Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மலையாளியின் பார்வையில் கனடா மாவீரர் தினம்..

Featured Replies

நேற்று மாவீரர் தின நினைவஞ்சலிக்கு போவதற்காக அலுவலகத்தில் இருந்து அரை நாள் விடுப்பு எடுத்து இருந்தேன். விடுப்பு எடுப்பதற்கான காரணமாக tamil martyrs day இற்கு போவதாகக் கூறி இருந்தேன். காரணத்தினை சொல்லும் போது ஒரு வித மனத் திருப்தியும் மனதுக்குள் வந்து போனது. என்னுடன் வேலை செய்கின்றவர்களில் இருவர் இந்தியர்கள். அதில் ஒருவர் மலையாளி (28 வயது இளைஞன்). அவருக்கு இது புதிய விடயமாக இருந்தது. ஏன் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படுகின்றது என விளக்கமளிக்க எனக்கு நேற்று நேர அவகாசம் இருக்கவில்லை.

தான் கனடாவில் மூன்று வருடங்களுக்கும் மேலாக இருப்பதாகவும் தனக்கு இது ஒவ்வொரு வருடமும் நடப்பது தெரியாது என்றும் கூறி இருந்தார். அத்துடன் கனடா வர முதல் 5 வருடங்கள் இங்கிலாந்தில் வசித்ததாகவும், அங்கும் தனக்கு இது பற்றி தெரிந்து இருக்கவில்லை என்றும் கூறினார். மாவீரர் தினம் அன்று அனைத்து தமிழ் (ஈழக்) கடைகளும் வர்த்தக நிலையங்களும் மூடி இருக்கும் என்று கூறியதை அவரால் நம்ப முடியாது இருந்தது.

நேற்று நான் அரை நாளில் வந்த பின், அலுவலகம் முடிந்து பல தமிழ்க் கடைகளுக்கும் சென்று பார்த்து இருக்கின்றார். எல்லாத் தமிழக் கடைகளும் பூட்டி இருந்து இருப்பதை அவதானித்துள்ளார்.

இன்று மீண்டும் வேலைக்கு நான் வந்தவுடன், அவர் கேட்ட முதல் கேள்வி, 'நிகழ்வு எப்படி இருந்தது என்று'. நான் 'நிகழ்வு 4 அமர்வுகளில் நடந்த விபரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு நடந்த நிகழ்விற்கு வந்த வாகங்களின் வரிசையே 3 KM இனை தாண்டியது வரை விளக்கப்படுத்தினேன்.

பின், இதனை ஏன் அனுட்டிக்கின்றீர்கள் என்பதற்கான காரணங்களை விளக்கியதுடன், முன்னர் தாயகத்தில் அமைக்கப்பட்டிருந்த போராளிகளின் கல்லறை வயல்களையும் விதைக்கப்பட்டவர்களின் சமாதிகளின் அணிவகுப்புகளையும் காட்டிக்கொண்டு இருந்தேன். அவரது முகம் கடும் உணர்ச்சி மயமாகிக்கொண்டு இருந்தது. ஈற்றில் இவ் கல்லறைகள் எல்லாம் இராணுவத்தால் நிர்மூலமாக்கப்பட்டு, bulldoze பண்ணப்பட்டு வித்துடல்களின் எலும்புகளைக் கூட இராணுவத்தினர் வீதிகளில் எறிந்து விட்ட்னர் என்றேன். அவரால் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்கள் கலங்கி கண்ணீர் துளிகள் வெளி வரத் தொடங்கின. இப்படியான எலும்புகளை கண்ட பெற்றோரின் துயரம் எந்தளவுக்கு கொடுமையாக இருக்கும் என்ற என் கேள்விக்கு அவரால் கண்ணீர் மட்டும் பதில் தந்தது.

அத்துடன் இம்முறை தாயகத்தில் மாவீரர் தினம் கடைப்பிடிக்க முனைந்த போது சிங்கள அரசு மேற்கொண்ட அடக்குமுறைகளையும் கூறி அதற்குரிய படங்களையும் காட்டினேன். இப்படியான செய்திகள் எல்லாம் தம் ஊடகங்களில் எப்போதுமே வருவதில்லை என்று கூறி தனக்குத் தெரிந்து கல்லறைகளைக் கூட துவச்ம் செய்யும் ஒரு இனம் வேறு இல்லை என்றும் கூறினார்.

பின் கொஞ்ச நேரத்தினால் அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்

"நானாக இருந்திருந்தால் கண்டிப்பாக சேர்ந்து ஆயுதம் தூக்கிப் போராடப் போயிருப்பேன்.. இதையெல்லாம் பார்த்து விட்டும் உன்னால் எப்படி கனடாவுக்கு வந்து சந்தோசமாக வாழ முடிகின்றது" என

அவருக்கு விளங்கப்படுத்தக் கூடிய பதில் என்னிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வேலையில் இருந்தால் மாவீரர் நிகழ்வு பற்றிய நாடா இணைக்கப்பட்டுள்ளது..அந்தப் பிள்ளையை கூப்பிட்டு காட்டுங்கள் நிழலி அண்ணா..

Edited by யாயினி

அவர்களுக்கிடையில் ஒற்றுமை உண்டு நிழலி. நிச்சயமாக அவர்கள் நமது இனமாக இருந்திருந்தால் கருணாநிதி மாதிரி நடந்திருந்திருக்க மாட்டார்கள். நமக்குள்தான் கருணா, கருணாநிதி..

[size=5]//[/size]"[size=5]நானாக இருந்திருந்தால் கண்டிப்பாக சேர்ந்து ஆயுதம் தூக்கிப் போராடப் போயிருப்பேன்.. இதையெல்லாம் பார்த்து விட்டும் உன்னால் எப்படி கனடாவுக்கு வந்து சந்தோசமாக வாழ முடிகின்றது" என//

அவருக்கு விளங்கப்படுத்தக் கூடிய பதில் என்னிடம் இல்லை. [/size]

எனக்கும் இந்த கேள்விக்கு பதில் கூற முடியாது .............

இணைப்பிற்கு நன்றி நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் பிரபாகரனை புலிகளை தமிழ் மக்களின் போராட்டத்தை நன்கு விளங்கிக் கொண்ட மலையாளிகளை நானும் சந்தித்திருக்கிறேன்.

