Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய செயற்பாட்டாளர் மீது பாரிசில் தேசவிரோதிகள் துப்பாக்கிச்சூடு!

Featured Replies

இந்த நேரத்தில் முக்கியமான அறிக்கை தமிழர் நடுவகத்திடம் இருந்து.கொலையைசெய்தவர்கள் பரிதியின் மரணத்தில் மகிழ்ந்திருந்தாலும் தமிழர்களை ஒற்றுமைப்படவைத்துவிட்டார்கள்.கண்டிப்பாக இதை செய்தவர்கள் இனிமேல் நிம்மதியாக இருக்க முடியாது.

parithi_france_naduvam.jpg

  • Replies 240
  • Views 17.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் பருதி அண்ணாவுக்கு செய்யும் உண்மையான காணிக்கையாகவும் அஞ்சலியாகவும் அமையும்

அவரே இறுதிப்பலியாக இருக்கட்டும்.

காலில் விழுந்து இரந்து கேட்கின்றேன்

[size=4]பல இணைப்புக்களை அயராது இணைக்கும் வண்டுமுருகனுக்கு நன்றிகள் ![/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தற்பொழுது கைத்தொலைபேசிக்கு வந்த அறிவித்தல் ஒன்று[/size]

[size=5]கேணல் பருதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு.[/size]

[size=5]காலம் : 10-11-2012 (தொடர்ச்சியாக) [/size]

[size=5]நேரம் காலை 11.00 இலிருந்து 18.00 மாலைவரை[/size]

[size=5]இடம்: 53 rue Torcy [/size]

[size=5] 75018 paris[/size]

[size=5]METRO: Linge 12[/size]

[size=5] Marx Dormoy[/size]

[size=5]தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக்குழு[/size]

[size=5] [size=6] 01 43 58 11 42[/size][/size]

[size=5]நண்பர்கள் உறவுகளுக்கு தெரியப்படுத்தவும்.[/size]

[size=5](இறுதி வீரவணக்க நிகழ்வு பின்பு அறியத்தரப்படும்.)[/size]

[size=5]நன்றி.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

Tamil nationalist political organiser assassinated in France

[TamilNet, Thursday, 08 November 2012, 23:41 GMT]

Nadarajah Mathinthiran alias Parithi, an ex-LTTE commander who had left the movement in the early 90's and later coordinated Tamil organisational political activities in France since 2003, has been assassinated on Thursday evening outside the office of the Tamil Coordinating Committee (TCC) in Paris, news sources in France said. People close to the 50-year-old organiser, who was also known as Reagon, blamed the Sri Lankan military establishment for the assassination. “This seems to be a psyop assassination serving the agenda of the Sri Lankan state targeting the political mobilisation of the Tamil diaspora,” Mr Pradeep, an independent political activist based in Paris told TamilNet. The French Police is investigating the killing.

Nadarajah_Mathinthiran.jpg

Nadarajah Mathinthiran (Reagon / Parithi)

Mr Mathinthiran was shot at least three times when he was leaving the office of the TCC around 9:00 p.m. at Pyranees in Paris 20.

The assassination has come at a time when Tamil groups in Paris were shedding away their internal differences of opinion, diaspora Tamil activists said, passing the entire blame of the assassination on the Sri Lankan military establishment.

Mathinthiran was given with the nom de guerre, Reagon, when he joined the LTTE in 1983. He received his military training in the 2nd batch of the LTTE's training programme provided by India. Some of his batch mates in the training camp in India were Kumarappa, Bhanu, Ranjan Lala and Vasu, confirmed an ex-LTTE member who had also received training in the same batch.

Reagon took part in the early operations of the LTTE against the Sri Lankan military in Mannaar, Jaffna and Vanni. He was a middle-level commander when he left the LTTE in the early 90's.

In 2003, when the Tiger leadership was engaged in transforming its diaspora network from its earlier structure, Mathinthiran, now named as Parithi was appointed as the coordinator of political and fund-raising activities in France.

When the French authorities went on a crackdown of LTTE fundraising activities, Mathinthiran alias Parithi was held under arrest from 2007 to 2010 and was subjected to legal proceedings. He was released in 2010 under several conditions of monitoring by the French. He was not allowed to have any formal position in any organisational activities, legal sources said.

Two weeks ago, the French legal proceedings sanctioned him a 10 months probation period that would have put him under close monitoring with restricted movement, including electronic monitoring. This term was to commence on Friday, and had it commenced, it would have been difficult for anyone to assassinate him, the legal sources further said.

“The slaying of Parithi seems to be the work of a professional killer, who has fired at him at the bus stop located near the TCC office. Mr Parithi, in his attempt to flee from the killer seems to have crossed the road with injuries and fell dead. The killer chose to chase him to the opposite side of the road and fled the scene only after verifying his death,” a source which was in touch with the investigators said. The bullets have also hit a vehicle and a shop at the site.

