Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜிவும் கிட்டுவும், தணுவின் பெல்ட் வெடிகுண்டு, சிவராசனின் கைத்துப்பாக்கி...: கேபி விளக்கம்

Featured Replies

[size=4]டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோர்கள் அரசியலைத் தேர்ந்தெடுத்து சிறிலங்கா அரசின் அரைகுறைத் அரசியல் விடயங்களுக்குத் துணை போய்க் கொண்டு இருக்கையில், தனது சக போராளிகளினதும் மக்களினதும் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சிங்களத்தின் பிடியில் நின்று கொண்டு கே.பி. செய்து வருவதனை பாராட்டாமல் யாரும் இருக்க முடியாது.
[/size]

[size=4]இவரையும் கூட நாளை சிங்களம் "அரசியலில் ஈடுபடுத்தாலம்" என செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது வட மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிடவைக்கப்படலாம்.[/size]

[size=4]இவ்வாறே கருணாவையும் பிள்ளையாயனையும் கூட பாவித்தார்கள். முதலில் புலிகளை அழிக்க,பின்னர் அரசியலில். [/size]

  • Replies 71
  • Views 5.4k
  • Created
  • Last Reply

[size=4]நடந்த போற்குற்றங்களுக்கும் அதை செய்தவர்கள் மீதும் ஆதாரம் உள்ளது. தொடரும் படுகொலைகள், இலவழிப்புக்களுக்கும் கூட ஆதாரம் இருக்கலாம். அவற்றிற்கு பின்னால் மகிந்த சகோதரர்கள் உள்ளனர். எனவே அவர்களுடன் இணைந்து செயல்படுபவர்களும் அதற்கு உடந்தையானவர்களே. [/size]

[size=4]அவன் சுயாதீனாமாக நின்றால், நீங்கள் கூறுவது சரி. [/size]

சிங்களப் பேரினவாதத்தின் பிடிக்குள் சுயாதீனமாக எவரும் நிற்கமுடியாது.

போர்க்குற்றம் என்பதை சிங்களப்பேரினவாதம் ஆரம்பத்தில் இருந்தே செய்தவருகின்றது. இதில் இறுதியில் மகிந்தனையும் கோத்தாவையும் குற்றவாளியாக்குவதால் சிங்களப்பேரினவாதத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. போர்க்குற்றம் என்பது தமிழர் தரப்பு தமது உரிமைகளை தொடர்ந்து கோருவதற்கு ஒரு பிடிமானம். இதன் அடிப்படையில் எவரும் போர்க்குற்றத்தை கையாளவில்லை.

சிங்களவரை அனுசரித்து வாழப்பழகிக்கொண்ட மக்கள் கூட்டம் தமிழரில் பெருந்தொகை. அதனால்தான் மிகக் குறுகிய மக்கள் கூட்டத்துடன் முடக்கப்பட்ட போராட்டம் பயங்கரவாதமாக முடிக்கப்பட்டது.

//எனவே அவர்களுடன் இணைந்து செயல்படுபவர்களும் அதற்கு உடந்தையானவர்களே. //

இப்படி உங்களால் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அதற்கான அதிகாரமோ தகுதியோ உங்களுக்கோ எனக்கோ கிடையாது.

புலிகள் ராணுவரீதியில் ஆயுத ஆளணிப்பலமிழந்தபின் வன்னியின் வறுமைப்பட்ட மக்களே பலமாகப் பயன்படுத்தப்பட்டனர். இதற்கு ஒரு பின்னணிக்காரணம் புலம்பெயரந்த தேசீயவாதிகள். எப்படியாவது சர்வதேசத்தை தலையிடவைத்து போரைத் தடுத்து நிறுத்தலாம் என்ற நம்பிக்கையை வழங்கியவர்கள் இந்த வழிநடத்திகள். இது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் அல்லது சர்வதேசத்தைப் பற்றிய புரிந்துணர்வு இருந்திருந்தால் ஆயுதங்கள் சற்று முன்னதாக மௌனிக்கப்பட்டிருக்கலாம் மோசமான கொலைகள் தடுக்கப்பட்டிருக்கலாம். மகிந்தனுக்கும் கோத்தாவுக்கும் துணைபோனது கே பி அல்ல புலம்பெயரந்தவனின் வரட்டுத்தேசியவாதம். கொலை செய்தது சிங்களமாக இருப்பினும் கொலைக்களத்துக்கு இழுத்தச் சென்றதில் புலம்பெயர்ந்தவனின் பங்கு இருக்கின்றது. என்னுமொருவன் மீது பழியை தூக்கிப்போடுவதை நிறுத்தி வெளிப்படையாக பேசுங்கள். நான் குற்றவாளி என்றதில் இருந்து ஆரம்பியுங்கள்.

போர்க்குற்றம் என்பதை சிங்களப்பேரினவாதம் ஆரம்பத்தில் இருந்தே செய்தவருகின்றது. இதில் இறுதியில் மகிந்தனையும் கோத்தாவையும் குற்றவாளியாக்குவதால் சிங்களப்பேரினவாதத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. போர்க்குற்றம் என்பது தமிழர் தரப்பு தமது உரிமைகளை தொடர்ந்து கோருவதற்கு ஒரு பிடிமானம். இதன் அடிப்படையில் எவரும் போர்க்குற்றத்தை கையாளவில்லை..

[size=4]அண்மையில் வெளிவாராமல் இருந்து வெளிவந்த ஐ.நா. அறிக்கை வரை கடந்த மார்ச் மாத ஐ.நா. மனித உரிமை வரை தமிழர் தரப்பு பல சவால்களுக்கும் மத்தியில் போர்குற்றம் ஊடாக இன அழிப்பு என்பதை நிறுவி அதன் ஊடாக ஒரு ஐ.நா. வாக்கெடுப்பிற்கு முயன்று வருவதை கொத்தாவும் மகிந்தாவுமே ஏற்று கொண்டுள்ளனர்.[/size]

சிங்களவரை அனுசரித்து வாழப்பழகிக்கொண்ட மக்கள் கூட்டம் தமிழரில் பெருந்தொகை. அதனால்தான் மிகக் குறுகிய மக்கள் கூட்டத்துடன் முடக்கப்பட்ட போராட்டம் பயங்கரவாதமாக முடிக்கப்பட்டது.

