Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணித புதிர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு புதிர்..

5+3 = 28

9+8 = 117

8+6 = 214

7+3 = ??

  • Replies 195
  • Views 24.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
இன்னொரு புதிர்..

5+3 = 28

9+8 = 117

8+6 = 214

7+3 = ??

5+3=28

9+8=117

8+6=214

7+3=410

சரியா? :D

இன்னொரு புதிர்..

5+3 = 28

9+8 = 117

8+6 = 214

7+3 = ??

5+3 = 28 (இரட்டை எண் - 2)

9+8 = 117  (ஒற்றை எண்  - 1)

8+6 = 214 (இரட்டை எண் - 2)

7+3 = 210 (இரட்டை எண் - 2)

அல்லது 

5+3 = 28 (5-3 = 2, 5+3 =8)

9+8 = 117 (9-8=1 , 9+8=17)

8+6 = 214 (8-6 = 2, 8+6 = 14)

7+3 = 410  (7-3 = 4, 7+3=10)

Edited by பகலவன்

  • தொடங்கியவர்

715 x 46 = 32890 

 சரியான விடை பகலவன், பாராட்டுக்கள்

5+3=28

9+8=117

8+6=214

7+3=410

சரியா? :D

7+3=410

  • தொடங்கியவர்

13 இன் சதுர எண் 169, இதில் 9 கடத்தி 1 க்கும் ஆறுக்குமிடையில் வைத்தால் 196, இந்த இலக்கம் 14 இன் சதுர எண். அதாவது 13க்கு அடுத்த வரும் எண்,

இதைப்போல வேறு எந்த எண்ணுக்கு இப்படி செய்யலாம்?

Edited by வந்தியதேவன்

  • கருத்துக்கள உறவுகள்
13 இன் சதுர எண் 169, இதில் 9 கடத்தி 1 க்கும் ஆறுக்குமிடையில் வைத்தால் 196, இந்த இலக்கம் 14 இன் சதுர எண். அதாவது 13க்கு அடுத்த வரும் எண்,

இதைப்போல வேறு எந்த எண்ணுக்கு இப்படி செய்யலாம்?

157 * 157 = 24649

158 * 158 = 24964

  • தொடங்கியவர்

சரியான விடை காவாலி, பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

குந்தவை, வானதி, பூங்குழலி ஆகியோரிடம் சில தங்க நாணயங்கள் இருந்தன.

குந்தவை தன்னிடமுள்ள தங்க நாணயங்களை மற்றவர்கள் வைத்திருக்கும் எண்ணிகை போல ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்

பின் வானதி தன்னிடமுள்ள நாணயங்களை மற்றவர்கள் தற்போது வைத்திருக்கும் எண்ணிக்கைக்கு சமனாக ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்

அதன்பின் கடைசியாக பூங்குலி தன்னிடமுள்ள நாணயங்களை மற்றவர்கள் வைத்திருக்கும் எண்ணிக்கைக்கு சமனாக பகிர்ந்தளித்தாள்.

தற்பொழுது ஒவ்வொருவரும் 24 நாணயங்களை வைத்திருந்தால், அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஆரம்பத்திலிருந்த நாணயங்களின் எண்ணிக்கையென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

தவறான விடை எழுதியதால் அழித்தேன். மீண்டும் வாறன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
5+3=28

9+8=117

8+6=214

7+3=410

சரியா? :D

இது கொஞ்சம் இலகுவான புதிர்.

எடுத்த எடுப்பிலேயே.. சரியான விடை சொன்ன வாத்தியார்.. மற்றும் பகலவன்.. வந்தியதேவன் எல்லோருக்கும் பாராட்டுக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்
தவறான விடை எழுதியதால் அழித்தேன். மீண்டும் வாறன்.

சரி.. பேராண்டிகளைக் கேட்டுவிட்டு வந்து சரியான விடையை தாங்கோ <_<

  • கருத்துக்கள உறவுகள்

குந்தவை, வானதி, பூங்குழலி ஆகியோரிடம் சில தங்க நாணயங்கள் இருந்தன.