தமிழர்களில் எப்படி கருணாநிதிகளோ.. அப்படி மலையாளிகளிலும் ஆட்சியாளர்களுக்கு காவடி தூக்க ஆட்கள் இருக்கினம். இந்தியா ஒரு ஊழல் மிக்க நாடு. அதனிடம் போய் நீங்கள் நியாயம் நீதியை தார்மீக ஆதரவை எதிர்பார்ப்பது தான் உங்களுக்கு ஆபத்து என்று அவர்களே சொல்கிறார்கள். அதுதான் மலையாளிகள் கன்னடர்கள்..இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கூட கவனத்தில் கொள்வதில்லைப் போலும். ஆனால் தமிழகத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விட்டால் வேறு வழியே இல்லை என்று தான் பலர் உள்ளனர். :(:icon_idea:

Edited by nedukkalapoovan

கேட்க நன்றாகதானிருக்கு ஆனால் நடைமுறை அப்படியல்ல .

83 கலவரமும் பின்னர் இயக்கங்களில் இளைஞர்கள் இணைந்ததும் மலையாள நண்பர் சொல்வது போலான சிந்தனையால் தான். 90 களுக்கு பின் இயக்கங்களுக்கு விரும்பி சேர்ந்தவர்கள் மிக குறைவானவர்களே.வசதியானவர்கள் நாட்டை விட்டு ஓடியதும் பலர் கட்டாய ஆள் சேர்பிலுமே இணைத்துக்கொள்ளபட்டார்கள் .

அங்கு சேர்ந்து போராட எவ்வளோ தேவை இருந்தும் ஓடிவந்தவர்கள் இங்கு அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்துக்கொண்டு ஏதோ தாமும் போராளிகள் கணக்கு சீன் காட்டுவது தான் கேவலத்திலும் கேவலம் .

  • தொடங்கியவர்

கேட்க நன்றாகதானிருக்கு ஆனால் நடைமுறை அப்படியல்ல .

83 கலவரமும் பின்னர் இயக்கங்களில் இளைஞர்கள் இணைந்ததும் மலையாள நண்பர் சொல்வது போலான சிந்தனையால் தான். 90 களுக்கு பின் இயக்கங்களுக்கு விரும்பி சேர்ந்தவர்கள் மிக குறைவானவர்களே.வசதியானவர்கள் நாட்டை விட்டு ஓடியதும் பலர் கட்டாய ஆள் சேர்பிலுமே இணைத்துக்கொள்ளபட்டார்கள் .

இப்படித்தான் நடந்து இருக்க வேண்டும் என்பது உங்கள் அவா..அதுதான் எழுத்துகளில் தெரிகின்றது. நான் 2006 வரைக்கும் வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் ஒவ்வொரு வருடமும் சென்று வந்துகொண்டுதான் இருந்தேன். 2007 வரைக்கும் கட்டாய ஆட்சேர்ப்பு என்பதே இருந்ததில்லை.வெறுமனே தேனியையும், நெருப்பையும் வாசித்தே பழக்கப்பட்டு போன உங்களுக்கு இவை கசப்பான செய்திகள் தான்.

இன்று தாயக மக்கள் தன்னெழுச்சியாகத்தான் மாவீரர் தினத்தினை பல இன்னல்களுக்கும் மத்தியில் முன்னெடுக்கின்றார்கள். இவை கட்டாய பயிற்சியின் மூலம் சேர்க்கப்பட்ட பிள்ளைகளுக்கான அஞ்சலியாக இருப்பின் 2009 பின்னே தம் உயிரை பணயம் வைத்து அவர்கள் இப்படியான விடயங்களில் ஈடுபடத் இருக்கத் தேவையில்லை. ஆனால் இந்த தன்னெழுச்சி வெறுமனே புலி எதிர்ப்பு காச்சல் இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு வெறுப்பையும், கசப்பையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

மலையாளிகள் மத்தியில் இருக்கும் மிகப் பெரிய பலம், தம்மிடையே காணப்படும் வேறுபாடுகளை விட்டு விட்டு , மலையாளிகள் என்ற இன அடிப்படையில் ஐக்கியமாகி தமக்கு எதிரான அனைத்துக்கும் எதிராக அணி திரள்வதே. இதே குணம் சிங்கள இனத்துக்கும் இருக்கின்றது. இவர்களுக்கு எல்லாம் இருக்கும் பெரிய அதிஷ்டம், உங்களைப் போன்றவர்களை தமக்குள் கொண்டிராததே ஆகும்.

[size=4]மாவீரர் தினத்திற்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும்.[/size]

[size=4]
அதே போன்று செல்ல மறுப்பவர்களும் ஒரு காரணத்தை கூறுவார்கள்.
[/size]

மாவீரர் தினத்தில் சிலர் தமது உறவுகளை நினைவு கூர்ந்து கண் கலங்குகின்றனர்.

பலர் தமிழின
வீரத்தை எண்ணி கண் சிவந்தனர்.

[size=4]சிலர் புலிகளின் பிழைகளை ஏற்க மறுத்து போக மறுக்கின்றனர். [/size]

[size=4]
சிலர் புலிகளின் தவறுகளை அன்று மறந்து மாவீரர் நிகழ்விற்கு செல்கின்றனர்.
[/size]

[size=4]சிலர் அந்த மாவீரர் தினத்திற்கு செல்வது மூலம் தனது கடமை 100% முடிந்ததாக எண்ணி போகின்றனர். [/size]

[size=4]
சிலர் தாம் செய்யும் வேலைத்திட்டங்களுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டி செல்கின்றனர்.
[/size]

[size=4]சிலர் மாவீரர் தினம் ஒரு ஆடம்பர நிகழ்வு என கூறி மறுக்கின்றனர். [/size]

[size=4]
பலரும் இதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் ஒரு சிறு மரியாதை என வாதிக்கின்றனர்.
[/size]

[size=4]சிலர் எமக்குள் உள்ள பிளவுகளை சுட்டிக்காட்டி மாவீரர் தினத்திற்கு போவதில்லை என்கிறார்கள். [/size]

[size=4]
பலரும் இந்தநாளில் தான் நாம் ஒற்றுமைப்பட முடியும் என செல்கிறார்கள்.
[/size]

மலையாளிகள் மத்தியில் இருக்கும் மிகப் பெரிய பலம், தம்மிடையே காணப்படும் வேறுபாடுகளை விட்டு விட்டு , மலையாளிகள் என்ற இன அடிப்படையில் ஐக்கியமாகி தமக்கு எதிரான அனைத்துக்கும் எதிராக அணி திரள்வதே. இதே குணம் சிங்கள இனத்துக்கும் இருக்கின்றது. இவர்களுக்கு எல்லாம் இருக்கும் பெரிய அதிஷ்டம், உங்களைப் போன்றவர்களை தமக்குள் கொண்டிராததே ஆகும்.

