Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைஞானி இளையராஜா கனடா வந்தடைந்தார்

Featured Replies

உடலை விக்கிற போராளிக்கு எல்லாம் எதுக்கு உதவி மற்றைய போராளிகள் கஷ்ட்டப்பட்டு வேலை செய்யும் போது இவாக்கு ஏன் இந்த தொழில்?

அப்ப கட்டுரை வாசிக்கவில்லையோ?

  • Replies 189
  • Views 15.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் அவா சொன்னாலும் இந்த தொழில நியாயபடுத்த கூடா

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான் அண்ணா இழுத்தது. :icon_mrgreen: மறந்து போயிருந்தால் மீண்டும் பாருங்கள்.. :)

உங்களைக் கேக்கவில்லை, அகூதா அண்ணாவைக் கேக்கும் பொது தான் நீங்க வந்து தலையைக் குடுத்தனீங்கள். வெட்டுக் குத்துகளுக்க எழுதேக்க ரெண்டும் ஒண்டா வந்து சேர்ந்திருக்கு. அவர் தான் கன பேருக்கு கடிதம், தந்தி, மனு எல்லாம் குடுக்கிறவர். அவர் தான் கொலடிச்சு கேள்வி கேக்கிறதுக்கு தில்லான ஆள்.

அங்கே ஒரு முன்னால் போராளி பிள்ளைகளின் உணவுக்காக உடலை விற்ற்கிறார் அவரிடம் இப்ப தனி நாடா இல்லை இந்த பாலியைல் தொழில் இருந்து விடுதலையா என்று கேட்ட்ப்பாருங்கள்.

தமிழீழம் இருந்திருந்தால் அவர்கள் பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டிருக்க மாட்டார்களே...

அவர் பிள்ளைகளின் உணவுக்காக உடலை விக்க முன்னர் எத்தனை இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.... அந்த நிலையிலிருந்து உங்களால் அவரை மீட்க முடிந்ததா? இன்னும் எத்தனைபேர் விடுதலை செய்யப்படாமல் உள்ளார்கள்... தனிநாடு இல்லாவிட்டால் அவர்கள் கதி என்ன? உங்களால் எப்படி அப்படியானவர்களை மீட்க முடியும்?

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

நடத்துபவர்கள் பற்றி ஒரு சந்தேகமும் வேண்டாம். இவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் ஏன் இந்திய உளவுப்படைக்கும் ஒரு தொடர்பும் இல்லை

புலிகளையோ மாவீரர்களையோ வெளியாக்களால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆதாரம் கேட்ட நீங்களே ஆதாரமில்லாமல் பதிலளிக்கிறீர்கள். :D

அடுத்த சந்ததி புலிகளில் மாவீரரில் பற்று வைப்பதை தடுக்க வெளியாட்களால் முடியும். புலிகள், மாவீரர் மேலுள்ள பற்றை விட களியாட்டங்களில் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டுபண்ணுவதன் மூலம் அவர்கள் உளவியல் தந்திரோபாயத்தை கையாள முடியும்.

Edited by துளசி

தமிழீழம் இருந்திருந்தால் அவர்கள் பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டிருக்க மாட்டார்களே...

அவர் பிள்ளைகளின் உணவுக்காக உடலை விக்க முன்னர் எத்தனை இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.... அந்த நிலையிலிருந்து உங்களால் அவரை மீட்க முடிந்ததா? இன்னும் எத்தனைபேர் விடுதலை செய்யப்படாமல் உள்ளார்கள்... தனிநாடு இல்லாவிட்டால் அவர்கள் கதி என்ன? உங்களால் எப்படி அப்படியானவர்களை மீட்க முடியும்?

[size=1]நியானி: தணிக்கை[/size]

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

ஆதாரம் கேட்ட நீங்களே ஆதாரமில்லாமல் பதிலளிக்கிறீர்கள். :D

ஆனால் அடுத்த சந்ததி புலிகளில் மாவீரரில் பற்று வைப்பதை தடுக்க வெளியாட்களால் முடியும். புலிகள், மாவீரர் மேலுள்ள பற்றை விட களியாட்டங்களில் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டுபண்ணுவதன் மூலம் அவர்கள் உளவியல் தந்திரோபாயத்தை கையாள முடியும்.

மேல உள்ளவை நடைபெற்ற சம்பவங்கள்.

எதை ஓரு வாரமாக இருந்த மாவீரர் நாளை ஒரு மாசமா ஆக்கி வரலாற்றில் தவறாக வழிநடத்துவதையா?

மேல உள்ளவை நடைபெற்ற சம்பவங்கள்.

எதை ஓரு வாரமாக இருந்த மாவீரர் நாளை ஒரு மாசமா ஆக்கி வரலாற்றில் தவறாக வழிநடத்துவதையா?

ஒரு வாரமாக நடைபெற்ற மாவீரர் வாரத்தை ஒருமாதமாக நீட்டிப்பதனால் வரலாறு ஒன்றும் மாறி விடாது.

நான் ஒரு மாதம் இல்லை எம்மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் வரை இப்படியான களியாட்ட நிகழ்வுகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தான் கூறுகிறேன். அது எந்த மாதமாக இருந்தாலும்...

அத்துடன் களியாட்ட நிகழ்வுகளில் லயிக்கும் அடுத்த சந்ததிக்கு விடுதலைப்பற்றை உணர வைப்பது கடினம்...

ஒரு வாரமாக நடைபெற்ற மாவீரர் வாரத்தை ஒருமாதமாக நீட்டிப்பதனால் வரலாறு ஒன்றும் மாறி விடாது.

நான் ஒரு மாதம் இல்லை எம்மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் வரை இப்படியான களியாட்ட நிகழ்வுகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தான் கூறுகிறேன். அது எந்த மாதமாக இருந்தாலும்...

அத்துடன் களியாட்ட நிகழ்வுகளில் லயிக்கும் அடுத்த சந்ததிக்கு விடுதலைப்பற்றை உணர வைப்பது கடினம்...

அது நீங்கள் ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அது நீங்கள் ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாது.

அதெண்டா உண்மை

அது நீங்கள் ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாது.

மாவீரர் மாதம் தான் எனக்கு பிரச்சினை என்று நீங்கள் நினைத்தீர்களோ தெரியாது. அது தான் என் கருத்தை கூறினேன்.

மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாவிட்டாலும் மக்களை சிந்திக்க தூண்டுவதற்கு நாம் முயற்சிக்கலாம். வழிதெரியாமல் தடுமாறுவோருக்கு தன்னும் அது பிரயோசனப்படலாம்.

உங்களைக் கேக்கவில்லை, அகூதா அண்ணாவைக் கேக்கும் பொது தான் நீங்க வந்து தலையைக் குடுத்தனீங்கள். வெட்டுக் குத்துகளுக்க எழுதேக்க ரெண்டும் ஒண்டா வந்து சேர்ந்திருக்கு. அவர் தான் கன பேருக்கு கடிதம், தந்தி, மனு எல்லாம் குடுக்கிறவர். அவர் தான் கொலடிச்சு கேள்வி கேக்கிறதுக்கு தில்லான ஆள்.

என்னை தான் கேட்டீர்கள்... அதற்கு ஆதாரம் இது. "உதை விட்டுப்போட்டு கீபோட்டில பந்தி பந்தியா தட்டுறது ஈசி." என்ற உங்கள் கூற்று..... ஏனென்றால் அகூதா அண்ணா பந்திபந்தியாக தட்டுவதில்லை. :icon_mrgreen:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தான் கேட்டீர்கள்... அதற்கு ஆதாரம் இது. ஏனென்றால் அகூதா அண்ணா பந்திபந்தியாக தட்டுவதில்லை. :icon_mrgreen:

திரியைப் போய் பாருங்கோ அக்காச்சி, தட்டி இருக்கிறார் <_<

மாவீரர் மாதம் தான் எனக்கு பிரச்சினை என்று நீங்கள் நினைத்தீர்களோ தெரியாது. அது தான் என் கருத்தை கூறினேன்.

மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாவிட்டாலும் மக்களை சிந்திக்க தூண்டுவதற்கு நாம் முயற்சிக்கலாம். வழிதெரியாமல் தடுமாறுவோருக்கு தன்னும் அது பிரயோசனப்படலாம்.

என்னை தான் கேட்டீர்கள்... அதற்கு ஆதாரம் இது. ஏனென்றால் அகூதா அண்ணா பந்திபந்தியாக தட்டுவதில்லை. :icon_mrgreen:

ஊரில உந்த கொடுமை எல்லாம் நடக்க லட்சக் கனக்கான காசு கட்டி அல்லொல பட்டு பல நாடு அடிபட்டு வெளிநாடு அவ்ந்த மக்களுக்கு நீங்கள் சிந்திக்க தூண்ட போகிறீங்கள்?

