Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண் உயரதிகாரிகளும் வீட்டு மனைவி மனப்பான்மையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]பெண் உயரதிகாரிகளும் வீட்டு மனைவி மனப்பான்மையும்[/size] ஆர்.அபிலாஷ்

[size=2]A_Colorful_Cartoon_Woman_Boss_Instructing_an_Underling_To_Keep_Working_Hard_Royalty_Free_Clipart_Picture_100810-186682-610053.jpg[/size]

[size=4]கடந்த வாரம் ஒரு கல்லூரியின் துறைத்தலைவர், வேலைக்கு ஆண் பேராசிரியர்களைக் குறிப்பாகத் தேடிக் கொண்டிருந்தார். ஏற்கனவே ஒரு பெண் விண்ணப்பித்திருப்பதாகவும், ஆனால் அவரை வேலைக்கு எடுக்கத் தயக்கமாக உள்ளதாகவும் கூறினார். காரணம் விசாரித்தால், பெண்கள் ரொம்ப அரசியல் பண்ணுகிறார்கள் என்று விநோதமான காரணம் ஒன்றை கூறினார். பின்னர் நான் வேலைக்குச் சேர்ந்த இடத்திலும் இன்னும் சில ஆண் பேராசிரியர்களைக் குறிப்பாய் தேடுவதாகவும் சொல்லி என்னை பரிந்துரைக்க கேட்டார்கள். இது இப்போது ஒரு பாணியாக உருவெடுக்கிறதா? பெண்கள் வேலையிடங்களில் அதிகம் தொல்லை தருகிறார்களா?[/size]

[size=4]பெண்களிடத்து ஒற்றுமை இல்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். அதாவது பத்து ஆண்கள் சகஜமாக சேர்ந்து பணியாற்றுவார்கள். கருத்து வேறுபாடுகள், பரஸ்பர வெறுப்பு இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் பெண்கள் பத்தை மூன்று நான்கு பிரிவுகளாக்கி பரஸ்பரம் ஜென்மப் பகை பாராட்டுவார்கள். இதற்கு உயிரியல் பின்னணி ஒன்று உள்ளதை அறிவோம். அதைப்பற்றி பிறகு பேசலாம்.[/size]

[size=4]

பொதுவாக அமர்ந்து செய்யும் மேஜை வேலைகளுக்கு பெண்களை அமர்த்தவே நிர்வாகங்கள் விரும்புகின்றன. பெண்கள் பொறுமையானவர்கள், கனிவானவர்கள் என்கிற பொதுப்புத்தி காரணமாய் கல்வித்துறையிலும் அவர்கள் கணிசமாக அமர்த்தப்படுகிறார்கள். நாம் இங்கு இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டும்.[/size]

[size=4]

ஒன்று, பெண்கள் இருக்கும் இடங்களில் சண்டை சச்சரவுகள் எளிதில் மூள்கின்றன. பொதுவாக பெண் உயரதிகாரிகள் கொடுங்கோலர்களாக இருப்பதாக உலகம் முழுக்க இன்று புகார் எழுகிறது. இதைப் பெண்களே ஏற்றுக் கொள்கிறார்கள். பெண்கள் பெண் மேலதிகாரிகளை விட ஆண்களின் கீழ்தான் வேலை பார்க்க விரும்புகிறார்கள். பெண் உயரதிகாரிகள் பெண் ஊழியர்களைக் கீழ்த்தரமாய் நடத்துவதாய், தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாய், அவர்களுக்குப் பதவியுயர்வு மறுப்பதாய் சர்வதேச அளவில் செய்யப்பட்ட ஆயுவுகள் கூறுகின்றன. இதற்கும் பெண்கள் பொதுவாக குழுக்களுக்குள் பரஸ்பரம் பகைமை பாராட்டுபவர்களாய் இருப்பதற்கும் தொடர்பு உண்டா? இந்தக் கேள்விகளைப் பரிசீலிப்போம்.

woman-boss1.jpg[/size]

[size=4]பெண்கள் அரசியல் தலைமைக்கு வரும்போது எளிதில் சகிப்புத்தன்மை அற்றவர்களாக, பண்பற்றவர்களாக மாறிப் போவதற்கு நம் நாட்டிலேயே ஜெயலலிதா, மம்தா பேனர்ஜி, மாயாவதி என உதாரணங்கள் பார்க்கிறோம். பெண் மேலதிகாரிகளின் இந்த மனப்பான்மைக்கு ஆய்வாளர்கள் ராணித்தேனீ நோய்க்குறி (queen bee syndrome) என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது இன்றும் வேலையிடங்களில் ஆண்களின் ஆதிக்கம்தான் அதிகம். பெண்கள் உயர்பதவிகளுக்கு வருவதற்கும் ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டி உள்ளது. அதனால் ஒரு பெண் உயரதிகாரி நிலைக்கு வருவதற்குக் கடுமையாகப் போராட அதிக திறமை படைத்தவராக இருக்க வேண்டும். மேல் பதவியை எட்டியதும் அவர்களுக்குப் பாதுகாப்பின்மை மனநிலை ஏற்படுகிறது. கீழிருக்கும் பிற பெண்களை அவர்கள் போட்டியாளர்களாக நினைக்கிறார்கள். அதனால் அவர்களைத் தொடர்ந்து மட்டம் தட்டி நெருக்கடி அளித்து வளர்ந்து விடாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். கேலப் வாக்களிப்பு ஆய்வின்படி 32% பெண்கள் ஆண் மேலதிகாரியின்கீழ் வேலை பார்க்கத்தான் விரும்புகிறார்கள். பெண் மேலதிகாரிகளை ஏற்கும் பெண்கள் 23% தான். ஒரு தேனீக் கூட்டுக்குள் ஒரே ஒரு ராணித்தேனீயும் அதற்குக் கீழ் எண்ணற்ற அடிமை ஆண் தேனீக்களும் இருப்பது போல் தான் இருக்க வேண்டும் என பெண் உயரதிகாரிகள் நினைக்கிறார்கள். இதுதான் சமூக உளவியலாளர்களின் கணிப்பு.[/size]