இவர்களிம் இருக்கும் இவ்வாறான பலம் உண்மையே. தென்பகுதியில் சிங்களமும் மலையாளமும் தம்மை உயர்ந்தவர்கள் என்ற கருத்தை முன்நகர்த்தியுள்ளர்கள். அந்தப் புள்ளியில் மக்களை இணைக்க முற்படுகின்றாரகள். இதில் சிங்களம் மிகப்பெரிய வெற்றியை கண்டு தன்னை நிலை நிறுத்தியது. இறுதியான சிங்கள மன்னன் தமிழிலேயே கையெழுத்திட்டான் என்ற வரலாறு உண்டு. தமிழுடன் ஒப்பிடுகையில் அவரகள் மொழி காலத்தால் மிகப் பிந்தியது. அந்நிய ஆட்சிக் காலங்களில் தமிழர்களளவுக்கு கல்விவளர்ச்சியோ அல்லது அரச நிர்வாகங்களில் வேலை பார்த்தலோ அவர்களிடம் இல்லை. அவர்களிடமும் எம்மில் இருப்பது போன்ற சாதிய வர்க்க ஏற்றதாழ்வுகள் இருக்கின்றது. மலயாளிகளிடம் மிக அதிகமாக இருக்கின்றது. ஆனால் சிங்களம் தன்னை ஒரு உயர்ந்த குடி என்ற கருத்தை இன ரீதியாக படிப்படியாக விதைத்து அதுக்குச் சார்பாக பௌத்தத்தை வரலாற்றை எழுதி மக்களின் சிந்தனையில் ஒரு மேன்மைத் தன்மையை பொதுவாக முன்நகர்த்தியது. அந்த மேன்மையான விசயம் முன்னதாகவும் அவர்களுக்குள் இருக்கும் ஏற்றதாழ்வு இரண்டாம்பட்சமாகவும் உருவானது. மலையாளிகள் தம்மில் இருக்கும் ஏற்றதாள்வுகளை பின்தள்ளி தாம் மற்ற இனங்களை விட மேன்மையானவர்கள் என்ற ஒரு கருத்தியலை முன்நகர்த்துவதில் கணிசாமன தூரம் பயணித்துவிட்டார்கள். இவர்களின் இந்த வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் அவர்களின் புவிசார் வளமும் அதனுடன் ஒன்றிய வாழ்வும் கணிசமான பங்குவகிக்கின்றது.

எம்மிலும் புலிகளின் காலத்தில் மாவீரர் நாள் மாவீரர் குடும்பங்கள் போராளி குடும்பங்கள் என்ற கருத்தியலை முன்நகர்த்தி வீரம் தேசம் தேசப்பற்று தியாகம் என்பதை உயர்ந்தநிலையில் முன்நகர்த்தி இதர ஏற்றதாழ்வுகளை பின்நகர்த்திய ஒரு மிக அர்த்தம் மிக்க ஒரு நகர்வு இருந்தது. இந்த நகர்வு ஆயிரமாண்டுகால சமூக முரண்பாட்டுக்கு ஒரு சரியான தீர்வாக அமையக்கூடிய போக்கும் நம்பிக்கையும் இருந்தது. என்னும் சொல்லப்போனால் சமூக முரண்பாடுகளை சிங்களம் மலயாளிகள் கையாண்டதை விட ஒரு படி மேலாக அதாவது அவர்கள் தம்மை உயர்ந்தவர்கள் என்ற கருத்தியல் ஊடாக முன்நகர்த்தினார்கள் புலிகள் செயற்பாட்டின் விளைவுகளை பெறுபேறுகளை தியாகங்களை திடமாக வைத்து முன்நகர்த்தினார்கள். இனவிடுதலைக்கும் தேசவிடுதலைக்குமான சரியான பாதை இதைவிட வேறு இருந்ததில்லை. இதனால்தான் முள்ளிவாய்க்கால் "இது நடந்திருக்கக் கூடாது" எம்மை அறியாமல் ஒவ்வொருவரும் உச்சரிக்கின்றோம். சிங்களவன் அடித்து நொருக்கியது ம்டும் அல்ல இந்தப் பின்னடைவு. எமக்குள்ளாக ஒரு பண்பட்ட மேன்பட்ட வளர்ச்சியின் தோல்வியும் இணைகின்றது. சிங்களவர்கள் மாவீரர் துயிலுமில்லங்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அழிக்கவில்லை மிக ஆழமாக யோசித்தே அழித்தார்கள். தமிழர்களை பொறுதவரை அது ஒரு சிங்கள வெறி. அவ்வளவுதான் தமிழர்களின் யோசனை. சிங்களவர்களை பொறுத்தவரை மிக நீண்ட தூரநோக்குச் சிந்தனை.

எமது புலப்பெயர்வுகள் ஒரு சமூகப் பெயர்வு. வாழ்வுக்குத்தேவையான பொதிகளுடன் கூடிய பெயர்வு. அந்தப் பொதிகளுள் மொழி கலாச்சாரம் கோயில் ஊர் ஊர்சங்கங்கள் இனம் சனம் சொந்தம் என நிலத்தை தவிர எம்மைத் திருப்திப்படுத்தக் கூடிய அத்தனையையும் அடக்க முற்படுகின்றோம். நாம் செய்த ஆதிக்க சமூக அடயாள நிலைநிறுத்தல்களை செய்வதற்கு இந்தப்பொதிகள் போதுமானதாக இருக்கின்றது. தேசீயத்தின் பாதி இந்தப் பொதிக்குள் வந்துவிட்டதாக ஒரு மாயை கருத்தியல் இருக்கின்றது. இந்தப் பொதிக்குள் மாவீரர் தினம் வந்துவிடக் கூடாது என்ற நுட்பமான சிந்தனையை எவ்வளவுதூரம் மேம்படுத்தப்போகின்றோம் என்பது கவலையான ஒரு விசயமே.