நீங்கள் சொல்வது தினிப்பு,

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊரில் சுந்தரம் என்று ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் விஜயா. அவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் பெயர் ரங்கன். இருவரும் மிகுந்த ஏழை. ஆனாலும் வெட்டிக் கதை பேசுவதில் வல்லவர்கள். கனவுலகத்திலேயே சஞ்சரிப்பவர்கள். உடமை என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் சில சட்டிப் பானைகள் தானிருந்தன. ஆனாலும் தினசரி என்ன வியாபாரம் செய்யலாம். என்ன தொழில் செய்யலாமென்று கணவனும், மனைவியும் பேசிக் கொண்டே இருப்பர். ஏதாவது ஒரு தொழில் செய்யலாமென்று தீர்மானிப்பர். உடனே அந்த தொழில் எப்படி விருத்தியாகிறது. எவ்வளவு லாபம் கிடைக்கிறது. தாங்கள் என்னென்ன சுகம் அனுபவிப்பது என்றெல்லாம் வாய் கிழிய பேசி பொழுதை கழிப்பர்.

அதை எல்லாம் அடுத்த வீட்டு ரங்கன் கேட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு சிரிப்பு வரும். வெறும் கையால் முழம் போடுகிறார்களே பாவம் என்று எண்ணுவார். ஒரு நாள் கணவன், மனைவி இருவரும் பால் வியாபாரம் செய்வதைப் பற்றி பேச ஆரம்பித்தனர். ""என்னிடம் பணமிருந்தால் பசுக்கள் வாங்குவேன்?'' என்றான் சுந்தரம். ""பசுக்களை மேய்ச்சல் தரைக்கு ஓட்டிப் போய் மேய விடுவேன். அங்கே அவைகள் போடும் சாணத்தை கூடையில் எடுத்து வந்து நம் வீட்டுச் சுவற்றில் வரட்டி தட்டுவேன். அவைகளை விற்று காசு சேர்ப்பேன்!'' என்றாள் விஜயா.

""நான் என்ன செய்வேன் தெரியுமா விஜயா? கறந்த பாலைக் கொண்டு போய் விற்று காசாக்குவேன்!'' என்றான் சுந்தரம்.

""விற்காது மீதமான பாலை காய்ச்சி அதை தயிராக்குவேன். தயிரை கடைவேன். வெண்ணை கிடைக்கும். வெண்ணையை காய்ச்சுவேன். நெய் கிடைக்கும், தயிர், மோர், வெண்ணை, நெய் எல்லாம் கூடையில் எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக போய் விற்பேன். விற்று காசாக்குவேன். காசை பணமாக்குவேன்...'' எனக்கு அவ்வளவு திறமை இருக்கு தெரியுமா? என்றாள் விஜயா.

""அப்படி செய்தும் பால், தயிர், வெண்ணை, நெய் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது?'' என்று கவலைப்பட்டான் சுந்தரம்.

""இதற்காக கவலைப்படுவார்களா என்ன? நாலு வீடு தள்ளித்தானே என் தங்கை குழந்தை குட்டிகளோடு இருக்கிறாள். அவளுக்கு கொடுத்து விடுவேன்!'' என்றாள் விஜயா. அதைக் கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டது.

""நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவைகளை உன் தங்கைக்கும், குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுப்பாயா? அவைகளை நீ கொண்டு போய் கொடுக்காதபடி செய்து விடுகிறேன் பார்!'' என்று கத்தியபடி வீட்டிலிருக்கிற நான்கு பானைகளை தயிர், மோர், வெண்ணை, நெய் இருப்பதாக நினைத்துக் கொண்டு எல்லாப் பானைகளையும் உடைத்து விட்டான் சுந்தரம்.

இவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் பக்கத்து வீட்டு ரங்கன் பகல் கனவு கண்டு கடைசியில் தம் கைப் பொருளை இழக்கும் இருவருக்கும் புத்தி வர ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணினார்.

சுந்தரம் வீட்டினுள் நுழைந்தார். அங்கு மூலையில் சார்த்தி வைத்திருந்த ஒரு கோலை எடுத்து வெறும் வெளியில் அப்படி இப்படி வீசி, ""ஹை... ஹை...'' என்று விரட்டினார்.

""ரங்கா...! எதை விரட்டுகிறீர்கள்?'' என்றான் சுந்தரம்.

""உன் பசு என் தோட்டத்தில் நுழைந்து செடிகளை எல்லாம் நாசமாக்கிவிட்டது. எனக்கு நஷ்டஈடு கொடு!'' என்றான்.

""யோவ்! என்னய்யா சொல்ற... இது என்ன புது கதை... எங்ககிட்ட ஏது பசு?'' என்று ஒரே நேரத்தில் சண்டைப் போட்டனர் கணவன், மனைவி இருவரும்.

""இப்போ புரியுதா... இல்லாத பசுக்களை வைத்து சண்டைப் போட்டே இருவரும் இவ்வளவு நாட்கள் பொழைப்பை ஓட்டி விட்டீர்கள். இதனால் லாபம் என்ன? உங்க வீட்டுப் பொருட்கள் போனதுதான் மிச்சம். இனி இந்த கற்பனை கோட்டையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உழைக்கிற வழியை பாருங்க!'' என்றார்.இருவரும் வெட் கத்தில் தலை குனிந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

உப்படி தான் முன்பு ப்ரான்ஸில் குகனாதன் என்ற ஒருவர் ரி ஆர் ரி டிவி நடத்தினார் அந்த் ரிவியை கைக்கு கொண்டு வருவதுக்கு எவளவு குத்து வேலை செய்து ரிரி என் ஆரம்பிக்கப்பட்டது அத்தோடு குகனாதனும் தொரோகி என்று அரிவிக்க பட்டு சும்ம விடவில்லை துரத்தி துரத்தி கொண்டு போய் இலங்கை அரசிடம் சேர்த்தாச்சு.

இப்ப மீண்டும் அதே பாணியில்.....

[size=4]இப்ப குகநாதன் பால் குடி மறந்து அ ஆ படிக்க தொடங்கிட்டாரோ?[/size][size=1]

[size=4]இல்ல இன்னமும் பல்குடியாகவே இருந்து [/size][/size][size=1]

[size=4]இலங்கை கொண்டுபோய் இந்தியாவில் சேர்த்தால் சேரும் சிறுவனாகவே இருக்கிறாரோ?[/size][/size]

அதை மக்கள் சொல்லட்டும்.. தேசியத்தின் பெயரால் மக்களை மாக்களாகப் பார்ப்பதும் அவமதிப்பே..

[size=4]என்னை நீங்கள் அவமதித்து விட்டீர்கள்![/size]

[size=4]இப்படிக்கு தமிழ் மகன் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அன்புடன்...........[/size][size=1]

[size=4]நிழலி சபேசன் கிருபன் வல்வை சகாரா! (இதில எல்லாம் அண்ணனும் அக்காவும்தான் அதை தனி தனி போடவில்லை)[/size][/size]

[size=1]

[size=4]உங்களுடைய கருத்துக்களை நான் மறுதலிக்கவில்லை. அதே நேரம் உங்களுடைய வார்த்தை பிரயோகங்களிலும் எனக்கு உடன்பாடு இல்லை. உங்களில் எதோ ஒரு இனம் தெரியாத மரியாதை இருப்பதன் காரணம் இதை எழுதுகிறேன். நீங்கள் அடிக்கடி ஏன் தேசிய வாதிகள் என்ற சொல்லை எழுதுகிறீர்கள் என்பது புரியவில்லை. தேசியவாதம் என்பது தேசியத்தின் பால் ஆனது. சில சுயநல வாதிகள் தமக்கு சாதகமாக தேசியவாதத்தை முன்வைக்கலாம். கருணாவும் லக்லசும் கூட தாம் மக்களுக்கு சேவை செய்வதாகத்தான் சொல்கிறார்கள் அவர்களும்தான் தேசியம் சார்ந்தே பேசுகிறார்கள். அவர்களுடைய கருத்துக்களுக்கு உங்களுக்கு எதிர் கருத்திருப்பின் அவர்களை நேரடியாகவே சாடலாமே? ஏன் நாட்டுக்கு உண்மையாக உழைப்பவர்களையும் இதற்குள் இழுக்க வேண்டும்? நீங்கள் பாவிக்கும் தேசிய வாதிகள் என்ற சொற்பிரயோகம் உண்மையான தேசியவாதிகளையும் சுடுகிறது. உங்களுடைய கருத்துக்கள் தேசியவாதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது. நீங்கள் தேசிய வாதத்திற்கு எதிரானவரா? தேசியவாதம் எந்த வகையில் தவறானது இதை நீங்கள் இதுவரை எழுதவில்லை.[/size][/size][size=1]

[size=4]தேசிய வாதத்திற்கு எதிரான கருத்து என்ற எத்தணிப்பில் இடையிடையே இளையராயவிட்கும் பூசை செய்கிறீர்கள் . அது உங்களுடைய சுய விருப்பு நீங்கள் ரசிக்கும் அளவிற்கு எனக்கு இசை புரியாமல் இருக்கலாம். அது உங்களுடைய தவறில்லை. ஆனால் மறைமுகமாக இளையராஜா பூசைக்கு தேசியவாதிகளை வெறும் சாம்பிராணி ஆக்குகிறீர்கள். [/size][/size][size=1]