[size=4]சிங்களப் பேரினவாதத்தின் பிடிக்குள் சுயாதீனமாக எவரும் நிற்கமுடியாது.[/size]

[size=4]அதனால் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் மக்கள் இறுதிவரை புலிகளுடன் நினறனர். [/size]

[size=4]இது தாயகத்தில் உள்ள தமிழர்களுக்குள் கணிசமான தொகை. [/size]

புலிகள் ராணுவரீதியில் ஆயுத ஆளணிப்பலமிழந்தபின் வன்னியின் வறுமைப்பட்ட மக்களே பலமாகப் பயன்படுத்தப்பட்டனர்.

[size=4]புலிகளின் காலத்தில் வறுமை இருந்தது. ஆனால் கௌரவம், மானம் இருந்தது. அவர்கள் மௌ னிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழிந்து இன்று வன்னி மக்கள் மட்டுமல்ல போப்பிலவு , சம்பூர் உட்பட பல இடங்களிலும் வறுமை மட்டுமல்ல குடி புகுந்துள்ளது. [/size]

இதற்கு ஒரு பின்னணிக்காரணம் புலம்பெயரந்த தேசீயவாதிகள். எப்படியாவது சர்வதேசத்தை தலையிடவைத்து போரைத் தடுத்து நிறுத்தலாம் என்ற நம்பிக்கையை வழங்கியவர்கள் இந்த வழிநடத்திகள். இது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் அல்லது சர்வதேசத்தைப் பற்றிய புரிந்துணர்வு இருந்திருந்தால் ஆயுதங்கள் சற்று முன்னதாக மௌனிக்கப்பட்டிருக்கலாம் மோசமான கொலைகள் தடுக்கப்பட்டிருக்கலாம்.

[size=4]சர்வதேசம் என்பதை நம்பி சரணடைந்து கொல்லப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள் உங்கள் கருத்திற்கு பதிலாக உள்ளனர். [/size]

மகிந்தனுக்கும் கோத்தாவுக்கும் துணைபோனது கே பி அல்ல புலம்பெயரந்தவனின் வரட்டுத்தேசியவாதம். கொலை செய்தது சிங்களமாக இருப்பினும் கொலைக்களத்துக்கு இழுத்தச் சென்றதில் புலம்பெயர்ந்தவனின் பங்கு இருக்கின்றது. என்னுமொருவன் மீது பழியை தூக்கிப்போடுவதை நிறுத்தி வெளிப்படையாக பேசுங்கள். நான் குற்றவாளி என்றதில் இருந்து ஆரம்பியுங்கள்.

[size=4]இதே வரட்டு தேசியவாதிகளை தான் தேடி தேடி கொத்தா + மகிந்தா கூட்டம் கேபி. ஊடாக தாயகத்திற்கு 'வா வா' என அழைத்தவண்ணம் உள்ளனர். [/size]

[size=4]ஏன் சர்வதேச காவல்துறையால் கே.பி. இன்றும் தேடப்படுகிறார் என்பதில் இருந்து நீங்கள் தொடராலாம். [/size]

[size=4]முன்னாள் போராளிகள் விடயத்தில் ஒரு 'ரொபின் ஹூட்டாக" சிலரால் கே.பி. சித்தரிக்கப்படுகின்றார். அப்படி என்றால் இவ்வாறான நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன?[/size]

========================================

[size=4]வெள்ளைவானில் விசாரணைக்கு அழைத்துக் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படும் முன்னாள் போராளிகள்: அம்பாறையில் சம்பவம்"

========================

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்து, பலதரப்பட்ட விசாரணைகளின் பின் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் விசாரணை என்ற போர்வையில் இராணுவ புலனாய்வாளர்களால் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர்.[/size]

[size=3]

[size=4]அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை நான்கு முன்னாள் போராளிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த கோணேஸ் என்ற முன்னாள் போராளியும் ஒருவராவார். இவர் யுத்தத்தால் தனது ஒரு கையை இழந்துள்ளார்.

வெள்ளை வானில் வந்த இராணுவ புலனாய்வாளர்களே மேலதிக விசாரணைகளுக்காக இவர்களைக் கைதுசெய்து அழைத்துச் சென்றதாகவும் விசாரணையின்போது இராணுவ புலனாய்வாளர்களால் பலமாக தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் தற்போது அம்பாறை இராணுவ முகாமொன்றில் இவர்கள் உள்ளதாகவும் நாளைய தினம் இவர்களை கொழும்புக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதால் முன்னாள் போராளிகள் அனைவரும் பெரும் அச்சமான சூழ்நிலையில் காணப்படுகின்றனர்.[/size][/size]

இந்தியன் ஆர்மிக்கு தேங்காய் வாங்கி கொடுத்தவனை துரோகி என்று சுட்டோம், ஒட்டுக் குழுக்களில் உள்ளவர்களை காதலித்ததுக்கு சுட்டோம், மொழிபெயர்த்தவனை சுட்டோம், களவெடுத்தவ்னை சுட்டோம், சந்திரிக்காவுக்கு தீர்வு பொதி தயாரிக்க உதவியவனை சுட்டோம், சாதித் தீமிரில பேசியதுக்காக ஒருவனை சுட்டோம்,, சிங்கள ஆர்மியை காதலித்தவர்கலை சுட்டோம். சுட்டோம் சுட்டோம் துரோகிகள் என்று தெரு தெருவாக சுட்டோம்.

பசிக் கொடுமையில் களவெடுத்தவ்னை சுட்டோம், இளமையில் கண்டதும் காதல் என்ற நங்கைகளை சுட்டோம். ஆனால் புலிகளை அழிக்கவும் அழித்தவர்களையும் சுட முடியாமல் சுடுபட்டு அழிந்தோம்............

சிங்களப் பயங்கரவாதிகள், இந்தியப் பயங்கரவாதிகள் தாங்கள் செய்த படுகொலைகளை புலிகளின் மீது திணிப்பது வழக்கம்.

இங்கு உங்கள் கற்பனைச் சூடுகள், உங்கள் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

தமிழ் மக்களுக்கு காவலாக இருக்க வேண்டியவர்கள்,

* தமிழனத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு

* தமிழன விரோதிகளின் ஒட்டுக் குழுக்களுக்கு

* பெண்களை பாலியல் பலாத்காரம் / இம்சை செய்பவர்களுக்கு

* சாதியம் பேசி பிழைப்பு நடத்துபவர்களுக்கு

* தமிழன விரோதிகளுடன் கூத்தடிபவர்களுக்கு

* .........

காவலாக இருக்க வேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் - உங்கள் சுயரூபத்தை தெளிவாக தோலுரித்துக் காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றில் ஒரு வார்த்தை.

டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோர்கள் அரசியலைத் தேர்ந்தெடுத்து சிறிலங்கா அரசின் அரைகுறை அரசியல் விடயங்களுக்குத் துணை போய்க் கொண்டு இருக்கையில், தனது சக போராளிகளினதும் மக்களினதும் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சிங்களத்தின் பிடியில் நின்று கொண்டு கே.பி. செய்து வருவதனை பாராட்டாமல் யாரும் இருக்க முடியாது.

இங்கே பிறிதொரு விடயத்தினை குறிப்பிட்டேயாக வேண்டும்.

போரை முடித்த சிறிலங்கா அரசே, அந்த மக்களினதும் அகதிகளாக்கப்பட்டவர்களினதும் வாழ்வாதாரத்தினைப் பார்க்க வேண்டும் என புலத்தில் உள்ளவர்கள் கூச்சல் போட்டு வருகின்றனர்.

சிறிலங்கா அரசுதான் யாவற்றையும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பவர்களே! ஆழிப்பேரலை நேரம் தாயக மக்களுக்கு உதவி செய்தீர்கள்தானே? அப்போது மட்டும் ஏன் சிறிலங்கா அரசு செய்யும் என வாளாதிருக்காமல் விட்டீர்கள்.

முன்னர் விடுதலைப் புலிகள் ஊடாகவும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாகவும் செய்தோம். அந்த உதவி அவர்களுக்கு சென்றடைந்தது. ஆனால், இப்போது சிறிலங்கா அரசின் ஊடாக செய்ய வேண்டும். அந்த உதவி தாயக மக்களுக்கு போய்ச் சேராது என்றும் சிறிலங்கா அரசே கையகப்படுத்தி விடும் என்றும் சிலர் சந்தேகம் தெரிவிப்பீர்கள்.

இவ்வாறு கூறி வருபவர்கள், முதலில் முயற்சி செய்து பார்க்க வேண்டும். அங்கு உள்ள அமைப்புக்களுக்கு பணம் அனுப்பி அவர்கள் பயன்படுத்துகின்றனரா எனப் பார்க்க வேண்டும். அதனை விடுத்து வீணான சந்தேகங்களை எழுப்புவதனை தவிர்க்க வேண்டும்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆழிப்பேரலை நேரம் சேகரித்த நிதியில் பெருமளவில் லண்டனில் முடங்கிக் கிடப்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது.

ஆனால், லண்டனில் மறைந்து வாழும் கே.பி. றெஜியைக் கேட்டால் தெரியும். அவர்களின் பேரிலேயே பல சொத்துக்கள் வெளிநாடுகளில் வாங்கி விடப்பட்டிருப்பதனை அவர்களோடு பணி புரிகின்றவர்களுக்கு மட்டும் வெட்ட வெளிச்சம்.

இங்கே பிறிதொரு விடயத்தினையும் குறிப்பிட்டேயாக வேண்டுமு;.

புலம்பெயர் நாடுகளில் இயங்கி வரும் தமிழர் மருத்துவ நிதியம் யாழ்., கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு நிதியுதவி மற்றும் பொருள் உதவி வழங்கி வருகின்றனர்.

ஆனால், அங்கு உள்ள மருத்துவர்களோ, இவர்கள் இப்படி உதவி செய்வதால் சிறிலங்கா அரசிடம் இருந்து தமது மருத்துவமனைகளுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் சிங்களப் பிரதேசத்துக்கு திருப்பப்படுவதாக கவலையோடு தெரிவித்தனர்.

ஆக, தமிழர் மருத்துவ நிதியத்தினர் சிறிலங்கா அரசினை காப்பாற்றுகின்ற வேலையினைத்தான் செய்கின்றனர். அவர்கள் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கோ தாய்-தந்தையரை பிள்ளைகளுக்கோ உதவுகின்ற சிந்தனை அவர்களிடம் இல்லை.

இது தமிழர் மருத்துவ நிதியத்தினர் மட்டுமல்ல பிற அமைப்பில் உள்ளவர்களும் வெளிநாடு சார் (ஹரித்தாஸ், வேர்ல்ட் விசன், றெட் குறொஸ்) தொண்டு நிறுவனங்களுக்கு பணத்தை அனுப்பி வன்னி மக்களுக்கு உரிய உதவிகளைச் செய்யாது விட்டு விடுகின்றனர்.

அதென்ன கே.பியில் தான் மகிந்தவுக்கும் கோத்தபாயவுக்கும் கொள்ளை விருப்பம். 3 வருடத்துக்குள் வெளியில் விடப்பட்டுள்ளார். அத்துடன் சிறையில் இருந்த போது கூட பேட்டிகள் கூட கொடுத்துள்ளார். மேற்கு நாடுகளில் சிறையில் இருப்பவர்களுக்கு கூட இந்த சலுகை இல்லை.புலிகளுக்கு ஆயுதங்களை கடத்திய ஒருவர் இப்படி வெளியில் விட்டதில் ஓர் அதிசயமும் இல்லை.ஏனெனில் புலிகளின் குறிப்பிடத்தக்க தொகை பணத்தை கோத்தபாயவின் வங்கிக்கணக்குக்கு மற்றப்பட்டது தான் உண்மை.அதனால் தான் இந்த சலுகைகள் இவருக்கு கிடைத்தது.ஏன் புலிகளில் இருந்த யோகி,பாலகுமார், லோரன்ஸ் போன்றவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கவில்லை?.மட்டக்களப்பு தளபதி எப்படி சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பது யாவரும் அறிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பேரினவாதத்தின் பிடிக்குள் சுயாதீனமாக எவரும் நிற்கமுடியாது.

போர்க்குற்றம் என்பதை சிங்களப்பேரினவாதம் ஆரம்பத்தில் இருந்தே செய்தவருகின்றது. இதில் இறுதியில் மகிந்தனையும் கோத்தாவையும் குற்றவாளியாக்குவதால் சிங்களப்பேரினவாதத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. போர்க்குற்றம் என்பது தமிழர் தரப்பு தமது உரிமைகளை தொடர்ந்து கோருவதற்கு ஒரு பிடிமானம். இதன் அடிப்படையில் எவரும் போர்க்குற்றத்தை கையாளவில்லை.