In their 2006 report, however, Amnesty International stated that "escalating political killings, child recruitment, abductions and armed clashes created a climate of fear in the east, spreading to the north by the end of the year,"

ஒரு செக்கனில் இதை எடுத்த எனக்கு இப்படி ஆயிரம் பதிவுகள் எடுக்க முடியும் .புலிகள் மாத்திரம் தான் ஒரு வட்டத்திற்குள் சுற்றியவர்கள் ,சுற்றிகொண்டிருப்பவர்கள் .மாற்றுக்கருத்தாளர்கள் அப்படியல்ல .புலிகளுக்கு தெரிந்ததைவிட அவர்களுக்கு புலிகளை பற்றியும் தெரியும் .

83.84,85 களில் முழு இயக்கங்களுக்கும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து போனவர்களின் பட்டியல் என்னால் ஓரளவிற்கு தரமுடியும் ,90 பின்னர் அப்படி போனவர்கள் பட்டியல் ஏதாவது நிழலியால் தரமுடியுமா ?

தொடர்ந்து மனித உரிமைகள் அறிக்கைகள் படித்துவருபவன் நான் மற்றவன் சொல்லி நாட்டில் நடந்தது நான் அறியத்தேவை இல்லை .அனைத்தும் பதிவில் இருக்கு .உலகிற்கும் தெரியும் .அவ்வளவு அநியாயங்கள் நடக்கும் போதும் கண்ணை மூடிக்கொண்டிருந்தவர்களுக்கு எதுவும் தெரிய நியாயமில்லை .

[size=4]அர்யுன் அண்ணா,[/size][size=1]

[size=4]உங்களால் இதற்கு உதவ முடியுமா? மாதிரி கடிதங்களை எழுதி இணைக்க முடியுமா? நன்றிகள். [/size][/size]

In their 2006 report, however, Amnesty International stated that "escalating political killings, child recruitment, abductions and armed clashes created a climate of fear in the east, spreading to the north by the end of the year,"

ஒரு செக்கனில் இதை எடுத்த எனக்கு இப்படி ஆயிரம் பதிவுகள் எடுக்க முடியும் .

[size=3]

[size=5]UNITED NATIONS HUMAN RIGHTS DAY: DECEMBER 10, 2012[/size][/size]

[size=3]

[size=5]Kindly go to writeathon.ca and register your name; Amnesty International will send you guidelines etc.[/size][/size]

[size=3]

[size=5]It is recommended you write letters rather than e-mail;Postage is free to parliamentarians;[/size][/size]

[size=3]

[size=5]Please follow this: keep it short, polite and respectful, to the point, explain shortly what you want. signature and address clear. write legible.[/size][/size]

[size=3]

[size=5]Let is do this from today and see the result. Thank you.[/size][/size]

In their 2006 report, however, Amnesty International stated that "escalating political killings, child recruitment, abductions and armed clashes created a climate of fear in the east, spreading to the north by the end of the year,"

ஒரு செக்கனில் இதை எடுத்த எனக்கு இப்படி ஆயிரம் பதிவுகள் எடுக்க முடியும் .புலிகள் மாத்திரம் தான் ஒரு வட்டத்திற்குள் சுற்றியவர்கள் ,சுற்றிகொண்டிருப்பவர்கள் .மாற்றுக்கருத்தாளர்கள் அப்படியல்ல .புலிகளுக்கு தெரிந்ததைவிட அவர்களுக்கு புலிகளை பற்றியும் தெரியும் .

83.84,85 களில் முழு இயக்கங்களுக்கும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து போனவர்களின் பட்டியல் என்னால் ஓரளவிற்கு தரமுடியும் ,90 பின்னர் அப்படி போனவர்கள் பட்டியல் ஏதாவது நிழலியால் தரமுடியுமா ?

தொடர்ந்து மனித உரிமைகள் அறிக்கைகள் படித்துவருபவன் நான் மற்றவன் சொல்லி நாட்டில் நடந்தது நான் அறியத்தேவை இல்லை .அனைத்தும் பதிவில் இருக்கு .உலகிற்கும் தெரியும் .அவ்வளவு அநியாயங்கள் நடக்கும் போதும் கண்ணை மூடிக்கொண்டிருந்தவர்களுக்கு எதுவும் தெரிய நியாயமில்லை .

பதிவில் இருப்பவை அரசு வெளிவிட்டவை. பிரான்சிஸ் கரிசன் வெளிவராத உண்மையை இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறா.

Edited by மல்லையூரான்

1983 ல் J.R. இனக்கலவரத்தை அடக்காததும், 1961 சத்தியாகிரகத்தை ஆமியை போட்டு அடக்கி முடித்ததும், 1958 ல் காலிமுகத்திடலில் தமிழ் பா.உ களை அசப்பத்து கால்களால் உதைந்ததும் பதிவில்த்தான் இருக்கு. இதை வைத்துதான் கூட்டமைப்பு தனது பிரசாரங்களை செய்கிறது.

  • தொடங்கியவர்

புலிகளுக்கு தெரிந்ததைவிட அவர்களுக்கு புலிகளை பற்றியும் தெரியும் .

83.84,85 களில் முழு இயக்கங்களுக்கும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து போனவர்களின் பட்டியல் என்னால் ஓரளவிற்கு தரமுடியும் ,90 பின்னர் அப்படி போனவர்கள் பட்டியல் ஏதாவது நிழலியால் தரமுடியுமா ?

எனக்கு google லிலோ அல்லது சர்வதேச அமைப்புகளிடமோ தேட வேண்டிய அவசியம் இல்லை. என் பெரிய மாமியின் மகன் (அப்பாவின் மூத்த சகோதரியின் மகன்) மனைவியுடன் இத்தாலியில் இருந்து சென்று 2000 ஆம் ஆண்டில் இணைந்தவர். அவரது மகன்தான் 2009 இல் ஷெல் அடியில் இறந்தார் என்று முன்னர் யாழில் எழுதியிருந்தேன். அண்ணன் முள்ளிவாய்க்காலில் இருந்து வவுனியா முகாமுக்கு இறுதியாக தஞ்சம் அடைந்து இருக்கும் போது காட்டிக் கொடுப்போரால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறையில் இருந்து வெளிவந்தவர். இப்ப மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை எடுக்கின்றார்.

