Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசித்த வயிறுகளின் கொதிப்றியா ஈனச்சமூகமே பாலியல் தொழிலாயிது?

Featured Replies

[size=3]

penpuli.jpg

ஈழமெழுமெனப்

போரிட்ட வீரப்பெண் சேனையை

தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே

மாவீரர் நினைவேந்தக்

கார்த்திகைக்கு

மலர்தூவப் போவீரோ..

வாழ வழியேதுமற்றுச்

சாகக் கிடந்தால்

சுருக்கிட்டு சாவெனச் சொல்லும்

ஈனச் சமூகமிது

பசியால் துடிக்கும்

குழந்தையைப் பெற்றவள்

இதயத் துடிப்பறியா இனமே

உடலைவருத்தி உலையேற்றினால்

பாலியல் தொழிலாயிது ?[/size]

[size=3]

வயிற்றுக் கஞ்சிக்கு

கைநீட்டினால் பிச்சைக்காரரென்கிறது

உடலைக் கடித்துக் குதறி

காசெறியும் காமப்பிசாசுகள்

அதற்கும்

விபச்சாரியென்கிறது

தோள் சுமந்த

எறிகணைகள் வெடித்துச் சிதறியபோது

சுதந்திரப் பறவைகளென்றோம்

தரைப்படை

வான்படை

கடற்படை கட்டிக் களமாடென

சிங்களப்படை வீழ்கிறதென

எக்காளமிட்டபடி

கோடிகளாய் அல்லவா

கொடிபிடித்தபடி அள்ளியிறைத்து

முள்ளிவாய்க்கால் வரை கொண்டுபோய்விட்டவர்கள்,

கட்டுக் கோப்புடைந்து

தமிழ்க் கலாச்சாரம் பிறண்டதாய்

மாரடிக்கும் திமிரை ஏதென்போம்

ஈழமெழுமெனப்

போரிட்ட வீரப்பெண் சேனையை

தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே,

மாவீரர் நினைவேந்தக்

கார்த்திகைக்கு

மலர்தூவப் போவீரோ..

இன்னமும் எம்முள் போரிடும்

ஈழப்பெண் தெரிகிறதா

இந்திய இராணுவமும்

ஏவல் படைகளும்

இனவெறியேற்றிய மகிந்தவின் குடும்பமும்

எம் தெருக்களை மிதித்து

சதிராடிய வடுக்களை

எப்படி மறந்தீர்

இன்னமும் எம்முள் போரிடும்

ஈழப்பெண் வீரப்பெண்ணவள்[/size]

[size=3]

http://ndpfront.com/tamil/index.php/articles/articles/kanga/1519-2012-11-09-23-06-52[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]ஈழமெழுமெனப்

போரிட்ட வீரப்பெண் சேனையை

தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே

மாவீரர் நினைவேந்தக்[/size]

[size=3]கார்த்திகைக்கு

மலர்தூவப் போவீரோ..[/size]

[size=3]ஈழமெழுமெனப்

போரிட்ட வீரப்பெண் சேனையை

தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே,

மாவீரர் நினைவேந்தக்[/size]

[size=3]கார்த்திகைக்கு

மலர்தூவப் போவீரோ..[/size]

இரு தடவைகள் இவ்வரிகளை எழுதியுள்ளனர். மாவீரர் நினைவேந்தலுக்குச் செல்லவிருக்கும் அனைவரையுமே குறிவைத்து எழுதியிருக்கிறார்கள்..! இவர்களது நோக்கம் சந்தேகத்திற்குரியது..!

  • தொடங்கியவர்

[size=3]"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். "[/size]

[size=3]- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை, என்ன சொல்ல வருகிறது, வண்டு?

உணவில்லாவிடில், விபச்சாரம் செய்வதை, நியாயப் படுத்துகின்றதா?

கண்ணில் பொறி பறக்கப் போராடிய வீரத் தமிழ் மறத்தி பசியினால் விபச்சாரம் செய்கிறாள்! நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே, என்று வாசகர்களைக் குத்த முயற்சிக்கின்றதா?

மாவீரர் தினம் தன் பாட்டில் கிடக்கட்டும். இதுகளைக் கவனியுங்கள் என்று சொல்ல முயல்கின்றதா?

மாவீரர் தினமே வேண்டாம் என்று சொல்கிறதா?

வாசகர்களை,உசுப்பேத்த எழுதப் பட்ட மாதிரி இருக்கிறது, கவிதை!

Edited by புங்கையூரன்

[size=4]இசை, புங்கையூரான். உங்கள் கருத்துக்கள் சித்திக்க வைத்துள்ளன. நன்றிகள். [/size]

ஐயா மாவீரர் என்ன மாவீரர் என்ன பாவம் செய்தார்கள்..

இன்றைய சூழலில் அவர்களை எண்ணி கண்ணீர்தான் வடிக்க முடிகிறது. எம் தமிழ்மக்களுக்காக அவர் உயிர்கொடை செய்ததன் அர்த்தம் புரியாமல் நம்மவர் நிலைப்பாடு அமைந்துள்ளது. இந் நிலையில் உங்கள் கவிதை வரிகள் கவலை அளிக்கிறது.

[size=3]................ ஈழச்சனமே

மாவீரர் நினைவேந்தக்

கார்த்திகைக்கு

மலர்தூவப் போவீரோ..[/size]

[size=3]ஈழமெழுமெனப்

போரிட்ட வீரப்பெண் சேனையை

தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே

மாவீரர் நினைவேந்தக்

கார்த்திகைக்கு

மலர்தூவப் போவீரோ..

வாழ வழியேதுமற்றுச்

சாகக் கிடந்தால்

சுருக்கிட்டு சாவெனச் சொல்லும்

ஈனச் சமூகமிது

பசியால் துடிக்கும்

குழந்தையைப் பெற்றவள்

இதயத் துடிப்பறியா இனமே

உடலைவருத்தி உலையேற்றினால்

பாலியல் தொழிலாயிது ?[/size]

[size=3]வயிற்றுக் கஞ்சிக்கு

கைநீட்டினால் பிச்சைக்காரரென்கிறது

உடலைக் கடித்துக் குதறி

காசெறியும் காமப்பிசாசுகள்

அதற்கும்

விபச்சாரியென்கிறது

தோள் சுமந்த

எறிகணைகள் வெடித்துச் சிதறியபோது

சுதந்திரப் பறவைகளென்றோம்

தரைப்படை

வான்படை

கடற்படை கட்டிக் களமாடென

சிங்களப்படை வீழ்கிறதென

எக்காளமிட்டபடி

கோடிகளாய் அல்லவா

கொடிபிடித்தபடி அள்ளியிறைத்து

முள்ளிவாய்க்கால் வரை கொண்டுபோய்விட்டவர்கள்,

கட்டுக் கோப்புடைந்து

தமிழ்க் கலாச்சாரம் பிறண்டதாய்

மாரடிக்கும் திமிரை ஏதென்போம்

ஈழமெழுமெனப்

போரிட்ட வீரப்பெண் சேனையை

தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே,

மாவீரர் நினைவேந்தக்

கார்த்திகைக்கு

மலர்தூவப் போவீரோ..

