Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்

Featured Replies

பூபாளம் எல்லாம் பக்கா விபரமாக போட்டுதான் வெளிவருகின்றது .

 

இந்தத்திரியில் இரண்டாம்பக்கத்தில் நான் எழதியிருப்பதை வாசித்துவிட்டு பதில் சொல்லுங்கள் அர்ஜுன் சார்

Edited by நியானி

  • Replies 93
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பூபாளம் இணையத்தளம், பத்திரிகை பற்றிய கருத்துக்கள், கேள்விகள் போன்றவற்றை தெரிவிக்கவும் விளம்பரம் குறித்த கேள்விகளுக்கும் boobalam@ymail.com என்ற மின்னோலை முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள். 416 284 4004 தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளலாம்.

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்

சாத்திரி(பூபாளம் கனடா)

ஏனெனில் புலிகள் இயக்கத்திற்கு உலகம் முழுவதும் உள்ள வர்த்தக வியாபரங்களால் மாதம் ஒன்றிற்கு சுமார் 300 மில்லியன் டெலர்களை வருமானமாகப் பெறும் அமைப்பாக இருந்தது.

 

இந்த இலக்கம் சிங்களத்தால் அதன் பிரச்சரத்திற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு இலக்கம். குறிப்பாக ரோஹான் குணவர்த்தன என்ற சிங்கப்பூரை தளமாக கொண்டிருந்த ஒரு பேராசியரால் பல புலம் பெயர்  நாடுகளில் முன்னெடுக்கப்பட்டது. கனடா உட்பட பல நாடுகளில் தடைக்கு, பெரும்பான்மை ஊடகங்களில் முன்வைக்கப்பட்ட இலக்கம்.

 

 

" இது தவறானது, இவர் கூறுவதில் ஆதாரம் இல்லை, இந்த இலக்கம் பொருளாதார அடிப்படையில் சாத்தியமானது ஒன்று அல்ல " என பரப்புரை ரீதியாக, புலம்பெயர் தமிழர்களின் எண்ணிக்கை ரீதியாக, அவர்களின் வருமானம் சார்ந்ததாக பல தமிழர்கள் இரவுபகலாக ஆவணப்படுத்தி சிங்கள பிரச்சாரத்திற்கு எதிராக வாதாடினார்கள்.

அந்த இலக்கம் மீண்டும் இங்கே துளிர் விட்டுள்ளது.

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்

சாத்திரி(பூபாளம் கனடா)

பரிதியை றேகன் என்கிற பெயரில் 84 ம் ஆண்டு இறுதிகளில் புலிகள் அமைப்பின் அன்றைய பிரதித் தலைவர் மாத்தையாவின் பாதுகாப்பு பிரிவு பொறுப்பாளராக எனக்கு அறிமுகம் ஆகின்றான். பின்னர் 85 ம் ஆண்டு கிளிநொச்சியில் ஒரு முகாம் பொறுப்பாளராக இருந்தவேளை கிளிநொச்சி இராணுவ முகாம் பகுதியில் நானும் நின்றிருந்ததால் எங்கள் அறிமுகம் நட்பாகி கடந்த ஆண்டு வரை தொடரவே செய்தது.

 

நிச்சயம் இந்த வசனம் கட்டுரையை வாசிப்பவர்கள் எழுதியவர் மீது ஒரு நம்பிக்கையை வர வைக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

 

 

மறுபக்கத்தில் சில கேள்விகளை இது முன்வைக்கின்றது:

 

#1 : அன்றைய கெரில்லா அமைப்பாக இருந்த இறுக்கமான அமைப்பின் இரகசியங்களை எழுதுவது என்பது உண்மையான ஒரு வீரனுக்கு அழகானது அல்ல?

#2 : அதுவும் இதில் குறிப்பிடப்படும் இரண்டாவது நபர் இன்று வீரமரணம் அடைந்துள்ள நிலையில் அவரை இணைத்து எழுதுவது என்பது எந்த நட்புற்கும் அழகானது அல்ல?

