயின்மை,வாழ்நாள்.
 
இந்த பதினாறில் முதல் ஆண்டில் தாய் தந்தை பராமரிப்பில் ஒருவன் முழுமையாக அடைய வேண்டியது எதைத் தெரியுமா? நோயின்மை
 
 
 
 
  • Replies 584
  • Views 41.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 பதினெட்டுப் படி என்பது ஒரு வாழ்க்கைத் தத்துவம்

 

- அருமை

  • கருத்துக்கள உறவுகள்

45325_280610052042252_147452124_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2) பதினாறு பேறுகளில் முதலாவதாக ஒருவருக்குத் தேவைப்படுவது அறிவு.ஒரு மனிதன் பிறக்கும் போதே கண்,வாய் போல ஒரு உறுப்பாக இதுவும் சேர்ந்தே பிறக்கின்றது.இது தான் அதன் பின் எல்லாமாய் இருந்து உயிர் பிரியும் வரையிலான காரண காரியங்களுக்குச் செயலகமாக விளங்குகிறது.

 
அறிவது என்பதில் இருந்தே அறிவு வந்ததாக சொல்லுவர்.இது ஆளுக்கு ஆள் மாறுபடும்.சிலருக்கு உட‌ம்பெல்லாம் மூளை என சொல்லக் கேட்டு இருக்கின்றோம்.சிலர் தலையில் களிமண் மட்டுமே இருப்பதாக வருத்தப்பட்டு இருக்கிறோம்.
 
பிறக்கின்ற நேர‌மும்,அப்போதைய கோள்சார‌மும் ஒருவர் எத்தனை பெரிய அறிவாளி என்பதை சொல்லி விடும்.ஆனால் அந்த நேர‌த்தில் பிறக்க வேண்டும்,அந்த நொடிப்பொழுதுக்கான கோள்களால் வழி நட‌த்த வேண்டும் என்பது கர்ம வினையால் தான்.
 
மொத்தத்தில் நமக்கான பேறுகள் கர்மவினையின் கைகளில் தான் உள்ளன.அதே சமயம் எது கர்மவினை என்னும் கேள்வியும் எழுகின்றது.ஒரு பிறப்பில் ஒருவன் செய்யும் செயல்களின் நன்மை தீமைகளே அதற்கேற்ப கர்மவினையாகின்றன.எனவே எப்போதும் யாருக்கும் நல்லதே செய்தால் அது நல்ல நேர‌ப்புள்ளியில் ஜனிக்க வைத்து முதல் பரிசாக நல்ல அறிவைத் தருகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
முத்தெடுக்க மூழ்குகிறான் சீலன்
முன்னாலே வந்து நின்றான் காலன்
    சத்தமின்றி வந்தவனின்
    கைத்தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான்,போனான் மூச்சூலன்
சொந்தத்தில் கார்,கொழும்பில் காணி  
 
சோக்கான வீடு,வயல்,கேணி  
இந்தளவும் கொண்டு வந்தால்
இக்கணமே வாணியின் பால்
சிந்தை இழப்பான் தண்டபாணி  
 
கம்பர் ஒரு காவியத்தை செய்தார்
கண்ட‌படி இராவணனை வைதார்
     நம் போன்றோர் இன்றெடுக்கும்
     அவர்விழாவிற்கு இங்குவர‌
நம்பிக்கையாக "விசா" எய்தார்.
 
உத்தேச‌ம் வயது பதினேழாம்
உட‌ல்விளைக்க ஆட‌ல்பயின் றாளாம்
     எத்தேச‌த் தெவ்வர‌ங்கும்
     ஏறாளாம் ஆசிரியர்
ஒத்தாசையாற் பயிற்சி பாழாம்.
 
குலோத்துங்கன் வாகையொடு மீன்டான்
குவலயமே நடுங்க அர‌சாண்டான்
      "உலாத்தங்கள் பேரில் இதோ!"
       ஒரு புலவர் குர‌லெடுத்து
"நிலாத் திங்கள்" எனத் தொட‌ங்க மாண்டான்!
 