[size=4]அவர்களுக்கு இலாபம் வரவில்லை அதனால் தடுக்கிறார்கள். என்று சாடுகிறீர்கள். அவர்களுக்கு இலாபம் இருப்பின் இதை கார்த்திகை 27ஆம் திகதியே செய்வார்கள் என்று கூட எழுதி இருக்கிறீர்கள். [/size][/size][size=1]

[size=4]மூட நம்பிக்கைகள் எமது இனத்திற்கு புதியதல்ல அது உங்களுக்கும் தெரியாதது அல்ல. நான் கடவுளை நம்புவதில்லை நீங்கள் நம்பலாம். கடுவுளை நம்புவபர்கள் செய்பவை அனைத்தும் எனக்கு எனக்கு வேடிக்கையாக இருக்கிறது . அனால் எனக்கு வேண்டபட்டவர்கள் செய்பதால் தள்ளி நின்று உங்களைப்போல் என்னால் சிரிக்க முடியவில்லை. அவர்களுக்கு எதிரான வார்த்தைகளை அள்ளி தெளிக்க முடியவில்லை. அவர்களுடைய உழைப்பு வீண் போகாது எப்படி காப்பது எனும் சிந்தனைதான் எழுகிறது.[/size][/size][size=1]

[size=4]ஒருவேளை கார்த்திகை மாதம் முழுதும் நோன்பிருக்கலாம் என்று அவர்கள் நம்பியிருக்கலாம். அதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் எனது உணர்வு வேறு கருபுலியின் உணர்வு வேறு அவர்களுடைய நம்பிக்கையின் கால் தூசாக கூட நான் இல்லை நீங்களும் இல்லை. எல்லோருடைய உணர்வும் எமைபோல்தான் இருக்க வேண்டும் என்ற இறுமாப்பில் இருந்துகொண்டு ............. மக்களை சுயமாக சிந்திக்க விடுங்கள் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறீர்கள். நீங்கள் மறைமுகமாக உங்களுக்கு சுயவிளம்பரம் செய்வது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா? சிலர் தெரிந்தும் அதை செய்கிறார்கள்.............. நீங்கள் தெரியாமல் செய்கிறீர்கள் என்று நம்புவதால் இதை எழுதுகிறேன். [/size][/size][size=1]

[size=4]எல்லோருடைய உணர்வும் ஒரே அளவில் இல்லை............. இந்த அளவுதான் சரியானது என்று ஒரு அளவு கோலும் இல்லை. ஆக ஏன் அவர்களுடைய உணர்வை எங்களால் மதிக்க முடியாது? அதற்காக அதை ஏற்று கொள்ளவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. எதிர்கருத்துக்களுடன் சென்று சந்திக்காமல் ஏன் அவர்களை நட்புடன் சந்திக்க முடியவில்லை?[/size][/size][size=1]

[size=4]பிளவுக்காக காத்திருந்தவர்கல்போல் ஏன் கற்களாலேயே எறிகிறீர்கள்?[/size][/size][size=1]

[size=4]இதில் எந்த அளவிற்கு போலி தனம் இருக்கும் என்பது எனக்கு தெரியாது............. ஆனால் கார்த்திகை முழுதும் புனிதமானது என்ற நிலைபாட்டை எங்காவது சில மனதுகள் உடனடியாக உள்வாங்கியிருக்கும். விதைத்தவர்கள் இடத்தில் விஷம் இருந்திருக்கலாம் அனால் அது இப்போது விளையும் இடத்தில் மாவீரகள் மேல் உள்ள அன்பை தவிர வேறு இருக்காது. இதை கொஞ்சம் கவனத்தில் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.[/size][/size][size=1]

[size=4]உங்களுடைய பார்வை பிழையானது என்று நான் சொல்ல முனையவில்லை.....[/size][/size][size=1]

[size=4]இன்னொரு விதமாகவும் இதை பார்க்கலாம் என்றுதான் சொல்ல முன்வந்தேன்.[/size][/size][size=1]

[size=4]வாசித்ததற்கு நன்றி![/size][/size]

[size=1][size=4]விதைத்தவர்கள் இடத்தில் விஷம் இருந்திருக்கலாம் அனால் அது இப்போது விளையும் இடத்தில் மாவீரகள் மேல் உள்ள அன்பை தவிர வேறு இருக்காது. [/size][/size]

இந்த வரி எனக்கு பிடித்திருக்கிறது. பெரிய உண்மையை ஒருவரியில் கூறியுள்ளீர்கள். பாராட்டுகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிகழ்ச்சி நடக்காவிடின் டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படலாம். நிகழ்ச்சி நடாத்த எண்ணியவர்கள் நட்டம் என்று வங்குரோத்து நிலை (bankruptcy) காட்டி தம் நட்டத்தை ஈடு செய்யலாம். இதனை நடத்தக் கூடாது என்று போலி வரட்டு தமிழ் தேசியம் பேசியவர்கள் தாமே வென்று விட்டோம் என முழங்களாம். ஆதரித்தவர்கள் இது இயற்கையின் சீற்றத்தால் தான் நடந்தது என்று காரணம் கூறலாம். stake holders எவருக்கும் இதனால் பாதிப்பில்லை.

ஆனால் பாதிப்பு தமிழ் தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்ட மக்களுக்குத்தான். ஒரு தமிழகத்து கலைஞனின் நிகழ்ச்சியைக் கூட நடத்த விடாத திமிர் தனத்தால் இன்னும் இன்னும் பாதிக்கப்பட போவது தமிழர் என்ற அடையாளத்தின் கீழ் தமிழக மக்களையும் இணைத்து போராட முற்படும் சக்திகள் தான். எமக்காக கண்ணீர் சிந்தவும் தன்னை தீயுக்குள் கருக்கவும் துணியும் ஒரு மக்கள் கூட்டத்தில் இருந்து வந்த ஒருவர் எம் மத்தியில் ஒரு நிகழ்ச்சி வைக்கவே தடுக்கும் எம் போலி தேசிய வெறியால் இன்னும் இன்னும் அந்நியப்பட்டு போகப் போவதும் நாம் தான். ஏற்கனவே என்ன நடந்தாலும் கேட்க நாதியற்ற சனத்தின் பெயரால் நடத்தப்பட்ட மிலேச்சத் தனத்தின் அறுவடை தமிழக மக்களுடனான பிழவு. இனிவரும் காலங்களில் இந்து பத்திரிகை போன்ற பார்ப்பன ஊடகங்கள் இதனை வைத்து நடத்தப்போகும் விளையாட்டுகளும் பல பல.

உங்களால் முடியக் கூடியது நீங்கள் மே மாதத்தில் நடத்திய யாகம் போன்ற ஒரு கண் துடைப்பு நாடகத்தை மீண்டும் ஒருக்கா நடத்திக் காட்டுவது தான்.

இசைஞானி இளையராஜா தமிழீழ அரசியலில் மட்டுமல்ல தமிழ் நாட்டு அரசியலில் கூட ஈடுபடாதவர். இசைஞானி என்றாவது தமிழக அரசியலில் குரல் கொடுத்திருக்கிறாரா? அவரது 'ஓரம்போ' பாடலுக்கு இந்தியாவில் கிடைத்த அடிக்குப் பின் அவர் அரசியல் பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை .

இசைஞானியின் நிகழ்வுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த சீமான் பாரதிராஜா போன்றோரும் தான் கோஷமிட்டனர். ஆகவே அவரது நிகழ்விற்காக எழுந்த எதிர்க் கோஷங்கள் நம் தேசிய சக்தி எதனையும் பாதிக்கப் போவதில்லை என்று திடமாக நம்புங்கள்.

மற்றும் யாகம் பற்றி

அந்த யாகம் நடாத்தப்பட்டதால் தானே அவர்களைப் பற்றியும் மக்களுக்குத் தெரியவந்தது. 2009 மே மாதத்தின் பின் நம் மத்தியில் குறிப்பாக ஈழத்தமிழர் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ந்தும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன யாகம் நடாத்தப்பட்டதன் பின் இன்றுவரை எத்தனையோ பாரிய மாற்றங்கள் நடந்து விட்டன மட்டுமல்ல நடந்து கொண்டும் இருக்கின்றன. கருத்துக்கள் எழுதுமுன் சமகால நிலைமைகளை தீர விசாரித்து எழுதுவது பாதிக்கப்பட்டிருக்கும் எம் இனத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]உங்களுடைய கருத்துக்களை நான் மறுதலிக்கவில்லை. அதே நேரம் உங்களுடைய வார்த்தை பிரயோகங்களிலும் எனக்கு உடன்பாடு இல்லை. உங்களில் எதோ ஒரு இனம் தெரியாத மரியாதை இருப்பதன் காரணம் இதை எழுதுகிறேன். நீங்கள் அடிக்கடி ஏன் தேசிய வாதிகள் என்ற சொல்லை எழுதுகிறீர்கள் என்பது புரியவில்லை. தேசியவாதம் என்பது தேசியத்தின் பால் ஆனது. சில சுயநல வாதிகள் தமக்கு சாதகமாக தேசியவாதத்தை முன்வைக்கலாம். கருணாவும் லக்லசும் கூட தாம் மக்களுக்கு சேவை செய்வதாகத்தான் சொல்கிறார்கள் அவர்களும்தான் தேசியம் சார்ந்தே பேசுகிறார்கள். அவர்களுடைய கருத்துக்களுக்கு உங்களுக்கு எதிர் கருத்திருப்பின் அவர்களை நேரடியாகவே சாடலாமே? ஏன் நாட்டுக்கு உண்மையாக உழைப்பவர்களையும் இதற்குள் இழுக்க வேண்டும்? நீங்கள் பாவிக்கும் தேசிய வாதிகள் என்ற சொற்பிரயோகம் உண்மையான தேசியவாதிகளையும் சுடுகிறது. உங்களுடைய கருத்துக்கள் தேசியவாதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது. நீங்கள் தேசிய வாதத்திற்கு எதிரானவரா? தேசியவாதம் எந்த வகையில் தவறானது இதை நீங்கள் இதுவரை எழுதவில்லை.[/size][/size]