தனது இனத்தை உண்மையாக  நேசிப்பவன் தனது கடமைகளை அன்றிலிருந்து இன்று வரை சரியாக,செய்தான்  செய்கிறான் .செய்வான் ............அதில் மாற்றுக்கருத்திற்கு இடம் இருக்கவே இருக்காது .ஆனால் இந்தக்களத்தில் அவன் ஒரு கருத்தாளரை இருந்து கொண்டு இதைப்போல எத்தனை எத்தனை ,கட்டுரைகளையும் ,கதைகளையும் வாசித்திருப்பான் .............இவற்றின் மூலம் அவனை அவனது இலட்சியத்தில் இருந்து மாற்றாது ,மாறவும் மாட்டான் .............இந்த நிலையில் தளம்பு நிலையில் இருப்போரை இந்த இடத்தில் நிச்சயம் இனம் காணமுடியும்....................வியாபாரிகள் யார் என்பதையும் அறியமுடியும் .

ஆனால் மேலே உள்ள கட்டுரை மூலம் தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டத்திற்கு ஏதாவது நன்மை  கிடைத்தால் ,பயன் கிடைத்தால் அது வரவேற்கப்படவேண்டியது. மாறாக மீண்டும் மீண்டும் குட்டையை குழப்பி சேறு பூசுவதன் மூலம் .குழப்பங்களின் வடிவமாய் சென்றுகொண்டிருக்கும் எம் போராட்டம் அடி நூல் இல்லாமல் தொலைந்து விடும் என்பதே எனது கருத்து.

இதன் மூலம் இதை எழுதிய களஉறவான சாத்திரி அண்ணைக்கு ஒன்று கூற விரும்புகிறேன் .............உங்களுடன் தொலைபேசியில் பேசும்போது ஒற்றுமையின் தேவையை வலியுறுத்தி அழகாக கருத்திடுவீர்கள் ......ஆனால் உங்கள் எழுத்தில் அதாவது இந்தக்கட்டுரை மூலம் அந்த ஒற்றுமைக்காக நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையே உணரக்கூடியதாய் உள்ளது ..............

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை இரண்டு அணியினரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்து ஒரே அமைப்பா அமைப்ப பலப்படுதுன்கப்பா அத தான் மக்களும் எதிர் பாக்கிறாங்க அமைப்ப மீள் ஒழுங்கு படுத்திங்க

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை இரண்டு அணியினரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்து ஒரே அமைப்பா அமைப்ப பலப்படுதுன்கப்பா அத தான் மக்களும் எதிர் பாக்கிறாங்க அமைப்ப மீள் ஒழுங்கு படுத்திங்க

உண்மை  சுண்டல்

 

இதைத்தான் நானும் மேலே எழுதினேன்

இது எதற்கு வழி  வகுக்கும் என்று??

 

மற்றும் இங்கு சிலரது கருத்துக்களை  பார்க்கும்போது வேதனையாக இருக்கு.

மற்றவனை முன்னுக்கு தள்ளிவிட்டு  இருந்தே பழகிவிட்டோம்

அது மாறவில்லை

மாறப்போவதுமில்லை.

அது மாறும்வரை விடிவும் இல்லை.

 

 

எனக்கு இந்த கட்டுரையில் உடன்பாடில்லை  என்பதை எழுதிவிட்டேன்

சாத்திரி  இங்கு பலமுறை மற்றவர்களை நக்கலடித்திருந்தார்

இவங்களுக்கு  பிரெஞ்சு புலநாய்வுத்துறையைவிட அதிகம் தெரியும்.  இவர்களிடம் அவர்கள் கனக்க படிக்கணும் என.

இன்று இவர்கள்தான் கொலையாளிகள்.  பங்குபிரிக்கும் சிக்கலால் நடந்த கொலை என்று காரணமும் சொல்கிறார்.

 

எனவே அவரைப்போல எழுத என்னால் முடியாது. நான் பிரெஞ்சு காவல்றையின் முடிவுக்காக காத்திருக்கின்றேன்.  தகவல்கள் தெரிந்தாலும் அதை விளம்பரம் செய்யமுமுன் அது என் தேசத்துக்கு ஏதாவது வகையில் உதவுமா என்றுதான் பார்ப்பேன்.