மாற்றம் நிகழும்.இப்படியொரு இனப்படுகொலையை சிங்கள அரசு நடத்த தயங்கும்.பல நாடுகளின் இனப்படுகொலையாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. தண்டனை இவர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஒரு சர்வஜனவாக்கெடுப்பை ஐ.நா நடுநிலைமையில் நடாத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை அறிய நடாத்தலாம்.

சிங்களவரை அனுசரித்து வாழப்பழகிக்கொண்ட மக்கள் கூட்டம் தமிழரில் பெருந்தொகை. அதனால்தான் மிகக் குறுகிய மக்கள் கூட்டத்துடன் முடக்கப்பட்ட போராட்டம் பயங்கரவாதமாக முடிக்கப்பட்டது.

பல்லைக்கடித்துக்கொண்டு வாழ்வதற்கு மறுபெயர் அனுசரித்து வாழ்வதா?? சொல்லவே இல்லை.

//எனவே அவர்களுடன் இணைந்து செயல்படுபவர்களும் அதற்கு உடந்தையானவர்களே. //

இப்படி உங்களால் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அதற்கான அதிகாரமோ தகுதியோ உங்களுக்கோ எனக்கோ கிடையாது.

தமிழீழத்திலோ ஏன் சிறிலங்காவிலோ சுதந்திரமாக கருத்து தெரிவிக்க கூட சுதந்திரம் இல்லாத நிலையில் அவர்களின் புலம்பெயர்ந்த உறவுகள் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.பல மைல்கள் அப்பால் வாழ்வதால் தமிழர் இல்லை என்றாகி விடுமா என்ன??

புலிகள் ராணுவரீதியில் ஆயுத ஆளணிப்பலமிழந்தபின் வன்னியின் வறுமைப்பட்ட மக்களே பலமாகப் பயன்படுத்தப்பட்டனர். இதற்கு ஒரு பின்னணிக்காரணம் புலம்பெயரந்த தேசீயவாதிகள். எப்படியாவது சர்வதேசத்தை தலையிடவைத்து போரைத் தடுத்து நிறுத்தலாம் என்ற நம்பிக்கையை வழங்கியவர்கள் இந்த வழிநடத்திகள்.

சர்வதேசத்தின் இரட்டை வேடத்தை தமிழ் மக்களால் மிகத்தெளிவாக அறிய முடிந்தது. இன்றும் இவர்களின் நடிப்பு மிக பிரமாதமாக உள்ளது.

இது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் அல்லது சர்வதேசத்தைப் பற்றிய புரிந்துணர்வு இருந்திருந்தால் ஆயுதங்கள் சற்று முன்னதாக மௌனிக்கப்பட்டிருக்கலாம் மோசமான கொலைகள் தடுக்கப்பட்டிருக்கலாம்.

ம்ம் உங்களால் உறுதியாக கூற மனச்சாட்சி விடவில்லையோ?? தடுமாற்றம் தெரிகிறது.

மகிந்தனுக்கும் கோத்தாவுக்கும் துணைபோனது கே பி அல்ல புலம்பெயரந்தவனின் வரட்டுத்தேசியவாதம். கொலை செய்தது சிங்களமாக இருப்பினும் கொலைக்களத்துக்கு இழுத்தச் சென்றதில் புலம்பெயர்ந்தவனின் பங்கு இருக்கின்றது.

இது சும்மா எனக்கும் அரசியல் தெரியும் என பேச்சுக்கு கதைக்கலாம். நடைமுறை கொலைசெய்தது சிங்கள அரசு. இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் பலர்.இந்த பட்டியல் நீளமானது.புலம் பெயர்ந்தகளில் சிலரும் அந்த பட்டியலுக்குள் வருகின்றனர்.

என்னுமொருவன் மீது பழியை தூக்கிப்போடுவதை நிறுத்தி வெளிப்படையாக பேசுங்கள். நான் குற்றவாளி என்றதில் இருந்து ஆரம்பியுங்கள்.

யார் யார் காரணமானவர்கள் என்பதில் மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள். அதை பற்றி பேசுவதில் அவர்களுக்கு எந்த வித தயக்கமும் இல்லை.

//

மாற்றம் நிகழும்.இப்படியொரு இனப்படுகொலையை சிங்கள அரசு நடத்த தயங்கும்.பல நாடுகளின் இனப்படுகொலையாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. தண்டனை இவர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஒரு சர்வஜனவாக்கெடுப்பை ஐ.நா நடுநிலைமையில் நடாத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை அறிய நடாத்தலாம்

சர்வதேசத்தின் இரட்டை வேடத்தை தமிழ் மக்களால் மிகத்தெளிவாக அறிய முடிந்தது. இன்றும் இவர்களின் நடிப்பு மிக பிரமாதமாக உள்ளது

.//

ஒரு வாக்கெடுப்புக்கு ஏற்றவகையில் புலத்து வழிநடத்துனர்கள் நகரவில்லை. அவ்வப்போது அறிக்கை விடுவதும் கையெழுத்து வாங்கி பழைய பாணியில் பெட்டிசம் போடுவதும் தான் இதன் எல்லை. சர்வதேசத்தின் இரட்டை வேடம் தெரிந்தும் நடிப்புத்தெரிந்தும் இன்னும் அவர்களை நம்புங்கள் என்று என்னுமொரு நடிப்பைத்தான் இவர்கள் செய்கின்றார்கள். மேலும் தமிழர்கள் ஒற்றுமயாய் ஐக்கியப்பாடாத பட்சத்தில் வாக்கெடுப்பு நிகழ்ந்தால் (வாக்கெடுப்புக்கு சாத்தியமில்லை என்பது வேறு விடயம்) கூட அது சிங்களவர்களுக்கே சாதகமாக இருக்கும். அத்தோடு அரசியலில் ஆசியாவின் தலை சிறந்த ராஜதந்திரம் மிக்க சிங்கள இனம் வரலாறு நெடுகிலும் சொந்த இனத்துக்குள் இரைதேடும் தமிழரை வாக்கெடுப்பு விசயத்தில் எப்படி கையாள்வது என்பதை நன்கறியும்.

பல்லைக்கடித்துக்கொண்டு வாழ்வதற்கு மறுபெயர் அனுசரித்து வாழ்வதா?? சொல்லவே இல்லை

பல்லைக் கடித்துக்கொண்டு ஏன் இருப்பான். புலிகள் என்ற ஒரு தெரிவு இருந்தது தானே ? இணைந்து போராடியிருக்கவில்லையே? நாம் உட்பட

தமிழீழத்திலோ ஏன் சிறிலங்காவிலோ சுதந்திரமாக கருத்து தெரிவிக்க கூட சுதந்திரம் இல்லாத நிலையில் அவர்களின் புலம்பெயர்ந்த உறவுகள் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.பல மைல்கள் அப்பால் வாழ்வதால் தமிழர் இல்லை என்றாகி விடுமா என்ன??