[size=4]ஆனால் இந்தக் கணிப்புப் பிரச்சினையின் ஒரு பக்கத்தை மட்டுமே பரிசீலிக்கிறது. போட்டியும் பாதுகாப்பின்மையும் மனிதர்களைக் கசப்பானவர்களாக, வன்மமானவர்களாக மாற்றும் என்பது உண்மை தான். ஆனால் பெண்ணதிகாரிகளின் சர்வாதிகார மனநிலைக்கு இது மட்டும் காரணம் அல்ல. முக்கியமாக இந்தக் கணிப்பு மேலோட்டமாக இருக்கிறது. பிரச்சினை உண்மையில் ஆழமானது.[/size]

[size=4]

Woman-boss-372.226.jpg[/size]

[size=4]பொதுவாக தமக்குக் கீழுள்ள பெண்களை ஊக்குவித்து மேலே கொண்டு வரும் பெண் உயரதிகாரிகளைப் பார்த்துள்ளேன். ஒரு குழுவை மிகத்திறமையாக வழிநடத்தும் பண்பாக பெண் உயரதிகாரிகளும் சமமாக உள்ளார்கள். ஆக, நாம் பெண் உயரதிகாரிகளின் பிரச்சினையைப் பொதுமைப்படுத்தல் ஆகாது. சில பெண்கள் முழுக்க சகிப்புத் தன்மை அற்றவர்களாக வன்மம் மிக்கவர்களாக ஆகி தனக்குக் கீழுள்ளவர்களைப் பழிவாங்கும் போக்கில் வேட்டையாடுகிறார்கள். இது பல அலுவலகங்களில் நடக்கிறது. இன்னொரு புறம் பல பெண்கள் தமது சகிப்பின்மை, பதற்றத்தை கடந்து சிறந்த உயரதிகாரிகளாக உருவெடுக்கிறார்கள். இதுவும் நடக்கிறதுதான். முதலில் மோசமான உயரதிகாரிகளின் உளவியலைப் பார்ப்போம். இறுதியில் நல்ல பெண் உயரதிகாரிகளின் மன-அமைப்பை அலசுவோம்.[/size]

[size=4]சகிப்பின்மை, பதற்றம், தொடர்ந்த வன்மம் ஆகியவை பொதுவான பெண் பண்புகளாக உள்ளன. இது உண்மையில் பெண்கள் பற்றிய பொதுபிம்பத்துக்கு மாறாக உள்ளது. பெண் பொறுமையின் உறைவிடம், அன்பின் உருவானவள் என்பதெல்லாம் ஆண்களின் பகற்கனவு மட்டுமே. பெண்கள் அவர்களுக்கான மனச்சிக்கல்களைக் கொண்டவர்கள். இவைதான் அவர்களின் வேலையிடத்து நடவடிக்கைகளுக்கு அடிப்படைக் காரணம். சில உதாரணங்களைப் பார்ப்போம்.[/size]

[size=4]பெண்கள் அழகான பெண்களை வெறுக்கிறார்கள். ஆண்கள் அழகான ஆண்களை வெறுப்பது குறைவு. அதை விட பல மடங்கு அதிகமாய். ஆண்களுக்கு பொதுவாய் பிற ஆண்களின் அந்தஸ்தும் அதிகாரமும்தான் பொறாமையை வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறது. ஆனால் பெண்களுக்கு உடல் தோற்றம் பற்றின பிரக்ஞை அதிகம். அவர்களை உடல் அடையாளம் சஞ்சலப்படுத்துகிறது. என் மனைவியின் அலுவலகத்தில் ஒரு பெண் கவர்ச்சியாக ஆடை அணிந்துவரும் ஒரே காரணத்துக்காக சக பெண் ஊழியர்கள் அவளைத் தனிமைப்படுத்தி பகைமை பாராட்டி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வேலையை ராஜினாமா செய்யும் நிலைமைக்குக் கொண்டு போனார்கள். அந்தப் பெண்ணுக்கு ஒரு கட்டத்தில் மன-அழுத்தம் முற்றி அலுவலகத்திலெயே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். பள்ளிகளில், கல்லூரிகளில் காதலை அதிக ஆவேசத்துடன் எதிர்ப்பவர்கள் பெண் ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் கண்கள் சதா எந்த ஆண் விழிகள் எந்தப் பெண்ணுடலைத் தீண்டுகிறது என்பதைக் கவனித்தபடியே உள்ளன. பெண்கள் நவீனமாய் ஆடையணிவதை பெண் ஆசிரியர்கள் உக்கிரமாய் எதிர்க்கிறார்கள். இதற்குக் காரணம், சக பெண்ணுடல் மீதான (ஆணின் பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான) பெண்ணின் அக்கறையா அல்லது பாலியல் பொறாமையா என்கிற விவாதத்துக்குள் இப்போது செல்ல வேண்டாம். பெண்கள் பாலியல் நெருக்கடி மற்றும் பதற்றம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். பாலியலைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் உடல்களை அஞ்சுகிறார்கள்.[/size]

[size=4]சுதந்திரமான பாலியலை ஆண்களும், குறிப்பாக வலதுசாரி ஆண்கள் எதிர்க்கிறார்களே, அது ஏன் என்ற கேள்வியும் வருகிறது. அதற்குக் காரணம் அவர்களுக்குள் உள்ள பெண்மைதான். இந்தப் பெண்மையை நாம் வேறு பெயரால் அழைக்க வேண்டும்.