குந்தவை தன்னிடமுள்ள தங்க நாணயங்களை மற்றவர்கள் வைத்திருக்கும் எண்ணிகை போல ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்

பின் வானதி தன்னிடமுள்ள நாணயங்களை மற்றவர்கள் தற்போது வைத்திருக்கும் எண்ணிக்கைக்கு சமனாக ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்

அதன்பின் கடைசியாக பூங்குலி தன்னிடமுள்ள நாணயங்களை மற்றவர்கள் வைத்திருக்கும் எண்ணிக்கைக்கு சமனாக பகிர்ந்தளித்தாள்.

தற்பொழுது ஒவ்வொருவரும் 24 நாணயங்களை வைத்திருந்தால், அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஆரம்பத்திலிருந்த நாணயங்களின் எண்ணிக்கையென்ன?

குந்தவை நாச்சியார் : 39 தங்க நாணயங்கள்

வானதி நாச்சியார்: 21 தங்க நாணயங்கள்

பூங்குழலி நாச்சியார்: 12 தங்க நாணயங்கள்

மாறி மாறிக் கொடுத்த பின்னர் எல்லாவற்றையும் எனக்குத் தருவதாகச் சொல்லி விட்டு தராமல் ஏமாற்றிவிட்டார்கள் மூன்று நாச்சியார்களும்.

சரி இந்த முறைக்கு நான் கேட்கிறேன்.
 
எல்லாமா 10 பால்மா செய்யும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவை ஒரு பக்கெட்டில் 100 g என்று வெளியில் எழுதியபடி பால்மாக்கள் தயாரித்து விற்பனை செய்கின்றன.
 
இந்த 10 தொழிற்சாலைகளில் ஒரே ஒரு தொழிற்சாலை மட்டும் 99 g உற்பத்தி செய்து கொண்டு வெளியில் 100 g என்ற பக்கெட்டில் விற்பனை செய்கின்றது. மற்றவை எல்லாம் 100 g தயாரித்து பொதி செய்கின்றன.
 
நீங்கள் எந்த தராசு வேணும் என்றாலும் பயன்படுத்தலாம். எத்தனை பக்கெட் வேணும் என்றாலும் எடுக்கலாம். ஆனால் ஒரே ஒரு முறை தான் நிறுக்கலாம்.
 
எந்த நிறுவனம் அப்படி பிழையாக தாயரிக்கிறது என்று கண்டு பிடிக்க வேண்டும்.
எப்படி  கண்டு பிடிப்பீங்கள்.
 
கிருபன் உங்களை போட்டிக்கு அழைக்கிறேன். சவால்.  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

எது தமிழனின் தொழிற்சாலை என்று பார்த்து அதை மட்டும் நிறுத்தால் கண்டுபிடித்துவிடலாம். :D :D

சரி கிருபனுக்குச் சரியான போட்டிதான். பார்ப்போம்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் இப்படியான கேள்விகள் யாழில் இணைந்த புதிதில் கேட்பதுதான் எனக்கு பொழுதுபோக்காக இருந்தது.. :)

மூளைக்கு வேலை திரியைப் பாருங்கள்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=1558

இந்த நிறுத்தல் கேள்வி முன்னரே கண்டிருக்கின்றேன் என்பதால் மூளையைக் கசக்கவில்லை! <_<

தொழிற்சாலையைக் கண்டுபிடிப்பதற்கு ஒவ்வொரு தொழிற்சாலையில் இருந்த உற்பத்தி செய்யப்பட்ட பக்கற்றுகளுக்கும் 0 இலிருந்து 9 வரை இலக்கம் கொடுக்கவேண்டும். பின்வருமாறு பக்கற்றுக்களை நிறுத்தலுக்கு தெரிவு செய்யவேண்டும்.

0 - 0 (ஒரு பக்கற்றும் நிறுப்பதற்கான தெரிவில் இல்லை)

1 - 1

2 - 2

...

..

8 - 8

9 - 9

மொத்தமாகத் தெரிவு செய்யப்பட்ட 45 பக்கற்றுகளையும் ஒன்றாகச் சேர்த்து நிறையை அளந்தால் பின்வருமாறு நிறைகள் வரலாம்.