 

அதுவரை மௌனமே  சிறந்தது.

இது சரியென பட்டால் தயவு செய்து என்னை கிளறாதீர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை வாசித்து அதிலிருக்கின்ற உண்மை,பொய்களை பகுத்தறியாமல் இதை பற்றி ஓன்றுமே தெரியாத சாஸ்திரி எப்படி நேரில் பார்த்த மாதிரி எழுதுகிறார் என இதைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச‌ விற்பன்னர்கள் கேள்வி கேட்பதை நினைத்து ஆச்சரியமாய் இருக்குது...வருங்காலத்தில் இப்படியான கொலைகளை எப்படி தடுக்கலாம் என ஒருத்தரும் எழுதவில்லை அதை விடுத்து சாஸ்திரி எப்படி இதை எழுதலாம் என்ட‌ கேள்வியும் மாற்றுக் கருத்தாளாரால் இயக்கப்படுகின்ற இணையத்தில்[பூபாளம்]வந்ததால் அதன் நம்பகதன்மை குறித்த கேள்வியும் தான் தொக்கி நிற்கிது...சாஸ்திரி எழுதினது பொய் என்டால் அதை நிருபீயுங்கோ அதற்கு ஆதார‌மாக எழுதுங்கோ...இல்லை உண்மையைத் தான் சாஸ்திரி எழுதுகிறார் என்டால் இந்த கொலைகளை எப்படித் த‌டுக்கலாம் என எழுதுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

.சாஸ்திரி எழுதினது பொய் என்டால் அதை நிருபீயுங்கோ அதற்கு ஆதார‌மாக எழுதுங்கோ...இல்லை உண்மையைத் தான் சாஸ்திரி எழுதுகிறார் என்டால் இந்த கொலைகளை எப்படித் த‌டுக்கலாம் என எழுதுங்கோ

மெளனித்த ஆயுதங்கள் மீண்டும் சத்தம் போடாமல் பார்த்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழனின் பொறுப்பாகும்.....கொலைகாரர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் கொலையை தடுக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது இப்படி சிங்கள உள்ளடி வேலைகளை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.

 

 

சீ

நம்ம பல்லுப்போல் வருமா??? :(

விளங்காவிட்டாலும் நாலு பேர் விளங்கின மாதிரி 'லைக்' போடும்பொழுது நாங்களும் 'லைக்' போடும்  உலகில் எனக்கு விளங்கவில்லையே என கேள்விகள் கேட்கும் உங்கள் நேர்மை பாராட்டப்பட வேண்டியதுதான் !

 

உண்மைதான் அகூதா.இதுக்கு நிழலி வேரு லைக் போட்டிருக்கார்.என்மேல் உள்ல கோபத்தில் என்ன எழுதியிருந்தால் என்ன ஏதோ எனக்கு பதில் எழுதி இருக்கு என்டு  லைக் போட்டிருக்கார்களா அல்லது கிருபன் எழுதியதை புரிந்து லைக் போட்டிருக்கார்களா? ஒன்னுமே புரியலை. :(  :(

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்

சாத்திரி(பூபாளம் கனடா)

ஏனெனில் புலிகள் இயக்கத்திற்கு உலகம் முழுவதும் உள்ள வர்த்தக வியாபரங்களால் மாதம் ஒன்றிற்கு சுமார் 300 மில்லியன் டெலர்களை வருமானமாகப் பெறும் அமைப்பாக இருந்தது. இலங்கையரசே கடன் வாங்கி ஆயுதம் வாங்கி சண்டை பிடித்தக் கொண்டிருந்தபோது புலிகள் அமைப்பு தங்கள் பணத்திலேயே நவீனரக ஆயுதங்களாக இறக்கி சண்டை பிடித்துக்கொண்டிருந்தார்கள். 