இன்னமும் எம்முள் போரிடும்

ஈழப்பெண் தெரிகிறதா

இந்திய இராணுவமும்

ஏவல் படைகளும்

இனவெறியேற்றிய மகிந்தவின் குடும்பமும்

எம் தெருக்களை மிதித்து

சதிராடிய வடுக்களை

எப்படி மறந்தீர்

இன்னமும் எம்முள் போரிடும்

ஈழப்பெண் வீரப்பெண்ணவள்[/size]

[size=3]http://ndpfront.com/...-11-09-23-06-52[/size]

மாவீரர் தினத்துக்கு செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு கூறுவதன் மூலம் என்னத்தை சாதிக்கிறீர்கள்? இறந்தவர்கள் மட்டும் போராடாமல் இறந்தார்களா?

உண்மையில் அவளுக்கு வாழ பணம் இல்லை என்றால் உதவி செய்யும் நிறுவனங்களை இனங்கண்டு உதவி கேட்க வேண்டும். அவ்வாறு யாரையும் தெரியவில்லை எனின் விபச்சார தொழில் தான் தஞ்சம் என்று நினைக்காமல் பிச்சை எடுத்து வாழலாம். தமிழீழத்துக்காக உணர்வுடன் போராடிய பெண் (வேறு யாராலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தால் கூட) உணவு கிடைக்கவில்லை என்பதற்காக பிச்சை எடுத்தாலும் எடுப்பாளே தவிர விபச்சார தொழிலை தேர்ந்தெடுக்க மாட்டாள். அப்படி அவள் விபச்சார தொழிலை தேர்ந்தெடுத்தால் அவள் ஒன்றில் தன்னை தமிழ்கலாசாரத்திற்கு அப்பாற்பட்டவளாக நினைக்கும் பெண்... அவள் உண்மை போராளியாக இருந்திருக்க முடியாது.

"தான் ஒரு பெண் போராளி இப்பொழுது பாலியல் தொழிலாளி" என்று சொல்லிக்கொண்டு கட்டுரை வழங்குபவர்கள் எல்லாம் உண்மையில் விடுதலைக்காக போராடிய பெண் போராளிகள் மேல் அவதூறுகளை பரப்புவதற்கு உதவி செய்பவர்களின் கட்டவிழ்த்து விடப்படும் கதைகளுக்கு துணைசெல்பவர்கள். அதை கேட்டு எல்லா பெண் போராளிகளும் அவ்வாறு நடக்கின்றனர் என்று நினைத்து இவ்வாறு கவிதைகள் புனைவது கவலையளிக்கிறது..

இராணுவத்தால் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு அமர்த்தப்படுபவர்கள் சிலர் உள்ளார்கள். அவர்கள் பணத்தின் மேலுள்ள ஆசையினால் பாலியல் தொளிலாளியாக்கப்படவில்லை. சாவதற்கும் ஏதும் ஆயுதங்கள் கிடைக்காத நிலையில் அவ்வாறு ஆகியுள்ளார்கள். விடுதலை கிடைத்தால் தவிர பணத்தை வழங்குவதன் மூலம் அவர்களை எவராலும் விடுதலை செய்ய முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Edited by துளசி

[size=3]"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். "[/size]

[size=3]- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்[/size]

அதனை சரிவர புரிந்துகொண்டவர்கள் தானே இப்பொழுது தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மாலான வரையில் உதவி செய்துகொண்டிருக்கிறார்கள். புரிந்து கொள்ளாதவர்கள் தான் மாவீரர்களையும் அவர்களை போற்றும் மக்களையும் தூற்றுவதுடன் பெண்போராளிகளை குறைகூறும் வகையில் கவிதைகளை புனைந்து அவர்கள் மேலுள்ள மதிப்பை மக்கள் மத்தியில் தரமிறக்க விளைகிறார்கள்.

இவ்வளவும் கூறும் நீங்கள் சொல்லுங்கள், இதே யாழில் ஒரு கள உறவு தாயகத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் உதவி தேவைப்பட்டால் தொடர்புகொண்டு உதவி கேட்பதற்கு ஒரு தொடர்பாடல் மையம் போன்றதொன்றை உருவாக்க ஆலோசனை கேட்டிருந்தார்/வழங்கியிருந்தார்... அந்த திரியில் வந்து அவர் நடவடிக்கைக்கு ஊக்கமளிக்காமல் அதனை எள்ளிநகையாடியது மட்டுமில்லாமல் அந்த உறவையும் போலி என்று முத்திரை குத்தினீர்கள்.

ஒன்றை ஆரம்பிக்க முன்னமே அதை தடுத்து நிறுத்திய பெருமை உங்களையே சாரும். பின்னர் தலைவரின் சிந்தனையை இங்கு கொண்டுவந்து பதிந்தால் மட்டும் அங்குள்ளவர்களுக்கு விடிவு கிடைத்துவிடும் என்று நினைத்தீர்களோ?

மாவீரர் தினத்துக்கு செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு கூறுவதன் மூலம் என்னத்தை சாதிக்கிறீர்கள்? இறந்தவர்கள் மட்டும் போராடாமல் இறந்தார்களா?

உண்மையில் அவளுக்கு வாழ பணம் இல்லை என்றால் உதவி செய்யும் நிறுவனங்களை இனங்கண்டு உதவி கேட்க வேண்டும். அவ்வாறு யாரையும் தெரியவில்லை எனின் விபச்சார தொழில் தான் தஞ்சம் என்று நினைக்காமல் பிச்சை எடுத்து வாழலாம். தமிழீழத்துக்காக உணர்வுடன் போராடிய பெண் (வேறு யாராலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தால் கூட) உணவு கிடைக்கவில்லை என்பதற்காக பிச்சை எடுத்தாலும் எடுப்பாளே தவிர விபச்சார தொழிலை தேர்ந்தெடுக்க மாட்டாள். அப்படி அவள் விபச்சார தொழிலை தேர்ந்தெடுத்தால் அவள் ஒன்றில் தன்னை தமிழ்கலாசாரத்திற்கு அப்பாற்பட்டவளாக நினைக்கும் பெண்... அவள் உண்மை போராளியாக இருந்திருக்க முடியாது.