4500g - 99g பக்கற் 0 என குறிக்கப்பட்ட தொழிற்சாலையைச் சேர்ந்தது..

4499g - 99g பக்கற் 1 என குறிக்கப்பட்ட தொழிற்சாலையைச் சேர்ந்தது..

4498g - 99g பக்கற் 2 என குறிக்கப்பட்ட தொழிற்சாலையைச் சேர்ந்தது..

....

....

4492g - 99g பக்கற் 8 என குறிக்கப்பட்ட தொழிற்சாலையைச் சேர்ந்தது..

4491g - 99g பக்கற் 9 என குறிக்கப்பட்ட தொழிற்சாலையைச் சேர்ந்தது..

மன்னிச்சு கொள்ளுங்கோ கிருபன் அண்ணா. இப்போ தான் நாங்க உங்க அந்த காலத்து வயசுக்கு வந்திருக்கிறோம். :lol:  :lol: அடியேனை மன்னிச்சு அருளுங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
மன்னிச்சு கொள்ளுங்கோ கிருபன் அண்ணா. இப்போ தான் நாங்க உங்க அந்த காலத்து வயசுக்கு வந்திருக்கிறோம். :lol:  :lol: அடியேனை மன்னிச்சு அருளுங்கள். :lol:

நான் இன்னமும் வயசுக்கு வரவில்லை :icon_mrgreen: அதுதான் மூளை புதிதாகவே இருக்கின்றது..

நாளைக்கு ஒருவருக்கு நேர்முகத் தேர்வு செய்யவேண்டும். இந்த நிறுத்தல் கேள்வியைக் கேட்டுப் பார்ப்போம்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

சரி. எனது முறைக்கு ஒரு கேள்வி..

திருவாளர் கருஞ்சுண்டல் சந்தைக்கு வறுத்த கடலை வாங்கப் போனார். ஒரு கிலோ வறுத்த கடலையின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டால் அவர் தான் வைத்திருக்கும் பணத்திற்கு வாங்கக்கூடிய அளவிலும் 6 கிலோ அதிகமாக  வாங்கலாம் என்று அவதானித்தார். அதேவேளை ஒரு கிலோ வறுத்த கடலையின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டால் அவர் தான் வைத்திருக்கும் பணத்திற்கு வாங்கக்கூடிய அளவிலும் 4 கிலோ குறைய வாங்கவேண்டி வரும் என்று அறிந்தார்.

திருவாளர் சுண்டலிடம் உள்ள பணம் எத்தனை ரூபாய்கள்? விடையை விளக்கத்துடன் தரவேண்டும்!

1200 Rs.

xy = (y - 10) (x + 6) = (y + 10) (x - 4)

X - no. of kilo

Y - price of sundal per kilo = original price = 50 Rs

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
குந்தவை நாச்சியார் : 39 தங்க நாணயங்கள்

வானதி நாச்சியார்: 21 தங்க நாணயங்கள்

பூங்குழலி நாச்சியார்: 12 தங்க நாணயங்கள்

மாறி மாறிக் கொடுத்த பின்னர் எல்லாவற்றையும் எனக்குத் தருவதாகச் சொல்லி விட்டு தராமல் ஏமாற்றிவிட்டார்கள் மூன்று நாச்சியார்களும்.

  சரியானவிடை கிருபன், பாராட்டுக்கள், நாளைதான் உங்களுக்கு ஒரு தங்க நாணயம்

  • தொடங்கியவர்
சரி. எனது முறைக்கு ஒரு கேள்வி..

திருவாளர் கருஞ்சுண்டல் சந்தைக்கு வறுத்த கடலை வாங்கப் போனார். ஒரு கிலோ வறுத்த கடலையின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டால் அவர் தான் வைத்திருக்கும் பணத்திற்கு வாங்கக்கூடிய அளவிலும் 6 கிலோ அதிகமாக  வாங்கலாம் என்று அவதானித்தார். அதேவேளை ஒரு கிலோ வறுத்த கடலையின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டால் அவர் தான் வைத்திருக்கும் பணத்திற்கு வாங்கக்கூடிய அளவிலும் 4 கிலோ குறைய வாங்கவேண்டி வரும் என்று அறிந்தார்.

