Jump to content

காமத்தின் வழியாக் கடவுளை காண்பதெப்படி?


Recommended Posts

பதியப்பட்டது

[size=1][size=3]இது நீண்ட நாட்களாகவே எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி. கோவிலுக்கு போகும்போது தீய சிந்தனை கூடாது அதுவும் காமம் பற்றிய சிந்தனை அறவே கூடாது என்பர். ஆனால் கோவில் சுவற்றில் உள்ள சிற்பங்கள் பெரும்பாலும் காமத்தின் வெளிப்பாடே. அதைவிட பக்தி இலக்கியங்களில் சிற்றிலக்கியங்களைவிட அதிக காமம் கொட்டிக் கிடக்கிறது.[/size]

[size=3]கடவுளை காண இரண்டு வழிதான் ஒன்று பக்தி வழியாக மற்றொண்டு காமத்தின் ஊடாக. அதனால்தான் நம் முன்னோர்கள் கோவில் சிற்பங்களில் காமம் ததும்பும் சிலைகளை அமைத்துள்ளனர் என்கின்றனர் சிலர். காமத்தின் வழியாக் கடவுளை காண்பதெப்படி?[/size]

[size=3]ஓஷோவின் கருத்து இந்த விவாதத்தை ஒட்டியே இருக்கிறது. [/size]

[size=3]"காமம் கூடவே கூடாது என்பவர்கள்தான் மற்றவர்களை விட அதிகமாக காமத்தை பற்றியநினைவில் இருப்பார்கள், ஒருநாள் அவர்களால் காமத்துக்கு எதிராக கருத்து சொல்லவில்லை என்றால், உள்ளே அடக்கிவைக்கப்பட்டு இருக்கும் காமம் வெளிவந்துவிடும் அதனாலேயே சதா காமத்தை அடக்குவதை பற்றியும் அதுக்கு எதிராக கருத்துக்களை சொல்லியும், அந்த எண்ணத்தை அழுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வயிறு நிறைய சாப்பிட்டவன் எப்படி ஒரு நான்கு மணி நேரம் உணவினை பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறானோ அதுபோல் காமத்தினை முழுமையாக அனுபவித்தவன் ஒருவன் மட்டுமே அந்த சிந்தனை இன்றி இருக்கமுடியும். காம நுகர்வின் போது நம் மூளையில் ஒரு சிறு மின்னல் தோன்றுவது உண்டு.இதை உறவின் " உச்சநிலை " என்கிறோம். உச்சநிலையில் மட்டுமே ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை ”நான்” மறந்த கணம். அந்த “நான்” மறைந்த எந்த சிந்தனையும் இல்லாத கணம் ஒரு உடலுறவில் ஒரு நிமிடம்தான் நீடிக்கும், அந்த ஒன்றும் இல்லாத ஒரு நிமிட கணத்தின் மேல் உள்ள ஆசையால்தான் தான் மனம் திரும்ப திரும்ப அதை கேட்கிறது. உடலுறவால் அந்த கணத்தை நீட்டிக்கமுடியாது தியானம் மூலமே அந்த “நான்” மறைந்த கணத்தை நீட்டிக்கமுடியும் "[/size]

[size=3]இதை ஒட்டியே தான் நம் முன்னோர்களின் தத்துவமும் இருந்ததா [/size][size=3]? [/size][size=3]இதை பற்றி உங்களின் கருத்துக்களை பகிரவும். [/size][/size]

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம், இளம்பிறையன்!

நல்ல ஒரு அருமையான கேள்வியைத் தூக்கிப் போட்டுள்ளீர்கள்!

எமது, பண்பாட்டில், அதன் வளர்ச்சியில், காமம் எப்போதும் மறைபொருளாகவே இருந்து வந்திருக்கின்றது. இன்றும் கூட அது அவ்வாறே இருக்கின்றது. ஆனாலும், கடவுள் மீதான நம்பிக்கையோ, அளப்பரியது. இத அறிந்திருந்த எமது முன்னோர்கள், கோவில்களைப் பாடசாலைகளாக, உபயோகித்திருக்கலாம். அவை, தேரில் செதுக்கப் படும்போது, அல்லது கோபுரங்களில் செதுக்கப் படும் போது, காமத்தைப் பற்றிய பயம் விலகிப் போய் விடுகின்றது. எதோ, ஒரு செய்யக் கூடாத ஒன்றைச் செய்கிறோம், என்ற குற்ற உணர்வு அற்றுப் போகின்றது. அதே போல, வேறு வேறு பட்ட நிலைகளை, இன்னொருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத, மறைபொருளாக இல்லாமல், நேரிலேயே, சிறுவர், பெரியோர், ஆண்கள், பெண்கள் என அனைவரும், கூச்சமின்றிப் பார்த்துப் படிக்கக் கூடிய இடங்களாகக் கோவில்கள் இருந்தன.

அது மட்டுமன்றித், தாசியர் எனப் பட்டம் கட்டப் பட்ட சிலர், கோவில்களின் அருகில் வாழ்ந்தனர். இவர்கள், பல வித காரணங்களினால், திருமண பந்தத்தில், ஈடு படாதவர்கள் அல்லது ஈடு பட முடியாதவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியவர்களுக்குச் தங்கள் சேவையை வழங்கி வந்தனர். இந்தக் கோவில் சிற்பங்கள், அப்படிப் பட்டவர்களுக்குத் தேவையான விளங்கங்களை வழங்கின. இவை அனைத்தும், ஒரு சமூகக் கட்டமைப்பு, சீராக இயங்க வழி சமைக்கும், உயரிய நோக்கத்திலேயே ஆரம்பிக்கப் பட்டன!

ஆனால், துரதிஸ்ட வசமாகக், கண்ணதாசன் கவியில் வருவது போல,

ஆசை வந்து வேதியனை ஆட்டி வைத்தது.

எல்லாமே தலை கீழாக மாறின! தேவதாசிகள் முறை, பெண்களைச் சுரண்டவும், ஏமாற்றவும் பயன்படுத்தப் பட்டது! கோவில் சிற்பங்கள் தேவைக்கதிகமாக, காமத்தைக் காட்டத் துவங்கின! அதை, வெளிநாட்டார் தூக்கிப் பிடிக்க, ஏதோ தங்கள் முதுகில் தட்டுகிறார்கள் என்று நினைத்த, இந்தியக் கலாச்சாரக் காவலர்கள், காமத்திலிருந்து, ஆபாசத்திற்கு மாறிவிட்டார்கள்.

ஓஷோவின், நிர்வாணம் மூலம் நிர்வாணமடையும் தத்துவம், அவருக்கு உடந்தையாகவிருந்த, சுசீலா என்பவரால் போட்டுடைக்கப் பட்டது, அனைவரும் அறிந்ததே!

இப்போது, இளைய ஆதீனம், நித்தியானந்தாவின் முறை!

ஏமாளிகள் இருக்கும் வரையும், ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"காமம் கூடவே கூடாது என்பவர்கள்தான் மற்றவர்களை விட அதிகமாக காமத்தை பற்றியநினைவில் இருப்பார்கள்,

Super

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]பிரபஞ்ச நடனம்…[/size]

[size=5][size=4]கொற்றவை[/size][/size]

pbabc017_goddess_kali_lord_shiva.jpg

தழுவி முத்தமிட அழைப்பு விடுத்த பழஞ்சூரியன்

துணை தேடிப் பாடும்

கவிகளில் வழிந்தோடுகிறது

விழிகளற்ற இரவுகளின்

கொடிகள் சுற்றியெடுத்த சுக்கிலம்

பெண் பூனைகள் முகர்ந்து விடாமல்

வார்த்தைகளுக்கடியில்

புதைத்து வைத்த உதட்டின் மேல் முளைந்த காடொத்த மயிர்கள்

சுக்கில மூலம் ஒளிந்துக் கொண்டது

யானைத் தோலணிந்து

அம்மை

குறிகளின் மீது நடனமாடுகிறாள்

அம்மை

எம் அம்மை

பைரவி

பார் புகழும்

கொற்றவை

எலும்பையும் நசுக்கியுடைத்து மஜ்ஜையுறியும்

இரக்கி

கருணா பைரவி

கருணையின் ஆதி

மகாயோனி

இடது காலில்

கழலென

சுற்றித்திளைக்கும் தழலென

மின்னும் இரு நாவோடு நச்சரவம்

தெளிக்கும்

நஞ்சானது கரைக்க துவங்கியது சூரியனின் மொட்டைக் கதிர்களை

ஆம்

அப்படித்தான்

அவள் வைசூரி

வலது காலால் முரசம் பெயர்த்து

ஓங்கியொளிவிடும்

தாகத்தால் தகதகக்கும்

மின்னும் சிறு மூங்கில் விரல்களால்

அம்மை பறிப்பாள்

பறிப்பாள்

அம்மை

குறிகளை

பற்றியிருந்த கொடிகள் தெறித்து சிதறிவெடிக்கிறது

தத்தோம்...தாம்... தரிகிட தித்தோம்

நீலி

பெண்பேய்

பேரம்மை

கனியட்டும் தாயே அகம் இகம் பரம்

சாந்தம்

அம்மையே

குறிகள்

யோனிகளுக்கானஅகராதிகளை படைப்பதில் சலிப்பதில்லை

துதிக்கும் சொற்கள் காலத்தின் கரைப் படிந்த சொற்களானதை

அம்மை அறிவாள்

அம்மையரிவாள்

அவள்

பழுப்பு நிறம் கூடிய பற்களுக்கிடையில் அரைபட்டு

ஓங்கி மிதிக்கையில்

சுக்கிலம் தெறித்து

விரைகள் நசுங்கி

விழிகள் கொட்டி

வேரோடு சாய்கிறது

நீலம் பாவிய கழுத்து

நீலம் பாவிய உடல்

நீலம் பாய்ந்த குறி

நீலத்தை எடுத்துடுத்துடுத்துகிறாள்

அம்மை

இளவுதட்டில் வெம்மை பூக்க

பசுஞ்செம்மை சிவக்க

இளிக்கிறாள்

எம் அம்மை

தம்..