இதை எழுதியவர் மகாகவி அவர் ஈழத்தை சேர்ந்தவர்.பல விதமான மர‌வு வழிக் கவிதைகளில் எளிய அன்றாட‌ விச‌யங்களை சொல்லும் திறமை படைத்தவர்."லிமரிக்" என்னும் ஆங்கிலக் குறும்பா அல்லது குறும்புப் பாவின் வடிவத்தை தமிழுக்கு தமிழுக்கு நளினமாக கொண்டு வந்த பெருமை அவருட‌யது என எழுத்தாளார் சுஜாதா கூறியுள்ளார்.
 
பின் குறிப்பு; மகாகவி கவிஞர் சேர‌னின் தந்தையாமே இது பற்றி யாருக்காவது தெரியுமா?
 
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

http://kklogan.blogspot.ca/2012/11/26.html

 

தனது நாட்டுத் தேசியக் கொடியில் பறவை உருவினைக் கொண்டுள்ள நாடுகள் எவையென்று தெரியுமா.......?

அவையாவன...

Dominica.gif
 

டொமினிகா
 
 
Flag-Mexico.png
 
 
zambia.gif
சாம்பியா



kiribati-flag.gif

 

 

 

 

கிரிபாடி

 

fiji_flag.jpg

egypt-flag.gif

 

 

எகிப்து
 
national-flag-of-montenegro.gif
 
மொன்ரினிக்கோ   
 
 
தொடரும்.....
 
 
 
 

Edited by யாயினி

 

 
பின் குறிப்பு; மகாகவி கவிஞர் சேர‌னின் தந்தையாமே இது பற்றி யாருக்காவது தெரியுமா?
 
 

 

 எந்த சேரன்?

 

பின் குறிப்பு; மகாகவி கவிஞர் சேர‌னின் தந்தையாமே இது பற்றி யாருக்காவது தெரியுமா? 

 

கவிஞர் சேரனின் (கனடா) தந்தை 'மகாகவி' உருத்திரமூர்த்தி சிறந்த ஈழத்துக் கவிஞர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் ஒருவர். புதுகவிதை வடிவம் வந்து எல்லோரும் கவிதை எழுதலாம் எனும் காலத்திற்கு முந்திய சிறந்த கவிஞர்களில் ஒருவர்.

60 / 70 களின் ஈழத்து இலக்கியத்தில் மகாகவி, நீலாவணன், முருகையன் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

 

Edited by தப்பிலி

18232330880184255815534.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3)பதினாறு பேறுகளில் நான்காவது பேறு நெல்! பிறக்கும் போது நல்ல தாய்,தந்தை வயிற்றில் கர்ம வினையின் துணையுடன் நல்ல நேரப் பள்ளியில் பிறந்து கண் திறந்து பார்த்தவுடன் அறிவுடன் செயற்படத் தொடங்குவது முதல் 3 பேறு...பிறந்து விட்ட ஒருவனுக்கு இறக்கும் வரை இறைவன் படியளக்க வேண்டும்.சோற்றுக்கில்லை-பட்டினி என்று உயிர் பிரிந்து விடக் கூடாது..அதே சமயம் நான்கு பேர் வந்தால் அவர்களுக்கு வயிராறச் சோறிடும் ஒரு வச‌தியான அடிப்படை வேண்டும்.
 
உலகிலேயே எந்த ஒரு மனிதனும் போதும் போதும் என்று சொல்வது வயிறு நிர‌ம்பச் சாப்பிடும் போது தான்.அதே ச‌மயம் அந்த பசியும் கூட‌ ஒரு முறை சாப்பிடுவதால் எல்லாம் அட‌ங்கி விடுவதில்லை.பசி என்னும் நெருப்பு அதிகம் எரியாமலும்,அவிந்து அட‌ங்கியும் விடாமலும் தொட‌ர்ந்து இருந்தபடியே இருப்பதாகும்.
 
