Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலங்கித் தவிக்காதே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழ் பெண்ணே நீ

தாழ்ந்தது போதுமடி

தலை நிமிர்ந்தே நீ

வாழ்ந்திட வேண்டுமடி

தாரத்தைத் தாயாய்

எண்ணிய மண்ணில்

தரையில் புழுவாய் நீ

தவள்வதும் ஏனோ

பெண்ணின் பெருமை பேசி

அடிமை ஆக்கிட்டார்

பேதைமை கொண்டே நாம்

பேச்சற்றிருந்துவிட்டோம்

பேரினவாதம் பேதைகளை

பேச்சற்று மூச்சறுக்க

பேடிகள் போல் இன்னும்

பயந்து ஒளியலாமோ

உன்னைத் தொடுபவனை

உக்கிரமாய் எதிர்த்திடடி

உடலைத் தொடுபவனை

ஊசி கொண்டு கிழித்திடடி

பின்வாசல் வருபவனை

பிணமாய் அனுப்பிவிடு

முன்வாசல் வருபவனை

மூக்கறுத்து அனுப்பிவிடு

மோகத்தில் வருபவனை

மோதியே கொன்றுவிடு

மூடர்கள் வந்தால்

முட்டி நீயும் கொன்றுவிடு

காமுகன் வந்தால்

காதை நீ அறுத்துவிடு

சேர்ந்து வருவோரின்

சங்கை நீ அறுத்துவிடு

கைகள் இரண்டை

கடவுள் தந்துள்ளான்

காரிகையே நீயும்

கலங்கித் தவிக்காதே

உயிர் போகும் ஒருமுறை

அதை எண்ணி அஞ்சாதே

உத்தமியாய் வாளும்

உன் உரிமைதனை

எத்தர்களுக்காய் நீ

எப்போதும் ஈயாதே

என்னை நான் நீயாக

எண்ணிக் கலங்கியதால்

இத்தனையும் எழுதிவிட்டேன்

ஈழப் பெண்ணே

இயலுமாய் எண்ணி

இனிமேலும் எதிர்த்திட்டால்

எத்தன் ஒருவனும்

உனை எட்டியும் பார்த்திடான் [/size]

[size=5]உயிர் போகும் ஒருமுறை

அதை எண்ணி அஞ்சாதே

உத்தமியாய் வாளும்

உன் உரிமைதனை

எத்தர்களுக்காய் நீ

எப்போதும் ஈயாதே[/size]

கவிதையின் நயம் நயந்தேன் . ஆனால் ஒரு சிறு சந்தேகம் , பசிவந்தால் பத்தும் பறக்கும் என்று ஆன்றோர்கள் சொல்வார்கள் . பசியின் கொடுமை தொண்டையை இறுக்கும் பொழுது இந்த " உத்தமி " என்ற பட்டம் எவ்வளவு தூரத்திற்கு எடுபடும் ?? மேலும் இந்த உத்தமி என்ற பட்டம் யாரால் வழங்கப்படுகின்றது ?? சுயபடைப்பிற்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் .

இப்போது அடைக்கடி புது படைப்புகள் மெசொ அக்கா வெளிவிடுகிறா. தமிழ் ஈழத்து பெண்களின் நிலை, குறிப்பாக போராளி பெண்களின் நிலை, சாப்பாட்டு மேசைக்கு கதை அலங்கார பொருளாக இருக்கிறதேயன்றி விடிவிக்க யாரும் முன்வரவில்லை. தொடர்ந்து எழுதுவதால் தன்னும் எதாவது விளிப்பு வருமா என்றுதான் ஆதங்கப்பட வேண்டியிருக்கு.

பசியின் கொடுமை தொண்டையை இறுக்கும் பொழுது இந்த " உத்தமி " என்ற பட்டம் எவ்வளவு தூரத்திற்கு எடுபடும் ?? மேலும் இந்த உத்தமி என்ற பட்டம் யாரால் வழங்கப்படுகின்றது ??