தம்தம்...தம்

தத்...

தத்தரிகிட தத்....

தத்தரிகிட...தத்தரிகிட...தித்தோம்

சாந்தம்.

http://saavinudhadugal.blogspot.co.uk/2011/04/blog-post_30.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தத் தரிகிட தக்க தரிகிட தொம் நம்..........நமக்கு பரத நாட்டியம் எல்லாம் சரி வராது கிருபன் ஜி ஒன்லி குத்தாட்டம் தான் :D

Posted

[size=3]நன்றி புங்கையூரன் மற்றும் சுண்டல். கிருபன் இணைத்த கவிதை அருமை ஆனால் இந்த விவாதத்திற்கு என்னால் எந்த கருத்தையும் அதிலிருந்து எடுக்க முடியவில்லை.

இற்பரத்தையர், காமப் பரத்தையர், சேரிப் பரத்தையர் என சங்க காலத்திலும் கூட தாசிகள் உண்டு கொஞ்சம் வேறுபட்ட வடிவத்தில். ராஜா ராஜா சோழன் காலத்தில்தான் தேவதாசி முறை உண்டக்கப்பட்டதென அறிகிறேன். ஆனால் அதற்க்கு முன்பே பல்லவர் காலத்திலேயே கோவிலில் சிற்பங்கள் அமைக்கும் முறை வந்து விட்டது.

இங்கு சில விடயங்கள் கவனிக்க வேண்டியது. எப்பொழுது கோவிலில் சிற்பங்கள் அமைக்கும் முறை வந்தது இது யார் காலத்தில் வந்தது? நானறிந்த வரையில் சங்க காலத்தில் கோவில் சிற்பங்கள் இருந்ததாக படித்த ஞாபகம் இல்லை. இந்த சிற்பங்கள் அமைக்கும் முறை பல்லவர் காலத்தில் தான் தொடங்குகிறது. களப்பிரர் ஆட்சி காலத்தில் இருந்ததா எனத் தெரியவில்லை? காமத்தின் வழியாக கடவுளை காணலாம் என்ற சிந்தாந்தம் பல்லவர்கள் காலத்தில் தான் விதைக்கப்பட்டதா ? இல்லை இதற்க்கு முன்பே இருந்த கருத்துகளின் நீட்சி தான் கோவில் சிற்பங்களா? ஏனெனில் பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்ற கூற்றும் கூட உண்டு. தமிழர்கள் அல்ல எனில் காமத்தின் ஊடாக கடவுளைக் காண்பது என்ற கருத்தாடல் வேறொரு இனக்குழுவிடமிருந்து வந்ததா? எது எப்படியாகினும் காமத்தின் ஊடாக கடவுளைக் காணலாம் எனக் கருதக் காரணம் என்ன? பக்தி இலக்கியங்களை எடுத்தக் கொண்டாலும் அதிலும் காமமே மிகுந்து காணப்படுகிறது....[/size]

Posted

.

சிந்து வெளியில் உலவிய நீண்ட கேசங் கொண்ட உலகின் முதலாவது யோகி சிவன் என்பார்கள்.

யோகத்தின் மூலம் பிரபஞ்ச உண்மையை உணர்ந்தமையினாலும் தெய்வீக ஆற்றலைப் பெற்றமையினாலும் குருவாக, தெய்வமாக மானுடரால் உயர்த்தப்பட்டார் என்பார்கள்.

யோகத்துள் பல வழிகளை அவர் காட்டினார். அவற்றுள் ஒன்று தாந்திரீகம்.

********************************************************

இந்து சமயத்தில் பாவனை ([size=4]Bhavana[/size]) என்ற பதம் உண்டு.

இறைவனை தந்தையாக பாவனை செய்தல்.

தாயாகப் பாவனை செய்தல். ( காளி )

குழந்தையாகப் பாவனை செய்தல். (கிருஷ்ணர், முருகன்)

நன்ப‌னாகப் பாவனைசெய்தல். ( சுந்தரர்)

குருவாகப் பாவனை செய்தல். ( மாணிக்கவாசகர்)

காதலானாக (மீரா)

இந்தப் பாவனையின் நோக்கம் தமக்குப் பிடித்த உறவு முறைமூலம் இறைவனை மனதால் நெருங்குவதே.

இறைவனைத் தன் துணையாகாப் பாவனை செய்வது தாந்திரீகம்.

இங்கே காமம் இல்லை. தாந்திரீகத்தில் ஆணும் பெண்ணும் சிற்றின்ப எல்லையைக் கடக்கிறார்கள்.

ஏனைய முறைகளில் எப்படி புலன்கள் இறை அனுபவத்தை உணரப் பயன்பட்டனவோ அவ்வாறே தாந்திரீகத்திலும் புலன்கள் இறை உணர்வை நுகர்கின்றன. செவிகளால் எப்படி கூச்சலையும் தெய்வீக இசையையும் கேட்க முடியுமோ அவ்வாறே சூழ்நிலை, ஒருவர் பக்குவம் என்பவற்றிற்கேற்ப தாந்திரீகம் ஒருவனை, ஒருத்தியை தன் உடல் எல்லையைத் தாண்டி தெய்வீக உணர்வை தருகின்றது.

******************************************************

கோவிற் கோபுரங்கள், சிற்பங்கள் உலகின் அபத்தங்களையும் சுட்டிக்காட்டலாம். அவை அறிவு போதிப்பனாவாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை.

Posted

[size=3]பக்தி இலக்கியங்களை எடுத்தக் கொண்டாலும் அதிலும் காமமே மிகுந்து காணப்படுகிறது[/size]

இது தவறான கருத்து. உ+ம் நாம் பச்சை என்றால் எதை சொல்லுகிறோம் என்பதை தெளிய வேண்டும். பச்சை நிறத்தை, பச்சை நிறம் கொண்ட காய்கறிகளை, பச்சையான காய்கறிகளை, சமைக்காத உணவு மூலப் பொருள்களை, மூலம் ஆன பொருள்களை, மூல நிலையை, உடன் பிறந்த குழந்தையை........ இந்த நிலையில் காமம் என்று ஒன்றை கூறி இன்னொறை காட்டுவது இரண்டையும் அறியாத நிலை. காதல் என்பது வெறும் அன்பு. இதனுடன் காமம் தொடர்புடையதல்ல.

பக்தி இலக்கியங்கள் என தமிழில் அழைக்கப்படுபவை, திருமுறைகள் மட்டும் என்றுதான் நினைக்கிறேன்.தமிழில் மட்டும் காணப்படும் சைவசித்தாந்தம் பக்தி இலக்கியமாகாது. பக்தி இலக்கியம், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் ஆக்கப்பட்டு வடக்கே சென்றது. அங்கு இணைக்கபட்ட புரணக்கதைகளில் உடல் உறவு சம்பவங்கள் வருகிறது. இது தமிழ் பக்தி இலக்கியங்களில் இல்லை. பிற்காலம் புராணக்கதைகள் தமிழுக்கும் மொழிப்பெயர்க்கப்பட்டன.

சில மயக்க நிலைகள் தவிக்கப்படவேண்டும்.

1.இறவனை அடைதல் என்றால் என்ன?

2.காமம் என்றால் என்ன?

அவற்றை நாம் முழுவதாக இங்கே ஆராய முடியாது.

3.பக்தி இலக்கியங்களில் காணப்படும் பண்பாட்டு நிலை.

இது மிக இலகுவாக தெளியவைக்க படக்கூடியது.

a) சில சொற்கள் பெருதுபடுத்தப்படல் - உ+ம் சகலாவல்லி மாலையில் வரைதனக்குன்று என்னும் போது இது வருணனை மட்டுமே. இது சமூகத்தில் அத்தகைய வருணனைகள் ஏற்கப்பட்டிருந்த போது பிரயோகிக்க பட்டவை. என்வே அங்கே காமம் என்பது இல்லை.

b)இதே மாதிரி சில திருவெம்பாவையில் வரும் உன்கையில் பிள்ளை என்ற பாடலில் வரும் வசனத்தொடர்"எம்கொங்கை நின் அன்பர் அலாதார் தோள் சேரற்க". என்ற வசனம், எடுத்த எடுப்பில் காமநிகழ்வை சொல்வதாக பட்டாலும் தூய்மையான திருமண பந்ததைத்தான் இது சொல்கிறது. திருமணம் சைவத்தில் ஏற்கப்பட்ட ஒரு வாழக்கை முறை. துறவறம் மட்டும் தான் எனபதல்ல சைவத்தின் நிலை. ஆராய்ந்து பார்த்தால் பக்தி இலக்கியங்களில் காமத்தை பற்றி சொல்ல இல்லை. புராணக்கதைகள் வேறு.

c). வத்வாசனரின் காம சூத்திரம் காமத்தால் இறவனை அடையும் வழியைப் பற்றி சொல்லவில்லை. அது வெறுமனே வாழ்க்கையில் உடலுறவு ஒரு பாகம் என்றும், அதை உணர்ந்து கழித்துவிடுவதால் தான் வேதாந்தி தனது தத்துவிசாணையில் முன் செல்ல முடியும் என்றும்தான் கூற வருகிறது. அது சொல்ல வருவது பால் குடிக்கும் பிள்ளை வளரும். குடிக்க பால் இல்லாத பிள்ளை சாகும் என்பதாகும். அதாவது அது ஒரு வாழ்க்கையின் படி நிலை.