Nadarajah Mathinthiran, who leaves behind his wife and a daughter, had narrowly escaped from a gang that had attacked him with swords on the Halloween day last year at the same site.

Tamil nationalist organisations, activists and the public in the diaspora are enraged over the assassination targeting the TCC.

As the armed struggle of the LTTE is silenced now, capturing the politics remaining and making it subordinate to the genocidal state in the island, seem to have become the coordinated aim of several elements that had set stage for the Vanni war, commented sections of diaspora political observers.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35734

[size=3]

[size=4]விதியின் கண்ணீர்[/size][/size]

[size=3]

Maaveerar_12_2-copy2-300x218.jpg[/size][size=3]

[size=4]தமிழனே…!

உன் தலையை நிமிர்த்து

விசித்திரமானது உன் விதி[/size][/size]

[size=3]

[size=4]நீ

கயவனின் காலில்

மிதி பட்ட போதும்

நான் உனக்காக அழவில்லை[/size][/size]

[size=3]

[size=4]எழ எழ நீ

விழுந்த போதும்

உன் எழுச்சி கண்டு

வியந்து கொண்டேன்![/size][/size]

[size=3]

[size=4]துரோகம் உனைச்

சூழ்ந்த போதும்

ஈரம் சுரக்கவில்லை[/size][/size]

[size=3]

[size=4]வீரம் விளைந்த

மண்ணில்

தீரம் நிறைந்த தலைவன்

சேனை உனக்கு

அரணாயிருந்தது[/size][/size]

[size=3]

[size=4]அதனால் என்னுள்

அதீத நம்பிக்கை[/size][/size]

[size=3]

[size=4]காலம் உன் கணக்கினை

கையிலெடுத்தது

கோலம் மாறியது

உலகம் கலகக்காரருக்கு

சாமரம் வீசியது[/size][/size]

[size=3]

[size=4]முள்ளிவாய்க்கால்

முட்கம்பி வேலி

அப்பொழுதும்

நம்பிக்கை இருந்தது[/size][/size]

[size=3]

[size=4]இப்பொழுது உனக்காய்

அழுகின்றேன்…

சினம் கொண்டு

சிணுங்குகின்றேன்![/size][/size]

[size=3]

[size=4]விதியின் கண்ணீருக்கு

ஒரு நாள்

விலையுண்டு!

பருதியின் பெயருக்கு

காலமெல்லாம் சிறப்புண்டு!

சிந்திய குருதிக்கு

கணக்குண்டு

ஆற்றிய பணிக்கு மதிப்புண்டு![/size][/size]

[size=3]

[size=4].சாவு அடிக்கடி

துரத்திய போதும்

அஞ்சாமல்

பணி செய்தவன்

எய்தவன் எவனோ…?

அழுந்தியே அழிவான்![/size][/size]

[size=3]

[size=4]வாழ்வை வென்றவனே…

சென்று வா!

உனக்கு என்றும் எங்கள்

வீர வணக்கம்![/size][/size]

[size=3]

[size=4]கலைஞர் கவிஞர்

-T.தாயாநிதி[/size][/size]

[size=3]

http://kalaisudar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D#more-11321[/size]

  • கருத்துக்கள உறவுகள்

Tigers%20flag.jpg

பிரான்சில் தமிழீழ விடுதலைப்புலிகளது தளபதிகளில் ஒருவரான பரிதி என அழைக்கப்படும் நடராசா மதீந்திரன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டடை தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகம் வீரச்சாவு அறிவித்தல் விடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் கீழ்வருமாறு.

தலைமைச் செயலகம்,

த/செ/ஊ/அ/05/12

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

09/11/ 2012.

வீரச்சாவு அறிவித்தல்

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தீவகக் கோட்டப் பொறுப்பாளரும், பிரான்சு நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருமான றீகன் என்று அழைக்கப்படும் திரு.பரிதி [நடராசா மதீந்திரன்] அவர்கள் வீரச்சாவடைந்துள்ளார். கரம்பொன் ஊர்காவற்றுறையினைப் பிறப்பிடமாகக் கொண்ட பரிதி அவர்கள் 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு தொடக்ககாலப் பணியினை மன்னார் மாவட்டத்திலும் பின்னர் தீவகக் கோட்டப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவராவார்.

புலம்பெயர் நாடுகளில் தமிழ்மக்களின் விடுதலை நோக்கிய எழுச்சிச் செயற்பாடுகளை முடக்கி முற்றாக ஒழிக்கும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிறிலங்கா பேரினவாத அரசின் நீண்டகால திட்டமிட்ட செயற்பாட்டின் ஒரு வெளிப்பாடே பரிதி அவர்கள் மீதான படுகொலைத் தாக்குதலாகும்.