இந்த உதாரணம் மட்டுமல்ல இன்னும் பல என்னால் தர முடியும். ஆனால் ஆயிரம் தந்தாலும் உங்கள் வெற்றுப் புலி எதிர்ப்பு காச்சல் அடங்காது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில தேவையில்லாத சீண்டல்களுக்கு கருத்து எழுதாமல் சுகன் அண்ணா எழுதியது போல (ஒருவரின் பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்) ஆரோக்கியமான கருத்துக்களுக்கு ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள் உறவுகளே.

இந்த மாவீரர்தினத்தில் உலகெங்கும் நடந்த நிகழ்வுகளில் மக்களின் பங்களிப்பு குறைந்ததற்கான காரணங்கள் என்ன அடுத்த வருடங்களில் உள்ள தவறுகளைக் களைந்து எல்லாரும் வரக்கூடிய செய்வதற்கான செயற்திட்டங்களைப்பற்றி கதையுங்கள் உறவுகளே , பிரயோசனமாய் இருக்கும்.

இப்படியான கருத்துக்களைப்பார்த்து தான் பாதிச்சனம் நொந்து போய் இருக்குதுகள்.

(நான் யாருக்கும் வகுப்பெடுக்க நினைக்கவில்லை அப்படி யாருக்கும் தோன்றின் மன்னித்துக்கொள்ளுங்கள், இல்லாவிடின் இக்கருத்தை நிர்வாகம் நீக்கிவிடவும்.)

இந்த முறை மாவீரர் தினத்தில் இதைத்தான் நானும் பார்த்தேன். போட்டிக்கு இன்னொன்று வைத்திருந்தார்களானால் சில சமயம் என்ன நடக்கு என்று பார்க்க வந்திருப்பார்களொ தெரியாது. (இந்த முறை கிழமை நாளில் நடந்தது- சிறுவர்கள், இளைஞர்களும் குறைவு))

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

In their 2006 report, however, Amnesty International stated that "escalating political killings, child recruitment, abductions and armed clashes created a climate of fear in the east, spreading to the north by the end of the year,"

ஒரு செக்கனில் இதை எடுத்த எனக்கு இப்படி ஆயிரம் பதிவுகள் எடுக்க முடியும் .புலிகள் மாத்திரம் தான் ஒரு வட்டத்திற்குள் சுற்றியவர்கள் ,சுற்றிகொண்டிருப்பவர்கள் .மாற்றுக்கருத்தாளர்கள் அப்படியல்ல .புலிகளுக்கு தெரிந்ததைவிட அவர்களுக்கு புலிகளை பற்றியும் தெரியும் .

83.84,85 களில் முழு இயக்கங்களுக்கும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து போனவர்களின் பட்டியல் என்னால் ஓரளவிற்கு தரமுடியும் ,90 பின்னர் அப்படி போனவர்கள் பட்டியல் ஏதாவது நிழலியால் தரமுடியுமா ?

தொடர்ந்து மனித உரிமைகள் அறிக்கைகள் படித்துவருபவன் நான் மற்றவன் சொல்லி நாட்டில் நடந்தது நான் அறியத்தேவை இல்லை .அனைத்தும் பதிவில் இருக்கு .உலகிற்கும் தெரியும் .அவ்வளவு அநியாயங்கள் நடக்கும் போதும் கண்ணை மூடிக்கொண்டிருந்தவர்களுக்கு எதுவும் தெரிய நியாயமில்லை .

வெளிநாட்டுகாறன் இலங்கை அரசோ, ராணுவமோ செய்த எந்த ஒரு காட்டுமிராண்டித்தனத்தயாவது வெளியிட்டது கிடையாது. இயக்கமோ அல்லது அவர்களின் செயல்பாடுகள் பற்றியோ புத்தகம் அடிச்சு விட்டால் கேக்க யாரும் இல்லை, அதுதான் இவர்களின் கோழைத்தனமான துணிவு.

இராணுவத்தின் கண்மூடித்தனமான shell அடியால் குடும்பத்தை இழந்த ஒரு சிறுவன்/சிறுமியின் உள்ளங்களில் எது ஒடும், அவர்களுக்கு ஆதரவு யார் கொடுத்தார்கள்? இவற்றை அவர்கள் சிந்திப்பதும் இல்லை, சிந்திக்கவும் மாட்டார்கள். "அறிக்கை விட்டு பிழைப்பு நடத்தும்” கலாச்சாரதில் வாழ்பவர்கட்கு இது விளங்காது.

இயக்கம் எந்த ஒரு சிறு பிள்ளையயும் கட்டி இளுத்துகொண்டு வந்து சேர்க்கவில்லை. ஆனா நீங்கள் இதை நம்பமாட்டீர்கள், ஏனென்றால் நான் தமிழன் சொல்கிறேன், ஆகையால் எடுபடாது. வெளிநாட்டுகாறன் வாயால் வந்தாதான் அது வலிட் (valid). நீங்கள் இந்த UN காறனின் செயல்பாட்டுக்கு பிறகும் வெளிநாட்டு காறன் அறிக்கைகளை நம்புகின்றவரா? சுத்தம்!

இன்றுதான் இயக்கம் இல்லையே, அப்ப என்ன மண்ணுக்கு "உங்கள் மாற்றுக் கருத்துக்காறர்கள்" கையால் ஆகதவர்கள் போல் இருக்கிறார்கள்? எங்க, இலங்கை அரசிடம் சிங்கள குடியேற்றத்தை நிறுத்து என்று சொல்லட்டும் பாப்பம்? அடையாளம் இல்லாமல் செய்துவிடுவான் சிங்களவன். இன்னும் புராணம் பேசாமல் ஒற்றுமையாக வழி பாருங்கள்.

தொடர்ந்து மனித உரிமைகள் பற்றி படித்துவரும் உங்களுக்கு, எங்கள் உரிமை மனித உரிமையாக தெரியவில்லைப் போலும்!