WomanBossScaredEmployee.jpg[/size]

[size=4]பெண்களின் இந்த ஒழுக்கப் போலீஸ் மனநிலைக்கும் குடும்ப அமைப்புக்கும் ஒரு தொடர்புள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெண்கள் குடும்பத்தை நிர்வகிப்பவர்களாக இருந்து வந்துள்ளதால் குடும்ப கட்டமைப்பின் பாதுகாப்பு அவர்களுக்கு அதிமுக்கியமாய் இருந்துள்ளது. வேட்டையாடியும் வேலை செய்தும் குடும்பத்துக்குப் பொருள் கொண்டு வரும் ஆணை அவர்கள் தக்க வைத்தாக வேண்டும். பிற பெண்களை அவர்கள் போட்டியாளர்களாக நினைப்பது இங்கிருந்து துவங்கி இருக்க வேண்டும். அடுத்து நவீனக் காலத்தில் பெண்கள் வேலைக்கு வரும் போது அவர்கள் வேலை இடத்தை ஒரு குடும்பமாகப் பாவிக்கிறார்கள். அங்கு அவர்கள் முழுமையான அதிகாரத்தை ஸ்தாபிக்க, கட்டுப்பாட்டை நிறுவ முயல்கிறார்கள். பிற பெண் போட்டியாளர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற தூண்டுதல் இயல்பாகவே ஏற்படுகிறது. [/size]

[size=4]

பொதுவாக பெண்களை வேலைக்கு வைப்பதில் உள்ள அனுகூலம் அவர்கள் எதையும் கவனத்துடன் அக்கறையும் சின்னச் சின்ன தகவல்களில் ஆர்வம் காட்டி செய்வார்கள் என்பது. சுருக்கமாக அவர்கள் ஆண்களை விட பொறுப்பானவர்கள். இது உண்மையே. ஆனால் பிரச்சினை பெண்கள் இந்த சின்ன விசயங்களின் மீதான பொறுப்புணர்வை பல சமயங்களில் மிகைப்படுத்தி பதற்றமாகிறார்கள் என்பது. குழந்தையின் சட்டைககாலரில் உள்ள அழுக்கைப் பற்றி இடிந்தகரை அணு உலை அளவுக்குக் கவலைப்படும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஒழுங்கில் சின்னதாய் குலைவு ஏற்பட்டாலே பெண்கள் மிகவும் பதற்றமாவார்கள். அனைத்தும் மிக ஒழுங்காக கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இதை ஒரு பள்ளிக்கூட ஆசிரிய மனநிலை எனலாம்.[/size]

[size=4]பொதுவாக பள்ளிக்கூட ஆசிரியர்கள் மாணவர்களை முழுக்க கட்டுப்படுத்தலாம் எனும் கற்பனையோடு இருப்பார்கள். குழந்தை என்பது அவர்களுக்கு ஒரு இயந்திரம். அதைத் தொடர்ந்து முறுக்கேற்றி சரி பார்த்துக் கொண்டே இருப்பார்கள். பல ஆசிரியர்கள் வகுப்புகளில் கட்டுப்பாட்டை இழந்து கத்துவது, மாணவர்களைப் பெருங்குற்றம் இழைத்தது போன்று தண்டிப்பது எதற்கென்று பார்த்தோமானால் ஒரு சின்ன விசயமாக இருக்கும். பெண்கள் மேலதிகாரியானதும் இந்த "பள்ளி ஆசிரியர் மனநிலையை" அலுவலகத்துக்கு கொண்டு வருவார்கள். பல சமயங்களில் ஒரு அலுவலகத்தில் பீதிச் சூழலை ஏதாவது அற்பக் காரணத்துக்காக ஏற்படுத்துவார்கள். நிலநடுக்கம் வந்தது போல் ஊழியர்கள் கையைப் பிசைந்தபடி நிற்பார்கள். சர்வாதிகார பெண் மேலதிகாரிகள் இதுபோன்ற பீதிச் சூழல்களில் திளைக்கக் கூடியவர்கள். அவர்கள் தமக்கு மேல் கூரை பற்றி எரியும்போது உள்ளூர அமைதியை உணர்கிறார்கள்.[/size]

[size=4]women-boss.jpg[/size]

[size=4]இப்படியான பெண்கள் சின்னச் சின்ன ஒழுக்கப்பிசகுகள் ஒரு வேலையின் பெரிய இலக்கைப் பாதிப்பதில்லை என்பதை உணர்வதில்லை. வேலையிடத்தில் தவறு நேர்வது இயல்புதான், தவறிழைத்தவரை ஒரு சட்டைக்காலரைப் போல போட்டுத் தேய் தேயென்று தேய்க்க வேண்டியதில்லை என்று புரிந்து கொள்வதில்லை. பல மாதிரியான மனிதர்கள் ஒரு வேலைக்குழுவில் இருப்பார்கள். அவர்களை இயந்திரத்தனமாக துல்லியமாக இயங்க வைப்பது சாத்தியமல்ல. அவரவர் கோணலுடன் தனித்துவ பாணியுடன் வேலை பார்த்தாலும் இறுதியில் இலக்கை எப்படியும் எட்டிவிட முடியும் என்ற உண்மையை ஏற்பதில்லை. மருமகள் சமையலை சதா குற்றம் கண்டுபிடிக்கும் மாமியார் போல பெண் உயரதிகாரிகள் நீதிவான் மனநிலையில் எப்போதும் இருக்கிறார்கள். வேலைக்காரி பெருக்கி விட்டுப் போன தரையை மீண்டும் ஒருமுறை பெருக்கி திருப்தி அடையும் வீட்டு மனைவி போல் அவர்கள் அனைத்து வேலைகளையும் தம்மால் மட்டுமே சரியாக செய்ய முடியும் என விடாப்பிடியாய் நம்புகிறார்கள். அற்பமான காரியங்களை மிகைப்படுத்தி அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆவேசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக சுத்தம் செய்யும் பொருட்கள் பற்றிய விளம்பரங்கள் (தரை துடைக்கும் லோஷனில் இருந்து துணி துவைக்கும் பொடிவரை) ஏதோ பாக்டீரியாவால் குடும்பமே அழிந்துபடும் எனும் பீதியை பெண் வாடிக்கையாளரிடத்து உருவாக்குவதைப் பாருங்கள். பெண்கள் ஒரு அலுவலகத்தில் நுழைந்ததும் அங்குள்ள மாறுபட்ட ஊழியர்களை பாக்டீரியாக்களாக நினைக்கிறார்கள். அவர்கள் மனதில் ஒரு மூடி டார்மெக்ஸ் ஊற்றி அவர்களை அழித்து இடத்தை சுத்தமாக்கும் கற்பனை தோன்றுகிறது. பெண்களின் சர்வாதிகாரமும் சகிப்பின்மையும் வீட்டு மனைவியின் கட்டுப்பாட்டு வெறியில் இருந்து தோன்றுகிறது. இது ஒரு அடிப்படையான உளவியல்/உயிரியல் பிரச்சினை.[/size]