இந்தக் கவிதை ஒரு குப்பை என்பதை மறுக்க முடியாது.

அதே போல இன்று வன்னியில் உண்மையாகவே வேறு வழி இன்றி பாலியல் தொழில் புரியும் முன்னால் போராளிகள் உள்ளனர். அப்படியானவர்கள் எல்லாம் போராளிகள் இல்லை போலிகள் என்று சொல்ல வெளிநாட்டுக்கு ஓடி வந்து தன்னை அங்கீகரிக்கச் சொல்லி வழக்குக்கு மேல் வழக்குகளை சந்திக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு அருகதை இல்லை. ஊரில் அவ்வளவு நடக்கும் போதும் போராட்டதுக்கு போகாமல் இங்க வந்து விட்டு இப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசுவது போராடப் போன அனைவரையும் அவமானப்படுத்துவது ஆகும்.

இராணுவத்தால் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு அமர்த்தப்பட்டவர்களை நான் குறை சொல்லவில்லை. ஏனையவர்களில் உண்மையில் ஈழத்துக்காக போராடியவர்கள் பலர் இன்று தற்கொலை செய்துள்ளார்கள் என்பது தெரியாதா உங்களுக்கு? அதற்காக எல்லோரையும் தற்கொலை செய்ய சொல்லவில்லை. பலர் பிச்சை எடுக்கிறார்கள். அது தன்னும் தெரியுமா உங்களுக்கு? காசு இல்லை என்றால் விபச்சார தொழிலை தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்கினால் இன்று விபச்சார தொழிலை கேவலம் என நினைக்கும் பெண்கள் நாளைக்கு விபச்சார தொழிலே தஞ்சம் என நினைத்து வழிமாறி செல்ல நீங்களும் உடந்தையாக இருப்பீர்கள் என்பதை மறவாதீர்கள்.

இன்றைய நிலையில் பலரிடம் பணம் இல்லை தான். ஆனால் அதற்காக விபச்சார தொழிலை தேர்ந்தெடுத்து தான் உயிர்வாழ முடியும் என்ற நிலை இல்லை. பலர் கூலி வேலைக்கு செல்கிறார்கள், பலர் உதவி நிறுவனங்களை நாடுகிறார்கள். எல்லோருக்கும் சரியான முறையில் பணம் வழங்கப்படாவிட்டாலும் விபச்சாரம் செய்து தான் பிழைக்க வேண்டும் என்ற நிலை இல்லை. அதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதற்காக விபச்சார தொழிலை தேர்ந்தெடுத்த பெண்களுக்கு உதவி செய்யவேண்டாம் என்று நான் கூறவில்லை. ஒருசிலர் விபச்சார தொழிலை தேர்ந்தெடுப்பதால் ஒட்டுமொத்த பெண் போராளிகளையும் மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதையும் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நான் போராடவில்லை தான். ஆனாலும் முள்ளிவாய்க்காலில் போர் நிறைவடையும் வரை நாட்டில் தான் இருந்தேன்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நான் போராடவில்லை தான். ஆனாலும் முள்ளிவாய்க்காலில் போர் நிறைவடையும் வரை நாட்டில் தான் இருந்தேன்.

இந்த வசனங்கள் மூலம் சொல்ல வரும் செய்தி என்ன?

என்னுடைய குஞ்சியப்புவும் பிறந்ததில் இருந்து நாட்டில்தான் இருக்கின்றார். அவரும் 95 இல் வன்னிக்கு இடம்பெயர்ந்து, 2009இல் திரும்பவும் யாழ்ப்பாணத்தில் உள்ள சொந்த ஊருக்கு வந்திருக்கின்றார். அவரின் புறுபுறுப்புக்கள் எல்லாவற்றையும் நான் நம்புவதில்லை.

இதன் மூலம் நான் ஒரு செய்தியும் சொல்ல வரவில்லை. அவர் தான் "ஊரில் அவ்வளவு நடக்கும்போதும் போராட்டத்துக்கு போகாமல் இங்கு வந்து விட்டு" என்ற வசனத்தை பயன்படுத்தினார். இந்த கேள்வியை கேட்கும் அவரை விட அதற்கு பின்னான காலப்பகுதியில் நான் நாட்டிலிருந்து விட்டு தான் வந்தேன். அவரை விட அங்கு மக்கள் படும் துன்பம் எனக்கு தெரியும் என்பதற்காகவே கூறினேன்.

ஆனால் அவர் நான் என்ன கூற வருகிறேன் என்ற தெளிவில்லாமல் தன் கருத்தை நியாயப்படுத்துவதற்காக தேவையில்லாமல் வெளிநாட்டுக்கு வந்த கதையை இடையில் இழுக்கிறார்.

போராடாமல் வெளிநாட்டுக்கு வந்தவர்களை குற்றம்சாட்டுகிறீர்கள்... அல்லது போராடாமல் நாட்டில் இருந்தவர்களை குற்றம்சாட்டுகிறீர்கள். ஆனால் இன்று பல பெண்கள் பாலியல் தொழிலை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று கூறி அவர்களுக்காக கதைப்பவர்கள் ஒன்றை மட்டும் இலகுவில் மறந்து விடுகிறார்கள். அதாவது அங்கு அப்பெண்களிடம் சென்று வருவது கூட பெருமளவில் எம் தமிழர்கள் தான். அந்த பெண்கள் தான் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாலியல் தொழிலுக்கு செல்கிறார்கள் என்றால் அவர்களிடம் செல்லும் ஆண்களுக்கு எங்கே போச்சு புத்தி? நான் காசு தருகிறேன் இந்த தொழிலுக்கு செல்லாதே என்று சொல்ல தெரிதாதா? தம் தம் ஆசைக்கு ஆண்களும் சென்று வருகிறார்கள். அப்படியான ஆண்கள் மேல் குற்றம் சுமத்தி நாலு கேள்வி கேட்க வக்கில்லாதவர்கள் புலம்பெயர் தமிழர்களை போட்டுத்தாக்கி காரியம் சாதிப்பதில் கண்ணாக இருக்கிறார்கள்.