நிச்சயமாக ஒத்துபோக வேண்டிய கருத்து. கலாச்சாரமும், பண்பாடும் வற்றுப்பசிக்கு பின்பே. ஒரு நாள் பசிக்கு யாரும் தன்னை விற்க வரமாட்டான். திட்டமிட்டு பசிதான் வாழ்க்கையாக மற்றபட்டிருக்கிறது இந்த பெண்களின் நிலை. தடுக்க தவறியது தமிழினத்தின் தோல்வியாகவே பார்க்கப்படவேண்டியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்னினத்தைத் தானே அழிப்பதில், அழிய விடுவதில் தமிழன் தன்னிகரற்றவன். எல்லா இனத்திலும் போரின் பின்னே பெண்களுக்கு இந்நிலை ஏற்ப்பட்டதுதான். ஆனால் எம்மினத்தின் போலிப் பண்பாடும் கவுரவமும் எம்பெண்களை அல்லவா இழிநிலைக்கு மேன்மேலும் இட்டுச் செல்கின்றன. அதில் வந்த கோபம் தான். கொஞ்சப் பெண்களாவது எதிர்த்தால் மற்றவருக்கும் துணிவு வரும். ஆனால் எல்லோருமேயல்லவா இணங்கிக் கிடக்கிறார்கள். அந்த ஆதங்கம் தான். பதிக்கப்படும் பெண்கள் எல்லோரும் ஒன்று பட்டாலே ஏதாவது செய்ய முடியாதா என்னும் நப்பாசையும் தான்.

நன்றி கருத்தெழுதிய கோமகன் மல்லையூரான் இருவருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவான வரிகள்..! உங்கள் கவிதையில் சத்தும், நயமும் உள்ளன..!

படைப்புக்குப் பாராட்டுக்கள்..! இணைப்புக்கு நன்றிகள் சுமோ அக்கா..!! :rolleyes:

[size=5]உயிர் போகும் ஒருமுறை

அதை எண்ணி அஞ்சாதே

உத்தமியாய் வாளும்

உன் உரிமைதனை

எத்தர்களுக்காய் நீ

எப்போதும் ஈயாதே

என்னை நான் நீயாக

எண்ணிக் கலங்கியதால்

இத்தனையும் எழுதிவிட்டேன்

ஈழப் பெண்ணே

இயலுமாய் எண்ணி

இனிமேலும் எதிர்த்திட்டால்

எத்தன் ஒருவனும்

உனை எட்டியும் பார்த்திடான் [/size]

ஈழப் பெண்களுக்கு அறிவுரை சொல்லுவதற்கு பதிலாக நீங்களே ஏன் அங்கு போய் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து நீங்கள் எழுதியதையெல்லாம் செயலில் காட்டக் கூடாது?

[size=5]வாவ்! நல்ல கவிதை சுமோ!![/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதியவர்களுக்கு நன்றி. என்ன செய்வது நானும் உங்களைப்போல் வாயில்லாப் பூச்சியாகி விட்டேன். நான் கோளை என்பதனால்த்தான் கவி எழுதுகிறேன் பூச்சி.ஆனால் கவிதை எழுதுவதுடன் மட்டும் நான் நிற்கவில்லை .............. :(

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி கண்ட புதுமைப் பெண்ணின், ஓர்மமும், கொதிப்பும் உங்கள் கவிதையில் தெரிகின்றது!

வெறும் பற்களும், நகங்களும் துப்பாக்கிகளின் முன்பு என்ன செய்ய முடியும், சுமோ?

கன்னித்தன்மை, கற்பு என்பதெல்லாம், நாங்களே எமக்குப் போட்டுக்கொண்ட விலங்குகள் போல உள்ளது!

ஆனாலும், பணத்திற்காக உடலை விற்பவளை , நாம் என்ன செய்து விட முடியும்?

தேவை இருக்கும் வரை, அளிப்பும் (Supply) இருந்து கொண்டே இருக்கும்!

தேவையை, இல்லாமல் செய்ய, சமூகக் கட்டுப்பாடுகளால் தான் முடியுமென எண்ணுகின்றேன்!

அதுவரை, இரட்டைத் திருமணங்கள் போன்றவற்றை, இடைக்காலத் தீர்வாக, எமது சமூகம் சிந்தித்துப் பார்க்கலாம்!