[size=1]நியானி: பண்பற்ற உரையாடல் தணிக்கை[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

In their 2006 report, however, Amnesty International stated that "escalating political killings, child recruitment, abductions and armed clashes created a climate of fear in the east, spreading to the north by the end of the year,"

ஒரு செக்கனில் இதை எடுத்த எனக்கு இப்படி ஆயிரம் பதிவுகள் எடுக்க முடியும் .புலிகள் மாத்திரம் தான் ஒரு வட்டத்திற்குள் சுற்றியவர்கள் ,சுற்றிகொண்டிருப்பவர்கள் .மாற்றுக்கருத்தாளர்கள் அப்படியல்ல .புலிகளுக்கு தெரிந்ததைவிட அவர்களுக்கு புலிகளை பற்றியும் தெரியும் .

83.84,85 களில் முழு இயக்கங்களுக்கும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து போனவர்களின் பட்டியல் என்னால் ஓரளவிற்கு தரமுடியும் ,90 பின்னர் அப்படி போனவர்கள் பட்டியல் ஏதாவது நிழலியால் தரமுடியுமா ?

தொடர்ந்து மனித உரிமைகள் அறிக்கைகள் படித்துவருபவன் நான் மற்றவன் சொல்லி நாட்டில் நடந்தது நான் அறியத்தேவை இல்லை .அனைத்தும் பதிவில் இருக்கு .உலகிற்கும் தெரியும் .அவ்வளவு அநியாயங்கள் நடக்கும் போதும் கண்ணை மூடிக்கொண்டிருந்தவர்களுக்கு எதுவும் தெரிய நியாயமில்லை .

[size=1][size=4]கொஞ்சம் உண்மை கலந்த கருத்துக்கள்..........[/size][/size]

[size=1][size=4]1980 களில் உணர்வுள்ள இளைஞர்கள் சிலர் வெளிநாடுகளில் இருந்து சென்ற போய் புலிகளுடன் சேர்ந்தார்கள் அவர்களில் பாலா அண்ணா அவர்கள் குமரப்பா போன்றவர்கள் பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவர தொடங்கினார்கள். அதை பார்த்த இன்னும் சிலர் சீன் காட்டுவதற்கு சென்று வேறு அமைப்புகளில் சேர்ந்தார்கள். புலிகள் அப்போதைய நாட்களில் எல்லோரையும் இணைப்பதில்லை என்பது குறிப்பானது. ஈப்பி யில் ஆள் தொகை கூடியதற்கு முக்கிய காரணம் அதுதான். புலிகள் யாரையும் உடனடியாக இணைப்பதில்லை. சில காலம் அலைகளிப்பார்கள் அதன் பின்பும் உறுதியாக இருப்பவர்களையே இணைப்பார்கள். இந்த கால அவகாசத்திற்குள் ஈப்பி அவர்களை சேர்த்துவிடும். டெலோ பிளாட் போன்றவர்கள் குறிப்பிட்ட ஊர்களிலேயே இருந்தார்கள். யாழில் புளொட் கோண்டாவில் பகுதியிலும்............. டெலோ கல்வியங்காட்டு பகுதியிலும் இருந்ததால் அவ்விடங்களை செர்ந்த்தவர்களும் அவர்களை சார்ந்தது இருந்தார்கள். புலிகள் இராணுவ முகாம்கள் பொலிஸ் நிலையங்களை குறிவைத்து அதனை சார்ந்ததும் அவர்களுடைய நகர்வுகளுக்கு தலைமரைவுகளுக்கு ஏற்ற இடங்களிலும் தேவைக்கு ஏற்ற ஆட்கள் மட்டுமே இருந்தார்கள். [/size][/size]

[size=1][size=4]சீன் காட்ட போனவர்கள் தலைப்பாகையோடு போகாது தமது தலைக்கும் வரும் அறிகுறிகளை கண்டவுடன் சென்ற அதே வேகத்தில் திரும்பி ஓடிவிட்டார்கள். இதற்குள் சுருட்ட கூடியவற்றை சுருட்டியவர்களும் உண்டு. [/size][/size]

[size=1][size=4]இப்போ அங்கே எல்லாம் தவறாக இருந்தது அதுதான் திரும்பினோ என்று கதை அளக்கிறார்கள். உமாமகேஸ்வரனும் பிரபாகரனும் ஏற்கனவே பல நாட்டு விடுதலை போர்களில் பங்கெடுத்து விடுதலை கிடைத்தவுடன் இப்போ ஈழவிடுதலை போரை நடத்த வந்திருக்கிறார்கள் என்ற நினைப்பில் சென்றார்களோ என்னமோ? [/size][/size]

[size=1][size=4]விடுப்பெடுத்து விமானம் எறினவர்கள் அங்கே இருந்த்தது பிழையானது என்றால் சரியான ஒன்றை தொடங்கியிருக்கலாமே? அதுக்குதான் வக்கில்லை என்றால் பொத்திக்கொண்டு இருக்கலாம். [/size][/size][size=1][size=4] அதே சீன் போடத்தான். இப்படி எத்தனை சீன் களை பார்த்து வந்தவர்கள் தமிழர்கள்.[/size][/size]

[size=1][size=4]80பதுகளில் எல்லாம் ஆரம்ப நிலையிலேயே இருந்தது புலிகள் இந்தளவுக்கு வளர்ச்சி பெறுவார்கள் என்று இலங்கையோ இந்தியாவோ நினைத்திருக்கவில்லை. அதை புலிகளே எதிர்பார்த்திருக்கவில்லை என்பதுதான் உண்மையான உண்மை. 80களின் இறுதியில்தான் தமிழ் இனத்திற்கு எதிரான யுத்தம் கட்டு அவிழ்த்து விடபட்டிருன்தது. புலிகளுக்கு எதிரான பார்பானிய பாசிச போர் தொடங்கபட்டது . இப்போதைய சூழலில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஈழத்தில் இருந்த ஒவ்வரு வீடும் எதோ ஒரு தாக்கத்தை போரினால் சந்தித்தது. இப்போது பாதுகாப்பு என்பது எல்லா திசைகளிலும் எல்லோராலும் தேடபட்ட ஒன்றுதான். [/size][/size]