பி.கு: உங்களை வைத்து பார்க்கும் போது, உங்கள் தந்தை தொடக்கம் அனைவரும் நாட்டு நிலைமை நன்றாக இருக்கிறது என்னும்படி புறுபுறுத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. நான் நாட்டு நிலைமை நன்றாக இல்லை என்று தான் புறுபுறுக்கிறேன். எனவே உங்கள் தந்தையை விட ஏனையவர்களை விட என் புறுபுறுப்பில் உண்மை தன்மை உள்ளதென மற்றவர்கள் நம்பலாம். நீங்கள் நம்ப வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. :D

- திருத்தப்பட்டுள்ளது -

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

பி.கு: உங்களை வைத்து பார்க்கும் போது, உங்கள் தந்தை நாட்டு நிலைமை நன்றாக இருக்கிறது என்னும்படி புறுபுறுத்திருப்பார் என்றே தோன்றுகிறது. நான் நாட்டு நிலைமை நன்றாக இல்லை என்று தான் புறுபுறுக்கிறேன். எனவே உங்கள் தந்தையை விட என் புறுபுறுப்பில் உண்மை தன்மை உள்ளதென மற்றவர்கள் நம்பலாம். நீங்கள் நம்ப வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. :D

அதிபுத்திசாலி என்று நினைத்தேன். குஞ்சியப்புவும் தந்தையும் வேறு வேறானவர்கள்! :icon_mrgreen:

தமிழரங்கம் இராயகரன் எக்கச்சக்கமான கேள்விகள் கேட்டிருந்தார்..

---------

உண்மை நிலை என்ன?

1.இன்று வடக்கு – கிழக்கில் பெண் உடலை விற்ற வாழும் நிலையில்லையா?

2.பெண் உடலை விற்பது அங்கு அதிகரித்துச் செல்லவில்லையா?

3.விதவைகளுக்கு இந்த சமூகம் வாழத்தான் வழிகாட்டுகின்றதா?

4.பெண்ணின் பாலியல் தேவைகளையும், உணர்வுகளையும் இந்த சமூகம் அங்கீகரித்து இருக்கின்றதா?

5.பெண்ணை அவளின் உடலூடாக அணுகுவது, வடக்கு – கிழக்கில் அதிகரிக்கவில்லையா?

6.சமூகத்தில் பாலியல் குற்றங்களும், சிறு வயது பாலியல் பிறழ்ச்சிகளும், பொது பாலியல் நுகர்வு நாட்டங்களும் அதிகரிக்கவில்லையா?

7.வடக்கு – கிழக்கில் அதிகரித்துவிட்ட பெண்கள் எண்ணிக்கையும், பாலியல் பிரச்சனைகளும், வரைமுறையற்ற பாலியல் நடத்தையை உருவாக்கவில்லையா?

8.சமூக கலாச்சார கட்டுக்கோப்பு கொண்ட சமூக அமைப்பாகவா சமூகம் உள்ளது அல்லது உதிரியான நுகர்வு சமூகமாக மாறியுள்ளதா?

9.அதிகமான போதைக்குள்ளும், வரைமுறையற்ற நுகர்வு கலச்சாரமும் கொண்ட சமூகத்தின், பாலியல் நடத்தையும் பாலியல் நுகர்வும் எந்த வடிவத்தில் வெளிப்படுகின்றது?

10.முன்னாள் புலிகளின் மறுவாழ்வுக்கு அரசும் சரி, தமிழ்தேசியவாதிகளும் சரி என்ன செய்தார்கள, செய்கின்றனர்?

11.முன்னாள் புலிகள் சமூகத்தில் இயல்பாக மற்றவர்கள் போல் வாழமுடிகின்றதா?

12.தனிமையாக வாழும் பெண்களை பாலியல் ரீதியாக அணுகுவதும், அந்த நோக்கில் நிர்ப்பந்திப்பதும், உதவுவதன் மூலமும் பெண்ணை உளவியல் ரீதியாக பாலியல் பண்டமாக்கப்படவில்லையா?

13.உடலை விற்கும் பெண்ணை நோக்கி தமிழ் ஆண்கள் செல்லவில்;லையா? (இதை இராணுவமாக குறுக்கிவிடுவது அபத்தம்)

இப்படி பற்பல கேள்விகள் உண்டு.

தமிழ்தேசியவாதிகளும், புலியெதிர்ப்புவாதிகளும், கலாச்சாரவாதிகளும், திரிபுவாதிகளும்.. இதை கற்பனை என்றும் வியாபாரம் என்றும் கூறுவதன் மூலம், இந்த உண்மையான எதார்த்தத்தை மூடிமறைக்க முடியாது. அங்கு கணிசமான பெண்கள் உடலை விற்று வாழ்கின்ற மனித அவலத்தை மறுப்பதன் மூலம், அதே ஆணாதிக்க வக்கிரத்துடன் மீளவும் இவ்வாறு செய்கின்றனர். வாழவழியற்ற நிலையில் தனித்து வாழும் ஒரு பெண், இந்த நிலையில் என்ன தான் செய்ய முடியும்?

உதவும் தனி மனிதர்கள் முதல் தன்னார்வ நிறுவனங்களை கண்டறிந்து அணுகுவது என்பது இலகுவானதா? தங்கள் வாழ்வுக்கான அடிப்படைகளை பெற்றுத்தான் விடமுடியுமா? அவர்களால் இதைப் போன்ற இலட்சம் பெண்களின் பிரச்சனையை தீர்த்துவிடத்தான் முடியுமா? இப்படி உதிரியான உதவிகளைக் கூட மோசடி செய்வதும், ஒரு பகுதியை சுருட்டிக் கொள்ளும் பொதுப் பின்புலத்தில், பெண்கள் இந்த ஆணாதிக்கச் சுரண்டல் அமைப்பில் தன் உடலை விற்று வாழ்வது இலகுவானதாக, கவுரமானதாக தேர்ந்தெடுக்குமாறு நிற்பந்திக்கப்படுகின்றாள். குற்றவாளி அவள் அல்ல, இந்த சமூகம் தான். அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தது, இந்தச் சமூகம் தான்.