சுமோ அக்கா, இவ்வளவு அனல் பறக்க எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்.

ஈழப் பெண்களுக்கு அறிவுரை சொல்லுவதற்கு பதிலாக நீங்களே ஏன் அங்கு போய் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து நீங்கள் எழுதியதையெல்லாம் செயலில் காட்டக் கூடாது?

புலம்பெயர்ந்தவர்கள் சொல்லலாமா என்று முதலில் நானும் யோசித்தேன். ஆனால் தாயகத்திலுள்ள பெண்களை ஆயுத முனையில் -பாலியல் வல்லுறவு புரிகையில்- ஒன்றும் செய்ய முடியாது. இயலுமான வரையில் போராடும்படி தான் கவிதையில் கேட்கப்படுகிறது. இராணுவத்தினருடன் என்றல்ல சாதாரண நபர்களுடன் போராடுவதும் உள்ளடங்கும்.

தானாக பாலியல் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று சொல்வது போலும் நோக்கலாம். அதை சொல்லி விழிப்புணர்வூட்ட அனைவருக்கும் உரிமை உண்டு.

பசிவந்தால் பத்தும் பறக்கும் என்று ஆன்றோர்கள் சொல்வார்கள் . பசியின் கொடுமை தொண்டையை இறுக்கும் பொழுது இந்த " உத்தமி " என்ற பட்டம் எவ்வளவு தூரத்திற்கு எடுபடும் ?? மேலும் இந்த உத்தமி என்ற பட்டம் யாரால் வழங்கப்படுகின்றது ??

வன்னியில் உள்ளவர்களுக்கு பசி, பட்டினி என்பது புதிதல்ல. அவர்களால் பாலியல் தொழிலை தேர்ந்தெடுக்காமல் பசி, பட்டினியிலும் வாழ முடியும்.

உத்தமி என்ற பட்டத்தை யாரும் வழங்க தேவையில்லை. அவள் மனச்சாட்சிக்கு அவள் உத்தமியாக இருந்தால் போதும். யாரால் அவள் வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாலும் அவளாக தவறு விடாதவரை அவள் உத்தமி தான்.

Edited by நிழலி
பாலியல் வல்லுறவு எனும் சொல்லை பயன்படுத்த

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]மெசோ மேலும் உங்கள் கவிதைகள் வரவேண்டும். உந்து சக்தியாய் இருக்கிறது .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மோகத்தில் வருபவனை[/size]

[size=5]மோதியே கொன்றுவிடு[/size]

[size=5]மூடர்கள் வந்தால்[/size]

[size=5]முட்டி நீயும் கொன்றுவிடு[/size]

வேகம் கக்கும் வடிவங்கள்.

வாழ்த்துகள்.

கவிதை அழகு

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழ் பெண்ணே நீ

தாழ்ந்தது போதுமடி

தலை நிமிர்ந்தே நீ

வாழ்ந்திட வேண்டுமடி

-------[/size]

உங்கள் ஆரம்பக் கவிதை வரிகளுக்கு, நன்றி சுமோ.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5][size=4]சுமேரியர் ஒரு பெண்ணாய் நின்று எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். சமூகத்தின் கூரிய கண்களும் நாக்குகளும் எப்போதும் பெண்ணை நோக்கியே அவளின் வன்மையை அடக்குவதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சிறுவயதிலிருந்தே அடக்கி வளர்க்கப்படும் விதமே அவளால் தன்னை உணரும் வயதிலும் தன்னைத்துணிவாக வெளிப்படுத்தி சுயமாக நிற்க முடியாத அளவுக்கு அவளை கோழையாக்கி வைத்திருக்கிறது. விபத்துக்களையும் வன்முறைகளையும் அதே நேரம் ஆண் சமூகத்தால் ஏமாற்றப்பட்ட பெண்களையும் விமர்சித்தே கொன்றுவிடும் சமூக அமைப்பு எங்களுடையது. இந்நிலை மாற்றமடையவேண்டுமென்றால் முதலில் பெண் பிள்ளைகளை ஆணுக்குச் சமமாக வளர்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும். எங்கள் சமூகத்தினருக்கு இவ்விடயம் தெரியாது என்று சொல்வதற்கில்லை. தெரிந்து கொண்டேதான் ஒவ்வொரு தாயும் தத்தமது பெண்பிள்ளைகளை அலங்காரப்பதுமைகளாக வளர்க்கிறார்கள். முதலில் நான் , நீங்கள் என்று எங்களுக்குள்ளாகவே இந்த மாற்றம் நிகழவேண்டும் அதுவே கால ஓட்டத்தில் நம்முடைய சமுதாயத்தின் மாற்றமாக முடியும்.[/size] [/size]