இவ்வாறான கொலைவெறித்தாக்குதல்கள் நீண்டகாலமாகவே புலம்பெயர் நாடுகளில் சிங்கள இனவெறி அரசினால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதே பிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் சிங்களப் புலனாய்வாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பரிதி அவர்கள் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த பின்னரும் தான் வாழும் நாட்டில் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர். எமது போராட்டம் தொடர்பான சர்வதேசத்தின் தவறான புரிதலால், பரிதி அவர்கள் பிரான்ஸ் நாட்டில் நீண்டகாலம் சிறையிலிருந்தார். சிறைமீண்டு வந்த பின்னரும் தனது பணியினை தன்னலம் பாராது இறுதிவரை செய்துவந்தார்.

புலம்பெயர் நாடுகளில் துடிப்புமிக்க தேசியச் செயற்பாட்டாளர்களைக் கொல்வதன் மூலம், தமிழீழ விடுதலை நோக்கிய செயற்பாடுகளை முடக்கி, எமது இனவிடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடலாம் என சிங்களம் கனவு காண்கின்றது.

சிங்களப் பேரினவாதத்தின் இந்த நீண்டநாட் கனவு ஒருபோதும் நிறைவேறாது. போராளிகளும் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துச் செயற்படும் தேசியச் செயற்பாட்டாளர்களும் விழவிழ எழுவார்கள். பரிதி அவர்களின் வீரச்சாவு, தேசியச் செயற்பாட்டாளர்களையும், போராளிகளையும் இன்னும் முனைப்பாகப் பணிகளை முன்னெடுக்கத் தூண்டுமே தவிர எந்தவொரு சூழலிலும் விடுதலை நோக்கிய செயற்பாடுகளை சிங்களப் பேரினவாத அரசு நினைப்பது போன்று வீழவிடாது என்பதனை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.

அதேவேளை ஆயுதம் எதுவும் அற்ற அரசியற் போராளிகளைத் தொடர்ந்து குறிவைக்கும் சிங்களத்தின் நயவஞ்சக, மனித நேயமற்ற தாக்குதல்களை பன்னாட்டுச் சமூகம் கண்டிக்கவேண்டும் எனவும், இத்தகைய கொலைவெறி வலைப்பின்னல்களில் இருந்து அரசியல் செயற்பாட்டாளர்களிற்கு உரிய பாதுகாப்பினைக் கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தன்பணிகளைச் சரிவரச் செய்து சிங்களத்தின் கொலைவெறியர்களால் கொல்லப்பட்ட பரிதி அவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தமது வீரவணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றனர். இவரது இறப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் நண்பர்களுக்கும், தேசியச் செயற்பாட்டில் அவரோடிணைந்து பணியாற்றிய செயற்பாட்டாளர்களுக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

Paruthi-ltte-0912-778-001.jpg

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

குற்றம் நிகழ்த்தப்பட்ட இடத்தை வரையறுத்து ஒருவரையும் முதலில் உள்ளே செல்லமுடியாது தடுப்பது முதல் வேலை. அங்கே தடயவியல் விற்பன்னர்களைக் கொண்டு பௌதீக ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டியது இரண்டாவது வேலை..

காலதாமதமாக வந்து ஆதாரங்களைச் சேர்த்தால் நீதிமன்றங்கள் ஏற்காது. அவை கலப்படமற்றவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் போகும்.

ஃபிரான்ஸ் காவல்துறைக்கு இதிலெல்லாம் அக்கறையில்லை போல் தெரிகிறது..

எந்த துறையில் கத்தியை போட்டு துட்டு மீச்சம் பிடிக்கலாம் என்று இருக்கும் போது இப்படி கோஷ்டி மோதலில் ஆளுக்கு ஆள் சுடுபடுவதால் 25 30 விசாரனை நிபுனர்களை பயன்படுத்தி மினெக்கெடுவார்களா?

ஒரேடியாக விடமாட்டார்கள் ஆனால் அதுக்காக அசுர வேகத்தில் செய்ற்படுவார்கள் என எதிர்பாக்க முடியாது.

Edited by I.V.Sasi

[size=4]பலவேறு பதிவுகளை இந்த திரியில் வாசித்த பின்னர் இந்த மாவீரன் மீது மேலும் மதிப்பும் மரியாதையும் அதிகரித்தே செல்லுகின்றது. [/size]

[size=1][size=4] -- ஆரம்ப காலத்திலேயே தன்னை போராட்டத்தில் இணைத்தமை;[/size][/size]

[size=1][size=4] -- புலம்பெயர்ந்தும் அதே இலட்சியத்திற்காக இறுதிவரை உழைத்தமை; [/size][/size]

[size=1][size=4]இவை ஒரு சாதாணர மனிதரால் செய்யக்கூடிய காரியங்கள் அல்ல. [/size][/size]

[size=1][size=4]மீண்டும் ஒரு முறை என் சிரம் தாழ்த்திய[/size] [size=4]வீர வணக்கம் பரிதி அண்ணா! [/size][/size]

இவர் ஒரு சின்ன கிட்டு போன்றவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொலையினை யார் செய்து இருந்தாலும் கண்டிக்கத்தக்க விடயம்.