சமூக விழிப்புணர்வற்ற எந்த வழிமுறையும், இதற்குரிய தீர்வாகாது. இதை மூடிமறைப்பதன் மூலம், உதிரியாக உதவுவதன் மூலம் இதற்கு தீர்வு காணமுடியாது. சமூகரீதியாக மக்களை அணிதிரட்டுவதன் மூலம், மக்கள் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ள வைப்பதன் மூலம் இதற்கு தீர்வு காணமுடியும்.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8769:2012-11-09-150120&catid=359:2012

-------------------------

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் பெண்கள் உடலை வாடகைக்கு விற்றுப் பிழைக்கும் நிலைக்குப் போனதற்கு பிணையாளிகள் மீட்புப் போரைச் செய்த சிறீலங்கா அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட கேள்விகளை நீங்கள் நேரடியாகக் கேட்கப்பயந்து இன்னொருவர் கேள்வியாகப் பதிந்திருக்கிறீர்கள் :lol:

கிருபன் இந்தக் கேள்விகளை இந்தக் களத்திற்குள் குழந்தைத்தனமாகத் திரியும் ஒருவரிடமா முன்வைப்பது?

எத்தனை மலைகள் இருக்கிறார்கள் அவர்களிடம் முன்வைத்தால் இதற்கான பதில் கருத்து வைக்கப்படும்போது ஒரு தெளிவான கருத்தை எட்ட வாய்ப்பிருக்கிறது.

ஏன் இந்தக் கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் என்ன? அதனையும் பதிவிடுங்கள் :icon_mrgreen:

  • தொடங்கியவர்

தாயகத்தில் பெண்கள் உடலை வாடகைக்கு விற்றுப் பிழைக்கும் நிலைக்குப் போனதற்கு பிணையாளிகள் மீட்புப் போரைச் செய்த சிறீலங்கா அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும்.

இந்தக் கருளத்தில் துளசிக்கு பதிலோ துளசிக்கிட்ட கேள்வியோ கேக்க தேவை இல்லை.கேட்டால் என்னைமாதிரிதான் ஒரு அர்த்தமுமில்லாமல் பதில்கள் இருக்கும் :lol: .அதனால் அதைவிடுவம்.நான் மட்டுமில்லை யாருமே இப்ப பதில் எழுதுவதில்லை :D .

ஆனால் நீனகள் இசைக்கலைஞன் இப்படி எழுதி இருப்பது பொறுப்பற்ற ஒரு பதிலாக இருக்கு.சும்மா அநாசயமாக சொல்லிவிட்டு கடந்துபோகிறீர்கள் எமக்காக போராடி எமக்காகவே வழ்ந்த தன்னலமற்றவர்கலின் வாழ்க்கைக்கு இலங்கை அரசுதான் பொறுப்பென்று.என்ன ஒரு குரூரமான மனசு உங்கள் போன்ற எண்ணம்கொண்ட அத்தனைபேருக்குள்ளும் இருக்கென்று நினைக்க.....

அனாயாசமாக எழுதிவிட்டு கடந்துபோனேன் என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? :D

குரூரமான மனசு என்கிறீர்கள்? நீங்களாவது நான் என்ன செய்யலாம் என்று சொல்லலாம்தானே?

எமக்காகப் போராடியவர்கள் இப்போதும் சிறைக்குள்தான் இருக்கிறார்கள்.. ஈழமே ஒரு சிறைதான்.. வெளிநாட்டில் இருந்து நாங்கள் போய் கைதிகளைப் பார்த்துவிட்டு வரலாம். சிங்களவன் முதல்வகுப்பு ஜெயில் கொடுத்திருக்கிறான் என மகிழ்ச்சி கொள்ளலாம். நேசக்கரம் போன்ற அமைப்புகள் மூலமாக சிறைக்குள் இருப்பவர்களுக்கு ஏதாவது கொடுத்துவிடலாம். இதை மீறி என்ன செய்ய முடியும்?

ஆக நீண்டகாலத் தீர்வு என்பதையும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏன் இந்த மக்கள் / போராளிகள் இந்த நிலையை அடைந்தார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு யாழ் மக்களை, கிழக்கு மக்களை, கொழும்புத் தமிழரை, புலம்பெயர்ந்த தமிழரைக் குறைசொல்லித் திரிவது எமக்குள்ளே பிரிவினையை வளர்ப்பது ஆகும். ஆதிமூலம் என்ன என்பதை ஒருகணமும் மறந்துவிடக்கூடாது.

மாவீரர் தினத்தை கொண்டாட வேண்டாம் என்று கவிதை சொல்லவில்லை .மாவீரர் தினம் மட்டும் கொண்டாடினால் மட்டும் காணும் என்று இருக்கவேண்டாம் என்றுதான் தான் சொல்லுது .

எல்லாரும் நல்லா நடிக்க கற்றுக்கொண்டுவிட்டார்கள் .

சிங்களவன் எமக்கு தீர்வு தராததற்கும் புலம் பெயர்ந்து சுருட்டி வைத்திருக்கும் பணத்தை இப்படியானவர்களுக்கு கொடுக்காமல் வைத்திருபதற்கும் முடிச்சு போட வேண்டாம் .இப்ப பங்கு பிரச்சனையில் கொலை வேறு தொடங்கியிருக்கு .இன்னமும் நாலு விழவேண்டும்.

எமக்குள் இருக்கும் பிரச்சனையை வெளிப்படையாக கதைக்காமல் இருக்க விரும்புவதே சுருட்டல்கள் அம்பலத்தில் வந்துவிடும் என்றுதானே ஒழிய பிரிவினை வந்து விடும் என்று அல்ல .பிரிவினை வந்துவிடும் என்பது ஒரு கள்ளசாட்டு.இப்போ இல்லாத பிரிவினையா இனி வரப்போகுது ?

யாழிலும் சுருட்டல் கோஸ்டிகள் பலர் இருக்கினம் போல .

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட கேள்விகளை நீங்கள் நேரடியாகக் கேட்கப்பயந்து இன்னொருவர் கேள்வியாகப் பதிந்திருக்கிறீர்கள் :lol:

கிருபன் இந்தக் கேள்விகளை இந்தக் களத்திற்குள் குழந்தைத்தனமாகத் திரியும் ஒருவரிடமா முன்வைப்பது?

எத்தனை மலைகள் இருக்கிறார்கள் அவர்களிடம் முன்வைத்தால் இதற்கான பதில் கருத்து வைக்கப்படும்போது ஒரு தெளிவான கருத்தை எட்ட வாய்ப்பிருக்கிறது.

ஏன் இந்தக் கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் என்ன? அதனையும் பதிவிடுங்கள் :icon_mrgreen:

அவை இராயகரனால் கேட்கப்பட்ட கேள்விகள். அதே கேள்விகளோடு இசைந்துபோவதனால்தான் இந்தத் திரியில் பதிந்தேன். ஆனால் அவற்றுக்கான பதிலை தனிய ஒருவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஒரு குழுமமாக (சமூகமாக) நமது பதில் என்ன?

தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்று வந்தால் இந்தப் பிரச்சினைகள் மறைந்து போகும் என்பதுதான் பலரது கருத்தாகப் பார்த்திருக்கின்றேன். இப்படியான பதில்கள் மிகவும் பொறுப்பற்ற, பிரச்சினைகளில் இருந்து நழுவிவிடும் தன்மைகொண்ட பதில்கள்.

உண்மையில் எங்களிடம் சமூக அக்கறை குறைந்துவிட்டது. மே 2009 க்குப் பின்னர் உடனடிப் பிரச்சினைகளாக இருந்த மக்களினதும், முன்னாள் போராளிகளினதும் அவலங்களுக்கு ஒரு ஒற்றுமையான நிறுவன மயப்படுத்தப்பட்ட உதவிகளை எப்படிச் செய்யலாம் என்பதை ஆராயாமல் அவர்களையெல்லாம் அந்தரிக்க விட்டிருந்தோம். அவர்கள் தமது உறவினர்கள், நண்பர்கள் அல்லது சிறு சிறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அன்றாட வாழ்வைக் கொண்டு நடாத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஒரு சிதைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் அக்கறையற்ற, "இதுவும் கடந்து போகும்" என்று வெறும் அனுதாபத்தைக் காட்டும் மரத்துப்போனவர்களாக ஆகிவிட்டோம். எனவே அவலங்களை தினம் தினம் சந்திப்பவர்கள் தாங்களாகவே அவற்றில் இருந்து மீள தமக்குத் தெரிந்த வழிகளில் முயல்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உரிமைகளை வென்றெடுக்கும் அரசியலையும், அவல வாழ்வில் அந்தரிக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்தும் முயற்சிகளையும் சமாந்தரமாக முன்னெடுத்தால்தான் ஏதாவது முன்னேற்றம் கிட்டும். இல்லாவிட்டால் காலங்கள் உருண்டோட தமிழ்த் தேசிய உணர்வு நலிந்து காணாமல் போக, தாயகத்தில் தமிழர்களின் வாழ்விடம் சுருங்கி ஒரு தேசிய இனம் என்று சொல்லும் நிலையும் இல்லாமல் போகும்.

அதிபுத்திசாலி என்று நினைத்தேன். குஞ்சியப்புவும் தந்தையும் வேறு வேறானவர்கள்! :icon_mrgreen:

தமிழரங்கம் இராயகரன் எக்கச்சக்கமான கேள்விகள் கேட்டிருந்தார்..

---------

உண்மை நிலை என்ன?

1.இன்று வடக்கு – கிழக்கில் பெண் உடலை விற்ற வாழும் நிலையில்லையா?

2.பெண் உடலை விற்பது அங்கு அதிகரித்துச் செல்லவில்லையா?

3.விதவைகளுக்கு இந்த சமூகம் வாழத்தான் வழிகாட்டுகின்றதா?

4.பெண்ணின் பாலியல் தேவைகளையும், உணர்வுகளையும் இந்த சமூகம் அங்கீகரித்து இருக்கின்றதா?

5.பெண்ணை அவளின் உடலூடாக அணுகுவது, வடக்கு – கிழக்கில் அதிகரிக்கவில்லையா?

6.சமூகத்தில் பாலியல் குற்றங்களும், சிறு வயது பாலியல் பிறழ்ச்சிகளும், பொது பாலியல் நுகர்வு நாட்டங்களும் அதிகரிக்கவில்லையா?

7.வடக்கு – கிழக்கில் அதிகரித்துவிட்ட பெண்கள் எண்ணிக்கையும், பாலியல் பிரச்சனைகளும், வரைமுறையற்ற பாலியல் நடத்தையை உருவாக்கவில்லையா?

8.சமூக கலாச்சார கட்டுக்கோப்பு கொண்ட சமூக அமைப்பாகவா சமூகம் உள்ளது அல்லது உதிரியான நுகர்வு சமூகமாக மாறியுள்ளதா?

9.அதிகமான போதைக்குள்ளும், வரைமுறையற்ற நுகர்வு கலச்சாரமும் கொண்ட சமூகத்தின், பாலியல் நடத்தையும் பாலியல் நுகர்வும் எந்த வடிவத்தில் வெளிப்படுகின்றது?

10.முன்னாள் புலிகளின் மறுவாழ்வுக்கு அரசும் சரி, தமிழ்தேசியவாதிகளும் சரி என்ன செய்தார்கள, செய்கின்றனர்?

11.முன்னாள் புலிகள் சமூகத்தில் இயல்பாக மற்றவர்கள் போல் வாழமுடிகின்றதா?

12.தனிமையாக வாழும் பெண்களை பாலியல் ரீதியாக அணுகுவதும், அந்த நோக்கில் நிர்ப்பந்திப்பதும், உதவுவதன் மூலமும் பெண்ணை உளவியல் ரீதியாக பாலியல் பண்டமாக்கப்படவில்லையா?

13.உடலை விற்கும் பெண்ணை நோக்கி தமிழ் ஆண்கள் செல்லவில்;லையா? (இதை இராணுவமாக குறுக்கிவிடுவது அபத்தம்)

இப்படி பற்பல கேள்விகள் உண்டு.

தமிழ்தேசியவாதிகளும், புலியெதிர்ப்புவாதிகளும், கலாச்சாரவாதிகளும், திரிபுவாதிகளும்.. இதை கற்பனை என்றும் வியாபாரம் என்றும் கூறுவதன் மூலம், இந்த உண்மையான எதார்த்தத்தை மூடிமறைக்க முடியாது. அங்கு கணிசமான பெண்கள் உடலை விற்று வாழ்கின்ற மனித அவலத்தை மறுப்பதன் மூலம், அதே ஆணாதிக்க வக்கிரத்துடன் மீளவும் இவ்வாறு செய்கின்றனர். வாழவழியற்ற நிலையில் தனித்து வாழும் ஒரு பெண், இந்த நிலையில் என்ன தான் செய்ய முடியும்?