நாம் நாட்டில் கூட தமிழர் கிடையாது. முன்பு பல சாதிகளாய் பிரதேசவாதிகளாய் மதவாதிகளாய்த் தான் இருந்தோம் பின்பும் அப்படியே . முன்பு புலிகளாய் புளட்டாய் ரெலொவாய் என்னும் ஏராளமாய் இருந்தோம் பின்பும் அப்படியே , கூடவெ நெடியவனாய் வினாயமாய் தான் இருக்கின்றோம். என்னும் கனக்கவாய் இருப்போம் ஆனால் தமிழனாய் இருக்க வாய்ப்பே இல்லை. இது ஜெனற்றிக் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

//

.//

ஒரு வாக்கெடுப்புக்கு ஏற்றவகையில் புலத்து வழிநடத்துனர்கள் நகரவில்லை. அவ்வப்போது அறிக்கை விடுவதும் கையெழுத்து வாங்கி பழைய பாணியில் பெட்டிசம் போடுவதும் தான் இதன் எல்லை. சர்வதேசத்தின் இரட்டை வேடம் தெரிந்தும் நடிப்புத்தெரிந்தும் இன்னும் அவர்களை நம்புங்கள் என்று என்னுமொரு நடிப்பைத்தான் இவர்கள் செய்கின்றார்கள். மேலும் தமிழர்கள் ஒற்றுமயாய் ஐக்கியப்பாடாத பட்சத்தில் வாக்கெடுப்பு நிகழ்ந்தால் (வாக்கெடுப்புக்கு சாத்தியமில்லை என்பது வேறு விடயம்) கூட அது சிங்களவர்களுக்கே சாதகமாக இருக்கும். அத்தோடு அரசியலில் ஆசியாவின் தலை சிறந்த ராஜதந்திரம் மிக்க சிங்கள இனம் வரலாறு நெடுகிலும் சொந்த இனத்துக்குள் இரைதேடும் தமிழரை வாக்கெடுப்பு விசயத்தில் எப்படி கையாள்வது என்பதை நன்கறியும்.

அரை குவளை தண்ணீரில் இருக்கும் தண்ணீரை பற்றி நான் சிந்திக்கிறேன் நீங்கள் அரை வெறும் குவளையை பற்றி சிந்திக்கிறீர்கள். ஒன்றுமே சாத்தியப்படாது என்று எப்படி உங்களால் கூற முடியும்??

பல்லைக் கடித்துக்கொண்டு ஏன் இருப்பான். புலிகள் என்ற ஒரு தெரிவு இருந்தது தானே ? இணைந்து போராடியிருக்கவில்லையே? நாம் உட்பட

ஏதோ மக்கள் வாழப்பழகி விட்டார்கள் என்றீர்கள்? எந்த மக்கள் எப்போ வாழப்பழகி விட்டார்கள்??

நாம் நாட்டில் கூட தமிழர் கிடையாது. முன்பு பல சாதிகளாய் பிரதேசவாதிகளாய் மதவாதிகளாய்த் தான் இருந்தோம் பின்பும் அப்படியே . முன்பு புலிகளாய் புளட்டாய் ரெலொவாய் என்னும் ஏராளமாய் இருந்தோம் பின்பும் அப்படியே , கூடவெ நெடியவனாய் வினாயமாய் தான் இருக்கின்றோம். என்னும் கனக்கவாய் இருப்போம் ஆனால் தமிழனாய் இருக்க வாய்ப்பே இல்லை. இது ஜெனற்றிக் பிரச்சனை.

இதென்ன வேறு இனங்களில் இல்லாத பிரிவுகளா எம்மில் இல்லாதது?? ஏதோ நாம் தான் பிரிந்து கிடக்கும் இனம் என்பது போலவும் பேசுகிறீர்கள். ஏதாவது ஒரு இயக்கத்தில் இந்த சாதி இராணுவப்பிரிவு அல்லது அரசியல் பிரிவு என இருந்ததா??

அதற்காக சாதியம் இல்லை என்று சொல்ல வரவில்லை.

பலஸ்தீனத்தில் ஹமாஸ், பி.எல்.ஓ இன்னும் சிறிய இயக்கங்கள் இருந்ததை அறியவில்லையா?? என்ன எமது சில இயக்கங்கள் இந்தியாவின் அழுங்குப்பிடியில் அமுங்கி போய்விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]போரால் பாதிக்கப்பட்டவன் பக்கம் எவன் நிற்கின்றானோ அவன் பக்கம் நிற்போம்.- சண்டமாருதன்[/size]

[size=4]இதுதுதான் அடிப்படை. வீர வசனங்களல்ல நாம் என்ன செய்தோம் என்பது முக்கியம். களத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் நிறுவனங்கள் சிறிது பெரிது எல்லாம் ஒரு அல்ல இரண்டு சம்மேளனங்களாக கூட்டணி அமைப்பது காலத்தின் கட்டாயம். சம்மேளனங்களால்தான் சர்வதேச தொண்டு மற்றும் நிதி நிறுவனங்களுடனும் சர்வதேச சமூகங்களோடும் தொடர்புகளைப் பேனமுடியும். அதற்கான நிர்வாக அமைப்பையும் அலுவலகத்தையும் கட்டி எழுப்ப முடியும். [/size]

போருக்காக சுனாமி போன்றவற்றுக்காக நம் மக்கள் கண்ணீர் துடைக்க நீங்கள் கொடுத்த பணத்தை யாரும் அபகரித்து தங்கள் குடும்பங்களோடு சுகபோக வாழ்வில் திழைக்க அனுமதிக்க வேண்டாம். இத்தகைய துரோகத்தை தம் பெற்றோர் செய்ய அவர்களது குடும்பதினரோ பிள்ளைகளோ அனுமதிக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன். ஏனெனில் இத்தகைய அதர்மத்துக்கு அவர்களும்கூட கண்ணீராலும் இரத்தத்தாலும் விலை கொடுக்க நேரிடும் என்பது நமது ஐதீகமாகும்.