முதலில் பொதுமையாகத் "தேசியவாதிகள்" என்று விளித்தது சரியல்ல என்று ஒத்துக்கொள்கின்றேன். எனது விமர்சனம் தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்து, தமிழ் மக்களின் உண்மையாக தேசிய உணர்வை தமது குறுகிய சொந்த நலன்களுக்காகவும், அதிகாரத்திற்காகவும் பாவிப்பர்கள் மீதேயாகும். இவர்கள் என் பார்வையில் போலித் தேசியவாதிகள் அல்லது தேசியம் எனும் போர்வையணிந்த வியாபாரிகள். தமது தேவைகளை நிறைவேற்ற தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் தமிழ்மக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்படுபவர்கள். தமது இருப்புக்கு சவாலாக எவரையும், எவரது கருத்துக்களயும் அனுமதிக்காதவர்கள்.

மேலே சொல்லப்பட்டதை இளையராஜா நிகழ்ச்சியை வைத்து இப்படியானவர்கள் நடந்து கொண்டதில் இருந்து தெளிவாகக் காணமுடியும்..

மேலும் நான் தமிழ்த்தேசியம் நான் புரிந்து கொண்டது:

* இது வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்டது. சிங்களவரின் அடக்குமுறைக்கு எதிராக தம்மை ஒரு இனமாக அடையாளம் கண்டு, அடக்குமுறைக்கு எதிராக நிற்பது.

* பொதுவான மொழியைப் பேசுபவர்கள்.. தமிழ் மொழியை சரளமாகப் பேசமுடியாத இரண்டாம், மூன்றாம் தலைமுறைத் தமிழர்கள்கூட தங்களை தமிழர்களாக பெருமையாக அடையாளப்படுத்துகின்றனர்.

* நிலம். சிங்களவர்களால் கபளீகரத்திற்கு உள்ளாகும் நிலத்தை தக்க வைக்க வேண்டிய தேவை உள்ளது.

* பொதுவான பொருண்மிய, கலாச்சார, பண்பாடுகளைக் கொண்டோர்.

மேலுள்ளவற்றில் இருந்து என்னை விலத்திப் பார்க்கமுடியாததால் நானும் ஒரு தமிழ்த் தேசியவாதியே.

எனினும் யாழ் களத்தில் தமிழர்கள் மீதும், புலிகள் மீதும் அக்கறைகொண்ட சிலர் (உ+ம்: நெடுக்ஸ்) தம்மை தமிழ்த் தேசியவாதிகள் என்ற அடையாளத்துக்குள் கொண்டு வரமுடியாத முரண்நகையையும் பார்த்திருக்கின்றேன். அதற்கான காரணமாக தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்களின் செயற்பாடும் இருக்கலாம் என்பது எனது ஐயம்..

ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்ற மே 2009 இன் பின்னர் தமிழ்த் தேசியத்தின் தலைமைகள் (கட்சிகள், அமைப்புக்கள்) ஒற்றுமையின்றி, சிதறுண்டு, அதிகாரத்தைத் தக்க வைக்க மக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் செயற்பாட்டில்தான் முழுமூச்சாக ஈடுபடுகின்றார்கள். போரின் பின்னால் அவலங்களைத் தினம் தினம் சந்திக்கும் மக்களையும், முன்னாள் போராளிகளையும் பற்றிய அக்கறை இரண்டாம் பட்சம்தான்.

இவர்கள் நம்பகம் மிக்க தலைமையாக வரவேண்டுமென்றால் ஓரணியில் நின்று மக்களைத் திரட்டி தமிழர்களின் விடுதலைக்கான செயற்பாடுகளில் வெளிப்படையாக ஈடுபடவேண்டும்.

ஆனால் மூன்று வருடங்கள் கழிந்தும் இரு மாவீரர் நிகழ்வுகள் நடாத்தும் நிலைதான் உள்ளது என்பதுதான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அன்புடன்...........[/size]

[size=1][size=4]நிழலி சபேசன் கிருபன் [/size][/size][size=1][size=4]வல்வை சகாரா[/size][/size][size=1][size=4]! (இதில எல்லாம் அண்ணனும் அக்காவும்தான் அதை தனி தனி போடவில்லை)[/size][/size]

[size=1][size=4]உங்களுடைய கருத்துக்களை நான் மறுதலிக்கவில்லை. அதே நேரம் உங்களுடைய வார்த்தை பிரயோகங்களிலும் எனக்கு உடன்பாடு இல்லை. உங்களில் எதோ ஒரு இனம் தெரியாத மரியாதை இருப்பதன் காரணம் இதை எழுதுகிறேன். நீங்கள் அடிக்கடி ஏன் தேசிய வாதிகள் என்ற சொல்லை எழுதுகிறீர்கள் என்பது புரியவில்லை. தேசியவாதம் என்பது தேசியத்தின் பால் ஆனது. சில சுயநல வாதிகள் தமக்கு சாதகமாக தேசியவாதத்தை முன்வைக்கலாம். கருணாவும் லக்லசும் கூட தாம் மக்களுக்கு சேவை செய்வதாகத்தான் சொல்கிறார்கள் அவர்களும்தான் தேசியம் சார்ந்தே பேசுகிறார்கள். அவர்களுடைய கருத்துக்களுக்கு உங்களுக்கு எதிர் கருத்திருப்பின் அவர்களை நேரடியாகவே சாடலாமே? ஏன் நாட்டுக்கு உண்மையாக உழைப்பவர்களையும் இதற்குள் இழுக்க வேண்டும்? நீங்கள் பாவிக்கும் தேசிய வாதிகள் என்ற சொற்பிரயோகம் உண்மையான தேசியவாதிகளையும் சுடுகிறது. உங்களுடைய கருத்துக்கள் தேசியவாதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது. நீங்கள் தேசிய வாதத்திற்கு எதிரானவரா? தேசியவாதம் எந்த வகையில் தவறானது இதை நீங்கள் இதுவரை எழுதவில்லை.[/size][/size]

[size=1][size=4]தேசிய வாதத்திற்கு எதிரான கருத்து என்ற எத்தணிப்பில் இடையிடையே இளையராயவிட்கும் பூசை செய்கிறீர்கள் . அது உங்களுடைய சுய விருப்பு நீங்கள் ரசிக்கும் அளவிற்கு எனக்கு இசை புரியாமல் இருக்கலாம். அது உங்களுடைய தவறில்லை. ஆனால் மறைமுகமாக இளையராஜா பூசைக்கு தேசியவாதிகளை வெறும் சாம்பிராணி ஆக்குகிறீர்கள். [/size][/size]

[size=1][size=4]அவர்களுக்கு இலாபம் வரவில்லை அதனால் தடுக்கிறார்கள். என்று சாடுகிறீர்கள். அவர்களுக்கு இலாபம் இருப்பின் இதை கார்த்திகை 27ஆம் திகதியே செய்வார்கள் என்று கூட எழுதி இருக்கிறீர்கள். [/size][/size]

[size=1][size=4]மூட நம்பிக்கைகள் எமது இனத்திற்கு புதியதல்ல அது உங்களுக்கும் தெரியாதது அல்ல. நான் கடவுளை நம்புவதில்லை நீங்கள் நம்பலாம். கடுவுளை நம்புவபர்கள் செய்பவை அனைத்தும் எனக்கு எனக்கு வேடிக்கையாக இருக்கிறது . அனால் எனக்கு வேண்டபட்டவர்கள் செய்பதால் தள்ளி நின்று உங்களைப்போல் என்னால் சிரிக்க முடியவில்லை. அவர்களுக்கு எதிரான வார்த்தைகளை அள்ளி தெளிக்க முடியவில்லை. அவர்களுடைய உழைப்பு வீண் போகாது எப்படி காப்பது எனும் சிந்தனைதான் எழுகிறது.[/size][/size]