இனி நாம் "1.இறவனை அடைதல் என்றால் என்ன?" என்று பார்த்தால் சரியான விடை எங்குமே கிடையாது. இறவனை அடைந்தவரோ அடையாதவரோ பிறப்பிறப்பை அந்த பிறவியிலாவது குறைந்த பட்டசம் தவிர்க்க முடியாது. எனவே அதை வைத்து இறவனை காணுதல் எனபது சாமனிய மனிதனுக்கு புரியாதபுதிரே.

இனி கடவுளை காண்பது புத்தர் போன்ற ஒரு நிலை என்றால் அதற்கும் ஒருவர் வாழும் வாழ்க்கைக்கும் தொடர்பு கிடையாது.

புத்தர் பல நாட்கள் விரதமிருந்து மனத்தை கட்டுப்படுத்தி தோல்வி கண்டு, கடவுளை காணுதல் பொய் என்ற நிலையில் அரச மரத்தின் கீழ் தன் ஞானத்தை அடைந்தார். அவர் கைக்கொண்ட "றிச்சுயல்களால்" ஞானம் வரவில்லை. எனவே காமத்தை(உடலுறவை) ஒதுக்குவதால் ஞானம் வரும் என்பதில்லை.

காமத்தால் ஞானம் வரும் என்றும் ஒரு இடமும் சொல்லப்படவில்லை. அதற்காக நாம் காமம் என்றால் என்ன என்று இப்போதைக்கு வரவிலக்கணப்படுத்த முடியாது. தந்திர மார்க்கம் சிந்து வெளி காலத்தில் இருந்து வருகிறதென்கிறார்கள். இவர்கள் சில உடல் உறவுகளால் மனம் சாந்தி அடையும் என்கிறார்கள். ஆனால் மனச் சாந்திக்கு மனத்தில் செயல் பாட்டு நிலை இருக்க கூடாது. மனசெயல்பாட்டுடன் கூடிய உடல் உறவில் சாந்தி வராது என்பது வேதாந்த விசாரணை. அதாவது மனச் செயல் பாட்டுடன் கூடிய எந்த செயல்ப்பாட்டாலும் மனச்சாந்தி வராது. இறைவனை அடைய என்று ஆசைப்படும் செயல்பாடு கொண்ட மனம் இருக்கும் வரை இறவனை அடைய முடியாது. மனச்செயல் பாட்டை நீக்கி இறவனை தேடினால் மட்டும் இறவனை காண முடியும்.

மனச்செயல்ப்பாட்டுடன் கூடியவகையில் இறவனை பிராத்தித்தால் இறவனை அடைய முடியாது. மனசெயல்பாடற்று கடமைகளை செய்யும் மனபக்குவம் வந்துவிட்டால் செய்யும் தொழிலை தொடந்து செய்ய மனம் சாந்தி அடையும். இதில் உடல் உறவு விலக்கப்படமுடியாதது.

பாரத்தில் வரும் அந்தணணான முனிவர்(கௌசிகர் என்று நினைக்கிறேன்) பலநாட்கள் தான் தவமிருந்து காணமுடியாத சாதனை நிலை கணவனுடன் சேர்ந்து இல்லறம் நடத்தும் பெண் ஒருத்தியிடம் கண்டு அதிசயித்துவிட்டு அவளின் சொல் படி தினம் மாடறுத்து வியாபரம் செய்யும் புலயனிடன் சென்று பாடம் கேட்டார். (இந்த கதைதிலிருந்து வரும் பழமொழிதான் தான் "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா"?)

எனவே மனசாந்திக்கும் உடல் வாழ்க்கைகும் தொடர்பில்லை.

தந்திர மார்க்கம் குடும்பம், பந்தம் என்ற வாழ்க்கை மறுத்து, அந்த உறவு முறைகளை மனத்தில் அறுத்தெறிந்து இயற்கையான உறவுகளை மனத்தில் நிலைக்க பண்ண முயல்கிறது. ஆனால் அந்த பாதை தேவையா என்பது வேறு விவாதம். பனிக்கட்டியில் நீங்கள் சறுக்க முடியுமானல் விரைவாக பயணிக்கலாம். ஆனால் அதில் சறுக்கும் போது கீழே விழுந்து முழு பயணமும் தடைப்படலாம். எனவே தந்திர மார்க்கம் ஒன்றுதான் இறைவனை அடைய வழிகாட்டும் என்று நினைப்பது தவறு.

காமம் என்பது மனநிலை. அது ஆசை, விருப்பம் போன்றவற்றை காட்டும் சொல். அதன் வெளிப்பாடுதான் செய்பாட்டுடன் இருக்கும் மனம். எனவே காமம் என்பது மனச்சாந்திக்கு எதிரான நடத்தை. புதிய கருத்தான விபச்சாரம் போன்றவையும் அதில் அடங்கும். இந்த காமம் மனத்தை அடக்கி திருமண பந்ததில் இருக்கும் மனநிலையை, அல்லது தந்திர மார்க்கத்தில் கூறப்படும் உடல் உறவை உள்ளடக்காது.

ஆக காமத்தால் இறவனை காண முடியாது. பக்தி இலக்கியங்கள் காமத்தை போதிக்கவோ, நியாப்படுத்தவோ இல்லை. தந்திரம் சார்ந்த உடல் உறவு காமம் சாராதது. யோகா போன்ற சாதனை முறை.

அதைவிட்டு விட்டு படுக்க போகும் ஒவ்வோரு நாளும் தூக்கம் வரும் வரை மன செயல் பாடுகளை நீக்க முயலவும். அதன் பின்னர் மற்றைய சாதனைகளை முயலலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காமத்தால் சொர்க்கத்தை அடையலாம் ........ சொர்கத்தில் தானே கடவுளும் இருப்பார் ???????????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காமத்தால் கடவுளைக் காணமுடியாது. எப்படிங்க கடவுள் நினைப்பெல்லாம் வரும்.

Posted

.

சிந்து வெளியில் உலவிய நீண்ட கேசங் கொண்ட உலகின் முதலாவது யோகி சிவன் என்பார்கள்.

யோகத்தின் மூலம் பிரபஞ்ச உண்மையை உணர்ந்தமையினாலும் தெய்வீக ஆற்றலைப் பெற்றமையினாலும் குருவாக, தெய்வமாக மானுடரால் உயர்த்தப்பட்டார் என்பார்கள்.

யோகத்துள் பல வழிகளை அவர் காட்டினார். அவற்றுள் ஒன்று தாந்திரீகம்.

********************************************************

இந்து சமயத்தில் பாவனை ([size=4]Bhavana[/size]) என்ற பதம் உண்டு.

இறைவனை தந்தையாக பாவனை செய்தல்.

தாயாகப் பாவனை செய்தல். ( காளி )

குழந்தையாகப் பாவனை செய்தல். (கிருஷ்ணர், முருகன்)

நன்ப‌னாகப் பாவனைசெய்தல். ( சுந்தரர்)

குருவாகப் பாவனை செய்தல். ( மாணிக்கவாசகர்)

காதலானாக (மீரா)

இந்தப் பாவனையின் நோக்கம் தமக்குப் பிடித்த உறவு முறைமூலம் இறைவனை மனதால் நெருங்குவதே.

இறைவனைத் தன் துணையாகாப் பாவனை செய்வது தாந்திரீகம்.

இங்கே காமம் இல்லை. தாந்திரீகத்தில் ஆணும் பெண்ணும் சிற்றின்ப எல்லையைக் கடக்கிறார்கள்.

ஏனைய முறைகளில் எப்படி புலன்கள் இறை அனுபவத்தை உணரப் பயன்பட்டனவோ அவ்வாறே தாந்திரீகத்திலும் புலன்கள் இறை உணர்வை நுகர்கின்றன. செவிகளால் எப்படி கூச்சலையும் தெய்வீக இசையையும் கேட்க முடியுமோ அவ்வாறே சூழ்நிலை, ஒருவர் பக்குவம் என்பவற்றிற்கேற்ப தாந்திரீகம் ஒருவனை, ஒருத்தியை தன் உடல் எல்லையைத் தாண்டி தெய்வீக உணர்வை தருகின்றது.

******************************************************

கோவிற் கோபுரங்கள், சிற்பங்கள் உலகின் அபத்தங்களையும் சுட்டிக்காட்டலாம். அவை அறிவு போதிப்பனாவாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை.

வெல்டன்..வாழ்த்துகள். இன்னும் விரிவாக எடுத்து வாருங்கள்

Posted

காமத்தால் கடவுளைக் காணமுடியாது. எப்படிங்க கடவுள் நினைப்பெல்லாம் வரும்.