உதவும் தனி மனிதர்கள் முதல் தன்னார்வ நிறுவனங்களை கண்டறிந்து அணுகுவது என்பது இலகுவானதா? தங்கள் வாழ்வுக்கான அடிப்படைகளை பெற்றுத்தான் விடமுடியுமா? அவர்களால் இதைப் போன்ற இலட்சம் பெண்களின் பிரச்சனையை தீர்த்துவிடத்தான் முடியுமா? இப்படி உதிரியான உதவிகளைக் கூட மோசடி செய்வதும், ஒரு பகுதியை சுருட்டிக் கொள்ளும் பொதுப் பின்புலத்தில், பெண்கள் இந்த ஆணாதிக்கச் சுரண்டல் அமைப்பில் தன் உடலை விற்று வாழ்வது இலகுவானதாக, கவுரமானதாக தேர்ந்தெடுக்குமாறு நிற்பந்திக்கப்படுகின்றாள். குற்றவாளி அவள் அல்ல, இந்த சமூகம் தான். அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தது, இந்தச் சமூகம் தான்.

சமூக விழிப்புணர்வற்ற எந்த வழிமுறையும், இதற்குரிய தீர்வாகாது. இதை மூடிமறைப்பதன் மூலம், உதிரியாக உதவுவதன் மூலம் இதற்கு தீர்வு காணமுடியாது. சமூகரீதியாக மக்களை அணிதிரட்டுவதன் மூலம், மக்கள் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ள வைப்பதன் மூலம் இதற்கு தீர்வு காணமுடியும்.

http://www.tamilcirc...&catid=359:2012

மன்னிக்கவும், தந்தை தொடக்கம் என்று எழுத வந்தேன்... தொடக்கம் என்ற சொல் விடுபட்டு விட்டது. இரண்டும் வேறு வேறானவை என்று எனக்கு தெரியாது என்று நீங்கள் நினைத்து கருத்து எழுதியமை உங்கள் அதிபுத்திசாலி தனத்தை காட்டுகிறது... :icon_mrgreen:

இது எதனையும் கற்பனை என்று நான் கூறவில்லை. என் கருத்தை சரியாக வாசியுங்கள். சாதாரண பெண்களும் போராட்டத்துக்காக தன்னை அர்ப்பணித்த பெண் போராளிகளும் ஒன்றல்ல. உண்மை போராளி பற்றிய அவதூறுகளை தான் நான் மறுத்தேன். சாதாரண பெண்கள் விடும் தவறுகள் கூட பெண் போராளி விடும் தவறு என்ற வகையில் பலராலும் நோக்கப்படுகிறது. அதனை நான் மறுத்து கருத்துரைத்தேன்.... மீண்டும் என் கருத்துகளை வாசித்து விட்டு இவ்வளவு கேள்விகளையும் கேளுங்கள்.

"உடலை விற்கும் பெண்ணை நோக்கி தமிழ் ஆண்கள் செல்லவில்;லையா? (இதை இராணுவமாக குறுக்கிவிடுவது அபத்தம்)" என்ற கேள்விக்கான பதிலை ஏற்கனவே எழுதி விட்டேன். இன்னும் வாசிக்காவிட்டால் மீண்டும் வாசியுங்கள்.

போராடாமல் வெளிநாட்டுக்கு வந்தவர்களை குற்றம்சாட்டுகிறீர்கள்... அல்லது போராடாமல் நாட்டில் இருந்தவர்களை குற்றம்சாட்டுகிறீர்கள். ஆனால் இன்று பல பெண்கள் பாலியல் தொழிலை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று கூறி அவர்களுக்காக கதைப்பவர்கள் ஒன்றை மட்டும் இலகுவில் மறந்து விடுகிறார்கள். அதாவது அங்கு அப்பெண்களிடம் சென்று வருவது கூட பெருமளவில் எம் தமிழர்கள் தான். அந்த பெண்கள் தான் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாலியல் தொழிலுக்கு செல்கிறார்கள் என்றால் அவர்களிடம் செல்லும் ஆண்களுக்கு எங்கே போச்சு புத்தி? நான் காசு தருகிறேன் இந்த தொழிலுக்கு செல்லாதே என்று சொல்ல தெரிதாதா? தம் தம் ஆசைக்கு ஆண்களும் சென்று வருகிறார்கள். அப்படியான ஆண்கள் மேல் குற்றம் சுமத்தி நாலு கேள்வி கேட்க வக்கில்லாதவர்கள் புலம்பெயர் தமிழர்களை போட்டுத்தாக்கி காரியம் சாதிப்பதில் கண்ணாக இருக்கிறார்கள்.

Edited by துளசி

கிருபன் இந்தக் கேள்விகளை இந்தக் களத்திற்குள் குழந்தைத்தனமாகத் திரியும் ஒருவரிடமா முன்வைப்பது?

குழந்தை பிள்ளைகளும் சிலவேளை அதிபுத்திசாலிகளை விட அதிகளவு நன்மைகளை செய்யும்.... :icon_mrgreen: நாட்டுக்கு நன்மை செய்யாவிட்டாலும் குறைந்தது தீமை செய்யாமலாவது ஒதுங்கிக்கொள்ளும் குழந்தைப்பிள்ளைகளை பற்றி குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். :icon_mrgreen:

கேள்வி கேட்டது தான் என்னிடமே தவிர அந்த கேள்விகளுக்கான பதில்களை நீங்களும் வழங்கலாமே... :)

அனாயாசமாக எழுதிவிட்டு கடந்துபோனேன் என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? :D

குரூரமான மனசு என்கிறீர்கள்? நீங்களாவது நான் என்ன செய்யலாம் என்று சொல்லலாம்தானே?

எமக்காகப் போராடியவர்கள் இப்போதும் சிறைக்குள்தான் இருக்கிறார்கள்.. ஈழமே ஒரு சிறைதான்.. வெளிநாட்டில் இருந்து நாங்கள் போய் கைதிகளைப் பார்த்துவிட்டு வரலாம். சிங்களவன் முதல்வகுப்பு ஜெயில் கொடுத்திருக்கிறான் என மகிழ்ச்சி கொள்ளலாம். நேசக்கரம் போன்ற அமைப்புகள் மூலமாக சிறைக்குள் இருப்பவர்களுக்கு ஏதாவது கொடுத்துவிடலாம். இதை மீறி என்ன செய்ய முடியும்?

ஆக நீண்டகாலத் தீர்வு என்பதையும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏன் இந்த மக்கள் / போராளிகள் இந்த நிலையை அடைந்தார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு யாழ் மக்களை, கிழக்கு மக்களை, கொழும்புத் தமிழரை, புலம்பெயர்ந்த தமிழரைக் குறைசொல்லித் திரிவது எமக்குள்ளே பிரிவினையை வளர்ப்பது ஆகும். ஆதிமூலம் என்ன என்பதை ஒருகணமும் மறந்துவிடக்கூடாது.