இந்த பசிக்கான உணவான நெல்லை நிறைவாகப் பெறுவதே நான்காம் பேறு.நெல்லைப் பெற்றவன் நான்காம் படியை கட‌ந்தவனாவான்.
 
 
 
 
 
 
 
 
 

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் எனக்கு சேரனையும் தெரியும். அவரும் நல்ல கவிஞர். கனடாவில் வாழ்கிறார். பொங்கு தமிழ் யாழில் நடந்தபோது பாடப்பட்ட பாடல் ஈழநாடே எழில் சூழும் நாடே என்னும் பாடல் உட்பட பல எழுதியுள்ளார். மகாகவி பற்றி எம்மவர் பலருக்குத் தெரியாது. மகா கவியின் சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் மிக அருமையான கவிதை ரதி.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தப்பிலி,சுமோ மகாகவி பற்றிய தகவலுக்கு...நான் நேற்றுத் தான் ஒரு நூல் மூலம் தெரிந்து கொஞ்சம் தெரிந்து கொண்டேன்...சேரனைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு உள்ளேன்.

 

//சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்// படித்திருக்கிறேன் ஆனால் அதை எழுதினவர் மகாகவி எனத் தெரியாது :unsure:

சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்

சிலவேளை இதைவந்து கடல் கொண்டு போகும்

கறிசோறு பொதியோடு தருகின்ற போதும்

கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும்

 

வெறுவான வெளிமீது மழைவந்து சீறும்

வெறிகொண்ட புயல்நின்று கரகங்கள் ஆடும்

நெறிமாறு பட நூறு சுழிவந்து சூழும்

நிலையான தரைநீரில் இலைபோல் ஈடாடும்

 

இருளோடு வெளியேறி வலைவீசினாலும்

இயலாது தரவென்று கடல் கூறல் ஆகும்

ஒரு வேளை முகில் கீறி ஒளி வந்து வீழும்

ஒரு வேளை துயர் நீள உயிர் வெந்து சாகும்’

  • கருத்துக்கள உறவுகள்


கடைசிப் பந்தியில் நான் படித்தது வேறு வரிகள் நிழலி. நீங்களே கடைசிப் பந்தியை எழுதினீர்களா ???

 

 

கோடை கொடும் பனி மழை  குளிரை அஞ்சிக்
கோடிப் புறத்தினில் உறங்கி விடலாமோ?
ஆடை களைந்து தலை மீதினில் அணிந்தோம்
ஆழ்கடல் தயிர் எனக் கடைய வந்தோம்  

வாடை குளிர்ந்ததெனில் வாடிவிடலாமோ ?
வாரும் கடல் முழுதும் ஓடி வலை வீச
பாடொன்  றிரண்டகல முன்பகலும் ஆகும்
பாரும் கிழக்கிலொரு வெள்ளி ஒளி  வீசும்

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிப் பந்தியில் நான் படித்தது வேறு வரிகள் நிழலி. நீங்களே கடைசிப் பந்தியை எழுதினீர்களா ???

 

 

கோடை கொடும் பனி மழை  குளிரை அஞ்சிக்

கோடிப் புறத்தினில் உறங்கி விடலாமோ?

ஆடை களைந்து தலை மீதினில் அணிந்தோம்

ஆழ்கடல் தயிர் எனக் கடைய வந்தோம்  

வாடை குளிர்ந்ததெனில் வாடிவிடலாமோ ?

வாரும் கடல் முழுதும் ஓடி வலை வீச

பாடொன்  றிரண்டகல முன்பகலும் ஆகும்

பாரும் கிழக்கிலொரு வெள்ளி ஒளி  வீசும்

 

சுமே, நிழலி இணைத்த இரண்டாம், மூன்றாம் பந்திகள், முதலாம் பந்தியோடு, நயத்துடன் பொருந்துகின்றன போல இருக்கு!