திருவாளர் சுண்டலிடம் உள்ள பணம் எத்தனை ரூபாய்கள்? விடையை விளக்கத்துடன் தரவேண்டும்!

 வைத்திருந்த பணம் = X

சுண்டலின் விலை = Y

01) (X/Y) + 6 = X/(Y-10)

02) (X/Y)-4 = X/(Y+10)

X=Rs.1200 திருவாளர் சுண்டலிடம் உள்ள பணம் Rs.1200

Y=Rs.50

  • கருத்துக்கள உறவுகள்
1200 Rs.

xy = (y - 10) (x + 6) = (y + 10) (x - 4)

X - no. of kilo

Y - price of sundal per kilo = original price = 50 Rs

 வைத்திருந்த பணம் = X

சுண்டலின் விலை = Y

01) (X/Y) + 6 = X/(Y-10)

02) (X/Y)-4 = X/(Y+10)

X=Rs.1200 திருவாளர் சுண்டலிடம் உள்ள பணம் Rs.1200

Y=Rs.50

சரியான விடைகளை விளக்கமாகத் தந்த நெடுக்ஸிற்கும் வந்தியத்தேவனிற்கும் பாராட்டுக்கள். அத்தோடு ஆளுக்கொரு பச்சையும் இனாமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

சங்கர் பொன்னியின் செல்வன் படம் எடுப்பதற்கு நாயகன்கள் & நாயகிகளுக்காக Rs.100,000,000 ஒதுக்குகின்றார்.

நாயகிகள் சாலினி, கஜோல் அகர்வால் & அமலாபால் மூவருக்கும் Rs. 39,600,000 ஊதியமாக  பேசி முடிக்கின்றார்.

அதில் சாலினி கஜோலைவிட Rs. 1,000,0000 கூட பெறுகின்றார். அமலாபால் சாலினியைவிட Rs. 1,000,0000 கூட பெறுகின்றார்.

நாயகன்களில் விஜேய் தன் ஜோடியைவிட இருமடங்கையும், சூர்யா அவரின் ஜோடியின் ஊதியைத்திற்கு சமனாகவும், விக்ரம் அவரின் ஜோடியைவிட 50% கூடவாகவும் பெறுகின்றானர்.

அப்படியாயின் யார் யாருக்கு ஜோடி?

  • கருத்துக்கள உறவுகள்

அமலாபால் - சூரியா

விஜய் - சாலினி

விக்ரம் - கஜோல் அகர்வால்

(மொத்த செலவு Rs. 940,00,000)

  • கருத்துக்கள உறவுகள்
சங்கர் பொன்னியின் செல்வன் படம் எடுப்பதற்கு நாயகன்கள் & நாயகிகளுக்காக Rs.100,000,000 ஒதுக்குகின்றார்.

நாயகிகள் சாலினி, கஜோல் அகர்வால் & அமலாபால் மூவருக்கும் Rs. 39,600,000 ஊதியமாக  பேசி முடிக்கின்றார்.

அதில் சாலினி கஜோலைவிட Rs. 1,000,0000 கூட பெறுகின்றார். அமலாபால் சாலினியைவிட Rs. 1,000,0000 கூட பெறுகின்றார்.

நாயகன்களில் விஜேய் தன் ஜோடியைவிட இருமடங்கையும், சூர்யா அவரின் ஜோடியின் ஊதியைத்திற்கு சமனாகவும், விக்ரம் அவரின் ஜோடியைவிட 50% கூடவாகவும் பெறுகின்றானர்.

அப்படியாயின் யார் யாருக்கு ஜோடி?

இந்தக்கணக்கில் ஒரு தவறு இருக்கின்றது என நினைக்கின்றேன் . 

சரியான தரவு சிவப்பு அடையாளம் இட்டதில் ஒரு 0 குறையவேண்டுமே  

விடை

விஜய் - அமலாபால்

சாலினி -  விக்ரம்

கஜோல்  -  சூர்யா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.