இந்த இரத்தப் பணத்தை கையகப் படுத்தி வைதிருக்கிறவர்கள் நம் மண்ணின் மக்களுக்கும் போராளிகளுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் அப்பணத்தை செலவு செய்ய நிர்பந்திக்கப் பட வேணும். இத்த்கைய நிதிக்குப் பங்களிப்புச் செய்தவர்கள் சிலராவது குழுவாக இதற்கான நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக சட்டத்தின் துணையை நீதிமன்றங்களின் உதவியை நாட வழி வகைகள் உள்ளது.

இத்தகைய இரத்தப் பணத்தை அனுபவிக்கிறவர்கள் வழி வழியாக கண்ணீர் இரத்தம் சிந்துவார்கள் என்பது ஐதீகம்..

இப்பணம் மாவீரர்களின் விதவைகளதும் பிள்ளைகளதும் முன்னை நாள் போராளிகளதும் சொத்தாகும். இந்தக் கண்ணீர் பணத்தை அபகரிப்பதைவிட பெரிய இனத் துரோகம் எதுவும் இருக்க முடியாது.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு: ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக தம்மை இந்தியாவின் சிபிஐ அமைப்பினர் 2010-ம் ஆண்டே விசாரித்தாகவும் தணுவின் பெல்ட் வெடிகுண்டு, சிவராசனின் கைத்துப்பாக்கி ஆகியவற்றுக்கும் எனக்குமான தொடர்பு என்ன என்று கேள்வி கேட்டதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாபன் என்ற கேபி கூறியுள்ளார்.

http://tamil.oneindi...-kp-164785.html

இப்போது இச் செய்தியைத் தற்ஸ் தமிழில் படித்தபோது தோன்றிய கேள்விகள்... கேபி 2010 ஆண்டே சிபிஐயைச் சந்தித்திருக்கின்றார் என்றால், இவர் மீது வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையாக இருக்கும் போல் உள்ளது. அக்காலத்தில் இவர் கைது செய்யப்ப்டடதாகச் சொல்லப்பட்ட செய்திகள் பிற்பாடு அப்படியே மறுக்கப்பட்டு, அமுக்கவும்பட்டது... ஆனால் இந்தப் பேட்டி உண்மையெனில், இவர் 2010 இல் இருந்து வேறு யாருக்கோ வேலை செய்தார் என்பதும், தலைமை ஒதுக்கி வைத்ததில் தவறில்லை என்பதும் தெரிகின்றது...

அவர் 2009ம் ஆண்டு அகஸ்ட் 5ம் திகதி கைது செய்யப்பட்டார் என்று தான் சிறிலங்கா அரசு சொல்கிறது. இந்திய புலனாய்வுப் பிரிவினரினை 2010ல் சந்தித்தார் என்று அவர் சொல்லுகிறார். சிறிலங்கா அரசின் கைதியான கேபியினை இந்தியப் புலனாய்வுத்துறையினர் இராசீவ் கொலை வழக்கு சார்பாக சந்திக்கவுள்ளார்கள் என்று 2010ல் செய்தியும் வந்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

2009ல் யாழில் வந்த செய்தி.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64384

புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவரான கே.பி. என்ற செல்வராசா பத்மநாதனிடம் விசாரணை நடத்த சிபிஐ குழு இலங்கை செல்கிறது.

பிரபாகரனின் மறைவையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக அறிவித்துக் கொண்ட செல்வராசா பத்மநாதன் இலங்கை ராணுவத்தால் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.

கொழும்பில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் இலங்கை ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. புலிகளின் பணம், ஆயுத நெட்வோர்க் குறித்த முழுத் தகவல்களை அறிந்தவர் என்பதால் அவரை தீவிரமாக விசாரித்து வருகிறது இலங்கை அரசு.

இந் நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாகவும் அவரை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. சிபிஐ தலைமையில் அமைக்கப்பட்ட உளவுப் பிரிவுகளின் குழு தான் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்து வருகிறது.

இந் நிலையில் இந்தக் குழுவின் தலைவரான பி.என். மிஸ்ரா கூறுகையில், கேபியை விசாரி்க்க இலங்கையிடம் மத்திய அரசு அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் எங்கள் குழு கொழும்பு செல்லும் என்றார்.

முன்னதாக கேபியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மட்டும் இலங்கை அரசுக்கு அனுப்பி வைப்பது என்று சிபிஐ திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்போது தானே நேரடியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

நன்நி தற்ஸ் தமிழ்

யாழ்ப்பாணத்தார் என்றுமே மட்டக்களப்பாரை வித்தியாசமாக பார்த்ததில்லை.....மட்டக்களப்பாருக்கு எப்பவுமே குறுகிய மனப்பான்மை.....இதனால்த்தான் அவர்கள் என்றும் யாழ்ப்பாணிகளுக்கு எதிராக இருந்தார்கள்.காட்டிக்கொடுப்பின் சிகரங்களே மட்டக்களப்பில்த்தான் :D :D :D

சரி அண்ணை காட்டி கொடுத்தவர்களை பற்றி ஒரு பட்டியல் போடுவமா?

எனக்கு தெரிந்த யாழப்பாணத்து துரோகிகளை சொல்லுறன் நீங்கள் உங்களுக்கு தெரிந்த மட்டக்களப்பு துரோகிகளை சொல்லுங்கள்>>>>>

அமிர்தலிங்கம்

உமாமகேஸ்வரன்

சிறீசபாரத்தினம்

பத்மநாதன்

நீலன்திருசெல்வம்

மேதிலால்நேரு

சுரேஸ்பிரேமச்சந்திரன்( திருந்திவிட்டார்)

செல்வம் அடைக்கலநாதன்( திருந்திவிட்டார்)

சிவாஜீலிங்கம்(திருந்திவிட்டார்)

ஆன்ந்த சங்கரி

சித்தார்த்தன்

டக்கிளஸ்

சுந்தரம்

மாத்தைய

துரையப்பா

கே பி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்களும், மட்டக்களப்பினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும் ஈழத்தமிழர்கள். யார் துரோகி,யார் நண்பர்கள் என்று எங்களுக்குள் சண்டை வேண்டாம். நடந்தது நடந்து விட்டது. எல்லோரும் தமிழர்கள். எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதிக இலாபம் பெறுபவர்கள் சிங்கள தேசத்து மக்களே.

k.p யின் பணி தொடர வாழ்த்துக்கள் .குழந்தைகளின் முகத்தில் சிரிப்பே இப்போ எமக்கு தேவை .