 

நீங்கள் இணைத்த கவிதையின், முதலாம் பந்தியைத் தேடிப்பிடித்துக் கொண்டு வாருங்கள்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மறுபடி கடவுள் வருகிறார்
 
தினங்கள் சுருங்கி நீள்கின்றன
இரவுகள் எப்போதும் நீள்கின்றன
குழப்ப இதயங்களுக்குப்
பகுத்தறிவு மெல்லமெல்லத் தேவையற்றதாகிறது.
கடவுளைக் காணோம்,
இரவு பகல் எப்போதும்
இத்தனை அவலங்கள் இருந்தும்...
இல்லை அவர்.
அதன் பின் ஒரு முத்தத்தின் ஞாபகம் வர‌
ஒரு கனைப்பின் வாசனை வர‌
ஒரு குழந்தையின் மென்மையான பார்வை பெற
வசந்தத்தின் மென்தொடுகை மாலை நேரத்தில்
கடவுள் மறுபடி வருகிறார்
தன் எல்லாத் தேவதைகளுட‌ன்!
[ஆங்கில கவிதையின் தமிழாக்கம்]
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18232330880184255815534.jpg

 

 

விட்டுக் கொடுப்பெல்லாம் ஒர‌ளவுக்குத் தான் அதிகம் விட்டுக் கொடுத்தால் பேயராகத் தான் இருக்க வேண்டும்.
 
இதில் கொஞ்ச‌ம் உண்மை இருக்குது ஆனால் திரும்ப,திரும்ப மன்னித்தால் மன்னிக்கப்பட்டவர் ஆக இட‌ம் கண்டுடூவார்.
 
உண்மையாக மனம் விட்டுப் பேச‌வும் ஆட்கள் இருக்க வேண்டும் எல்லோரிட‌ம்,எல்லாத்தையும் பேச‌ முடியாது
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4)படிகளில் ஜந்தாவதாக வருவது அழகு என்னும் லட்ச‌ணமாகும்.மனிதப் பிறப்பெடுப்பது என்பது கூட‌ பெரிய விச‌யமில்லை.அப்படி எடுக்கும் பிறப்பில் கூன்,குருடு,செவிடு போன்ற ஊனங்கள் இல்லாமல் பிறப்பது என்பது தான் முக்கிய விச‌யம்.கூட‌வே நல்ல நிறம்,சரியான உயர‌ம் என்பதும் அட‌க்கம்.இத்தனை அம்சங்களோடும் பிறந்து பசியின்றி பாலருந்தி,நல்ல சக்தியான ஆகார‌ங்களை உண்டு குழந்தைப் பிராயத்திலேயே எல்லா வித சக்திகளையும் கொண்ட‌ ஒரு உட‌ம்பாக அந்த உட‌ம்பு இருக்க வேண்டும்.
 
இந்த ஆரோக்கியத்தை அடுத்து உட‌ம்பில் அமையும் அடுத்த இன்னொரு விச‌யம் அழகிய முக அமைப்பு...அதில் தேஜஸ்!
 
இந்த தேஜஸ் தான் முகராசியை உருவாக்கிறது.பார்த்தால் பார்த்த நொடி நேசிக்க தூண்டுகிறது.நல்ல களையான முகமும்,ஊனமில்லா உட‌ம்பும் பதினாறு பேறுகளில் அழகு என்னும் அம்ச‌மாக இருந்து ஜந்தாம் படியாக அமைகிறது.
 
[நான் வாசித்ததை பகிர்ந்து கொள்கிறேன் யாரைவது இவ் எழுத்துக்கள் புண் படுத்தினால் முன் கூட்டியே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.]
 
 
 
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்.........

 உலகில், பாலூட்டிகளில் மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கிலமாகும்.
பிறக்கும்போது இதன் நிறை 5 தொன்களாகும். பூரண வளர்ச்சியடைந்த பின்னர் இதன் நிறை 150 தொன்களினை விடவும் அதிகமாகும்.

 நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவை கிவி பறவை ஆகும். இவை வருடத்துக்கு ஒரு முட்டையினையே இடுகின்றன.

 நவரத்தினங்களில் ஒன்றான முத்தை உண்ணும் ஒரே உயிரினம் அன்னம் மட்டும்தான்.

Swan.jpg


 உலகில், உயிரினங்களிலேயே மிகப்பெரிய முட்டையினை இடுவது சுறா மீன் ஆகும்.

shark.jpg


 குதிரையின் காதினை விடவும் கழுதையின் காது நீளமானதாகும்.

 வீட்டு இலையான்களின் சராசரி ஆயுட்காலம் 14 நாட்கள் ஆகும்.

 பாம்புகளின் விஷத்தில் 90% புரதம் உள்ளடங்கியுள்ளது.

 சுறா மீன்கள் 100 வருடங்களுக்கும் அதிகமாகவும் வாழக்கூடியவையாகும்.

***

 

http://kklogan.blogspot.ca/2010/12/blog-post_13.html

  • கருத்துக்கள உறவுகள்
Angry Bird எல்லோரையும் கவரக்கூடியது என அறிந்ததால் அதை விளையாடாமல் தவிர்க்கிறேன்.  :unsure:  பிறகு முகநூலில் விவசாயம் செய்த நிலைமைக்குப் போய்விட்டால்?? :rolleyes:

 

முகநூலில் விவசாயம் செய்வது சோம்பேறித்தனம்! Angry Bird விளையாடுவது மூளைக்கு நல்லது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5) உலகில் உன்னதமான விசயம் கல்வி.ஒருவன் இறப்பிற்குப் பிறகும் அவன் கொண்டு செல்லும் விசயம் இரண்டு தான்.ஒன்று அவனது கரும வினை; அடுத்தது கல்வி.மற்றபடி எவ்வளவு கோடிகள் சம்பாதித்திருந்தாலும் பயனில்லை.கல்வி மட்டும் ஒருவருக்கும் வாய்த்து விட்டாலோ மற்ற விசயங்கள் தானாகத் தேடி வந்து விடும்.கல்விக்கு அப்படி ஒரு சக்தி.அடுத்து அள்ள அள்ளக் குறையாத ஒரே செல்வமும் கல்வி தான்.
 
கல்வி இல்லாத ஒருவனுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும் கல்வி கற்றவன் தயவினால் மட்டுமே அந்த செல்வத்தைப் பேண முடியும்.கல்வி தான் ஞானத்தை தருகிறது.ஞானம் தான் அனைத்தையும் பகுத்துப் பார்த்து அனைத்தையும் அறிவதாக உள்ளது.கல்வியை கண்களுக்கு சமமாக சொல்கின்றனர்.கல்வி இல்லாதவர்கள் கண்கள் இருந்து அறிவுக் குருடர்களாக உள்ளனர்.
 
ஒரு மனிதன் பெறும் பேறுகளில் பிர‌தானமானது கல்வி.வரிசையில் இது ஆறாவதாக உள்ளது.இந்த ஆறாவது படியைக் கட‌ந்தால் அடுத்து வருவது
 
 
 
 
 
 
 
உலகில் உன்னதமான விசயம் கல்வி.ஒருவன் இறப்பிற்குப் பிறகும் அவன் கொண்டு செல்லும் விசயம் இரண்டு தான்.ஒன்று அவனது கரும வினை; அடுத்தது கல்வி.மற்றபடி எவ்வளவு கோடிகள் சம்பாதித்திருந்தாலும் பயனில்லை.கல்வி மட்டும் ஒருவருக்கும் வாய்த்து விட்டாலோ மற்ற விசயங்கள் தானாகத் தேடி வந்து விடும்.கல்விக்கு அப்படி ஒரு சக்தி.அடுத்து அள்ள அள்ளக் குறையாத ஒரே செல்வமும் கல்வி தான்.
 