லிங்கம் என்ன நம்ம வீட்டு முருங்கை மரமா? :D

Posted

[size=1]

[size=3]உங்கள் கருத்துகளுக்கு நன்றி மல்லையூரான், ஈசன், நந்தன் , கறுப்பி மற்றும் எல்லாள மகாராஜா. கோவில் சிற்பங்களில் காணப்படும் காமச் சிற்பங்கள் தாந்திரீக வழிபாட்டு முறையுடன் தொடர்பு கொண்டதே என்று நினைக்கிறேன்.[/size][/size]

[size=1]

[size=3]தாந்திரீக[/size][size=3]ம் - it is a technique.[/size][/size]

[size=1]

[size=3]பாலுணர்வின் விளைவாகத்தான் பிரபஞ்ச உற்பத்தி என்று இறைவழி ஒப்புக் கொள்கிறது.[/size][size=3]உடலை அறிவதன் மூலம் பிரபஞ்சத்தை அறிய முடியும். அதனை வயப் படுத்துவதன் வாயிலாக பிரபஞ்சத்தையும் கட்டுப் படுத்த முடியும். இதுவே மனித உடல் தொடர்பான தாந்திரீகர்களின் கருத்தாகும். தாந்திரீக செயலாக்கம் என்பது ஆண் பெண் கலவியில் உடலுறுப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி முழுமையான இன்பத்தை அடையும் முறை.இரண்டு உடலும் மனமும் ஒன்றாகி இணைந்து உச்சநிலை இன்பத்தில் இருக்கும் போதுதான் இறைவனுடன் கலக்கலாம் என்கிறது, தந்திர தியான அனுபவம். [/size][size=3]ஆண் பெண் கலவ்யின்போது உருவாகும் சக்தியை முதுகுத் தண்டின் வழியாக ஆக்கினைக்குக்(புருவ மத்தி) [/size][size=3] கொண்டு வந்து அதி தீவிர சக்தியைப் பெற பல ஆசனங்கள் உண்டு. இதுதான் கோவில் சிற்பங்களில் காணப்படுகிறது என்று கருதுகிறேன். [/size][size=3]ஆண் பெண் இறைவன் ஆகிய இம்மூன்றும் இணைந்த நிலையை 'சமாதி' யோகம் என்கிறார்கள். சமாதி என்பது முதிர்ந்த இன்பநிலையைக் குறிக்கும். இந்த தாந்திரிக தியானத்தினால் ஆழ் நிலை மனம் இயங்க ஆரம்பிக்கும்.[/size][/size]

[size=1]

[size=3]தாந்திரீக தந்திரம் என்பது தாய் முதன்மையாகக் கொண்ட சமுதாய முறை. வேதியம் என்பது ஆண் முதன்மையாகக் கொண்ட சமுதாய முறை. தந்திரம் மதம் சார்ந்ததல்ல. சமுதாயம் என்னும் மக்கள் ஒழுக்கம். தன் + திரம் = தந்திரம். தன் = விருத்தி செய்தல். திரம் = இனம். தன்னின விருத்தியே தந்திரமாகும். இது உலகத் தோற்றத்தைக் குறிப்பது.[/size][/size]

[size=1]

[size=3]கீற்று வலைத் தளத்தில் வந்த தாந்திரீகம் பற்றிய சில கருத்துக்கள் ..[/size][/size][size=1]

[size=3]"வேதநெறி சாராத வேத மறுப்புச் சிந்தனைகள் அடங்கிய தத்துவங்களுள் இதுவும் ஒன்று.புத்த மதத்தில் கூட தாந்திரீகம் உண்டு .[/size][/size][size=1]

[size=3]வேத நெறியுடன் முரண்பட்டும், சாதி மேலாண்மையை எதிர்த்தும், வேத நெறிக்கு ஈடாக, தமக்கென ஒரு வாழ்க்கை நெறியை உருவாக்கும் முயற்சியில் தோன்றியதே தாந்திரீகம் என்றும் கூறுவர். வேத சடங்குகளில் இருந்து பிறழ்ந்தவர்களுக்கும், வேத நோன்புகளுக்கு அஞ்சுபவர்களுக்கும் உரியதுதான் தாந்திரீகமாகும் என்று ‘சாம்ப புராணம்’ கூறுகிறது. தாந்திரீக நெறியைப் பின்பற்றுபவர்களைச் சமூகப் புறக் கணிப்புச் செய்ய வேண்டுமென்றும், அவர்களோடு சமூக உறவு கொண்டவர்கள் அதற்காகப் பிராயச் சித்தச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்றும் ஸ்மிருதிகள் சில குறிப்பிடுகின்றன. (பட்டாச் சார்யா, 1982 : 3)[/size][/size]

[size=1]

[size=3]ஆன்மிகப் பேற்றினை அடையும் வழி முறைகளாக ஆசாரங்கள் கூறப்படுகின்றன. இவற்றை, ‘தட்சிணாச்சாரம்’, ‘வாமாச்சாரம்’ என இரு பெரும் பிரிவுகளாகப் பகுப்பர். இவ்வாமாச்சாரங் களின் இயல்புகள் குறித்தும், அவற்றை வகைப் படுத்துதல் குறித்தும் கருத்து வேறுபாடுகள் பல உண்டு. இவை அனைத்தையும் இங்கு விவாதிக் காமல் தாந்திரீகத்தில் முக்கிய இடம்பெறும் வாமாச்சாரம் குறித்து மட்டும் ஆராய்வோம்.[/size]

[size=3]வாமா + ஆச்சாரம் என்ற இரு சொற்களும் இணைந்து உருவானதே ‘வாமாச்சாரம்’ ஆகும். ‘வாமா’ என்பது பெண் அல்லது இணைவிழைச்சு வேட்கையைக் குறிக்கும். ‘ஆச்சாரம்’ என்பது செய்முறையைக் (இங்கு சடங்கியல் செய்முறை) குறிக்கும். எனவே, வாமாச்சாரம் என்பது பெண் மற்றும் இணை விழைச்சு தொடர்பான சடங்கியல் செய்முறைகளைக் குறிப்பதாகும். (சட்டோபாத்தி யாயா, 1978 : 278). இதன்படி குறிப்பிட்ட காலங்களில் வரை முறையற்ற பாலுறவில் தாந்திரீகர் ஈடுபடுவர்.[/size]

[size=3]வாமாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் பெண் தெய்வங்களை, பாரம்பரியமான முறையில் பகற் பொழுதில் வழிபடுவர். இரவில் பஞ்சமகரங்களின் துணையுடன் தாந்திரீக முறையில் வழிபடுவர். வேதச் சடங்கு நெறிகளை அவர்கள் கைவிடுவதோடு, திருமாலின் பெயரை உச்சரிக்கவோ, துளசி இலையைத் தீண்டவோ கூடாது. மேலும் பிராமணர்களைத் தவிர அனைத்துச் சாதியினருக்கும் வாமாச்சாரம் உரியதாகும்."[/size][/size]

Posted

[size=1][size=3]வாமாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் பெண் தெய்வங்களை, பாரம்பரியமான முறையில் பகற் பொழுதில் வழிபடுவர். இரவில் பஞ்சமகரங்களின் துணையுடன் தாந்திரீக முறையில் வழிபடுவர். வேதச் சடங்கு நெறிகளை அவர்கள் கைவிடுவதோடு, திருமாலின் பெயரை உச்சரிக்கவோ, துளசி இலையைத் தீண்டவோ கூடாது. மேலும் பிராமணர்களைத் தவிர அனைத்துச் சாதியினருக்கும் வாமாச்சாரம் உரியதாகும்."[/size][/size]

இதில் பல உண்மைகள் புதைந்துள்ளன..! :huh:

Spoiler

[size=1][size=3]திருமாலின் பெயரை உச்சரிக்கவோ, துளசி இலையைத் தீண்டவோ கூடாது. :lol:[/size][/size][size=1][size=3] [/size][/size]

Posted

தந்திர மார்கத்தினரை அவசரமாக இரவில் காமக் களியாட்டம் போட்டர்கள் என்று நினப்பது தவறு. இதில் சில பிற்கால சாதி துவேச குழப்பம் இணைந்தது. தந்திரமார்க்கம் மூன்று வழிகளை பின் பற்றுவதாக அறிந்தேன். அவர்களும் வேதங்களை பின் பற்றி வைதீகர்களாகத்தான் இருந்தார்கள். சாக்தம் அவர்களே அல்லது அவர்களில் ஒரு பிரிவினராக இருக்கலாம். இந்து சமயத்தில் காணப்படும் யந்திர வழிபாடு அவர்களுடையது. இந்த யந்திரங்களை வரைய அவர்கள் கேதார கணிதத்தை வகையாள ஆளப்பழகியிருந்தார்கள். சிந்து வெளியிலும் சில யந்திரங்கள் கணப்பட்டன. கிரேக்கர் கேதாரகணிதம் பயின்றதும், பைதாகிரஸ் தனது நிறுவலை கேள்விப்பட்டதும் இந்த யந்திர விற்பனர்களிடமிருந்தே. இந்த யந்திர விற்பனர்கள் இந்துவெளி திராவிடப்பிராமணர்களாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=1][size=3]உங்கள் கருத்துகளுக்கு நன்றி மல்லையூரான், ஈசன், நந்தன் , கறுப்பி மற்றும் எல்லாள மகாராஜா. கோவில் சிற்பங்களில் காணப்படும் காமச் சிற்பங்கள் தாந்திரீக வழிபாட்டு முறையுடன் தொடர்பு கொண்டதே என்று நினைக்கிறேன்.[/size][/size]