[size=4]பெண்கள் உயரதிகாரிகளாக இருக்க தகுதியானவர்களா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ஒரு ஊழியனாக நான் ஆண்களின்கீழ் வேலை பார்க்க விரும்புவேன் என்றாலும் நான் ஒரு நிறுவனம் நடத்தினால் நிர்வாகப் பொறுப்பை ஒரு பெண்ணை நம்பித்தான் ஒப்படைப்பேன். தொண்ணூறு சதவீதம் பெண்கள் கறாராக அக்கறையாக எந்த வேலையையும் செய்து முடிக்கக் கூடியவர்கள். ஆக, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு உள்ளதா என யோசிக்க வேண்டி உள்ளது.[/size]

[size=4]ஒரு கலாச்சார அளவில் பெண்கள் குடும்பப் பொறுப்புகளில் இருந்து மெல்ல மெல்ல விலகி சமூகப் பொறுப்புகளை ஏற்பவர்களாக மாறும்போது அவர்கள் மேற்சொன்ன பள்ளி ஆசிரியர் மனநிலையில் இருந்து விலகக் கூடும். நிர்வாகம் என்பது தனிமனிதர்களை அவர்கள் போக்கில் பணி செய்ய அனுமதித்து இலக்கை எட்டச் செய்யும் உத்தி என்பதை அவர்கள் புரிந்து கொள்ளக் கூடும். தமக்குத் தொழிலில் போட்டி பெண்கள் அல்ல, ஆண்கள் தாம் எனும் முடிவுக்கு அவர்கள் வரக் கூடும். தோற்றத்தை விட அதிகாரமும் அந்தஸ்துமே முக்கியம், பாலியல் அச்சுறுத்தல் வெறும் கற்பிதம் என அவர்கள் உணரக் கூடும். நிஜமான பெண் விடுதலை என்றால் பெண்கள் ஆண்களிடம் இருந்து விடுபடுவதல்ல; பெண்கள் தம் மிகுதியான "பெண்மை" மனநிலையில் இருந்து கொஞ்சம் வெளியேறி கொஞ்சம் ஆண்மையை வரிப்பதுதான். இங்கிருந்து நாம் ஒரு உளவியல் தீர்வுக்குச் செல்வோம்.[/size]

[size=4]பெண்மை என்பது மனநிலை மற்றும் பௌதீகமாக பெண்கள் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. "குடும்ப மனைவி மனப்பான்மை" பல ஆண்களிடம் இருப்பதைக் காண்கிறோம். சச்சின் அணித்தலைவராக இருந்த போது அப்படித் தான் இருந்தார். அவர் பதினோரு பேரின் வேலையையும் தன் பாணியில் தானே செய்ய நினைத்தார். செயற்கையான பதற்றத்தை உருவாக்கினார். தோனி அமைதியாக சற்று விலகல் மனநிலையுடன் அணியை சுலபமாக்க் கட்டுப்படுத்துகிறார். அவரது நிர்வாகத்தின் சிறப்பு கீழிருப்போர் அவரது அதிகாரத்தின் கடுமையை உணர்வதில்லை என்பது. சச்சினிடம் பெண்மை மிகுதி. தோனியிடம் ஆண்மையும் பெண்மையும் சமநிலையில் இருக்கிறது. இந்தச் சமநிலை குலையும்போது மனிதன் தன்னம்பிக்கையை, அமைதியை இழக்கிறான், நெருக்கடிக்குள்ளாகி பலவீனமாகிறான். ஆண்கள் எந்தளவு தமக்குள் ஆண்மையை மிகுதியாக விடக் கூடாதோ பெண்களும் அதுபோல் பெண்மையை அதிகமாக அனுமதிப்பது ஆகாது. அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் ஆண்களைப் போல் நடக்க முயல்கிறார்கள் என்பது பொய். அவர்கள் மிகுதியான பெண்மையுடன் இயங்குகிறார்கள், "பெண்மை" என்பது நாம் கற்பனாவாதமாய் புரிந்துகொள்வது போல் அத்தனை சாதகமானது அல்ல என்பதே உண்மை.[/size]