[size=4]

k.p யின் பணி தொடர வாழ்த்துக்கள் .குழந்தைகளின் முகத்தில் சிரிப்பே இப்போ எமக்கு தேவை .

[/size]

[size=4]எத்தனை பிள்ளைகள் இருக்கும்? மிச்சம் ?? :o[/size]

யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்களும், மட்டக்களப்பினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும் ஈழத்தமிழர்கள். யார் துரோகி,யார் நண்பர்கள் என்று எங்களுக்குள் சண்டை வேண்டாம். நடந்தது நடந்து விட்டது. எல்லோரும் தமிழர்கள். எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதிக இலாபம் பெறுபவர்கள் சிங்கள தேசத்து மக்களே.

அந்த எண்ணம் எங்களுக்கு இருந்திருந்தால் ஈழம் எப்போவோ கிடைத்திருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

k.p யின் பணி தொடர வாழ்த்துக்கள் .குழந்தைகளின் முகத்தில் சிரிப்பே இப்போ எமக்கு தேவை .

புலி நாமத்தோடு குழந்தை ஒன்று பிணமாய்க் கிடந்தாலும் குரூரச் சிரிப்பு சிரிக்கும் இந்த மனிதாபிமானமா இப்படிக் குழந்தையின் சிரிப்பில் கடவுளைக் காண்கின்றதாம். உண்மை அது அல்ல புலியின் தோல்வியின் சின்னம் அதை கொண்டாடுகின்றது என்பதே!

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி பற்றி கதைக்கப் பட்டதால் சிலதைக் கூற விரும்புகிறேன். ஒரு வரியில் சொன்னா "he is a strategic thinker and a practical person ". எத்தனையோ நாடுகளின் உளவு அமைப்புகளுக்கு தண்ணி காட்டியவர், ஆயுதங்களை கப்பல் கப்பலாக முல்லைத்தீவு வரைக்கும் அனுப்பியவர், இலங்கை/மலேசிய உளவுப்பிரிவினரிடம் மாட்டினார் என்பது நம்ப முடியாத கதை. இது உண்மையிலே சட்டச் சிக்கல்களில் இருந்து தப்ப, அவர் தனக்காகப் போட்ட மிகச் சிறந்த exit plan. முன்பு அவர் KP Department மூலம் ஆயுதங்களை அனுப்பியபோது அவர் மறைந்து வாழவேண்டிய தேவை இருந்தது. அதன் பின்னர் மற்றவர்கள் பொறுப்புக்களை ஏற்றபோதும், இயக்கம் ஆயுதப்போராடங்களை செய்ததால் தொடர்ந்து மறைந்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் முள்ளி வாய்காலில் எல்லாம் முடிந்த பின்னர் தான் இனி மேலும் மறைந்து வாழ்வதில் எதுவித பலனும் இல்லை என்பதை அவர் நன்கு உணர்ந்திருப்பார். அவர் செய்தது ஒரு strategic move என்று தான் சொல்ல முடியும். இப்போது அவருக்கு எதிரான வழக்குகளை இலங்கை அரசாங்கமே கைவிட்டு விட்டது, சர்வதேசப் போலீசுக்கும் இனி அவர் வேண்டப்படாதவர். ஆக அவரின் records சட்டரீதியாக அனேகமாக clean பண்ணப்பட்டிருக்கின்றன. தாய்லாந்திலே அவர் ஒளித்திருந்தால் மற்றவர்கள் மாதிரி இடைக்கிடை ஏதாவது அறிக்கை விட்டுப்போட்டு, யாகம் வேள்வி என்று ஏதாவது நடத்தி காலத்தைப் போகாட்டலாம். இவரின் NGO பற்றி பல கேள்விகள் இருந்தாலும் எமது மக்களுக்கு எதோ கிடைக்கிறதே என என்ன வைக்கிறது. குறிப்பாக இப்படி போரால் பாதிக்கப்பட்ட சில சிறுவர்களாவது நன்மையடைவது மகிழ்ச்சி. எல்லோரையும் திருப்த்திப் படுத்துவதும் எல்லோரது கேள்விகளுக்கு பதிலளிப்பதும் முடியாதது. மனித இனமே சுயநலம் மிக்கது, இதனால் ஆச்சரியப்பட ஒண்டும் இல்லை.

[size=1]

[size=4]அண்மையில் கனடாவில் ஒரு நீதிபதி குற்றம் சாட்டப்பட்டார். அவர் இன்று சிறையில். [/size][/size]

[size=1]

[size=4]ஆயிரம் தான் நன்மைகளை 'நல்லதுகளை ஒருவர் செய்தாலும் தீமைகள் / குழப்பங்கள் என வரும்பொழுது ...குற்றவாளியாகவே சமூகம் பார்கின்றது. [/size][/size]

[size=1]

[size=4]டக்லஸ், கருணா, பிள்ளையான் கூடத்தான் ஒரு தந்திரோபாய நகர்வை செய்து தம்மை காப்பாறினார்கள் என கூறலாம். அதனால் அவர்களை சமூகம் சுயநலவாதிகள் என்றே முத்திரை குத்துகின்றது. [/size]

[size=4]தான் மாண்டாலும் சமூகம், இனம், நாடு வாழவேண்டும் என எண்ணுபவன் எந்த மொழியிலும் - வீரனாக பார்க்கப்படுகின்றான். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]அண்மையில் கனடாவில் ஒரு நீதிபதி குற்றம் சாட்டப்பட்டார். அவர் இன்று சிறையில். [/size][/size]

[size=1][size=4]ஆயிரம் தான் நன்மைகளை 'நல்லதுகளை ஒருவர் செய்தாலும் தீமைகள் / குழப்பங்கள் என வரும்பொழுது ...குற்றவாளியாகவே சமூகம் பார்கின்றது. [/size][/size]

[size=1][size=4]டக்லஸ், கருணா, பிள்ளையான் கூடத்தான் ஒரு தந்திரோபாய நகர்வை செய்து தம்மை காப்பாறினார்கள் என கூறலாம். அதனால் அவர்களை சமூகம் சுயநலவாதிகள் என்றே முத்திரை குத்துகின்றது. [/size]

[size=4]தான் மாண்டாலும் சமூகம், இனம், நாடு வாழவேண்டும் என எண்ணுபவன் எந்த மொழியிலும் - வீரனாக பார்க்கப்படுகின்றான். [/size][/size]

KP இருப்பது இலங்கையில் அதுவும் அரசாங்கத்தின் செல்வாக்கோடும் நல்ல பண பின்புலத்தோடும் விசேடமாக கோத்தாவுடன் இறுக்கமாக இருப்பது மகிந்தவுடன் இறுக்கமாக இருப்பதைவிட சிறந்தது. அவர் இனி இலங்கையை விட்டு வெளிக்கிடவேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் இங்கே இலங்கை சட்டத்தைப் பற்றித்தான் கதைக்கிறோம், கனேடிய சட்டம் பற்றி அல்ல. நீங்கள் கூறியவர்கள் சமூகத்தை நோகடிக்காமல் (கடத்தல், கப்பம், அடாவடி) சமூகத்துக்காக ஏதாவது நல்லது செய்தால் நீங்கள் சொன்ன அதே சமூகம் அவர்களை நல்லவர்கள் என்றே முத்திரை குத்தும். சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் ஆரம்ப நாட்களில் ஆடிய ஆட்டத்தை எனது அப்பா மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றம் வரை போகவில்லையா?