ஆனால், இந்தக் கொலையினை சிறிலங்கா புலனாய்வுத்துறைதான் செய்தது என்று புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் செய்தியினை வெளியிட்டு உண்மையான குற்றவாளியினை தப்பிக்க வைக்கின்றனர்.

முன்னர், லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் படுகொலை செய்யப்பட்ட போதும் சிறிலங்கா புலனாய்வுத்துறைதான் செய்தது என்று அப்போது புலத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் செய்தியினை வெளியிட்டன.

ஆனால், அந்தக் கொலை- ஒரு தனிப்பட்ட பகை காரணமாக இருவரில் ஒருவரைக் கொல்ல முயற்சித்த போது- மற்றவர் தன்னை அடையாளம் கண்டுவிட்டார் என்பதற்காக அவரையும் கொலையாளி கொன்றார். இதுதான் உண்மையும் கூட. (இது பாரிசில் அப்போது செயற்பாட்டாளர்களாக இருந்தவர்களைக் கேட்டால் தெரியும்)

ஒரு கதைக்கு, அன்று சிறிலங்கா புலனாய்வுத்துறைதான் இவர்கள் இருவரையும் சுட்டுக் கொலை செய்து இருந்தால்- பிற நாடுகளில் உள்ள செயற்பாட்டாளர்களை ஏன் சும்மா விட்டார்கள். அவர்களையும் அல்லவா தேடித் தேடி கொலை செய்திருப்பார்கள்?

பாரிசில் மட்டும்தான் சிறிலங்கா புலனாய்வுத்துறை பலமாக உள்ளதா? அப்படி நாமே கூறி சிறிலங்கா அரசினை கெட்டிக்கார்களாக ஆக்குவதன் மர்மம்தான் என்ன?

அடுத்து, பரிதி கொல்லப்பட்டவுடன் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் தாமாகவே அவருக்கு கேணல் தர தகுதி நிலை கொடுத்து மகிழ்ந்திருக்கின்றன.

அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தமது போராளிகளுக்கு விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட தகுதி நிலை கூட இன்று வியாபாரமாகி விட்டது என்பதனை அறிந்த போது மிகவும் வேதனையாக இருந்தது. (தமிழ்நெட் எந்தவித தகுதி நிலையும் போடாது செய்தி வெளியிட்டது ஆச்சரியமான விடயமாக இருக்கின்றது)

அடுத்து, பரிதி கொல்லப்பட்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினையுடன் இரண்டு தரப்பு தாமே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்று கூறி அறிக்கையினை வெளியிட்டு இருக்கின்றன.

வேடிக்கை என்னவென்றால், நெடியவன் அணி சார்ந்த இணையத்தளங்களான பதிவு, சங்கதி, அதிர்வு போன்ற இணையத்தளங்களில் பரிதிக்கு கேணல் தரம் கொடுத்து அறிக்கை வெளியிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் எனக் கூறுவோர், எழுத்துடன் கூடிய மஞ்சள் கலர் புலி இலச்சினையுடன் வெளியிட்ட அறிக்கையில் உள்ள புலிகளின் இலச்சினை தவறானது என்பது கூட தெரியாமல் இருப்பது கவலைக்கு உரிய விடயம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் அங்கு இருந்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை நடுப்பகுதியில் கறுப்புக் கலரில் இருந்ததோடு- அந்த இலச்சினைக்குக் கீழேயே தமிழீழ விடுதலைப் புலிகள் என தமிழிலும் ஆங்கிலத்திலும் அடித்து இருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்துவதிலேயே நெடியவன் குழு மே-19-க்குப் பின்னைய காலத்தில் இருந்து செயற்பட்டு வருகின்றது என்பதனை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பரிதி கொலையானது பணக் கொடுக்கல்-வாங்கல் சிக்கல் காரணமாக உள் இருந்தே கொலையாளிகள் புறப்பட்டு கொன்றும் இருக்கலாம். ஆகவே, இதனையும் அனைவரும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பரிதி குழு - நெடியவன் குழு மோதல்

பரிதி குழு - ஈழமுரசு ஆதித்தன் குழு மோதல்

பரிதி குழு - விநாயகம் குழு மோதல்

பரிதியுடன் இணைந்து நெடியவன் குழு மலேசியா அல்லது ஐரோப்பிய நாடு ஒன்றில் உள்ள நந்தகோபன் குழுவுடன் மோதல் (இவர், காஸ்ட்ரோவுடன் இறுதிக்காலம் வரை இருந்தவர். காஸ்ட்ரோ இறந்தவுடன் எவ்வாறு தப்பி வந்தார் என்பது இன்று வரை கேள்விக்குறியான விடயம்)