[size=4]பெண்கள் முதலில் முழுக்க "பெண்ணாவதில்" இருந்து தம்மை பாதுகாக்க வேண்டும். அதற்கு அவர்கள் நவீன விழுமியங்களை ஏற்க வேண்டும். சுதந்திர சிந்தனை கொண்ட பெண்களை நிர்வாகங்கள் உயர்பதவிகளில் அமர்த்துவது மேற்குறிப்பிட்ட பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்க உதவும். ஒரு பக்கம் ஏற்கனவே வேலையில் உள்ள சர்வாதிகாரப் பெண் உயரதிகாரிகளுக்கு பக்குவம் ஏற்படுத்தும்படியான மேலாண்மை பட்டறைகளை நிர்வாகங்கள் நடத்த வேண்டும். கீழுள்ள ஆண், பெண்களைக் கனிவாக நடத்தி அடிப்படை மரியாதை நல்கியே கூட கட்டுப்படுத்த முடியும் என்பதைக் கற்பிக்க வேண்டும். இந்த அடிப்படை அறத்தை நிறுவன விதிகளில் ஒன்றாக வலியுறுத்த வேண்டும். பெண்களை வேலைக்குத் தேர்வு செய்யும்போது அவர்களுக்கு உளவியல் தேர்வு வைத்து அவர்களது ஆளுமையை அளவிடுவதும் உதவும்.[/size]

[size=4]ஆண்கள் உலகை ஆண்டதால்தான் இத்தனை போர்கள், வன்முறை, உயிரிழப்புகள் என்று பெண்ணியவாதிகள் இதுவரை பேசி வந்தார்கள். ஆனால் இப்போது பெண்கள் விடுதலை பெற்று ஒரு சின்ன அளவில் உயரதிகாரி நிலையை அடையும்போது பிற பெண்கள் அவர்களிடம் இருந்து தலைதெறிக்க ஓடித் தப்ப பார்க்கிறார்கள். இன்று இந்தியாவை ஆளும் ஒரு பெண் மிகக் குரூரமாக ஈழப்போரை நடத்தி லட்சோபலட்சம் மக்களைக் கொன்று அதைப் பற்றி எந்த அக்கறையும் குற்றவுணர்வும் இன்றி இருக்கிறார். ஜெயலலிதா இங்கு அவிழ்த்து விட்ட சர்வாதிகாரத்தை, இரக்கமின்மையைப் பார்த்தோம். ஆக, ஆண்மை அளவுக்கு பெண்மையும் ஆபத்தானது தான்.[/size]

[size=4]இனி இந்த உலக சமூகத்துக்கு ஆண்மையும் பெண்மையும் மிகாதவர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களால்தான் மற்றொரு உலகப்போரைத் தடுக்கவும் மானுட அறத்தை தக்க வைக்கவும் முடியும். [/size]

http://uyirmmai.com/...s.aspx?cid=6031

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இவர் என்ன சொல்ல வாறார்?

கிருபனுக்கு ஏதோ விளங்கியிருக்குப்போல.... இவர் நெடுக்கருக்கு அண்ணாவோ தம்பியோ... :(

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

வருகின்ற தைமாதம் இருந்து, எனக்கு பெண் அதிகாரியே.. வருகின்றார்.

ஆரம்பத்திலையே... ஜொள்ளு, விட்டு வைப்பது நல்லமா? அல்லது எமது ஆணாதிக்கத்தைக் காட்டுவது நல்லமா?

எண்டு யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.smiley-think005.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இவர் என்ன சொல்ல வாறார்?

கிருபனுக்கு ஏதோ விளங்கியிருக்குப்போல.... இவர் நெடுக்கருக்கு அண்ணாவோ தம்பியோ... :(

[size=4]பெண்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டால் பிரச்சனை இல்லை என்று சொல்லவாறார்.[/size]

[size=4](உங்களுக்கு இது புரியாது போனதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. அதை பற்றிதானே மேலே எழுதிருக்கிறார் எப்படி சொன்னாலும் புரியாதாம். பெண்களுக்கு கோபம் கூடாதம் தயவு செய்து அதை என்னிடத்தில் காட்டாது கொஞ்சம் பொறுமை பேணி பழகுங்கள்)[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேண்டும் என்பது ஆணாதிக்கத்தின் குரல்.

உதாரணத்திற்கு எடுத்தால் ஒரு வீட்டில் உள்ள யாராக இருந்தாலும் அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் அதிகமாக அறிந்து வைத்திருக்கக்கூடிய நுண்ணறிவு பெண்களுக்குத்தான் இருக்கிறது ஆண்களுக்கு அது பூச்சியம்தான். அதைப்போலத்தான் பொது விடயங்களில் அல்லது உயர் பதவிகளில் அமர்ந்திருக்கும் பெண்களுக்கும் மற்றவர்களுடைய தவறுகளை அதிகம் உணரக்கூடிய தன்மை இருக்கிறது. ஆண்களுக்கு அந்தத் தகைமைகள் இருந்தாலும் அவர்களிடம் பலவீனங்களும் அதிகம் இருக்கும் வாய்ப்புகளால் அவர்களுடைய முயற்சிகளில் தீவிரம் இருப்பதில்லை..... இதைத் தெரியாமல் மருதரும் வந்து கட்டுரையாளனுக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு நிற்பதைப்பார்த்தால் கோபம் வரவில்லை பரிதாபம் பிறக்கிறது. :rolleyes:

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைக்கு... இன்று, நாள் சரியில்லைப் போல்... கிடக்குது. :D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைக்கு... இன்று, நாள் சரியில்லைப் போல்... கிடக்குது. :D:lol::icon_idea:

ஏன் ஏதும் சாத்திரம் பார்த்தனீங்களோ?

எல்லா நாளும் நன்னாளே என்ற நம்பிக்கை உள்ளவர்களுக்கு சரி சரியில்லை என்பது என்றும் இல்லை... <_< இருந்தாலும் தமிழ்சிறீக்குத்தான் முகத்தில எவ்வளவு மகிழ்ச்சி.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் நடந்திருக்கும்..

பெண் என்பதால் நேர்முகத் தேர்வுக்கு அழைக்காமல் விட முடியாது. அது சட்டப்படி குற்றமாகும். ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேண்டும் என்பது ஆணாதிக்கத்தின் குரல்.