[size=1][size=4]ஒருவேளை கார்த்திகை மாதம் முழுதும் நோன்பிருக்கலாம் என்று அவர்கள் நம்பியிருக்கலாம். அதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் எனது உணர்வு வேறு கருபுலியின் உணர்வு வேறு அவர்களுடைய நம்பிக்கையின் கால் தூசாக கூட நான் இல்லை நீங்களும் இல்லை. எல்லோருடைய உணர்வும் எமைபோல்தான் இருக்க வேண்டும் என்ற இறுமாப்பில் இருந்துகொண்டு ............. மக்களை சுயமாக சிந்திக்க விடுங்கள் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறீர்கள். நீங்கள் மறைமுகமாக உங்களுக்கு சுயவிளம்பரம் செய்வது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா? சிலர் தெரிந்தும் அதை செய்கிறார்கள்.............. நீங்கள் தெரியாமல் செய்கிறீர்கள் என்று நம்புவதால் இதை எழுதுகிறேன். [/size][/size]

[size=1][size=4]எல்லோருடைய உணர்வும் ஒரே அளவில் இல்லை............. இந்த அளவுதான் சரியானது என்று ஒரு அளவு கோலும் இல்லை. ஆக ஏன் அவர்களுடைய உணர்வை எங்களால் மதிக்க முடியாது? அதற்காக அதை ஏற்று கொள்ளவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. எதிர்கருத்துக்களுடன் சென்று சந்திக்காமல் ஏன் அவர்களை நட்புடன் சந்திக்க முடியவில்லை?[/size][/size]

[size=1][size=4]பிளவுக்காக காத்திருந்தவர்கல்போல் ஏன் கற்களாலேயே எறிகிறீர்கள்?[/size][/size]

[size=1][size=4]இதில் எந்த அளவிற்கு போலி தனம் இருக்கும் என்பது எனக்கு தெரியாது............. ஆனால் கார்த்திகை முழுதும் புனிதமானது என்ற நிலைபாட்டை எங்காவது சில மனதுகள் உடனடியாக உள்வாங்கியிருக்கும். விதைத்தவர்கள் இடத்தில் விஷம் இருந்திருக்கலாம் அனால் அது இப்போது விளையும் இடத்தில் மாவீரகள் மேல் உள்ள அன்பை தவிர வேறு இருக்காது. இதை கொஞ்சம் கவனத்தில் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.[/size][/size]

[size=1][size=4]உங்களுடைய பார்வை பிழையானது என்று நான் சொல்ல முனையவில்லை.....[/size][/size]

[size=1][size=4]இன்னொரு விதமாகவும் இதை பார்க்கலாம் என்றுதான் சொல்ல முன்வந்தேன்.[/size][/size]

[size=1][size=4]வாசித்ததற்கு நன்றி![/size][/size]

தம்பி மருது இந்தத்திரியில் நான் எழுதிய பதிவு ஆக இரண்டே இரண்டுதான்

எல்லாம் நன்மைக்கே. :)

இசை இந்தக்குறளை எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும்? அதனால இதற்கு பொழிப்புரை எழுதுமாறு மிகவும் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன். :lol:

இந்தத் திரியில் நான் நீங்கள் கூறும் எதனையும் கருத்தாகப் பதியவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும்.

இருப்பினும் தேசியவாதிகள் என்று நான் விளித்திருக்கக்கூடிய இடங்களில் அந்த இடம்சார்ந்தே அதன் கருத்தும் அமைகிறது.

உண்மையைச் சொல்லப்போனால் தேசியம் என்று பேசும் அளவுக்கு எனக்கு ஆழமான அறிவு கிடையாது, இருப்பினும் நான் அறிந்தவரைக்கும் தேசியம் என்பது ஒரு நாட்டிற்குரிய அல்லது ஒரு இனத்திற்குரிய அனைத்துவிதமான விடயங்களையும் உள்ளடக்கி ஒருமைப்பாடடைய வைக்கும் மிக உன்னதமான சொல். சில சமயங்களில் நான் சில கருத்துக்களில் அதனை பாவிப்பது உண்டு. நேற்றைய காலம்வரை இப்படியான வார்த்தைப்பிரயோகங்கள் என்னால் மேற்கொள்ளப்பட்டன என்று உங்களால் சுட்டிக்காட்ட முடியாது. இன்றைய நாட்களில்தான் அப்படியான வார்த்தைப்பிரயோகங்களை கையாள்கிறேன். காரணம் சுயநலமிக்க ஒரு கூட்டம் தம்மைச்சுற்றி ஒரு குறுகிய வட்டத்தைப்போட்டு தாமே வழிகாட்டிகள் என்று தேசியம் என்பது தமக்குள் உட்பட்டது என்ற ஆணவத்தில் திரிவதால் இப்படிச் சொன்னாலாவது தன்னுணர்வு பெறமாட்டார்களா என்ற நப்பாசைதான்.

மருது, நீங்கள் கனடாவில் இருந்தால் இந்த தேசியம் பேசுபவர்கள் அதாவது தாங்களே தேசியத்தின் பிரதிநிதிகள் என்று மக்களால் தெரிவுசெய்யப்பட்டதாக முண்டாசு கட்டியுள்ளவர்கள் எப்படி ஒருமைப்பாட்டை குலைத்துப் போடுகிறார்கள் என்பது தெரியும். உதாரணத்திற்கு 2009 இற்குப்பின்னான கடந்த மாவீரர் காலங்களில் இரண்டு குழுக்களாக பிரிவுபட்ட கூட்டம் எப்படி எப்படியான கதையாடல்களில் ஈடுபட்டன? மக்கள் கோபத்தால் ஒன்றாக்கப்பட்ட மாவீரர் நாளிலும் கூட அந்த அகவணக்கத்திற்குரிய இடத்தில் நின்று கொண்டு மாவீரர் வணக்கத்திற்கு வந்து இணைந்திருந்த மறுதரப்பு தங்களுடன் நிற்பதையே விரும்பாத, தேசியஅவைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் என்னிடம் சொன்ன வார்த்தைகள் "பாருங்கோ இந்தக்கள்ளங்கள் வந்து எங்களோடு ஒட்டிக்கொண்டு நின்று ஆக்களை மயக்கிறாங்கள் இவங்களை இங்க நிக்கவிடக்கூடாது அவங்களோட நீங்களும் கதைக்கவேண்டாம்..." என்று ஆக இவர்கள் எப்படி ஒருமைப்பாட்டை உருவாக்கப் போகிறார்கள்? மாவீரர் நாளிலேயே இவர்களால் அனைவரையும் தேசியத்தின் கீழ் இணைக்க முடியாதவர்களாக இருக்கும் நிலையில் அதனை இவர்கள் எப்படி கட்டிக்காப்பார்கள்? கடந்த காலங்களைக் கவனித்தால் உண்மையிலேயே நிறைந்த தாயகப்பற்றும் வேணவாவும் கொண்ட மக்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை நான் இங்கு எழுதி என் தலையில் மண்ணைவாரிக் கொட்டத் தயாராய் இல்லை. அடுத்து கனடாவில் அவதானித்துப் பார்த்தால் தேசியம் தொடர்பான பொறுப்புகளில் குறுகிய பிரதேசவாதம் இருக்கிறது. அந்தப் பிரதேசவாதம் மிகமிக ரகசியமாகப் பேணப்பட்டுவருகிறது. இதனை இதற்குமேல் வெளிப்படையாகச் சொல்ல விருப்பமில்லை. இப்படி ஒவ்வொரு விடயமாக சொல்லப்போனால் நாளையே நானும் எனது முகவரியும் காணாமல்போகக்கூடும். இவர்களைமட்டுமே என்னுடைய கருத்துக்களில் முன்வைக்கிறேன். மற்றப்படி நிறையவே தேசியத்தை நேசிக்கும் அதனையே சுவாசிப்பவர்களை அல்ல. அப்படியே அவர்களை இவ்வாசகம் எனது கருத்துணர்த்தாது தாக்கியருந்தால் அது எனது தவறே. தொடரும் காலங்களில் கவனத்தில் எடுக்கின்றேன்

இசைஞானியின் நிகழ்வை ஒட்டி வந்த என்னுடைய கருத்துப்பதிவானது. மிகப்பலம்வாய்ந்த எமது விடுதலைப்போராட்டம் மிகப்பெரும் சதியால் முடக்கப்பட்டிருக்கிறது. அன்று முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடக்கும்போது ஈழத்தமிழர்களாகிய நாம் உலகெங்கும் ஆகக்கூடிய சனநாயகவழியில் போராடினோம். எவருமே கண்டுகொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதைவிடவும் கண்டு கொள்ள மறுத்தார்கள். மிகப்பெரிய மனித அவலம் நடந்து இன்றுவரைக்கும் எத்தீர்வையும் எட்டாத நிலையிலேயே எமது மக்களின் நிலை இருக்கிறது. நீண்ட நெடுந்துயரிலிருந்து பிரிக்கப்படாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மீளவேண்டும் மீண்டால்தான் எழமுடியும். அதற்காக இசைஞானியின் இசையில் மீட்சி கிடைக்கும் என்றெல்லாம் சொல்லவில்லை.