அருமையான கருத்து அண்ணா... :)

Edited by துளசி

கிருபன் இந்தக் கேள்விகளை இந்தக் களத்திற்குள் குழந்தைத்தனமாகத் திரியும் ஒருவரிடமா முன்வைப்பது?

சகாறாவே இப்படிக் கேட்பது சரியல்ல.... ஒருவரை இன்ன மாதிரி என்று முத்திரை குத்துவது அவரது ஆற்றல்களை மழுங்கடிக்கவே உதவி செய்யும்.

....குழந்தைத் தனமாக எழுதும் ஒருவர் தொடர்ந்து கருத்தாடல்களில் பங்கு கொண்டு தன்னை புடம் போட்டு நாளை மிகப்பெரும் கருத்தாளர்களாக வருவது யாழிலேயே நிகழ்ந்துள்ளது தானே... துளசியின் அரசியல் மற்றும் கலாச்சாரம் சம்பந்தமான அநேக கருத்துகளில் எனக்கு பெரும் முரண்பாடுகளும் வெறுப்புகளும் இருக்கு...ஆனால் தன்னுடைய கருத்துகளை சொல்வதில் அவருக்கு இருக்கும் சலிப்பின்மையும், தன் கருத்துகளுக்காக சளைக்காமல் போராடும் (அல்லது சண்டை பிடிக்கும் :) ) குணமும் நாளை பெரியளவில் அவரை ஒரு கருத்தாளராக மாற்றுவதற்குரிய வாய்ப்புகளைத்தான் கொண்டு இருக்கு, அத்துடன் அநேகரில் இல்லாத தன் தவறுகளுக்கு மன்னிப்பு கோரும் குணமும் இருக்கு.

முகத்துக்கு முன்னுக்கு ஒருவரை பாராட்டுவது முதுகில் கத்தியைச் செருகுவதற்கு சமமானது என்றாலும், இந்த இடத்தில் இதனை சொல்லாமல் விட முடியவில்லை. அத்துடன் இதனை ஒரு மட்டுவாக சொல்லவில்லை. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும், தந்தை தொடக்கம் என்று எழுத வந்தேன்... தொடக்கம் என்ற சொல் விடுபட்டு விட்டது. இரண்டும் வேறு வேறானவை என்று எனக்கு தெரியாது என்று நீங்கள் நினைத்து கருத்து எழுதியமை உங்கள் அதிபுத்திசாலி தனத்தை காட்டுகிறது... :icon_mrgreen:

இது எதனையும் கற்பனை என்று நான் கூறவில்லை. என் கருத்தை சரியாக வாசியுங்கள். சாதாரண பெண்களும் போராட்டத்துக்காக தன்னை அர்ப்பணித்த பெண் போராளிகளும் ஒன்றல்ல. உண்மை போராளி பற்றிய அவதூறுகளை தான் நான் மறுத்தேன். சாதாரண பெண்கள் விடும் தவறுகள் கூட பெண் போராளி விடும் தவறு என்ற வகையில் பலராலும் நோக்கப்படுகிறது. அதனை நான் மறுத்து கருத்துரைத்தேன்.... மீண்டும் என் கருத்துகளை வாசித்து விட்டு இவ்வளவு கேள்விகளையும் கேளுங்கள்.

"உடலை விற்கும் பெண்ணை நோக்கி தமிழ் ஆண்கள் செல்லவில்;லையா? (இதை இராணுவமாக குறுக்கிவிடுவது அபத்தம்)" என்ற கேள்விக்கான பதிலை ஏற்கனவே எழுதி விட்டேன். இன்னும் வாசிக்காவிட்டால் மீண்டும் வாசியுங்கள்.

துளசிக்கு நான் எப்படிச் சிந்திப்பேன் என்று தெரிகின்றது. எனது தந்தையும் எப்படிச் சிந்திப்பார் என்றும் தெரிகின்றது.. இதற்கும் மேல் நான் அதிபுத்திசாலி என்றும் தெரிகின்றது. தொடருங்கள் :icon_mrgreen:

எதையும் வாசிக்கும்போது எனக்கு சாரம் மட்டும் மூளையில் பதியும், சக்கைகள் பதியாது.. எனவே உங்கள் கருத்துக்களில் உள்ள சாரங்கள் நன்றாகப் பதிந்துவிட்டது. நன்றி.. <_<

  • கருத்துக்கள உறவுகள்

சகாறாவே இப்படிக் கேட்பது சரியல்ல.... ஒருவரை இன்ன மாதிரி என்று முத்திரை குத்துவது அவரது ஆற்றல்களை மழுங்கடிக்கவே உதவி செய்யும்.

....குழந்தைத் தனமாக எழுதும் ஒருவர் தொடர்ந்து கருத்தாடல்களில் பங்கு கொண்டு தன்னை புடம் போட்டு நாளை மிகப்பெரும் கருத்தாளர்களாக வருவது யாழிலேயே நிகழ்ந்துள்ளது தானே... துளசியின் அரசியல் மற்றும் கலாச்சாரம் சம்பந்தமான அநேக கருத்துகளில் எனக்கு பெரும் முரண்பாடுகளும் வெறுப்புகளும் இருக்கு...ஆனால் தன்னுடைய கருத்துகளை சொல்வதில் அவருக்கு இருக்கும் சலிப்பின்மையும், தன் கருத்துகளுக்காக சளைக்காமல் போராடும் (அல்லது சண்டை பிடிக்கும் :) ) குணமும் நாளை பெரியளவில் அவரை ஒரு கருத்தாளராக மாற்றுவதற்குரிய வாய்ப்புகளைத்தான் கொண்டு இருக்கு, அத்துடன் அநேகரில் இல்லாத தன் தவறுகளுக்கு மன்னிப்பு கோரும் குணமும் இருக்கு.

முகத்துக்கு முன்னுக்கு ஒருவரை பாராட்டுவது முதுகில் கத்தியைச் செருகுவதற்கு சமமானது என்றாலும், இந்த இடத்தில் இதனை சொல்லாமல் விட முடியவில்லை. அத்துடன் இதனை ஒரு மட்டுவாக சொல்லவில்லை. :icon_idea:

இதற்கு நான் என்ன பதிலைச் சொல்லமுடியும் நிழலி?

சகாறா என்றால் எதனையும் சுட்டிக்காட்டக்கூடாதா? முடியலைப்பா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.