[size=1][size=3]தாந்திரீக[/size][size=3]ம் - it is a technique.[/size][/size]

[size=1][size=3]பாலுணர்வின் விளைவாகத்தான் பிரபஞ்ச உற்பத்தி என்று இறைவழி ஒப்புக் கொள்கிறது.[/size][size=3]உடலை அறிவதன் மூலம் பிரபஞ்சத்தை அறிய முடியும். அதனை வயப் படுத்துவதன் வாயிலாக பிரபஞ்சத்தையும் கட்டுப் படுத்த முடியும். இதுவே மனித உடல் தொடர்பான தாந்திரீகர்களின் கருத்தாகும். தாந்திரீக செயலாக்கம் என்பது ஆண் பெண் கலவியில் உடலுறுப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி முழுமையான இன்பத்தை அடையும் முறை.இரண்டு உடலும் மனமும் ஒன்றாகி இணைந்து உச்சநிலை இன்பத்தில் இருக்கும் போதுதான் இறைவனுடன் கலக்கலாம் என்கிறது, தந்திர தியான அனுபவம். [/size][size=3]ஆண் பெண் கலவ்யின்போது உருவாகும் சக்தியை முதுகுத் தண்டின் வழியாக ஆக்கினைக்குக்(புருவ மத்தி) [/size][size=3] கொண்டு வந்து அதி தீவிர சக்தியைப் பெற பல ஆசனங்கள் உண்டு. இதுதான் கோவில் சிற்பங்களில் காணப்படுகிறது என்று கருதுகிறேன். [/size][size=3]ஆண் பெண் இறைவன் ஆகிய இம்மூன்றும் இணைந்த நிலையை 'சமாதி' யோகம் என்கிறார்கள். சமாதி என்பது முதிர்ந்த இன்பநிலையைக் குறிக்கும். இந்த தாந்திரிக தியானத்தினால் ஆழ் நிலை மனம் இயங்க ஆரம்பிக்கும்.[/size][/size]

[size=1][size=3]தாந்திரீக தந்திரம் என்பது தாய் முதன்மையாகக் கொண்ட சமுதாய முறை. வேதியம் என்பது ஆண் முதன்மையாகக் கொண்ட சமுதாய முறை. தந்திரம் மதம் சார்ந்ததல்ல. சமுதாயம் என்னும் மக்கள் ஒழுக்கம். தன் + திரம் = தந்திரம். தன் = விருத்தி செய்தல். திரம் = இனம். தன்னின விருத்தியே தந்திரமாகும். இது உலகத் தோற்றத்தைக் குறிப்பது.[/size][/size]

[size=1][size=3]கீற்று வலைத் தளத்தில் வந்த தாந்திரீகம் பற்றிய சில கருத்துக்கள் ..[/size][/size]

[size=1][size=3]"வேதநெறி சாராத வேத மறுப்புச் சிந்தனைகள் அடங்கிய தத்துவங்களுள் இதுவும் ஒன்று.புத்த மதத்தில் கூட தாந்திரீகம் உண்டு .[/size][/size]

[size=1][size=3]வேத நெறியுடன் முரண்பட்டும், சாதி மேலாண்மையை எதிர்த்தும், வேத நெறிக்கு ஈடாக, தமக்கென ஒரு வாழ்க்கை நெறியை உருவாக்கும் முயற்சியில் தோன்றியதே தாந்திரீகம் என்றும் கூறுவர். வேத சடங்குகளில் இருந்து பிறழ்ந்தவர்களுக்கும், வேத நோன்புகளுக்கு அஞ்சுபவர்களுக்கும் உரியதுதான் தாந்திரீகமாகும் என்று ‘சாம்ப புராணம்’ கூறுகிறது. தாந்திரீக நெறியைப் பின்பற்றுபவர்களைச் சமூகப் புறக் கணிப்புச் செய்ய வேண்டுமென்றும், அவர்களோடு சமூக உறவு கொண்டவர்கள் அதற்காகப் பிராயச் சித்தச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்றும் ஸ்மிருதிகள் சில குறிப்பிடுகின்றன. (பட்டாச் சார்யா, 1982 : 3)[/size][/size]

[size=1][size=3]ஆன்மிகப் பேற்றினை அடையும் வழி முறைகளாக ஆசாரங்கள் கூறப்படுகின்றன. இவற்றை, ‘தட்சிணாச்சாரம்’, ‘வாமாச்சாரம்’ என இரு பெரும் பிரிவுகளாகப் பகுப்பர். இவ்வாமாச்சாரங் களின் இயல்புகள் குறித்தும், அவற்றை வகைப் படுத்துதல் குறித்தும் கருத்து வேறுபாடுகள் பல உண்டு. இவை அனைத்தையும் இங்கு விவாதிக் காமல் தாந்திரீகத்தில் முக்கிய இடம்பெறும் வாமாச்சாரம் குறித்து மட்டும் ஆராய்வோம்.[/size]

[size=3]வாமா + ஆச்சாரம் என்ற இரு சொற்களும் இணைந்து உருவானதே ‘வாமாச்சாரம்’ ஆகும். ‘வாமா’ என்பது பெண் அல்லது இணைவிழைச்சு வேட்கையைக் குறிக்கும். ‘ஆச்சாரம்’ என்பது செய்முறையைக் (இங்கு சடங்கியல் செய்முறை) குறிக்கும். எனவே, வாமாச்சாரம் என்பது பெண் மற்றும் இணை விழைச்சு தொடர்பான சடங்கியல் செய்முறைகளைக் குறிப்பதாகும். (சட்டோபாத்தி யாயா, 1978 : 278). இதன்படி குறிப்பிட்ட காலங்களில் வரை முறையற்ற பாலுறவில் தாந்திரீகர் ஈடுபடுவர்.[/size]

[size=3]வாமாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் பெண் தெய்வங்களை, பாரம்பரியமான முறையில் பகற் பொழுதில் வழிபடுவர். இரவில் பஞ்சமகரங்களின் துணையுடன் தாந்திரீக முறையில் வழிபடுவர். வேதச் சடங்கு நெறிகளை அவர்கள் கைவிடுவதோடு, திருமாலின் பெயரை உச்சரிக்கவோ, துளசி இலையைத் தீண்டவோ கூடாது. மேலும் பிராமணர்களைத் தவிர அனைத்துச் சாதியினருக்கும் வாமாச்சாரம் உரியதாகும்."[/size][/size]

நல்ல ஒரு விளக்கம், ஆதி!

ஆனால், தாந்திரீகர் மிகவும் குறைவான விகிதாசாரத்திலேயே , இருந்தார்கள். மற்றும் அவர்களது, அணுகுமுறைகள், வெளிப்படையாக இந்து மதத்தில் பரவுமளவுக்கு அவர்களுக்கு ஆதரவு இருக்கவில்லை. நிச்சயமாக, கோபுரங்களில் ஊடுருவுமளவுக்கு, அவர்களுக்கு அதிகாரம் இருந்திருக்காது என எண்ணுகின்றேன்! வேறு காரணங்கள் இருக்கக் கூடும்.

புணர்ச்சியில் இருக்கும் நிலையில் உள்ள சிலைகள், சிந்து, ஹரப்பா ஆகிய இடங்களில் கூட, கண்டெடுக்கப் பட்டுள்ளன.

வேறு ஒரு கோணத்தில், இதை ஆராந்து பார்த்தால், என்ன?

Posted

கடவுளை இளம் வயதில் தனந்தனியாகவும் காணலாம் திருணம் ஆனால் மனைவியுடன் சேர்தும் காணலாம்.

ஆனால் மனைவுடன் சேர்து கடவுளை காண விருபுவர்கள் நிதானமகாக குளித்து சுத்தமாக சில யாகங்களை தலை கீழாக நின்று செய்து தான் இமயமலைக்கு செல்ல வேண்டும் இல்லை எனில் அவசரப்பட்டு கனவன் மட்டும் கடவுளைக் கண்டால் மனைவிக்கு சாத்தான் தான் தெரிவார் :D:icon_idea:

Posted

[size=4]காமத்தால் சொர்க்கத்தை அடையலாம் ........ சொர்கத்தில் தானே கடவுளும் இருப்பார் ???????????[/size]

http://www.messagefrommasters.com/Ebooks/oshorajneesh.htm

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]காமத்தால் சொர்க்கத்தை அடையலாம் ........ சொர்கத்தில் தானே கடவுளும் இருப்பார் ???????????[/size]

http://www.messagefr...shorajneesh.htm

பிறகு, கடவுளும் என் காமத்தினால் அலைகிறார்? :o

Posted

[size=2]நல்ல ஒரு விளக்கம், ஆதி![/size]

[size=2]ஆனால், தாந்திரீகர் மிகவும் குறைவான விகிதாசாரத்திலேயே , இருந்தார்கள். மற்றும் அவர்களது, அணுகுமுறைகள், வெளிப்படையாக இந்து மதத்தில் பரவுமளவுக்கு அவர்களுக்கு ஆதரவு இருக்கவில்லை. நிச்சயமாக, கோபுரங்களில் ஊடுருவுமளவுக்கு, அவர்களுக்கு அதிகாரம் இருந்திருக்காது என எண்ணுகின்றேன்! வேறு காரணங்கள் இருக்கக் கூடும்.