[size=5]ஏங்கிய காலங்கள் போதும்

கன்னம் சிவந்ததோர் காலம் - எழில்

கவிகள் படித்ததோர் காலம்.

சின்ன வரையரைக்குள்ளே - உன்

சிந்தை இழந்ததோர் காலம்.[/size]

[size=5]வண்ணமயில் என்றும் கூறி..

வஞ்சிக் கொடியென்றும் கூறி...

எண்ணம் எங்கும் மென்மை தூவி... -உந்தன்

வன்மை அடக்குவர் தோழி!

அங்கங்கள் அழகுதானடி -அதை

அங்கங்கே போற்றுவர் தேடி..

உங்கருத்தைக் கேட்க யாரடி? - அடி

உன்னதப்பெண்ணே! நீ கூறடி!![/size]

[size=5]நுண்ணிடை என்றொரு கூட்டம் - உன்னைப்

பண்ணிடை கற்பனை பாடும்.

மண்ணிடம் காட்டு உன் தாகம் - அதுவுன்

பெண்ணுடல் நீத்தாலும் வாழும்.

கங்கை உனக்கென்ன தங்கையா?

மங்கை உனக்கின்னும் மருட்சியா?

உன்கையை வான் வரை உயர்த்தி -அதில்

உலகை ஈர்க்கலாம் முயற்சி![/size]

[size=5]மையல் காட்டும் கண்ணில் மயங்காத்

தையலர் மேன்மையை உணர் நீ!

உய்யல் வழியுண்டு உனக்கு - அதில்

பையப் பாவையுன்னை நகர்த்து!

தங்கத் தமிழீழப் பெண்மை - மற

மங்கையர் கூட்டமே உண்மை.

தங்கச்சி உனது தன்மை -எங்கள்

வேங்கை நாட்டிற்கே வன்மை.[/size]

[size=5]ஏங்கிய காலங்கள் போதும் இனி - மதி

தூங்கிய காலமும் போதும்.

பாங்கியே வெளியே வாடி -பெரும்

பணிகள் செய்யலாம் கோடி. [/size]

சுமேரியர் ஒரு காலத்தில் எழுதிய கவிதை உங்கள் கவிதையைப் பார்த்ததும் இதை மீள இணைக்கும் எண்ணம் ஏற்பட்டது. இந்தக்கவிதை எழுதிய பிற்பாடு ஒரு பத்திரிகைக்கு அனுப்பி வைத்தபோது திருத்தம் செய்தார்கள் இக்கவிதையில் " டி" என்று வாடி, போடீ என்று ஒரு தோழியைப்பார்த்து தோழி சொல்லும் பதங்களாக புனையப்பட்டவையை அகற்றி கவிதையைக் சாகடித்து அச்சேறியது. இப்படியான திருத்தங்கள் கவிதையின் உணர்வைக் கொள்ளும் என்பதை அன்று அது அச்சேறிய போது உணர்ந்தேன். யாழில் மட்டுமே என்னுடைய கவிதைகள் அப்படியே உயிர்ப்போடு இருக்கின்றன. அதனாலேயே இன்றுவரை என்னால் இங்கு நிலைத்து நிற்க முடிகிறது.

மன்னிக்கவும் சுயதணிக்கை செய்யப்படுள்ளது

Edited by கோமகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த புங்கையூரான்,துளசி,நிலாமதி,கறுப்பி, தமிழ்சிறீ,வல்வை சகாரா, அனைவர்க்கும் நன்றி. கோமகன் என்னைத் திட்டி எழுதிவிட்டு அழித்துவிட்டீர்களோ :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.