 

 

நீங்கள் இவைதொடர்பான புலிகளின் உத்தியோகபூர்வ கனக்காளராக இருந்தீர்களா? இந்த தகவலை நீங்கள் பெற்றுகொண்ட மூலம் குறிப்பிடாமல் போட்டிருக்கிறீர்கள்.எந்த இடத்திலும் புலிகளால் தங்களது மாதவருமானம் இதுதான் என்று பப்ளிக்கான அறிக்கைகளும் வரவில்லை.இப்படியான கற்பனையான இலக்கம்கலில் குத்துமதிப்பான கதைகளை எழுதமுன்னர் அவற்றை பெற்றுகொண்ட மூலம்களை கீழே எழுதிக்கொள்ளுங்கள். பூபாளம் என்ர இதழிலும் நான் தேடிப்பாத்தன் எந்த இடத்திலும் இந்த தகவலை பெற்றுகொண்ட மூலம் நீங்கள் குறிப்பிடவில்லை.இப்படியான வெடிக்கதைகளை வெளியிட அனுமதிக்கும் யாழ் இதையே எந்தவித ஊடகபலமும் இல்லாதவர்கள் தேசத்துக்காக ஏதாவது எழுதினால் தலைகீழாக நின்று துக்கிவிடுவார்கள்.கேட்டால் களவிதியை சொல்லுபவர்கள் அந்த களவிதியை பாரபட்சம் இன்ரி எல்லோர் மீதும் அமுல்படுத்தவும் கற்றுக்கொள்ளவேண்டும்.ஊடக அறம் என்றால் என்ன என்று நிரைய கற்றுக்கொள்லுங்கள் ஊடகத்தில் இருப்பவர்கலே ஊடகம்களை நடத்துபவர்களே

கட்டுரை வாசித்து அதிலிருக்கின்ற உண்மை,பொய்களை பகுத்தறியாமல் இதை பற்றி ஓன்றுமே தெரியாத சாஸ்திரி எப்படி நேரில் பார்த்த மாதிரி எழுதுகிறார் என இதைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச‌ விற்பன்னர்கள் கேள்வி கேட்பதை நினைத்து ஆச்சரியமாய் இருக்குது...வருங்காலத்தில் இப்படியான கொலைகளை எப்படி தடுக்கலாம் என ஒருத்தரும் எழுதவில்லை அதை விடுத்து சாஸ்திரி எப்படி இதை எழுதலாம் என்ட‌ கேள்வியும் மாற்றுக் கருத்தாளாரால் இயக்கப்படுகின்ற இணையத்தில்[பூபாளம்]வந்ததால் அதன் நம்பகதன்மை குறித்த கேள்வியும் தான் தொக்கி நிற்கிது...சாஸ்திரி எழுதினது பொய் என்டால் அதை நிருபீயுங்கோ அதற்கு ஆதார‌மாக எழுதுங்கோ...இல்லை உண்மையைத் தான் சாஸ்திரி எழுதுகிறார் என்டால் இந்த கொலைகளை எப்படித் த‌டுக்கலாம் என எழுதுங்கோ

 

வருங்காலத்தில் இப்படியான கொலைகளை எவ்வாறு தடுக்கலாம் என்று நீங்கள் தான் எழுதவில்லை. பலரும் எழுதி விட்டார்கள்.

 

 

அல்வாயன்...

இந்த வாக்குமூலத்தை காவல் துறையிடம் கொடுக்கலாமே......

 

 

அகூதா..

உண்மையில் மேற்குலக சட்டப்படி அந்த நாட்டில் வாழும் ஒருவர் அந்த நாட்டின் குற்றம் சம்பவம் நீதித்துறையின் முன்னால் உள்ள பொழுது கருத்து கூறுவது தவறு. மற்றும் தெரிந்த தகவல்களை அல்வாயன் கூறியது போன்று காவல்துறையிடம் கொடுப்பதே கடமை, தமிழனாக இல்லாவிட்டாலும் ஒரு பிரெஞ்சு குடிமகனாக.

 

 

துளசி..