இந்த நிகழ்வு பற்றிய பல வதந்திகள் வந்தன. இசைஞானியின் நிகழ்வு கனடாவில் இடம்பெற இருக்கிறது என்ற அறிவிப்பு கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாக தெரிந்திருந்தது. அப்போதெல்லாம் எந்த எதிரப்பையோ சந்தேகங்களையோ வெளிப்படுத்தாதவர்கள் இசைஞானி இங்கு வந்து இறங்கிய பிற்பாடு சர்ச்சையை உருவாக்கியது எதற்காக?

இசைஞானியின் நிகழ்வுக்கு மக்களைச் செல்லவிடாது தடுப்பதற்கு மாவீரர்களை கையிலெடுக்கவேண்டிய அவசியம் என்ன?

இதுவரை காலமும் தாயகத்தில் அனுட்டிக்கப்படாத வகையில் அதுவும் கனடாவில் ஒரு வாரமாக இருந்த மாவீரர் காலத்தை ஒரு மாதமாக நீட்டித்ததன் பின்னணி என்ன?

இவர்கள சிங்கள அரசின் ஆட்கள்தான் இதனைச் செய்கிறார்கள் என்கிறீர்கள் அப்படியானால் அதனைத் தெளிவுபடுத்துங்கள். தெளிவுபடுத்தாத புறக்கணிப்பு ஒரு தூரநோக்கற்ற சிந்தனை. எல்லோரும் வீராப்புக்குக் கேட்கலாம் இசைஞானி என்ன கொம்போ என்று.... நிச்சயமாக இசைஞானி கொம்பு இல்லை ஆனால் இந்தப்புறக்கணிப்பிற்குப் பின்னால் ஏற்படக்கூடிய பாதகங்கள் என்ன என்பதை சிறிதளவாவது கவனத்தில் எடுக்கவேண்டும். தமிழ்நாட்டுத்தமிழர்களைப் பொறுத்தவரை எமக்கான ஆதரவுக்கு சீமான் போதாது என்பது என்னுடைய எண்ணம். சீமானின் வழி வன்மையான வழி அவ்வழிகள் சில சமயங்களில் இந்திய அரசியல் காய்நகர்த்தலில் மிகப்பாரிய சோதனைகளைத் தாண்டவேண்டிய கட்டங்கள் நிறைய உண்டு. இப்படியான சூழலில் இந்த இசைநிகழ்ச்சியின் புறக்கணிப்பிற்குப் பின்னால் வெளிப்படையாகத் தெரியாத ஒரு பகை உணர்வு தமிழகத் தமிழர்களின் மனதில் ஊறும் என்பதை யாரும் மறுக்க முடியாது. மீண்டும் சொல்கிறேன் இசைஞானி ஒரு கொம்பல்ல ஆனால் அவரின் இசையை நேசிக்கும் இலட்சக்கணக்கான மக்கள் உலகெங்கும் பரவி வாழ்கிறார்கள். அவர்களில் விகிதாசாரத்தில் கூடியளவு மக்களின் எம்மீதான கண்ணோட்டம் வெறுப்புக்குரியதாக மாறும். உதாரணத்திற்கு எனக்குப் பிடித்தமான ஒரு கவிஞர் புதுவை அவர்கள் அவரை தமிழகத் தமிழர்கள் புறக்கணித்தால் அதைத் தாங்கும் சக்தி எனக்கு இல்லை ஏன் புற்கணிக்கிறார்கள் என்ற காரணங்களையெல்லாம் நான் ஆய்வுக்குட்படுத்தமாட்டேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் எமது கவிஞனை இவர்கள் புறக்கணித்துவிட்டார்களே என்பதுதான் ஆக அந்த உணர்வு எனக்கு தமிழகத் தமிழரின் மீது எப்படியாக உணர்வை ஏற்படுத்தும்? அது போலத்தான் இதுவும் காரணங்கள் எதுவும் ஆராயப்படமாட்டாது ஆனால் வெறுப்பு என்பது இலகுவாக உருவாக்கப்பட்டுவிடும். எப்போதும் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் தமிழகம் எமக்கான பெரும்பலம் அதனை நாங்கள் முழுமையாக்கும்போதுதான் எம்தாயகத்திற்கான மீட்சிக்கு வலிமையான வழிகள் திறக்கும். எதிர்காலத்தில் ஏற்படத்தக்க பாதகங்களை உணராமல் நிகழ்காலத்தின் சிறிய வெற்றிகளில் நாம் எதனையும் சாதிக்கமுடியாது. போதும் குறுகிய சிறுசிறு வெற்றிகளில் நாங்கள் மகிழ்ந்ததும் பின்னர் நாம் அழிக்கப்பட்டதும் எமக்கு வேண்டியது சிறு வெற்றிகளும் உவகையும் அல்ல. வீழாத ஒரு நிலை. நம்முடைய குறுகிய கடும்போக்கு எமக்கான விசாலமான ஆதரவுகளை மட்டுப்படுத்தும். கொஞ்சம் குறுகிய மனவெளிகளில் இருந்து வெளியே வாருங்கள். இப்படி எழுதுகிறோம் என்றவுடன் உன் வீட்டில் மாவீரர் உண்டா, முள்ளிவாய்க்காலில் நீ அலைந்து திரிந்திருந்தால் இப்படி எழுதுவாயா? என்றெல்லாம் கேள்வி தொடுப்பார்கள்.அப்படியானால் ஒன்று வீட்டில் மாவீரர்கள் இருக்கவேண்டும் அல்லது நான் அங்கிருந்து பேசவேண்டும். இரண்டு நிலையிலும் நான் இல்லை. அப்படியே இந்தத் தகுதிகளுடன் இருப்பவர்கள் மட்டும் பேசுங்கள் என்றுவிட்டு நாம் நடையைக் கட்டுவோம் அதுதான் சிறந்தவழி. ஒன்றை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள் நான் ஒளிந்திருந்து பேசவில்லை. முகம் காட்டியபடியேதான் பேசுகின்றேன்.

ஆமா மருது இப்போதுதான் இந்நிகழ்வு காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டுவிட்டதே பிறகு ஏன் இந்தக் கேள்வி?

திரும்பவும் இந்நிகழ்வு நடந்தால் அதைத் தடுத்து நிறுத்த முனைவார்களா? நவம்பர் மாதத்தைத் தவிர்த்து அவர்கள் இந்நிகழ்வைச் செய்ய முற்பட்டால் ஆதரவு கொடுப்பார்களா? அல்லது இன்னும் மிச்ச மிகுதி சேறடிப்புகள் உண்டா? இல்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள் என்றால் அப்படியான குற்றச்சாட்டை வைப்பவர்கள் அதனைத் தக்கமுறையில் முன்வைத்தால் நல்லது. நம்மைப் போன்றவர்கள் எதிர்காலம் நீண்ட பயணம் என்றெல்லாம் பினாத்தமாட்டோம் அல்லவா.... :)

Edited by வல்வை சகாறா

எனக்கு இளையராஜா வந்தாலும் வராவிட்டாலும் ஒருவித பிரச்சனையுமில்லை. அகூதா அண்ணா, சொல்லுகிறேன் எண்டு குறை நினைக்க வேண்டாம் ஆனால் கடந்த ஒரு கிழமையாக அவதானித்ததில் கூறுகிறேன். உங்களின் சில கருத்துக்கள், நீங்களா எழுதுகிறீர்கள் என யோசிக்க வைக்கின்றன. உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் அதை நீங்களாகவே இறக்கிக் கொள்ளுகிறீர்கள். கறுப்புப் பணம், சிங்களத்தின் கை, இந்தியாவின் கை, வரி கட்ட மாட்டாங்கள், சனத்தை ஏமாத்திப் போட்டாங்கள் எண்டு இங்கு நீங்கள் உட்பட பலர் வைக்கும் ஒப்பாரி தாங்காமலே எழுத வந்தேன். உண்மையில் பிரச்சனை வழமையாய் நடுத்தி காசு பார்க்கிற கூட்டம் இதை குழப்ப வெளிக்கிட்டுது அதுக்கு கார்த்திகை மாசம் எண்டுறது ஒரு சாட்டு. இதுக்கு இயற்கை வேற தங்கட சைட்டாம்.

அவசரப்படாதீர்கள். அகுத்தா சிந்திக்க சில கருத்துக்களை முன்வைத்தார். அவர் எதைவாது நிறுவ முன் வரவில்லை. அவர் நிகழ்சியை எதிர்க்கவில்லை.

50$ கொடுத்து 30,000 மக்கள் இசை நிகழ்சிக்கு போகிறார்கள். அவுஸ்திரேலியாவில் தமிழரை நாடுகடத்துவதை 20-30 வெள்ளையர்கள் மட்டும் எதிர்த்து போராடியிருந்த படங்களைப் பார்த்தோம்.

அண்ணா சினிமாவை வைத்துத்தான் தமிழ் நாட்டை விழிப்படைய வைத்தார். அதை எந்த திசையிலும் பாவிக்க முடியும்.

அக்கூத்தா வைத்த கருத்துகளை ஆழமாக் சிந்தித்துவிட்டு பின்னர் ஒரு நாள் உங்கள் கேள்விகளை வையுங்கள்.