[size=1][size=4]எல்லா நாட்டிலும் சாதரணமாக நடப்பதுதான் அங்கும் நடந்தது வறியவர்களின் தலையில் அனைத்து சுமைகளும் இறக்கபட்டன. போராளிகள் ஆவது என்றாலும் சரி ............. பொருளாதார தடைகளினால் பாதிப்பு என்றாலும் சரி வறியவர்கள்தான் பாதிக்கபட்டார்கள். [/size][/size]

[size=1][size=4](எல்லாம் முடியவும் அவர்கள்தான் தெருவோரம் கிடக்கிறார்கள். பெரிய மனிதர்கள் செல்பேசிகளில் பேசியபடி கடந்து செல்கிறார்கள்.) [/size][/size]

[size=1][size=4]80பதுகளின் தொடக்கத்தில் உணர்வுகளுடன் கூடி போராட போனவர்கள் குறிப்பிட்ட பேர்கள்தான் அவர்கள் சாதித்தது சாதாரனமானவையும் அல்ல. அதிகம் பேர் சீன் போட போனவர்கள் அதே வேகத்தில் திரும்பியும் விட்டார்கள். புலிகளுக்கு எதிரான சண்டைகளை அவர்களது தலைமைகள் தொடங்கியபோது எந்த கேள்விகளும் இன்றி அதை அப்படியே அவர்களால் ஏற்க முடிந்ததற்கு அதுதான் காரணம். தமக்கு இருந்த அதே குணா அம்சங்கள் புலிகளுக்கும் இருந்தது என்று பிநாளில் கதை அளக்க அவர்களுக்கு அது வசதியாகவும் இருந்தது. [/size][/size]

[size=1][size=4]சிறிய இயக்கங்கள் மேல் புளொட் தனது ஆயுதத்தை எந்த அடிப்படை காரணமும் இன்றி திருப்பியது. இராணுவ முகம் அடிக்க வக்கில்லை அதனால் அவர்களது வீரத்த்கை சேவின் டெலா போன்ற சிறிய இயக்கங்களை காவு கொண்டார்கள். இப்போது சகோதர படுகொலையோ எதோ என்று வாந்திஎடுக்கிரார்கள். அது என்ன என்று நாம் அறிய காரணம் இருக்கவில்லை. அவர்களுக்கு காரணம் பல உண்டு. தாண்டவம் தலை விரித்தாடும் போதெல்லாம் அது வரண்டதோ வல்லரசோ புலிகள் அதை அடக்கினார்கள் என்பதை தான் நாம் பார்த்தோம். [/size][/size]

எனக்கு google லிலோ அல்லது சர்வதேச அமைப்புகளிடமோ தேட வேண்டிய அவசியம் இல்லை. . :)

[size=1][size=4]கூகிளிலும் சாக்கிளிகளிடமும் கேட்டு ஈழ விடுதலி போராட்டம் பற்றி தெரிந்து கொண்ட தமிழ் பேச தெரிந்த தமிழர்கள் அவர்கள்.[/size][/size]

[size=1][size=4]பதில் எ;உதுவதுதான் வேஸ்டு....[/size][/size]

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

பாலசிங்கம் புலிகளில் எப்போது சேர்ந்தவரேன்றே தெரியவில்லை அதற்குள் அழக்க தொடங்கிவிட்டார்கள் .

சர்வதேசம் போய் சொல்லுது ,பிபி சி போய் சொல்லுது ,இந்தியா போய் சொல்லுது ,மாற்று இயக்கங்கள் போய் சொல்லுது ,நாங்கள் மட்டும் சொல்வதுதான் உண்மையிலும் உண்மை .இந்த நிலைப்பாடும் அறியாமையும் தான் முள்ளிவாய்க்கால் .

அறியாமையால் தாங்கள் அழிந்தது மாத்திரமன்றி அப்பாவி மக்களையும் கொண்டுபோய் மாட்டிவிட்டார்கள் .உலகத்திற்கே தெரிந்த இந்த உண்மை உங்களுக்கு தெரியாததுதான் உலக மகா அதிசயம் .இப்போ வன்னியில் இருப்பவர்களும் சொல்லுகின்றார்கள் உண்மையை .புலம் பெயர்ந்த வியாபாரிகளுக்கு மட்டும்தான் இந்த உண்மை உறைக்கின்றது.

உங்கள் நேர்மை பற்றி எப்போ எமக்கு தெரிந்ததுதான் .தலைவர் உயிருடன் இருக்கின்றார் ,போரட்டம் மௌனிக்க பட்டது இப்படியெலாம் கதைப்பவர்களுடன் நேரத்தை செலவிடுவதே உண்மையில் வீண் வேலை .

ஐரோப்பாவில் இருந்து புளொட்டுக்கு மட்டும் இருநூறு பேருக்கு மேல் போனார்கள் .முப்பது பேருக்கு மேல் பாலஸ்தீனம் போய் பின் இந்தியா போனார்கள் .

பாலசிங்கத்திற்கு முதல் அருளர்,இரட்ணசபாபதி ,சங்கர் ராஜி ,விச்சு பத்மநாபா ஆகியோர் லண்டனில் இருந்து போனார்கள்.

பாலசிங்கத்தை கிருஷ்ணன் இந்தியா கூட்டிக்கொண்டு போனது உமாவையும் பிரபாவையும் (புலிகளை ஒற்றுமையாக்க ).

இவ்வளவு பேரும் புலம் பெயர்ந்து இருக்க அந்த குழந்தை குட்டிகளை அவர்கள் பிடித்துக்கொண்டு போனதை நியாயபடுத்தும் நீங்கள் எல்லாம் மனிதர்கள் என்பதே பாவம் .

  • கருத்துக்கள உறவுகள்

பாலசிங்கத்தை கிருஷ்ணன் இந்தியா கூட்டிக்கொண்டு போனது உமாவையும் பிரபாவையும் (புலிகளை ஒற்றுமையாக்க ).