காசு சுருட்டியது, ஏனைய விடயங்கள் தொடர்பாக உங்களுக்கு தெரிந்தவற்றை பிரெஞ்சு காவல்துறைக்கு வழங்குங்கள். அங்கு வழங்காமல் இங்கு எழுதுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை.

 

சாத்திரி அண்ணா எழுதினது பொய் என்பதற்கு ஆதாரம் கேட்கும் நீங்கள் அவர் எழுதியவை உண்மையா என்பதற்கு ஆதாரம் கேட்க பழகுங்கள். நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு விடயம் தொடர்பாக செய்தி கட்டுரை வைப்பவர் தான் குறித்த கட்டுரையில் சேர்க்கப்படும் விடயம் தொடர்பாக ஆதாரம் முன்வைத்து எழுத வேண்டும்.

 

சரி, நாங்கள் தான் கட்டுரை வாசித்து உண்மை பொய்யை பகுத்தறியவில்லை. பகுத்தறிந்த நீங்கள் இந்த விடயத்தை ஒருக்கா விளக்குங்கோ.

 

 

துளசி..

பிரெஞ்சு காவல்துறை ஏன் இன்னும் பிரெஞ்சு பத்திரிகைக்கு தகவல் வழங்கவில்லை? பிரெஞ்சு காவல்துறை அதிகாரபூர்வமாக வெளிவிடாத பெயர்களை நீங்கள் யாழில் வெளிவிடுவது சரியா?

நாளைக்கே குறித்த நபர்கள் குற்றவாளி இல்லை என்று நிரூபணமானால் அவர்களால் சாதாரணமாக வாழ முடியுமா? "கொலை விடயமாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள்" என்ற பெயர் தமிழர்கள் மத்தியில் அவர்களை பற்றி உருவாகாதா?

Edited by துளசி

சாத்திரியார், தன்னை ஒரு எழுத்தாளனாகக் காட்டிக்கொள்ள இதை எழுதவில்லை என நினைக்கிறேன்!

அவர், ஒரு ஊடகவியலாளனாகத் தான் தன்னை வெளிப்படுத்துகிறார்!

நாங்கள் தான், நமது தலைகளை மணலுக்குள் புதைத்து வைத்திருக்கிறோம் போலகத் தெரிகின்றது! :o

 

சாதாரண ஊடகவியலாளன் செய்திகளை சம்பவங்கள் நடந்த இடத்திற்கு சென்று செய்திகளை சேகரிப்பவன். அதனால், அவன் உயிர் துறப்பதும் உண்டு. 

 

 

சில சர்ச்சைக்குரிய விடயங்களை மிக நீண்டகாலமாக ஆராய்ந்து ஆதாரங்களை சேகரித்து எழுதுபவர்கள் உண்டு. அவர்களை Investigative Journalists என அழைப்பார்கள்.

 

வீட்டில் இருந்தபடியே நாலுபேருடன் கதைத்து, தனக்கு ஒரு அமைப்பு / சமுதாயம் தந்த இரகசியங்களையும் வைத்து எழுதுவதை 'ஊடகவியலாளன்' என முத்திரை குத்தி, உண்மையான நேர்மையான ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தாதீர்கள் !

கட்டுரை வாசித்து அதிலிருக்கின்ற உண்மை,பொய்களை பகுத்தறியாமல் ....

----

----

சாஸ்திரி எழுதினது பொய் என்டால் அதை நிருபீயுங்கோ அதற்கு ஆதார‌மாக எழுதுங்கோ...

 

ஆதாரமில்லாமல் தனியே பகுத்தறிவு மூலம் இது உண்மை செய்தி என்று எவ்வாறு நம்புகிறீர்கள்?

 

சாத்திரி...