கல்வி இல்லாத ஒருவனுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும் கல்வி கற்றவன் தயவினால் மட்டுமே அந்த செல்வத்தைப் பேண முடியும்.கல்வி தான் ஞானத்தை தருகிறது.ஞானம் தான் அனைத்தையும் பகுத்துப் பார்த்து அனைத்தையும் அறிவதாக உள்ளது.கல்வியை கண்களுக்கு சமமாக சொல்கின்றனர்.கல்வி இல்லாதவர்கள் கண்கள் இருந்து அறிவுக் குருடர்களாக உள்ளனர்.
 
கல்வியும் அறிவும்தான் எவரையும் காப்பாறும்.
 
 
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பதினாறு பேறுகளில் ஏழாவது பேறு நுகர்ச்சி.நுகர்ச்சி என்டால் குறிப்பறிதல்...குறிப்பறிந்து நடக்க ஒருவருக்கு விவேகம் மிகவும் அவசியம்.
 
ஒருவரின் முகத்தை வைத்தே அவரிடம் இந்த விசயம் பேசலாம்,அதை இப்படிப் பேசலாம் என்று மனதுக்குள் முடிவெடுக்க தெரிய வேண்டும்.இடம்,பொருள்,ஏவல் என குறிப்பிடுவது இதைத் தான்.சிலர் பேசத் தெரியாமல் பேசி,பேசக் கூடாத வேளையில் பேசிக் காரியத்தை கெடுத்து விடுவார்கள்.அசுத்து எதையும் எப்படி சொல்ல வேண்டும் என்பது முக்கியம்.
 
எவ்வளவு கல்வி ஞானம் பெற்றிருந்தாலும் சரியான நேரத்தில்,சரியான விதத்தில் பேசத் தெரியா விட்டால் அவரது கல்வி ஞானமும் சேர்ந்து கெடும்.இந்த குறிப்பறியும் சக்தி தான் மனித உறவுகளுக்கே அடிநாதமாக உள்ளது.
 
நுகர்ச்சியில் தேறியவன் இங்கிதமும் விவேகமும் உடையவன்.வாழ்வில் ஏழு படிகளை கட‌ந்தவன்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
படிகளில் எட்டாவது இளமை‍- பதினாறு பேறுகளில் இது மிக முக்கிய பேறு.ஒரு மனிதன் மிகச் சிறந்த மேதையாக,வெற்றியாளானாக,பார் போற்றும் அறிஞனாகத் திகழ அடிப்படைக் காரணமாக இருப்பது அவனது குழந்தை பிராய வளர்ப்பும்,இளமையில் ஏற்படும் நட்பு மற்றும் கல்வி அம்சங்களும்தாம்.
 
மனித வாழ்வில் மிகச் சிறந்த வலுவான கால கட்டம் இளமை.எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்களே உலகில் இல்லை.இளமையில் மனம் மிகுந்த உற்சாகத்துடனும்,உடம்பு வலிமை உடையதாக இருக்கும்.பலர் இந்த இளமையில் கொடிய வறுமை காரணமாக துன்புறுகின்றனர்.அதனால்தான் இளமையில் வறுமை கொடியது என்றனர்.இன்னும் பலர் இனிய இளமைப் பிராயத்தை எட்ட முடியாமல் குழந்தைப் பிராயத்திலேயே மரணமடைந்து விடுகின்றனர்.
 
நல்ல ஆரோக்கியமான அழகிய இளமை வாய்க்கப் பெறுவது பெரிய பாக்கியத்துட‌ன் சேர்ந்தது
 
 இளமையில் வறுமை கொடியது என்றனர்.

 

 வறுமை இல்லாத இளமை சுவாரசியமற்றது, அனுபவிக்கனும் வறுமையை, அப்பதான் வாழ்கையில் முன்னேறி நல்ல முறையில் வாழமுடியும், யாரும் சேர்த்த சொத்தை அனுபவிப்பதில் ஒரு கிக்கில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.