[size=4]பரம இரகசியம் ஒன்றை எழுதி இருக்கிறீர்கள் [/size]

[size=1]

[size=4]வாசித்து உண்மை அறிந்தோம் நன்றிகள்![/size][/size]

எனக்கு google லிலோ அல்லது சர்வதேச அமைப்புகளிடமோ தேட வேண்டிய அவசியம் இல்லை. என் பெரிய மாமியின் மகன் (அப்பாவின் மூத்த சகோதரியின் மகன்) மனைவியுடன் இத்தாலியில் இருந்து சென்று 2000 ஆம் ஆண்டில் இணைந்தவர். அவரது மகன்தான் 2009 இல் ஷெல் அடியில் இறந்தார் என்று முன்னர் யாழில் எழுதியிருந்தேன். அண்ணன் முள்ளிவாய்க்காலில் இருந்து வவுனியா முகாமுக்கு இறுதியாக தஞ்சம் அடைந்து இருக்கும் போது காட்டிக் கொடுப்போரால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறையில் இருந்து வெளிவந்தவர். இப்ப மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை எடுக்கின்றார்.

இந்த உதாரணம் மட்டுமல்ல இன்னும் பல என்னால் தர முடியும். ஆனால் ஆயிரம் தந்தாலும் உங்கள் வெற்றுப் புலி எதிர்ப்பு காச்சல் அடங்காது. :)

முதல் உங்கள் உறவுகளின் இழப்புக்கு துன்பத்துக்கும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

2 வது ரொம்ப எதிர்பார்த்தேன்..

அர்ஜீன் அண்ணை சொன்ன கருத்தில் ஓரளவு உண்மை இருக்கு .

லெப் கேணல் சரா அண்ணையும் வெளிநாட்டில் இருந்து வந்து தான் சண்டையில் இறந்தார்.

ஆனால் ஒரு சரா அன்ணை வெளிநாட்டில் இருந்து ஊருக்கும் போகும் போது 1000 சசியும் நிழலியும் கொழுபில் இருந்து எஜண்ட் முலம் வெளிநாடுகளுக்கு வந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.

Edited by I.V.Sasi

அர்ஜீன் அண்ணை சொன்ன கருத்தில் ஓரளவு உண்மை இருக்கு .

செப் கேணல் சரா அண்ணையும் வெளிநாட்டில் இருந்து வந்து தான் சண்டையில் இறந்தார்.

ஆனால் ஒரு சரா அன்ணை வெளிநாட்டில் இருந்து ஊருக்கும் போகும் போது 1000 சசியும் நிழலியும் கொழுபில் இருந்து எஜண்ட் முலம் வெளிநாடுகளுக்கு வந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.

[size=4]நாட்டை விட்டு ஓடும் ஆயிரம் இல்லை பத்தாயிரம் பேருக்கு சமன் வெளிநாட்டில் இருந்து போகும் ஒருவர். [/size]

[size=4]பரம இரகசியம் ஒன்றை எழுதி இருக்கிறீர்கள் [/size]

[size=1][size=4]வாசித்து உண்மை அறிந்தோம் நன்றிகள்![/size][/size]

அர்ஜீன் அண்ணை பந்தி பந்தியாக எழுதினாலும் அதுக்க கூட்டிச் சென்றது உங்கள் கண்ணில் பட்டுவிட்டது,

விரும்பி போவதற்கும் கூட்டி செல்வதுக்கும் வேறுபாடு இருக்கு,ம் :D

[size=4]நாட்டை விட்டு ஓடும் ஆயிரம் இல்லை பத்தாயிரம் பேருக்கு சமன் வெளிநாட்டில் இருந்து போகும் ஒருவர். [/size]

நான் பலபேரை சந்தித்து இருக்கேன்.

வெளிநாட்டில் இருந்து வந்தது இணைந்தது என்று சிலர் விடுகளுக்கு போனால் படம் கூட காட்டினார்கள்.

சர்வதேசம் போய் சொல்லுது ,பிபி சி போய் சொல்லுது ,இந்தியா போய் சொல்லுது ,மாற்று இயக்கங்கள் போய் சொல்லுது ,நாங்கள் மட்டும் சொல்வதுதான் உண்மையிலும் உண்மை .

இதில் என்ன சொல்கிறீர்கள்?

ஐ.நா தான் போர் நேரம் கொடுத்த இறப்புவிபரம் கபடம் நிறந்தது என்று புதிதாக வெளிவிட்ட அறிக்கை பிழையா? போர்நேரம் கொடுத்த புள்ளிவிபரம் சரியா?

இன்று இறந்தவர்கள் 75,000 என்று ஐ.நா கூர ஆரம்பித்திருக்கு. பி.பி.சி எங்காவது இறந்தவர்கள் 750 என்றாவது ஒரு செய்தி வெளிவிட்டதா?

கிழக்கில் சிறுவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் ரதிகா குமாரசுவாமியும் கருணாவும் நடத்திய தொலைபேசி கருத்தாடல்களை மட்டும் பிரசுரித்தது.

தொலைந்தவர்கள் 146,000 என்றால் அதில் இறந்த குழந்தைகள் 75,000 தாண்டும். பி.பி.சி சொன்னதெல்லாம் பொய்.

ஐ.நா அதிகாரிகள் வெளியேறிய பின்னர் பிரான்சிஸ் கரிசன் முள்ளியவாய்க்கால் போனாரா?

அர்ஜீன் அண்ணை பந்தி பந்தியாக எழுதினாலும் அதுக்க கூட்டிச் சென்றது உங்கள் கண்ணில் பட்டுவிட்டது,

விரும்பி போவதற்கும் கூட்டி செல்வதுக்கும் வேறுபாடு இருக்கு,ம் :D

நான் பலபேரை சந்தித்து இருக்கேன்.

வெளிநாட்டில் இருந்து வந்தது இணைந்தது என்று சிலர் விடுகளுக்கு போனால் படம் கூட காட்டினார்கள்.

அடேல் பாலசிங்கத்தின் புத்தகத்திலேயே அது எழுதப்பட்டு உள்ளது .பாலசிங்கம் ஆரம்பத்தில் லண்டனில் இருந்த TLO என்ற அமைப்புடன் தான் தொடர்பில் இருந்தார் ,சாள்ஸ் ,தம்பா,கொட்டா குலசிங்கம் ,ராஜா நித்தியன் எல்லாரும் அதில் இருந்தார்கள் .பின்னர் தான் புலி பொறுப்பில் இருந்த கிருஸ்ணனுடன் தொடர்பு வந்து இந்தியா போனார்

புலிகளை சந்திக்க கிருஸ்ணன் தான் கூட்டிச்சென்றார் .இதில் மாற்றுக்கருத்து இல்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.