அப்படி உலகம் முழுவதும் சொத்து சண்டைகள் நடக்கத் தொடங்கியிரந் போது பிரான்சில் பிரிந்து சண்டை பிடித்தவர்களில் முக்கியமாக பரிதி மேக்தா சுக்குளா போன்றவர்கள் ஒரு புறமும் ஆதித்தன் சாம்ராஜ் போன்றவர்கள் மறுபுறமுமாக பங்கு பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். சாம்ராஜ் என்பவரே புலிகள் அமைப்பின் பணத்தை உண்டியல் முறை மூலம் மற்றைய நாடுகளிற்கு பரிமாற்றம் செய்பவர். இறுதி யுத்தத்திற்கென சேகரித்த பெருமளவு நிதி இவரின் கைகளிலேயே இருந்தது.

Edited by துளசி

1)உண்மையான தேசியப் பற்றாளன் தான் முன்பு அங்கம் வகித்த அமைப்பு பெயர் கெடுவதை ஒரு போதும் விரும்ப மாட்டான்.

2) விடுதலைப் புலிகள் அமைப்பு இரகசியம் காக்கும் ஒரு அமைப்பு அதன் பல ரகசியங்கள் இப்பிடி வெளி விடுவது நீண்ட கால

நோக்கில் ஒரு பிழையான விஷயம்.

3)இலங்கை அரசு விடுதலைப் புலிகளின் சரவதேச நிதி கையாண்டவர்கள் யார் என்று தேடித் திரியும் நிலையில் எதிரிக்கு பலம்

சேர்க்கும் வகையில் இந்த இரகசியங்கள் அவர்களது பெயர்கள் வெளிவிடப்பட்டுள்ளது இது புலிகளின் மிஞ்சிய கட்டு மானங்களையும் உடைக்கும் செயல்.

4)வெறுமனே ஒரு பக்க சார்பாக இந்த செய்திய விட்டு ஒரு பக்கத்தை பெரும் கொள்ளையர் போலவும் மறு பக்கத்தை ரொம்ப

நல்லவர்கள் போலவும் கூறி பலமடைய வைக்கும் முயற்சி இது .

5)உண்மையில் ஒற்றுமையை விரும்பினால் தொடர்ந்து பேச்சுக்களில் கலந்து கொண்டு ஒற்றுமைப் படுத்தனும் இப்படி

இரகசியங்கள் அம்பலப் படுத்தல் தேசியத்திற்கு செய்யும் துரோகம்.

6) தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளை நேசிக்கும் மக்களை புலிகளை கறை படிந்தவர்களாக காட்டி மக்களை புலிகளிடம் இருந்து பிரிக்கும் நயவஞ்சகத் திட்டம் இது.

7) எல்லா பிழைகளையும் இவர்கள் தலையல் கட்டி தன்னை மட்டுமே நல்லவராக காட்டும் சுய புராணம் பாடும் செய்தி இது.

8) முதலில் இந்த கட்டுரை வெளி வந்ததே விடுதலைப் புலிகளையோ தேசியத் தலைவர் பிரபாகரனையோ முற்றிலும் ஏற்றுக்

கொள்ளாத ஒரு பத்திரிகையான பூபாளத்தில் வெளிவந்ததன் மூலம் செய்திய எழுதியவர் இப்பொழுது உண்மையில் எங்கே

நிற்கிறார் என்பது புரியும்.

9) நாம் சிலதில் இருந்து ஒதுங்கினால் அதற்கு நல்லது செய்யாவிட்டாலும் பறவாய் இல்லை அதைப் பற்றி விமர்சிக்காமல்

இருப்பதே நாம் செய்யும் நல்ல காரியம் .

10)இதற்கு செலவளித்தை நேரத்தில் சிங்கள் அரசின் அல்லது அதற்கு முட்டுக் கொடுக்கும் ஓட்டுக் குழுக்கள் பற்றிய அவர்கள் மக்கள் மத்தியில் எப்படி கால் பதிக்கிராகள் என்று ஆய்வு செய்து எழுதி இருந்தால் எமது போராட்ட்டதிட்கு பெரும் உதவியா

இருந்திருக்கும்.