உதாரணத்திற்கு எடுத்தால் ஒரு வீட்டில் உள்ள யாராக இருந்தாலும் அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் அதிகமாக அறிந்து வைத்திருக்கக்கூடிய நுண்ணறிவு பெண்களுக்குத்தான் இருக்கிறது ஆண்களுக்கு அது பூச்சியம்தான். அதைப்போலத்தான் பொது விடயங்களில் அல்லது உயர் பதவிகளில் அமர்ந்திருக்கும் பெண்களுக்கும் மற்றவர்களுடைய தவறுகளை அதிகம் உணரக்கூடிய தன்மை இருக்கிறது. ஆண்களுக்கு அந்தத் தகைமைகள் இருந்தாலும் அவர்களிடம் பலவீனங்களும் அதிகம் இருக்கும் வாய்ப்புகளால் அவர்களுடைய முயற்சிகளில் தீவிரம் இருப்பதில்லை..... இதைத் தெரியாமல் மருதரும் வந்து கட்டுரையாளனுக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு நிற்பதைப்பார்த்தால் கோபம் வரவில்லை பரிதாபம் பிறக்கிறது. :rolleyes:

[size=4]இப்படி நீங்கள் சொல்கிறீர்கள் .............[/size]

[size=4]கட்டுரையாளன் அப்படி சொல்கிறான். [/size]

[size=4]என்ன எழுதியிருக்கு என்று கேட்டிருந்த கேளிவிக்குதான் நான் பதில் எழுதினேன். அது கடுரையிலேயே எழுதியிருக்கு........ எப்படி சொன்னாலும் புரியாது. தங்களுக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆனவ்த்திட்கு மட்டும் குறையிருக்காது என்று எழுதியுள்ளார்கள் என்று. [/size]

[size=4]உண்மை போல்தான் இருக்கிறது உங்களுடைய கருத்துக்களை வாசிக்க...........[/size]

[size=4](திரும்பவும் எழுதுகிறேன் பெண்களுக்கு பொறுமை அழகாம்)[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இவர் என்ன சொல்ல வாறார்?

கிருபனுக்கு ஏதோ விளங்கியிருக்குப்போல.... இவர் நெடுக்கருக்கு அண்ணாவோ தம்பியோ... :(

ஹி..ஹி.. எழுதியவர் வெறும் இந்தியக் கண்ணோட்டத்தில் எழுதியிருக்கின்றார். என்னுடன் வேலை செய்த இந்திய நண்பர்கள் தாங்கள் இந்தியாவில் வேலை செய்தபோது மேலாளராகப் பெண்கள் இருந்தால் வறுத்து எடுத்துவிடுவார்கள் என்று கவலைப்பட்டுச் சொன்னார்கள். ஆனால் ஆணோ/பெண்ணோ ஒவ்வொருவருக்கும் என்று ஒவ்வொரு குண இயல்புகள் இருந்தாலும் தொழில்சார் கற்கை நெறிகள்/பயிற்சிகள்/பட்டறைகள் சிறந்த மேலாளர்களாக உருவாக்க உதவும்..

கடந்த வருடம் ஒரு வட இந்தியர் எனக்கு மூன்று மாதங்களாக மேலாளராக இருந்தபோது "ரீச்சர்" மாதிரி நடக்க முயற்சித்தவர். என்றாலும் இரும்பைத் தின்று தண்ணி குடிக்கிற நம்மகிட்ட சரிவரவில்லை!

இபோதும் நான் வேலை செய்யும் இடத்தில் எனது மேலாளாராக ஒரு அமெரிக்கப் பெண் உள்ளார். மிகவும் பொறுப்பாக, தேவையான சுதந்திரத்துடன் வேலை செய்வதை ஊக்குவிப்பதால் எதுவித சிக்கலும் இல்லை.

அதேவேளை எனது குழுவில் பல பெண்கள் இருக்கின்றார்கள்.. அவர்கள் எல்லோருடனும் நான் வழிந்து பழகாமல் (நான் கறார் பேர்வழியாக்கும் :icon_mrgreen: ), வேலை வாங்குவது சிலருக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டு பண்ணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் நடந்திருக்கும்..

பெண் என்பதால் நேர்முகத் தேர்வுக்கு அழைக்காமல் விட முடியாது. அது சட்டப்படி குற்றமாகும். ஒரு சில [size=4]விதிவிலக்குகள்[/size] இருக்கலாம்.

[size=4]பெண்கள் பற்றியும் எழுதி...[/size]

[size=4]விதிவிலக்கு என்றும் எழுதியிருக்கிறீர்கள்.[/size]

[size=4]இதை வந்து வாசிக்கும் பெண்களிடம் நன்றாக வாங்கி கட்ட போகிறீர்கள். ஏன் ஆண்களுக்கு விதிவிலக்கு இல்லையா? அப்படி என்று.[/size]

[size=4]தப்பிக்க ஒரே வழிதான் உண்டு.....[/size]

[size=4]விதியை மாற்றிவிடுங்கள்![/size]

ஹி..ஹி.. எழுதியவர் வெறும் இந்தியக் கண்ணோட்டத்தில் எழுதியிருக்கின்றார். என்னுடன் வேலை செய்த இந்திய நண்பர்கள் தாங்கள் இந்தியாவில் வேலை செய்தபோது மேலாளராகப் பெண்கள் இருந்தால் வறுத்து எடுத்துவிடுவார்கள் என்று கவலைப்பட்டுச் சொன்னார்கள். ஆனால் ஆணோ/பெண்ணோ ஒவ்வொருவருக்கும் என்று ஒவ்வொரு குண இயல்புகள் இருந்தாலும் தொழில்சார் கற்கை நெறிகள்/பயிற்சிகள்/பட்டறைகள் சிறந்த மேலாளர்களாக உருவாக்க உதவும்..