எது எவ்வாறு இருப்பினும், ஒரு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைக்காக களத்தில் போராளியாக செயற்பட்ட (பிற்கால செயற்பாட்டினை நான் இங்கே கருத்தில் கொள்ளவில்லை) ஒருவரை திட்டமிட்டு ஒரு குழு கொலை செய்து இருப்பது வருந்தத்தக்க ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

Edited by nirmalan

புலத்தில் பிரிந்து நின்று மோதுபவர்களை ஒரு பக்கத்தை அழித்து மறுபக்கத்தை பலமாகுவதில் இலங்கை அரசுக்கு என்ன லாபம்?முடிந்தவரை பிரிந்தவர்களை சேரவிடாமலே இருக்க தான் முயற்சி செய்வார்கள்.

எதுவோ ஒன்று இன்னும் தமிழரைத் தொடர்கிறது. அவர்களை மிகவும் நோகடிக்கிறது. துன்பத்தில் தள்ளுகிறது. சாகடிக்கிறது. அது சிங்களந்தானா? அதற்கு இவ்வளவு துணிவா? சிங்களந்தானென்று ஏமாறாமல் இருப்போம். சட்டுவிட்டு கிட்டே சென்று இறந்துவிட்டானா என்று உறுதிப்படுத்திவிட்டுச் செல்வதற்கு சிங்களத்திற்குத் தைரியமிருக்காது. எவரென்று தெரிந்தாலும் எங்களால் ஒரு வரம்பிற்குள்தான் நடவடிக்கையில் இறங்க முடியும்.

ஆனாலும் எங்கள் இரங்கல்களைச் செய்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(எதுவோ ஒன்று இன்னும் தமிழரைத் தொடர்கிறது. அவர்களை மிகவும் நோகடிக்கிறது. துன்பத்தில் தள்ளுகிறது. சாகடிக்கிறது. அது சிங்களந்தானா? அதற்கு இவ்வளவு துணிவா? சிங்களந்தானென்று ஏமாறாமல் இருப்போம். சட்டுவிட்டு கிட்டே சென்று இறந்துவிட்டானா என்று உறுதிப்படுத்திவிட்டுச் செல்வதற்கு சிங்களத்திற்குத் தைரியமிருக்காது. எவரென்று தெரிந்தாலும் எங்களால் ஒரு வரம்பிற்குள்தான் நடவடிக்கையில் இறங்க முடியும்.

ஆனாலும் எங்கள் இரங்கல்களைச் செய்வோம்)எங்களை நாங்களே அழித்தோம்.சிங்களவனா எங்களை வென்றான்?

[size=5]கொலைக்கு என்ன காரணம் ? ஆளுக்கு ஆள் விளக்கம் ; [/size]

[size=5]உருத்திரகுமாரன் பிரிவு தான் கொலை செய்தது போல எழுதுகின்றது ஆங்கில நாளேடு [/size] :rolleyes:

[size=5]A prominent LTTE leader and leader of the Pro-LTTE Tamil Coordinating Committee (TCC) in France Nadarajah Matheenthiran alias Parithy was shot dead in Paris, France as a result of internal rift, informed sources said.[/size]

[size=5]Sources said that Parithy belonged to LTTE's Nediyavan faction. Since the death of Prabhakaran an internal rift occurred between LTTE Europe Leader Nediyawan and V. Rudrakumaran who was also a prominent LTTE leader based in USA.

Meanwhile AFP reported a Sri Lankan man was shot dead in Paris late Thursday, a police source said.

The murder may be an example of violence within the Sri Lankan community, though no line of investigation has been ruled out, the source added.

The victim, in his fifties and known to the police, was hit by gunfire from an unknown assailant in eastern Paris.

He died shortly afterwards, the police source said.[/size]

[size=5]A hunt has been launched for the killer who fled the scene.[/size]

http://www.dailymirror.lk/news/23349-top-ltte-figure-in-france-shot-dead.html#comments

[size=3]பருதி கொலை : வினாயகம் குழு மீது குற்றச்சாட்டு[/size]

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பருதி-ரேகன் – (நடராஜா மதீந்தரன்) பாரீஸ் 20 ஆம் மாவட்டத்தில் அமைந்துள்ள என்ற 341, Rue des Pyrénées தெருவில் 341ம் இலக்க மாடிக் கட்டடத்திலிருந்து வெளியேறும் போது, நேற்று 08.11.2012 அன்று பின்னிரவில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற புலம்பெயர் புலிகளின் அமைப்பாக இயங்கிய அமைப்பின் உத்தியோகபூர்வமற்ற பொறுப்பாளராக இருந்த பருதி ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் இருந்து வெளியெறும் போதே சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வெளியேறியதும் இருசக்கர மோட்டார் வாகனத்தில் அங்கு காத்திருந்த இருவர் பருதி மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். முதல் சூட்டோடு சிறிது தூரம் ஓடிச் சென்ற பருதி அங்கிருந்த பஸ் நிலையத்தின் அருகாமையில் நிலத்தில் விழுந்தபோது மேலும் இருதடவை துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமானார்.