நன்றி

தமிழரின் தாகம்

தமிழ்ஈழத் தாயகம்

Edited by Ramanan005

3)இலங்கை அரசு விடுதலைப் புலிகளின் சரவதேச நிதி கையாண்டவர்கள் யார் என்று தேடித் திரியும் நிலையில் எதிரிக்கு பலம்

சேர்க்கும் வகையில் இந்த இரகசியங்கள்  வெளிவிடப்பட்டுள்ளது இது புலிகளின் மிஞ்சிய கட்டு மானங்களையும் உடைக்கும் செயல்.

5)உண்மையில் ஒற்றுமையை விரும்பினால் தொடர்ந்து பேச்சுக்களில் கலந்து கொண்டு ஒற்றுமைப் படுத்தனும் இப்படி

இரகசியங்கள் அம்பலப் படுத்தல் தேசியத்திற்கு செய்யும் துரோகம்.

 

 

எது இரகசியம் இதில் தங்களுக்கு? ஒருவர் 300 மில்லியன் புலிகளின் மாதவருமானம் என்று குத்துமதிப்பாய் ஒரு பொய்யை அவிட்டு விட்டால் அது இரகசியமா? அப்படியானல் நானும் புலிகளைபற்றி நாலு பொய்யை எழுதிபோட்டு இரகசியம் என்று சொல்லாலம்போல தங்கட கதையின் படி.

 

 

 

 

 

 

 

 

Edited by வண்டுமுருகன்

 

எது இரகசியம் இதில் தங்களுக்கு? ஒருவர் 300 மில்லியன் புலிகளின் மாதவருமானம் என்று குத்துமதிப்பாய் ஒரு பொய்யை அவிட்டு விட்டால் அது இரகசியமா? அப்படியானல் நானும் புலிகளைபற்றி நாலு பொய்யை எழுதிபோட்டு இரகசியம் என்று சொல்லாலம்போல தங்கட கதையின் படி.

அவர் அதை சொல்லவில்லை.. புலிகளுக்கு யார் நிதி சேகரித்தார்கள் என்ற விபரத்தை (அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சிங்களவனுக்கு வெளியிட வேண்டாம் என்று சொன்னார். :D

 

3)இலங்கை அரசு விடுதலைப் புலிகளின் சரவதேச நிதி கையாண்டவர்கள் யார் என்று தேடித் திரியும் நிலையில் எதிரிக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த இரகசியங்கள்  வெளிவிடப்பட்டுள்ளது இது புலிகளின் மிஞ்சிய கட்டு மானங்களையும் உடைக்கும் செயல்.

 

 

Edited by துளசி

அவர் அதை சொல்லவில்லை.. புலிகளுக்கு யார் நிதி சேகரித்தார்கள் என்ற விபரத்தை (அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சிங்களவனுக்கு வெளியிட வேண்டாம் என்று சொன்னார். :D

உண்மை திரு.வண்டுமுருகன் நான் கணக்கை சொல்லவில்லை அதில் யார் யார் சம்மந்தப் பட்டார்கள் என்ற விபரம். ஏற்கனவே ஒரு திரியிலும் ஐயா ஆயுதங்கள் எந்த வழியா கொண்டு செல்லப்பட்டது அதில் சம்மந்தப் பட்ட பெயர்கள் நாட்கள் என்பன விலாவாரியா எழுதப்பட்டது. இப்படியான இரகசியங்கள் வெளி வருவதையே நான் பிழை என்கிறேன். நன்றி துளசி தங்கள் புரிதலுக்கு

உண்மை திரு.வண்டுமுருகன் நான் கணக்கை சொல்லவில்லை அதில் யார் யார் சம்மந்தப் பட்டார்கள் என்ற விபரம். ஏற்கனவே ஒரு திரியிலும் ஐயா ஆயுதங்கள் எந்த வழியா கொண்டு செல்லப்பட்டது அதில் சம்மந்தப் பட்ட பெயர்கள் நாட்கள் என்பன விலாவாரியா எழுதப்பட்டது. இப்படியான இரகசியங்கள் வெளி வருவதையே நான் பிழை என்கிறேன். நன்றி துளசி தங்கள் புரிதலுக்கு

 

 

 

இதை நீங்கள் இப்ப சொன்னமாதிரி தெளிவாய் சொல்லி இருக்கவேணும்.நானும் ஏதோ முன்னுறுமில்லியன் மாதவருமானம் எண்டதை மிகப்பெரும் ரகசியம் எண்டு நீங்கள் கருதுவதாக நினைத்து பதறி விட்டேன்.