புணர்ச்சியில் இருக்கும் நிலையில் உள்ள சிலைகள், சிந்து, ஹரப்பா ஆகிய இடங்களில் கூட, கண்டெடுக்கப் பட்டுள்ளன.

வேறு ஒரு கோணத்தில், இதை ஆராந்து பார்த்தால், என்ன?[/size]

[size=1][size=3]நன்றி புங்கையூரன். எல்லா விதத்திலும் நோக்குவதே என் எண்ணமும் .[/size][/size]

[size=1][size=3]பண்டைய வேளாண்மை சமூகம் தாய்வழிச் சமூகமாகும்.இங்கு பெண் என்பவள் மிக உயர்வாக கருதப்பட்டாள். உயிர்களை உருவாக்கவும் பயிர்களை உருவாக்கவும் அவளாலே முடியும் எனக் கருதப்பட்டது. அவர்கள் காமத்தை செழிப்பின் குறியீடாக, இனப்பெருக்கத்தின் குறியீடாக கருதினர். எப்படி உடல் உறவின் மூலம் உயிர்களை உருவாக்க முடியுமோ அதே நிகழ்வின் மூலம் பயிர்களையும் உருவாக்க முடியும் எனக் கருதினர். சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிலையில் கால்களை அகட்டி விரித்த நிலையில் தலைகீழாக நிற்கும் பெண்ணின் கருப்பையில் இருந்து செடி கிளம்புவது போல் வரையப்பட்டிருக்கும் என்று கேள்விப்பட்டேன். இது பெண்களாலே செடிகளையும் கொடிகளையும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஆழமாக இருந்ததையே உணர்த்தும்.இன்னும் நாம கிராமங்களில் கருத்தரித்த பெண் கைகளால் விதைகளை எடுத்துக் கொடுத்தால் நன்றாக விளையும் என்ற நம்பிக்கை உண்டு. சிந்து வெளி நாகரீகமும் வேளாண்மை சமூகத்தை சார்ந்ததே. [/size][/size]

[size=1][size=3]கோயில்களில் உடலுறவுச்சிலைகளோடு வாழ்க்கையின் பலவகையும் காட்டும் சிலைகள் உள்ளன,இந்தச்சிலைகள் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.வேளான் சமூக மனிதன் காமத்தை அறிவின் வழியாகக் கண்டான். அந்தத் தந்திர மரபு பாலியல் சிற்பங்களை உருவாக்கியது. காமத்தை மனிதனின் இயற்கையான ஆற்றலாக எண்ணினான். அந்த ஆற்றலை அறிவதும் அறிவதன் மூலம் கடந்துசெல்வதுமே மானுட உண்மையின் உச்சநிலையை அறிய உதவும் வழி என அவன் நினைத்தான். நாட்டை ஆளும் வேந்தனும் விளைச்சலை பெருக்கவும் இனத்தை பெருக்கவும் பண்டைய நம்பிக்கையை சார்ந்தே கோவிலில் சிலைகளை அமைத்தான். [/size][/size]

[size=3]இன்னும் பேசலாம்......[/size]

Posted

[size=3]ஒரு சமூகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும் அறிய இரண்டு வழி முறைகள் வரலாற்று அறிஞர்களால் கையாளப்படுகிறது. ஒன்று தொல்பொருட்கள்(கல்வெட்டுகள்,மனித மிச்சங்கள் ) மற்றொன்று இலக்கியம். நம்மிடம் இப்பொழுது இருக்கிற மிகப் பழமையான தொல்பொருட்கள் சிந்து சமவெளியில் இருந்து கிடைத்தவையே.தந்திர வழிபாட்டு முறையின் வேர்களை அறிய வேண்டுமெனில் நாம் சிந்து சமவெளியில் இருந்து தொடங்க வேண்டும்.

இங்கு நான் சொல்ல வருவது மூன்று விடயங்கள்

1. தந்திர வழிபாட்டு முறையின் தோற்றம்

2. தந்திர வழிபாட்டு முறையின் நோக்கம்

3. தந்திர வழிபாட்டு முறையில் ஆரியத்தின் தாக்கம்

1. ஏறத்தாழ ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கருதப்படும் சிந்து சமவெளி மக்கள் நாகரீகத்தின் உச்சியில் இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அங்கு கிடைத்த பொருள்களில் இருந்து ஆராய்ந்தவரையில் அவர்கள் அடுத்தவர்களுடன் போரிட்டதாகவோ, போரைப் போற்றியதாகவோ, ஆயுதம் ஏதும் செய்ததாகவோ ஒரு குறிப்பும் இல்லை. மாறாக அவர்கள் கைதேர்ந்த நகரத்தை கட்டியமைத்ததுடன், வீட்டில் குளியல் தொட்டிகளையும் அமைத்துள்ளனர். மேலை நாடுகளின் வரலாற்றை எடுத்தோமானால் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்றே தெரியவருகிறது. சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் இரண்டு முக்கியமானவை . ஒன்று சிவன் தன ஆண் குறி தெரியுமாறு அமர்ந்திருக்க சுற்றி மிருகங்கள் நிற்பதுபோல் வரையப்பட்டிருக்கும் சிற்பம். இரண்டாவது யோனி தெரியுமாறு அமர்ந்திருக்கும் ஒரு பெண் சிற்பம். இதன் மூலம் யோனி வழிபாடும், லிங்க வழிபாடும் இருந்ததென வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. இதை நிறுவ பின்னால் இன்னும் கொஞ்சம் விளக்கமாக காணலாம் .[/size]

[size=3]இந்த தந்திர வழிபாட்டு முறையின் நோக்கம் என்ன என்பதைக் காணுமுன் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் உலகில் வாழ்ந்த சில பழங்குடியினரின் வித்தியாசமான பழக்க வழக்கங்களை இங்கு காணலாம்(உபயம் :கூகுள்) [/size]

  • [size=3]பழங்குடிப் பெண்கள் கடும் வெயிலில் மடியில் குழந்தையைக் கட்டிக்கொண்டு, நிலத்தில் விதை விதைத்தார்கள். பெண்கள் விதை விதைத்தால், தானியம் மும்மடங்கு விளையும், பெண்களுக்கே உருவாக்க தெரியும் என்று நம்பினார்கள்.[/size]
  • [size=3]மத்திய ஆப்பிரிக்காவில் பழங்குடி மக்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. தாய் தரையில் மல்லாந்து படுப்பாள். அவள் கால்களுக்கிடையில் வாழைப்பூவை வைப்பார்கள். தந்தை தன் குறியால் அப்பூவை தட்டிவிடுவான். பிறகு நாடு முழுவதும் உள்ளவர்கள் தோட்டங்களுக்குச் சென்று இதையே செய்வார்கள். வாழை அபரிமிதமாக கனிகளை ஈன வேண்டும் என்பதே நோக்கமாகும்.[/size]
  • [size=3]ஆஸ்திரேலிய பவோரியன் இனத்தவர், குழந்தை பெற்ற பெண்ணுக்கு ஒரு மரத்தின் முதல்கனியைத் தந்தால் அடுத்த வருடம் அம்மரம் அதிகமான பலன்களைத் தரும் என்று நம்பினார்கள். மலடியானவள் தன் கணவனின் நிலத்தையும் சத்தற்றதாக்கி மரங்கள் பலன் தருவதையும் தடுத்துவிடுவாள் என்று நம்பினார்கள்.[/size]
  • [size=3]கோரக்பூர் பழங்குடி மக்கள் பஞ்சத்தின் போது பெண்கள் இரவில் நிர்வாணமாக வயலுக்குச் சென்று உழுதார்கள்.பஞ்சம் வந்தபோது சில பழங்குடி பெண்கள் நிர்வாணமாக மழை தேவதை முன் நடனம் ஆடினார்கள்.கர்ப்பிணிகள் வெறும் காலும் விரிந்த கூந்தலுமாய் பாவாடைகளை இடுப்புக்கு மேல் தூக்கிக் கொண்டு வயலில் நடக்க வேண்டும்.பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சிகளைக் கொல்ல இது ஒரு நிவாரணம் என்று நம்பினார்கள் [/size]
  • [size=3]கருத்தரித்த பெண் விதை போட்டால் நல்ல மகசூல் கிடைக்கும் என நிகோபார் தீவினர் நம்பினார்கள். சில அமெரிக்க பூர்வ குடிகள், பூமித்தாயிடம் இருந்து குழந்தை நேரடியாக பெண்ணின் கருப்பைக்கு வருவதாக இப்பொழுதும் நம்புகிறார்கள்.[/size]

[size=3]இதுவே வேளாண்மை சடங்கின் அடிப்படை நம்பிக்கை. மனித வளமும் இயற்கை வளமும் ஒரே இயற்கை விதிக்கு உட்பட்டது. மனித பெருக்கமும் விவசாய பெருக்கமும் உறவுள்ளவை.

வேலைப்பளு காரணமாக நிறைய எழுத முடியவில்லை..மீண்டும் பேசலாம் [/size]

  • 1 month later...
Posted
ரொம்ப நாட்களாக இந்த திரி முடியாமல் இருக்கிறது.   இதை ரொம்ப விவரித்து எழுதினால் இந்த களத்திற்கு ஒவ்வாததாக இருக்க கூடும். மேலும் இந்த தந்திர வழிபாட்டின் எல்லாக் கூறுகளையும் அறியுமளவுக்கு நான் பண்டிதனும் கிடையாது. என் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை, அவர்களது சமூகச் சூழல், சிந்தனை , பண்பாடு, கலை, இலக்கியம் ஆகியவற்றின் ஊடாக என் வேர்களைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். அந்தத் தேடலில் கிடைத்தவற்றை உங்களுடன் பகிர விழைகிறேன். 
 