இது குறித்து பாரிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் வினவிய போது, புலிகள் சார்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலின் விளைவாகவே பருதி கொல்லப்பட்டார் எனத் தெரிவித்தனர்.

விநாயகம் மற்றும் பாண்டியன் குழுவினரே கொலைகளின் பின்னணியில் செயற்பட்டதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தரப்பின் உத்தியோகபூர்வமற்ற பகுதிகளிலிருந்து தெரிவித்தனர். வினாயகம் ஆதரவுக் குழுக்களாகக் கருதப்படும் ஏனைய குழுவினர் இதனை மறுத்துள்ளனர்.

இணையத் தளங்கள் பல கொலைய இலங்கை அரசே நிகழ்த்தியிருப்பதாகக் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழீழ விடுதலைப் புலிகள் பருதிக்கு அஞ்சலி செலுத்துவாதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

ஈழத்தில் மரணத்துள் வாழும் மக்கள் தமது ‘தலைவிதி இதுவோ என’ துயரத்தில் புலம்பும் ஒலி இன்னும் இவர எவரதும் காதுகளை எட்டியதாகத் தெரியவில்லை.

http://inioru.com/?p=31434

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]

வீர வணக்கங்கள் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி பரிதியை சுட்டுக் கொன்றது சிங்கள பேரினவாத அரசு: விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு

Published: Saturday, November 10, 2012, 11:20 [iST]

பாரீஸ்; பிரான்சில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான பரிதியை சிங்களப் பேரினவாத அரசுதான் சுட்டுக் கொன்றதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தீவகக் கோட்டப் பொறுப்பாளரும், பிரான்சு நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருமான றீகன் என்று அழைக்கப்படும் திரு.பரிதி [நடராசா மதீந்திரன்] அவர்கள் வீரச்சாவடைந்துள்ளார். கரம்பொன் ஊர்காவற்றுறையினைப் பிறப்பிடமாகக் கொண்ட பரிதி அவர்கள் 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு தொடக்ககாலப் பணியினை மன்னார் மாவட்டத்திலும் பின்னர் தீவகக் கோட்டப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவராவார்.

புலம்பெயர் நாடுகளில் தமிழ்மக்களின் விடுதலை நோக்கிய எழுச்சிச் செயற்பாடுகளை முடக்கி முற்றாக ஒழிக்கும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிறிலங்கா பேரினவாத அரசின் நீண்டகால திட்டமிட்ட செயற்பாட்டின் ஒரு வெளிப்பாடே பரிதி அவர்கள் மீதான படுகொலைத் தாக்குதலாகும்.

இவ்வாறான கொலைவெறித்தாக்குதல்கள் நீண்டகாலமாகவே புலம்பெயர் நாடுகளில் சிங்கள இனவெறி அரசினால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதே பிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் சிங்களப் புலனாய்வாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பரிதி அவர்கள் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த பின்னரும் தான் வாழும் நாட்டில் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர். எமது போராட்டம் தொடர்பான சர்வதேசத்தின் தவறான புரிதலால், பரிதி அவர்கள் பிரான்ஸ் நாட்டில் நீண்டகாலம் சிறையிலிருந்தார். சிறைமீண்டு வந்த பின்னரும் தனது பணியினை தன்னலம் பாராது இறுதிவரை செய்துவந்தார்.

புலம்பெயர் நாடுகளில் துடிப்புமிக்க தேசியச் செயற்பாட்டாளர்களைக் கொல்வதன் மூலம், தமிழீழ விடுதலை நோக்கிய செயற்பாடுகளை முடக்கி, எமது இனவிடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடலாம் என சிங்களம் கனவு காண்கின்றது.

சிங்களப் பேரினவாதத்தின் இந்த நீண்டநாட் கனவு ஒருபோதும் நிறைவேறாது. போராளிகளும் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துச் செயற்படும் தேசியச் செயற்பாட்டாளர்களும் விழவிழ எழுவார்கள். பரிதி அவர்களின் வீரச்சாவு, தேசியச் செயற்பாட்டாளர்களையும், போராளிகளையும் இன்னும் முனைப்பாகப் பணிகளை முன்னெடுக்கத் தூண்டுமே தவிர எந்தவொரு சூழலிலும் விடுதலை நோக்கிய செயற்பாடுகளை சிங்களப் பேரினவாத அரசு நினைப்பது போன்று வீழவிடாது என்பதனை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.