50$ கொடுத்து 30,000 மக்கள் இசை நிகழ்சிக்கு போகிறார்கள். அவுஸ்திரேலியாவில் தமிழரை நாடுகடத்துவதை 20-30 வெள்ளையர்கள் மட்டும் எதிர்த்து போராடியிருந்த படங்களைப் பார்த்தோம்.

ம்ம்.உண்மை மல்லை. வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆகிவிட்டர்கள் அல்லவா.இனி மற்ரவன் சகதமிழன் எக்கேடு கெட்டால் என்னா? அதிப்பற்ரி எல்லாம் கவலைப்பட நாங்கள் எல்லாம் என்ன யூதர்கள் போல் ஒற்றுமையான இனமா?

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.உண்மை மல்லை. வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆகிவிட்டர்கள் அல்லவா.இனி மற்ரவன் சகதமிழன் எக்கேடு கெட்டால் என்னா? அதிப்பற்ரி எல்லாம் கவலைப்பட நாங்கள் எல்லாம் என்ன யூதர்கள் போல் ஒற்றுமையான இனமா?

இல்லை

உழைத்தவனை ஈட்டியால் குத்தினோம்

குத்துகின்றோம்

குத்திக்கொண்டிருக்கின்றோம்

தேசியம் என்று எழுதினாலே அவனை வியாபாரி என்றோம்

மானத்துக்கு பயந்தவன் எவனாவது வந்து நிற்பானா முன்னால்??

மாவீரருக்கு வணக்கம் செலுத்தியவனை நடிகன் என்றோம்

எவனாவது வந்து விளக்கு கொழுத்துவானா?

எல்லாம் செய்துவிட்டு

எழுதிக்கடித்து கலைத்துவிட்டு

ஏன் காய்ந்து கிடக்குதென்று

இனி இருந்து அழுது என்ன பலன்????????????????? :( :( :(

Edited by விசுகு

[size=6]இல்லை

உழைத்தவனை ஈட்டியால் குத்தினோம்

குத்துகின்றோம்

குத்திக்கொண்டிருக்கின்றோம்

தேசியம் என்று எழுதினாலே அவனை வியாபாரி என்றோம்

மானத்துக்கு பயந்தவன் எவனாவது வந்து நிற்பானா முன்னால்??

மாவீரருக்கு வணக்கம் செலுத்தியவனை நடிகன் என்றோம்

எவனாவது வந்து விளக்கு கொழுத்துவானா?

எல்லாம் செய்துவிட்டு

எழுதிக்கடித்து கலைத்துவிட்டு

ஏன் காய்ந்து கிடக்குதென்று

இனி இருந்து அழுது என்ன பலன்?????????????????[/size]

Edited by தமிழ்சூரியன்

அன்புடன்...........

நிழலி சபேசன் கிருபன் வல்வை சகாரா! (இதில எல்லாம் அண்ணனும் அக்காவும்தான் அதை தனி தனி போடவில்லை)

உங்களுடைய கருத்துக்களை நான் மறுதலிக்கவில்லை. அதே நேரம் உங்களுடைய வார்த்தை பிரயோகங்களிலும் எனக்கு உடன்பாடு இல்லை. உங்களில் எதோ ஒரு இனம் தெரியாத மரியாதை இருப்பதன் காரணம் இதை எழுதுகிறேன். நீங்கள் அடிக்கடி ஏன் தேசிய வாதிகள் என்ற சொல்லை எழுதுகிறீர்கள் என்பது புரியவில்லை. தேசியவாதம் என்பது தேசியத்தின் பால் ஆனது. சில சுயநல வாதிகள் தமக்கு சாதகமாக தேசியவாதத்தை முன்வைக்கலாம். கருணாவும் லக்லசும் கூட தாம் மக்களுக்கு சேவை செய்வதாகத்தான் சொல்கிறார்கள் அவர்களும்தான் தேசியம் சார்ந்தே பேசுகிறார்கள். அவர்களுடைய கருத்துக்களுக்கு உங்களுக்கு எதிர் கருத்திருப்பின் அவர்களை நேரடியாகவே சாடலாமே? ஏன் நாட்டுக்கு உண்மையாக உழைப்பவர்களையும் இதற்குள் இழுக்க வேண்டும்? நீங்கள் பாவிக்கும் தேசிய வாதிகள் என்ற சொற்பிரயோகம் உண்மையான தேசியவாதிகளையும் சுடுகிறது. உங்களுடைய கருத்துக்கள் தேசியவாதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது. நீங்கள் தேசிய வாதத்திற்கு எதிரானவரா? தேசியவாதம் எந்த வகையில் தவறானது இதை நீங்கள் இதுவரை எழுதவில்லை.

தேசிய வாதத்திற்கு எதிரான கருத்து என்ற எத்தணிப்பில் இடையிடையே இளையராயவிட்கும் பூசை செய்கிறீர்கள் . அது உங்களுடைய சுய விருப்பு நீங்கள் ரசிக்கும் அளவிற்கு எனக்கு இசை புரியாமல் இருக்கலாம். அது உங்களுடைய தவறில்லை. ஆனால் மறைமுகமாக இளையராஜா பூசைக்கு தேசியவாதிகளை வெறும் சாம்பிராணி ஆக்குகிறீர்கள்.

அவர்களுக்கு இலாபம் வரவில்லை அதனால் தடுக்கிறார்கள். என்று சாடுகிறீர்கள். அவர்களுக்கு இலாபம் இருப்பின் இதை கார்த்திகை 27ஆம் திகதியே செய்வார்கள் என்று கூட எழுதி இருக்கிறீர்கள்.

மூட நம்பிக்கைகள் எமது இனத்திற்கு புதியதல்ல அது உங்களுக்கும் தெரியாதது அல்ல. நான் கடவுளை நம்புவதில்லை நீங்கள் நம்பலாம். கடுவுளை நம்புவபர்கள் செய்பவை அனைத்தும் எனக்கு எனக்கு வேடிக்கையாக இருக்கிறது . அனால் எனக்கு வேண்டபட்டவர்கள் செய்பதால் தள்ளி நின்று உங்களைப்போல் என்னால் சிரிக்க முடியவில்லை. அவர்களுக்கு எதிரான வார்த்தைகளை அள்ளி தெளிக்க முடியவில்லை. அவர்களுடைய உழைப்பு வீண் போகாது எப்படி காப்பது எனும் சிந்தனைதான் எழுகிறது.

ஒருவேளை கார்த்திகை மாதம் முழுதும் நோன்பிருக்கலாம் என்று அவர்கள் நம்பியிருக்கலாம். அதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் எனது உணர்வு வேறு கருபுலியின் உணர்வு வேறு அவர்களுடைய நம்பிக்கையின் கால் தூசாக கூட நான் இல்லை நீங்களும் இல்லை. எல்லோருடைய உணர்வும் எமைபோல்தான் இருக்க வேண்டும் என்ற இறுமாப்பில் இருந்துகொண்டு ............. மக்களை சுயமாக சிந்திக்க விடுங்கள் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறீர்கள். நீங்கள் மறைமுகமாக உங்களுக்கு சுயவிளம்பரம் செய்வது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா? சிலர் தெரிந்தும் அதை செய்கிறார்கள்.............. நீங்கள் தெரியாமல் செய்கிறீர்கள் என்று நம்புவதால் இதை எழுதுகிறேன்.

எல்லோருடைய உணர்வும் ஒரே அளவில் இல்லை............. இந்த அளவுதான் சரியானது என்று ஒரு அளவு கோலும் இல்லை. ஆக ஏன் அவர்களுடைய உணர்வை எங்களால் மதிக்க முடியாது? அதற்காக அதை ஏற்று கொள்ளவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. எதிர்கருத்துக்களுடன் சென்று சந்திக்காமல் ஏன் அவர்களை நட்புடன் சந்திக்க முடியவில்லை?

பிளவுக்காக காத்திருந்தவர்கல்போல் ஏன் கற்களாலேயே எறிகிறீர்கள்?

இதில் எந்த அளவிற்கு போலி தனம் இருக்கும் என்பது எனக்கு தெரியாது............. ஆனால் கார்த்திகை முழுதும் புனிதமானது என்ற நிலைபாட்டை எங்காவது சில மனதுகள் உடனடியாக உள்வாங்கியிருக்கும். விதைத்தவர்கள் இடத்தில் விஷம் இருந்திருக்கலாம் அனால் அது இப்போது விளையும் இடத்தில் மாவீரகள் மேல் உள்ள அன்பை தவிர வேறு இருக்காது. இதை கொஞ்சம் கவனத்தில் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களுடைய பார்வை பிழையானது என்று நான் சொல்ல முனையவில்லை.....

இன்னொரு விதமாகவும் இதை பார்க்கலாம் என்றுதான் சொல்ல முன்வந்தேன்.

வாசித்ததற்கு நன்றி!

மருதங்கேணி,

நான் எழுதவேண்டியவற்றில் அநேகமானவற்றை கிருபன் எழுதியிருப்பதால் அவற்றை தவிர்க்கின்றேன்.