 

நியானி: தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு பிரிவென்ர அர்த்தத்தில் நான் சொல்லவில்லை.தாங்கள்தான் உண்மையான தேசியவாதிகள்போல் தங்கள் பத்திரிகை,கடை;மற்றும் அரசியல் வியாபரம் நன்கு ஓகோவென்று போக போலிவேசம் போடுவபர்கள் தங்களை உண்மையானவர்கள் என்ரு காட்ட நடிப்பதை சொல்ல அவசரத்தில் வந்த நல்ல என்ர வார்த்தையை போட்டுவிட்டேன்.மற்றும்படி நீங்கல் சொல்லும் எந்த அர்த்தத்திலும் அல்ல.

அதென்ன நம்பிக்கைவாதிகள்?.எனக்கு உதுவும் புரியலை. :( :(

 

நம்பிக்கைவாதிகள் - believers

 

Believer - a cult organization with the goal of achieving purity of self and reaching "the land of comfort"

 

தங்கள் செளகரியங்களுக்காக தூய்மைவாதிகளாக இருக்க விளைவோர்.

ஆனாலும் சாத்திரி அண்ணை  என்ன தான் இருந்தாலும் தமிழ்த்தேசிய பற்றில் சில தகவல்களை மறைத்து விட்டார் அல்லது மறந்து விட்டாரோ தெரியா.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விளங்காவிட்டாலும் நாலு பேர் விளங்கின மாதிரி 'லைக்' போடும்பொழுது நாங்களும் 'லைக்' போடும்  உலகில் எனக்கு விளங்கவில்லையே என கேள்விகள் கேட்கும் உங்கள் நேர்மை பாராட்டப்பட வேண்டியதுதான் !

 

எவ்வளவுதான் எண்ணெயைப் பூசிக்கொண்டு மணலில் உருண்டாலும், ஒட்டுவதுதான் ஒட்டும் என்று முன்னர் படித்திருக்கின்றேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அகூதா.இதுக்கு நிழலி வேரு லைக் போட்டிருக்கார்.என்மேல் உள்ல கோபத்தில் என்ன எழுதியிருந்தால் என்ன ஏதோ எனக்கு பதில் எழுதி இருக்கு என்டு  லைக் போட்டிருக்கார்களா அல்லது கிருபன் எழுதியதை புரிந்து லைக் போட்டிருக்கார்களா? ஒன்னுமே புரியலை. :(  :(

 

எனக்குப் புரியாவிட்டால் எவருக்குமே புரியாது என்று யாழில் மமதை கொண்டவர்கள் அதிகம் உள்ளனர்.

 

சிலருக்கு உண்மையிலேயே புரியாது, ஆனால் சிலருக்கு புரிந்தாலும் உண்மைகளைத் திரைபோட்டு மறைக்க அதிகம் சக்தியை செலவழிக்கின்றனர். இது சூரியனைக் கையால் மறைப்பது போலத்தான்.

Edited by கிருபன்

எனக்குப் புரியாவிட்டால் எவருக்குமே புரியாது என்று யாழில் மமதை கொண்டவர்கள் அதிகம் உள்ளனர்.

 

சிலருக்கு உண்மையிலேயே புரியாது, ஆனால் சிலருக்கு புரிந்தாலும் உண்மைகளைத் திரைபோட்டு மறைக்க அதிகம் சக்தியை செலவழிக்கின்றனர். இது சூரியனைக் கையால் மறைப்பது போலத்தான்.

 

எவ்வளவுதான் எண்ணெயைப் பூசிக்கொண்டு மணலில் உருண்டாலும், ஒட்டுவதுதான் ஒட்டும் என்று மேலே வாசித்தேன்.

 

 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.