கடந்த வருடம் ஒரு வட இந்தியர் எனக்கு மூன்று மாதங்களாக மேலாளராக இருந்தபோது "ரீச்சர்" மாதிரி நடக்க முயற்சித்தவர். என்றாலும் இரும்பைத் தின்று தண்ணி குடிக்கிற நம்மகிட்ட சரிவரவில்லை!

இபோதும் நான் வேலை செய்யும் இடத்தில் எனது மேலாளாராக ஒரு அமெரிக்கப் பெண் உள்ளார். மிகவும் பொறுப்பாக, தேவையான சுதந்திரத்துடன் வேலை செய்வதை ஊக்குவிப்பதால் எதுவித சிக்கலும் இல்லை.

அதேவேளை எனது குழுவில் பல பெண்கள் இருக்கின்றார்கள்.. அவர்கள் எல்லோருடனும் நான் வழிந்து பழகாமல் (நான் கறார் பேர்வழியாக்கும் :icon_mrgreen: ), வேலை வாங்குவது சிலருக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டு பண்ணவில்லை.

[size=4]நீங்களும் நல்ல வசீகரமாக இருக்கிறீர்கள்.......[/size]

[size=4]எல்லா சுதந்திரமும் இருக்கு என்று வேற சொல்கிறீர்கள்.[/size]

[size=4]இனி சிக்குப்பட என்ன இருக்கு?[/size]

[size=4]வேலையும் வீடுமாக வாழ்க்கை போகிறது என்று சுருக்கமாக எழுதியிருக்கலாம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இப்படி நீங்கள் சொல்கிறீர்கள் .............[/size]

[size=4]கட்டுரையாளன் அப்படி சொல்கிறான். [/size]

[size=4]என்ன எழுதியிருக்கு என்று கேட்டிருந்த கேளிவிக்குதான் நான் பதில் எழுதினேன். அது கடுரையிலேயே எழுதியிருக்கு........ எப்படி சொன்னாலும் புரியாது. தங்களுக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆனவ்த்திட்கு மட்டும் குறையிருக்காது என்று எழுதியுள்ளார்கள் என்று. [/size]

[size=4]உண்மை போல்தான் இருக்கிறது உங்களுடைய கருத்துக்களை வாசிக்க...........[/size]

[size=4](திரும்பவும் எழுதுகிறேன் பெண்களுக்கு பொறுமை அழகாம்)[/size]

இப்படியே சொல்லிச் சொல்லி பெண்களை முட்டாளாக்கவேண்டாம். அழகு என்பது பொறுமையில் இல்லை பாருங்கோ..

என்னுடைய வேலையிடத்தில் பெண்தான் முதலாளி அத்தோடு பெண்கள்தான் அதிகம் அங்கு பணிபுரிகிறார்கள். நான் ணைந்த சமீப காலத்திற்குள்ளாகவே இந்த நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அதில் குறிப்பிடக்கூடிய விடயம் என்ன என்றால் இற்றைக்கு 3 வருடங்களுக்கு முன்பு வரையும் அது ஆணால் நிர்வாகிக்கப்பட்டு வந்தது. நீண்டகாலமாக ஆணால் நிர்வாகிகக்கப்பட்டுவந்த நிறுவனம் வெவ்வேறாக இரண்டு மூன்று கட்டிடங்கள் வாடகைக்கு எடுத்து பொருட்கள் பாதுகாகக்கப்பட்டு வந்தன. எப்போது அவருடைய மனைவி வந்து அப்பொறுப்புக்களை ஏற்றாரோ அன்றிலிருந்து ஒரு வேகமான வளர்ச்சி நிலையை எட்டி இன்று மிகப்பெரிய சொந்தக்கட்டிடத்தில் மிகக்கச்சிதமாக இயங்கி வருகிறது. ஊதாரித்தனமான பல விடயங்களை அப்பெண் கச்சிதமாகக் கையாண்டு நிறுவனத்திற்குப் பாதிப்பு வராமலும் தொழிலாளர்களிடம் சங்கடத்தையும் உருவாக்காமல் அவர் கையாண்டு இன்று வெற்றி பெற்ற பெண்மணியாக இருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் அவர் நான்கு பிள்ளைகளின் தாயாக இருந்து ஓரளவு அவர்களுக்கு வயது வந்த பிற்பாடுதான் நிறுவனத்தில் தனது முழுமையான கவனிப்பைச் செலுத்தினார். தொழிலாளர்களை வருத்தும் பழக்கமும் இல்லை அதற்கு நல்ல உதாரணம் என்னுடைய வேலைநேரம். எனது கணவர் நீண்டதூரத்திற்கு அப்பால் வேலைக்கு அமர்ந்த பொழுது எனக்கு என்னுடைய வேலையை விடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம் பாடசாலை முடிந்த நேரம் பிள்ளைகளை பாடசாலை பேரூந்திலிருந்து பொறுப்பெடுக்க வேண்டும் எனக்கு அருகாமையில் குழந்தைகள் காப்பகம் இல்லை அதன் காரணத்தால் அவர்களுக்காக நான் உடனடியாக வேலையை விடவேண்டிய அவசர நிலை இருந்தது. என்னுடைய நிலையைக்கூறி வேலையை விடப்போகிறேன் என்று கூறியபோது உடனடியாகவே வேண்டாம் நீ உனக்கு இயலக்கூடிய வகையில் உனது வேலைநேரத்தை மாற்றிக் கொள் என்று அனுமதி தந்ததுடன் எனக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள் உன்னுடைய பிரச்சனை எனக்கும் புரியும் என்று இன்று வரைக்கும் எனக்கு வேலை இழப்பு இல்லாமல் தொடர்ந்து செய்ய அனுமதி தந்துள்ளார். நிச்சயமாக இந்த இடத்தில் ஆண் இருந்திருந்தால் இப்படிப்பட்ட சலுகையை நான் பெற்றிருக்க முடியாது

மேலும் இந்தக்கட்டுரை எதற்காக எழுதப்பட்டதோ நானறியேன். கடைசியில் சோனியாகாந்தியையும், யெயலலிதவையும் சுட்டிக்காட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை எங்கேயோ எல்லாம் சுற்றி அவர்களில் கொண்டுபோய் முடிக்கப்பட்டிருக்கிறதா?