நான் ஒரு புத்திசீவியோ அல்லது ஆழச் சிந்தனை உள்ளவனோ கிடையாது. என் கண்ணுக்கு முன் நடக்கும் விடயங்களில் இருந்து என் அடிப்படை அறிவைக் கொண்டு பகுப்பாய்ந்து முடிவுக்கு வருகின்றேன். வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க கூடியவரைக்கும் தவிர்க்கின்றேன்.

அதன் படி இன்றைய நிலையில் தமிழ் தேசிய வாதிகள் என்பவர்கள் போராளிகளுக்கு ஒரு கேடு என்றால் உள்ளன்புடன் கவலைப்படுகின்றவர்கள், முன்னால் போராளிகளின் குடும்பம் கஷ்டப்படுகின்றது என்பதை அறிந்தவுடன் தமக்குள் துடித்து தம் சொந்த வருமானத்தில் இருந்து பகிர விரும்புகின்றவர்கள், மாவீரரது / முன்னால் போராளியினது வாழ்வும் குடும்பமும் நடுத்தெருவுக்கு வருகின்றது என அறிந்து அதைக் கண்டு மனம் வெதும்பி தன்னால உதவ முடியுமா என எத்தனிப்பவர்கள், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அணில் பிள்ளை போன்று உதவ முன்வருகின்றவர்கள், போர்க்குற்றத்தினை எப்படி முன்நிறுத்தி அதன் மூலம் தீர்வைக் கொண்டு வர எத்தனிப்பது போன்று போராளிகள் / போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் என்றே நான் உறுதியாக நம்புகின்றேன்.

இதே போல் இன்றைய நிலையில் தேசிய வியாபாரிகள் என்போர், நேற்று வரைக்கும் போராளிகளுக்கு காசு சேர்த்து விட்டு போராட்டம் தோற்றவுடன் இனி கேட்க யாரும் இல்லை என்று திமிர் பேசி பதுக்கி வைத்திருப்பவர்கள், அப்படி பதுக்கிய காசில் / சொத்தில் ஒரு பகுதியையாயினும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்க மறுப்பவர்கள், வீரப் பேச்சும் தூண்டி விடுவதுமாக இருந்து விட்டு பின் கதவு வழியாக இலங்கை அரசுடன் பேரம் பேசுகின்றவர்கள், தனக்கு நிறைய பிள்ளைகள் இருந்து அவர்களை நன்கு படிப்பித்து பணம் சம்பாதிக்கவும் சவுகரியமான வாழ்வு வாழவும் தயார்படுத்தி விட்டு ஊரில் இருக்கும் ஒற்றைச் சிறுவனையும் ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்று உசுப்பேத்துபவர்கள், தான், தன் குடும்பம் மீண்டும் ஈழம்போய் வாழாமல் ஈழத்தில் தமிழர் சனத்தொகையைக் கூட்ட வேண்டும் என்று கூறி அங்குள்ள பெண்களை பிள்ளை பெறக் கேட்பவர்கள் என்ற எழுத எழுத நீளும் பட்டியலில் உள்ளவர்கள் என நம்புகின்றேன்.

இளையராஜாவின் நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். 4 மாதங்களுக்கு முன்னரே நடக்கப் போகின்றது என்று தெரிந்தும் இறுதியில் குழப்பினால் தான் நட்டமடைய வைக்கலாம் என்ற வியாபாரப் போட்டியிற்கு வேறு எக்காரணமும் கிடைக்காமல் மாவீரர்களை சாட்டி குழப்ப முனைந்த அயோக்கியத்தனத்தை செய்கின்றவர்களையும் அதற்காக மக்களை முட்டாள்களாக்க இந்தியாவின் கை, அடிவருடிகள், உளவு அமைப்பின் பின்னணி என்றெல்லாம் காரணம் காட்ட முனைவபவர்களையும் (குழப்ப முனைப்பவரின் கபடத்தை உணராமல் அதற்கு ஆதரவு கொடுப்பவர்களை இதில் சேர்க்கவில்லை) தேசிய வாதிகளாக கருத என்னால் எக்காலத்திலும் முடியாது என்பதையும் நம்புகின்றேன். (இந்த நிகச்சிக்கு டிக்கெட் வாங்கினீர்களா என இன்னொரு திரியில் என்னிடம் கேட்டு இருந்தீர்கள்: இல்லை; முதலில் நிகழ்ச்சிக்கு போக இருந்தனான், ஆனால் திடீரென ஏற்பட்ட பணச்செலவால் 400 டொலரை இதுக்கு செலவளிக்க முடியவில்லை)

மீண்டும் சொல்கின்றேன்..என் கண் முன்னால் நடக்கும் நிகழ்வுகளை வைத்து முடிவெடுக்கும் ஒருவன் நான். எப்பவும் என் வாதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை...ஆனால் என் வாதம் சரி என்று வாதாட எனக்கு சுதந்திரம் இருக்கு என்பதை மறுக்க மாட்டீர்கள்.

அத்துடன், ஒரு யாழில் பொறுப்பாளர்களில் ஒருவராக இருக்கும் என்னையும் சக கருத்தாளராக பார்த்த உங்களின் அன்பை மதிக்கின்றேன்.

நன்றி.

Edited by நிழலி
இறுதி வரியில் சிறு மாற்றம் செய்ய.

இதே போல் இன்றைய நிலையில் தேசிய வியாபாரிகள் என்போர், நேற்று வரைக்கும் போராளிகளுக்கு காசு சேர்த்து விட்டு போராட்டம் தோற்றவுடன் இனி கேட்க யாரும் இல்லை என்று திமிர் பேசி பதுக்கி வைத்திருப்பவர்கள், அப்படி பதுக்கிய காசில் / சொத்தில் ஒரு பகுதியையாயினும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்க மறுப்பவர்கள், வீரப் பேச்சும் தூண்டி விடுவதுமாக இருந்து விட்டு பின் கதவு வழியாக இலங்கை அரசுடன் பேரம் பேசுகின்றவர்கள், தனக்கு நிறைய பிள்ளைகள் இருந்து அவர்களை நன்கு படிப்பித்து பணம் சம்பாதிக்கவும் சவுகரியமான வாழ்வு வாழவும் தயார்படுத்தி விட்டு ஊரில் இருக்கும் ஒற்றைச் சிறுவனையும் ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்று உசுப்பேத்துபவர்கள், தான், தன் குடும்பம் மீண்டும் ஈழம்போய் வாழாமல் ஈழத்தில் தமிழர் சனத்தொகையைக் கூட்ட வேண்டும் என்று கூறி அங்குள்ள பெண்களை பிள்ளை பெறக் கேட்பவர்கள் என்ற எழுத எழுத நீளும் பட்டியலில் உள்ளவர்கள் என நம்புகின்றேன்.

நன்றி.

நன்றி நிழலி ..........மேல் குறிப்பிட்ட உண்மையான கருத்துடன் உடன்படுகிறேன் ..ஏனனில் எனக்கும் இந்த மனித நேயசெயர்பாட்டாளர்களுடைய. நடவடிக்கைகளை அன்று தொடங்கி இன்று வரை கண்ணால் பார்த்து உண்மையை பகிர்த்தறிபவன் என்ற வகையில் சிலவற்றை கூற விரும்புகிறேன் ............முள்ளிவாய்க்காலுக்கு முன் செயற்பட்ட பலர் நீங்கள் சொல்வது போல் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை ...ஆனால் அன்று தொட்டு இன்று வரை தொடர்ந்தும் ,தமது இலட்சியத்தை கொள்கை தவறாது செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப்பணியாளர்களையும் மேல்கூறிய விமர்சனங்கள் பாதிப்புக்குள்ளாக்கப்பட கூடாது என்பதே என் தாழ்மையான கருத்து .............நான் சில காலங்களுக்குமுன் சிறைக்கு சென்றேன் என்னும் திரியில் இப்படி செயல் பட்டு இன்று சிறை வாசம் அனுபவிக்கும் என் நண்பனை குறிப்பிட்டிருந்தேன் ..............உண்மையில் செயல்பட்டவர்களில் திறமையானவர்கள் .உண்மையானவர்கள் புலம்பெயர் சட்ட நடவடிக்கைக்குள் உட்பட்டு சிறைகளிலும்,வெளிப்படையாக தம் செயல்பாடுகளை செய்ய முடியாத நிலையில் ............பல அச்சுறுத்தல்களின் மத்தியிலும் உண்மையாய் .துணிவாய் செயல்படும் இந்த பணியாளர்களையும் [தேசியவாதிகளை ] இங்கே குறிப்பிடப்படும் விமர்சனங்கள் தாக்கி அவர்களுடைய செயற்பாட்டுக்கு தடையாய் இருக்க கூடாது என்பதை ஒரு தமிழன் என்ற வகையில் எதிர்பார்ப்பது தவறில்லை ..............நன்றி

மிகவும் ஆரோக்கியமாக இந்த விவாதத்தை ஆரம்பித்த மருதங்கேணிக்கும் என் நன்றிகள் ....அத்துடன் பல உண்மைகளை கூறிய கிருபன் அண்ணா ,சகாரா அக்கா அவர்களுக்கும் என் நன்றிகள் ........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.