அதேவேளை ஆயுதம் எதுவும் அற்ற அரசியற் போராளிகளைத் தொடர்ந்து குறிவைக்கும் சிங்களத்தின் நயவஞ்சக, மனித நேயமற்ற தாக்குதல்களை பன்னாட்டுச் சமூகம் கண்டிக்கவேண்டும் எனவும், இத்தகைய கொலைவெறி வலைப்பின்னல்களில் இருந்து அரசியல் செயற்பாட்டாளர்களிற்கு உரிய பாதுகாப்பினைக் கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தன்பணிகளைச் சரிவரச் செய்து சிங்களத்தின் கொலைவெறியர்களால் கொல்லப்பட்ட பரிதி அவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தமது வீரவணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றனர். இவரது இறப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் நண்பர்களுக்கும், தேசியச் செயற்பாட்டில் அவரோடிணைந்து பணியாற்றிய செயற்பாட்டாளர்களுக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பழ. நெடுமாறன் இரங்கல்

பிரான்சில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பரிதி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடுதலைப் புலிகளின் பிரான்சு நாட்டுப் பொறுப்பாளர் பரிதி என்ற ரீகன் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிங்கள அரசின் கொடுங்கரங்கள் பிரான்சு வரை நீண்டிருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

நல்ல செயல் வீரராகவும் கடமையில் சிறிதும் தவறாதவரும் தனது தொண்டின் சிறப்பினால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றவருமான பரிதியின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. பரிதிக்கு எனது வீர வணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.in/news/2012/11/10/world-ltte-blames-sri-lanka-parithi-murder-164465.html

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசத்தில் நடந்த கொலை மிகவும் கண்டிக்கத்தக்கது. கொலைகள் நமது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையமாட்டாது என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ளும்வரை முன்னேற்றம் எதுவும் கிட்டாது.

[size=4]ஜெனநாயகம் தெறிக்கும் கண்களின் பார்வை.[/size][size=1]

[size=4]துரதிசட வசமாக தமிழர்க்கு எள்ளுக்கும் உதவாத வார்த்தைகள். அல்லது தமிழரை புரியாத வார்த்தைகள்.[/size][/size][size=1]

[size=4]எங்கிருந்தாவது ஒரு துப்பாக்கி வெடிக்கும் என்ற அச்சத்தில்தான் அவன் அவன் அடக்கி வாசித்து கொண்டு இருக்கிறார்கள்.[/size][/size][size=1]

[size=4]அது நடவே நடவாது என்று தமிழனை அவிட்டு விட்டால்...............[/size][/size][size=1]

[size=4]என்ன நடக்கும் என்பதை நாம் உள்ளிருந்து பார்த்தவர்கள்.[/size][/size][size=1]

[size=4]புலிகளால் சிறைவைத்து உதைபட்டு வந்தாலும் புலிகள்தான் தமிழருக்கு காவல் அரண் என்ற உண்மைகளை கண்டறிய நாங்கள் கொடுத்த விலைகள் அதிகம்.[/size][/size][size=1]

[size=4]சுட்டு ரோட்டில் வீசாத காரணம்தான் தமிழனின் அழிவுக்கு முதல் படி.[/size][/size][size=1]

[size=4]சர்வதேச அழுத்தம் உலக அரசியல் காலநிலை என்ற காரணங்களுக்காக தமது நிலமைபாட்டை புலிகள் மாற்றி போலி ஜெனாயக போக்கிற்கு போனதுதான் அவர்களுக்கு குழி தோண்டியது.[/size][/size][size=1]

[size=4]காவலி தமிழர்களை நீங்கள் கண்டிருக்க நியாமில்லை. நாங்கள் கூடி வாழ்ந்தவர்கள். புலி எப்படியாவது புகும் என்ற அச்சம்தான் தமிழன் இப்படியாவது பிழைத்திருக்கிறான்.[/size][/size]

பரிதி கொலையானது பணக் கொடுக்கல்-வாங்கல் சிக்கல் காரணமாக உள் இருந்தே கொலையாளிகள் புறப்பட்டு கொன்றும் இருக்கலாம். ஆகவே, இதனையும் அனைவரும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பரிதி குழு - நெடியவன் குழு மோதல்

பரிதி குழு - ஈழமுரசு ஆதித்தன் குழு மோதல்

பரிதி குழு - விநாயகம் குழு மோதல்

பரிதியுடன் இணைந்து நெடியவன் குழு மலேசியா அல்லது ஐரோப்பிய நாடு ஒன்றில் உள்ள நந்தகோபன் குழுவுடன் மோதல் (இவர், காஸ்ட்ரோவுடன் இறுதிக்காலம் வரை இருந்தவர். காஸ்ட்ரோ இறந்தவுடன் எவ்வாறு தப்பி வந்தார் என்பது இன்று வரை கேள்விக்குறியான விடயம்)