தற்போதைய மேலாளர் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. முழுச் சுதந்திரம் தந்துள்ளார். அவரை மேலதிகாரியாகவே உணர முடிவதில்லை. எந்தப் பிரச்சனையையும் பயமில்லாமல் கதைக்கலாம். பண்ணாத பகிடியில்லை, நக்கலில்லை. பின்னால் திரிந்து மேய்க்க மாட்டார். அதனால் ஊழியர்கள் பொறுப்புடன் வேலை செய்கிறார்கள். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுங்காக வேலை நடக்கும்.

அவரிற்கு கீழே உள்ள உப பிரிவில் ஒரு சீனப் பெண் தலைமை வகிக்கிறார். ஊழியர்களை விடுப்புப் பார்ப்பதுதான் வேலை. அவரிற்கு தொழிலைப் பற்றிய அறிவு குறைவு. சின்னப் பிரச்சனைகளை சிக்கலாக்குவார். தனது முன் ஏற்றத்திற்காக மற்றவர்களைப் பலியிடுவார். தன்னையும் கொடுப்பார்.

படிக்கும் பொழுது பாக்கிஸ்தான் பெண்மணியின் கீழே வேலை செய்துள்ளேன். மகா மோசம்.

கற்றுக் கொண்ட அனுபவப் பாடங்களில் இருந்து, 'உயரதிகாரமை' என்பது சமூகக் கட்டமைப்பில் இருந்து வந்ததாய் உணருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலியின் கருத்துடன் ஒத்துப் போகிறேன். தேசி, சீன பெண் அதிகாரிகளுடன் வேலை செய்ய விருப்பமில்லை. உளவு பார்ப்பதிலும் கதை கட்டுவதிலும் கில்லாடிகள். இரண்டு பெண் அதிகாரிகளின் கீழ் வேலை செய்திருக்கிறேன். அவர்களுக்கு பூச்செண்டு வாங்கிவந்து கொடுத்து விடுவேன். அத்துடன் எனது ரூட் கிளியர். அத்துடன் உனது பெர்வியூம் நன்றாக இருக்கிறது, தலைமயிர் அலங்காரம் அந்த மாதிரி, ஜிம்முக்குப் போறியா? உடம்பு இப்பிடிக் குறைஞ்சிட்டுதே என்றும் இடைக்கிடை கேட்டு வைப்பேன். விளைவு, மற்றவர்கள் எரிச்சல் படும் அளவுக்கு சலுகைகள் கிடைக்கும். எனக்கு முதல் அலுவலகத்தில் இருந்த எனது வெள்ளைகாரி முதலாளி அம்மா ஒரு தங்கப் பவுன். அவவின் வீட்டுக்கும் போயிருக்கிறேன். எனது இந்த வேலைக்கு நல்ல ரெபரென்ஸ் குடுத்தா. பின்னர் கதைக்கும் பொது சொன்னா, உன்னை விட விருப்பமில்லை, ஆனால் நீ அங்கு போவது உனது எதிர்காலத்துக்கு நல்லது அதோட அவங்கள் தாற அளவுக்கு என்னால சம்பளம் தர ஏலாது எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

வருகின்ற தைமாதம் இருந்து, எனக்கு பெண் அதிகாரியே.. வருகின்றார்.

ஆரம்பத்திலையே... ஜொள்ளு, விட்டு வைப்பது நல்லமா? அல்லது எமது ஆணாதிக்கத்தைக் காட்டுவது நல்லமா?

எண்டு யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.smiley-think005.gif

அட்டமத்தில சனியா அல்லது சுக்கிரதசை துவங்குதா என்று போகப் போகத் தெரியும்! :D

வருகின்ற தைமாதம் இருந்து, எனக்கு பெண் அதிகாரியே.. வருகின்றார்.

ஆரம்பத்திலையே... ஜொள்ளு, விட்டு வைப்பது நல்லமா? அல்லது எமது ஆணாதிக்கத்தைக் காட்டுவது நல்லமா?

எண்டு யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.smiley-think005.gif

பெண் மேலதிகாரியெண்டால் விசயம் இலகுவாக அல்லவா முடிந்துவிடும்.

நல்ல [size=4]Perfume [/size]வாங்கிக் கொடுங்கள். :rolleyes:

இங்கு என்னுடைய முதலாவது வேலையில் மேலதிகாரி பெண் தான். [size=4]PR[/size] இக்கு நான் அப்ளை பண்ணும் போது அவரே கம்பெனி சார்பாக ஸ்பொன்சர் கடிதமும் தந்தார். அதனால் இரண்டு கிழமையிலேயே[size=4] PR OK [/size]என்று வந்தது. ஆனால் இலங்கைப் பொலிசிலிருந்து கிளியரன்ஸ் வர சில மாசங்கள் எடுத்ததால் இழுபட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணிலைவாதம் பேசும் கட்டுரையாளனின் கருத்து இது.

  • கருத்துக்கள உறவுகள்

Quote "பெண்கள் வேலையிடங்களில் அதிகம் தொல்லை தருகிறார்களா?"

ஆமாம் போடும் உடுப்புகளால், ரெம்ப கஷ்டமா இருக்கு :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.