ஒவ்வொரு மனித மனத்திலும் எப்பொழுதும் இரண்டு வகையான எண்னங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒன்று இறந்த கால நினைவு. என்ன நடந்தது.. என்ன நடக்காமல் இருந்திருக்கலாம், இதை அவன் ஏன்  சொன்னான்? இதை அவன் ஏன் செய்தான்? இந்த மாதிரி எண்ணங்கள். இரண்டாவது எதிர்கால கற்பனைகள். என்ன நடக்கும்? என்ன கிடைக்கும்?  இது என்னிடத்திலிருந்து போய்விடுமோ? இந்த மாதிரியான கவலைகள், எதிர்பார்ப்புகள். நாம் இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் எண்ணி எண்ணியே நிகழ் காலத்தை தவற விடுகிறோம்.   அப்ப நிகழ் காலத்தில் வாழ்வது எப்படி? ?
உள்ளுணர்வு எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும்.
உங்களது. உள்ளுணர்வை எப்பொழுதும் எப்படி விழிப்பாக வைத்துக் கொள்வது ? 
தந்திர முறையின் மூலம் அந்த விழிப்புணர்வை எட்டலாம். 
 
யோகா உடலையும் மனதையும்  தனித்தனியே பிரிக்க முற்படுவது. ஆனால் தந்திர முறை மனதையும் உடலையும்  ஒருங்கிணைப்பதாகும். தந்திர முறையில் உடம்பு,மனது, உணர்வு மூன்றையும் கட்டுப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் சக்தியை ஆன்மீக பரவச நிலையை அடைய பயன்படுத்துவதாகும்.  பொதுவாக நாம் நமது பாலியல் உறுப்புகளை அந்தரங்க பகுதி என்று அழைக்கிறோம். அதை நமது மற்ற உறுப்புகள் மாதிரி அல்லாமல் மறைத்தே வைக்கிறோம் மிகச் சில நேரங்களில் மட்டுமே வெளிக்கொணர்கிறோம் அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு. 
 
காமம் பரவசத்தின் முதல் படி. நான் என்ற தன் முனைப்புகள் அறுந்து போகிற அழகிய தருணம் அது.  காமம் என்ற அந்த விடயத்தை மிக மரியாதையோடு அணுகவேண்டும். அதை தொழுதல் வேண்டும். கடவுளுக்கு இணையான மரியாதை அதற்கும் தரப்பட வேண்டும். கோயிலுக்குள் நுழையும்போது உண்டாகும் உணர்வு பள்ளியறைக்குள் செல்லும்போதும் இருக்க வேண்டும். இதை உங்களால் செய்ய இயன்றால் காமத்தை கடந்து கடவுளை அடைய முடியும். அதற்கான முதல் நிலையே பாலியல் உறுப்புகளை வழிபடுவதாகும் (லிங்க வழிபாடு, யோனி வழிபாடு). இங்கு பெண் என்பவள் தெய்வ சக்தியாகப்(divine energy) போற்றப்படுகிறாள். அவளே பூஜைப் பொருள். அவர்கள் மதிக்கவும் துதிக்கவும் படுகிறாள். அவள் உறுப்புகள் தெய்வ அங்கமாக பார்க்கப்படுகிறது. காமமும் காம உணர்வும் புனிதமாகக் கருதப்படுகிறது(scared act).  
 
பண்டைய யோனி வழிபாட்டு படங்கள்.
yoni_puja.jpg
 
yoni_puja1.jpg
 
முதலில்  உங்கள் துணையுடன் மனதளவில் ஒன்ற வேண்டும். (dissolving ego) அதற்க்கு தடையாக இருப்பது உங்களுக்குள் உள்ள அகங்காரம் மற்றும் பாலியல் உறுப்புகளைப் பற்றிய எண்ணம் / வெட்கம். இதற்க்கு இரண்டு வழிமுறைகள் சொல்லப்படுகிறது.(eye gazing & genitals gazing) உங்கள் துணையின் கண்களை மற்றும் பாலுறுப்புகளை  உற்று பார்த்துக் கொண்டு இருப்பது. இதில் இரண்டு வித நன்மைகள். ஒன்று இருவருக்கும் ஒரு நெருங்கிய உறவு ஏற்படும்(intimacy). உற்று பார்த்துக் கொண்டு இருப்பதால் இருவருக்கும் இடையே ஒரு சக்தி  பாய்ந்து கொண்டிருக்கும்(exchange of energies). 
 
காணாத கடவுளை நினைத்து தவமிருப்பதற்கு பதிலாக நம் கண் முன்னே இருக்கும் பிடித்தமான உறுப்புகளை பார்க்கும்பொழுது நமது கவனச் சிதறல் குறைக்கப் படுகிறது. அந்தக் கணங்களில் நம் உள்ளுணர்வு விழிப்பாகவும் , கவனம் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது . இதுதான் தந்திர முறையின் தொடக்கம். 
 

 

இதை இன்று முடித்து விடலாம் என்றிருந்தேன். ஆனால் இது ஒரு கடல் மாதிரி. அறிந்து புரிந்து எழுதுவதற்கு நிறைய காலம் வேண்டி இருக்கிறது.
 
இன்னும் பேசலாம்.....
 
Posted

ஒரு சமூகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும் அறிய இரண்டு வழி முறைகள் வரலாற்று அறிஞர்களால் கையாளப்படுகிறது. ஒன்று தொல்பொருட்கள்(கல்வெட்டுகள்,மனித மிச்சங்கள் ) மற்றொன்று இலக்கியம். நம்மிடம் இப்பொழுது இருக்கிற மிகப் பழமையான தொல்பொருட்கள் சிந்து சமவெளியில் இருந்து கிடைத்தவையே.தந்திர வழிபாட்டு முறையின் வேர்களை அறிய வேண்டுமெனில் நாம் சிந்து சமவெளியில் இருந்து தொடங்க வேண்டும்.

இங்கு நான் சொல்ல வருவது மூன்று விடயங்கள்

1. தந்திர வழிபாட்டு முறையின் தோற்றம்

2. தந்திர வழிபாட்டு முறையின் நோக்கம்

3. தந்திர வழிபாட்டு முறையில் ஆரியத்தின் தாக்கம்

1. ஏறத்தாழ ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கருதப்படும் சிந்து சமவெளி மக்கள் நாகரீகத்தின் உச்சியில் இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அங்கு கிடைத்த பொருள்களில் இருந்து ஆராய்ந்தவரையில் அவர்கள் அடுத்தவர்களுடன் போரிட்டதாகவோ, போரைப் போற்றியதாகவோ, ஆயுதம் ஏதும் செய்ததாகவோ ஒரு குறிப்பும் இல்லை. மாறாக அவர்கள் கைதேர்ந்த நகரத்தை கட்டியமைத்ததுடன், வீட்டில் குளியல் தொட்டிகளையும் அமைத்துள்ளனர். மேலை நாடுகளின் வரலாற்றை எடுத்தோமானால் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்றே தெரியவருகிறது. சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் இரண்டு முக்கியமானவை . ஒன்று சிவன் தன ஆண் குறி தெரியுமாறு அமர்ந்திருக்க சுற்றி மிருகங்கள் நிற்பதுபோல் வரையப்பட்டிருக்கும் சிற்பம். இரண்டாவது யோனி தெரியுமாறு அமர்ந்திருக்கும் ஒரு பெண் சிற்பம். இதன் மூலம் யோனி வழிபாடும், லிங்க வழிபாடும் இருந்ததென வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. இதை நிறுவ பின்னால் இன்னும் கொஞ்சம் விளக்கமாக காணலாம் .

இந்த தந்திர வழிபாட்டு முறையின் நோக்கம் என்ன என்பதைக் காணுமுன் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் உலகில் வாழ்ந்த சில பழங்குடியினரின் வித்தியாசமான பழக்க வழக்கங்களை இங்கு காணலாம்(உபயம் :கூகுள்)