[size=1]

[size=4]ஒரு பெரும் அமைப்பின் இரகசியங்களை காக்க அதன் கொள்கைக்குஅமைய தம்மை ஆகுதியாக்கிய வீரர்கள் ஆயிரம் ஆயிரம். அவர்களில் பெரும்பான்மையினர் தலைவனை கண்டதும் இல்லை. [/size][/size]

[size=1]

[size=4]அப்படி இருக்கும்பொழுது அந்த அமைப்பின் ஒரு பெரும் பாத்திரம் வகித்தவர் "தான் வாழவேண்டும்" என்பதற்காக வகுத்த திட்டங்கள் ஒரு "தந்திரோபாய நகர்வு" என கூறுவது ஏமாற்றுத்தனம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]ஒரு பெரும் அமைப்பின் இரகசியங்களை காக்க அதன் கொள்கைக்குஅமைய தம்மை ஆகுதியாக்கிய வீரர்கள் ஆயிரம் ஆயிரம். அவர்களில் பெரும்பான்மையினர் தலைவனை கண்டதும் இல்லை. [/size][/size]

[size=1][size=4]அப்படி இருக்கும்பொழுது அந்த அமைப்பின் ஒரு பெரும் பாத்திரம் வகித்தவர் "தான் வாழவேண்டும்" என்பதற்காக வகுத்த திட்டங்கள் ஒரு "தந்திரோபாய நகர்வு" என கூறுவது ஏமாற்றுத்தனம். [/size][/size]

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் அண்ணா? KP குப்பியடிச்சிருக்க வேணும் என்றா? அவர் மேலும் ஒழித்து வாழ வெளிக்கிட்டிருந்தால் அவர் குவாண்டனமோ சிறையோ வேறு எங்கோ நிலக்கீழ் அறையிலேயே தனது வாழ்நாளின் மிகுதியை கழித்திருப்பார். தவிபு, ஆயுதப் போராட்டமே மௌனிக்கப்பட்டு விட்டது என அறிவித்த பின்னர் அந்த அமைப்புக்கு ஆயுதம் கடத்தியவர் ஒளிந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை, எமது சமூகத்துக்கு எதுவித லாபமும் இல்லை. அமைப்பு உயிரோட்டமாக இருந்தபோது அதற்காக மரணித்தவர்கள், அந்த இரகசியங்கள் அமைப்பின் இரகசியங்கள் அமைப்பின் உயிரோடத்துக்கு அவசியம் எனக் கருதியே மரணித்தார்கள். அமைப்பே இல்லை என்ற நிலை வந்த போது அதற்காக தங்களை ஆகுதியாக்குவது எதுவித பலன்களையும் தராது. தேவை என்றால் ஒரு கேணல் பட்டம் கொடுக்க உதவலாம். அவர் இலங்கை, இந்திய அரசுகளுடன் இணங்கிப் போவது தவிபு பற்றிய சில கோவைகளையும் மூட வைக்கலாம். நா.க.அ இன் ஆரம்ப கர்த்தா KP என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். நாளை அவர்கள் இலங்கை அரசின் பக்கம் தாவ மாட்டார்கள் என்பதற்குக் கூட எதுவித உத்தரவாதமும் இல்லை. இப்போது கூட சில இரகசிய காய் நகர்த்தல்கள் நடந்து கொண்டு இருக்கலாம், விஷயங்கள் வெளி வந்த பின்னர் தான் பலருக்குத் தெரியவரும்.

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் அண்ணா? KP குப்பியடிச்சிருக்க வேணும் என்றா? அவர் மேலும் ஒழித்து வாழ வெளிக்கிட்டிருந்தால் அவர் குவாண்டனமோ சிறையோ வேறு எங்கோ நிலக்கீழ் அறையிலேயே தனது வாழ்நாளின் மிகுதியை கழித்திருப்பார். தவிபு, ஆயுதப் போராட்டமே மௌனிக்கப்பட்டு விட்டது என அறிவித்த பின்னர் அந்த அமைப்புக்கு ஆயுதம் கடத்தியவர் ஒளிந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை, எமது சமூகத்துக்கு எதுவித லாபமும் இல்லை. அமைப்பு உயிரோட்டமாக இருந்தபோது அதற்காக மரணித்தவர்கள், அந்த இரகசியங்கள் அமைப்பின் இரகசியங்கள் அமைப்பின் உயிரோடத்துக்கு அவசியம் எனக் கருதியே மரணித்தார்கள். அமைப்பே இல்லை என்ற நிலை வந்த போது அதற்காக தங்களை ஆகுதியாக்குவது எதுவித பலன்களையும் தராது. தேவை என்றால் ஒரு கேணல் பட்டம் கொடுக்க உதவலாம். அவர் இலங்கை, இந்திய அரசுகளுடன் இணங்கிப் போவது தவிபு பற்றிய சில கோவைகளையும் மூட வைக்கலாம். நா.க.அ இன் ஆரம்ப கர்த்தா KP என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். நாளை அவர்கள் இலங்கை அரசின் பக்கம் தாவ மாட்டார்கள் என்பதற்குக் கூட எதுவித உத்தரவாதமும் இல்லை. இப்போது கூட சில இரகசிய காய் நகர்த்தல்கள் நடந்து கொண்டு இருக்கலாம், விஷயங்கள் வெளி வந்த பின்னர் தான் பலருக்குத் தெரியவரும்.

[size=4]மௌனிக்கப்பட்ட பொழுது அது புலம்பெயர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு தடையாக இருந்தால் அதை ஏற்கமுடியாது. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.