எது எவ்வாறு இருப்பினும், ஒரு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைக்காக களத்தில் போராளியாக செயற்பட்ட (பிற்கால செயற்பாட்டினை நான் இங்கே கருத்தில் கொள்ளவில்லை) ஒருவரை திட்டமிட்டு ஒரு குழு கொலை செய்து இருப்பது வருந்தத்தக்க ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

நிர்மலனுக்கு வாழ்த்துக்கள் இப்பிடி ஒரு உண்மைய சரியா சொன்னதுக்கு. இதை நீங்க பிரன்ஸ் காவல் துறைக்கு சொல்லலாம். கற்பனை இருக்கலாம் அதற்க்காக இவ்வளவு கற்பனை கூடாது. வரவர துரோகிகளின் கருத்து களமாகிறது. இப்பிடியான கற்பனை செய்திகளுக்கு இங்கே தடை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஜெனநாயகம் தெறிக்கும் கண்களின் பார்வை.[/size]

[size=1][size=4]துரதிசட வசமாக தமிழர்க்கு எள்ளுக்கும் உதவாத வார்த்தைகள். அல்லது தமிழரை புரியாத வார்த்தைகள்.[/size][/size]

[size=1][size=4]எங்கிருந்தாவது ஒரு துப்பாக்கி வெடிக்கும் என்ற அச்சத்தில்தான் அவன் அவன் அடக்கி வாசித்து கொண்டு இருக்கிறார்கள்.[/size][/size]

[size=1][size=4]அது நடவே நடவாது என்று தமிழனை அவிட்டு விட்டால்...............[/size][/size]

[size=1][size=4]என்ன நடக்கும் என்பதை நாம் உள்ளிருந்து பார்த்தவர்கள்.[/size][/size]

[size=1][size=4]புலிகளால் சிறைவைத்து உதைபட்டு வந்தாலும் புலிகள்தான் தமிழருக்கு காவல் அரண் என்ற உண்மைகளை கண்டறிய நாங்கள் கொடுத்த விலைகள் அதிகம்.[/size][/size]

[size=1][size=4]சுட்டு ரோட்டில் வீசாத காரணம்தான் தமிழனின் அழிவுக்கு முதல் படி.[/size][/size]

[size=1][size=4]சர்வதேச அழுத்தம் உலக அரசியல் காலநிலை என்ற காரணங்களுக்காக தமது நிலமைபாட்டை புலிகள் மாற்றி போலி ஜெனாயக போக்கிற்கு போனதுதான் அவர்களுக்கு குழி தோண்டியது.[/size][/size]

[size=1][size=4]காவலி தமிழர்களை நீங்கள் கண்டிருக்க நியாமில்லை. நாங்கள் கூடி வாழ்ந்தவர்கள். புலி எப்படியாவது புகும் என்ற அச்சம்தான் தமிழன் இப்படியாவது பிழைத்திருக்கிறான்.[/size][/size]

புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் அரசியலுக்காக கொல்லப்படுவது அரிதாகவே நடைபெற்றுள்ளது. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு வாய்ப்பூட்டு உண்டு என்பதால் அடக்கிவாசிக்கின்றார்கள் என்பதும் தெரிந்ததே.. நீங்கள் புலம்பெயர்ந்த நாட்டிலும் பயந்து வாழ்கின்றீர்கள் போலுள்ளது.

[size=4]தேசத்தை நேசித்ததால் தெருவில் வீசப்பட்ட பரிதிக்கு வீரவணக்கம்![/size]

[size=4]தேசத்தை நேசித்த தேசப்பற்றாளன் பரிதி அவர்கள் பாரிசில் வைத்து படுகொலை செய்யப்பட்ட செய்தியானது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியும் கவலையுமடையச் செய்துள்ளது. தமிழீழ தேச விடுதலை எனும் தீயை தன்னகத்தே சுடரவிட்ட பரிதி தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து சென்றபோதிலும் எமது தேசத்தின் விடுதலை நெருப்பை அணையவிடாது தமிழீழ விடுதலைக்காக தொடர்ந்தும் உழைத்தவன்.[/size]

[size=4]எமது மண்ணை அதன் விடுதலையை ஆழமாக நேசித்த ஒருதோழன் இன்று எம்முடன் இல்லை. ஆயிரமாயிரம் மாவீரர்கள் வரிசையில் பரிதியும் இணைந்துகொள்கிறான். தேசத்தை நேசித்ததால் தெருவில் வீசப்பட்ட இனமான உணர்வாளன் பரிதிக்கு தமிழ்லீடர் சிரம்தாழ்த்தி தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.[/size]

http://www.tamilleader.com/mukiaya/7409-2012-11-10-09-54-18.html

  • கருத்துக்கள உறவுகள்

பருதி அண்ணாவுக்கு

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

அதன் தோழமை அமைப்புக்களான பாரதி விளையாட்டுக்கழகம் மற்றும் அம்பாள் விளையாட்டுக்கழகம் விடுத்துள்ள அஞ்சலி.

parithi1.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.