  • பழங்குடிப் பெண்கள் கடும் வெயிலில் மடியில் குழந்தையைக் கட்டிக்கொண்டு, நிலத்தில் விதை விதைத்தார்கள். பெண்கள் விதை விதைத்தால், தானியம் மும்மடங்கு விளையும், பெண்களுக்கே உருவாக்க தெரியும் என்று நம்பினார்கள்.
  • மத்திய ஆப்பிரிக்காவில் பழங்குடி மக்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. தாய் தரையில் மல்லாந்து படுப்பாள். அவள் கால்களுக்கிடையில் வாழைப்பூவை வைப்பார்கள். தந்தை தன் குறியால் அப்பூவை தட்டிவிடுவான். பிறகு நாடு முழுவதும் உள்ளவர்கள் தோட்டங்களுக்குச் சென்று இதையே செய்வார்கள். வாழை அபரிமிதமாக கனிகளை ஈன வேண்டும் என்பதே நோக்கமாகும்.
  • ஆஸ்திரேலிய பவோரியன் இனத்தவர், குழந்தை பெற்ற பெண்ணுக்கு ஒரு மரத்தின் முதல்கனியைத் தந்தால் அடுத்த வருடம் அம்மரம் அதிகமான பலன்களைத் தரும் என்று நம்பினார்கள். மலடியானவள் தன் கணவனின் நிலத்தையும் சத்தற்றதாக்கி மரங்கள் பலன் தருவதையும் தடுத்துவிடுவாள் என்று நம்பினார்கள்.
  • கோரக்பூர் பழங்குடி மக்கள் பஞ்சத்தின் போது பெண்கள் இரவில் நிர்வாணமாக வயலுக்குச் சென்று உழுதார்கள்.பஞ்சம் வந்தபோது சில பழங்குடி பெண்கள் நிர்வாணமாக மழை தேவதை முன் நடனம் ஆடினார்கள்.கர்ப்பிணிகள் வெறும் காலும் விரிந்த கூந்தலுமாய் பாவாடைகளை இடுப்புக்கு மேல் தூக்கிக் கொண்டு வயலில் நடக்க வேண்டும்.பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சிகளைக் கொல்ல இது ஒரு நிவாரணம் என்று நம்பினார்கள்
  • கருத்தரித்த பெண் விதை போட்டால் நல்ல மகசூல் கிடைக்கும் என நிகோபார் தீவினர் நம்பினார்கள். சில அமெரிக்க பூர்வ குடிகள், பூமித்தாயிடம் இருந்து குழந்தை நேரடியாக பெண்ணின் கருப்பைக்கு வருவதாக இப்பொழுதும் நம்புகிறார்கள்.
இதுவே வேளாண்மை சடங்கின் அடிப்படை நம்பிக்கை. மனித வளமும் இயற்கை வளமும் ஒரே இயற்கை விதிக்கு உட்பட்டது. மனித பெருக்கமும் விவசாய பெருக்கமும் உறவுள்ளவை.

வேலைப்பளு காரணமாக நிறைய எழுத முடியவில்லை..மீண்டும் பேசலாம்

 

உங்கள் பதிவுகளுக்கு முதல் வாழ்த்துக்கள். தொடர்ந்து விரிவாக எழுதுங்கள்.

 

மேலே உள்ள முன்னோர்களினன் செயற்பாடுகளைப் பார்க்கும் போது காடுகளில் உணவுகளுக்ககாக அலைந்து திரிந்ததன் பின்னரான காலத்தில் தாம் எ ப்படி குழந்தைகளை ஊருவாக்குகின்றனரோ அதுசார்ந்த சிந்தனையின் விழைவுகள் தன்னிலிருந்த புறநிலையில் ஒன்றை உருவாக்குவதுடன் இணைக்கின்றது. கடவுள் உட்பட எதுவும் தன்னிலிருந்தே கருக்கொள்கின்றது. காமம் ஒரு செயல் சிந்தனை ஒரு சக்தி. இதன் விழைவுகள் மிக விரிவானது.

 

காமம் அழகானது. அதற்குள் இல்லாத பொல்லாததெல்லாம் நுழைந்து எமது சமுதாயம் ஒரு கையில் பூதக்கண்ணாடியும் மறுகையில் பிரம்புடனும் அதை வாக்கிரமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றமை தூரதிஸ்டவசமானது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒன்று மட்டும் நிச்சயம்.. காமத்தினூடாக கடவுளைக் காணுறீங்களோ இல்லையோ.. சனத்தொகையை பெருக்கிடுவீங்கள் என்பது..! :lol::D



இருந்தாலும் காமம் பற்றிய தவறான பார்வைகளை அகற்றக் கூடிய நல்ல பதிவாகவே இது வரை இருக்குது. இன்னும் இருக்கும் என்று நம்புகிறோம். :icon_idea: .

Posted

இந்து சமயத்தில் நான்கு வாழ்க்கைப்படிகள் இறவனை அடைய வேண்டுவன. பிரமச்சரியம், கிருகப்பிரஸ்த்தம், வனப்பிரஸ்த்தம், சன்நியாசம். இவற்றை வாழ்நாள் பூராக கடைப்பிடித்தொழுகும் படி இந்து சமயம் சொல்கிறது. இதில் கிருகப்பிரஸ்த்தம் மணவாழ்க்கை. பிரமச்சரியத்தில் கடவுளையும், வாழ்க்கையும் பற்றி சீடன் தெரிந்து கொள்கிறான். கிருக்கப்பிரஸ்த்தில் வாழ்ந்து தனது அஸ்வரியமும், ஆடம்பரமும், உறவுகளும் தனது பாதையை தடுப்பதாக உணர்ந்து காட்டுக்கு சென்று(பலதடவை மனைவியுடன் மட்டும்) தனது வாழ்கை முனியில் சிறுக்க வைத்து கடவுள் சிந்தனையை கூட்டிக்கொள்கிறான். அதில் மேலும் உண்மைகளைக் கண்டு காட்டில் தான் உணவு தேடி வாழும் வாழ்க்கையை கூட மறுத்து மனைவியையும் விட்டுவிட்டு தன்னந்தனியே சந்நியாசியாகி போய்விடுகிறான.

 

சமணம், புத்தம் போன்றவை பலாத்கார சந்நியாசத்தை முதிர்ச்சி இல்லாத ஆன்மாக்களுக்கு திணிக்கின்றன. "ஆன்மாவின் முதிர்ச்சி நிலையை உமாபதி சிவாச்சரியார் பல குறள்களில் எடுத்து விளக்கியிருக்கிறார். அதாவது ஞானம் என்பது எல்லோருக்கும் உரியது அல்ல. ஆனால் வாழ்க்கை என்பது எல்லோருக்கும் உடையது. இதனால்த்தான் வாழ்க்கையை நாலு நிலையில் வாழும் படி இந்து சமயம் கூறுகிறது. இதன் கருத்து அரசாங்க உத்தியோகம் தேடிகிறீர்களாயின், சிவில் சார்விஸை பாஸ்பண்ணுங்கள் எங்கிறது இந்து சமயம்.

 

தந்திரம்  இந்த நான்கு படிகளையும் சுருக்கி, ஒரு சிறு குளிகை ஆக்கி அதை ஒரு தடவையில் விழுங்க வைக்கிறது. அதாவது பிரம்மசாரியத்தில் படிக்க வேண்டியவற்றை கடந்து சிற்றின்பத்தை நேரே அனுபவித்து, அதிலிருந்து ஒரே தொங்கு பாச்சலில் சந்நியாசம் போக சொல்கிறது தந்திரம். தந்திரசாதனையை கடைப்படிக்கும் வாழ்நாட்கள் முழுவதுமே வனப்பிரஸ்தம் போன்றதொரு வாழ்க்கையே. அதில் சம்பிரதாயங்கள் கலந்த கிரகபிரஸ்த்தம் கிடையாது.

 

ஆனால் இதில் எங்குமே காமம் இல்லை. காமம் என்பதின் பொருள் ஆசை. அதற்கும் கிருகபிரஸ்த்தில் இருக்கும் சிற்றின்ப மணவாழ்க்கையும் தொடர்பு இல்லை. கிருபிரஸ்த்தை அடைய முன்னரோ, பின்னரோ யாரும் காமத்தில் உழலமுடியும். காமத்தில் இருந்து விடுபடவேண்டியது தந்திரத்தின் சாதனைகளுக்குமே முதல் படி. இந்த திரியில் சிற்றின்ப வாழ்க்கையை காமம் என்று பிழையாக குறிப்பிடப்படுகிறது.  காமம் மனத்தின் ஆசையில் எழுவது. சிற்றினபம் உடம்பின் தேவையில் எழுவது. காமம் இருவினைகளை உயிருக்கு சேர்க்கக் கூடியது. ஆனால் சிற்றின்பம் உடலோடு அழிந்து போவது. அது ஒரு நினைவில்லாத செயல்.

 

ஆதித இளம்பிறையன் பல இடங்களில் சம்பிரதாயங்களை தந்திரத்தின் ஆதாரமாக காட்டுகிறார். சமணம், புத்தம், இந்து சமயத்தில், ஞானத்திற்கும் சம்பிரதாங்களுக்கும் தொடர்பு இல்லை. ஆபிரிக்கர்கள் நம்பிக்கையின் பால் ஒரு சில சம்பிரதாயங்களை செய்கிறார்கள். தந்திரம் நம்பிக்கையின் பாற்பட்டதல்ல. அது கிழக்கு நாடுகளின் தத்துவங்களில் ஒரு பகுதி.  ஆதித்த இளம்பிறையனின் ஆராச்சி நம்பிக்கைகளை, தனியவாகவும் மதத்தத்துவங்களை தனியாகவும் இனம் கான வேண்டும்.

இல்லையேல் சங்கரங்கரர் சொன்னது போல மாலைபொழுதில் மலர்மாலையை காண்பவன் ஒருவன் அதை பாம்பு என மயங்கினான் என்றதற்கு ஒப்புவுவமை ஆகிவிடும்.( சங்கரர் இதை மாயையை விளங்க வைக்க உதாரணமாக ஒரு உதாரணமாக பாவித்தார்)  

 

என்வே தந்திரம் காமத்தை போதிப்பத்தாக விளங்குவது தவறு.  யோனி என்பது சில இடங்களில் இலட்சுமியை குறிக்கிறது. அவர்கள் அதை தாய் தெய்வத்தை சுட்டும் பெயர்க்கவும் பயன் படுத்துகிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
    • இசை அரசனும்..... நடிப்பு அரசனும்....  
    • திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.